உலக நடப்பு

ரஷ்யா மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! விமானச் சேவைகள் நிறுத்தம்!

3 months 1 week ago

drone-fe.jpg?resize=497%2C375&ssl=1

ரஷ்யா மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! விமானச் சேவைகள் நிறுத்தம்!

ரஷ்யா மீது உக்ரேன் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதன் கொண்டாட்டங்கள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 8ஆம் திகதி முதல் நடைபெற உள்ளன. இதையடுத்து, உக்ரேனுடனான போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்திருந்தார்.

இப் போர்நிறுத்தம் மே 8ஆம் திகதி தொடக்கத்தில் இருந்து மே 10ஆம் திகதி இறுதி வரை, அதாவது 72 மணி நேரம் நீடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது. மேலும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்கும்படி உக்ரேனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை உக்ரேன் ஜனாதிபதி  செலன்ஸ்கி ஏற்க மறுத்த நிலையில், அந்நாடு தற்போது ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ரஷ்யாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரேன் நடத்திய   ட்ரோன்கள் தாக்குதல் காரணமாக  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள 4 விமான நிலையங்களிலும் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால், இருநாடுகளின் எல்லையிலுள்ள பகுதிகள் மற்றும் ரஷ்யாவின் மத்தியப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களினால் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் 2 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும், வோரோனெஸ் மாகாணத்தின் சில பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரேன் இணையக்கூடாது என்பதற்காக,அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431062

தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு

3 months 1 week ago

donald-trump-next-us-flag.jpg?resize=750

தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு  நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.

“இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி என்று அழைக்கப்படும் சர்ச்சைக் குறிய  உயிரியல் ஆராய்ச்சிக்கு வழங்கப்படும்  நிதியைக்  கட்டுப்படுத்துவது தொடர்பான உத்தரவொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று (05) பிறப்பித்தார்.

குறித்த ஆராய்ச்சியானது தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுக் கிருமிகள் எவ்வாறு அதிகமாக பரவக்கூடும் அல்லது மக்களை நோய்வாய்ப்படுத்தக்கூடும் என்பதை இந்த  ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு இருப்பினும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வகத்தில் மிகவும் ஆபத்தான நோய்க்கிருமியை உருவாக்கி, அது வெளியேறி ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தத் துறை நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சியை இன்னும் இறுக்கமாகக் கண்காணித்து கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

COVID-19 தொற்றுநோய் காலத்தில் இவ்வகை ஆராய்ச்சிகள் ஆராய்ச்சி ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் சர்ச்சைக்குரியதாக மாறியது.

குறிப்பாக COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV2 வைரஸ், சீனாவின் வுஹானில் உள்ள ஒரு சீன அரசாங்க ஆய்வகத்திலிருந்து பரவியதாகக் கூறப்பட்டது.

அத்துடன் COVID தொற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் குறித்த ஆராய்ச்சி  கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1430843

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

3 months 1 week ago

ஆப்பரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்கள் மீது தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக இந்தியா அறிவிப்பு.

இது இந்திய ஆக்கிரப்பு கஸ்மீரில் இருந்து நடப்பதாக தெரிகிறது.

பாகிஸ்தானிய இராணுவ நிலைகள் மீது தாக்குதலை தவிர்த்துள்ளோம் என்கிறது இந்தியா.

இது இந்திய வான் எல்லைக்குள் இருந்து நடந்த கோழைத்தனமான தாக்குதல் - நாம் தகுந்த பதிலடி கொடுப்போம் என்கிறது பாக்கிஸ்தான்:

BBC News
No image previewIndia says it has launched strikes on Pakistan and Pakist...
A spokesperson for Pakistan's military tells local media that three locations have been hit by missiles.

நிலத்தடியில் ஆயிரம் ஆண்டுகள் தாங்கி நிற்கும் அணுக் கிடங்கை அமைக்க முயலும் பிரான்ஸ்

3 months 1 week ago

ஆயிரம் ஆண்டுகள் தாங்கக்கூடிய ஒரு அணுக் கிடங்கை எவ்வாறு அமைப்பது

பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/ TVO

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மார்க் பீசிங்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அணுக் கழிவுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சின் நச்சுத் தன்மையுடன் இருக்கும். அதைப் பாதுகாப்பாகப் புதைத்து வைக்க சேமிப்புக் கிடங்கை எவ்வாறு கட்டமைப்பது?

கோடைக்காலத்தில் ஒரு குளிரான நாளாக அது இருந்தாலும் வடகிழக்கு பிரான்சில் ஷாம்பெயின் பகுதியில் 1,500 அடிக்குக் கீழே சற்று கதகதப்பாகத்தான் உணரப்பட்டது.

இந்த அணுக்கழிவுக் கிடங்கு மிக வெளிச்சமாகவும், காய்ந்தும் இருக்கும். இங்குள்ள தூசிகளை என்னால் உணர முடிகிறது. நான் என்னுடன் எடுத்துச் செல்லும் செயற்கை சுவாசக் கருவிகள் இந்த நிலத்தடியில் உள்ள ஆபத்துகளை உணர்த்துகின்றன.

இங்குள்ள கரடுமுரடான பாதைகள், ஆய்வுக் கூடங்கள், மின்சாதனங்கள் வெளியிடும் இரைச்சல்கள், குறைந்த ஆள் நடமாட்டம் என அனைத்துமே நான் எப்போது வெளியில் செல்வேன் என்று என்னை யோசிக்கச் செய்தது.

எனக்கு முன்னால் இருந்த அணுக்கழிவு அறை மிகவும் பெரிதாக இருந்தது. அதாவது நான் ஏதோ எகிப்திய மன்னர்களின் கல்லறைக்குள் சென்றதைப் போன்று திடுக்கிட்டு நின்றேன். ஆனால் இதைப் பண்டைய எகிப்தியர்கள் கட்டவில்லை. இது பாறைகளைக் குடைந்து உலகிலுள்ள பல அதிசக்தியான கதிரியக்கப் பொருட்கள் புதைக்கப்பட்ட இடம்.

உலகின் மிகவும் ஆபத்தான பொருட்களைப் புதைக்க, ஒரு லட்சம் ஆண்டுகள் தாங்கக்கூடிய ஒரு கிடங்கை வடிவமைக்க, கட்டுமானம் மேற்கொள்ள, அதைச் செயல்படுத்தத் தேவையான கட்டமைப்பு என இதை வடிவமைக்க ஒரு பத்து ஆண்டுகள், இதைக் கட்டி முடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். இதைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

'நிலத்தடியில் கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்று'

பாரிஸில் இருந்து கிழக்கே 4 மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ள 2.4 கி.மீ நீளமான சுரங்கப் பாதை பல அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், கட்டுமானப் பரிசோதனைகளைச் செய்யவும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் ஒரு கூடாரமாக உள்ளது. பிரான்சின் தேசிய கதிரியக்க கழிவு மேலாண்மை முகமை (ஆண்ட்ரா- Andra), சுரங்கப்பாதைக்கு அருகே பூமிக்கு அடியில் அணுக்கழிவை சேமிக்கும் கிடங்கை கட்டுவதற்கான உரிமத்தைப் பெறுவதற்கு இது வெற்றிகரமாகச் செயல்படுவதை ஒழுங்குமுறை அமைப்புகளிடம் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

இந்த பூமிக்கு அடியில் கழிவுகள் சேமிக்கும் கிடங்குதான், மனிதர்கள் நிலத்தடியில் கட்டிய மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்றாக இருக்கும். விரைவில் இவற்றின் கட்டுமானம் தொடங்கவுள்ளது. இவை பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன், பின்லாந்து போன்ற 20க்கும் மேற்பட்ட நாடுகளில் அமையப் போகின்றன.

இவ்வாறு பூமிக்கு அடியில் கழிவுகளை அகற்ற மிக ஆழமான கிடங்கை முதலில் அமைத்த நாடு பின்லாந்துதான். இதற்கான முதல் கட்டப் பரிசோதனை ஓட்டத்தை பின்லாந்து வெற்றிகரமாகச் செய்து பார்த்துள்ளது. இதேபோன்ற கட்டமைப்புகள் சுவீடன் நாட்டில் ஃபோர்ஸ்மார்க் என்ற இடத்திலும் (ஸ்டாக்ஹோமுக்கு வடக்கே 2 மணிநேர பயண தூரம்), பிரான்ஸில் சிகோ என்ற இடத்திலும் விரைவில் அமையவுள்ளன. பிரிட்டனை பொறுத்தவரை இன்னும் அதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை.

நிலத்தடியில் ஆயிரம் ஆண்டுகள் தாங்கி நிற்கும் அணுக் கிடங்கை அமைக்கும் பிரான்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அணுக் கழிவுகள் (சித்தரிப்புப் படம்)

ஜி.டி.எஃப் என்பவை மிகப்பெரிய, விலையுயர்ந்த, மிகுந்த சர்ச்சைக்குரிய அடித்தள கட்டுமானங்கள். இவற்றில் ஆற்றல் மிக்க கதிரியக்கம் மற்றும் நீண்ட கால செயலாக்கத்துடன் இருக்கக்கூடிய அணுக்கழிவுகள் வைக்கப்படும். இந்தக் கழிவுகள் தற்போது பிரிட்டனில் செல்லஃபீல்ட், பிரான்ஸில் லா ஹேக் ஆகிய இடங்களில் பூமியின் மேற்பரப்பில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தக் கழிவுகளில் அணு உலைகளின் பொருட்கள், அணு உலை மையங்களில் இருந்து கிடைக்கும் கிராஃபைட், பயன்படுத்தப்பட்ட எரிபொருள், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு செயலாக்கம் செய்வதன் மூலம் கிடைக்கும் திரவம் ஆகியவை அடங்கும்.

கணினித் திரை மூலம் இந்த அமைப்பைப் பார்ப்பதற்கு மிகவும் பெரிதாக, பல அடுக்குகளைக் கொண்டதாக காட்சியளிக்கும். ஆனால் இதை வடிவமைக்க, கட்டமைக்க மற்றும் செயல்படுத்த எடுக்கும் கால அளவு அதிகம். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் பிரமிட் போன்ற கட்டமைப்புகளில் பணிபுரிபவர்கள் அவர்களுடைய படைப்பை முழுமை அடையும் பொழுது பார்க்க முடியாது.

“இதுபோன்ற பெரிய அளவிலான அணுக்கழிவு கிடங்குகளுக்கான உரிமம் பெறுவதற்கு 20 முதல் 30 ஆண்டுகள் எடுக்கும். இதைவிடக் குறைந்த காலத்தில் எந்தவொரு நாட்டிலும் வழங்கப்பட்டதில்லை”, என்று கூறுகிறார் எனது வழிகாட்டி மற்றும் பிரான்ஸில் உள்ள கிடங்கின் விஞ்ஞானி ஜாக்ஸ் டிலே. “சீல் வைப்பதற்கு முன்பாக 100 ஆண்டுகள் வரை இந்தக் கிடங்கு பயன்பாட்டில் இருக்கும். சீல் வைக்கப்பட்ட பிறகு அடுத்து வரும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தத் தளம் கண்காணிக்கப்படும்" என்றார்.

“ஜி.டி.எஃப் அமைக்கப் பொருத்தமான இடம் மற்றும் இதை ஆதரிக்கும் ஒரு சமூகம் மிகவும் அவசியம். ஆனால் சிறந்த நில அமைப்புதான் முதன்மை எதிர்பார்ப்பு” என்று கூறுகிறார் பிரிட்டனின் அணுக்கழிவு மேலாண்மை (UK’s Nuclear Waste Services NWS) அமைப்பைச் சேர்ந்த ஏமி ஷெல்டன்.

'நல்ல ஊதியம் தரும் வேலை வாய்ப்புகள்'

ஆயிரம் ஆண்டுகள் தாங்கக்கூடிய ஒரு அணுக் கிடங்கை அமைப்பது

பட மூலாதாரம்,ANDRA

ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளில், ஷெல்டன் போன்ற பொறியாளர்கள், 500 மீட்டர் முதல் 1 கி.மீ ஆழத்தில் பாறைகளைத் துளைத்து, அந்த நிலப்பரப்பு ஒரு லட்சத்திற்கும் மேலான ஆண்டுகள் அணுக்கழிவுகளை அடைத்து வைக்கப் பொருத்தமானவையா என்று கிடைத்த தரவுகளைப் பார்த்து சோதனை மேற்கொள்கின்றனர். கிரானைட் மற்றும் களிமண் போன்ற பாறைகள் இதற்குச் சிறந்தவை. ஆனால் தெளிவான ஒரு முடிவை எடுக்க இவை போதுமான தரவுகளாக இல்லாமல்கூட போகலாம்.

ஒரு நம்பிக்கைக்குரிய தளம் உள்ளூர் சமூகங்களுக்குக் குடிநீர் வழங்கும் நீர்நிலைக்கு அருகில் அல்லது பள்ளத்தாக்குகளில் அமையலாம். ஆனால் பனிப்பாறைகள் உருகிக்கொண்டே வருவதால் அடுத்த 10 ஆயிரம் ஆண்டுகளில் மீண்டும் இதுபோன்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேடல் தொடங்கிவிடும்.

ஆனால் சில நாடுகளில் இது மிகவும் எளிதாக இருக்கும். “சுவீடன், பின்லாந்து போன்ற இடங்களின் அடித்தளம் மிகவும் நிலையானது. அதாவது நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. இந்த நிலம் 90 கோடி ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் இப்படியே இருக்கிறது” என்று கூறுகிறார் ஸ்வீடிஷ் அணுக்கழிவுகளை நிர்வகிக்கும் எஸ்கேபி நிறுவனத்தின் தொடர்புத் துறை இயக்குநர் அன்னா பொரேலியஸ்.

சில நேரங்களில் மனித நிலவியலில்தான் பிரச்னை ஏற்படுகிறது. “தன்னார்வத்தோடு நிலத்தை வழங்க வந்தவர்கள் பலருக்கு எதார்த்தம் புரியவில்லை. உதாரணமாக பலரது நிலங்கள் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளுக்கு மிக அருகில் இருந்தன” என்கிறார் டிலே.

மிகவும் தேவையான முதலீடுகள் மற்றும் நல்ல ஊதியம் தரும் வேலை வாய்ப்புகள் போன்ற காரணங்களுக்காகவே பல சமூகங்கள் ஜி.டி.எஃப் அமைக்க முன் வருகின்றன. அவர்களின் ஒப்புதல் ஒவ்வோர் அடியிலும் அவசியம். இது இன்றுவரை அணுசக்தித் துறையில் அவர்களுக்கு உள்ள அனுபவத்தைப் பொறுத்தது.

பிரிட்டனில் இதை அமைப்பது எளிதான முயற்சி அல்ல. ஆனால் பின்லாந்தில் இருப்பதோ வேறு மாதிரியான நிலை. “அணு உலைகளைக் கொண்டு 70களில் இருந்து மின் உற்பத்தி செய்கிறோம்” என்று கூறுகிறார் போசிவா ஓய் என்னும் அணுக்கழிவு அகற்றும் நிறுவனத்தின் பாசி துவோஹிமா.

“இங்குள்ள மக்கள் பாதுகாப்பான வாழ்க்கை முறையை நன்கு அறிவர், அவர்களின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் எனப் பலர் இந்தத் தளங்களில் பணிபுரிகின்றனர். அதனால் இந்தக் கழிவுகள் பற்றி அவர்களுக்கு நன்றாகப் புரியும்” என்கிறார்.

இதைக் கட்டமைப்பதில் ஏதேனும் பிழை இருந்தால் ஜி.டி.எஃப் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். “இந்தச் செயல்முறையின்போது சுவீடனின் எஸ்கேபி நிறுவனம் பல முக்கிய பாடங்களைக் கற்றது. வரையப்படும் திட்டங்களுக்கு உள்ளூர் பொதுமக்களின் சாதகமான ஒப்புதல் மிகவும் அவசியம். அல்மூங்கே போன்ற பெரும்பாலான இடங்களில் எஸ்கேபி நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன” என்றார் பொரேலியஸ்.

அதிசக்தி வாய்ந்த அணுக்கழிவுகள்

ஆயிரம் ஆண்டுகள் தாங்கக்கூடிய ஒரு அணுக் கிடங்கை அமைப்பது

பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/TVO

படக்குறிப்பு,பின்லாந்து போன்ற நாடுகளில், நில அதிர்வு செயல்பாடு இல்லாததால், சேமிப்பக வசதிகளை உருவாக்குவதற்கான தளங்களைக் கண்டுபிடிப்பது எளிது

கிடங்கை அமைக்கத் தகுந்த இடத்தைத் தேடுவதில் இருக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இதற்கு மாறாக 1960, 1970களில் ஜெர்மனி செய்தது போல ஒரு பயன்படுத்தபடாத சுரங்கத்தில் இவற்றைச் சேமித்து வைக்கலாம்.

“இப்படியான பயனில் இல்லாத சுரங்கங்களை மறுபயன்பாடு செய்யலாமே என்று கேள்வி எழுவது மிகவும் சாதாரணமான விஷயம். ஆனால் அவை இந்தப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்படவில்லை. அதாவது நீண்ட காலம் நீடிக்கவோ அல்லது அணுசக்தியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டோ கட்டமைக்கப்படவில்லை” எனக் கூறுகிறார் NWS-இன் முதன்மை விஞ்ஞானி நீல் ஹயாத்.

மேலும் இந்தச் சுரங்கங்கள் அதிசக்தி வாய்ந்த அணுக்கழிவுகளை சேமிக்கும் வடிவில் அமைக்கப்படவில்லை. “கீழே அமைந்துள்ள கிடங்கிற்கு அழைத்துச் செல்லும் பாதையைக் கட்டி முடிக்கவே ஏறத்தாழ 5 ஆண்டுகள் எடுக்கும். இது பழைய சுரங்க அமைப்பைக் கட்டுவதைவிட மிகவும் அதிகம்” என்கிறார் பொரேலியஸ்.

கனிம வளங்கள் இருக்கும் சுரங்கத்தில் ஜி.டி.எஃப் கட்டப்பட்டால் அது வருங்காலத்தில் பல இடையூறுகளுக்கு வழி வகுக்கலாம். தற்சமயம் எந்தச் செயல்பாடும் இல்லாத சுரங்கத்திற்கும் இது பொருந்தும். கார்ன்வாலலில் இருந்த கடைசி டின் சுரங்கம் 1998ஆம் ஆண்டு மூடப்பட்டது. ஆனால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக காரனிஷ் லிதியம் என்ற நிறுவனம் இங்கு சுரங்கத் தொழில் செய்யவுள்ளது.

புதிய அணுக்கழிவு கிடங்கை அமைப்பது எளிதான விஷயமாகக்கூட இருக்கலாம். “பின்லாந்தில் இதுபோன்று நிலத்தடியில் கட்டுமானம் மேற்கொள்வது வழக்கமான ஒன்று. நாங்கள் கடுமையான வானிலையில் இருந்து தப்பிக்க அடித்தளத்தைப் பயன்படுத்துவோம். ஒரு புதிய கிடங்கைக் கட்டுவது முதலில் இருந்து ஆரம்பிக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தைத் தருகின்றது” என்று கூறுகிறார் டுவோஹிமா.

புதிய ஏர்பஸ் விமானத்தை வடிமைப்பதைப் போலன்றி ஜி.டி.எஃப் வடிவம் மாறுபடும். இது நிலபரப்பைப் பொறுத்தே அமையும். ஒரு ஜி.டி.எஃப் வடிவம் பாறைகளின் கனத்தின் அடிப்படையில்தான் கட்டப்படும். அவ்வாறு இருக்குமானால் பிரான்ஸை போல முன்னதாக முடிவெடுத்தபடி மூன்று, நான்கு தளம் என்றில்லாமல் ஒரே தளத்தில் இதை அமைக்கலாம்.

ஆயிரம் ஆண்டுகள் தாங்கக்கூடிய ஒரு அணுக் கிடங்கை அமைப்பது

பட மூலாதாரம்,NUCLEAR WASTE SERVICES

படக்குறிப்பு,வடிவமைப்பாளர்களின் மிகப்பெரிய தலைவலியே தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றத்தின் வேகம் மற்றும் இந்தத் திட்டத்தின் கால அளவை அறிந்து செயல்படுவதே (புகைப்படத்தில்- பிரிட்டனால் முன்மொழியப்பட்ட கழிவு சேமிப்புத் தளம்)

ஒவ்வொரு கழிவிலும் அதற்கான தன்மை, அதன் அளவு மற்றும் அது வெளியேற்றும் வெப்பத்தின் அளவு எனப் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன. இடைநிலைக் கழிவுகள் குறைந்த வெப்பத்தை உருவாக்குகின்றன, எனவே அதைப் பாதுகாப்பாகவும் நெருக்கமாகவும், அதிக அளவிலும் அடுக்கி சேமிக்க முடியும். ஆனால் உயர்மட்ட அணுக்கழிவுகள் அதிக வெப்பத்தை வெளியிடுவதால் இதைக் குறைந்த அளவிலும், நல்ல தொலைவிலும் வைப்பது அவசியம்.

இதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சைத் தடுக்க ஒரு தடுப்பை அமைப்பது மிகவும் அவசியம். இந்தத் தடுப்பு ஜி.டி.எஃப்-இன் வடிவமைப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பாறையின் தன்மையைப் பொருத்தது. ஆனால் காலப்போக்கில் இது தோல்வி அடையலாம் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.

அணுக்கழிவுகளை 500மீட்டர் (1650 அடி) எடுத்துச் செல்ல லிப்ட் ஒரு நல்ல வழியாகத் தெரிந்தாலும் அதில் பல அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம். அதாவது அணுக்கழிவுகளைக் கொண்டு செல்லும் கொள்கலன் லிஃப்டில் மாட்டிக் கொள்ளலாம். அல்லது எடை தாளாமல் லிஃப்ட் நிலைகுலைந்து, வேகமாகக் கீழே விழ வாய்ப்பிருக்கிறது. 12% சாய்வு கொண்டிருக்கும் ஒரு சறுக்கல் பாதை மற்ற வழிகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானது. இந்த இரண்டையுமே கட்டுவது மிகவும் சிறப்பு.

ஜி.டி.எஃப்-ஐ உருவாக்குவதற்கான சவாலுக்கு ஒரு தீர்வு, மற்ற நாடுகளுடன் பகிரப்பட்ட வடிவமைப்பில் பணியாற்றுவதாகும். இதைத்தான் சுவீடனை சேர்ந்தவர்களும் பின்லாந்தை சேர்ந்தவர்களும் செய்தார்கள். அவர்கள் அதை ‘KBS3’ என்று அழைத்தனர்.

"அவர்கள் எங்கு பாறையைத் தோண்டினாலும் கடினமாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதற்கான தேர்வுகள் ஏற்கெனவே அவர்களுக்கென வகுக்கப்பட்டு இருந்தன. அதேநேரம் நாங்கள் (பிரிட்டனில்) இன்னும் சரியான நிலவியல் அமைப்பைத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் ஹயாத்.

வடிவமைப்பாளர்களின் மிகப்பெரிய தலைவலியே தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றத்தின் வேகம் மற்றும் இந்தத் திட்டத்தின் கால அளவை அறிந்து செயல்படுவதே. “அடுத்து வரும் 20 முதல் 200 ஆண்டுகளில் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோமா என்பது தெரியாது. ஆனால் வருங்காலத்தில் வரும் சிக்கல்களுக்கு நம்மிடம் இன்றே தீர்வு உள்ளது எனத் தெரியப்படுத்த வேண்டும்,” என்கிறார் ஹயாத்.

'அணுக்கழிவுகளை அகற்றுவதற்கான தீர்வு'

ஆயிரம் ஆண்டுகள் தாங்கக்கூடிய ஒரு அணுக் கிடங்கை அமைப்பது

பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/ TVO

படக்குறிப்பு,பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கழிவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அளவுக்கு வசதிகள் வலுவாக இருக்க வேண்டும்

ஃப்ரெஞ்சு பொறியாளர்கள், கட்டுப்பாடிழந்த கொள்கலன் ஒன்றைத் தடுக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கையாக கேபிளுடன் கூடிய 4 கி.மீ நீளமுள்ள சரிவுப் பாதையை கட்டி நிரூபித்துள்ளனர். அதோடு, பாஸ்டன் டைனமிக்ஸ் உருவாக்கிய தானியங்கி நாய்கள் போன்ற ரோபாட்டுகள், "நிலநடுக்கம் போன்ற சமயங்களில் கழிவுக் கொள்கலன்களை, மனிதர்களின் தலையீடு இல்லாமலே இடமாற்றம் செய்ய முடியும்" என்று செய்து காட்டியுள்ளனர்," என்கிறார் டிலே.

மேலும் இந்தப் பொறியாளர்கள், அதிக அளவிலான அணுக்கழிவுகள் இருக்கும் நீளமான, குறுகலான சுரங்கங்களுக்குள் ஊர்ந்து சென்று அங்கிருக்கும் 'துருப்பிடித்த செல்களில் இருக்கும் கொள்கலனை' எடுத்து வரக்கூடிய ஒரு ரோபோட்டை உருவாக்கியுள்ளனர். ஏதாவது அடைப்பு இருந்தால் அவற்றை நீக்கி, கழிவுக் கலன்களை பாதுகாப்பான இடத்துக்கு எடுத்து வருவது அதன் பணி.

சுவீடனில், திட்டங்கள் மேலும் முன்னேறியுள்ளன. “2080களில் இந்தக் கிடங்கு 60கி.மீ நீளம் இருக்கும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செப்புக் குப்பிகளில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவு இருக்கும். தொலைவில் இருந்து துல்லியமாக இயக்கக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் அணுக்கழிவுகள் அகற்றப்படும்” என்று கூறினார் பொரேலியஸ்.

“நாங்கள் உருவாக்கிய மேக்னே ஒரு முன்மாதிரி இயந்திரம். இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு. பாறைகளுக்கு அடியில் 500மீட்டர் ஆழத்தில் செப்புக் குப்பிகளை வைக்க இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்” என்றார் பொரேலியஸ்.

நாம் தொழில்நுட்பம் எவ்வாறு பரிமாண வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வாறே அது வளர்ச்சி அடையும். இன்றைய தொழில்நுட்பதை மட்டுமே சார்ந்து ஜி.டி.எஃப் போன்ற அமைப்பை நாம் உருவாக்க நினைத்தால் அது முட்டாள்தனம். அதனால் நாம் கட்டமைக்கும் இந்தக் கிடங்கு மறுசீரமைக்கும்படி, மேம்படுத்தும்படி, மாற்றக்கூடிய வடிவில் அமைக்கப்பட வேண்டும்” என்று கூறினார் ஹயாத்.

மீட்டெடுப்புக் கொள்கை என்ற மற்றொரு சிக்கலை ஜி.டி.எஃப் வடிவமைப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டும். பிரான்ஸில் செயல்பாட்டுக் கட்டத்தில் உள்ள ஒரு ஜி.டி.எஃப்-இல் இருக்கும் எந்தவொரு கழிவையும் மீட்டெடுப்பதற்கான சட்டபூர்வ தேவை உள்ளது. பிரிட்டனில், இது ஒரு பொதுவான வழிகாட்டுக் கொள்கை.

ஆனால் இந்த மீட்டெடுக்கும் பணி ஒவ்வொரு பெட்டகமும் சீல் வைக்கப்படுவதால் மிகவும் கடினமாகிறது. மற்றவர்கள் இதைப் பெரிதும் நம்புகிறார்கள். “நாங்கள் பயன்படுத்தபட்ட எரிபொருளை நிரந்தரமாகப் புதைக்கின்றோம். ஆனால் இதை மீட்டெடுக்க முடியும்” என்கிறார் டுவோஹிமா. சீல் வைத்தால் சீல் வைத்ததுதான். “ஆனால் 100 ஆண்டுகளில் உலகம் மிகவும் வித்தியாசமாக மாறிவிடலாம். இது சீல் வைக்கப்பட்டால் கேள்வி சமூகத்திற்கானது, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அல்ல” என்கிறார் டிலே.

இறுதியில் இந்த அணுக்கிடங்கை முழுமையாகக் கட்டி முடிக்கப் பல நூறாண்டு காலம் ஆகும். ஆனால் எந்தக் காரணம் இந்த வல்லுநர்களைத் தங்களால் வருங்காலத்தில் பார்க்க முடியாத ஒரு செயல்திட்டத்தை செய்யத் தூண்டுகின்றது?

“எங்களில் பெரும்பாலானவர்களுக்கு இது எங்கள் வாழ்க்கையின் பயன். நாங்கள் யாருமே இந்தச் செயல்திட்டம் முழுமை அடையும்போது பார்க்க முடியாது. ஆனால் இப்போது நாங்கள் செய்யும் இந்தச் செயல் வரும் காலங்களில் அணுக்கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு தீர்வாக அமையும். இதுதான் நாங்கள் செயல்பட எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது” என்கிறார் பொரேலியஸ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cr7nvrn3vl8o

இந்தியா – பாகிஸ்தான் பதற்றமும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவரச கூட்டமும்!

3 months 1 week ago

New-Project-61.jpg?resize=750%2C375&ssl=

இந்தியா – பாகிஸ்தான் பதற்றமும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவரச கூட்டமும்!

ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்புப் பேச்சு தோல்வியடைந்தது, சந்திப்பு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மூடிய கதவு கூட்டம், எந்த அறிக்கையும், தீர்மானமும் அல்லது அதிகாரப்பூர்வ முடிவும் இல்லாமல் முடிந்தது.

இந்த விவாதத்தில் இருந்து குறிப்பிடத்தக்க பதில் எதுவும் வெளிவரவில்லை.

பல ஆண்டுகளில் நிலைமை மிகவும் கொந்தளிப்பான நிலையை எட்டியுள்ளதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த சந்திப்பு நடந்தது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி அசிம் இப்திகார் அகமட், இந்தியாவுக்கு எதிராக தவறான கூற்றுக்களைப் பரப்ப ஐ.நா. பாதுகாப்பு சபையின் தளத்தை மீண்டும் தவறாகப் பயன்படுத்தினார்.

26 பொதுமக்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியில், பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியது.

இந்தியா இராணுவக் குவிப்பு மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா அண்மையில் நிறுத்தி வைத்ததை “ஆக்கிரமிப்புச் செயல்” என்றும் அஹ்மத் குறிப்பிட்டார்.

இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் இஸ்லாமாபாத்தின் பங்கிலிருந்து உலகளாவிய கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு வேண்டுமென்றே முயற்சியாக இந்தியா கருதுகிறது.

15 நாடுகளைக் கொண்ட சக்திவாய்ந்த பாதுகாப்பு சபையில் தற்போது நிரந்தரமற்ற உறுப்பினராக உள்ள பாகிஸ்தான், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மூடிய ஆலோசனைகளைக் கோரியது.

மே மாதத்திற்கான சபையின் தலைவராக, கிரீஸ் மே 5 ஆம் திகதி மதியம் ஒரு மூடிய கதவு கூட்டத்தைத் திட்டமிட்டது.

2019 ஆகஸ்ட்டில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்வதற்கான இந்தியாவின் நடவடிக்கை குறித்து விவாதிக்க சீனா ஐ.நா. பாதுகாப்பு சபையின் மூடிய ஆலோசனைகளைக் கோரியது.

அந்தக் கூட்டம் 15 நாடுகளைக் கொண்ட சக்திவாய்ந்த ஐ.நா. அமைப்பிலிருந்து எந்த முடிவும் அல்லது அறிக்கையும் இல்லாமல் முடிவடைந்தது.

இது பீஜிங்கின் ஆதரவுடன் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியது.

சபையில் பெரும்பான்மையானவர்கள் புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான இருதரப்பு விடயம் என்று வலியுறுத்தினர்.

https://athavannews.com/2025/1430751

இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டம் - இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

3 months 1 week ago

இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டம் - இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21+

ஹமாஸுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை நேற்று இரவு கூடி இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

தொடர்ச்சியாகப் பல மாதங்களுக்குத் தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு அமைச்சர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

காசாவை கைப்பற்றுவதும், கைப்பற்றிய பிரதேசங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செயல்பாட்டிற்கு அமைய இஸ்ரேலிய இராணுவம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், பல்லாயிரக்கணக்கான விசேட துணை படையணிகளும் நிரந்தர சேவைக்காக அழைக்கப்பட்டுள்ளன. 

மிகுதியாகவுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை மீட்பதுடன், ஹமாஸை தோற்கடிக்கும் நோக்கத்துடன், தொடர்ச்சியாக அழுத்தங்களை இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னரே தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இஸ்ரேலிய அமைச்சரவை கொள்கையளவில் தொண்டு நிறுவனங்களினூடாக மனிதாபிமான உதவிகளை மீண்டும் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதேவேளை, கடந்த இரு மாதங்களாக இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் முற்றுகையினை முடிவிற்குக் கொண்டு வருவதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி வருகிறது. 

அதனைத் தவறும் பட்சத்தில் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள மக்கள் பாரிய உணவுப் பற்றாக்குறையினை எதிர்கொள்வர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

https://www.hirunews.lk/tamil/404696/இராணுவ-நடவடிக்கைகளை-விஸ்தரிக்கும்-திட்டம்-இஸ்ரேலிய-பாதுகாப்பு-அமைச்சரவை-ஒப்புதல்

ட்ரோன் தாக்குதல்; மொஸ்கோவில் மூடப்பட்ட விமான நிலையங்கள்!

3 months 1 week ago

New-Project-57.jpg?resize=750%2C375&ssl=

ட்ரோன் தாக்குதல்; மொஸ்கோவில் மூடப்பட்ட விமான நிலையங்கள்!

மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது இரவாக இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தலைநகரின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

மொஸ்கோவின் மேயர் செர்ஜி சோபியானின், சமூக ஊடகங்களில் குறைந்தது 19 உக்ரேனிய ட்ரோன்கள் “வெவ்வேறு திசைகளில் இருந்து” நகரத்தை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாகக் கூறினார்.

சில ட்ரோன்களின் பாகங்கள் நகரத்திற்குள் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றில் விழுந்ததாகவும், ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தாக்குதல் குறித்து உக்ரேன் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மொஸ்கோவைப் போலவே, பென்சா மற்றும் வோரோனேஜ் உள்ளிட்ட பிற ரஷ்ய நகரங்களின் ஆளுநர்களும் செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை இரவு வரை ட்ரோன்களால் குறிவைக்கப்பட்டதாகக் கூறினர்.

ரஷ்ய இராணுவ வலைப்பதிவர்களின் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் மொஸ்கோவின் தெற்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்கள் ட்ரோன் தாக்குதல்களால் சேதமடைந்ததை காண்பிக்கின்றன.

உக்ரேனின் ட்ரோன் தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து இரண்டாவது இரவு நடத்தியதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு திங்களன்று ஒரே இரவில் 26 உக்ரேன் ட்ரோன்களை அழித்ததாகக் கூறியது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை நடத்தியதிலிருந்து, கீவ் மொஸ்கோ மீது பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

மார்ச் மாதத்தில் அதன் மிகப்பெரிய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் உக்ரேன் ஊடுருவ முயற்சிப்பதாக திங்களன்று வெளியான செய்திகளுக்குப் பின்னர் இந்த தாக்குதல் வந்துள்ளது.

https://athavannews.com/2025/1430712

அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு!

3 months 1 week ago

New-Project-40.jpg?resize=750%2C375&ssl=

அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு!

கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ள முன்னாள் சிறைச்சாலையான அல்காட்ராஸை (Alcatraz) மீண்டும் திறந்து விரிவுபடுத்த தனது அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடகமான ட்ரூத் தளத்தில் பதிவிட்ட அவர், அல்காட்ராஸ் சிறைச்சாலை மீண்டும் திறக்கப்படுவது “சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக” செயல்படும் என்று அவர் கூறினார்.

அல்காட்ராஸில் உள்ள கூட்டாட்சி சிறைச்சாலை 1963 இல் மூடப்படுவதற்கு முன்பு அல் கபோன் போன்ற மோசமான அமெரிக்க குற்றவாளிகளை வைத்திருந்தது.

இது இப்போது சான் பிரான்சிஸ்கோவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

புளோரிடாவிலிருந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்ப் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சிறைச்சாலையை மீண்டும் திறப்பது “எனக்கு இருந்த ஒரு யோசனை” என்றும், அதைச் செயல்படுத்த முடிவு செய்ததாகவும் கூறினார்.

“இது சட்டம் ஒழுங்கின் சின்னம்,” என்று அவர் கூறினார்.

தீவின் இருப்பிடம், குளிர்ந்த நீர் மற்றும் வலுவான நீரோட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அல்காட்ராஸ் அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையாகக் கருதப்படுகிறது.

அல்காட்ராஸிலிருந்து வெற்றிகரமாக தப்பித்தவர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை.

இருப்பினும் சிறைச்சாலையில் இருந்து தப்பிய ஐந்து கைதிகள் காணாமல் போனதாகவும், நீரில் மூழ்கி இறந்ததாகவும் கருதப்படுகிறது.

GqI_AooWQAAk9BD?format=jpg&name=large

GqI_AouW4AA1nhO?format=jpg&name=small

GqI_AogXUAEq0MY?format=jpg&name=large

https://athavannews.com/2025/1430528

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு ட்ரம்ப் 100% வரி!

3 months 1 week ago

New-Project-41.jpg?resize=750%2C375&ssl=

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு ட்ரம்ப் 100% வரி!

உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் வர்த்தக மோதல்களை அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு திரைப்படத் துறை “மிக விரைவான மரணத்தை” சந்தித்து வருவதால், வரி விதிக்கும் செயல்முறையைத் தொடங்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அதிகாரம் அளிப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ட்ரம்ப் உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை விதித்துள்ளார்.

வரிகள் அமெரிக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் தொழில் வாய்ப்புகளை பாதுகாக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால், இதன் விளைவாக உலகப் பொருளாதாரம் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் பொருட்களின் விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1430534

முதலைகளுக்கு நடுவே 36 மணி நேரம் - விமான விபத்தின் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

3 months 2 weeks ago

முதலைகளுக்கு நடுவே 36 மணி நேரம் - அனகோண்டா காட்டில் விமான விபத்தில் சிக்கியவர்களின் கதை

விமானவிபத்து, அமேசான் காடு

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜெசிகா ரான்ஸ்லி

  • பதவி, பிபிசி செய்திகள்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமேசானில் முதலைகள் நிறைந்த சதுப்பு நிலப் பகுதியில் சிக்கிக் கொண்ட ஐந்து பேர் 36 மணி நேரம் விமானத்தின் மேல் நிர்கதியாக இருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

பொலிவியாவின் அமேசானாஸ் பகுதியில், 5 பேர் இருந்த சிறிய ரக விமானம் ஒன்று 48 மணி நேரத்திற்கு முன் காணாமல் போனது, தீவிரமாக மேற்கொண்ட தேடுதல்வேட்டையில் காணாமல் போனவர்களை உள்ளூர் மீனவர்கள் கண்டுபிடித்தனர்.

மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் 29 வயது விமானி என மொத்தம் ஐந்து பேரும் நல்ல நிலையில் மீட்கப்பட்டதாக அவசரகால செயல்பாட்டு மையத்தின் இயக்குனர் வில்சன் அவிலா தெரிவித்தார்.

மத்திய பொலிவியாவில் பறந்துக் கொண்டிருந்த சிறிய ரக விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது. அதையடுத்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.

விமானம் மீட்கப்பட்ட பிறகு உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய விமானி, வடக்கு பொலிவியாவில் உள்ள பௌரெஸிலிருந்து டிரினிடாட் நகருக்குச் விமானத்தின் சென்றுக் கொண்டிருந்தபோது, இட்டானோமாஸ் நதிக்கு அருகே அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

வானில் பறந்துக் கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டில் இருந்து விலகி, தானாகவே கீழே இறங்கத் தொடங்கியது என்றும், வேறுவழியில்லாமல் சதுப்பு நிலத்திற்கு அருகில் இருந்த நீர் நிலையில் விமானத்தை தரையிறக்கியதாகவும் விமானி ஆண்ட்ரெஸ் வெலார்டே கூறினார்.

விமானத்தில் இருந்த ஐந்து பேரும் விமானத்தில் இருந்து வெளியே வந்து, விமானத்தின் மீது ஏறி நின்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அவர்கள் இருந்த இடத்தை முதலைகள் சூழ்ந்துக் கொண்டன. விபத்தில் இருந்து தப்பியவர்களுக்கும் முதலைகளுக்கும் இடையில் மூன்று மீட்டர் தூரம் தான் இருந்தது.

முதலை மட்டுமல்ல அனகோண்டாவும் வந்தது

முதலைகள் அவ்வளவு அருகில் வந்தபோதும், மனிதர்களை உண்ணாமல் விட்டு வைத்தது ஏன்? தண்ணீரில் மூழ்கிய விமானத்திலிருந்து கசிந்த பெட்ரோல் தான் முதலைகள் தங்களை நெருங்காமல் இருக்கக் காரணமாக இருக்கும் என விமானி வேலார்டே நம்புகிறார்.

யாராவது வந்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தபோது, முதலைகள் மட்டுமல்ல, அங்கு அனகோண்டா பாம்பு வந்ததையும் பார்த்ததாக அவர் கூறினார்.

காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் மீட்புப் பணியாளர்களுக்காக காத்துக் கொண்டிருந்த 36 மணி நேர அனுபவம் வித்தியாசமானது, வாழ்க்கையில் மறக்கவே முடியாதது என்று ஐவரும் கூறுகின்றனர்.

தங்களில் ஒருவர் வைத்திருந்த மரவள்ளிக்கிழங்கு மாவை சாப்பிட்டு பசியை போக்கிக் கொண்டதாக தெரிவித்தனர்.

"தண்ணீர் குடிக்கவில்லை, முதலைகள் எங்களை சுற்றி இருந்ததால் எங்கும் செல்ல முடியவில்லை," என்று வேலார்டே கூறினார்.

முதலைகளில் சிறிய உருவத்தைக் கொண்ட கெய்மன் வகை சிறுமுதலைகள் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன.

காணாமல்போன விமானத்தை மீனவர்கள் கண்டுபிடித்த பிறகு, உயிர் பிழைத்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விமானம் காணாமல் போன பிறகு அதன் நிலை என்ன என்பது தொடர்பாக பல்வேறு விதமாக ஊகிக்கப்பட்டதாக பெனி பிராந்திய சுகாதாரத் துறையின் இயக்குனர் ரூபன் டோரஸ் கூறினார்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து அவர்களை காப்பாற்ற அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட்டதாக அவர் அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது தெரிவித்தார்.

36 மணி நேரம் முதலைகளுக்கு நடுவில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் விமானத்தில் இருந்த ஐந்து பேரும் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy0xr693y4lo

பிரித்தானியாவில் பயங்கரவாத நடவடிக்கைக்கு சதிதிட்டம் தீட்டிய 8 பேர் கைது

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

04 MAY, 2025 | 04:28 PM

image

பிரித்தானியாவில்  குறிப்பிட்ட இடமொன்றினை இலக்கு வைக்கும் சதித்திட்டம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய இருவேறு தேடுதலில் நடவடிக்கையில் எட்டு ஆண்கள் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் ஈரானியர்கள்  ஆவர்.

முதலில் கைது செய்யப்பட்ட 4 ஈரானிய நாட்டவர்களில் 29 வயதுடைய இருவர், 40 வயதுடைய ஒருவர் மற்றும் 46 வயதுடைய ஒருவர்  அடங்குவர். ஐந்தாவது நபரின் நாடு மற்றும் வயது இன்னும் வெளியாகவில்லை.

அதேவேளை, லண்டனில் மேலும் மூன்று ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு நடவடிக்கைகளும் ஒன்றோடொன்று இணைந்தவை அல்ல என பொலிஸார் தெரிவித்தனர்.

"நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நமது எதிர்வினையை மாற்றியமைக்க வேண்டிய தேவையை நிரூபிக்கும் கடும்  சம்பவங்கள் இவை" என பொலிஸ் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு உள்நாட்டு அலுவல்கள் செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட முதல் ஐந்து பேரில், நான்கு பேர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐந்தாவது நபர் பொலிஸ்  மற்றும் குற்றவியல் சான்றுகள் சட்டத்தின் (பேஸ்) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குத் தயாரானதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு லண்டன், ஸ்டாக்போர்ட், ரோச்டேல் மற்றும் மான்செஸ்டரில் உள்ள ஸ்விண்டன் ஆகிய இடங்களில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை குறிப்பிட்ட இடமொன்றினை இலக்கு வைக்கும் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படுவது தொடர்பானது என பொலிஸார் தெரிவித்தனர்.

கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் மற்றும் வில்ட்ஷயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரித்தானியா முழுவதும் உள்ள பயங்கரவாத தடுப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மெட் பயங்கரவாத தடுப்பு கட்டளை பிரிவு இந்த விசாரணையை வழிநடத்துகிறது.

https://www.virakesari.lk/article/213656

டிரம்ப் பாப்பரசர்: நாலாபுறமும் எதிர்ப்பு

3 months 2 weeks ago

டிரம்ப் பாப்பரசர்: நாலாபுறமும் எதிர்ப்பு

image_e822d61a9c.jpg

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  பாப்பரசராகத் தோன்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்தப் புகைப்படத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி விமர்சிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் புகைப்படம் வெள்ளை மாளிகை ஊழியர்களின் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றப்பட்டது.

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார், மேலும் அது 7 ஆம் திகதி கார்டினல்களின் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். இதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் குழு ஒன்று இந்த புகைப்படத்தை உருவாக்கி, அவர் போப் பதவிக்கு பொருத்தமானவர் என்பதைக் குறிப்பிட்டு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

போப்பாண்டவருக்கு ஏற்பட்ட அவமானத்தை சித்தரிக்கும் புகைப்படத்தை உருவாக்கி அதை சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படம், டொனால்ட் டிரம்ப் போப் ஆக விரும்புவதாக வெளியிட்ட பொது அறிக்கையின் அடிப்படையில், டிரம்ப் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஏ.எஃப்.பி)

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/டிரம்ப்-பாப்பரசர்-நாலாபுறமும்-எதிர்ப்பு/50-356644

சவூதி அரேபியாவுக்கு ஏவுகணைகளை விற்பனை செய்யும் அமெரிக்கா!

3 months 2 weeks ago

New-Project-11-1.jpg?resize=600%2C300&ss

சவூதி அரேபியாவுக்கு ஏவுகணைகளை விற்பனை செய்யும் அமெரிக்கா!

சவுதி அரேபியாவுக்கு 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏவுகணைகளை  விற்பனை செய்ய அமெரிக்கா ஆரம்ப  கால அனுமதியை  வழங்கியுள்ளது.

அமெரிக்க  ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் இறுதியில் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடு சவுதி அரேபியா ஆகும். அமெரிக்க  ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும், அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டொலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா முன்னதாக அறிவித்திருந்தது.

இதேவேளை, அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஏவுகணைகளை சவுதி அரேபியா போர் விமானத்தில் பயன்படுத்த இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1430445

சிங்கப்பூர் பொதுத்தேர்தல் : மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது ஆளும் கட்சி : லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார்

3 months 2 weeks ago

04 MAY, 2025 | 07:42 AM

image

சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார்.

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது.

சிங்கப்பூர் பொதுத்தேர்தல் சனிக்கிழமை (3) இடம்பெற்றது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். 

அதன்படி சிங்கப்பூரில் 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இடம்பெற்றது. இதில் 30 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். காலை வாக்குப்பதிவு ஆரம்பமாகியதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவுசெய்தனர்.

இந்தத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது. 

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகியது. ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. இதையடுத்து லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார். .

பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிங்கப்பூரின் பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/213620

மனிதனின் இடுப்பெலும்பில் சிங்கத்தின் பல்தடம் - ரோமானிய கிளாடியேட்டர் சண்டைகளுக்கு ஆதாரம்

3 months 2 weeks ago

கிளாடியேட்டர், வரலாறு, தொல்லியல், விலங்குகள்

பட மூலாதாரம்,UNIVERSIDADE DE YORK

படக்குறிப்பு,இந்த இளைஞனின் எலும்புகள் 2004ஆம் ஆண்டு யார்க்கில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்தவை

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அலெக்ஸ் மோஸ் மற்றும் விக்டோரியா கில்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 3 மே 2025, 03:48 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ரோமானிய கிளாடியேட்டர் ஒருவரின் எலும்புக்கூட்டில் காணப்பட்ட பல் தடங்கள், சிங்கத்துக்கும் ஒரு மனிதனுக்கும் சண்டை நடந்ததை உறுதிப்படுத்தும் முதல் தொல்லியல் ஆதாரங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனின் யார்க் பகுதியில் உள்ள ட்ரிஃப்பீல்டு டெரஸ்-இல், 2004-ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த எலும்புக்கூட்டில் தடய ஆய்வு செய்யப்பட்டபோது, அந்த இளைஞனின் இடுப்பு பகுதியில் பல் தடங்களும், சேதங்களும் இருந்தன. அவை ஒரு சிங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த ஆய்வை மேற்கொண்ட தடயவியல் நிபுணரான பேராசிரியர் டிம் தாம்ப்ஸன், சிங்கம், புலி போன்றவற்றுடன் கிளாடியேட்டர்கள் சண்டையிட்டதற்கான முதல் 'நேரடி ஆதாரம்' இதுதான் என்றார்.

"ரோமானிய கிளாடியேட்டர்களின் சண்டையில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டது பற்றிய நமது புரிதல் பெரும்பாலும் வரலாற்று நூல்கள் மற்றும் கலைப் படைப்புகள் மூலமாகப் பெறப்பட்டவையே," என்கிறார் அவர்.

"இந்தக் கண்டுபிடிப்புதான் இப்படிப்பட்ட விஷயங்கள் ரோமானிய வரலாற்றில் நடைபெற்றன என்பதற்கான முதல் நேரடி ஆதாரம்," என்று கூறிய டிம், "இந்தப் பகுதியில் ரோமானிய பொழுதுபோக்கு கலை எப்படி இருந்தது என்பது தொடர்பான நம் பார்வையை இது மாற்றும்," என்றார்.

3டி ஸ்கேன் மூலம் உறுதி

கிளாடியேட்டர், வரலாறு, தொல்லியல், விலங்குகள்

படக்குறிப்பு,மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கத்தின் பல்தடங்களுடன் ஒப்பிட்டு இந்தக் காயம் உறுதிசெய்யப்பட்டது.

நிபுணர்கள் இந்தக் காயங்களை ஆய்வு செய்ய 3டி ஸ்கேன் உள்ளிட்ட பல புதிய தடயவியல் முறைகளைப் பயன்படுத்தியதில் அந்த விலங்கு மனிதனை இடுப்பு பகுதியில் கடித்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.

"அந்த மனிதன் இறக்கும் சமயத்தில் அந்த விலங்கு அவரைக் கடித்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தோம்," என்கிறார் அயர்லாந்து மேனூத் பல்கலைக்கழத்தின் பேராசிரியர் டிம் தாம்ப்ஸன்.

"அதனால் இறப்பிற்குப் பின் அவரை உண்பதற்காக அந்த மிருகம் முயற்சி செய்யவில்லை; அது கடித்ததுதான் இறப்புக்கே காரணமாக இருந்தது," என்று விளக்கம் தருகிறார் அவர்.

அந்தக் காயத்தை ஸ்கேன் செய்தது மட்டுமல்லாமல், லண்டன் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் சிங்கம், புலி போன்றவற்றின் பல் தடங்களோடு அதன் அளவு மற்றும் வடிவத்தை ஒப்பிட்டுப் பார்த்தனர்.

"இந்த நபரின் உடலில் இருந்த பல் தடங்களைப் பார்த்தால் அவை சிங்கத்தின் பல்தடங்களோடு பொருந்திப் போகின்றன," என்று பிபிசி நியூஸிடம் தாம்ப்ஸன் தெரிவித்தார்.

அது கடித்த இடம், அந்த கிளாடியேட்டர் எப்படிப்பட்ட சூழலில் மரணத்தைத் தழுவியிருக்கலாம் என்று முக்கியமான தடயங்களை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கிளாடியேட்டர், வரலாறு, தொல்லியல், விலங்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஸ்ஸல் க்ரோவ் நடித்த கிளாடியேட்டர் திரைப்படத்தில் இருந்து கிளாடியேட்டரும், புலியும் சண்டையிடும் காட்சி

அந்த எலும்புக்கூடு, 26ல் இருந்து 35 வயதிற்குட்பட்ட மனிதனுடையது. வேறு இரு சடலங்களுடன் அந்த மனிதர் புதைக்கப்படிருந்தார். அந்த சடலங்களின் மீது குதிரையின் எலும்புகளும் காணப்பட்டன.

முந்தைய ஆய்வு அந்த நபர் ஒரு 'Bestiarius' – அதாவது காட்டு விலங்குகளுடன் சண்டை போடும் ஒரு கிளாடியேட்டர் - எனக் குறித்தன.

யார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மாலின் ஹோல்ஸ்ட், கடந்த முப்பதாண்டுகளாக எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், இதற்கு முன் தான் 'இப்படிப்பட்ட பல்தடங்களைப் போல எதையும் பார்த்ததில்லை' என்று குறிப்பிடுகிறார்.

"குறுகிய மற்றும் கடினமான வாழ்வின்' பாதையை இந்த எச்சங்கள் வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

''கடும் உடற்பயிற்சி செய்ததன் மூலம் அந்த மனிதருக்கு வலிமையான தசைகள் இருந்திருக்கும் என்பதையும், கடுமையான வேலை மற்றும் தொடர் சண்டைகளின் காரணமாக தோள் மற்றும் முதுகெலும்பில் காயங்கள் இருந்ததற்கான அறிகுறிகளையும் அந்த எலும்புகள் காட்டுகின்றன'' என ஹோல்ஸ்ட் கூறுகிறார்.

யார்க் ஆஸ்டியோஆர்க்கியாலஜியின் (அகழ்வாய்வில் கிடைக்கும் மனித எலும்புகளை ஆய்வு செய்வது) இயக்குநருமான ஹோல்ஸ்ட், "இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. ஏனெனில் இதன் மூலம் கிளாடியேட்டர்கள் அவர்கள் வாழும் காலகட்டத்தில் எப்படி இருந்தார்கள் என்பது பற்றிய ஒரு தெளிவான வரைபடத்தை தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம்," என்றார்.

'ரோமானிய கொலாசியத்தில் இருந்து வெகு தூரத்தில்…'

கிளாடியேட்டர், வரலாறு, தொல்லியல், விலங்குகள்

படக்குறிப்பு,இந்தக் கண்டுபிடிப்பு 'பெரும் உற்சாகத்தை' ஏற்படுத்துவதாகக் கூறினார் மாலின் ஹோல்ஸ்ட்.

PLoS One என்ற கல்விசார் இதழில் வெளியான இந்த கண்டுபிடிப்புகள், "யார்க் போன்ற நகரங்களின் வெளிப்பகுதிகளில் பெரிய விலங்குகளும் இருந்தது உறுதிப்படுத்துகிறது. அதோடு மரணம் வரும் வேளையில் இந்த விலங்குகள் தங்களைத் தாங்களே எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது," என்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ரோமானிய யார்க்கில் ஒரு பெரிய அரைவட்ட அரங்கு இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள் நிபுணர்கள். அது எங்கிருக்கிறது என்று இன்னும் தெரியவில்லை என்றாலும், ஏதோ ஒரு விதப் பொழுதுபோக்குக்காக கிளாடியேட்டர் சண்டைகள் இங்கே தான் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

யார்க்கில் உயர்பதவியில் இருந்த ரோமானியத் தலைவர்கள் வசித்ததால் அவர்கள் ஒரு ஆடம்பரமான வாழ்வையே வாழ்ந்திருக்கக்கூடும். இதனால் செல்வம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படும் கிளாடியேட்டர் சண்டைகள் நடந்தன என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.

"நாம் நம்புவது போல, அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்காக சண்டையிட இந்த இடத்துக்கு அந்த மனிதனை எது வரவழைத்தது என்று நமக்குத் தெரியாது. ஆனால் பண்டைய உலகத்தின் 'வெம்ப்ளி ஸ்டேடியம்' என்று அழைக்கப்பட்ட ரோமானிய கொலாசியத்தில் இருந்து வெகு தூரத்தில் இப்படி ஒரு சண்டை நிகழ்ந்ததற்கான தொல்லியல் எலும்பு ஆதாரங்கள் கிடைத்தது ஆச்சர்யமான விஷயம்தான்," என்கிறார் யார்க் தொல்பொருள் அமைப்பின் தலைமை நிர்வாகி டேவிட் ஜென்னிங்ஸ்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c39jme11l4zo

அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்

3 months 2 weeks ago

அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்

ballot-box-780x470.jpg

அவுஸ்திரேலியாவில் இன்று சனிக்கிழமை (03.05.2025) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறுகிறது.

முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 இலட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023 ஆம் ஆண்டு உறுதியளித்தார். ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை.

எனவே ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே திர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினர்.

இந்நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பக்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் , விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது.

https://akkinikkunchu.com/?p=323161

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராகிறார் மைக் வோல்ட்ஸ்

3 months 2 weeks ago

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராகிறார் மைக் வோல்ட்ஸ்

03 May, 2025 | 09:42 AM

image

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வோல்ட்ஸ், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவுள்ளார்.

யேமனில் கௌத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடர்பாக மைக் வோல்ட்ஸும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடர்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னர் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்பர்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டதால், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் வெளியே கசிந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக மைக் வோல்ட்ஸ் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அவர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராக மைக் வோல்ட்ஸ் நியமிகப்படவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

மைக் வோல்ட்ஸ் வகித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்புக்கு தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் மாா்க்கோ ரூபியோ தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/213564

சிலி, ஆர்ஜன்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!

3 months 2 weeks ago

Published By: VISHNU

02 MAY, 2025 | 07:59 PM

image

சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேப் ஹார்ன் மற்றும் அந்தாட்டிக்காவிற்கு இடையில் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து சிலி அதிகாரிகள் நாட்டின் தெற்குப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

சிலியின் தெற்கு முனையில் உள்ள மாகல்லன்ஸ் பகுதியின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பொருள் சேதமோ எதுவும் ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

https://www.virakesari.lk/article/213549

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பதவியிலிருந்து மைக் வோல்ட்ஸ் நீக்கம்

3 months 2 weeks ago

02 MAY, 2025 | 06:21 PM

image

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிவந்த மைக் வோல்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

யேமனில் ஹௌத்தி கிளா்ச்சியாளர்களின் தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடா்பாக அவரும், துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட் உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடா்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னா் மேற்கொண்ட தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தனா். 

அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டாா். இதனால் மிகுந்த ரகசிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் வெளியே கசிந்தன.

இந்த விவகாரம் தொடா்பாக மைக் லோல்ட்ஸ் சா்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அவா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

30aefd1c-ca55-4892-afe5-1095c718123e.jpg

https://www.virakesari.lk/article/213544

அமெரிக்காவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்; 50 மாகாணங்களில் பரவியதால் அச்சம்

3 months 2 weeks ago

அமெரிக்காவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்; 50 மாகாணங்களில் பரவியதால் அச்சம்

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஒரு புதிய வைரஸ் பரவி வருவதால், மற்றொரு சாத்தியமான தொற்றுநோய்க்கு தயாராகுமாறு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மனிதகுள வரலாற்றில் பல முக்கிய தொற்று நோய்கள் பரவின. இவற்றில் SARS-CoV-2 என்று அழைக்கப்படும் வைரஸ், COVID-19 எனப்படும் நோயை உருவாக்கி, உலகளாவிய நெருக்கடி ஏற்படுத்தியது. இந்த நோய் 5 ஆண்டுகளுக்கு மேல் உலகளாவிய அளவில் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தற்போதைய நிலைமை, வரவிருக்கும் நாட்களில் அமெரிக்கா மற்றொரு COVID-19 போன்ற தொற்றுநோயை எதிர்கொள்ளக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க பால் பண்ணைகளில் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கைகளை எழுப்பி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களிடம் பேசிய அதிகாரிகள், மார்ச் 2024 முதல் நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட பால் பண்ணைகளை இந்த நோய் பாதித்துள்ளதாக உறுதிப்படுத்தினர். இதன் விளைவாக 70க்கும் மேற்பட்ட மனித நோய்த்தொற்றுகள் மற்றும் குறைந்தது ஒரு உறுதிப்படுத்தப்பட்ட மரணம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, லூசியானாவில் முதல் மனித மரணத்தை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) உறுதிப்படுத்தியிருந்தன, மேலும் பல மாநிலங்களிலும் அடுத்தடுத்த வழக்குகள் பதிவாகியுள்ளன.

பாலூட்டிகளில் வைரஸ் தொடர்ந்து இருப்பது, மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவ உதவும் பிறழ்வுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று உலகளாவிய வைரஸ் நெட்வொர்க் (GVN) எச்சரிக்கிறது. விலங்குகள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் இருவருக்கும் மேம்பட்ட கண்காணிப்பு, தரப்படுத்தப்பட்ட சோதனை மற்றும் தடுப்பூசி உத்திகளின் அவசரத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தொற்றுநோய் பரவிய போதிலும், பொது மக்களுக்கு ஆபத்து குறைவாகவே இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகின்றன. இருப்பினும், குறிப்பாக பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

CDC இன் படி, H5 பறவைக் காய்ச்சல் உலகளவில் பறவைகளில் பரவலாக உள்ளது மற்றும் கோழி மற்றும் அமெரிக்க கறவை மாடுகளில் வெடிப்புகளை ஏற்படுத்துகிறது, மேலும் அமெரிக்க பால் மற்றும் கோழி பண்ணை தொழிலாளர்களில் பலருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது. தற்போதைய பொது சுகாதார ஆபத்து குறைவாக இருந்தாலும், CDC நிலைமையை கவனமாகக் கண்காணித்து வருகிறது, மேலும் விலங்குகளுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்காணிக்க மாநிலங்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களில் H5 பறவைக் காய்ச்சல் செயல்பாட்டைக் கண்காணிக்க CDC அதன் காய்ச்சல் கண்காணிப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/317486

Checked
Mon, 08/18/2025 - 23:32
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe