உலக நடப்பு

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!

3 weeks 5 days ago

552366-trump-modi-putin.jpg?resize=750%2

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை உக்ரேன் போரில், ரஷ்யா பயன்படுத்துவதாக, அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றது.

இந்த நிலையில், இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அந்தவகையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அழுத்தம் தர இந்திய மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் எனவும் குறிப்பாக  சீனாவுக்கு 100% வரி, இந்தியாவுக்கு அதிகபட்ச வரி விதிக்க வேண்டும் என்றும் அவர்  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446609

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

3 weeks 6 days ago

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

மேலும்.....

Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital

  • Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha

  • A Hamas official says its negotiating team was targeted during a meeting

  • Explosions are heard and smoke is rising above Doha

Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News

தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை!

3 weeks 6 days ago

New-Project-115.jpg?resize=750%2C375&ssl

தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை!

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரவுக்கு (Thaksin Shinawatra) அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இது செல்வாக்கு மிக்க அரசியல் வம்சத்திற்கு மற்றொரு அடியாகும்.

அவர் முன்பு ஒரு மருத்துவமனையில் சிறைத்தண்டனை அனுபவித்ததால், அதன் ஒரு பகுதியை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த உயர்மட்ட வழக்கு, முந்தைய ஊழல் தண்டனையுடன் தொடர்புடையது.

2001 ஆம் ஆண்டு முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தாக்சினும் அவரது குடும்பத்தினரும் தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அவரது மகள் பேடோங்டார்ன் முன்பு பிரதமராகப் பணியாற்றினார்.

ஆனால் கம்போடியாவின் ஹுன் சென்னுடனான கசிந்த தொலைபேசி அழைப்புடன் தொடர்புடைய வழக்கில், அரசியலமைப்பு நீதிமன்றம் நெறிமுறைத் தரங்களை மீறியதாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், 76 வயதான தாக்சினின் அண்மைய வழக்கு அவரது பிரதமர் பதவியுடன் தொடர்புடைய முந்தைய தண்டனையிலிருந்து உருவாகிறது.

முன்னாள் பிரதமர் 2006 இல் ஒரு இராணுவ சதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சுயமாக நாடுகடத்தப்பட்டார்.

2023 ஆம் ஆண்டு அவர் தாய்லாந்துக்குத் திரும்பியபோது, அவர் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பதவியில் இருந்த காலத்தில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.

அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தாக்சின் அரச மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, தாய் மன்னர் அவரது தண்டனையை ஒரு வருடமாக குறைத்தார்.

ஆனால் இதய பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு அளித்த பின்னர் அவர் விரைவாக பொலிஸ் பொது மருத்துவமனையின் சொகுசுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதால், அவர் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தை மட்டுமே சிறைச்சாலையில் கழித்தார்.

அவர் ஆறு மாதங்கள் அங்கேயே இருந்தார், பின்னர் பிணை பெற்று போங்கொக்கில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றார்.

https://athavannews.com/2025/1446479

காசாவுக்கு கிரேட்டா துன்பெர்க் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

3 weeks 6 days ago

காசாவுக்கு கிரேட்டா துன்பெர்க் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

09 Sep, 2025 | 09:57 AM

image

காசாவிற்கு உதவிப் பொருட்களை அனுப்பும் குளோபல் சுமுத் புளோட்டிலா என்ற கப்பல், துனிசியா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (09)  ட்ரோன் மூலம் தாக்கப்பட்டுள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேலிய முற்றுகையை முறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, காலநிலை தொடர்பான சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை இந்த கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் அவர்களும் இந்த கப்பலில் சென்றுள்ளார்.

“குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற “குடும்ப கப்பல்” என அழைக்கப்படும் முக்கிய கப்பல்களில் ஒன்று ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதை குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (GSF) உறுதிப்படுத்துகிறது. 

போர்த்துகீசியக் கொடி ஏந்திய கப்பலில் அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது விசாரணை நடந்து வருகிறது. மேலும் தகவல்கள் கிடைத்தவுடன் அது உடனடியாக வெளியிடப்படும்” என அந்த அமைப்பு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224597

பிரான்ஸ் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

3 weeks 6 days ago

பிரான்ஸ் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தமது அரசாங்கத்தின் மீது கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார். 

பிரான்சின் தேசிய சட்டமன்றம் 364 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை பதவியில் இருந்து நீக்கி அவரது சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த வாக்களித்தது. 

மேலும் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. 

இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று எலிசே அரண்மனை தெரிவித்துள்ளது. 

அரசாங்கத்தின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ள நாளைய தினம் பிரதமர் பிரான்சுவா பேய்ரூவை அந்த நாட்டு ஜனாதிபதி மெக்ரோன் சந்திப்பார் என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. 

எவ்வாறாயினும் பிரான்ஸ் ஜனாதிபதியும் உண்மையை புரிந்து கொண்டு பதவி விலக வேண்டும் என நம்பிக்கை வாக்கெடுப்பை தோல்வியடைய செய்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. https://adaderanatamil.lk/news/cmfbfuptp00b7o29nlq605s94

விசா விதிகளை மாற்றும் டிரம்ப்: அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்

3 weeks 6 days ago

அமெரிக்கா, இந்தியர், மாணவர் விசா

பட மூலாதாரம், Getty Images

8 செப்டெம்பர் 2025

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், எதிர்காலத்தில் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எஃப் 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம்.

முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அவை இந்திய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதைத் தெரிந்துகொள்வோம்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எப்ஃ 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி படம்

புதிய மாற்றங்கள் என்னென்ன ?

பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசாவைத் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பொதுவாக, அமெரிக்காவில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு எஃப் 1 (F1) விசா வழங்கப்படுகிறது. பரிமாற்றத் திட்டங்கள் மூலம் செல்லும் மாணவர்களுக்கு ஜே1 (J1) விசா வழங்கப்படுகிறது.

இதுவரை, இந்த மாணவர் விசாக்கள் 'படிப்பு தொடரும் வரை அனுமதி' (duration of status) என்ற முறையில் இருந்தன. அதாவது, ஒரு மாணவர் அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் வரை, அவர்களின் நிலை 'மாணவர்' என்றே இருக்கும். அவர்கள் அனைத்து விசா விதிகளையும் பின்பற்றும் வரை அமெரிக்காவில் தங்கலாம்.

இப்போது, அந்த முறையை நீக்க ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. மாணவர் விசாவின் காலம் 4 ஆண்டுகளாக குறைக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை, இந்த மாணவர் விசாக்கள் 'படிப்பு தொடரும் வரை அனுமதி' (duration of status) என்ற முறையில் இருந்தன. அதாவது, ஒரு மாணவர் அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் வரை, அவர்களின் நிலை 'மாணவர்' என்றே இருக்கும். அவர்கள் அனைத்து விசா விதிகளையும் பின்பற்றும் வரை அமெரிக்காவில் தங்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி படம்

குறிப்பிட்ட அந்த கால அளவுக்குப் பிறகு, ஒரு மாணவர் அமெரிக்காவில் தொடர்ந்து தங்க விரும்பினால், 'படிப்பு தொடரும் வரை அனுமதி' எனும் நிலையை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

இல்லையெனில், அமெரிக்காவை விட்டு வெளியேறி, மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

இதனால், இளங்கலைப் பட்டம் முடித்து, முதுகலை அல்லது முனைவர் பட்டத்தைத் தொடர விரும்பும் மாணவர்கள், புதிய விசா செயல்முறையைத் தொடங்க வேண்டியிருக்கும்.

மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு உடனடியாக வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியாது.

அதாவது, எஃப் 1 விசா பெற்ற மாணவர்கள், முதல் ஆண்டு முடிந்த பிறகே வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியும்.

பட்டதாரி மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தவுடன், தங்கள் பாடத்திட்டத்தையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ உடனடியாக மாற்ற முடியாது.

அவர்களுக்கு விசா வழங்கப்பட்ட போது, I-20 படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லவேண்டும்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஒரே மட்டத்தில் பல பட்டங்களைப் பெறுவது இனி எளிதல்ல. அதாவது, அமெரிக்காவை விட்டு வெளியேறி புதிய விசாவிற்கு விண்ணப்பிக்காமல், ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம் முடித்து, பின்னர் வேறு பாடத்தில் முதுகலைப் பட்டத்தை தொடருவது இனி சாத்தியமில்லை.

மேலும், விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு மாணவர்கள் தங்கக்கூடிய காலமும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு, மாணவர்கள் 60 நாட்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். இப்போது, அந்த காலத்தை 30 நாட்களாகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மொழிப் படிப்புகளுக்கான அனுமதி 24 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

மொழிப் படிப்புகளுக்கான அனுமதி 24 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி படம்

இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

ஓபன் டோர்ஸ் தரவுகளின்படி, தற்போது அமெரிக்காவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 3,30,000 க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள்.

டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த விதிகள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது.

ஆனால், அந்த விதிகள் அமலுக்கு வந்தவுடன், மாணவர்களின் விசா காலம் குறைக்கப்படலாம். பல்கலைக் கழகங்களை மாற்ற முடியாது என்ற விதி, இந்த ஆகஸ்ட் மாதம் சேர்க்கை பெறும் (இலையுதிர்கால சேர்க்கை) மாணவர்களுக்கு பொருந்தும்.

அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் முடித்த பிறகு வேலைவாய்ப்பு அல்லது ஹெச்-1பி (H-1B) விசா கிடைக்காத மாணவர்கள் பலரும் 'இரண்டாவது முதுகலைப் படிப்பு' படிப்பதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். புதிய மாற்றங்கள் அமலாகும் பட்சத்தில், அவ்வாறு செய்ய முடியாது.

5–6 ஆண்டுகள் ஆகும் பிஎச்டி (முனைவர் பட்ட படிப்பு) போன்ற படிப்புகளுக்கு, எப் -1 (F-1) விசா பெற்ற மாணவர்கள் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசா செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதில், விசா கட்டணம் செலுத்துதல், பயோமெட்ரிக்ஸ் முறையில் பதிவு செய்தல் மற்றும் நிதி ஆதாரத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்தல் ஆகியவை அடங்கும்.

இந்த மாற்றங்கள் முதலில் 2020-ல் டிரம்ப் அதிபராக இருந்தபோது முன்மொழியப்பட்டன.

பைடன் நிர்வாகம் 2021-ல் அதனைத் திரும்பப் பெற்றது.

ஆனால் இப்போது, டிரம்ப் நிர்வாகம் அதை மீண்டும் கொண்டு வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly12513yqeo

அவுஸ்திரேலியாவில் விஷக்காளான் உணவைக் கொடுத்து மூவரை கொன்ற பெண்! - 33 ஆண்டுகள் பிணையில்லாத ஆயுள் தண்டனை!

4 weeks ago

Published By: Digital Desk 1

08 Sep, 2025 | 01:23 PM

image

அவுஸ்திரேலிய பெண் எரின் பேட்டர்சனுக்கு 33 ஆண்டுகள் பிணை இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2023ஆம் ஆண்டு நச்சுத்தன்மையான மதிய உணவினை பரிமாறி மூன்று உறவினர்களைக் கொன்றதாகவும், மற்றொருவரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மதிய உணவின்போது அவர் நச்சுத்தன்மை வாய்ந்த காளான்கள் கலந்த மாட்டிறைச்சியை தனது உறவினர்களுக்கு பரிமாறியுள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு, எரின் பேட்டர்சன் குற்றவாளி என கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

50 வயதான எரின் விசாரணைகளின்போதும் எந்த விதத்திலும் உணர்ச்சிவசப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் கண்களை மூடிக்கொண்டு நின்ற எரின், நீதிபதி தீர்ப்பினை அறிவிக்கையில் குற்றத்துக்கான தண்டனையை வாசிக்கும்போது மட்டுமே கண்களைத் திறந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி எரின் பரிமாறிய உணவினை உட்கொண்டவர்களில் எரினின் முன்னாள் மாமனார் டான் பேட்டர்சன், மாமியார் கெயில் பேட்டர்சன் மற்றும் கெயிலின் சகோதரி ஹீதர் வில்கின்சன் ஆகியோர் அந்த உணவை உட்கொண்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சில நாட்கள் கழித்து உயிரிழந்தனர்.

அத்துடன், நச்சுத்தன்மையான உணவினை உட்கொண்ட மற்றுமொருவரான, ஹீதர் வில்கின்சனின் கணவர் இயன் வில்கின்சன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, உயிர் பிழைத்த நிலையில், நீதிமன்ற அறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/224495

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

4 weeks ago

New-Project-1-3.jpg?resize=600%2C300&ssl

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தார்.

பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்தது எனவும் தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்ய மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா (Vernika Govortsova) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும் புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறது எனவும் மேலும் பல புற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1446390

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா விஜயம்!

4 weeks ago

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா விஜயம்!

ukraine-780x470.webp

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு வருகை தருவார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனும் “விரைவில்” பேசுவேன் என்றும், மொஸ்கோ மீது இரண்டாம் கட்டத் தடைகளை விதிக்க தனது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை வரிகளை விதிக்கும் ட்ரம்பின் திட்டங்களையும் ஜெலென்ஸ்கி வரவேற்றார்.

உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பு 2022 மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து ரஷ்யா சுமார் $985 பில்லியன் (£729 பில்லியன்) எண்ணெய் மற்றும் எரிவாயுவை விற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகப்பெரிய கொள்முதல் நாடுகள் சீனாவும் இந்தியாவும் ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எரிசக்தி கொள்முதலை வியத்தகு முறையில் குறைத்துள்ளது – ஆனால் முழுமையாக நிறுத்தப்படவில்லை.

ஜூன் மாதத்தில், 2027 ஆம் ஆண்டுக்குள் பிரஸ்ஸல்ஸ் அனைத்து கொள்முதலையும் நிறுத்துவதற்கான திட்டங்களை வகுத்தது.

கடந்த மாதம், ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதற்கான பதிலடியாக, இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரிகளை விதித்தது.

எனினும் இந்திய அரசாங்கம், தனது மக்களின் பொருளாதார நலன்களுக்காக எண்ணெய் வாங்குவதில் “சிறந்த ஒப்பந்தத்தை” தொடர்ந்து பின்பற்றுவதாகக் கூறியுள்ளது.

கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் சீனாவிற்கு எரிவாயு விநியோகத்தை அதிகரிப்பதாக ரஷ்யா கூறியது.

இதனிடையே, கடந்த மாதம் அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும் புட்டின் உச்சிமாநாடு நடத்தியதிலிருந்து ரஷ்யா உக்ரேன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://akkinikkunchu.com/?p=340055

"படைகளை அனுப்பினால் அழிப்போம்": ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் புதின்

4 weeks 1 day ago

ரஷ்ய அதிகாரிகள் மேற்கத்திய படைகளை அழிக்கும் புதினின் அச்சுறுத்தலை வரவேற்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிகாரிகள் மேற்கத்திய படைகளை அழிக்கும் புதினின் அச்சுறுத்தலை வரவேற்றனர்.

கட்டுரை தகவல்

  • ஸ்டீவ் ரோசென்பெர்க்

  • பிபிசி ரஷ்யா

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

சில சமயங்களில் வாய் வார்த்தை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. எதிர்வினைதான் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரஷ்யாவின் தூரக்கிழக்கில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பேசிய விளாடிமிர் புதின், "யுக்ரேனுக்கு அமைதி காக்கும் படையினரையும், வீரர்களை அனுப்புவது பற்றி யோசிக்கவே வேண்டாம்" என மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.

"அங்கு சில படைகள் தென்பட்டால் அதிலும் குறிப்பாக சண்டை நடந்துகொண்டிக்கும்போது தென்பட்டால், இவை அழிவுக்கான சரியான இலக்குகளாக இருக்கும்" என ரஷ்ய அதிபர் புதின் கூறினார்.

அதன்பிறகுதான் எதிர்வினை தொடர்ந்தது.

விளாடிவோஸ்டாக்கில் நடந்த பொருளாதார மன்றத்தில் பார்வையாளர்கள் கைதட்டல்களால் ஆரவாரம் செய்தனர். ரஷ்ய அதிகாரிகளும் வணிகத் தலைவர்களும் மேற்கத்திய படைகளை அழிக்கும் அச்சுறுத்தலை வரவேற்றனர்.

அந்த அரங்கத்தில் நடந்த காட்சியை பார்கையில் அந்த கைத்தட்டல் சற்று நடுங்க வைத்தது.

'விருப்பக் கூட்டணி' என்று அழைக்கப்படும் யுக்ரேனின் நட்பு நாடுகள், யுக்ரேனுக்கு போருக்குப் பிந்தைய பாதுகாப்புப் படையை உருவாக்குவதாக உறுதியளித்த மறுநாளே இது நடந்தது.

"யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அது ரஷ்யாவில் மட்டுமே" என ரஷ்ய அதிபர் புதின் கூறியதும் பார்வையாளர்கள் மீண்டும் கைதட்டினர்.

"இந்த சந்திப்புக்கான சிறந்த இடம் ரஷ்யா தலைநகரான மாஸ்கோதான்" என அவர் கூறினார்.

ரஷ்யாவிற்கு வெளியே புதினின் இந்த முன்மொழிவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. மாறாக அது நகைச்சுவையாக கருதப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

ஆனால் பல வழிகளில் யுக்ரேன் உடனான போர் மீதான புதினின் நிலைப்பாட்டை இது எடுத்துரைக்கிறது. "ஆம் எங்களுக்கு அமைதி வேண்டும். ஆனால் அது எங்கள் விதிகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். இதை நீங்கள் நிராகரித்தால் பின் அமைதி இருக்காது" என்பதுதான் அது.

புதினின் இந்த சமரசமற்ற நிலைப்பாடு, பல்வேறு விஷயங்களுக்கு வழிவகுக்கிறது.

புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார்.

முதலாவதாக, யுக்ரேனில் ரஷ்யப் படைகள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாக புதின் நம்புகிறார்.

2வது ராஜதந்திர வெற்றி. இந்த வாரத்தில் புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார். இவர்கள் புன்னகையுடன் உரையாடிக்கொண்டார்கள். சீனா, இந்தியா மற்றும் வட கொரியா உடன் ரஷ்யா நல்ல உறவுடன் இருக்கிறது என்பதை காண்பிப்பதே இதன் நோக்கமாகும்.

அதன்பிறகு அமெரிக்கா. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதினை அலாஸ்காவில் நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

யுக்ரேன் போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கு நாடுகள் தோல்வியடைந்துவிட்டன, என்பதற்கான ஆதாரமாக இந்த நிகழ்வை உள்நாட்டில் புதினின் ஆதரவாளர்கள் விவரித்தனர்.

முன்னதாக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப், புதினுக்கு நிறைய எச்சரிக்கைகள் மற்றும் காலக்கெடுக்களை விதித்தார். ரஷ்யா அமைதியை நிலைநாட்டவில்லை என்றால் நிறைய தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

ஆனால் டிரம்ப் அந்த எச்சரிக்கைகளை தொடரவில்லை. இதுவே ரஷ்யாவிற்கு நம்பிக்கை ஏற்படுத்த மற்றொரு காரணமாக அமைந்தது.

டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை புதின் நிராகரித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை புதின் நிராகரித்தார்.

டிரம்பின் அமைதியை நிலைநாட்டும் முயற்சியை புதின் பொதுமேடையிலேயே பாராட்டியுள்ளார். எனினும் அவர் டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை நிராகரித்தார். மேலும் யுக்ரேன் மீதான போரில் சமரசம் செய்வதற்கான எந்த முனைப்பையும் அவர் காட்டவில்லை.

அப்படியானால் இதில் அமைதிக்கான வாய்ப்பு எங்கே இருக்கிறது?

புதின் சமீபத்தில் தன்னால் பாதையின் முடிவில் வெளிச்சத்தை பார்க்க முடிவதாக குறிப்பிட்டார்.

அதாவது ரஷ்யா ஒருபுறமும் யுக்ரேன் மற்றும் ஐரோப்பா (ஓரளவுக்கு அமெரிக்காவும்) வெவ்வேறு பாதைகளில், வெவ்வேறு சாலைகளில், வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் இருப்பதாக தோன்றுகிறது.

யுக்ரேனும் ஐரோப்பாவும் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் சண்டையை நிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் போருக்கு பிந்தைய ஊடுருவலை எதிர்கொள்ளும் அளவிற்கு யுக்ரேனிய ராணுவம் பலமாக இருப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

சுரங்கத்தின் முடிவில் வெளிச்சத்தை பார்க்க முடிவதாக புதின் கூறியது, என்னைப் பொறுத்தவரை யுக்ரேனில் ரஷ்யாவின் வெற்றியைதான் அவர் குறிப்பிடுகிறார் என்கிறார் ரோசென்பெர்க். இன்னும் சொல்லப்போனால் ரஷ்யாவுக்கு சாதகமான புதிய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதை அவர் குறிப்பிடுகிறார் என்றார்.

அமைதியை பொறுத்தவரை இந்த இருவேறு பாதைகளும் எங்கு, எப்போது ஒன்றிணையும் என்பது பற்றி சொல்ல முடியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2kndwv411wo

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு

4 weeks 1 day ago

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு

07 Sep, 2025 | 04:05 PM

image

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் லிபரல் ஜனநாயக கட்சியின் பிளவை தடுக்கும் நோக்கில் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி கட்சியின் தலைவர் பொறுப்பிலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் பாராளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அவரது எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி மேலவையில் பெருபான்மையை பெறவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் தேர்தலில் மக்களவையில் அவரது எல்டிபி கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டுமென அவரது கட்சியின் உறுப்பினர்கள் வற்புறுத்தி வந்தனர். 

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கூட்டத்தில் அவருக்கு எதிராக கருத்து எழுந்தது. இருப்பினும் ஜப்பானுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, அதனால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பதவி விலக அவர் மறுத்து விட்டார்.

இந்த சூழலில் ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 141 என இருந்த எல்டிபி கூட்டணியின் எண்ணிக்கையை 122 ஆக குறைந்தது. மேலவையில் மொத்த எண்ணிக்கை 248. பெரும்பான்மையை நிரூபிக்க 3 ஆசனங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அதில் தோல்வி கண்டுள்ளது எல்டிபி கூட்டணி. இந்த நிலையில் தான் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக ஷிகெரு இஷிபா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

https://www.virakesari.lk/article/224456

பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம்

4 weeks 1 day ago

பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம்

07 Sep, 2025 | 03:51 PM

image

பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார். 

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் இந்த முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம், பிரிட்டனின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.

பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்கு 1980 இல் பிறந்த ஷபானா, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.

2010 இல், பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.

கட்சியில் பல முக்கிய நிழல் பதவிகளை வகித்த ஷபானா, 2024 தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, நீதித்துறை செயலாளராகவும், லார்ட் சான்சலராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது, உள்துறைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

https://www.virakesari.lk/article/224459

உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா

4 weeks 1 day ago

உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா

image_09a35fa73e.jpg

உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரேன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது.

இதுநாள் வரையில் கீவ் நகரில் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தவிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் ஒரு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதை கீவ் நகரின் நிர்வாக தலைவரும் உறுதி செய்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது. அதில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த இரண்டு வார காலத்தில் உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட மிக தீவிர ட்ரோன் தாக்குதலில் இது இரண்டாவதாக அமைந்துள்ளது. தீ பற்றிய அரசு தலைமையக அலுவலக கட்டிடத்தில் உக்ரேன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வசிப்பதாக தகவல்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவில் உள்ள பிரையன்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை சிதைக்கும் வகையில் எண்ணெய் குழாய் வழிதடத்தை ட்ரோன் மூலம் உக்ரேன் தாக்கியது. இதை உக்ரைனின் ட்ரோன் படை தளபதி ராபர்ட் ப்ரோவ்டி உறுதி செய்துள்ளார்.

அண்மையில் உக்ரேன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரேன் வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 2022-ல் தொடங்கிய ரஷ்யா - உக்ரேன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. இந்த சூழலில் உக்ரேன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை தொடர்கிறது.

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உக்ரேன்-மீது-800-ட்ரோன்களை-ஏவிய-ரஷ்யா/50-364136

காசா நகரிலுள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்ற நடவடிக்கை!

1 month ago

250906-gaza-displaced-ha-dea87e.webp?res

காசா நகரிலுள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்ற நடவடிக்கை!

காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

குறிப்பாக காசா நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்ற நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை தெற்கு பகுதி நோக்கி செல்லுமாறு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இஸரேல் இராணுவம் வேகமாக முன்னேறி வருகின்றது.

இஸ்ரேலிய இராணுவத்தினர் கடந்த பல வாரங்களாக காசாவின் வடக்கு நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன.

காசா நகரம் ஒரு ஹமாஸ் கோட்டை என்றும், அதைக் கைப்பற்றுவது மிகவும் அவசியம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.

யுத்ததிற்கு முன்னதாக காசா நகரில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசித்துவந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது எஞ்சியுள்ள மக்களை காசாவில் உள்ள கான் யூனிஸின் நியமிக்கப்பட்ட கடலோரப் பகுதிக்கு செல்லுமாறும் அவ்வாறு அங்கு தப்பி செல்லும் மக்களுக்கு உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் தங்குமிட வசதிகளை பெற முடியும் என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதியளித்தார்.

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று முன்தினம் மாத்திரம் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்த வண்ணம் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் “நரகத்தின் வாயில்கள்” திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://athavannews.com/2025/1446288

வட கொரியாவின் அடுத்த தலைவர் இந்த சிறுமியா? - கிம் ஜோங் உன்னின் வாரிசாக முன்னிறுத்தப்படுபவர் யார்?

1 month ago

Kim Ju Ae, daughter of North Korean leader Kim Jong Un, attends a military parade to mark the 75th founding anniversary of North Korea's army, at Kim Il Sung Square in Pyongyang, North Korea February 8, 2023, in this photo released by North Korea's Korean Central News Agency (KCNA).

பட மூலாதாரம், KCNA

படக்குறிப்பு, கடந்த இரண்டு வருடங்களாக வட கொரியாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளில் கிம் ஜூ ஏ (இது 2023 இல் எடுக்கப்பட்டது) தோன்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

கட்டுரை தகவல்

  • Flora Drury

  • BBC News

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் முதல் பலதரப்பு சந்திப்பு ஊடக கவனத்தைப் பெறுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்தது.

ஆனால் அவர் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த, நேர்த்தியான உடையணிந்த ஒரு இளம் பெண் தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் வட கொரியத் தலைவரின் மகள் கிம் ஜு ஏ.

தென் கொரியாவின் உளவு நிறுவனத்தின்படி, மிஸ் கிம் தான் அவரது தந்தையின் அரசியல் வாரிசு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள், அவருடைய சரியான வயது உள்பட அதிகமாக பொதுவெளியில் இல்லை. நமக்கு இதுவரை தெரிந்தது என்ன?

picture released by the Korean Central News Agency on September 2, 2025, shows North Korean leader Kim Jong Un walking (top), and being greeted next to his daughter Kim Ju Ae by Director of the General Office of the Chinese Communist Party (CCP) Cai Qi (bottom left) and Chinese Foreign Minister Wang Yi (bottom right), after his arrival in Beijing, China.

பட மூலாதாரம், KCNA

படக்குறிப்பு, கிம் ஜூ ஏ (வலது ஓரம்) தனது தந்தையுடன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

குடும்பம் குறித்த ரகசியத்தைக் காக்கும் கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்னுக்கும் அவரது மனைவி ரி சோல்-ஜூவுக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் மிஸ் கிம் இரண்டாவது குழந்தை என்று நம்பப்படுகிறது. கிம்மின் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. கிம் தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். திருமணமாகி சிறிது காலம் ஆன பிறகுதான் தனது மனைவியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர்களின் ஒரே பிள்ளையாக கிம் ஜு ஏ-வின் இருப்பு மட்டுமே வடகொரிய நாட்டின் தலைமையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிம்மின் வேறு எந்த பிள்ளையும் பொதுவில் காணப்படவில்லை.

முதன்முதலாக கிம் ஜு ஏ பற்றிய செய்தி ஒரு எதிர்பாராத இடத்தில் இருந்து தான் வந்தது. கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன், 2013ஆம் ஆண்டு தி கார்டியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வட கொரியாவுக்கான ஒரு பயணத்தின் போது 'அவர்களின் குழந்தை ஜூ ஏ-யை' தான் கையில் ஏந்தியதாகக் கூறினார்.

அதன் பிறகு கிம் ஜு ஏ பற்றி அதிகம் அறியப்படவில்லை. நவம்பர் 2022 அவர் தன் தந்தையுடன் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ஏவுதல் நிகழ்வில் தோன்றினார்.

அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அவர் தபால் தலைகளில் தோன்றினார். கிம் ஜாங் உன்னின் 'மதிப்பிற்குரிய' (Respected) மகள் என்று விவரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கான விருந்துகளில் கலந்து கொண்டார்.

'மதிப்பிற்குரியவர்' என்ற சொல், வட கொரியாவின் மிகவும் முக்கியமான நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிம் ஜு ஏ-வின் தந்தையின் விஷயத்தில், 'எதிர்காலத் தலைவர்' என்று கிம் ஜாங் உன்னின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர் 'மதிப்பிற்குரிய காம்ரேட்' என்று குறிப்பிடப்பட்டார்.

A photo released by the official North Korean Central News Agency (KCNA) shows North Korean leader Kim Jong Un (L) and his daughter Kim Ju Ae (3-R) standing on a beach during a ceremony marking the opening of the Wonsan Kalma Coastal Tourist Zone in Wonsan, North Korea, 24 June 2025 (issued 26 June 2025).

பட மூலாதாரம், KCNA

படக்குறிப்பு, வட கொரியாவின் வொன்சன் சுற்றுலா ரிசார்ட்டின் திறப்பு விழாவில் கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் தோன்றினார்.

'கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு'

இதே காலகட்டத்தில் தான், தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS), அந்தச் சிறுமியைப் பற்றிய சில கூடுதல் விவரங்களை தென் கொரிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியதாக ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

கிம் ஜு ஏ-வுக்கு குதிரை சவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சல் பிடிக்கும் என்றும், தலைநகர் பியோங்யாங்கில் உள்ள வீட்டிலேயே அவர் கல்வி பயின்றதாகவும் தேசிய புலனாய்வு சேவை கூறியது. அந்த சமயத்தில் கிம் ஜு ஏ-வுக்கு சுமார் 10 வயது இருக்கும் என்றும் என்ஐஎஸ் தெரிவித்தது.

ஜனவரி 2024 வாக்கில், என்ஐஎஸ் மற்றொரு முடிவுக்கு வந்தது. அந்தச் சிறுமி கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு என்றும், ஆனால் அவருடைய தந்தையின் இளம் வயது உள்பட பல காரணிகள், இந்த விஷயத்தில் இன்னும் தாக்கம் செலுத்துகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அப்போதிருந்து, பல சந்தர்ப்பங்களில் கிம் ஜு ஏ தனது தந்தையுடன் தோன்றியுள்ளார். ஐசிபிஎம் ஏவுதல்கள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில், மேடைகளின் மையத்தில் கிம் ஜாங் உன் அருகில் நின்று, மூத்த ராணுவத் தளபதிகளிடமிருந்து ராணுவ மரியாதைகளைப் பெற்றார்.

ஆனால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) அவர் வட கொரியாவிற்கு வெளியே முதல் முறையாகக் காணப்பட்டார். மேலும் இந்தப் பயணம் அவர் தனது தந்தைக்குப் பிறகு வட கொரிய தலைவராக பதவியேற்கக்கூடும் என்ற ஊகங்களை அதிகம் தூண்டியுள்ளன.

1948 முதல் வட கொரியாவை ஆண்டு வரும் கிம் குடும்பத்தினர், தங்கள் குடிமக்களிடம் தாங்கள் ஒரு புனிதமான ரத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும் என்றும் கூறுகிறார்கள்.

இருப்பினும், இதுவரை ஒரு பெண்ணால் கூட வழிநடத்தப்படாத ஆணாதிக்க அரசு என்று வட கொரியாவின் மீது உள்ள பிம்பத்தைச் சமாளிக்க, கிம் தனது மகளை இந்த கட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஊகங்கள் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cewnlqd8qqxo

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

1 month ago

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

06 Sep, 2025 | 01:23 PM

image

காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது நேற்று வெள்ளிக்கிழமை (05) ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சனிக்கிழமை(இன்று) அதிகாலை வரை தொடர்ந்தது.

பாலஸ்தீனிய வீடுகள் மீது பாரிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

கசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் "நரகத்தின் வாயில்கள்" திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/224365

பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா!

1 month ago

download-11.jpg?resize=275%2C183&ssl=1

பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா!

பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் தனது பொருளாதார ஆலோசனையை வலுப்படுத்த பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஆலோசகர்கள் குழு மறுவடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு ஆலோசகரின் மறுசீரமைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவின் சுயாதீன ஆலோசகர் ரெய்னர் சரியான வரி செலுத்தத் தவறியதன் மூலம் விதிமுறைகளை மீறியதாக தீர்ப்பளித்த பின்னர் , அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446250

ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய வல்லரசுகளை எதிர்த்து நின்ற வியட்நாம் போராளி 'ஹோ சி மின்'

1 month ago

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹோ சி மின் (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • ரெஹான் ஃபாசல்

  • பிபிசி இந்தி

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வியட்நாமின் வரலாற்றில் மிகவும் பிரபலமான தலைவரான ஹோ சி மின் 1890-ல் பிறந்தார், அவரது நாட்டு மக்கள் பெரும்பாலோருக்கு அவர் "அங்கிள் ஹோ" என்று அறியப்பட்டார்.

அவர் தனது 21 வயதில் தனது நாட்டை விட்டு வெளியேறினார். அடுத்த 30 ஆண்டுகள் அவர் வியட்நாமுக்குத் திரும்பவில்லை.

பாரிசில் வசித்தபடியே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மாஸ்கோ, சீனா ஆகிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்தார்.

ஸ்டான்லி கார்னோவ் தனது 'வியட்நாம் ஒரு வரலாறு' என்ற புத்தகத்தில், "1920களில், அவரது ஆசிய தோற்றத்தை மக்கள் கவனிக்கவில்லை என்றால், அவர்கள் அவரை ஓர் இளம் பிரெஞ்சு அறிவுஜீவி என்று தவறாக நினைத்திருப்பார்கள். அவர் உயரத்தில் குள்ளமாகவும் மிகவும் ஒல்லியாகவும் இருந்தார். அவரது கறுப்பு முடியும் கருப்பு கண்களும் மக்களை கவர்ந்தன. " என்று எழுதுகிறார்.

மேலும் "அவர் மோண்ட்மார்ட்ரே பகுதியில் உள்ள ஹோட்டலில் ஒரு அழுக்கு பிடித்த அறையில் வசித்து வந்தார். பழைய புகைப்படங்களை பழுது பார்த்து பெரிதாக்குவது அவரது தொழில். அவர் கையில் எப்போதும் ஷேக்ஸ்பியர் அல்லது எமிலி ஜோலாவின் புத்தகம் இருக்கும். அவர் ஒரு அமைதியான மனிதர், ஆனால் பயந்த மனிதர் அல்ல. நாடகம், இலக்கியம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களின் கூட்டங்களில் சரளமாக பிரெஞ்சு மொழியில் தனது கருத்துகளை வெளிப்படுத்துவார். அவர் மேற்கின் செல்வாக்கை உள்வாங்கியிருந்தார், ஆனால் அதன் ஆதிக்கத்திற்கு தயாராக இல்லை." என்றும் குறிப்பிடுகிறார்.

ஹோ சி மின் கொல்கத்தா வருகை

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2007 ஜூலை 4-ம் தேதி அப்போதைய வியட்நாம் பிரதமர் நுயென் தான் ஜங் மற்றும் அவரது மனைவி த்ரான் தான் கீம் ஆகியோர், கொல்கத்தாவில் உள்ள மறைந்த வியட்நாம் அதிபர் ஹோசிமின் சிலைக்கு அருகில் நிற்கின்றனர்.

1941-ம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து திடீரென அனைத்து தோழர்களுக்கும் உடனடியாக கட்சி அலுவலகத்தை அடைய வேண்டும் என்று தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கின என்பது ஒரு பிரபலமான கதை.

கம்யூனிஸ்ட் தலைவர் மோஹித் சென் தனது சுயசரிதையான 'எ டிராவலர் அண்ட் தி ரோட், தி ஜர்னி ஆஃப் அன் இந்தியன் கம்யூனிஸ்ட்' (பயணியும், பாதையும் : ஒரு இந்திய கம்யூனிஸ்டின் வாழ்க்கைப் பயணம்) புத்தகத்தில், "நாங்கள் அலுவலகத்தை அடைந்தபோது, சிரித்த கண்களும் மெல்லிய தாடியும் கொண்ட ஒரு ஒல்லியான தோற்றம் கொண்ட மனிதர் எங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பின்னர் அணியத் தொடங்கிய ஆடைகளை அவர் அப்போதே அணிந்திருந்தார். அவர் காலில் ரப்பர் செருப்பு அணிந்திருந்தார். அவர் பெயர் ஹோ சி மின். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச பாரிஸ் செல்வதாகக் கூறினார். கிரேட்-ஈஸ்டர்ன் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், அங்குள்ள ஒரு பணியாளரின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடைந்தார்." என்று எழுதுகிறார்.

வியட்நாமுக்கு சுதந்திரம் பெற்று தந்தார்

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1965-ல் வியட்நாம் பிரதமர் பாம் வான் டோங்குடன் ஹோ சி மின்

ஹோ சி மின்னை குறிப்பிடும் போதெல்லாம், எதிர்ப்பு, புரட்சிகர உணர்வு போன்ற சொற்கள் தானாகவே நினைவுக்கு வருகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் ஒருபுறம் மதிக்கப்பட்ட ஒரு நபராகவும், மறுபுறம் எதிரிகளால் வெறுக்கப்பட்ட நபராகவும் இருந்தார்.

நீண்ட காலமாக காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த தனது நாட்டிற்கு அவர் சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜாக்சன் ஹார்டி தனது 'ஹோ சி மின் ஃப்ரம் எ ஹம்பிள் வில்லேஜ் டு லீடிங் எ நேஷன்ஸ் ஃபை ஃபார் ஃப்ரீடம்' (ஹோசிமின் - சாதாரண கிராமத்தில் இருந்து, விடுதலைப் போராட்டத்தின்‌ தலைமை வரை) என்ற புத்தகத்தில், "மத்திய வியட்நாமில் ஒரு சிறிய கிராமத்திலிருந்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் தலைவராக உருமாறிய அவரது பயணம், போராட்டம் மற்றும் தைரியத்தின் கதை மட்டுமல்ல, உலகின் வலிமையான சக்திகளால் முன்வைக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்ளத் துணிந்த ஒரு நபரின் கதையும் கூட. அவர் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், அவர்களை ஆதரித்த வல்லரசான அமெரிக்காவையும் தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்தார்." என்று எழுதுகிறார்.

ஆரம்பத்தில் புறக்கணித்த அமெரிக்கா

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வியட்நாம் போரில் ஹெலிகாப்டர்களை அதிக அளவில் அமெரிக்க துருப்புகள் பயன்படுத்தின.

ஆகஸ்ட் 29, 1945 அன்று, வியட்நாமின் சுதந்திரத்திற்காக போராடிய வியட் மின் எனும் குழு ஹனோயை ஜப்பானிடமிருந்து விடுவித்தது.

செப்டம்பர் 2-ம் தேதி வியட்நாம் என்ற சுதந்திர நாடு நிறுவப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்கா பங்கேற்றது. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் வியட்நாமை மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைப்பதை ஆதரிக்கவில்லை.

வியட்நாமை ஐ.நா. பாதுகாப்பின் கீழ் அல்லது தற்காலிகமாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க அவர் தயாராக இருந்தார்.

ஆகஸ்டின் போட்ஸ்டாம் ஒப்பந்தத்தின்படி, வியட்நாம் வடக்கு மற்றும் தெற்கு என்று பிரிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பனிப்போர் தொடங்கிய போது, அமெரிக்காவின் பார்வையில், ஹோ சி மின் ஒரு தேசியவாத தேசபக்தர் அல்ல, ஒரு உறுதியான கம்யூனிஸ்டாகவும், 'மாஸ்கோவின் முகவராகவும்' இருந்தார்.

வி.கே.சிங் தனது 'ஹோ சி மின் அண்ட் ஹிஸ் வியட்நாம்' (ஹோ சி மின் மற்றும் அவரது வியட்நாம்) என்ற புத்தகத்தில், "மார்ச் 27, 1947 ட்ரூமன் கோட்பாடு, உள்நாட்டு கிளர்ச்சி, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது கம்யூனிச ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தப்படும் ஒவ்வொரு நாட்டிற்கும் அமெரிக்கா எந்த வகையிலும் உதவும் என்றது. மே 8, 1950 அன்று, அமெரிக்கா வியட்நாமில் பிரான்சுடன் ஒரு மூலோபாய உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. செப்டம்பர் 1953 -ல், அமெரிக்க நாடாளுமன்றம் 900 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அங்கீகரித்தது. 1954 வாக்கில், வியட்நாமில் பிரான்சின் போருக்கான செலவில் 80 சதவீதத்தை அமெரிக்கா ஏற்கத் தொடங்கியது." என்று எழுதுகிறார்.

1954 -ல், பிரான்ஸ் தியென் பியென் ஃபூவில் (வியட்நாமில் உள்ள ஒரு நகரம்) தோல்வியை சந்தித்தது. 7500 பிரெஞ்சு வீரர்கள் கொல்லப்பட்டனர், 10,000 பேர் போர்க் கைதிகளாக பிடிபட்டனர். ஜூலை 19, 1954 -ல், பிரான்ஸ்-வியட்நாம் போர் ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ் முடிவுக்கு வந்தது.

தன்னை விட பல மடங்கு பெரிய சக்திகளுக்கு எதிராக போர்களை நடத்தி வெல்ல முடியும் என்பதை வியட்நாம் கற்றுக்கொண்டது.

அமெரிக்கா தனது முழு பலத்தையும் பிரயோகித்தது

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வியட்நாம் போரில் அமெரிக்க வீரர்கள் (கோப்புப் படம்)

ஜெனீவா ஒப்பந்தங்களைத் தொடர்ந்து வியட்நாமை ஒன்றிணைப்பதற்கான பாதையைத் தேடுவதற்குப் பதிலாக, அமெரிக்க அதிபர் ஐசனோவரும் அவரது வெளியுறவுச் செயலர் ஜான் போஸ்டர் டல்லெஸும் பிராந்தியத்தில் கம்யூனிசம் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு தெற்கு வியட்நாமை ஒரு தனி நாடாக உருவாக்க முடிவு செய்தனர்.

வியட்நாமில் நேரடியாக அமெரிக்கத் தலையீட்டைத் தொடங்கிய முதல் அமெரிக்க அதிபர் ஐசனோவர் ஆவார். அதைத் தொடர்ந்து, கென்னடி, லிண்டன் ஜான்சன் மற்றும் ரிச்சர்ட் நிக்சன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்தது. ஜனவரி 27, 1965 அன்று, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் கெவர்ஸ் பண்டி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் மெக் நமரா இருவரும் அதிபர் ஜான்சனிடம் வியட்நாமில் மட்டுப்படுத்தப்பட்ட ராணுவத் தலையீடு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று கூறினர்.

இப்போது அமெரிக்காவுக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று அது இந்தப் போரில் முழுமையாகக் குதிக்க வேண்டும் அல்லது அங்கிருந்து முழுமையாக வெளியேற வேண்டும். பிப்ரவரி 6, 1965 அன்று, ஜான்சன் 'ஆபரேஷன் ஃபிளேமிங் டார்ட்' க்கு ஒப்புதல் அளித்தார்.

அமெரிக்கப் படைகள் பலமாக இருந்தபோதிலும், வடக்கு வியட்நாமின் ராணுவம் அவர்களுக்கு எதிராக கடுமையாக சண்டையிட்டது.

ஹோ சி மின்னின் வாழ்க்கை வரலாற்றில் டேவிட் லேன் பாம் , "ஹோ சி மின்னின் மூலோபாய தலைமையும் வடக்கு வியட்நாமின் கம்யூனிச ஆட்சியும் வியட்காங்கிற்கு (ஆயுதக் குழு) சண்டையைத் தொடர தேவையான வளங்களையும் கருத்தியல் ஆதரவையும் வழங்கின. அமெரிக்கர்கள் விரைவிலேயே தாங்கள் ஒரு ராணுவப் படையை எதிர்த்துப் போராடவில்லை, மாறாக மக்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை உணர்ந்தனர். இந்தப் போர் அமெரிக்காவிற்கு ஒரு புதைகுழியானது, அங்கு வெற்றிக்கு வாய்ப்பே இல்லை. அமெரிக்க ராணுவம் வியட்நாமில் ஹோ சி மின்னின் துருப்புகளிடம் இருந்து எதிர்ப்பை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கவில்லை, மாறாக போரின் அறநெறி மற்றும் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு அவர்களது சொந்த நாட்டிலேயே ஒரு போர்-எதிர்ப்பு இயக்கம் வேகம் பெற்று வந்தது." என்று குறிப்பிடுகிறார்.

கொரில்லா போர் முறைக்கு முக்கியத்துவம்

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்டு வரும் வியட்நாம் பெண்கள் (கோப்புப் படம்)

போர்க்காலம் முழுவதும், ஹோ சி மின் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்த தயாராக இருக்கும் அசாதாரண திறனை வெளிப்படுத்தினார்.

வில்லியம் ஜே.டைக் தனது 'ஹோ சி மின் எ லைஃப்' (ஹோ சி மின் : ஒரு வாழ்க்கை ) என்ற நூலில், "போரின் போது வடக்கு வியட்நாமின் உறுதியைப் பேணுவதிலும், தேசியவாதம் மற்றும் சோசலிசம் என்ற பதாகையின் கீழ் வியட்நாம் மக்களை ஒன்றிணைப்பதிலும் ஹோவின் தலைமை முக்கிய பங்கு வகித்தது. மோதல் குறித்த அவரது புரிதல் மற்றும் கடினமான காலங்களில் அவரது உறுதியான தலைமை ஆகியவை அவரது வெற்றிக்கு முக்கிய காரணிகளாக இருந்தன." என்று எழுதுகிறார்.

ஹோ சி மின்னின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் அவர் கொரில்லாப் போருக்கு அளித்த முக்கியத்துவமாகும். வியட்நாம் போன்ற காடுகள் சூழ்ந்த நாட்டில் வழக்கமான போர் நடத்த முடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். கிராம மக்களுடன் வியட்காங் வீரர்கள் கலந்து அமெரிக்க வீரர்களை திடீரென தாக்கி காடுகளுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் மறைந்து விடுவது என்பதே அவரது உத்தியாக இருந்தது. அமெரிக்க வீரர்களுக்கு இந்த வகை போருக்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கவில்லை.

சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான ஒத்துழைப்பு

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சோவியத் தலைவர்களுடன் ஹோ சி மின்

ஹோ சி மின்னின் வெற்றிக்கு மற்றொரு காரணம் சோவியத் யூனியனும் சீனாவும் வழங்கிய முழு ராணுவ மற்றும் அரசியல் ஆதரவாகும். 1957 -ல், ஹோ சி மின் சீனா சென்றார். முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் தனது 'இதயத்திலிருந்து இதயத்திற்கு' என்ற நூலில் , "ஹோ பெய்ஜிங் சென்ற போது, மா சே துங் முதல் சூ என் லாய் மற்றும் லியு ஷாவோ சி வரை சீனாவின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைவர்களும் அவரை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றனர். செருப்பு அணிந்து கொண்டு விமானத்தில் இருந்து இறங்கினார். அவர் வெளியில் இருந்து மிகவும் மென்மையாகத் தோன்றலாம், ஆனால் அவரது எலும்புகள் இரும்பைப் போல வலுவாக இருந்தன. 1953 -ல் ஸ்டாலின் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு மாஸ்கோவில் அவரை ஹோ சி மின் சந்தித்தார்" என்று குறிப்பிடுகிறார்.

"இந்தக் கூட்டத்தில், ஸ்டாலின் இரண்டு நாற்காலிகளைச் சுட்டிக்காட்டி, ஹோவிடம் கேட்டார், இந்த நாற்காலிகளில் ஒன்று தேசியவாதிகளுக்கும் மற்றொன்று சர்வதேசியவாதிகளுக்கும் சொந்தமானது. இவற்றில் எதில் நீங்கள் அமர விரும்புகிறீர்கள்? 'தோழர் ஸ்டாலின், நான் இரண்டு நாற்காலிகளிலும் அமர விரும்புகிறேன்' என்று ஹோ பதிலளித்தார். ஹோவின் புத்திசாலித்தனத்தை ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டினார். ஹோ சி மின் மாஸ்கோவிலிருந்து பெய்ஜிங் வழியாக ரயிலில் ஹனோய்க்குத் திரும்புகையில், தன்னுடன் வந்த மா சே துங் மற்றும் சூ என் லாய் ஆகியோரிடம் இந்த சம்பவத்தை விவரித்தபோது, ஸ்டாலினிடமிருந்து எதையோ பெறுவது சிங்கத்தின் வாயிலிருந்து இறைச்சியைப் பறிப்பது போன்றது என்று அவர்கள் கூறினர்." என்று வில்லியம் டைக் எழுதுகிறார்.

79 வயதில் மரணம்

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1958-ல் ஹோசிமின் இந்தியா வந்த போது, அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆகியோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்கும் காட்சி

ஹோ சி மின் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் பெரும் அபிமானி. நேரு பிரதமராக இருந்தபோது இரண்டு முறை ஹோவை சந்தித்தார். 1954-ல் ஹனோயில் ஒரு முறையும், 1958-ல் டெல்லியில் ஒரு முறையும், ஹோ சி மின் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்தபோது சந்தித்தார்.

அதே பயணத்தின் போது, ஹோ சி மின்னை இந்தியாவின் பிரபல எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம் சந்தித்தார்.

தனது சுயசரிதையான ராசிடி டிக்கெட்டில் அவர், "ஹோ சி மின் என் நெற்றியில் முத்தமிட்டு, 'நாம் இருவரும் வீரர்கள். நீங்கள் பேனாவால் சண்டையிடுகிறீர்கள். நான் வாளால் போரிடுகிறேன்" என்று கூறியதாக குறிப்பிடுகிறார்.

1969-ம் ஆண்டின் முற்பகுதியில் அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த நோய் தீவிரமடைந்தது, செப்டம்பர் 2, 1969 அன்று காலை 9:45 மணிக்கு ஹோ சி மின் தனது 79 வயதில் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார்.

வியட்நாம் முழுவதும் துக்கத்தில் மூழ்கியது, ஆனால் அவரது வாரிசுகள் தங்கள் நாட்டின் மண்ணில் ஒரு வெளிநாட்டவர் வாழும் வரை ஹோ சி மின்னின் கொள்கைகளைத் தொடருவோம் என்று கூறினர்.

அவரது இறுதிச் சடங்கில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். வியட்நாமுக்கு 121 நாடுகள் இரங்கல் செய்திகளை அனுப்பின. அமெரிக்கா ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு நாள் வியட்நாம் மீது குண்டு வீசுவதை நிறுத்தியது.

அவர் இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1975- ல் அமெரிக்கா அவரது நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgj14l5jqqqo

ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது

1 month ago

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது.

இந்திய வம்சாவளி டீசல் பல வழிகள் வழியாக உக்ரைனை அடைகிறது. கணிசமான பகுதி ருமேனியாவிலிருந்து டானூப் நதியில் டேங்கர் டெலிவரி மூலம் வருகிறது.

சுத்தந்த பத்ரா எழுதியது

புதுப்பிக்கப்பட்டது:ஆகஸ்ட் 30, 2025 11:39 IST

எங்களை பின்தொடரவும்

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது.

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது.

ஜூலை 2025 இல், இந்தியா மற்ற சப்ளையர்களை முந்தி உக்ரைனின் மிகப்பெரிய டீசல் மூலமாக மாறியுள்ளது , இது இறக்குமதியில் 15.5 சதவீதமாகும். உக்ரைனிய எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான நாஃப்டோரினோக்கின் கூற்றுப்படி, தினசரி ஏற்றுமதி சராசரியாக 2,700 டன்கள் ஆகும், இது இந்த ஆண்டு இந்தியாவின் அதிகபட்ச மாதாந்திர ஏற்றுமதி புள்ளிவிவரங்களில் ஒன்றாகும். இந்த கூர்மையான உயர்வு ஜூலை 2024 இல் இருந்து ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிக்கிறது, அப்போது இந்தியா உக்ரைனின் டீசல் தேவைகளில் 1.9 சதவீதத்தை மட்டுமே வழங்கியது.

அமெரிக்க வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் முரண்பாடு

அரசியல் ரீதியாக பரபரப்பான தருணத்தில் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. புது தில்லி ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதை மேற்கோள் காட்டி, வாஷிங்டன் சமீபத்தில் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதித்தது . இதில் உள்ள முரண்பாடு வியக்கத்தக்கது. மாஸ்கோவுடனான எரிசக்தி உறவுகளுக்காக அமெரிக்கா இந்தியாவைத் தண்டிக்கும் அதே வேளையில், இந்திய எரிபொருள் கியேவின் போர்க்கால பொருளாதாரத்தைத் தக்கவைக்க உதவுகிறது.

மேலும் படிக்கவும்

அமெரிக்காவின் வரி அழுத்தத்தை மீறி, செப்டம்பரில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா 20% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விநியோக வழிகள்

இந்திய வம்சாவளி டீசல் பல வழிகள் வழியாக உக்ரைனை அடைகிறது. ஒரு குறிப்பிடத்தக்க பகுதி ருமேனியாவிலிருந்து டானூப் வழியாக டேங்கர் டெலிவரி மூலம் வருகிறது. கூடுதலாக, துருக்கியின் மர்மாரா எரெக்லிசி துறைமுகத்தில் உள்ள OPET முனையம் வழியாக சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன, இது பகுதி தடைகள் இருந்தபோதிலும் தொடர்ந்து இயங்கும் பாதையாகும். சிக்கலான புவிசார் அரசியல் நிலைமைகளின் கீழ் கூட இந்தியா தன்னை நம்பகமான சப்ளையராக நிலைநிறுத்திக் கொள்ள இந்த வழிகள் உதவியுள்ளன.

2025 ஆம் ஆண்டில் உயரும் பங்கு

ஜனவரி முதல் ஜூலை 2025 வரை, உக்ரைனின் டீசல் இறக்குமதியில் இந்தியா 10.2 சதவீதத்தை வழங்கியது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.9 சதவீதத்திலிருந்து ஐந்து மடங்கு அதிகமாகும். இந்தியாவின் பங்கு இப்போது பல ஐரோப்பிய கூட்டாளிகளை விட அதிகமாக இருந்தாலும், அதன் இயற்பியல் ஏற்றுமதி அளவுகள் கிரீஸ் மற்றும் துருக்கியை விட இன்னும் பின்தங்கியுள்ளன. இருப்பினும், ஜூலை மாத புள்ளிவிவரங்கள் விகிதாசார அடிப்படையில் இந்தியாவை அனைத்து போட்டியாளர்களையும் விட முன்னணியில் வைக்கின்றன.

மேலும் படிக்கவும்

மலிவான ரஷ்ய எண்ணெயிலிருந்து இந்தியாவின் 17 பில்லியன் டாலர் எண்ணெய் சேமிப்பை அமெரிக்க கட்டணங்கள் அழிக்க அச்சுறுத்துகின்றன.

ஜூலை மாத இறக்குமதி அமைப்பு

ஜூலை மாதத்தில் இந்தியா முதலிடத்தில் இருந்தபோதிலும், மற்ற சப்ளையர்கள் முக்கியமானவர்களாகவே உள்ளனர். கிரீஸ் மற்றும் துருக்கியிலிருந்து டீசல் கணிசமாக இருந்தது, இருப்பினும் ஸ்லோவாக்கியாவின் விநியோகங்கள் இரண்டையும் விட அதிகமாக இருந்தன. போலந்து மற்றும் லிதுவேனியாவின் ஆர்லன் குழுமத்தின் விநியோகங்கள் மொத்த இறக்குமதியில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டிருந்தன. இதற்கிடையில், போலந்து மற்றும் டென்மார்க் வழியாக அனுப்பப்பட்ட பிரீமின் வசதிகளிலிருந்து ஸ்வீடிஷ் ஏற்றுமதிகள், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து சாதனை அளவை எட்டின, ஜூலை மாத இறக்குமதியில் 4 சதவீத பங்களிப்பை அளித்தன.

https://www.financialexpress.com/world-news/india-becomes-ukraines-top-diesel-supplier-in-july-as-trump-slaps-punitive-tariffs-on-delhi-over-russian-oil-imports/3961937/

பென்டகனை போர்த் திணைக்களமாக மாற்றுவதற்கு தீர்மானம்  - ட்ரம்ப்

1 month ago

பென்டகனை போர்த் திணைக்களமாக மாற்றுவதற்கு தீர்மானம்  - ட்ரம்ப்

05 Sep, 2025 | 09:25 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்புத் திணைக்களமான பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற தீர்மானித்துள்ளார்.

மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

அமெரிக்க ஆயுதப்படைகளை மேற்பார்வையிடும் பென்டகன், போர்த் திணைக்களத்தின் வாரிசு ஆகும், இது முதன்முதலில் 1789 இல் அமைச்சரவை அளவிலான நிறுவனமாக நிறுவப்பட்டு 1947 வரை நீடித்தது.

நிர்வாகத் திணைக்களத்தை உருவாக்கும் பொறுப்பு அமெரிக்க காங்கிரஸிடம் உள்ளது. அதாவது திணைக்களத்தின் பெயரை உத்தியோகபூர்வமாக மாற்ற ஒரு திருத்தம் தேவைப்படும்

https://www.virakesari.lk/article/224251

Checked
Mon, 10/06/2025 - 20:03
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe