உலக நடப்பு

இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் ஜனாதிபதிக்கு காயம் - ஜூன் மாதம் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தற்போது தகவல்கள்

2 months 3 weeks ago

14 JUL, 2025 | 10:50 AM

image

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் ஜனாதிபதிக்கு காயமேற்பட்டது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூட் பெசெஸ்கியானிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் அதிஉயர் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த மிகவும் இரகசியமான பகுதியொன்றின் ( நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்தது) நுழைவாயில்கள் மற்றும் அந்த இடத்திற்கு செல்லும் பகுதிகளை இலக்குவைத்து ஜூன் 16ம் திகதி இஸ்ரேல்  தாக்குதலை மேற்கொண்டது என ஈரான் அரசாங்கத்தின் பார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியும் ஏனையவர்களும் அவசர சூழ்நிலைகளின் போது வெளியேறுவதற்கான பகுதி ஊடாக தப்பிச்செல்ல முயன்றனர் அவ்வேளை ஜனாதிபதியின் கால்களில் சிறிய காயங்கள்  ஏற்பட்டன என பார் தெரிவித்துள்ளது.

ஈரான் தற்போது இந்த இரகசிய சந்திப்பு குறித்து இஸ்ரேலிற்கு தகவல் வழங்கியது யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தகவலை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என  தெரிவித்துள்ள பிபிசி இஸ்ரேலும் இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது.

12 நாள் யுத்தம் குறித்த சமூக ஊடக வீடியோக்கள் ஈரானின்  தலைநகருக்கு வடமேற்கே உள்ள மலைப்பகுதி தொடர்ச்சியாக தாக்கப்படுவதை காண்பித்திருந்தன.

இஸ்ரேலிய தாக்குதலின் நான்காம் நாளான்று ஈரானின் முக்கிய தலைவர்கள் காணப்பட்ட பகுதி மீது தாக்குதல் இடம்பெற்றமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதலால்  நிலத்திற்கடியில் அமைக்கப்பட்டிருந்த அந்த கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாத நிலையேற்பட்டது என தெரிவித்துள்ள ஈரான் ஊடகம் உள்ளே செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது, உள்ளேயிருப்பவர்களிற்கான காற்றினை வழங்கும் வசதிகள் பாதிக்கப்பட்டன என குறிப்பிட்டுள்ளது.

மின்சாரமும் துண்டிக்கப்பட்டது, ஆனால் ஜனாதிபதி தப்பிவெளியேறினார் என ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/219931

உக்ரேனுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை வழங்குவதாக ட்ரம்ப் அறிவிப்பு!

2 months 3 weeks ago

New-Project-155.jpg?resize=750%2C375&ssl

உக்ரேனுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை வழங்குவதாக ட்ரம்ப் அறிவிப்பு!

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட உக்ரேனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்பும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார்.

வொஷிங்டன் டிசிக்கு வெளியே உள்ள கூட்டுத் தளமான ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், உக்ரேனுக்கு எத்தனை அமைப்புகள் அனுப்பப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மொஸ்கோவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு முன்பு அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.

ஆனால்,போரை முடிவுக்குக் கொண்டுவர அல்லது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள புட்டினை சமாதானப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துள்ளன.

இதனிடையே, உக்‍ரேன் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ட்ரம்ப் திங்களன்று (14) நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவைச் சந்திக்க உள்ளார்.

கடந்த வாரம், அமெரிக்கத் தலைவர் NBC செய்திக்கு அளித்த செவ்வியின் போது, ரஷ்யா குறித்து “ஒரு முக்கிய அறிக்கையை” திங்களன்று வெளியிடுவதாகக் குறிப்பிட்டார்.

ஆனால் அது தொடர்பான மேலதிக விவரங்களை வழங்கவில்லை.

பேட்ரியாட் உலகின் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.
மேலும் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டது.

https://athavannews.com/2025/1439010

அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் ஈரான் தயார்!

2 months 3 weeks ago

New-Project-1-6.jpg?resize=600%2C300&ssl

அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் ஈரான் தயார்!

அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் என, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி தெரிவித்தார்.

அணுசக்தி பயன்பாடு தொடர்பில், அமெரிக்காவுடன், ஈரான் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததுடன் யுரேனியம் செறிவூட்டலை 4 சதவீதத்திற்குள் குறைக்க அமெரிக்கா வலியுறுத்தியது.

காரணம், யுரேனியத்தை 90 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டினால், அதை அணு ஆயுதமாக மாற்ற முடியும். இதற்கிடையே, அமெரிக்காவின் திட்டத்தை ஈரான் நிராகரித்தது.
அதைத் தொடர்ந்தே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலை ஈரான் எதிர்கொண்டது.

இந்நிலையில், “எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதியளித்தால், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்தத் தயார்” என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2025/1438972

"குழந்தை பெற்றுக்கொள்ள நேரமில்லை" - உலக அளவில் கருவுறுதல் விகிதம் குறைய காரணம் என்ன?

2 months 3 weeks ago

கருவுறுதல் விகிதம், இந்தியா, உலகம், ஐக்கிய நாடுகள் சபை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஸ்டெபனி ஹெகார்டி

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நம்ரதா நங்கியாவும் அவரது கணவரும் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்வது குறித்து தங்களது ஐந்து வயது மகள் பிறந்தது முதலே சிந்தித்து வருகின்றனர்.

ஆனால் எப்போதும் அவர்கள் முன் வந்து நிற்கும் கேள்வி: 'அந்த குழந்தைக்கு தேவையான செலவுகளை நம்மால் சமாளிக்கமுடியுமா?'

மும்பையில் வசித்து வரும் நம்ரதா மருந்துகடையில் பணியாற்றுகிறார். அவரது கணவர் ஒரு டயர் கம்பெனியில் பணியாற்றுகிறார். ஆனால் ஒரு குழந்தைக்கான செலவுகளே அதிகமாக இருக்கிறது. பள்ளி கட்டணம், பள்ளி பேருந்து, நீச்சல் வகுப்புகள், பொது மருத்துவரிடம் செல்வது கூட அதிக செலவு ஏற்படுத்தக்கூடியதுதான்.

ஆனால் நம்ரதா வளரும் போது வேறு விதமாக இருந்தது,"நாங்கள் வெறுமனே பள்ளிக்கு செல்வோம். பாடத்திட்டத்திற்கு வெளியே எதுவும் இல்லை, ஆனால் இன்று நீங்கள் உங்கள் குழந்தையை நீச்சல் வகுப்புகளுக்கும், ஓவிய வகுப்புகளுக்கு அனுப்பவேண்டியுள்ளது. அவர்கள் வேறு எதையெல்லாம் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்," என்றார் நம்ரதா.

கருவுறுதல் விகிதம், இந்தியா, உலகம், ஐக்கிய நாடுகள் சபை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குழந்தைகளின் பள்ளி செலவுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர் பெற்றோர்கள்

எச்சரிக்கும் யு.என்.எஃப்.பி.ஏ.

இனப்பெருக்க உரிமைகளுக்கான ஐநாவின் முகமையான ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் (United Nations Population Fund) அறிக்கையின்படி, நம்ரதாவின் நிலை சர்வதேச அளவில் காணப்படும் இயல்பாக உள்ளது.

கருவுறுதல் விகிதம் குறைவது குறித்து இதுவரை இருந்ததிலேயே வலுவான நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் எடுத்துள்ளது. குழந்தை வளர்ப்பதால் ஏற்படும் கடுமையான செலவு, பொருத்தமான துணை இல்லாதது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி பல நூறு மில்லியன் மக்களால் தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக்கொள்ளமுடியவில்லை என எச்சரித்துள்ளது.

14 நாடுகளில் இருக்கும் 14,000 பேரிடம் அவர்களுடைய கருவுறும் நோக்கம் குறித்து UNFPA ஆய்வு நடத்தியது. ஐந்து பேரில் ஒருவர், தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை அல்லது பெற்றுக்கொள்ளமாட்டோம் என தெரிவித்தனர்.

ஆய்வு நடத்தப்பட்ட தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி, ஹங்கேரி, ஜெர்மனி, ஸ்வீடன், பிரேசில், மெக்சிகோ, அமெரிக்கா, இந்தியா, இந்தோனீசியா, மொரோக்கோ, தென்னாப்ரிக்கா, மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கின்றன.

கருவுறுதல் விகிதம், இந்தியா, உலகம், ஐக்கிய நாடுகள் சபை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,14 நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகளில் ஐந்து பேரில் ஒருவர், தாங்கள் விரும்பும் எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றக் கொள்ள இயலாது என்று கூறியுள்ளனர்

உண்மையான நெருக்கடி இது

குறைவான, நடுத்தர மற்றும் அதிக வருவாய் கொண்ட நாடுகள் மற்றும் குறைந்த மற்றும் அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகளின் கலவை அவை. யுஎன்எஃப்பிஏ (UNFPA) இளம் வயது வந்தோரிடமும், தங்களது இனப்பெருக்க காலத்தை கடந்தவர்களிடமும் ஆய்வு நடத்தியது.

யுஎன்எஃப்பிஏ அமைப்பின் தலைவரான டாக்டர் நடாலியா கானெம், "கருவுறுதல் விகிதத்தில் உலகம் முன்பெப்போதும் இல்லாத சரிவை தொடங்கியிருக்கிறது," என்று கூறினார்.

"ஆய்வு நடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை விரும்புகின்றனர். கருவுறுதல் விகிதம் குறைய பெருமளவு காரணம் தாங்கள் விரும்பும் குடும்பத்தை உருவாக்க முடியவில்லை என பலரும் நினைப்பதுதான். அதுதான் உண்மையான நெருக்கடி," என்கிறார் அவர்.

"இதை நெருக்கடி என அழைப்பது, அது உண்மையானது என சொல்வதாகும். அது ஒரு மாற்றம் என நான் நினைக்கிறேன்," என்கிறார் அன்னா ராட்கெர்ச். ஐரோப்பாவில் கருவுறும் விருப்பங்கள் குறித்து ஆய்வு நடத்தியவரும், பின்லாந்து அரசுக்கு மக்கள்தொகை கொள்கை குறித்து ஆலோசனை வழங்குபவருமான மக்கள் தொகை ஆய்வாளர் அவர்.

"ஒட்டுமொத்தமாக, கருவுறுதல் நோக்கங்களை மிஞ்சுவதை விட அதைவிட குறைவாக எட்டுவதே அதிகமாக உள்ளது," என்கிறார் அவர். இவர் இதை ஐரோப்பாவில் விரிவாக ஆய்வு செய்திருப்பதால், உலக அளவில் எத்தகைய பிரதிபலிப்பை கொண்டிருக்கிறது என்பதை காண்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்.

தாங்கள் விரும்பியதை விட குறைவாகவே குழந்தை பெற்றுக்கொண்டதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டோரில் எவ்வளவு பேர்(31%) கூறியிருக்கிறார்கள் என்பது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் 50 நாடுகளில் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வின் முன்னோடியான இந்த ஆய்வின் நோக்கம் குறுகலானது. உதாரணமாக நாடுகளுக்குள் வயது பிரிவுகள் என வரும்போது, முடிவு எதுவும் எட்டமுடியாத அளவு குறைவான மாதிரிகளே கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சில முடிவுகள் தெளிவாக உள்ளன.

அனைத்து நாடுகளிலும், 39% பேர் குழந்தை பெற்றுக்கொள்வதை நிதி குறைபாடுகள் தடுப்பதாக தெரிவித்தனர்.

அதிகபட்ச பதில் கொரியாவிலும்(58%), குறைந்தபட்சம் ஸ்வீடனிலும்(19%) பதிவாகின.

மொத்தத்தில், 12% பேர் மட்டுமே தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாததற்கு கருவுற இயலாமை– அல்லது கருவுறுதலில் சிரமம் என்பதை காரணமாக சொல்லியிருந்தனர்.

ஆனால் இந்த எண்ணிக்கை தாய்லாந்து(19%), அமெரிக்கா(16%), தென்னாப்பிரிக்கா (15%), நைஜீரியா(14%) மற்றும் இந்தியா(13%) உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக இருந்தது.

கருவுறுதல் விகிதம், இந்தியா, உலகம், ஐக்கிய நாடுகள் சபை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 12% பேர் மட்டுமே தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாததற்கு கருவுறுதலில் சிரமம் என்பதை காரணமாக சொல்லியிருந்தனர்.

"குறைந்த கருவுறுதல் விகித பிரச்சனைகள் குறித்து [ஐநா] உண்மையில் முழுமையாக முன்னெடுத்துள்ளது இதுதான் முதல்முறை," என்கிறார் ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் மக்கள் தொகை ஆய்வாளர் ஸ்டூவர் கீடெல்-பாஸ்டென்.

அண்மைக் காலம்வரை , தங்களின் விருப்பத்தை விட அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்கள் மற்றும் கருத்தடைக்கான "பூர்த்தி செய்யப்படாதத் தேவை" குறித்தே முகமை அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது.

இருந்தாலும், கருவுறுதல் குறைவதற்கு எதிராக பதில் நடவடிக்கை குறித்து கவனமாக இருக்கும்படி யுஎன்எஃப்பிஏ வலியுத்துகிறது.

"தற்போது, அதிக மக்கள்தொகை அல்லது சுருங்கும் மக்கள் தொகை என பேரழிவு பற்றிய வெற்றுப் பேச்சுக்களைத்தான் பெரிய அளவில் பார்க்கிறோம். இது இதுபோன்ற அதிகபடியான எதிர்வினையையும் சில நேரம் சூழ்ச்சியான எதிர்வினையையும் உண்டாக்குகிறது," என்கிறார் காணெம்.

"அதாவது பெண்களை அதிக குழந்தைகள் அல்லது குறைவான குழந்தைகள் பெற்றுக்கொள்ள செய்யும் வகையில்."

40 வருடங்களுக்கு முன்பு சீனா, கொரியா, ஜப்பான், தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் எல்லாம் தங்களது மக்கள் தொகை அதிகமாக இருப்பதாக கவலைப்பட்டதாக அவர் சுட்டிக்கட்டுகிறார். ஆனால் 2015ஆம் ஆண்டில் அவர்கள் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினர்.

"அந்த நாடுகள் பயத்தில் அவசரகதியில் ஏதேனும் கொள்கையை இயற்றாமல் தடுக்க நாம் முடிந்தவரை முயற்சி செய்யவேண்டும்," என்கிறார் கீடெல்- பாஸ்டென்.

"குறைவான கருவுறுதல், வயதாகி வரும் மக்களின் தொகை, மக்கள்தொகை தேக்கம் போன்றவை தேசியவாத, குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் பாலின பாரம்பரிய கொள்கைகளை அமல்படுத்த ஒரு சாக்காக பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம்," என்கிறார் அவர்.

குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதாரத்தை விட பெரிய தடையாக இருப்பது போதிய நேரமின்மைதான் என்பதை யுஎன்எஃப்பிஏ (UNFPA) கண்டறிந்தது. மும்பையில் இருக்கும் நம்ரதாவுக்கு இது உண்மையாக் தோன்றுகிறது.

அவர் தனது அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு தினமும் குறைந்தது நான்கு மணி நேரத்தை செலவிடுகிறார். அவர் வீடு திரும்பும்போது முற்றிலும் சோர்வடைந்திருக்கிறார், ஆனால் தனது மகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார். அவரது குடும்பத்திற்கு அவ்வளவு தூக்கம் கிடைப்பதில்லை.

"ஒரு வேலை நாளுக்கு பிறகு, உங்கள் குழந்தையுடன் போதிய நேரம் செலவிடவில்லை என ஒரு தாயாக உங்களுக்கு அந்த குற்ற உணர்ச்சி இயல்பிலேயே வரும்.," என்கிறார் அவர்.

"எனவே நாங்கள் ஒரே ஒரு குழந்தை மீது மட்டும் கவனம் செலுத்தப் போகிறோம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyvy8e4nwwo

காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி

2 months 3 weeks ago

13 JUL, 2025 | 06:36 PM

image

மத்திய காசாவில் நீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய உடல்களை நுசெரெய்த் அல் அவ்தா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவசரசேவை பிரிவினர் ஏழு சிறுவர்கள்; உட்பட 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நுசெய்ரெத் அகதிமுகாமில் தண்ணீர்விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தொழில்நுட்ப கோளாறினால் பொதுமக்கள் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாதி இலக்குவைக்கபட்டார் ஆனால் இலக்கு தவறியது என தெரிவித்துள்ளது.

இரத்தக்காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்களும் உயிரிழந்த நிலையில் சிறுவர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/219906

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு!

2 months 3 weeks ago

84775620007-20250711-t-201408-z-18193810

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு!

மெக்ஸிக்கோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்து வருகிறார்.

இந்த நிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் மெக்ஸிக்கோ, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் நேற்று (12) அறிவித்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு(Ursula von der Leyen) எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் விரக்தியை ஏற்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1438958

தைவான் மீதான சாத்தியமான போரில் நட்பு நாடுகளின் பங்கு குறித்து அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது

2 months 3 weeks ago

தைவான் மீதான சாத்தியமான போரில் நட்பு நாடுகளின் பங்கு குறித்து அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும் என்று FT தெரிவித்துள்ளது.

தைவானைப் பாதுகாக்க அமெரிக்காவே வெற்று காசோலை உத்தரவாதத்தை வழங்காததால், இந்த கோரிக்கை டோக்கியோ மற்றும் கான்பெர்ரா இரண்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தைவான் ஜலசந்தியில் எழுந்துள்ள அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தீவு அதன் பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. இங்கே, அக்டோபரில் தைவான் ஜனாதிபதி லாய் சிங்-டே தளத்திற்கு விஜயம் செய்தபோது, ஹ்சியுங் ஃபெங் III மொபைல் ஏவுகணை ஏவுகணைக்கு முன்னால் ஒரு சிப்பாய் காணப்படுகிறார்.

தைவான் ஜலசந்தியில் எழுந்துள்ள அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தீவு அதன் பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. இங்கே, அக்டோபரில் தைவான் ஜனாதிபதி லாய் சிங்-டே தளத்திற்கு விஜயம் செய்தபோது, ஹ்சியுங் ஃபெங் III மொபைல் ஏவுகணை ஏவுகணைக்கு முன்னால் ஒரு சிப்பாய் காணப்படுகிறார்.

( புகைப்பட உரிமை : REUTERS/TYRONE SIU )

ஜெருசலேம் போஸ்ட் ஸ்டாஃப் எழுதியது

ஜூலை 12, 2025 14:50

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவும் சீனாவும் போருக்குச் சென்றால் , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா என்ன பங்கு வகிக்கும் என்பதை தெளிவுபடுத்துமாறு பென்டகன் வலியுறுத்துவதாக பைனான்சியல் டைம்ஸ் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளுடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்காவின் கொள்கைக்கான பாதுகாப்புத் துணைச் செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி, இந்த விஷயத்தை வலியுறுத்தி வருவதாக, விவாதங்களை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி அறிக்கை கூறியது.

தைவானைப் பாதுகாக்க அமெரிக்காவே வெற்று காசோலை உத்தரவாதத்தை வழங்காததால், அறிக்கையிடப்பட்ட கோரிக்கை டோக்கியோ மற்றும் கான்பெரா இரண்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது .

JPost வீடியோக்கள்

சீனாவுடனான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல்-ஈரான் போரிலிருந்து தைவான் பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. இங்கு, புதன்கிழமை மியோலியில் நடைபெறும் வருடாந்திர ஹான் குவாங் இராணுவப் பயிற்சியின் முதல் நாளில், தைவானிய ரிசர்வ் படையினர் போருக்கு முந்தைய பயிற்சியில் பங்கேற்கின்றனர். (நன்றி: I-Hwa Cheng/AFP via Getty Images)

சீனாவுடனான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல்-ஈரான் போரிலிருந்து தைவான் பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. இங்கு, புதன்கிழமை மியோலியில் நடைபெறும் வருடாந்திர ஹான் குவாங் இராணுவப் பயிற்சியின் முதல் நாளில், தைவானிய ரிசர்வ் படையினர் போருக்கு முந்தைய பயிற்சியில் பங்கேற்கின்றனர். (நன்றி: I-Hwa Cheng/AFP via Getty Images)

தைவானுக்கு எதிராக இராணுவ அழுத்தம் அதிகரிக்கிறது.

ராய்ட்டர்ஸால் இந்த அறிக்கையை சரிபார்க்க முடியவில்லை. கருத்துக்கான கோரிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை. 

முறையான இராஜதந்திர உறவுகள் இல்லாவிட்டாலும், அமெரிக்கா தைவானின் மிக முக்கியமான ஆயுத சப்ளையர் ஆகும். பெய்ஜிங் தீவின் மீது தனது இறையாண்மையை வலியுறுத்த முற்படுவதால், பல சுற்று போர் பயிற்சிகள் உட்பட , சீனாவிடமிருந்து தைவான் அதிகரித்த இராணுவ அழுத்தத்தை எதிர்கொண்டது. சீனாவின் இறையாண்மையை வலியுறுத்துவதை தைவான் நிராகரிக்கிறது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், கோல்பி, உத்தி மற்றும் படை மேம்பாட்டுக்கான துணை உதவி பாதுகாப்பு செயலாளராக இருந்தார். அமெரிக்க இராணுவம் சீனாவுடனான போட்டிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலிருந்து அதன் கவனத்தை மாற்ற வேண்டும் என்றும் வாதிடுவதில் கோல்பி பெயர் பெற்றவர்.

The Jerusalem Post | JPost.com
No image previewPentagon presses Australia, Japan over role in potential...
The Financial Times reported that the request caught both Tokyo and Canberra off guard, as the US itself does not offer a blank check guarantee to defend Taiwan.

அகதிகளைப் பரிமாற்ற பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா திட்டம்!

2 months 3 weeks ago

fravec.jpg?resize=651%2C375&ssl=1

அகதிகளைப் பரிமாற்ற பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா திட்டம்!

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ‘One in, One out‘ எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், அகதிகளை பரிமாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளன.

இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிரித்தானிய விஜயத்தினை  தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சட்டவிரோத  குடியேற்றத்தை  தடுத்தல் மற்றும் அகதிகளை கட்டுப்படுத்தவே இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ், சிறு படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

இதற்குப் பதிலாக, பிரான்ஸில் இருந்து அங்கீகாரம் பெற்ற சமமான எண்ணிக்கையிலான அகதிகளை, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் பிரித்தானியா ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து வழியாக கடந்த சில ஆண்டுகான அதிகளவிலான புகலிடக்கோரிக்கையானர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.  அத்துடன் குறித்த பகுதியில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே குறித்த திட்டம் இன்னும்  சில வாரங்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த விடயம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1438838

வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெனால்ட் ட்ரம்பின் சூப்பர் மேன் அவதாரம்!

2 months 3 weeks ago

New-Project-139.jpg?resize=750%2C375&ssl

வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெனால்ட் ட்ரம்பின் சூப்பர் மேன் அவதாரம்!

உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து, தனது கட்டண அச்சுறுத்தால் சந்தை ஏற்ற இறக்கங்களைத் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, வெள்ளை மாளிகை ‘சூப்பர்மேன்’ என்று சித்தரித்துள்ளது.

79 வயதான அவரை “நம்பிக்கையின் சின்னம்” என்று அழைத்த வெள்ளை மாளிகை, ஜேம்ஸ் கன் இயக்கிய சூப்பர்மேன் திரைப்படம் வெள்ளிக்கிழமை (11) வெளியானதைத் தொடர்ந்து, சூப்பர்மேன் கதாப்பாத்திரத்தில் AI-உருவாக்கிய ட்ரம்பின் படத்தை வெளியிட்டது.

வெள்ளை மாளிகை அல்லது ட்ரம்ப்பால் AI-உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்வது புதுமையல்ல.

கடந்த மே மாதம் போப் லியோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி போப் போன்ற AI-உருவாக்கப்பட்ட தனது படத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ஒகஸ்ட் 1 முதல் கனடா இறக்குமதிகளுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் வியாழக்கிழமை (10) அறிவித்தார்.

இது இரண்டு வட அமெரிக்க அண்டை நாடுகளுக்கிடையேயான விரிசலை ஆழப்படுத்தும் நடவடிக்கையாகும்.

ஏனைய பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15 முதல் 20 சதவீதம் வரை முழுமையான வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி இதுவரை 22 நாடுகளுக்கு வரி அறிவிப்பு கடிதங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத வரிகளும் அடங்கும்.

GvisuIXXYAET5aa?format=jpg&name=large

https://athavannews.com/2025/1438830

காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி

2 months 3 weeks ago

காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி

11 JUL, 2025 | 10:13 AM

image

மத்திய காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் முன் ஊட்டச்சத்து மருந்துகளுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டவரிசையில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஒரு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

டெய்ர் அல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி மருத்துவர்கள் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது பல குழந்தைகள் மற்றும் பிறரின் உடல்கள் தரையில் கிடப்பதைக் . காண்பித்துள்ளது.

இந்த மருத்துவமனையை நடத்தும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உதவி குழுவான ப்ராஜெக்ட் ஹோப், இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று கூறியது. இஸ்ரேலிய இராணுவம் "ஹமாஸ் பயங்கரவாதி"யைத் தாக்கியதாகவும், பொதுமக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் வருந்துவதாகவும் கூறியது.

2bfd1940-5db0-11f0-b5c5-012c5796682d.jpg

இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், வியாழக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 66 பேரில் அவர்களும் அடங்குவர்.

ஊட்டச்சத்தின்மை தொற்றுநோய் உட்பட பல நோய்களிற்கான மருத்துகளை பெறுவதற்காக மருத்துவநிலையம் திறப்பதற்காக காத்திருந்த மக்கள் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என புரொஜெக்ட் ஹோப் தெரிவித்துள்ளது.

திடீரென ஆளில்லா விமானங்களின் சத்தத்தை கேட்டோம் அதன் பின்னர் வெடிப்பு இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்த யூசுவ் அல் அய்டி என்பவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார்.

நிலத்திற்கடியில் பூமி அதிர்ந்தது,எங்களை சுற்றியிருந்த அனைத்தும் குருதியாகவும் பெரும் அலறல்களாகவும் மாறியது என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் தாக்குதலின் உடனடி விளைவுகளைக் காட்டின  பெரியவர்களும் சிறு குழந்தைகளும் ஒரு தெருவில் கிடந்தனர்இ சிலர் பலத்த காயமடைந்தனர் மற்றவர்கள் நகரவில்லை.

அருகிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையின் பிணவறையில் இறந்த குழந்தைகளின் உறவினர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு முன்பு வெள்ளை துணிகள் மற்றும் உடல் பைகளில் போர்த்தி அழுதனர்.

ஒரு பெண் பிபிசியிடம் தனது கர்ப்பிணி மருமகள் மணாலும் அவரது மகள் பாத்திமாவும் அவர்களில் இருந்ததாகவும் மணலின் மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாகவும் கூறினார்.

"சம்பவம் நடந்தபோது குழந்தைகளுக்கு மருந்துப் பொருட்களைப் பெறுவதற்காக அவர் வரிசையில் நின்றிருந்தார்" என்று இன்டிசார் கூறினார்.அருகில் நின்ற மற்றொரு பெண் "அவர்கள் என்ன பாவத்திற்காக கொல்லப்பட்டார்கள்?" என்று கேட்டாள்.

"நாங்கள் முழு உலகத்தின் காதுகளுக்கும் கண்களுக்கும் முன்பாக இறந்து கொண்டிருக்கிறோம். முழு உலகமும் காசா பகுதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலிய இராணுவத்தால் மக்கள் கொல்லப்படாவிட்டால் அவர்கள் உதவி பெற முயற்சிக்கும் போது இறக்கிறார்கள்."

 புரொஜெக்ட் ஹோப் ப்ராஜெக்ட் ஹோப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரபிஹ் டோர்பே உதவி குழுவின் மருத்துவமனைகள் "காசாவில் ஒரு புகலிடமாக இருந்தன அங்கு மக்கள் தங்கள் சிறு குழந்தைகளை அழைத்து வருகிறார்கள் பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு பெறுகிறார்கள்இமக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை பெறுகிறார்கள் மேலும் பல" என்று கூறினார்.

"ஆயினும்கூட இன்று காலை கதவுகள் திறக்கும் வரை வரிசையில் நின்ற அப்பாவி குடும்பங்கள் இரக்கமின்றி தாக்கப்பட்டன" என்று அவர் மேலும் கூறினார். "திகிலடைந்து மனம் உடைந்து இனி நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை சரியாகத் தெரிவிக்க முடியவில்லை."

"இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும் மேலும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் காசாவில் யாரும் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்பதை இது தெளிவாக நினைவூட்டுகிறது. இது தொடர முடியாது."

யுனிசெஃப் தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் கூறினார்: "உயிர்காக்கும் உதவியைப் பெற முயற்சிக்கும் குடும்பங்களைக் கொல்வது மனசாட்சிக்கு விரோதமானது."

https://www.virakesari.lk/article/219708

கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதித்த ட்ரம்ப்!

2 months 3 weeks ago

New-Project-127.jpg?resize=750%2C375&ssl

கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதித்த ட்ரம்ப்!

எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15% அல்லது 20% மொத்த வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பொருட்களுக்கான புதிய வரி விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் சுயமாக விதித்துக் கொண்ட காலக்கெடுவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது.

கனடா மீதான அண்மைய வரிகளை ட்ரம்ப் வியாழக்கிழமை (10) சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

அதில், கனடாவுக்கான புதிய வரிகள் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் கனடா பதிலடி கொடுத்தால் அது அதிகரிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார்.

அமெரிக்கா ஏற்கனவே சில கனேடிய பொருட்களுக்கு 25% முழுமையான வரியை விதித்துள்ளது.

இந்த நிலையில் 35% வரி என்பது வொஷிங்டனுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்ற கனேடிய பிரதமர் மார்க் கார்னிக்கு ஒரு அடியாகும்.

இந்த வாரம் ஜப்பான், தென் கொரியா மற்றும் இலங்கை உள்ளிட்ட அமெரிக்க வர்த்தக பங்காளிகளுக்கு ட்ரம்ப் அனுப்பிய 20க்கும் மேற்பட்ட கடிதங்களில் இந்தக் கடிதமும் ஒன்றாகும்.

கனடாவின் கடிதத்தைப் போலவே, ஒகஸ்ட் 1 ஆம் திகதிக்குள் வர்த்தக பங்காளிகள் மீது அந்த வரிகளை அமுல்படுத்துவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

அண்மைய வரி அச்சுறுத்தல் கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ ஒப்பந்தத்தின் (CUSMA) கீழ் வரும் பொருட்களுக்குப் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ட்ரம்ப் அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகளுக்கு உலகளாவிய 50% வரியையும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத அனைத்து கார்கள் மற்றும் லொரிகளுக்கும் 25% வரியையும் விதித்துள்ளார்.

செப்பு இறக்குமதிகளுக்கு 50% வரியையும் அண்மையில் அவர் அறிவித்தார், இது அடுத்த மாதம் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

கனடா அதன் பொருட்களில் நான்கில் மூன்று பங்கினை அமெரிக்காவிற்கு விற்கிறது.

மேலும் இது ஒரு வாகன உற்பத்தி மையமாகவும், உலோகங்களின் முக்கிய விநியோகஸ்தராகவும் உள்ளது.

மெக்ஸிகோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும், அமெரிக்க ஏற்றுமதிகளை அதிகம் வாங்குபவராகவும் கனடா உள்ளது.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியக தரவுகளின்படி, கடந்த ஆண்டு இது $349.4 பில்லியன் அமெரிக்க பொருட்களை இறக்குமதியும், $412.7 பில்லியன் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதியும் செய்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக சவால்களைச் சமாளிப்பதற்கான உறுதிமொழியுடன் தனது லிபரல் கட்சியை மீண்டும் தேர்தல் வெற்றிக்கு அழைத்துச் சென்ற கார்னி, ஜூலை 21 ஆம் திகதிக்குள் அதன் முக்கிய வர்த்தக பங்காளியுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1438739

போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன?

2 months 3 weeks ago

போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன?

வங்கதேசம்: போராட்டக்காரர்களை கொன்று குவிக்க உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, வங்கதேசத்தில் மாணவர்கள் சூரையாடியதாகக் கூறப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை ஷேக் ஹசீனா பார்வையிட்டபோது...

கட்டுரை தகவல்

  • கிறிஸ்டோபர் கில்ஸ், ரித்தி ஜா, ரஃபித் ஹுசைன் & தாரேகுஸ்ஸமன் ஷிமுல்

  • பிபிசி ஐ புலனாய்வு பிரிவு & பிபிசி வங்க மொழி சேவை

  • 10 ஜூலை 2025, 05:27 GMT

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக கொடிய அடக்குமுறையைக் கையாள அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி அளித்ததாக, அவரது தொலைபேசி அழைப்புகளில் ஒன்றின் ஆடியோ பதிவு காட்டுகிறது. இந்த ஆடியோ பதிவு பிபிசி ஐ குழுவினரால் சரிபார்க்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இணையத்தில் கசிந்த இந்த ஆடியோவில், போராட்டக்காரர்களுக்கு எதிராக "கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த" தனது பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் அளித்திருப்பதாகவும், "அவர்களை எங்கு கண்டாலும் பாதுகாப்புப் படையினர் சுடுவார்கள்" என்றும் ஹசீனா கூறுகிறார்.

இந்த ஆடியோ பதிவை வங்கதேசத்தில் உள்ள வழக்கறிஞர்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அவர் வங்கதேசத்தில் இல்லையென்றாலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டத்தில் 1,400 பேர் வரை உயிரிழந்ததாக ஐ.நா. புலனாய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவுக்கு தப்பிச் சென்ற ஷேக் ஹசீனா மட்டுமின்றி அவரது கட்சியும், ஹசீனாவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றனர்.

ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், "அவர் சட்டவிரோதமாக எதையும் செய்யத் திட்டமிட்டதாகவோ அல்லது கடுமையாக பதிலளித்ததாகவோ" ஆடியோவில் காட்டப்படவில்லை என்று கூறி, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

ஷேக் ஹசீனாவின் ஆடியோ பதிவு குறித்த பின்னணி

கடந்த ஆண்டு கோடையில் அரசாங்கத்தை எதிர்த்து வீதிகளில் போராடிய போராட்டக்காரர்களைச் சுடுவதற்கு அவர் நேரடியாக அனுமதி அளித்தமைக்கான மிக முக்கியமான சான்றாக, ஷேக் ஹசீனா அடையாளம் தெரியாத மூத்த அரசு அதிகாரி ஒருவருடன் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு இருக்கிறது.

கடந்த 1971ஆம் ஆண்டு சுதந்திரப் போரில் போராடியவர்களின் உறவினர்களுக்கான அரசுப்பணி இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஹசீனாவை பதவியில் இருந்து நீக்கிய ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுத்தது. 1971 போருக்குப் பிறகு வங்கதேசம் கண்ட மிக மோசமான வன்முறைப் போராட்டம் இது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று, டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் வீட்டை மக்கள் கூட்டம் முற்றுகையிட்டது. அதற்கு முன்பு, அவர் ஹெலிகாப்டரில் தப்பினார். அன்றைய தினத்தில், மிக மோசமான வன்முறைச் சம்பவங்களில் சில நிகழ்ந்தன.

பிபிசி உலக சேவை மேற்கொண்ட விசாரணையில், வங்கதேச தலைநகரில் போராட்டக்காரர்களை போலீசார் கொன்றது பற்றிய புதிய தகவல்கலைக் கண்டறிந்தது. இதில், முன்னர் அறியப்பட்டதைவிட அதிக அளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் அடங்கும்.

தற்போது கசிந்துள்ள ஆடியோ குறித்த தகவலறிந்த நபர் ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, அந்த உரையாடல் ஜூலை 18ஆம் தேதி நடந்ததாகவும், அதன்போது ஹசீனா டாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்ததாகவும் கூறினார்.

வங்கதேசத்தின் போராட்டத்தில் அதுவொரு முக்கியமான தருணமாக இருந்தது. போராட்டக்காரர்களை போலீசார் கொல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் மீது பொதுமக்கள் சீற்றம் கொண்டு எதிர்வினையாற்றினர்.

ஹசீனாவின் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு சில நாட்களில், டாக்கா முழுவதும் ராணுவ பாணியிலான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக பிபிசி பார்த்த போலீஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆடியோ உண்மை என்பதை உறுதி செய்த பிபிசி

வங்கதேசம்: போராட்டக்காரர்களை கொன்று குவிக்க உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன?

பட மூலாதாரம்,AFP

பிபிசி ஆய்வு செய்த ஆடியோ பதிவு, ஷேக் ஹசீனா சம்பந்தப்பட்ட பல தொலைபேசி அழைப்புகளில் ஒன்று. இந்த அழைப்புகள், தகவல் தொடர்புகளைச் சரிபார்த்துக் கண்காணிக்கும் வங்கதேசத்தில் உள்ள ஓர் அரசு நிறுவனமான தேசிய தொலைத்தொடர்பு கண்காணிப்பு மையத்தால் பதிவு செய்யப்பட்டன.

இந்தத் தொலைபேசி அழைப்பின் ஆடியோ இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் கசிந்தது. ஆனால், யாரால் இது இணையத்தில் கசிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. போராட்டங்களுக்குப் பிறகு, ஹசீனாவின் தொலைபேசி அழைப்புகளின் ஏராளமான பதிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றில் பல சரிபார்க்கப்படவில்லை.

ஜூலை 18ஆம் தேதியன்று பதிவான தொலைபேசி உரையாடல், ஷேக் ஹசீனாவின் குரல் தொடர்பான அறியப்பட்ட ஆடியோ பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. வங்கதேச காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை, அந்தப் பதிவில் உள்ள குரல் அவரது குரலுடன் ஒத்துப் போவதை உறுதி செய்தது.

ஆடியோ தடயவியல் நிபுணர்களான இயர்ஷாட்டுடன் பதிவை பகிர்ந்துகொண்டதன் மூலம் பிபிசி தனது சுயாதீன பகுப்பாய்வை மேற்கொண்டது. அவர்கள் இந்த உரையாடல் திருத்தப்பட்டதற்கோ அல்லது மாற்றப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்றும், அது செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினர்.

வங்கதேசம்: போராட்டக்காரர்களை கொன்று குவிக்க உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆடியோ பதிவு ஓர் அறையில், ஸ்பீக்கரில் பேசப்பட்டிருக்கலாம் என்று இயர்ஷாட் நிபுணர்கள் கூறினர். தனித்துவமான தொலைபேசி ஒலி அதிர்வெண்கள் மற்றும் பின்னணி இரைச்சல் காரணமாக அவர்களால் அதை அறிய முடிந்தது. ஆடியோ பதிவு முழுவதும் இருந்த மின்சார நெட்வொர்க் அதிர்வெண் ஒன்றை இயர்ஷாட் நிபுணர்கள் அடையாளம் கண்டனர்.

உரையாடலைப் பதிவு செய்யும் சாதனங்கள் மின் சாதனங்களில் இருந்து சிக்னல்களை எடுக்கும்போது இது நிகழ்கிறது. இது அந்த ஆடியோ பதிவு உண்மையான மற்றும் திருத்தப்படவில்லை என்பதற்கான அறிகுறியாக உள்ளது.

ஷேக் ஹசீனாவின் உரையாடலில் உள்ள, ரிதம், ஒலிப்பு முறை, சுவாச ஒலிகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்து, நிலையான இரைச்சல்களை அடையாளம் கண்டதன் மூலம், ஆடியோ செயற்கையாக மாற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இயர்ஷாட் நிபுணர்கள் கண்டறிந்தனர்.

"இந்த ஆடியோ பதிவுகள், ஷேக் ஹசீனாவின் பங்கை நிறுவுவதற்கு மிக முக்கியமானவை. அவை தெளிவாக உள்ளன, முறையாக அவரால் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன." என்று பிரிட்டிஷ் சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் டோபி கேட்மேன் பிபிசியிடம் கூறினார்.

ஷேக் ஹசீனா மற்றும் பிறருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமான வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு கேட்மேன் ஆலோசனை வழங்கி வருகிறார்.

அவாமி லீக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துப் பேசுகையில், "பிபிசி குறிப்பிடும் ஆடியோ பதிவு உண்மையானதா என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது" என்று தெரிவித்தார்.

வங்கதேச வரலாற்றில் மிகக் கொடூரமான போலீஸ் வன்முறை

வங்கதேசம்: போராட்டக்காரர்களை கொன்று குவிக்க உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷேக் ஹசீனாவுடன், முன்னாள் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளும் போராட்டக்காரர்களின் கொலைகளில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 203 பேர் மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் 73 பேர் காவலில் உள்ளனர்.

பிபிசி ஐ புலனாய்வுக் குழு, 36 நாட்களில் போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறை தாக்குதல்களை விவரிக்கும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பகுப்பாய்வு செய்து சரிபார்த்தது.

தலைநகர் டாக்காவின் பரபரப்பான ஜத்ராபரியில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று நடந்த ஒரு சம்பவத்தில், குறைந்தது 52 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

இது வங்கதேசத்தின் வரலாற்றில் மிக மோசமான போலீஸ் வன்முறைச் சம்பவங்களில் ஒன்று. அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட ஆரம்பக்கட்ட அறிக்கைகள் ஜத்ராபரியில் அன்று 30 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தன.

இந்தப் படுகொலை எவ்வாறு தொடங்கியது, முடிந்தது என்பது பற்றிய புதிய விவரங்களை பிபிசி புலனாய்வு வெளிப்படுத்தியது.

நேரில் கண்ட சாட்சிகள் விவரித்த காட்சிகள், சிசிடிவி பதிவுகள், டிரோன் படங்களைச் சேகரித்ததன் மூலம், போராட்டக்காரர்களிடம் இருந்து போலீசாரை பிரித்துவிட்ட ராணுவ வீரர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிய உடனே போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதை பிபிசி ஐ புலனாய்வு உறுதி செய்தது.

சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக, சந்துகள், நெடுஞ்சாலையில் தப்பிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் அருகிலுள்ள ராணுவ முகாமில் தஞ்சம் புகுந்தனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு போராட்டக்காரர்கள் பதிலடி கொடுத்ததில், குறைந்தது ஆறு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஜத்ராபரி காவல் நிலையத்திற்குத் தீ வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த வன்முறைச் சம்வபங்களில் ஈடுபட்டதற்காக 60 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக வங்கதேச காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"அப்போதைய காவல்துறையின் சில அதிகாரிகள் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதால் வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்தன. வங்கதேச காவல்துறை முழுமையான, பாரபட்சமற்ற விசாரணைகளைத் தொடங்கியுள்ளது" என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் விசாரணை

வங்கதேசம்: போராட்டக்காரர்களை கொன்று குவிக்க உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன?

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததைத் தொடர்ந்து, எரிந்த நிலையில் இருந்த ஜத்ராபரி காவல் நிலையத்தைக் காண மக்கள் திரண்டனர்

ஷேக் ஹசீனாவின் விசாரணை கடந்த மாதம் தொடங்கியது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை ஏற்படுத்துதல், தூண்டுதல், சதித்திட்டம் தீட்டுதல், படுகொலைகளைத் தடுக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும்.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை இந்தியா இதுவரை நிறைவேற்றவில்லை. விசாரணைக்காக ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்புவது சாத்தியமில்லை என்று டோபி காட்மேன் கூறுகிறார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படையின் செயல்களுக்கு அதன் தலைவர்கள் பொறுப்பல்ல என்று அவாமி லீக் கூறுகிறது.

பிரதமர் உள்பட அதன் உயர்மட்டத் தலைவர்கள் சிலர் மக்கள் கூட்டத்திற்கு எதிராக கொடிய பலத்தைப் பயன்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதாகவோ அல்லது அதற்கு உத்தரவிட்டதாகவோ கூறப்படும் கூற்றுகளை அவாமி லீக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் முற்றிலும் மறுத்துள்ளார்.

"மூத்த அரசு அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவுகள் நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்டவை மற்றும் உயிரிழப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டவை," என்றும் அவர் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா மற்றும் அவரது அரசின் நடவடிக்கைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்களைக் கண்டறிந்ததாகக் கூறும் ஐ.நா புலனாய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை அவாமி லீக் கட்சி நிராகரித்துள்ளது.

இதுகுறித்து கருத்து கேட்க வங்கதேச ராணுவத்தை பிபிசி அணுகியது. ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வங்கதேசத்தை நிர்வகித்து வருகிறது.

அவரது அரசாங்கம் தேசிய அளவிலான தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அவாமி லீக் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8xv9vjzllvo

செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - மூவர் பலி

2 months 3 weeks ago

செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - மூவர் பலி

Published By: RAJEEBAN

10 JUL, 2025 | 09:31 AM

image

செங்கடல் பகுதியில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்  கப்பலொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

லைபீரிய கொடியுடன் 25 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த கிரேக்கத்தை சேர்ந்த எட்டேர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் மீது சிறிய படகுகளில் இருந்து  ஆர்பிஜி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாய்கிழமை முழுவதும் இந்த தாக்குதல் இடம்பெற்றது அதன் பின்னரே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பலையே தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பலரை கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பலரை கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ள யேமனில் உள்ள அமெரிக்க தூதரகம் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களின் 21 பிரஜைகளை கைதுசெய்துள்ளனர் என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரஸ்ய பிரஜையொருவருக்கு காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஒரே வாரத்தில் இரண்டு வர்த்தக கப்பல்களை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/219630

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா அறிக்கையாளருக்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு

2 months 3 weeks ago

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா அறிக்கையாளருக்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு

Published By: RAJEEBAN

10 JUL, 2025 | 11:35 AM

image

காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ  ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஐநா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்

ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்திருந்தார்.சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதனை பலவீனப்படுத்தும்அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/219647

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி

2 months 3 weeks ago

Trump-Lula-New.jpg?resize=750%2C375&ssl=

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி.

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தங்களது இறையாண்மை நிலையை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி  லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது”

‘பிரேசில் ஒரு இறையாண்மை நாடு. நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு கட்டுப்பாடு அல்லது அழுத்தத்தையும் ஏற்கமாட்டோம்.

பிரேசில் டிஜிட்டல் வலைதளங்களில் வரும் வெறுப்பு பேச்சு, இனவெறி, சிறுவர்கள் துஷ்பிரயோகம், மோசடிகள், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்காது.

பிரேசிலில் பேச்சுரிமை என்பது எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்காது. பிரேசிலில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், இங்கே இயங்குவதற்கு பிரேசில் சட்டத்தை பின்பற்ற வேண்டும்.

பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூற்றுகள் தவறானவை. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடனான அமெரிக்காவின் வணிக உபரி 410 பில்லியன் டொலர்கள் என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன.

அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டம் மூலம் கொடுக்கும்.

பிரேசில் இறையாண்மை,பரஸ்பர மரியாதை, மற்றும் உலகளாவிய உறவுகளில் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை மதிக்கிறது’ இவ்வாறு  பதிவிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1438672

சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு விமானப்பயணத்திற்காக தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் இத்தாலி கிரேக்கம் அனுமதித்தது ஏன்? ஐநா அதிகாரி கேள்வி

2 months 4 weeks ago

09 JUL, 2025 | 02:48 PM

image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும், அதனை பலவீனப்படுத்தும்,அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை அங்கீகரிக்கும் ரோம் பிரகடனத்தில் அமெரிக்கா கைச்சாத்திடாதது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/219580

பிரான்ஸின் மார்சேயில் பாரிய காட்டுத் தீ; 100 பேர் காயம்

2 months 4 weeks ago

Published By: DIGITAL DESK 3

09 JUL, 2025 | 12:42 PM

image

பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒன்பது தீயணைப்பு வீரர்கள், 22 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

மார்சேய் பகுதியை சென்று பார்வையிட்ட உள்நாட்டு அமைச்சர் புருனோ ரீடெய்லியூ அங்கு அவர் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"கடற்படை தீயணைப்பு வீரர்கள் கையில் குழாய்களுடன் கொரில்லாப் போரை நடத்தி வருகின்றனர்" என மார்சேயின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையை மேற்கோள் காட்டி  நகர மேயர் பெனாய்ட் பயான் தெரிவித்துள்ளார்.

தங்கள் வீடுகளை விட்டு 400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 

தீப் பரவல் நிமிடத்திற்கு 1.2 கிலோ மீற்றர் (0.7 மைல்) வேகத்தில் பரவியுள்ளது. காற்று, அடர்ந்த தாவரங்கள் மற்றும் செங்குத்தான சரிவுகளால் தீ வேகமாக பரவி வருவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தீயணைப்பு வீரர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"காயமடைந்தவர்கள் மற்றும் அனைத்து குடியிருப்பாளர்கள் மீது எங்கள் சிந்தனைகள் உள்ளன" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நண்பகல் முதல் பல மணி நேரம் மூடப்பட்டிருந்த மார்சேய் புரோவென்ஸ் விமான நிலையம் அந்நாட்டு நேரப்படி இரவு 21:30 மணிக்கு (GMT 19:30) பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் நிகழ்ந்தது இல்லை என விமான நிலையத்தின் தலைவர் ஜூலியன் காஃபினியர் தெரிவித்துள்ளார்.

மார்சேய்க்கு வடக்கே பென்னஸ்-மிராபியூ அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ, சுமார் 700 ஹெக்டயர் (7 சதுர கி.மீ) பரப்பளவுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்ததால் இந்த காட்டுத்  தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WhatsApp_Image_2025-07-09_at_9.50.15_AM_

Bouches-du-Rhône பகுதியில் மே மாதம்  19 ஆம் திகதி முதல் ஒரு சொட்டு மழை கூட பதிவாகவில்லை.

இதேவேளை, பிரான்சில் திங்களன்று நார்போன் அருகே மற்றுமொரு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 60 கிலோ மீற்றர் (40 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளதால் சுமார் 2,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவு எரிந்து நாசமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு ஸ்பெயினின் கட்டலோனியா பகுதி உட்பட ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் காட்டுத்தீ பதிவாகியுள்ளது. கிழக்கு பகுதி தாரகோனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால்  செவ்வாயன்று 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் தமது வதிவிடங்களுக்குள் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இரவு முழுவதும் பலத்த காற்று வீசியதால் தீ அணைப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவுக்கு தீ பரவியுள்ளது.

ஜூன் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகரித்தமையினால் ஸ்பெயினின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன.

கிரேக்கத்தில் நாடு முழுவதும் திங்களன்று  சுமார் 41 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஏழு காட்டுத் தீ  திங்கள் மாலை வரை செயல்பாட்டில் இருந்தன என்று தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் தென் ஐரோப்பாவின் பெரும்பகுதி கோடை கால  ஆரம்பத்தில் கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது, தீ விபத்துக்களினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

WhatsApp_Image_2025-07-09_at_9.50.16_AM.

https://www.virakesari.lk/article/219549

பெண்களிற்கு எதிரான ஒடுக்குமுறை - தலிபான் தலைவர்களிற்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

2 months 4 weeks ago

09 JUL, 2025 | 10:33 AM

image

பெண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியமைக்காக தலிபான் தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

தலிபானின் இரண்டு முக்கிய தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2021ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து  தலிபானின் உயர் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சதா மற்றும் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோர் பெண்கள் மற்றும் சிறுமிகளை நடத்திய விதத்தின் மூலம் மனித குலத்திற்கு எதிரான  குற்றத்தில் ஈடுபட்டனர் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன சர்வதேச  குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் அவர்கள் பெண்கள் சிறுமிகளிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் கல்வி கற்பதற்கு தடைவிதித்துள்ளனர், பெண்கள் பல தொழில்களில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளனர் என ஐசிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/219541

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ட்ரம்ப் – நெதன்யாகு இடையே நடைபெற்ற சந்திப்பு!

2 months 4 weeks ago

New-Project-112.jpg?resize=750%2C375&ssl

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ட்ரம்ப் – நெதன்யாகு இடையே நடைபெற்ற சந்திப்பு!

காசாவில் நடந்து வரும் போர் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் செவ்வாய்க்கிழமை (08) மாலை இரண்டாவது முறையாக சந்தித்தனர்.

60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு நிபந்தனை மீதமுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறியதை அடுத்து இந்த சந்திப்பு நடந்தது.

செவ்வாயன்று 5:00 EST (21:00 GMT) மணிக்குப் பிறகு நெதன்யாகு வெள்ளை மாளிகைக்கு நுழைந்து ட்ரம்புடன் சந்திப்பினை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்புக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவல்லை.

இந்த சந்திப்புக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை நெதன்யாகு, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை சந்தித்தார்.

ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்குப் பின்னர், நெதன்யாகு அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது அரசுப் பயணமாக இது அமைந்துள்ளது.

இரு தலைவர்களின் சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.

GvYwXDFXUAASyrr?format=jpg&name=large

இந்த சந்திப்பிற்குப் பின்னர் பிரதமர் நெதன்யாகு, காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை முடிந்ததாக நம்பவில்லை என்றும், ஆனால் பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு போர் நிறுத்தத்திற்காக நிச்சயமாக செயல்பட்டு வரும் நிலையில், எங்கள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் காசாவில் உயிருடன் இருக்கும் 10 பணயக்கைதிகளின் விடுதலையும், இறந்த ஒன்பது பேரின் உடல்களும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இஸ்ரேலிய பிரதமருக்கும் ட்ரம்பிற்குகம் இடையிலான சந்திப்பிற்கு முன்பு, ஒரு கட்டார் தூதுக்குழு வெள்ளை மாளிகைக்கு வந்து அதிகாரிகளுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக பேச்சுவார்த்தைகள் பற்றி அறிந்த ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான அண்மைய சுற்று பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இஸ்ரேலிய புள்ளிவிவரங்களின்படி 2023 ஒக்டோபர் 7 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கி சுமார் 1,200 பேரைக் கொன்று 251 பணயக்கைதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இஸ்ரேலின் பழிவாங்கும் தாக்குதலில் காசாவில் குறைந்தது 57,500 பேர் கொல்லப்பட்டதாக அந்தப் பிரதேசத்தின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1438558

பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்!

2 months 4 weeks ago

New-Project-105.jpg?resize=750%2C375&ssl

பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்!

சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புத் துறையில் அந்நாட்டுடன் ஒத்துழைப்பதாகவும் பெய்ஜிங் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் திங்களன்று (07) கூறினார்.

ஆனால் இந்த ஆண்டு மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் போது இஸ்லாமாபாத்திற்கு அதன் பங்கு மற்றும் உதவி குறித்த நேரடி கேள்விக்கு பதிலளிக்க அவர் விரும்பவில்லை.

ஒரு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர்,

சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய அண்டை நாடுகள், பாரம்பரிய நட்பை கொண்டுள்ளன.

பாதுகாப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இயல்பான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.

மேலும் அந்த விடயத்தில் எந்த மூன்றாம் தரப்பினரையும் சீனா குறிவைக்கவில்லை என்றார்.

இந்திய இராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங், பல்வேறு ஆயுத அமைப்புகளை சோதிக்க மோதலை பிரதானமாக பயன்படுத்தி சீனா பாகிஸ்தானுக்கு தீவிர இராணுவ ஆதரவை வழங்கியதாக பரிந்துரைத்ததைத் தொடர்ந்து சீனாவின் மேற்படி பதில் வந்தது.

https://athavannews.com/2025/1438489

Checked
Mon, 10/06/2025 - 23:05
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe