உலக நடப்பு

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

3 months 1 week ago

AP25173345229488-640x400_498508.jpg?resi

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.

இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை.

ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் 12 பில்லியன் டொலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

எனினும் சேதமடைந்த இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆயுதங்களை கணக்கெடு சேத மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

https://athavannews.com/2025/1437375

பள்ளி மாணவிகளை சிக்கவைத்த வெப் கேம் தொழிலின் இருண்ட மறுபக்கம்

3 months 1 week ago

வெப்கேம் மாடல்

பட மூலாதாரம்,JORGE CALLE / BBC

படக்குறிப்பு, தற்போது 20 வயதாகும் கெய்னி, தனது 17 வயதில் வெப்கேம் மாடலாக வேலை செய்யத் தொடங்கினார்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சோபியா பெட்டிசா

  • பதவி, பிபிசி

  • 27 ஜூன் 2025, 04:23 GMT

    புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்

ஒரு நாள் இசபெல்லா பள்ளி முடிந்து வீட்டிற்குக் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் அவர் கையில் ஒரு துண்டுப்பிரசுரத்தை திணித்தார். "உன் அழகைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறாயா?" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் கேட்கப்பட்டிருந்தது.

கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் தனது பகுதியில் உள்ள டீனேஜ் மாணவிகளை குறிவைத்து ஒரு ஸ்டுடியோ செயல்படுவதாக இசபெல்லா கூறுகிறார். இந்த ஸ்டுடியோ, மாடல்களாக செயல்பட மாணவிகளை ஊக்குவிக்கிறது.

இசபெல்லாவுக்கு அப்போது 17 வயதுதான். ஆனால், இரண்டு வயது மகனின் தாய். தனது குழந்தையை பராமரிக்க அவருக்கு பணம் தேவைப்பட்டதால், விசயத்தைத் தெரிந்துக் கொள்ள அவர் சென்றிருக்கிறார்.

அவர் சென்றடைந்த இடம், ஒரு பாழடைந்த பகுதியில் உள்ள வீடு. அந்த வீட்டில் இருந்த எட்டு அறைகளும், படுக்கையறைகள் போல அலங்கரிக்கப்பட்டிருந்தன, ஒரு தம்பதியினர் நடத்திவந்த செக்ஸ் கேம் ஸ்டுடியோ அது.

சிறிய, குறைந்த பட்ஜெட்டில் செயல்படும் ஸ்டுடியோக்கள் முதல் பெரிய அளவிலான ஸ்டுடியோக்கள் என பல வகை உள்ளன. அவற்றில், விளக்குகள், கணினிகள், வெப்கேம்கள் மற்றும் இணைய இணைப்புடன் கூடிய தனி அறைகள் இருக்கும். பாலியல் செயல்களை மாடல்கள் செய்வது ஸ்ட்ரீம் செய்யப்படும். பார்வையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல, ஸ்டுடியோக்களில் இருந்து ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன. ஸ்டுடியோ நடத்துபவர்கள் அல்லது இடைத்தரகர்கள்/ கண்காணிப்பாளர்கள் மூலம் பார்வையாளர்கள் கோரிக்கைகளை வைக்கிறார்கள்.

கொலம்பியாவில் 18 வயதுக்குட்பட்ட வெப்கேம் மாடல்களை ஸ்டுடியோக்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நாள், இசபெல்லா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வேலையைத் தொடங்கிவிட்டார். தனது சம்பளம் என்ன, உரிமைகள் என்ன என்பதை விவரிக்கும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை என்று அவர் பிபிசி உலக சேவையிடம் கூறினார்.

"எனக்கு அவர்கள் எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை, அவர்கள் நேரடியாக என்னை ஸ்ட்ரீமிங் செய்ய வைத்தனர். 'இதோ கேமரா இருக்கிறது, லைவுக்கு போகலாம்' என்றார்கள்."

இந்த வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே, பள்ளியிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று இசபெல்லாவிடம் ஸ்டுடியோ கேட்டுக் கொண்டது.

வகுப்பறையில் தன்னைச் சுற்றியிருந்த சக மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்த நிலையில், இசபெல்லா தொலைபேசியை தனது மேசையில் வைத்து, தன்னை காட்டத் தொடங்கினார்.

தன்னிடம் குறிப்பிட்ட பாலியல் செயல்களைச் செய்யச் சொல்லி பார்வையாளர்கள் கோரிக்கைகள் விடுத்ததைப் பற்றி இசபெல்லா விவரிக்கிறார்.

கழிப்பறைக்குச் செல்வதாக சொல்லி, ஆசிரியரிடம் அனுமதி கேட்டுவிட்டு வகுப்பறையில் இருந்து வெளியேறிய இசபெல்லா, ஒரு அறைக்குச் சென்று, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

ஆசிரியருக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. "அதனால் நான் அதை மற்ற வகுப்புகளிலும் செய்ய ஆரம்பித்தேன்" என்று இசபெல்லா கூறுகிறார்.

"நான், 'இதை என் குழந்தைக்காக செய்கிறேன், அவனுக்காகச் செய்கிறேன்' என்று நினைத்துக்கொள்வேன். அது எனக்கு பலத்தைத் தந்தது."

ஸ்டுடியோக்கள்,  ஸ்ட்ரீமிங், மாடல்கள்

பட மூலாதாரம்,JORGE CALLE / BBC

படக்குறிப்பு,சில ஸ்டுடியோக்கள் 18 வயதுக்கும் குறைவானவர்களை ஸ்ட்ரீமிங் செய்ய போலி ஐடிகளைப் பயன்படுத்துவதாக மாடல்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்

மீள்சுழற்சி செய்யப்படும் பழைய கணக்குகள் மற்றும் போலி ஐடிகள்

சர்வதேச அளவில் செக்ஸ்கேம் தொழில் செழித்து வருகிறது.

உலகளவில் வெப்கேம் தளங்களின் மாதாந்திர பார்வைகளின் எண்ணிக்கை 2017 முதல் மும்மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, ஏப்ரல் 2025 இல் கிட்டத்தட்ட 1.3 பில்லியனை எட்டியுள்ளது, என பகுப்பாய்வு நிறுவனமான செம்ரஷ் கூறுகிறது.

இப்போது, உலகின் வேறு எந்தவொரு நாட்டையும் விட கொலம்பியாவில் தான் அதிகமான மாடல்கள் (400,000) மற்றும் 12,000 செக்ஸ் கேம் ஸ்டுடியோக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, நாட்டின் 'வயது வந்தோர் வெப்கேம் துறை'யை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஃபெனல்வெப் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்டுடியோக்கள், கலைஞர்களைப் படம் பிடித்து, உலகளாவிய வெப்கேம் தளங்களுக்கு உள்ளடக்கத்தை வழங்குகின்றன, அவை உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு ஒளிபரப்புவதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. மாடல்களிடம் கோரிக்கைகளை முன்வைக்கும் பார்வையாளர்கள், டிப்ஸ் மற்றும் பரிசுகளை கொடுக்கின்றனர்.

வீட்டில் தனிமை கிடைக்காதது, உபகரணங்கள் அல்லது நிலையான இணைய இணைப்பு இல்லாதது உட்பட பல காரணங்களால் மாடல்கள் ஸ்டுடியோக்களில் பணிபுரிகின்றனர். அதற்குக் காரணம், அவர்கள் ஏழைகளாகவோ அல்லது சிறார்களாகவோ இருப்பதும் பெற்றோருடன் இருப்பதாலும் என்று தெரிகிறது.

மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாடும் ஒரு நாட்டில், பணம் சம்பாதிக்க சுலப வழி இது என்று ஸ்டுடியோக்கள் ஆசை காட்டியே மக்களை கவர முயற்சிப்பதாக பிபிசியிடம் பெண்கள் தெரிவித்தனர்.

சில ஸ்டுடியோக்கள் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், கலைஞர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பிற ஆதரவை வழங்குவதாகவும் கூறும் மாடல்கள், நேர்மையற்றவர்கள் அதிகமாக துஷ்பிரயோகம் செய்வதாக கூறுகின்றனர்.

ஸ்டுடியோ உரிமையாளர்களை "அடிமைகளின் எஜமானர்கள்" என்று வர்ணிக்கும் கொலம்பியாஅதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அவர்கள் இசபெல்லாவைப் போல பெண்களையும் சிறுமிகளையும் ஏமாற்றி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி நம்ப வைப்பதாக கூறுகிறார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டுடியோக்களில் இருந்து உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும் நான்கு பெரிய வெப்கேம் தளங்களான போங்காகேம்ஸ், சாட்டர்பேட், லைவ்ஜாஸ்மின், ஸ்ட்ரிப்சாட் ஆகியவை, 18 அல்லது அதைவிட அதிக வயதானவர்கள் தான் மாடல்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுடன், அதனை உறுதிப்படுத்தும் சோதனைகளையும் மேற்கொள்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் சட்டங்கள், 18 வயதுக்கு குறைவானவர்கள் பங்களிக்கும் பாலியல் உள்ளடக்கங்களை விநியோகிப்பதைத் தடைசெய்கின்றன.

ஆனால், 18 வயதுக்குட்பட்ட பெண்களைப் பணியமர்த்த ஒரு ஸ்டுடியோ விரும்பினால், இந்தச் சோதனைகளை சுலபமாக தவிர்த்துவிட முடியும் என்று மாடல்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

தற்போது நிகழ்ச்சிகள் நடத்தாத ஆனால், சட்டப்பூர்வ வயதுடைய மாடல்களின் பழைய கணக்குகளை சட்டத்துக்குப் புறம்பாக, "மீள்சுழற்சி" செய்து, அவற்றை 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்குக் கொடுப்பது சுலபமான வழி என்று அவர்கள் கூறுகிறார்கள்.

17 வயதாக இருந்தபோது Chaturbate மற்றும் StripChat இரண்டிலும் மீள்சுழற்சி செய்த கணக்கை வைத்து வேலை செய்ததாக இசபெல்லா கூறுகிறார்.

"நான் 18 வயது ஆகாதவள் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை என்று ஸ்டுடியோ உரிமையாளர் கூறினார்," என்று சொல்லும் இசபெல்லாவுக்கு தற்போது 18 வயதாகிவிட்டது. "வேறொரு பெண்ணின் கணக்கைப் பயன்படுத்தி, அந்த அடையாளத்தின் கீழ் வேலை செய்யத் தொடங்கினேன்" என்று அவர் சொல்கிறார்.

பிபிசியிடம் பேசிய மற்ற மாடல்கள், தங்களுக்கு ஸ்டுடியோக்கள் போலி ஐடிகள் வழங்கியதாகக் கூறினார்கள். போலி ஐடியை பயன்படுத்தி 17 வயதிலேயே, தான் போங்கா கேம்ஸ் தளத்தில் தோன்றத் தொடங்கியதாக கெய்னி என்ற இளம்பெண் கூறுகிறார்.

கொலம்பியா, போங்கா கேம்ஸ் பிரதிநிதி

படக்குறிப்பு,கொலம்பியாவில் உள்ள போங்கா கேம்ஸ் பிரதிநிதியான மில்லி அச்சின்டே, பணி நிலைமைகளை சரிபார்க்க ஸ்டுடியோக்களுக்குச் செல்வதாகக் கூறுகிறார்

பிபிசியிடம் பேசிய கொலம்பியாவில் உள்ள போங்கா கேம்ஸ் பிரதிநிதியான மில்லி அச்சின்டே, 18 வயதுக்குட்பட்டவர்களை நிகழ்ச்சி நடத்த தாங்கள் அனுமதிப்பதில்லை என்றும், இதுபோன்ற விதிமுறைகளை மீறும் கணக்குகளை மூடுவதாகவும் கூறினார்.

இந்தத் தளம், ஐடிகளை சரிபார்க்கிறது என்று கூறுகிறார். மேலும், "ஒரு மாடல் எங்களைத் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட ஸ்டுடியோவை விட்டு வெளியேறியதைத் தெரிவித்தால், அவர்களின் கணக்கை மூடுவதற்கான கடவுச்சொல்லை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம்" என்றும் அவர் கூறினார்.

ஒரு அறிக்கையில், போலி ஐடிகளைப் பயன்படுத்துவதை "முற்றிலும்" நிறுத்தியுள்ளதாக தெரிவித்த Chaturbate, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடிகளுக்கு அருகில் மாடல்கள் நின்று புகைப்படங்களை அவ்வப்போது எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவை டிஜிட்டல் முறையிலும், வழக்கமான முறையிலும் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது.

"அதிகபட்சம் பத்துக்கும் குறைவான ஒளிபரப்பாளர்களுக்கு ஒரு மதிப்பாய்வாளர்" என்ற அளவில் இருப்பதாகவும், கணக்குகளை மீள்சுழற்சி செய்யும் எந்தவொரு முயற்சியும் "தோல்வியடையும்" என்றும், "ஒவ்வொரு ஒளிபரப்பும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்படுவதால்" வயது சரிபார்ப்பு செயல்முறை தொடர்கிறது என்றும் அது கூறியது.

ஸ்ட்ரிப்சாட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "18 வயதுக்கும் குறைவான மாடல்கள் தொடர்பான விவகாரத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை" கொண்டிருப்பதாகவும், கலைஞர்கள் "முழுமையான வயது சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளது.

மேலும் "மாடல்களின் அடையாளங்களைச் சரிபார்க்க" அதன் உள்ளக மதிப்பீட்டுக் குழு, மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு சேவைகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் ஸ்ட்ரிப்சாட் கூறியது.

மீள்சுழற்சி செய்யப்பட்ட கணக்குகளை அதன் தளத்தில் பயன்படுத்த முடியாது என்றும், அதன் விதிகளில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அனைத்தும், கணக்கு வைத்திருப்பவரின் ஒவ்வொரு ஸ்ட்ரீமிலும் இருக்க வேண்டும் என்றும் அது கூறியது. "எனவே, ஒரு மாடல், சுயாதீனமாக வேலை செய்வதற்காக புதிய கணக்கிற்கு மாறினால், அவர்களுடன் இணைக்கப்பட்ட அசல் கணக்கு செயலற்றதாகவும், ஸ்டுடியோவால் பயன்படுத்த முடியாததாகவும் மாறும்" என்று ஸ்ட்ரிப்சாட் கூறுகிறது.

இந்த விவகாரத்தில் லைவ்ஜாஸ்மின் தளத்தின் கருத்தை கேட்டறிய விரும்பிய பிபிசியின் கோரிக்கைகளுக்கு பதிலேதும் கிடைக்கவில்லை.

வெப்கேம் மாடல், ஸ்ட்ரீமிங்

படக்குறிப்பு,கொலம்பிய வெப்கேம் மாடல், கெய்னி ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கத் தயாராகிறார்

இளமையாக தோன்றுபவர்களையே பார்வையாளர்களுக்குப் பிடிக்கும்

20 வயதாகும் கெய்னி, மெடலினில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து வேலை செய்கிறார். இவர், பெரிய சர்வதேச தளங்களுக்குச் செல்லும் பாதையை வழங்கும் மற்றொரு ஸ்டுடியோ வழியாக ஸ்ட்ரீமிங் செய்கிறார்.

ரிங் லைட்டுகள், ஒரு கேமரா, ஒரு பெரிய திரை என உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லையென்றால், கெய்னியின் அறை, ஒரு குழந்தையின் அறையாகவே தோன்றக்கூடும். சுமார் ஒரு டஜன் ஸ்டஃப்டு விலங்குகள், இளஞ்சிவப்பு யூனிகார்ன்கள் மற்றும் டெடி பியர்ஸ் அவரது படுக்கையறையில் நிறைந்துள்ளன.

"மாடல், மிகவும் இளமையாகத் தெரிந்தால் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும்" என்று அவர் கூறுகிறார்.

"சில நேரங்களில் அதுவே பிரச்னையாகவும் மாறிவிடுகிறது என்று நினைக்கிறேன். சில வாடிக்கையாளர்கள் குழந்தையைப் போல நடிக்கச் சொல்கிறார்கள், ஆனால் அது சரியல்ல" என்கிறார் அவர்.

தனது பெற்றோர் விவாகரத்து செய்ய முடிவு செய்த பிறகு, குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்காகவே இந்தத் தொழிலில் தான் இறங்கியதாக அவர் கூறுகிறார்.

அவள் என்ன தொழில் செய்கிறார் என்பது தன்னுடைய தந்தைக்குத் தெரியும் என்று கூறும் கெய்னி, அவர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்தத் தொழிலில் மிகவும் இளம் வயதிலேயே (17 வயதில்) தான் ஈடுபடுத்தப்பட்டதாக கெய்னி கருதினாலும், அவர் தனது முன்னாள் முதலாளிகளை விமர்சிக்கவில்லை.

தற்போது மாதத்திற்கு சுமார் $2,000 (£1,500) சம்பாதிக்கும் கெய்னி, தனது முன்னாள் முதலாளி, வேலையில் சேர தனக்கு உதவியதாகவே நினைக்கிறார். கொலம்பியாவில் குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் சுமார் $300 (£225) என்ற நிலையில், இந்தத் தொகை மிக அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த வேலையின் மூலம், என்னுடைய அம்மா, அப்பா, சகோதரி என குடும்பம் முழுவதற்கும் உதவுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

இதேக் கண்ணோட்டத்தையே ஸ்டுடியோக்களும் எதிரொலிக்கின்றன. அவற்றில் சில, தங்கள் கலைஞர்களை நன்றாக கவனித்துக்கொள்வதை நிரூபிக்க ஆர்வத்துடன் செயல்படுகின்றன.

மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான ஏ.ஜே. ஸ்டுடியோஸை நாங்கள் பார்வையிட்டோம், அங்கு மாடல்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உளவியலாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அங்கு ஒரு ஸ்பாவும் இருந்தது. அதில், பெடிக்யூர், மசாஜ், போடாக்ஸ் மற்றும் லிப் ஃபில்லர்கள் "தள்ளுபடி" விலையில் கொடுக்கப்பட்டன. அத்துடன் அதிக வருமான ஈட்டும் அல்லது சக மாடல்களை ஆதரிக்கும் பணியாளர்கள் மற்றும் நன்றாக ஒத்துழைப்பவர்களுக்கு "மாதத்தின் சிறந்த ஊழியர்கள்" என்ற பாராட்டு பெற்றவர்களுக்கும் இந்த ஸ்பாவில் உள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கழிப்பறைக்கு சென்றால் அபராதம்

ஆனால் நாட்டின் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளபடி, மாடல்கள் அனைவரும் சரியாக நடத்தப்படுவதில்லை அல்லது நல்ல வருமானம் ஈட்டுவதில்லை.

மேலும், அவர் அறிமுகப்படுத்தும் புதிய தொழிலாளர் சட்டம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துமா என்பதைப் பார்க்க தொழில்துறை காத்திருக்கிறது.

ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுவாக பார்வையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் 50% எடுத்துக்கொள்கின்றன என்றும், ஸ்டுடியோக்கள் 20-30% எடுத்துக்கொள்கின்றன என்றும், எஞ்சியத் தொகையே மாடல்களுக்கு கிடைப்பதாக மாடல்களும் ஸ்டுடியோக்களும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

அதாவது ஒரு நிகழ்ச்சியில் 100 டாலர்கள் கிடைத்தால் மாடலுக்கு பொதுவாக 20 முதல் 30 டாலர் வரை கிடைக்கும். நேர்மையற்ற ஸ்டுடியோக்கள் பெரும்பாலும் அதிகமாக வருமானத்தை எடுத்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எட்டு மணிநேரம் வரையிலான அமர்வுகளில் பணியாற்றி, வெறும் 5 டாலர் வரை மட்டுமே சம்பாதித்த அனுபவங்களும் இருப்பதாக சில மாடல்கள் கூறுகிறார்கள், ஒரு நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் இல்லையென்றால் இதுபோல் நிகழலாம்.

இடைவேளை இல்லாமல் 18 மணி நேரம் வரை ஸ்ட்ரீமிங் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சொல்லும் சில மாடல்கள், சாப்பிடவோ அல்லது கழிப்பறைக்குச் செல்வதற்காக ஸ்ட்ரீமிங் செய்வதை இடைநிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

இந்தக் கூற்றுகளை, 2024 டிசம்பரில் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் கண்காணிப்பக பிரசாரக் குழுவின் அறிக்கை ஆமோதிக்கிறது. மூட்டைப் பூச்சிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்த, மிகவும் சிறிய மற்றும் அழுக்கான அறைகளில் ஸ்ட்ரீமிங் செய்யவும், பாலியல் செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்படும் வேதனையான மற்றும் இழிவான நிலை இருப்பதைக் கண்டறிந்ததாக, பிபிசிக்காக இந்தக் கதை குறித்து கூடுதல் ஆராய்ச்சி செய்த எழுத்தாளர் எரின் கில்பிரைட் கூறுகிறார்.

ஸ்டுடியோ

பட மூலாதாரம்,JORGE CALLE / BBC

படக்குறிப்பு,தான் வேலை செய்த ஒரு ஸ்டுடியோ, தான் விரும்பாத பாலியல் செயல்களைச் செய்ய அழுத்தம் கொடுத்ததாக சோஃபி கூறுகிறார்

மெடலினைச் சேர்ந்த சோஃபி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய். 26 வயதான அவர், இரவு விடுதி ஒன்றில் பணியாற்றி வந்தார், ஆனால் வாடிக்கையாளர்களின் தொடர் அவமதிப்புகளால் சலித்துபோய், வெப்கேம் மாடலிங் துறையில் அவர் இறங்கிவிட்டார்.

தான் பணிபுரிந்த ஒரு ஸ்டுடியோ, வலிமிகுந்த மற்றும் இழிவான பாலியல் செயல்களைச் செய்யவும், அங்கு பணிபுரிந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து நடிக்கவும் அழுத்தம் கொடுத்தது என்று சொல்கிறார்.

வாடிக்கையாளர்களின் விருப்பக் கோரிக்கைகளை, மாடல்களிடம் கொண்டு செல்லும் இடைத்தரகர்களாகச் செயல்பட பணியமர்த்தப்பட்ட ஸ்டுடியோ கண்காணிப்பாளர்கள், தவறான கோரிக்கைகளுக்கும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொல்கிறார்.

தன்னால் அப்படி செய்யமுடியாது என்று ஸ்டுடியோவிடம் சொன்னாலும், "உனக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் சொன்னார்கள்" என சோஃபி கூறுகிறார்.

"இறுதியில், நான் அவர்கள் சொன்னதை செய்ய வேண்டியிருந்தது, இல்லையெனில் அவர்கள் என் கணக்கை முடக்கிவிடுவார்கள்," என்று சோஃபி சொல்கிறார்.

விருப்பம் இல்லாவிட்டாலும் வெப்கேம் ஸ்டுடியோக்களில் தொடர்ந்து வேலை செய்யும் சோஃபி, கொலம்பியாவில் கிடைக்கும் சாதாரண சம்பளம் தனக்கும் தனது இரண்டு குழந்தைக்கும் போதுமானதாக இருக்காது என்று கூறுகிறார். சட்டக் கல்வி பயில்வதற்காக சோஃபி பணத்தை சேமித்து வருகிறார்.

செக்ஸ்கேம்

படக்குறிப்பு,செக்ஸ்கேம் துறையில் வேலை செய்து குழந்தைகளை வளர்ப்பதாகவும், படிப்புக்காக சேமிப்பதாகவும் சோஃபி கூறுகிறார்

இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது கொலம்பியா மட்டுமல்ல என்கிறார் எரின் கில்பிரைட்.

பல்கேரியா, கனடா, செக் குடியரசு, ஹங்கேரி, இந்தியா, ருமேனியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய 10 நாடுகளில் இருக்கும் ஸ்டுடியோக்களிலிருந்து பெரிய நான்கு ஸ்ட்ரீமிங் தளங்கள் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதை அவர் கண்டறிந்தார்.

மேலும், ஸ்ட்ரீமிங் தளங்களில் "மனித உரிமை துஷ்பிரயோகங்களை எளிதாக்கும் அல்லது அதிகப்படுத்தும் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளில் உள்ள இடைவெளிகளை" அடையாளம் கண்டதாகவும் அவர் கூறுகிறார்.

ஸ்ட்ரீம் செய்யப்படும் ஸ்டுடியோக்களின் நிலைமைகள் குறித்து நாங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களிடம் கேட்டோம். போங்கா கேம்ஸைச் சேர்ந்த மில்லி அச்சின்டே, "மாடல்களுக்கு பணம் வழங்கப்படுவதையும், அறைகள் சுத்தமாக இருப்பதையும், அத்துமீறப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும்" எட்டு பெண்கள் குழுவில் தானும் இருப்பதாகக் கூறினார். இந்தக் குழு, கொலம்பியாவில் உள்ள சில ஸ்டுடியோக்களுக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமைகளை மதிப்பிடும்.

StripChat மற்றும் Chaturbate நிறுவனங்கள், அவர்கள் கலைஞர்களின் நேரடி முதலாளிகள் அல்ல என்பதால், ஸ்டுடியோக்களுக்கும் மாடல்களுக்கும் இடையிலான விதிமுறைகளில் தாங்கள் தலையிடுவதில்லை என்றும் கூறின.

ஆனால் பாதுகாப்பான பணிச்சூழலுக்கு உறுதிபூண்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் பிபிசியிடம் கூறின. ஸ்டுடியோக்கள் "மரியாதைக்குரிய மற்றும் வசதியான பணி நிலைமைகளை" உறுதி செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் StripChat தெரிவித்துள்ளது.

ஒரு செயலைச் செய்ய மாடல் கட்டாயப்படுத்தப்படுவதாகவோ அல்லது அச்சுறுத்தப்படுவதாகவோ நம்பினால், அதில் தலையிட குழுக்கள் இருப்பதாக போங்கா கேம்ஸ், StripChat மற்றும் Chaturbate ஆகிய நிறுவனங்கள் தெரிவித்தன.

'அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்'

வெம்கேமிங், படிப்பு, குழந்தை பராமரிப்பு என அனைத்து வேலைகளுக்கும் ஈடுகொடுக்க, அதிகாலை 05:00 மணிக்கே கண் விழிக்க வேண்டியிருந்தது. இந்த வேலைக்கு வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதல் சம்பளத்தைப் பெற இசபெல்லா ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்தத் தொகையில் ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் ஸ்டுடியோ தங்கள் பங்கைக் கழித்துக் கொண்ட பிறகு, இசபெல்லாவுக்கு வெறும் 174,000 கொலம்பிய பெசோக்கள் (42 டாலர்கள்) மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்.

இது தான் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவானது என்று சொல்லும் இசபெல்லா, ஒப்புக்கொண்டதை விட ஸ்டுடியோ தனக்கு மிகக் குறைந்த சதவீதத்தையே கொடுத்ததாகவும், தனது வருவாயில் பெரும்பகுதியை ஸ்டுடியோ திருடிவிட்டதாகவும் அவர் நம்புகிறார்.

அந்தப் பணம் மிகக் குறைவு என்று கூறும் அவர், கிடைத்த அந்தப் பணத்தில் பால் மற்றும் டயப்பர்கள் வாங்கியதாக சொல்கிறார். "அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" என்று கூறுகிறார்.

தற்போதும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் இசபெல்லா, வெப்கேம் மாடலாக சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பிறகு, அதிலிருந்து விலகிவிட்டார்.

இளம் வயதில் தன்னை இப்படி நடத்தியதால் மன உளைச்சலுக்கு உள்ளான இசபெல்லா, அதிர்ந்துவிட்டார். தொடர்ந்து அழுது கொண்டே இருந்த மகளின் மனநிலையை சரிபடுத்த, அவருடைய அம்மா, ஒரு உளவியலாளரிடம் அழைத்துச் சென்றார்.

இசபெல்லாவும், அவர் பணியாற்றிய ஸ்டுடியோவின் வேறு ஆறு முன்னாள் ஊழியர்களும் சேர்ந்து அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். சிறார்களைச் சுரண்டுதல், தொழிலாளர் சுரண்டல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகம் செய்ததாக ஸ்டுடியோ மீது அனைவரும் கூட்டாக குற்றம் சாட்டியுள்ளனர்.

"18க்கும் குறைவான வயதில் நான் இருந்தபோது எடுக்கப்பட்ட எனது வீடியோக்கள் தற்போதும் இணையத்தில் உள்ளன," என்று அவர் கூறுகிறார், அவற்றை அகற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடையும்போது மிகவும் சக்தியற்றவளாக உணர்வதாக அவர் கூறுகிறார்.

"இது என்னை மிகவும் பாதித்துள்ளது, இனி அதைப் பற்றி நினைக்கவே எனக்கு விருப்பமில்லை" என்று இசபெல்லா கூறுகிறார்.

வூடி மோரிஸின் கூடுதல் செய்தியுடன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr79288vlz1o

நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு!

3 months 1 week ago

cf23ee50-5199-11f0-a0e9-abfbd30ab4f2.jpg

நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு!

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்த மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடைபெற்றது.

இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக, நேட்டோ நாடுகளின் இராணுவ செலவினத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் இதன்போது, உறுப்பு நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை இராணுவத்துக்கு செலவிட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

முடிவில் இந்த பரிந்துரைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்ததுடன் இது தொடர்பாக மாநாட்டு முடிவில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437239

ஈரான் மீதான தாக்குதலை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டு பேசிய ட்ரம்!

3 months 1 week ago

New-Project-359.jpg?resize=750%2C375&ssl

ஈரான் மீதான தாக்குதலை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டு பேசிய ட்ரம்!

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களின் தாக்கத்தை ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (25) இரண்டாம் உலகப் போரின் முடிவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அதாவது, அமெரிக்க நடவடிக்கையை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவெடிப்புகளுடன் ட்ரம்ப் ஒப்பிட்டார்.

இந்த தாக்குதலில் 150,000 முதல் 246,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இவர்களில் பொரும்பாலானோர் பொது மக்கள்.

அதேநரேம், ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் கிடைக்கக்கூடிய உளவுத்துறை அறிக்கைகள் முடிவில்லாதவை என்றாலும் சேதம் கடுமையானது என்று வாதிட்டார்.

891315_83452778.jpg?ssl=1

ஈரானின் அணுசக்தி திட்டம் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கூறிய போதிலும், தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் செயற்பாடுகளை சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தும் என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன.

அதேநேரம், அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்களை “கடுமையாக சேதப்படுத்தியதாகவும்” அவற்றின் செயற்பாடுகளை பல ஆண்டுகள் பின்னோக்கிச் நகர்த்தியதாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) தலைவர் கூறியுள்ளார்.

CIA இன் பணிப்பாளரான ஜான் ராட்க்ளிஃப், தாக்குதலில ஈரானின் முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறினார்.

இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் அறிவிக்கவில்லை.

அமெரிக்க தாக்குதலுக்கு பின்னரும், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய கூறுகள் அப்படியே இருந்ததாக பென்டகன் உளவுத்துறை நிறுவனத்திடமிருந்து கசிந்த முதற்கட்ட மதிப்பீடு தெரிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

https://athavannews.com/2025/1437195

மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு!

3 months 1 week ago

New-Project-355.jpg?resize=750%2C375&ssl

மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் புதன்கிழமை (25) இரவு நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, புனித யோவான் ஸ்நானகரை கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க, அவர்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளை ஆன்லைனில் பரவிய காணொளிகள் காட்டுகின்றன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக இராபுவாடோ அதிகாரி ரோடால்போ கோம்ஸ் செர்வாண்டஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையல், ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

மெக்ஸிகோ நகரத்தின் வடமேற்கே உள்ள குவானாஜுவாடோ, பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் கட்டுப்பாட்டிற்காகப் போராடுவதால், நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாநிலத்தில் 1,435 கொலைகள் நடந்துள்ளன.

இது வேறு எந்த மாநிலத்தையும் விட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437154

அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்!

3 months 1 week ago

New-Project-345.jpg?resize=750%2C375&ssl

அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்!

அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி முனை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) பாகிஸ்தான் இராணுவம் ரகசியமாக உருவாக்கி வருவதாக வொஷிங்டனில் உள்ள உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பின்னர் சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை மேம்படுத்த விரும்புவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டிய அந்த அறிக்கை, பாகிஸ்தான் அத்தகைய ஏவுகணையை வாங்கத் தொடர்ந்தால், வொஷிங்டன் அந்த நாட்டை அணுசக்தி எதிரியாக அறிவிக்கும் என்றும் கூறியது.

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவோ அல்லது எதிரியாகவோ கருதப்பட்டால், அது அணுசக்தி எதிரியாகக் கருதப்படுகிறது.

தற்போது, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகியவை அமெரிக்காவிற்கு எதிரியாகக் கருதப்படுகின்றன.

இதனிடையே, பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் இந்தியாவைத் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக இஸ்லாமபாத் எப்போதும் கூறி வருகிறது.

அதன் கொள்கை குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதாக கூறுகிறது.

அணு மற்றும் வழக்கமான போர்முனைகள் இரண்டையும் பொருத்தக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs), 5,500 கி.மீ.க்கு மேல் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை.

தற்போது பாகிஸ்தானிடம் ICBMகள் இல்லை.

https://athavannews.com/2025/1437071

நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.

3 months 1 week ago

33 வயதான சோறான் மம்டானி கார்த்திகை மாதம் நடக்க இருக்கும் நியூயோர்க் மேயர் தேர்தலுக்கு பலத்த போட்டிக்கு மத்தியில் நேற்று ஜனநாயக கட்சியின் வேட்பாளராக மக்கள் தெரிவு செய்துள்ளார்கள்.

இந்திய வம்சாவளியான இவர் உகண்டாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறினார்.இவர் முஸ்லீம் என்பதால் தோற்கலாம் என்று பலரும் சொன்னார்கள்.

இப்போது இளம் வயது ஆட்கள் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர்.முன்னர் இப்படியான நிலை இல்லை.

மனைவியும் நானும் இவருடன் போட்டியிட்ட மற்றவருக்கே வாக்கு போட எண்ணினோம்.ஆனாலும் மகள் தான் கட்டாயப்படுத்தி இவருக்கு வாக்கு போட வைத்தார்.

Takeaways from New York City’s mayoral primary: Mamdani delivers a political earthquake.

CNN — 

Zohran Mamdani delivered a political earthquake Tuesday in New York City’s Democratic mayoral primary, riding progressive demands for change in a city facing an affordability crisis to the brink of a stunning victory.

Democratic voters rejected a scandal-plagued icon of the party’s past, former Gov. Andrew Cuomo. Instead, they backed a 33-year-old democratic socialist who energized young voters and progressives with a campaign that could come to represent the first draft of a new playbook.

I will fight for a city that works for you, that is affordable for you, that is safe for you,” Mamdani said in his celebratory speech just after midnight.

We can be free and we can be fed. We can demand what we deserve,” he said.

Mamdani’s viral, go-anywhere, talk-to-anyone style of campaigning could send shockwaves through the Democratic Party nationally as its leaders and incumbents face calls from frustrated voters for authenticity and aggressiveness. Republicans, meanwhile, moved immediately to elevate Mamdani, seeing an opportunity to campaign against ideas they see as unpopular with swing voters nationally.

The formal outcome won’t be known until at least July 1, when New York City releases the initial ranked-choice results. But Mamdani held a clear lead Tuesday night, and Cuomo told supporters he had called Mamdani and conceded the primary.

“Tonight is his night. He deserved it. He won,” Cuomo said.

Writing a new playbook

Mamdani’s upstart campaign had a lot to overcome — Cuomo’s universal name recognition, massive financial backing, endorsements from party leaders and unions — and he acted like it.

https://www.cnn.com/2025/06/25/politics/zohran-mamdani-new-york-mayor-takeaways

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

3 months 1 week ago

Trump-Nobel-Peace-prize-4.webp?resize=75

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது.

ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று ட்ரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த ட்ரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437036

கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி; இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்

3 months 1 week ago

கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி; இருவர் உயிர்தப்பினர்

Published By: DIGITAL DESK 3

24 JUN, 2025 | 11:39 AM

image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தஹோ வாவியில் பெரிய அலையானது மேல் உயர்ந்தமையினால் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிழந்துள்ளதோடு, இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.

சனிக்கிழமை (21) மதியம் டி.எல். பிளிஸ் ஸ்டேட் பூங்கா அருகில் இந்த படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது, படகிலிருந்த 10  பேர் நீரில் மூழ்கியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்களில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், இரண்டு பேர் காணாமல் போன நிலையில், திங்கட்கிழமை (23) அவர்களின்ல் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் மொத்தமாக 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிர்ப்பிழைத்தவர்களின் உறவினர்களின் அறிவிப்புகள் வரும் வரை அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. 

விபத்துக்குள்ளான படகில் 10 பேர் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்த போது 30 மீற்றர் வேகத்தில் காற்று வீசியதோடு, அலைகள் 6 முதல் 8 அடி வரை உயர்ந்ததாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை நாள் முழுவதும் தஹோ வாவியில் துடுப்புப் படகு சவாரி செய்தவர்கள் மற்றும் விபத்தில் சிக்கிய படகில் இருந்தவர்கள் உட்பட பலர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க கடற்படை மக்களுக்கு முன்னாயத்த நிலைமைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு வலியுத்தியுள்ளது.

"அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவரும் எப்போதும் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும், தண்ணீரில் இறங்குவதற்கு முன்னர் வானிலை நிலைமைகளைச் சரிபார்க்கவும், படகில் செல்வதற்கு முன்னர் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அறிக்க வேண்டும், உதவிக்கு அழைக்க ஒரு செயல்பாட்டு VHF வானொலியை எடுத்துச் செல்ல வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்படுவதாக அமெரிக்க கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/218301

காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி

3 months 1 week ago

காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி

25 JUN, 2025 | 10:57 AM

image

காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவத்தினரின் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கவசவாகனம் தீப்பிடித்து எரிந்தது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட இஸ்ரேலிய படையினரின் பெயர் விபரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது அவர்கள் 19 முதல் 21 வயதிற்குட்பட்டவர்கள்.

https://www.virakesari.lk/article/218395

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்

3 months 1 week ago

New-Project-333.jpg?resize=750%2C375&ssl

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்.

ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.

இருப்பினும், குண்டுவெடிப்பு மேற்காசிய நாட்டின் அணுசக்தி திட்ட செயற்பாடுகளை சில மாதங்களுக்குள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (DIA) தயாரித்த அறிக்கை, இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

DIA என்பது பென்டகனின் உளவுத்துறைப் பிரிவாகும்.

மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையுடன் இணைந்து, தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு பணியாற்றியது.

அறிக்கையின்படி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங்களை சில மாதங்களுக்குள் மீண்டும் இயக்க முடியும்.

இதன் பொருள் ஈரான் எதிர்பார்த்ததை விட விரைவில் அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடும் என்பதாகும்.

அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரான் 400 கிலோ யுரேனியக் குவியலை, 60 சதவீதம் செறிவூட்டப்பட்டதாக மாற்றியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதல்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஃபோர்டோவின் செயற்கைக்கோள் படங்கள், தளத்தின் நுழைவாயிலில் நிலைநிறுத்தப்பட்ட 16 சரக்கு லொறிகளைக் காட்டியது.

அவை கையிருப்பை ரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்ற ஜனாதிபதி ட்ரம்பின் கூற்றுக்கு முரணானது.

சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டினார்.

“இந்தத் தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றியாகும், இதன் மூலம் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து கூறினார்.

ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி தளங்களில் மூன்று, நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை அமெரிக்கா அழித்துவிட்டதாகவும் மார்தட்டிக் கொண்டார்.

ஆனால், பென்டகனின் உள் அறிக்கை வேறுபட்ட கோணத்தை தற்சமயம் வெளிக்காட்டுகிறது.

குறிப்பாக ஃபோர்டோ, தாக்குதல்களில் இருந்து தப்பியதற்கான அறிகுறிகளைக் காட்டியதாகவும் அறிக்கை கூறியது.

ஃபோர்டோ குறித்து பென்டகன் எச்சரிக்கை

ஃபோர்டோ ஈரானின் மிகவும் பாதுகாக்கப்பட்ட வசதிகளில் ஒன்றாகும்.

இது ஜாக்ரோஸ் மலைகளுக்கு அடியில் சுமார் 45 முதல் 90 மீட்டர் (தோராயமாக 150 முதல் 300 அடி) கடினமான பாறையின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபோர்டோவின் நிலத்தடி இருப்பிடம் பென்டகனுக்கு ஏற்கனவே ஒரு கவலையாக இருந்தது.

ஜனவரி மாதம் நடந்த ஒரு மாநாட்டில், அமெரிக்காவின் வலிமையான அணுசக்தி அல்லாத குண்டு – 30,000 பவுண்டுகள் எடையுள்ள GBU-57 ‘பதுங்கு குழி வெடிப்பு’ – கூட அந்த வசதியை முழுமையாக அழிக்காது என்று பென்டகனின் உயர் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.

கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில், B-2 குண்டுவீச்சு விமானங்கள் இந்த GBU-57 குண்டுகளில் 12 குண்டுகளை ஃபோர்டோ மீதும், மேலும் இரண்டு நடான்ஸ் மீதும் வீசின.

இதற்கிடையில், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் இஸ்பஹானில் சுமார் 30 டோமாஹாக் ஏவுகணைகளை ஏவியது.

GuPS55TXoAA1Nob?format=jpg&name=medium

அறிக்கையை கடுமையாக சாடிய ட்ரம்ப்

வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களை அவமானப்படுத்தியதற்காக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் செய்திச் சேவை ஆகியவற்றை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.

“ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன! டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் தாக்கப்படுகின்றன,” என்று அவர் ட்ரூத் சமூக ஊடகத்தளத்தில் பதிவிட்டார்.

அதேநேரம், வெள்ளை மாளிகையும் உளவுத்துறை மதிப்பீட்டை மறுத்து, அந்த அறிக்கையை “போலி செய்தி” என்று அழைத்தது.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில்,

இந்த அறிக்கை ஜனாதிபதி ட்ரம்பை இழிவுபடுத்துவதற்கும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க ஒரு கச்சிதமாக செயல்படுத்தப்பட்ட பணியை நடத்திய துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும் ஒரு தெளிவான முயற்சியாகும் – என்று கூறினார்.

இதேவ‍ேளை ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஈரான் மீதான தாக்குதல் பணியை வழிநடத்த உதவிய கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன், அணுசக்தி தளங்கள் “கடுமையான சேதத்தையும் அழிவையும் சந்தித்துள்ளன” என்று கூறினார்.

ஆனால், இறுதி சேத மதிப்பீடு இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2025/1436979

இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? இரானை குற்றம்சாட்டும் இஸ்ரேலை சூழ்ந்துள்ள 'மர்மம்'

3 months 1 week ago

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுஉலை

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ்

  • பதவி, பிபிசி முண்டோ

  • 23 ஜூன் 2025, 01:22 GMT

இஸ்ரேலிடம் அணு ஆயுதம் 1960கள் முதலே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு ரகசியம். ஆனாலும் இதனை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததில்லை.

கடந்த வாரம் இரான் மீது ராணுவ தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. "அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை இரான் எட்டியிருக்கிறது" என இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இரான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளிடையேயான போராக மாறியது.

அமைதி ஆராய்ச்சிக்கான சுயாதீன அமைப்பான அமைதிக் கல்விக்கான டாலஸ் மையத்தின் (Dallas Center for Peace Studies) ஆராய்ச்சியாளரான முனைவர் ஜேபியர் பிகஸ் பேசுகையில், "மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் தான்" என்று கூறினார்.

சர்வதேச அணுசக்தி முகமையின் தகவல்படி, யுரேனியத்தை செறிவூட்டுவதில் 60 சதவிகிதத்தை இரான் எட்டியுள்ளது. ஆனால் பிகஸ் அளிக்கும் விளக்கத்தின்படி, "அணு ஆயுதத்தை தயாரிக்க யுரேனியம் 90 சதவிகிதத்துக்கு மேல் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும்"

இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மாறாக, இரான், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

இதன் பொருள் என்னவென்றால், அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த ஆய்வுக்கும் இஸ்ரேல் அணு சக்தி மையங்களை உட்படுத்த முடியாது.

இதன் காரணமாகத் தான் இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த தகவல்களும் கசியவிடப்படுவதன் மூலமே பெறப்படுகின்றன. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித்துறை மற்றும் அணு சக்தி குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளும் சர்வதேச முகமைகள் மூலமாகவே இந்த தகவல்கள் வெளிப்படுகின்றன.

இது தவிர, இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்களில் வேலை பார்த்து, பின்னர் அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவரான அணு பொறியாளர் மாவ்டுகாய் வானுனு 1986ம் ஆண்டு சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியின் மூலமாகவும் பல தகவல்கள் கிடைத்தன.

இஸ்ரேலிடம் அணு ஆயுதத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது என்பதை முதன்முதலில் வெளிப்படுத்திய இவர், பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டார்.

அமிமுட் அல்லது வேண்டுமென்றே தெளிவற்ற நிலை

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, அணு ஆயுதங்கள் குறித்து "தெளிவின்மை" கொள்கையை கடைபிடிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்த அதிகாரப்பூர்வ கொள்கையானது அமிமுட் (Amimut) என்ற ஹீப்ரு மொழி வார்த்தையால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு வேண்டுமென்றே தெளிவின்மையை ஏற்படுத்துதல் என பொருள் கொள்ளலாம். அதாவது, ஏற்கெனவே கூறியது போன்று அணு ஆயுதம் இருக்கிறதா என்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

"இஸ்ரேலின் இந்த அணுகுமுறை அணு யுகத்தில் தனித்துவமானது என கருதலாம்" என, பிரிட்டனின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்க்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஆவ்னெர் கோஹன். இவர் அணு ஆயுத பரவலை தடுப்பதற்கான கல்விகளுக்கான பேராசிரியர் என்பதோடு, இஸ்ரேல் அணு திட்டங்கள் குறித்த நிபுணராகவும் அறியப்படுகிறார்.

இந்த திட்டம் முற்றிலும் புதிது அல்ல

இஸ்ரேலின் அதிபராகவும், பிரதமராகவும் இருந்துள்ள ஷிமோன் பெரஸ் தமது நினைவுக் குறிப்புகளில் இதனை எழுதியுள்ளார்: "தெளிவின்மைக்கு அசாதாரணமான சக்தி இருக்கிறது. சந்தேகம் என்பது இரண்டாவது ஹோலோகாஸ்ட்டை திட்டமிடுபவர்களுக்கு எதிரான சிறந்த தடுப்பரணாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

கோஹன் கூறுகையில், "அணு சக்தி குறித்த தெளிவின்மை இஸ்ரேலின் மூலோபாய மற்றும் ராஜீய ரீதியான சாதனை" என குறிப்பிடுகிறார்.

அவரது கருத்தின்படி, சர்வதேச சமூகத்தின் மறைமுக ஒப்புதலுடன் கூடிய இந்த திட்டமானது "இஸ்ரேல் இரண்டு சூழ்நிலைகளிலும் பலனடைய உதவி செய்கிறது" என கூறியுள்ளார்.

"இஸ்ரேல் வேண்டுமேன்றே தெளிவற்ற தன்மையைத் தேர்வு செய்துள்ளது. இந்த நாடு அணுஆயுத பரவலை தடுப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் இணையவில்லை. இதனால் சர்வதேச அமைப்புகளின் எந்த ஆய்வுக்கும் உட்பட வேண்டியதில்லை" என பிபிசி முன்டோவிடம் கூறியுள்ளார் ஜேபியர் பிகஸ்.

"ராணுவ விவகாரங்களில் இஸ்ரேல் மட்டுமல்ல, உலகின் பல நாடுகள் வெளிப்படைத் தன்மை இல்லாமல் தான் உள்ளன. ஆனால், இஸ்ரேல் அணுசக்தி சார்ந்த விவகாரங்களிலும் வெளிப்படைத்தன்மை இன்றி இருக்கிறது " என்கிறார் பிகஸ்.

அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேலின் பார்வையிலிருந்து இதனை அணுகும்போது, இந்த தெளிவின்மை அதன் விருப்பங்களை பாதுகாக்கிறது" என்கிறார்.

"இதில் உண்மை என்னவென்றால், இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் உள்ளது என்பது நமக்கு தெரியும், அந்நாட்டிடம் குண்டுகள் உள்ளன என்பதும் தெரியும். அவற்றை பயன்படுத்தும் திறனும் அந்நாட்டுக்கு இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்" என பிகஸ் கூறுகிறார்.

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP/GETTY IMAGES

"இந்த தெளிவின்மை வெளியிலிருந்து வந்த தகவல்களால் தான் உடைக்கப்பட்டது. இஸ்ரேல் ஒருபோதும் இதனை மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை" என தமது அறிக்கையில் கூறும் கோஹன், "இந்த கொள்கை தனது இருப்பியலுக்கு எதிரான அச்சுறுத்தலில் இருந்து தற்காப்பு அளிப்பதோடு, அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான அரசியல் பின்விளைவுகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்காக அரசியல், ராஜ்ஜீய மற்றும் தார்மீக விலைகளையும் இஸ்ரேல் கொடுப்பதில்லை" என கோஹன் கூறுகிறார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆதரவு பத்திரிகையான 'இஸ்ரேல் ஹாயோம்' அந்நாட்டில் மிகப்பெரிய சந்தாதாரர்களைக் கொண்ட இலவச பத்திரிகையாக அறியப்படுகிறது. இந்த இதழில் வெளியான நீண்ட கட்டுரையில் இஸ்ரேல் தனது அணு சக்தி திறன் குறித்து ஏன் எச்சரிக்கையாக இருக்கிறது என விளக்கப்பட்டுள்ளது.

இந்த பத்திரிகையின் கருத்துப்படி, "அணு ஆயுதப் பரவலை எந்த விலை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என்பது தான் இஸ்ரேலின் முதன்மை இலக்கு" என கூறப்பட்டுள்ளது. தெளிவின்மை கொள்கையின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, "இந்த அணுகுமுறையை கைவிடுவது மத்தியக் கிழக்கில் அணு ஆயுதப்போட்டி விரிவடைவதற்கும், ஆயுதப் போட்டிக்கும் ஊக்கியாக அமையும்" என கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவலை தடுப்பதற்கான மையத்தின் வாதம் வேறாக உள்ளது. வெளிப்படைத் தன்மையற்று இருப்பது "மத்தியக் கிழக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லாத சூழலை ஏற்படுத்த தடையாக இருப்பதாக" அந்த மையம் கூறுகிறது.

இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் இருப்பதை எப்படி அறியலாம்?

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,SATELLITE IMAGE (C) 2020 MAXAR TECHNOLOGIES/GETTY IMAGES

படக்குறிப்பு, நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்

இஸ்ரேலின் அணுசக்தித்திறன் குறித்த முதல் தகவலானது 1962ம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் குறிப்பாணை ஒன்றின் மூலம் வெளிப்பட்டது. இதில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 1950களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தெற்கு இஸ்ரேலின் டிமோனா நகரத்தில் அணு மின் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

"பிரான்ஸ் உடனான ஒத்துழைப்பு என்பது புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யும் அணுஉலையை கட்டமைப்பது" என்கிறார் பிகஸ்.

கூகுள் வரைபட உதவியுடனான தேடுதலின் முடிவில், "நெகெவ் அணு ஆராயச்சி மையம்" டிமோனா நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனத்தின் நடுவே இருப்பதாக அறிய முடிகிறது.

முதலில் இந்த வளாகத்துக்கு ஜவுளி தொழிற்சாலை, உலோகவியல் ஆராய்ச்சி மையம், வேளாண் வளாகம் என பல்வேறு அறிமுகங்கள் கொடுக்கப்பட்டன.

சில காலத்துக்குப் பிறகு 1960களில் அப்போதைய இஸ்ரேல் பிரதமரான டேவிட் பென் குரியன், நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்து பொதுவெளியில் அறிவித்தார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், அணு ஆராய்ச்சி மையமானது "அமைதி நோக்கங்கள்" கொண்டிருப்பதாகக் கூறினார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளின் விசாரணை அறிக்கைகள், "இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகின்றன" என்கிறார் பிகஸ்.

ரகசிய ஆவணங்களாக இருந்து பின்னர் வெளியிடப்பட்ட சில ஆவணங்களின் மூலம், குறைந்தது 1975 வரையிலும் இஸ்ரேல் அணு ஆயுதங்களை தயாரித்தது என்பதில் அமெரிக்க அரசு உறுதியாக இருந்தது என்பது தெரியவந்துள்ளது.

ஆனால், இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த வரலாற்றில் முக்கிய திருப்புமுனையானது ஒரு நபரின் பெயருடன் தொடர்புடையது: அவர் தான் மாவ்டுகாய் வானுனு

சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம், DAN PORGES/GETTY IMAGES

படக்குறிப்பு, டிமோனா அணுசக்தி மையத்தில் பணியாற்றிய வானுனு

1980களில் இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாயின.

வானுனு டிமோனா அணு உலையில் 1985ம் ஆண்டு வரையிலும் 9 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்.

அங்கிருந்து வெளியேறும் முன்னதாக வளாகத்தை இரண்டு முறை முழுமையாக புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் அணு ஆயுத தயாரிப்புக்காக கதிரியக்கத் தன்மை கொண்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்படுவது மற்றும் தெர்மோநியூக்ளியர் ஆயுத வடிவமைப்புக்கான ஆய்வகங்களையும் காட்டின.

1986ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்ற வானுனு அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினரை சந்தித்தார். கொலம்பியாவைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளரான ஆஸ்கர் கெரேரோவைச் சந்தித்த போது, இந்த புகைப்படங்களை வெளியிட சம்மதித்தார்.

இதன் மூலமாக வானுனு பிரிட்டிஷ் சன்டே டைம்ஸ் இதழுக்கு வேலை பார்க்கும் பீட்டர் ஹன்னம் எனும் பத்திரிகையாளரை சந்தித்தார்.

பிபிசியின் "விட்னஸ் டூ ஹிஸ்டரி" நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த பீட்டர் இந்த தகவல்களை வெளியிடுவதன் மூலம், இஸ்ரேல் சர்வதேச அழுத்தத்துக்கு ஆளாகி அணுசக்தி திட்டத்தை நிறுத்தும் என வானுனு நம்பினார் என கூறினார். ஆனால், இந்த நம்பிக்கை எதுவும் நிறைவேறவில்லை.

இந்த நிகழ்ச்சியில் வெளியான தகவல்களின்படி, அணுசக்தி குறித்த தகவல் வெளியானதும் வானுனு கடத்தப்பட்டு, போதை மருந்து கொடுக்கப்பட்டு இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் தேசத் துரோகம் மற்றும் உளவு பார்த்து இஸ்ரேலின் அணு ஆயுத ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டுக்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2004ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், தனது செயலுக்காக "மகிழ்ச்சியும் பெருமையும்" அடைவதாகக் கூறினார். ஆனால் அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதற்காக மீண்டும் தண்டிக்கப்பட்டார். இம்முறை வெளிநாட்டினருடன் பேசவும், இஸ்ரேலை விட்டு வெளியேறவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

வானுனு வெளிப்படுத்திய பின்னர் இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருப்பது வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம், RONEN ZVULUN/POOL/AFP/GETTY IMAGES

மாவ்டுகாய் வானுனு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், அந்நாளில் இஸ்ரேலிடம் 100 முதல் 200 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.

தற்போதைய சூழலில் ஸ்டாக் ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் போன்ற, அணு செயல்பாட்டு கண்காணிப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருக்கலாம்.

இந்த ஆயுதங்களை தயாரிப்பதற்கான புளூட்டோனியம் டிமோனாவில் உள்ள நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இஸ்ரேலால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இந்த அணு உலையானது 26 மெகாவாட் திறனுடைய வெப்ப உலையைக் கொண்டுள்ளது. ஆனால், இதன் உண்மையான திறன் இன்னும் அதிகமாக இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர்.

இஸ்ரேலின் மற்ற பகுதிகளில் உள்ள அணு திட்டங்களைப் போன்று இந்த உலையானது சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. பாதுகாப்பு நெறிமுறைகளானது அணு கட்டமைப்புகள் அமைதியான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதோடு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடை செய்கிறது.

ஆனால், இஸ்ரேல் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் கொடுக்காத போது, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை எப்படி கணக்கிட முடியும்?

"சர்வதேச அமைப்புகள் அணு திட்டங்களை கண்காணித்து, ஆண்டுதோறும் ஆயுதங்கள் குறித்த மதிப்பீடுகளை வழங்குகின்றன" என்கிறார் பிகஸ்.

"குறைவான தகவல்களையே கொண்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளைப் பொருத்தவரையிலும், கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தின் உத்தேச அளவு மதிப்பிடப்பட்டு இதன் மூலம் அணு ஆயுதங்கள் கணக்கிடப்படும்" என பிகஸ் விளக்குகிறார்.

அணு உலைகள் இயங்கிய நேரம் மற்றும் அவற்றின் திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இவற்றில் தயாரிக்கப்படும் அணு பிளவு பொருளின் அளவு மதிப்பிடப்படுகிறது.

சுமார் 50 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியாவுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ பின்பற்றப்படும் இந்த அணுகுமுறையானது முற்றிலும் புதிது அல்ல.

2011-ல் நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பு , அணு உலைகளில் காலமுறைப்படியான ஆய்வுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கட்டாயமாக்கப்படவில்லை. அப்போது, சர்வதேச அமைப்புகள் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தோராயமாகவே கணக்கிட்டன என்று பிகஸ் கூறுகிறார். "இந்த மதிப்பீடுகள் பின்னாளில் ஆய்வு நடத்தப்பட்டு வெளியான அறிக்கைகளுடன் ஒத்துப்போயின. எனவே, இஸ்ரேலுக்கான தற்போதைய கணக்கீடு உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என நாம் கூறலாம்" என பிகஸ் கூறுகிறார்.

அணு ஆயுதமற்ற நாடாக மாற முடியுமா?

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,REUTERS

2012-ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இஸ்ரேல் தனது அணுசக்தி திட்டங்களை சர்வதேச ஆய்வுக்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தியது.

இஸ்ரேலை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இணைய வலியுறுத்தும் இந்த தீர்மானத்துக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் கனடா வாக்களித்தன.

1970-ஆம் ஆண்டு இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இரான் கையெழுத்திட்டது. சமீப நாட்களில் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது குறித்து இரான் நாடாளுமன்றம் ஆலோசித்து வருவதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பாகெய் குறிப்பிட்டார்.

மறுபுறம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் தீர்மானமானது ஐ.நா. பொதுச்சபையில் அவ்வப்போது முன்மொழியப்படுகிறது.

"இந்த முன்மொழிவை இஸ்ரேல் மறுத்துவிட்டதோடு, இதனை தனது இறையாண்மை மீதான தாக்குதல்" என்றும் விமர்சிக்கிறது என்கிறார் பிகஸ்.

அவரது கூற்றுப்படி, ஐக்கிய நாடுகள் அவையின் ஆயுதக்குறைப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பத்திரிகை காப்பக அறிக்கைகளின்படி, இதுபோன்ற கட்டுப்பாடுகள் பிராந்தியத்தில் உள்ள உண்மையான அபாயங்களை குறைக்காது என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

ஜேபியர் பிகஸ் வலியுறுத்துவது என்னவென்றால், "எந்த ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதும் கவலை அளிக்கக்கூடியது தான். ஏனென்றால், இந்த ஆயுதங்களை வைத்திருப்பது இயல்பாகவே ஆபத்தானது" என்கிறார்.

"ஆனால் உண்மையில் இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களை மீண்டும் மீண்டும் மீறி வருகிறது. சர்வதேச சட்டங்கள், மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து புறக்கணிக்கும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. வேறு எந்த நாடும் அவற்றைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியுது என்பது இந்த விஷயத்தை இன்னும் கவலையடையச் செய்கிறது" என பிகஸ் கூறுகிறார்.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cnvm326v8njo

சிரிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு, 63 பேர் காயம்!

3 months 1 week ago

New-Project-297.jpg?resize=750%2C375&ssl

சிரிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு, 63 பேர் காயம்!

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த தாக்குதலில் 63 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (22) மாலையில் ட்வீலா பகுதியில் உள்ள எலியாஸ் நபியின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் ஒரு நபர் ஆயுதத்தால் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் வெடிகுண்டு உடையை வெடிக்கச் செய்ததாகவும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசு (IS) உடன் தொடர்புடையவர் என்றும் அது கூறியது.

அந்தக் குழுவிடமிருந்து உடனடியாக எந்த உரிமைகோரலும் இல்லை.

தேவாலயத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் பெரிதும் சேதமடைந்த பலிபீடம், உடைந்த கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் பீடங்கள் மற்றும் சுவர்களில் இரத்தம் சிதறிக் கிடப்பதைக் காட்டியது.

266dc530-4fad-11f0-86d5-3b52b53af158.jpg

சிரியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரை ஐஎஸ் அடிக்கடி குறிவைத்து வருகிறது.

2016 ஆம் ஆண்டில், டமாஸ்கஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம் சயீதா ஜெய்னாப் ஆலயத்திற்கு அருகில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இந்தக் குழு பொறுப்பேற்றது.

இதில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

https://athavannews.com/2025/1436653

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

3 months 2 weeks ago

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீச்சு - நேரலை விவரம்

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,US AIR FORCE

படக்குறிப்பு, பி-2 குண்டுவீச்சு விமானம்

22 ஜூன் 2025, 01:11 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இரானை உடனடியாக சமாதானத்திற்கு வருமாறும், இல்லாவிட்டால் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல் பற்றி இரான் கூறுவது என்ன?

'ஓர் அற்புதமான இராணுவ வெற்றி'

இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

"இந்த பயங்கரமான அழிவுகரமான தளங்களை அவர்கள் கட்டியெழுப்பும் போது எல்லோரும் பல ஆண்டுகளாக அந்தப் பெயர்களைக் கேட்டனர். இன்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றி என்று நான் உலகிற்கு தெரிவிக்க முடியும். இரானின் முக்கிய அணு செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன" என்று டிரம்ப் தெரிவித்தார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

இரானுக்கு டிரம்ப் மிரட்டல்

இரான் இப்போது சமாதானம் முன்வராவிட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவின் தாக்குதல்கள் மிக அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

"அமைதி விரைவில் ஏற்படும் அல்லது கடந்த எட்டு நாட்களில் நாம் கண்டதை விட இரானுக்கு மிகப் பெரிய சோகம் ஏற்படும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

"நினைவில் கொள்ளுங்கள், இன்னும் நிறைய இலக்குகள் உள்ளன. இன்றிரவு அவற்றில் மிகவும் கடினமானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. ஆனால் அமைதி விரைவில் வரவில்லை என்றால், நாங்கள் துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் மற்ற இலக்குகளை நோக்கிச் செல்வோம்," என்று அவர் கூறினார்.

"இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு குழுவாக செயல்பட்டன"

இரானின் முன்னாள் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார்.

"இது நடக்க விடமாட்டேன், இது தொடராது என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன்" என்று குறிப்பிட்ட அவர்,

"இஸ்ரேலுக்கு எதிரான இந்த பயங்கரமான அச்சுறுத்தலை" அழிக்க இஸ்ரேலுடன் ஒரு "குழுவாக" பணியாற்றியதாகக் கூறி, பெஞ்சமின் நெதன்யாகுவை வாழ்த்தினார்.

டிரம்ப் உரை சுமார் நான்கு நிமிடங்கள் நீடித்தது.

இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்

முன்னதாக, "ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். அனைத்து விமானங்களும் இப்போது இரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன," என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டிருந்தார்.

அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தன என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

இரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக, அமெரிக்காவின் பி-2 ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்க தீவுப் பகுதியான குவாமுக்கு முன்பே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகத்தை அதிகப்படுத்தியிருந்தது.

'ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது'

"ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது" என்ற ஒரு புலனாய்வு பயனரின் பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுபதிவு செய்துள்ளார்.

"இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம்" என்று அவர் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

"இரான் இப்போது இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன்முழு ஒருங்கிணைப்பு - இஸ்ரேல்

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் அமெரிக்காவுடன் "முழு ஒருங்கிணைப்பில்" இருந்தது என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் இஸ்ரேலிய பொது ஊடகமான கானிடம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,GOOGLE EARTH

ஃபோர்டோ - ரகசிய இரானிய அணுசக்தி தளம்

தலைநகரம் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 60 மைல் (96 கிமீ) தொலைவில் ஒரு மலைப் பகுதியில் ஃபோர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் தளம் அமைந்துள்ளது.

நிலத்தடி வசதி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மைய விலக்கு இயந்திரங்களையும், சிறிய சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் கொண்டிருந்த 2 முக்கிய சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.

இரான் பதில்

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு இலக்கான அணுசக்தி தளங்களை தாங்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டதாக இரானிய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

இரானின் அரசு ஊடகத்தின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். இரான் இந்த மூன்று அணுசக்தி தளங்களையும் முன்னதாகவே காலி செய்துவிட்டதாக அவர் கூறினார்.

டிரம்ப் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, இரான் அந்த அணுசக்தி தளங்களில் இருந்த பொருட்களை ஏற்கனவே பாதுகாப்பாக வெளியே எடுத்துவிட்டதால், இந்த தாக்குதலால் பெரிய பின்னடைவு எதையும் சந்திக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலை உறுதிப்படுத்திய இரான்

இரானில் இருந்த பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

கோம் மாகாண நெருக்கடி மேலாண்மைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் மோர்டெசா ஹெய்தாரி, "ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானது" என்று கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், நடான்ஸ், இஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இரான் கூறியுள்ளது.

இஸ்பஹானின் பாதுகாப்பு துணை ஆளுநர் அக்பர் சலேஹி, "நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் பல வெடிப்புகள் கேட்டன, இஸ்பஹான் மற்றும் நடான்ஸின் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் தாக்குதல்களைக் கண்டோம்" என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், டிரம்ப் குறிப்பிட்ட 3 அணுசக்தி தளங்களும் தாக்குதலுக்கு இலக்கானது இரானிய அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

இரானிடம் முன்னறிவித்த அமெரிக்கா

தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே அதுகுறித்து இரானிடம் அமெரிக்கா தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமையன்று இரானை "ராஜதந்திர ரீதியாக" தொடர்பு கொண்டு தாக்குதல் நடத்த மட்டுமே செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், "ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் திட்டமிடப்படவில்லை" என்றும் அமெரிக்கா கூறியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி கூறுகிறது.

இந்த வார தொடக்கத்தில், இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியைக் கொல்லும் நெதன்யாகுவின் திட்டத்தை டிரம்ப் நிராகரித்துவிட்டதாக பல அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn0q81z52xzo

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

3 months 2 weeks ago

New-Project-292.jpg?resize=600%2C300&ssl

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 314 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 291 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதை அடுத்து குறித்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படுவதுடன் அங்கு குறித்த அசோதா பரீசிலனை செய்யப்படும்.

இதேவேளை குறித்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மருத்துவா்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

மேலும், அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1436481

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

3 months 2 weeks ago

New-Project-280.jpg?resize=750%2C375&ssl

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கடந்த இரண்டு வாரங்களில் கட்டாரில் உள்ள ஒரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளத்தில் கிட்டத்தட்ட 40 அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயுள்ளன.

இது ஈரானிய தாக்குதல்களிலிருந்து சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரு அமெரிக்காவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தெரிகிறது என்று செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது.

ஜூன் 5 முதல் ஜூன் 19 வரை, பிளானட் லேப்ஸ் பிபிசியின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஒரு காலத்தில் நிரம்பியிருந்த அல் உதெய்ட் விமானத் தளத்தில் (அமெரிக்காவின் மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ நிறுவல்) பெரும்பாலும் விமானங்களால் காலியாக இருப்பதைக் காட்டுகிறது.

ஜூன் 5 அன்று, C-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானங்கள் மற்றும் மேம்பட்ட உளவு விமானங்கள் உட்பட சுமார் 40 விமானங்கள் வெற்றுப் பார்வையில் நிறுத்தப்பட்டன.

எனினும், ஜூன் 19 ஆம் திகதிக்குள் அவற்றில் மூன்று மட்டுமே எஞ்சியியுள்ளதை புகைப்படம் காட்டுகின்றது.

Gt3A3jgW0AATscs?format=jpg&name=900x900

இதற்கிடையில், கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை (19) மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது.

பொது விமான கண்காணிப்பு தரவுகளின் AFP இன் பகுப்பாய்வு,

ஜூன் 15 முதல் 18 வரை, KC-46A பெகாசஸ் மற்றும் KC-135 ஸ்ட்ராடோடேங்கர் விமானங்கள் உட்பட குறைந்தது 27 இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு பறந்தன என்பதைக் காட்டுகிறது.

புதன்கிழமை பிற்பகுதியில், அந்த விமானங்களில் 25 விமானங்கள் இன்னும் ஐரோப்பாவில் இருந்தன, இரண்டு மட்டுமே அமெரிக்காவிற்குத் திரும்பியுள்ளன.

இந்த எரிபொருள் நிரப்பும் விமானங்கள் நீண்ட தூர விமான நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் அமெரிக்கா நீட்டிக்கப்பட்ட பயணங்களுக்குத் தயாராகி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் கூறுகின்றது.

அமெரிக்க படைகள் உஷார் நிலையில்

மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்கப் படைகள் உஷார் நிலையில் உள்ளன.

மேலும், ஈரானிய பழிவாங்கலுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக இராணுவக் குடும்பங்கள் தாமாக முன்வந்து தளங்களை விட்டு வெளியேற விருப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதி முழுவதும் சுமார் 40,000 அமெரிக்க படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது வழக்கமாக 30,000 ஆக இருந்தது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான முந்தைய மோதல்களின் போதும், செங்கடலில் வணிக மற்றும் இராணுவக் கப்பல்கள் மீது ஹவுத்திகள் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியதன் போதும் ஒக்டோபரில் அந்த எண்ணிக்கை 43,000 ஆக உயர்ந்தது.

மேலதிக படை நகர்வுகள் குறித்து பென்டகன் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஈரானுடனான நிலைமை எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்து அமெரிக்கப் பணியாளர்கள் விரைவான மாற்றங்களுக்குத் தயாராக இருப்பதாக வலியுறுத்தியது.

https://athavannews.com/2025/1436385

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

19 JUN, 2025 | 05:32 PM

image

வீசா விண்ணப்பதாரர்களுக்கு விரிவாக்கப்பட்ட திரையிடல் மற்றும் சரிபார்ப்பு தொடர்பில் விசேட அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்,

எங்கள் வீசா செயல்முறை மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்துவதன் மூலம், எங்கள் நாட்டையும் எங்கள் குடிமக்களையும் பாதுகாக்க வெளிவிவகார அமைச்சு உறுதிபூண்டுள்ளது. அமெரிக்க வீசா என்பது ஒரு சலுகை மட்டுமே. உரிமை அல்ல.

அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் உட்பட, அமெரிக்காவிற்கு அனுமதிக்கப்படாத வீசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காண எங்கள் விசா சோதனை மற்றும் சோதனையில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்.

புதிய வழிகாட்டுதலின் கீழ், F, M மற்றும் J குடியேறியவர் அல்லாத வகைப்பாடுகளில் உள்ள அனைத்து மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விண்ணப்பதாரர்களின் ஒன்லைன் இருப்பு உட்பட விரிவான மற்றும் முழுமையான சோதனையை நாங்கள் மேற்கொள்வோம்.

இந்த சோதனையை எளிதாக்க, F, M மற்றும் J குடியேறியவர் அல்லாத வீசாக்களுக்கான அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களிலும் உள்ள தனியுரிமை அமைப்புகளை "பொதுமக்கள்" என்று சரிசெய்ய அறிவுறுத்தப்படுவார்கள்.

எங்கள் வெளிநாட்டு இடுகைகள் விரைவில் F, M மற்றும் J குடியேறியவர்கள் அல்லாத வீசா விண்ணப்பங்களை திட்டமிடுவதை மீண்டும் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் சந்திப்பு கிடைப்பதற்காக தொடர்புடைய தூதரகம் அல்லது தூதரக வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு வீசா தீர்ப்பும் ஒரு தேசிய பாதுகாப்பு முடிவாகும். அமெரிக்காவிற்குள் நுழைய விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்கர்களுக்கும் நமது தேசிய நலன்களுக்கும் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதையும், அனைத்து விண்ணப்பதாரர்களும் கோரப்படும் வீசாவிற்கான தங்கள் தகுதியை நம்பகத்தன்மையுடன் நிறுவுவதையும், அவர்கள் தங்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளுக்கு இணங்க நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதையும் உறுதிசெய்ய, வீசா வழங்கும் செயல்முறையின் போது அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/217927

யானைகளை கொல்ல உத்தரவிட்ட ஜிம்பாப்வே - இந்த புத்திசாலி விலங்கால் என்ன பிரச்னை?

3 months 2 weeks ago

ஜிம்பாப்வே, யானைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜிம்பாப்வேயில் 84,000-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிரியா சிப்பி

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

யானைகளின் எண்ணிக்கை அதீதமாக உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியுமா? ஜிம்பாப்வே அரசை பொருத்தவரை யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக யானைகளை கொல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.

விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடைமுறை, அவற்றின் ஒரு பகுதியைக் 'கொல்லுதல்' ஆகும். அதாவது அதிகளவில் இருக்கும் விலங்குகளை, ஒரு குறிப்பிட்ட அளவில் அழிப்பதன் மூலம் அந்த விலங்கினத்தின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டில் (2024), இருநூறுக்கும் மேற்பட்ட யானைகளை கொல்ல அனுமதி கொடுத்ததற்காக ஜிம்பாப்வே அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது.

இப்படிப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில், தெற்கு ஜிம்பாப்வேயில் உள்ள சேவ் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் பகுதியில் வசிக்கும் யானைகளில் குறைந்தது 50 யானைகளை கொல்லும் திட்டத்தை அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது.

யானைகளை கொல்லும் திட்டங்கள் ஏற்கனவே அமலில் இருப்பதாக தேசிய வனவிலங்கு ஆணையமான ஜிம்பார்க்ஸின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ கூறுகிறார்.

தேசிய பூங்காவில் தற்போது 2,550 யானைகள் உள்ளன, ஆனால் அங்கு 800 யானைகளை 'பராமரிக்கும் திறன்' மட்டுமே உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

யானைகளை கொன்று அதிலிருந்து கிடைக்கும் மாமிசம், உள்ளூர் மக்களின் உணவுக்காக கொடுக்கப்படும் என்றும், யானைத் தந்தங்கள் தேசிய பூங்காவின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"நமது வாழ்விடத்தைப் பாதுகாக்க, விலங்கு அதிகரிப்புப் பிரச்னையை நாம் சமாளிக்க வேண்டும்." என்று ஃபராவோ பிபிசியிடம் தெரிவித்தார்.

"அதீத அளவிலான யானைகள், தாங்கள் வாழும் வாழ்விடத்தையே அழித்துவிடுகின்றன. அது, யானைகளுக்கே ஆபத்தாக மாறி வருகிறது. இப்போது இருக்கும் பெருமளவிலான யானைகளின் எண்ணிக்கையை நமது சுற்றுச்சூழல் அமைப்பால் சமாளிக்க முடியாது," என்று அவர் கூறுகிறார்.

வடக்கு ஜிம்பாப்வேயின் ஹ்வாங்கேயில் உள்ள ஹ்வாங்கே தேசிய பூங்காவில் ஒரு யானை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜிம்பாப்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, யானைகளின் எண்ணிக்கையை குறைக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வருகிறது

'பாதுகாக்கும் அணுகுமுறையால் அரசு எதிர்கொள்ளும் விமர்சனம்'

ஜிம்பாப்வேயில் 1980களின் பிற்பகுதி வரை அமலில் இருந்த யானை அழிப்பு திட்டம் அதன்பிறகு 2024ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படவில்லை.

ஜிம்பாப்வேயில் அதிக அளவிலான யானைகள் உள்ளன. உலகில் அதிகளவிலான யானைகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே இரண்டாம் இடம் வகிக்கிறது. 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வான்வழி கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டில் 84,000க்கும் மேற்பட்ட யானைகள் இருந்ததாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

KAZA அமைப்பு 2022இல் நடத்திய யானை கணக்கெடுப்பு மற்றொரு எண்ணிக்கையை காட்டியது. அதன்படி, ஜிம்பாப்வேயில் சுமார் 65,000 யானைகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1,31,000-க்கும் அதிகமான யானைகளைக் கொண்ட போட்ஸ்வானா, உலகில் அதிகளவிலான யானைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

யானையின் எண்ணிக்கையை குறைக்கும் புதிய திட்டங்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

"இது பாதுகாப்பிற்கான மிகவும் மோசமான அணுகுமுறை," என்று ஜிம்பாப்வேயை தளமாகக் கொண்ட இயற்கை வள நிர்வாக மையத்தின் இயக்குனர் ஃபராய் மகுவு கூறுகிறார்.

"யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வனவிலங்கு வழித்தடங்களை உருவாக்கி, அவை இயல்பான முறையில் வாழ்வதற்கான பிற பகுதிகளில் சுதந்திரமாக வாழவிடலாம்," என்று அவர் கூறுகிறார்.

"அதேபோல, யானைகள் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அவற்றை இடமாற்றம் செய்யலாம்."

யானைகளை இடமாற்றம் செய்வது செலவு அதிகம் பிடிக்கும் செயல்முறை என்றும், அது அதீத எண்ணிக்கை என்ற பிரச்னையை தீர்க்காது என்றும் ஜிம்பாப்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

"இடமாற்றம் என்பது அதிக செலவு பிடிக்கும் செயல்முறை. நம்மிடம் வளங்கள் குறைவாகவே உள்ளன. அத்துடன், ஜிம்பாப்வே ஒரு நாடாக பெரிய அளவில் வளராவிட்டாலும், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் மட்டற்ற அளவில் அதிகரித்து வருகிறது, இது வாழ்விடத்திற்கான போட்டியை உருவாக்குகிறது," என்று ஃபராவோ கூறுகிறார்.

ஆனால், யானைகளை இடமாற்றுவதும் வழக்கத்தில் இல்லாதது அல்ல.

பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இடமாற்ற முயற்சிகளில் மிகப்பெரிய ஒன்றில், அண்மையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 70 வெள்ளை காண்டாமிருகங்கள் ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டன.

இந்த முயற்சி வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும், இனப்பெருக்கம் செய்ய புதிய இடம் ஒன்றை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

விலங்குகளின் அதிக எண்ணிக்கை, நீர் மற்றும் உணவு போன்ற வளங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், யானைகளை கொல்வது என்பது மனிதர்கள்-வனவிலங்கு மோதலை மோசமாக்கும் என்று மகுவு எச்சரிக்கிறார்.

தென்னாப்பிரிக்கா, வெள்ளை காண்டாமிருகங்கள், ருவாண்டா,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அண்மையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 70 வெள்ளை காண்டாமிருகங்கள் ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டன

"யானைகள் மிகவும் புத்திசாலியானவை மற்றும் உணர்ச்சிபூர்வமான உயிரினம்," என்று அவர் கூறுகிறார்.

"ஒரு யானையைக் கொன்றால், பிற யானைகள் வழக்கமாக தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடரும் என்று நினைக்காதீர்கள், தங்களுடன் இருந்த சக உயிரினங்களின் இழப்பால் அவை பெரும் துக்கத்திற்கு ஆளாகின்றன. யானைகளின் துக்கத்தின் எதிரொலியை அருகிலுள்ள சமூகங்கள் மூர்க்கமாக எதிர்கொள்ள நேரிடும்" என அவர் எச்சரிக்கிறார்.

அண்டை நாடான நமீபியாவிலும் யானைகளை கொல்லும் நடைமுறை வழக்கில் உள்ளது.

மேய்ச்சல் நிலங்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் தாக்கங்களை குறைக்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கவும், யானைகள் உட்பட 700க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை கடந்த ஆண்டில் நமீபியா அரசாங்கம் கொன்றது.

யானைகளை கொல்வது என்பது "வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத 'யானை தந்தங்களின்' வர்த்தகத்தை மீண்டும் தூண்டும்" என்று வோர்ல்ட் அனிமல் ப்ரொடெக்‌ஷன் போன்ற விலங்கு உரிமை அமைப்புகள் முன்னெச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

அதே நேரத்தில் விலங்குகளை துன்புறுத்துவதை எதிர்க்கும் பீட்டா (PETA) அமைப்பு, இத்தகைய நடைமுறைகளை "கொடூரமானது" மற்றும் "ஆபத்தான, குறுகிய பார்வை கொண்டது" என்று விவரித்துள்ளது.

வேறு எங்கு யானைகளை கொல்லும் போக்கு இருக்கிறது?

நோய்கள் பரவுவதைத் தடுக்க விலங்குகள் கொல்லப்படும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

பிரிட்டனில் போவைன் காசநோயின் பரவலைத் தடுக்கும் வகையில், ஒரு தசாப்தத்தில் 230,000க்கும் மேற்பட்ட வளைக்கரடிகள் (badgers), 278,000 க்கும் மேற்பட்ட பல்வேறு கால்நடைகள் கொல்லப்பட்டன.

இருப்பினும் இந்த விலங்குகள் கொல்லப்படுவது, 2029ஆம் ஆண்டில் நிறுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்தது. இதற்கு பதிலாக வளைக்கரடிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.

2020ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில், ஸ்பெயினில் ஒரு பண்ணையில் இருந்த பல விலங்குகளுக்கு தொற்று பாதித்ததை அடுத்து, கிட்டத்தட்ட 1,00,000 மிங்க் எனும் கீரிகளைக் கொல்ல ஸ்பெயின் உத்தரவிட்டது.

இதற்கிடையில், டென்மார்க்கில், கொரோனா வைரஸ் பாதித்த லட்சக்கணக்கான மிங்க் கீரிகளைக் கொல்லும் திட்டத்திற்கு அரசியல் ரீதியிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.

ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு மாகாணமும் எவ்வளவு கங்காருக்களை கொல்லலாம் என்பதற்கான 'எண்ணிக்கை' அளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நிலத்தைப் பாதுகாக்கவும் வறட்சியின் போது வெகுஜன இறப்பு அபாயத்தைக் குறைக்கவும் விலங்குகளை அழித்தல் அவசியம் என்று அரசாங்கம் கூறுகிறது.

விலங்குகளை அழித்தல் திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்று சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

"கொலை செய்வது என்பது மிகவும் வெறுப்பூட்டும் விஷயமாக தோன்றினாலும், அதனை முற்றிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்படுவதை நாங்கள் அறிவோம்," என்று சூழலியல் நிபுணரும் எழுத்தாளருமான ஹக் வார்விக் கூறுகிறார்.

"தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ விலங்குகளை தீவுகளில் மனிதர்கள் விட்டுவிட்டதால், இது அந்த இடத்தின் சூழலை மிக அதிகமாக மாற்றி, அங்குள்ள உள்ளூர் விலங்குகள் வாழ முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.''

தெற்கு ஜார்ஜியாவின் தொலைதூர தீவில் எலிகளை ஒழிக்கும் ஒரு திட்டத்தை வார்விக் மேற்கோள் காட்டுகிறார், அங்கு விடப்பட்ட எலிகள் உள்ளூர் விலங்குகளை அழித்துவிட்டன.

"இந்த முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது, இது தார்மீக ரீதியாக நியாயமானது என்றும் தோன்றுகிறது," என்று அவர் கூறுகிறார்.

எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு விலங்குகளின் பாதுகாப்பை அளவிடுவதைவிட, ஒரு சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் அவை செழித்து வளரும் திறனால் அளவிட வேண்டும் என்று வார்விக் கருதுகிறார்.

"ஜிம்பாப்வேயில், 'விலங்கு அழிப்பு' திட்டம் வெற்றி பெறலாம், ஆனால் போதுமான வாழ்விடங்கள் இல்லாததால் யானைகள் தங்கள் வாழ்க்கைப் போரில் தோற்றுப் போகின்றன."

இங்கிலாந்து, வனவிலங்கு உரிமைகள், வனவிலங்கு அதிகாரிகள் பேட்ஜர்கள் அழிப்பு, விலங்குகளுக்குத் தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரிட்டனின் சில பகுதிகளில், வனவிலங்கு அதிகாரிகள் வளைக்கரடிகளை அழிப்பதற்குப் பதிலாக தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர்

வேறு ஏதேனும் விருப்பத்தெரிவுகள் உள்ளனவா?

யானைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, தென்னாப்பிரிக்கா பிறப்பு கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றை ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொடங்கியது. கருத்தடை மருந்துகளை காற்றின் மூலமாக யானைகளின் மீது பாய்ச்சும் முறையாகும்.

தாய்லாந்தில் மனிதர்கள்-யானைகள் மோதல் அதிகரித்து இருக்கும் நிலையில், காட்டுப் யானைகளில் பெண் யானைகளுக்கு பிறப்பு கட்டுப்பாட்டைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்த ஆண்டு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நோயுற்ற விலங்குகள், மனிதர்கள் அல்லது பிற விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக மாறும் நிலையில், இதே போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் வார்விக் சுட்டிக்காட்டுகிறார்.

"பிரிட்டனில் பூர்வீக சிவப்பு அணில்கள் மற்றும் இடம்பெயர்ந்து வந்த சாம்பல் அணில்களுக்கும் இடையிலான பிரச்னையை, விலங்கு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களில் ஒன்றாக சொல்லலாம். சிவப்பு அணில்களைக் கொல்லும் ஒரு நோய், சாம்பல் அணில்களிடம் உள்ளது," என்று அவர் கூறுகிறார்.

"சிவப்பு அணில்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது அல்லது சாம்பல் அணில்களுக்கு கருத்தடை முறைகளைக் கண்டுபிடிப்பது ஒரு உத்தியாக இருக்கலாம்" என்று அவர் கூறுகிறார்.

பாதுகாப்புப் பிரச்னைகள் மிகவும் சிக்கலானவை என்றும், கொலை செய்வது பெரும்பாலும் விரைவான மற்றும் எளிமையான தீர்வாகக் கருதப்படுகிறது என்றும் வார்விக் கூறுகிறார்.

"இந்த சிக்கலுக்கு மாற்று வழிகளைக் காண்பதே முதல் தெரிவாக இருக்கவேண்டும். இடமாற்றம் அல்லது சமூக மேலாண்மை தொடர்பானதாக இருந்தாலும் மாற்று வழிகள்தான் சிறந்தது, விலங்குகளை அழிப்பது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்."

யானைகளுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு செய்வது குறித்து ஜிம்பாப்வே அரசின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம்.

"ஒரு பூங்காவிலோ சிறிய இடத்திலோ பிறப்புக் கட்டுப்பாடு முயற்சிகள் சாத்தியப்படலாம், ஆனால் பல்லாயிரக்கணக்கான யானைகளைக் கொண்ட மாபெரும் இடத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அங்கு பிறப்பு கட்டுப்பாடு முறைகளை நிர்வகிப்பது கடினம்" என்று ஃபராவோ பதிலளிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2len1pyr11o

மொசாட் அமைப்பின் வெற்றிகளும் தோல்விகளும் - வரலாற்றில் இடம்பெற்ற 14 முக்கிய ஆபரேஷன்கள்

3 months 2 weeks ago

மொசாட்: இஸ்ரேலின் உளவு அமைப்பின் வெற்றிகள் மற்றும் தோல்விகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES/BBC

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிபிசி நியூஸ் அரபிக்

  • பதவி,

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்திய தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், இஸ்ரேல் இரானிய அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளை குறிவைத்துள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் நாட்டின் மேற்குப் பகுதியிலும் தலைநகர் டெஹ்ரானைச் சுற்றியும் நடந்துள்ளன.

தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

உதாரணமாக, மொசாட் உளவாளிகள் இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க நாட்டிற்குள் கடத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

முன்னதாக தங்கள் பாதுகாப்புப் படைகளில் இஸ்ரேலிய உளவுத்துறை ஊடுருவியிருக்கலாம் என சந்தேகிப்பதாக இரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

ஜூன் 13 அன்று இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான முக்கிய இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குறிவைக்கப்பட்டுள்ளனர், இது இஸ்ரேல் அவர்களின் இருப்பிடம் குறித்து உளவுத்துறை தகவல்களைப் பெற்றிருப்பதைக் குறிக்கிறது.

இந்த நிகழ்வுகளில் மொசாட்டின் பங்கை மதிப்பிடுவது எளிதல்ல. இஸ்ரேல் அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது மற்றும் உளவுத்துறையின் பிற பிரிவுகளும் உள்ளன.

ஆனால் மொசாட் அமைப்பின் குறிப்பிடத்தக்க கடந்தகால செயல்பாடுகள் பற்றி நாம் அறிந்தவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

மொசாட்டின் வெற்றிகள்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,ANADOLU VIA GETTY

படக்குறிப்பு, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (இடது) டெஹ்ரானுக்கு விஜயம் செய்தபோது, இரானிய புரட்சிகர காவல்படையின் தளபதி ஹொசைன் சலாமி (வலது) அவரை வரவேற்கிறார். இருவரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை 31, 2024 அன்று டெஹ்ரானில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் ஆரம்பத்தில் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு அதன் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இந்தக் கொலைக்குப் பின்னால் இஸ்ரேல் இருந்ததை ஒப்புக்கொண்டார்.

ஹனியேவின் மரணத்தைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கான பதில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஹனியேவை, ஒரு ஏவுகணை 'நேரடியாக' தாக்கியதாக ஹமாஸின் மூத்த அதிகாரி கலீல் அல்-ஹய்யா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஹனியேவுடன் இருந்த சாட்சிகளை மேற்கோள் காட்டி அவர் இதைக் கூறினார்.

ஆனால் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஏழு அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, ஹனியே தங்கியிருந்த கட்டடத்திற்குள், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மறைத்து கொண்டுசெல்லப்பட்ட ஒரு வெடிகுண்டு மூலம் அவர் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசியால் இந்தக் கூற்றுகளில் எதையும் சரிபார்க்க முடியவில்லை.

2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலால் கொல்லப்பட்ட பல ஹமாஸ் தலைவர்களில் ஹனியேவும் ஒருவர்.

இதில் காஸாவின் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், அவரது சகோதரர் முகமது, ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப் மற்றும் அவருக்கு அடுத்த இடத்தில இருந்த தலைவர் மர்வான் இசா ஆகியோர் அடங்குவர்.

ஹெஸ்பொலா அமைப்பின் சாதனங்கள் வெடித்த நிகழ்வு

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வெடித்துச் சிதறிய தகவல் தொடர்பு சாதனத்தால் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா உறுப்பினரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

செப்டம்பர் 17, 2024 அன்று, லெபனான் முழுவதும் முக்கியமாக வலுவான ஹெஸ்பொலா இருப்பு உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. இந்த வெடிப்புகள் பயனர்களையும் அருகிலுள்ள சிலரையும் காயப்படுத்தின அல்லது கொன்றன.

மறுநாள் வாக்கி-டாக்கிகள் அதே பாணியில் வெடித்தன. நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர், காயமடைந்தனர்.

தாக்குதல் நடந்த நேரத்தில், இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் ஒரு மோதலில் ஈடுபட்டிருந்தன. இது அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்கு ஒரு நாள் கழித்து, இஸ்ரேலிய நிலைகள் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியதின் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலின் ஒரு பகுதியாகும்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல்தான் இதற்குப் பொறுப்பு என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டதாக அப்போது இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ்ஸுக்கு இரண்டு முன்னாள் மொசாட் ஏஜென்ட்கள் அளித்த பேட்டியில், இந்த நடவடிக்கையின் விவரங்களை வெளியிட்டனர்.

மொசாட் வாக்கி-டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை மறைத்து வைத்திருந்ததாகவும், பொதுவாக இந்த வாக்கி-டாக்கிகள் ஒருவரின் இதயத்திற்கு அருகில் இருக்குமாறு உடையில் பொருத்தப்படும் என்றும் கூறினர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 'நல்ல விலைக்கு' 16,000க்கும் மேற்பட்ட வாக்கி-டாக்கிகளை ஹெஸ்பொலா அறியாமல் வாங்கியதாகவும், பின்னர் 5,000 பேஜர்களையும் வாங்கியதாகவும் ஏஜென்ட்கள் தெரிவித்தனர் என சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெடிப்புகள் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின, பல்பொருள் அங்காடிகள் உட்பட எல்லா இடங்களிலும் பேஜர்கள் கொண்டு செல்லப்பட்டபோது வெடிப்புகள் நிகழ்ந்தன.

மருத்துவமனைகள் மனித உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்தன, அவர்களில் பலர் உடல் உறுப்புகளை இழந்திருந்தனர்.

ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்று அழைத்தார்.

மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, இரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் கொலைக்குப் பின்னால் மொசாட் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

நவம்பர் 2020இல், இரானின் மிக முக்கியமான அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை ஏற்றிச் சென்ற ஒரு வாகனத் தொடரணி, தலைநகர் டெஹ்ரானுக்கு கிழக்கே உள்ள அப்சார்ட் நகரில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானது.

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டார்.

"பொதுமக்கள் யாரும் உயிரிழக்காமல், ஒரு நகரும் இலக்கை நோக்கி இதுபோன்ற 'சர்ஜிக்கல்' முறையில் படுகொலை செய்வதற்கு, களத்திலிருந்து நிகழ்நேர உளவுத் தகவல்கள் தேவைப்படும்" என்று பிபிசி பாரசீக செய்தியாளரான ஜியார் கோல் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 2018இல், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பானதாகக் கூறப்படும் பல ஆவணங்களைக் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காட்சிப்படுத்தினார். இது பல மாதங்களுக்கு முன்பு, ஒரு இரானிய 'சேமிப்பு கட்டடத்தில்' மொசாட் அமைப்பு நடத்திய துணிச்சலான நடவடிக்கையில் திருடப்பட்டதாக அவர் கூறினார். இந்த கட்டிடம் டெஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது. (இது பின்னர் இரானிய அதிபர் ஹசன் ரூஹானியால் உறுதிப்படுத்தப்பட்டது).

ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ஆவணங்களை வழங்கிய இஸ்ரேலிய பிரதமர், அறிவிக்கப்படாத ஒரு அணு ஆயுதத் திட்டத்திற்காக மொஹ்சென் ஃபக்ரிஸாதே பணியாற்றுகிறார் எனக் கூறினார்.

"மொஹ்சென் ஃபக்ரிஸாதே... அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள்," என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

2010 மற்றும் 2012க்கு இடையில், நான்கு இரானிய அணு விஞ்ஞானிகளை இஸ்ரேல் கொன்றதாக இரான் முன்பு குற்றம் சாட்டியிருந்தது.

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மஹ்மூத் அல்-மபூஹ்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மஹ்மூத் அல்- மபூஹ் மீது முதலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. பின்னர் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார்

2010 ஆம் ஆண்டு, ஹமாஸின் மூத்த ராணுவத் தலைவரான மஹ்மூத் அல்-மபூஹ் துபை நாட்டின் ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில், இது ஒரு இயற்கை மரணம் போல் தோன்றியது. ஆனால் துபை காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னர், இறுதியில் கொலையாளிகளை அடையாளம் காண முடிந்தது.

அல்-மபூ முதலில் மின்சாரத்தால் தாக்கப்பட்டு பிறகு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார் என்பதை காவல்துறை பின்னர் கண்டறிந்தது.

இந்த நடவடிக்கை மொசாட்டால் திட்டமிடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதாண்மை ரீதியிலான சீற்றத்தைத் தூண்டியது.

இருப்பினும், இஸ்ரேலிய தூதர்கள், மொசாட்டை தாக்குதலுடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினர்.

மொபைல் போன் வெடிப்பில் கொல்லப்பட்ட யஹ்யா அய்யாஷ்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, யஹ்யா அய்யாஷின் படம்

1996 ஆம் ஆண்டு, ஹமாஸின் முக்கிய வெடிகுண்டு தயாரிப்பாளரான யஹ்யா அய்யாஷ், 50 கிராம் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மோட்டோரோலா ஆல்ஃபா மொபைல் போன் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

ஹமாஸின் ராணுவப் பிரிவில் ஒரு முக்கிய தலைவரான அய்யாஷ், குண்டுகளை உருவாக்குவதிலும், இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக சிக்கலான தாக்குதல்களை திட்டமிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

2019 இன் பிற்பகுதியில் இந்தக் கொலையின் சில விவரங்களை வெளியிடுவதற்கான தடைகளை இஸ்ரேல் நீக்கியது. மேலும் இஸ்ரேலின் 'சேனல் 13' தொலைக்காட்சி அய்யாஷ் மற்றும் அவரது தந்தை இடையேயான இறுதி தொலைபேசி அழைப்பின் பதிவை ஒளிபரப்பியது.

ஆபரேஷன் பிரதர்ஸ்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,RAFFI BERG

படக்குறிப்பு, எத்தியோப்பிய யூதர்கள் பயணித்த வாகனத்திற்கு அருகில் நிற்கும் ஒரு மொசாட் ஏஜென்ட்.

1980களின் முற்பகுதியில், பிரதமர் மெனகெம் பிகின் அறிவுறுத்தலின் பேரில் மொசாட் அமைப்பு 7,000 க்கும் மேற்பட்ட எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த யூதர்களை சூடான் வழியாக இஸ்ரேலுக்கு அழைத்து சென்றது. இதற்காக ஒரு போலி டைவிங் ரிசார்ட்டை மொசாட் பயன்படுத்தியது.

அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள சூடான், இஸ்ரேலுக்கு எதிரி நாடு. எனவே ரகசியமாக செயல்பட்ட மொசாட் ஏஜென்ட்களின் குழு சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு ரிசார்ட்டை அமைத்து அதை தங்கள் தளமாக பயன்படுத்தினர்.

அந்த ஏஜென்ட்கள் பகலில் ஹோட்டல் ஊழியர்களாக பணிபுரிந்தனர். அண்டை நாடான எத்தியோப்பியாவிலிருந்து வந்த யூதர்களை இரவு நேரத்தில் அவர்கள் ரகசியமாக தங்கள் இடத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த ஆபரேஷன் குறைந்தது ஐந்து ஆண்டுகள் நீடித்தது. அது கண்டுபிடிக்கப்படுவதற்குள் மொசாட் ஏஜென்ட்கள் தப்பி ஓடிவிட்டனர்.

ம்யூனிக் ஒலிம்பிக் தாக்குதலுக்கு பதிலடி

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாலத்தீன ஆயுதக்குழுவால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மியூனிக் ஒலிம்பிக் மைதானத்தில் இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

1972-ஆம் ஆண்டு ஒரு பாலத்தீன ஆயுதக்குழு ம்யூனிக் ஒலிம்பிக்கின் போது இஸ்ரேல் ஒலிம்பிக் குழுவின் இரு உறுப்பினர்களை கொன்றது. ஒன்பது பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றது.

பின்னர் மேற்கு ஜெர்மன் படையினரின் மீட்பு முயற்சி தோல்வியடைந்ததால், இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1972-ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்து வந்த ஆண்டுகளில், மியூனிக் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட மெஹ்மூத் ஹம்ஷாரி உள்ளிட்டோருக்கு மொசாட் குறிவைத்தது

மெஹ்மூத் ஹம்ஷாரி, பாரிஸில் இருந்த அவரது வீட்டில் தொலைபேசியில், வெடிக்கும் சாதனம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த குண்டுவெடிப்பில் ஹம்ஷாரி ஒரு காலை இழந்து இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆபரேஷன் என்டெபி

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, என்டெபி பணயக்கைதிகள் ஒரு வாரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

1976-ஆம் ஆண்டில் உகாண்டாவில் நடத்தப்பட்ட ஆபரேஷன் என்டெபி என்பது இஸ்ரேலின் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு 'மொசாட்' அமைப்பு உளவுத் தகவல்களை வழங்கியது.

பாரிஸுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தை பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் அவர்களது இரண்டு ஜெர்மன் கூட்டாளிகளும் கடத்தினர். அவர்கள் விமானத்தை உகாண்டாவிற்கு திருப்பினார்.

என்டெபி விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் பயணிகளையும், விமானக்குழுவையும் பணயக்கைதிகளாக வைத்திருந்தனர்.

இஸ்ரேலிய கமாண்டோக்கள் விமான நிலையத்துக்குள் புகுந்து, 100 இஸ்ரேலிய மற்றும் யூத பணயக்கைதிகளை மீட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கையின்போது மூன்று பணயக்கைதிகள், கடத்தல்காரர்கள், பல உகாண்டா ராணுவ வீரர்கள் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகோதரர், மூத்த கமாண்டோ யோனாதன் நெதன்யாகு ஆகியோர் கொல்லப்பட்டனர்.

நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை தேடி கண்டுபிடித்தது

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேலில் நடந்த விசாரணையின் போது அடால்ஃப் ஐக்மேன்

1960-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் இருந்து நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை கடத்தியது மொசாட்டின் மிகவும் பிரபலமான உளவு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதில் ஐக்மேன் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படுகிறார்.

தான் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக பல நாடுகளுக்கு தப்பி சென்று கொண்டே இருந்த ஐக்மேன் இறுதியில் அர்ஜென்டினாவில் குடியேறினார்.

14 மொசாட் ஏஜென்ட்கள் கொண்ட குழு அவரைக் கண்டுபிடித்து கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. அங்கு விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

குறிப்பிடத்தக்க தோல்விகள்

பல வெற்றிகரமான நடவடிக்கைகளை நடத்தியுள்ள போதிலும் மொசாட் பல தோல்விகளையும் சந்தித்துள்ளது.

7 அக்டோபர் 2023- ஹமாஸ் நடத்திய தாக்குதல்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

2023 அக்டோபர் 7 அன்று காஸா எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல், மொத்த நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தாக்குதலை முன்னறிவிப்பதில் மொசாட்டின் தோல்வி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தடுப்புக் கொள்கையில் உள்ள பலவீனத்தை இது பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. சுமார் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒரு போரைத் தொடங்கியது. இதில், 40,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யோம் கிப்பூர் போர்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1973 அரபு இஸ்ரேலியப் போரின் போது சூயஸ் கால்வாயைக் கடக்கும் இஸ்ரேலியப் படைகள்.

கிட்டத்தட்ட சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் இதேபோன்ற ஒரு எதிர்பாராத தாக்குதலை சந்தித்தது.

அக்டோபர் 6, 1973 அன்று, சினாய் தீபகற்பம் மற்றும் கோலன் குன்றுகளை மீட்பதற்காக எகிப்தும் சிரியாவும் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தின.

யோம் கிப்பூர் எனப்படும் யூதர்களின் பாவநிவிர்த்தி தினத்தன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தியது. எகிப்தியப் படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்தன. அதே நேரத்தில் சிரியா படைகள் இஸ்ரேலிய நிலைகளைத் தாக்கி கோலன் குன்றுப்பகுதியில் நுழைந்தன.

அந்த நேரத்தில் சோவியத் யூனியன் சிரியா மற்றும் எகிப்துக்கு பொருட்களை வழங்கியது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா அவசரகால உதவிகளை வழங்கியது.

பின்னர் இஸ்ரேல் படைகள் எதிர்ப்பை முறியடிப்பதில் வெற்றி பெற்றன. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐ.நா தீர்மானத்திற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 25-ஆம் தேதி சண்டை முடிவுக்கு வந்தது.

ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் படுகொலை முயற்சி தோல்வி

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மொசாட் அமைப்பால் தீவிரமாக தேடப்படும் ஹமாஸ் தலைவர்களில் ஒருவர் மஹ்மூத் அல்-ஜஹர்.

2003-ஆம் ஆண்டு காஸா நகரில் உள்ள ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் வீட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

அல்-ஜஹர் தாக்குதலில் இருந்து தப்பிய போதிலும் அவரது மனைவி, மகன் காலித் மற்றும் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் அவரது வீட்டை முற்றிலுமாக அழித்தது. மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை அது எடுத்துக்காட்டியது.

ஹமாஸ் அரசியல் தலைவர் காலித் மெஷால்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காலித் மெஷால் 1996 மற்றும் 2017 க்கு இடையில் ஹமாஸின் அரசியல் தலைவராக பணியாற்றினார்.

1997-ஆம் ஆண்டு ஜோர்டானில், ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரான காலித் மெஷாலை விஷம் கொடுத்து இஸ்ரேல் கொலை செய்ய முயற்சித்தது. இஸ்ரேல் - ஜோர்டான் இடையே மிகப் பெரிய தூதாண்மை நெருக்கடியைத் தூண்டிய நடவடிக்கைகளுள் இது ஒன்றாகும்.

இஸ்ரேலிய ஏஜென்டுகள் பிடிபட்ட போது இந்த ஆபரேஷன் தோல்வியடைந்தது. மெஷாலின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு விஷமுறிவு மருந்தை வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது.

மொசாட்டின் அப்போதைய தலைவர் டேனி யாடோம், மெஷாலுக்கு சிகிச்சை அளிக்க ஜோர்டன் சென்றார்.

இந்த கொலை முயற்சி ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை மோசமாக்கியது.

லவோன் விவகாரம்

இஸ்ரேல், மொசாட், ஹமாஸ், இரான், காஸா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சூயஸ் கால்வாயை தேசியமயமாக்குவதாக அறிவிக்கும் எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர்.

1954 இல் எகிப்திய அதிகாரிகள் 'ஆபரேஷன் சுசன்னா' என அழைக்கப்படும் இஸ்ரேலிய உளவு நடவடிக்கையை முறியடித்தனர்.

சூயஸ் கால்வாயில் தனது படைகளை நிறுத்த பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எகிப்தில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நிலைகளில் குண்டுகள் வைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.

இந்த சம்பவம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பின்ஹாஸ் லாவோனின் பெயரால் 'லாவோன் விவகாரம்' என்று அறியப்பட்டது.

இந்த நடவடிக்கையை திட்டமிடுவதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyzlxrzgy2o

Checked
Mon, 10/06/2025 - 23:05
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe