உலகச் செய்திகள்

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் மரணதண்டனை ஆயுளாகக் குறைப்பு

Mon, 09/10/2017 - 14:34
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் மரணதண்டனை ஆயுளாகக் குறைப்பு
 

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டைனையாகக் குறைத்து, குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோத்ரா

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

இந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு, கடந்த 15 ஆண்டுகளாக விசாரனை நடைபெற்றுவருகிறது. அதேபோல, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின்னர், குஜராத் கலவரம் தொடர்பான வழக்கும் தனியே பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதில், ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாகக் கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டும், 63 பேர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலைசெய்யப்பட்டனர். குற்றம் சுமத்தப்பட்ட 31 பேரில் 11 பேருக்கு மரணதண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன. 

இதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பலர், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தனர். இந்த மேல்முறையீடு மீதான விசாரணை, இன்று குஜராத உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த விசாரணைக்கான தீர்ப்பில், 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/india/104450-godhra-riot-death-sentence-of-11-commuted-to-life-imprisonment.html

Categories: merge-rss, yarl-world-news

சீனாவின் ‘கழுதைப் பசி’க்கு பலியாகும் ஆப்ரிக்க கழுதைகள்

Mon, 09/10/2017 - 07:04
சீனாவின் ‘கழுதைப் பசி’க்கு பலியாகும் ஆப்ரிக்க கழுதைகள்
சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும் கழுதைகள்; காரணம் என்ன?

சீனாவில் ஆரோக்கிய உணவு பொருட்களை உருவாக்கவும், பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி செய்யவும் கழுதைகளின் தோல்கள் தேவைப்படுவதால் தற்போது அதற்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்ரிக்கக் கழுதைகள்நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டுள்ள.

சீனாவில், கழுதையின் இறைச்சி பிரபலமான உணவாகவும் இருக்கிறது .

ஆனால் சீனாவில் உள்ள கழுதைகளின் எண்ணிக்கையில் பெரியளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், கழுதையின் தோலுக்காக சீனாவை தவிர்த்து பிற நாடுகளில் அதனை பெறும் சூழலுக்கு கழுதை இறைச்சி விநியோகஸ்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ஆஃப்ரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காரணம், கழுதைகள் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வியலில் போக்குவரத்து மற்றும் விவசாயத்திற்காக பயன்பட்டு வருகின்றன.

அதிலும், குறிப்பாக அந்நாட்டிலுள்ள ஏழ்மையான சமூகங்களில் கழுதைகள் மிகவும் முக்கியமான விலங்குகள்.

சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும் கழுதைகள்; காரணம் என்ன?

கடந்த சில ஆண்டுகளில் மட்டும், ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் கழுதையின் விலை இரட்டிப்பாகியுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திருடர்கள் கழுதைகளை திருடுவதால், குடும்பங்கள் புதிய கழுதையை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

கழுதையை இழந்த அந்தோனி

கென்யாவில் தண்ணீர் விநியோகிக்கும் தொழில் செய்து வரும் அந்தோனி மெளப் வனியமாவுக்கு 29 வயதாகிறது.

சுமார் நான்கு ஆண்டுகளாக கார்லோஸ் என்ற கழுதையை தன்னோடு வைத்திருந்தார் அவர்.

தொழிலும் நல்லபடியாக சென்றுகொண்டிருந்தது.

'' தலைநகருக்கு வெளியே உள்ள பகுதியில் இடமும், வீடு ஒன்றையும் வாங்கினேன், பள்ளிக்கான கட்டணங்களை செலுத்தியது மட்டுமின்றி என்னுடைய குடும்பத்தையும் நன்கு பார்த்து கொண்டேன்'' என்கிறார் இரு பிள்ளைகளுக்கு அப்பாவான அந்தோணி.

சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும் கழுதைகள்; காரணம் என்ன?

கென்யா தலைநகர் நைரோபிக்கு வெளியே இருக்கும் ஒங்காட்டா ரோங்கை என்ற கிராம வாழ்வியல் சூழலில் அந்தோணியும், அவரது கழுதையும் ஒரு அங்கமாக இருந்தனர்.

''ஒரு காலை நேரத்தில் நான் விழித்தெழுந்த போது என்னுடைய கழுதை காணாமல் போயிருந்தது. ஊர் முழுக்க சுற்றித் திரிந்த பிறகு, அதன் தோல் உரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடைந்ததை கண்டுபிடித்தேன்'' என்று தான் மிகவும் நேசித்த கழுதையின் மரணத்தை பற்றி விவரிக்கையில் அந்தோணியின் கண்களிலிருந்து நீர் வடிகிறது.

தற்போது, வேறொரு கழுதை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ள அந்தோணி, தண்ணீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீல நிற பிளாஸ்டிக் ஜெர்ரி கேன்களை சுமந்து செல்லும் வண்டியை இழுப்பதற்காக பயன்படுத்துகிறார்.

தொழில் நன்றாக இருக்கும் நாளில் கூட, அவர் தினசரி சம்பாதிக்கும் மூன்று அல்லது நான்கு டாலர்களில் பாதி தொகையை கழுதையின் உரிமையாளருக்கு வழங்கிவிட வேண்டும்.

புதிய கழுதை ஒன்றை வாங்க பணமில்லாமல் சிரமப்படுகிறார் அந்தோணி.

சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும் கழுதைகள்; காரணம் என்ன?

துன்பம்

கென்யாவில் கழுதைகளின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு , அந்நாட்டில் மூன்று கழுதை இறைச்சி வெட்டும் கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதிகரித்துள்ளது.

அந்நிறுவனங்கள் தலா, ஒரு நாளைக்கு சுமார் 150 விலங்குகளை வெட்டி, அதன் இறைச்சியை பேக் செய்து குளிரூட்டி மற்றும் அதன் தோலை ஏற்றுமதிக்காக பதப்படுத்தும் திறன் கொண்டவை.

நைவாஷாவில் உள்ள 'ஸ்டார் பிரில்லியண்ட்' என்ற கழுதை தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில், சமீபத்தில் கூடத்திற்கு கொண்டுவரப்பட்ட கழுதைகள் தட்டையான உலோக தராசுகள் மீது தரதர இழுத்து எடை பார்க்கப்படுகின்றன. நேரடி எடை கொண்டு அவை விற்கப்படுகின்றன.

கழுதையின் இறைச்சி மற்றும் தோல் பதப்படுத்துவதற்காக எடுக்கப்படுவதற்கு முன் ஒரு துப்பாக்கியை கொண்டு அதன் தலையில் சுடப்படுகிறது.

சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும்

''முன்பு கழுதைகளுக்கு சந்தை இருக்கவில்லை. அப்போது, மக்கள் தங்களிடமிருந்த மாடுகளை விற்று வந்தனர். ஆடுகளை விற்று குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை கட்டினார்கள்,'' என்கிறார் ஸ்டார் பிரில்லியண்ட் என்ற அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜான் கரியூகி.

''ஆனால், தற்போது மாடுகளை காட்டிலும் கழுதைகளை பொதுமக்கள் அதிகளவில் விற்று வருகிறார்கள் என்பதை நான் நேரிடையாக பார்க்கிறேன்.'' என்கிறார் அவர்.

சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும் கழுதைகள்; காரணம் என்ன?

''சீனாவினால்தான் தற்போது கழுதைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு அதனால் பலருக்கு லாபம் கிடைக்கின்றது. முன்பு, கழுதைகளால் லாபம் எதுவும் கிடையாது.'' என்கிறார் அவர்.

சீன வியாபாரிகள் இந்த நடைமுறையை கண்காணிக்கிறார்கள். அதாவது, கழுதைகள் முறையாக பேக் மற்றும் பதப்படுத்தப்படுகின்றனவா என்று.

கழுதை சித்ரவதைக்கு எதிராக குரல்கள்

கழுதையின் தோல்கள் கொதிக்க வைக்கும்போது, பழுப்புநிறத்திலான ஜெலட்டின் என்ற ஒருவகை வழுவழு பொருளை உற்பத்தி செய்கிறது. அது, சீனாவின் பிரபலமான ஆரோக்கிய உணவுகள் மற்றும் பாரம்பரிய மருந்துகளை தயார் செய்யும் எஜியோ என்ற பொருட்களை தயாரிக்க அத்தியாவசிய மூலப்பொருளாக இருக்கிறது.

ஆனால் கழுதைகள் நடத்தப்படும் விதம் விமர்சனங்களுக்குள்ளாகிறது.

இந்த கழுதைகள் கொல்லப்படுவதற்காக காத்திருக்கும் நிலையில், மிகவும் மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றன. இவ்விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்களையும் பிரிட்டனைச் சேர்ந்த கழுதை நல அறக்கட்டளை ஒன்றும், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த 'ஆக்ஸ்பெக்கர்ஸ்' என்ற அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் புலனாய்வு செய்தியாளர்கள் சிலரும் கண்டறிந்துள்ளனர்.

கழுதைகளின் தோலை எளிதாக உரிப்பதற்கு ஏதுவாக, அவை பட்டினி போடப்படுகின்றன என்றும் , முனை மழுங்கிய ஆயுதங்களால் அடித்துக் கொல்லப்படுகின்றன என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் சர்வதேச அழுத்தம் இப்போது தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாகக் கூறுகிறார் , இந்த கழுதை உடல் பொருட்கள் வர்த்தகத்தை, அது ஒழுங்குபடுத்தப்படும் வரை நிறுத்த பிரசாரத்தை முன்னெடுக்கும் 'டாங்க்கி சேன்க்ச்சுவரி' என்ற அமைப்பைச் சேர்ந்த மைக் பேக்கர்.

உகாண்டா, தான்சானியா, போட்ஸ்வானா, நைஜர், புர்க்கினோ ஃபாஸோ மாலி மற்றும் செனகல் போன்ற நாடுகள் , சீனா தங்கள் நாடுகளிலிருந்து கழுதை உடல் பொருட்களை வாங்குவதற்குத் தடை விதித்துள்ளன.

 

http://www.bbc.com/tamil/global-41544758

Categories: merge-rss, yarl-world-news

தங்கையை பொலிட்பீரோ உறுப்பினராக்கினார் கிம் ஜாங்-உன்

Mon, 09/10/2017 - 06:49
தங்கையை பொலிட்பீரோ உறுப்பினராக்கினார் கிம் ஜாங்-உன்
வட கொரிய தலைவருடன் அவரின் தங்கை கிம் யோ-ஜாங்படத்தின் காப்புரிமைEPA Image captionவட கொரிய தலைவரின் தங்கை கிம் யோ-ஜாங் (வட்டமிடப்பட்டுள்ளவர்)

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது சகோதரி, கிம் யோ-ஜோங்கை, நாட்டின் அதி உயர் முடிவெடுக்கும் குழுவான, தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக நியமித்துள்ளார்.

மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளான கிம் யோ-ஜாங், தொழிலாளர் கட்சியின் கொள்கைகளை வகுக்கும் குழுவில் உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ளார்.

அவர், தனது அத்தை வகித்து வந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

30 வயதாகும் கிம், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, கட்சியின் மூத்த அதிகாரி என்றும் குறிப்பிடப்பட்டார்.

இரண்டாம் உலகப்போரிற்கு பிறகு, 1948 இல், வட கொரியா என்ற நாடு நிறுவப்பட்டது முதல், கிம் குடும்பத்தினர் அந்நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.

பல பொது நிகழ்ச்சிகளில் தனது சகோதரருடன் பங்கேற்றுள்ள கிம் யோ-ஜாங், கிம் ஜாங்-உன்னின் பொது பிம்பத்துக்குக் காரணமானவர் என்று கருதப்படுகிறார்.

மேலும், வட கொரியாவின் பிரசாரம் மற்றும் கிளர்ச்சித் துறையின் துணை இயக்குநராக இருக்கும் யோ-ஜாங், ஏற்கனவே செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார்.

வட கொரியாவில் நடந்த மனித உரிமை மீறல்களுக்காக, கிம் அமெரிக்காவின் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று, டஜன் கணக்கான உயர் அதிகாரிகளின் இடமாறுதல் குறித்த கட்சி நிகழ்ச்சியில், தலைவர் கிம், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கிம் யோ-ஜாங்கை பதவி உயர்த்தி உள்ளது என்பது, அந்நாட்டின் மீது, கிம் குடும்பத்தினருக்கு உள்ள இரும்பு பிடிக்கு சான்றாக பார்க்கப்படும் என்கிறார், பிபிசி செய்தியாளர் டானி சாவேஜ்.

கடந்த ஆண்டு நடந்த, அரிதான அக்கட்சியின் மாநாட்டில், கிம் யோ-ஜாங்கிற்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்ட போது, நாட்டின் தலைமைப்பதவிகளில் முக்கிய பதவியை அவர் ஏற்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை `தீய அதிபர்` என்று விமர்சித்த வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரீ யாங்-ஹூ, முழு வாக்குகள் உள்ள உறுப்பினராக பொலிட்புரோவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ரீ, சமீபத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா மீது போர் பிரகடனம் செய்வதாக குற்றம் சாட்டியதோடு, அதிபர் தொடர்ந்து தனது `அபாயகரமான` சொல்லாட்சியை தொடர்ந்தால், வட கொரியாவின் `தவிர்க்க முடியாத` இலக்காக அமெரிக்கா மாறிவிடும் என்றார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது டிவிட்டர் பதிவில், வட கொரியாவை பொறுத்த வரையில், `ஒன்றே ஒன்றுதான் பலனளிக்கும் ` என்று பதிவிடுவதற்கு சற்று முன்பு, அமைச்சர் ரீ இந்த கருத்தை கூறியிருந்தார்.

http://www.bbc.com/tamil/global-41547954

Categories: merge-rss, yarl-world-news

போர்க்குற்றவாளிகளின் புகலிடம் அவுஸ்திரேலியா

Sun, 08/10/2017 - 19:43

sfb310.jpg

போர்க்குற்றவாளிகளின் புகலிடம் அவுஸ்திரேலியா

http://epaper.virakesari.lk/

Categories: merge-rss, yarl-world-news

தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்

Sun, 08/10/2017 - 17:14
தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்

 

 
தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்
 

தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர் நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பிரதமர் லேய் ச்சின் டேயின் உத்தரவின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை. கம்போடியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிடமிருந்து இலங்கை வங்கியின் தனியார் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பணத்தில் சுமார் 30 இலட்சம் ரூபா வை கடந்த நான்காம் திகதி கணக்கின் உரிமையாளர் மீளப் பெற்றுள்ளதுடன் மீண்டும் 8 மில்லியன் ரூபாவை கடந்த ஆறாம் திகதி மீளப் பெறுவதற்கு முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் பணத்தை மீளப் பெறுவதற்காக குறித்த வங்கிக்கு வந்த மற்றுமொருவரை கைது செய்வதற்காக வங்கியின் சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

Categories: merge-rss, yarl-world-news

தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்

Sun, 08/10/2017 - 17:14
தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்

 

 
தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்
 

தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர் நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பிரதமர் லேய் ச்சின் டேயின் உத்தரவின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை. கம்போடியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிடமிருந்து இலங்கை வங்கியின் தனியார் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பணத்தில் சுமார் 30 இலட்சம் ரூபா வை கடந்த நான்காம் திகதி கணக்கின் உரிமையாளர் மீளப் பெற்றுள்ளதுடன் மீண்டும் 8 மில்லியன் ரூபாவை கடந்த ஆறாம் திகதி மீளப் பெறுவதற்கு முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் பணத்தை மீளப் பெறுவதற்காக குறித்த வங்கிக்கு வந்த மற்றுமொருவரை கைது செய்வதற்காக வங்கியின் சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

Categories: merge-rss, yarl-world-news

சே குவேரா பிடிபட்டு கொல்லப்பட்ட 50 ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிப்பு

Sun, 08/10/2017 - 16:41
சே குவேரா பிடிபட்டு கொல்லப்பட்ட 50 ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிப்பு

பிரபல மார்க்ஸிஸ்ட் புரட்சியாளரான, சே குவெரா, பிடிபட்டு கொல்லப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் கியூபாவில் நினைவு தினம் ஒன்று அனுசரிக்கப்பட்டது.

சே குவெராபடத்தின் காப்புரிமைAFP Image captionகியூபர்கள் பலருக்கு நாயகன் சே குவெரா

கியூபப் புரட்சியில் முடிவைத் தந்த மோதல் ஒன்றில் கிளர்ச்சியாளர்களுக்கு சே குவெரா தலைமை தாங்கிய நகரான, சாண்ட்டா கிளாராவில் இந்த நிகழ்வுகள் நடந்தன.

 

சே குவெராவின் சிலை மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் குழுமினர்.

தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வில் கியூப அதிபர் ராவுல் காஸ்ட்ரோ மற்றும் பல பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

அவரது கல்லறையில் ஒரு வெள்ளை ரோஜாவை ரவுல் காஸ்ட்ரோ வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சே குவெரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோபடத்தின் காப்புரிமைAFP Image captionகியூபப் புரட்சியின் தளகர்த்தர்கள் - சே குவெரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ

சே குவேரா பொலிவியாவில் 1967ம் ஆண்டு இதே தினத்தில் படையினரால் பிடிக்கப்பட்டு ஒரு நாள் பின்னதாக கொல்லப்பட்டார்.

அவரது உடல் கியூபாவுக்கு 1997ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட்து.

எர்னெஸ்டோ சே குவேரா குறித்த கருத்துணர்வுகள் இன்னும் பிளவுபட்டுள்ளன.

அவர் சுய தியாகத்துக்கும், உறுதிப்பாட்டுக்கும் ஒரு முன் மாதிரியாக இருந்தார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவரது விமர்சகர்களோ அவரை கொடூரமானவர் என்று கருதுகின்றனர்.

http://www.bbc.com/tamil/global-41545660

Categories: merge-rss, yarl-world-news

கேட்டலோன் சுதந்திரம்: வாக்கெடுப்பால் எந்தப் பலனும் இருக்காது என்கிறார் ஸ்பெயின் பிரதமர்

Sun, 08/10/2017 - 12:30
கேட்டலோன் சுதந்திரம்: வாக்கெடுப்பால் எந்தப் பலனும் இருக்காது என்கிறார் ஸ்பெயின் பிரதமர்
ஸ்பெயின் பிரதமர் மடியானோ ரஜோய்படத்தின் காப்புரிமைEPA Image captionகேட்டலோனியாவின் சுதந்திர அறிவிப்பால் எந்த விளைவும் இருக்காது.

கேட்டலோனியா தனது சுதந்திரம் குறித்து விடுக்கும் எந்த ஒரு பிரகடனத்துக்கும் எந்த ஒரு பலனும் இருக்காது என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் எச்சரித்துள்ளார்.

மேலும் , கேட்டலோனியா பிரதேசத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் தன்னாட்சி உரிமையை இடை நிறுத்தப்படும் சாத்தியக்கூறையும் தான் நிராகரிக்கவில்லை என்று அவர் கூறினார்.

'எல் பெய்ஸ்' செய்தித்தாளுக்கு வழங்கிய பேட்டியொன்றில், இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண எடுக்கப்படும் எந்த ஒரு மத்யஸ்த முயற்சியையும் ரஜாய் நிராகரித்தார்.

முன்னதாக, ஆயிரக்கணக்கான மக்கள், ஸ்பெயினில் ஒற்றுமை கோரி பேரணி நடத்தினர்.

கடந்த ஞாயிறு அன்று கேட்டலன் சுந்திரத்திற்காக நடந்த பிரச்சனைக்குரிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் இது நடந்தது.

செழிப்பான வட-கிழக்கு பகுதியான கேட்டலோனியாவில், உள்ள 23 இலட்சம் மக்களில், வாக்குப்பதிவில் பங்கேற்ற 90 சதவிகிதம் பேர், சுதந்திரம் வேண்டும் என்றே வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பில் 43 சதவிகித ஓட்டுக்கள் பதிவாகின.

இந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாகவும், சில வாக்குப்பெட்டிகள் ஸ்பெயின் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவிற்கு ஸ்பெயின் நீதிமன்ற அளித்திருந்த தடையினால், வாக்களிக்க வருபவர்களை காவல்துறையினர் கலைக்க முயன்ற போது, கிட்டத்தட்ட 900 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் 33 காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர்.

"சுதந்திரத்துக்கான எந்த ஒரு பிரகடனமும் எங்கும் இட்டுச்செல்லாது என்பதை அரசு உறுதி செய்யும்" , என்று 'எல் பெய்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ராஜாய் கூறினார்.

தன்னாட்சி பெற்ற ஒரு பிரதேசத்தின் நிர்வாகத்தில் தலையிட தேசிய நாடாளுமன்றத்தை அனுமதிக்கும் ஸ்பெயினின் அரசியல் சட்ட 155வது பிரிவைப் பிரயோகிக்க அவர் தயாராக இருக்கிறாரா என்று கேட்டதற்கு, " சட்டத்துக்குட்பட்ட எந்த வழிமுறையையும் பயன்படுத்துவதை தான் நிராகரிக்கவேயில்லை" என்றார் ரஜாய்.

கேட்டலோனியாவில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடக்கும் முன்பாக, அங்கு நிலை நிறுத்தப்பட்ட கூடுதல் போலிசாரை, இந்த நெருக்கடி சூழல் தீரும்வரை அங்கேயே இருத்தி வைக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

அதிகரித்துவரும் இந்த அரசியல் நெருக்கடி காரணமாக தேசியத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த தான் உத்தரவிடப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

ஸ்பெயின் நீதிமன்றம், திங்களன்று நடைபெறுவதாக இருந்த, கேட்டலன் நாடாளுமன்ற கூட்டத்திற்கு தடை விதித்துள்ளதை தொடர்ந்து, கேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டியமோனின் உரை, செவ்வாயன்று, உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த முறை கேட்டலன் நாடாளுமன்றம் கூடும் போது, ஒருதலைபட்சமாக, அது சுதந்திரத்தை அறிவிக்கும் என்ற ஊகம் உள்ளது.

இந்நிலையில், கேட்டலோனியாவின் முன்னாள் தலைவரான அர்தர் மாஸ் , ஃபினான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறுகையில், `கேட்டலோனியா, தனியாக பிரிந்து செல்லுவதற்கான உரிமையை பெற்றுவிட்டது என்றாலும் கூட, அது இன்னும் உண்மையான சுதந்திரத்திற்கு தயாராகவில்லை` என்றார்.

மெட்ரிட் சாலைகளில் குவிந்துள்ள மக்கள்படத்தின் காப்புரிமைAFP

வாருங்கள் பேசுவோம்

சனிக்கிழமையன்று ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒற்றுமையான ஸ்பெயினுக்காக குரல் எழுப்பினர்.

கேட்டலன் நகரான பார்சிலோனா உள்ளிட்ட நகரங்களில் நடந்த ஆர்பாட்டங்களில், அரசியல் தலைவர்களுக்கு இடையான பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வெள்ளைநிற ஆடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ''அரசியல்வாதிகளைவிட மிகவும் மேன்மையானது ஸ்பெயின் நாடு`' , `'வாருங்கள் பேசுவோம்'` உள்ளிட்ட பல்வேறு வாசகங்களடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அரசியல் நிலையற்ற தன்மையால், கேட்டலனில் உள்ள வணிக நிறுவனங்கள், அங்கிருந்து கிளப்புவது குறித்த அறிவிப்பை தொடர்ந்து அளிக்கின்றன.

http://www.bbc.com/tamil/global-41541817

Categories: merge-rss, yarl-world-news

2 மாதங்களுக்கு முன் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை, கால் கடலில் மீட்பு

Sun, 08/10/2017 - 10:29
2 மாதங்களுக்கு முன் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை, கால் கடலில் மீட்பு

 

இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை கடலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவமொன்று டென்மார்கில் இடம்பெற்றுள்ளது.

kim.jpg

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிம் வால் எனும் பெண் ஊடகவியலாளர்  நீர் மூழ்கிக் கப்பலில் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டபோது காணாமல்போயிருந்தார்.

இந்நிலையில் குறித்த பெண் ஊடகவியலாளரின் தலை தற்போது கடலுக்கடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக டென்மார்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் டென்மார்க் பொலிஸார் தெரிவிக்கையில்,

451E5D3300000578-4957990-Jens_M_ller_Jen

பெண் ஊடகவியலாளரின் தலை ஒரு பையில் இருந்தது. அதே பையில் இரண்டு கால்களும் இருந்துள்ளன. அவரின் ஆடைகளைக் கொண்டுள்ள மற்றுமொரு பையும் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பீட்டர் மேட்சனுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில், பீட்டரின் கடல் சாகசங்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதுவதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்திருந்தார் பெண் ஊடகவியலாளர். இந்நிலையில், 11 நாள்கள் கழித்து தலை மற்றும் கால்களற்ற அவரது உடல், டென்மார்கின் கோபென்ஹெகன் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

4500C0BA00000578-4945776-image-a-4_15070

கிம் வாலைக் கொலை செய்து, அவரின் உடலைச் சிதைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பீட்டர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

கோபென்ஹேகன் அருகே உள்ள கடல் பகுதியில் பல தடவைகள் சுழியோடிகள் தேடுதல்களை மேற்கொண்ட நிலையிலேயே இவ்வாறு பைகள் மீட்கப்பட்டுள்ளன.  அவை மேலே மிதந்து வராமல் இருக்க கனம் மிகுந்த உலோகத் துண்டுகளுடன் கட்டி கடலுக்குள் வீசப்பட்டிருந்தது.

அந்தத் தலையில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், அது கிம் வாலின் தலைதான் என்று தடயவியல் பல்மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார் .

கிம் வாலின் விலா எலும்பு மற்றும் பிறப்பு உறுப்பில் அவரது மரணம் நிகழ்ந்த சமயம் அல்லது மரணத்திற்கு சற்று கழித்து கத்தியால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 21 ஆம் திகதி அவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர்  தூரத்தில் கடலுக்குள் தற்போது தலையும், காலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர் இறந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஒரு பெண்ணின் தலை வெட்டப்படும் காணொளியொன்று, பீட்டருக்கு சொந்தமானது என்று சந்தேகிக்கப்படும் ஹார்ட் டிரைவ் ஒன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

4500C0A700000578-4945776-image-a-2_15070

இதேவேளை, கோபென்ஹேகன் கடற்கரையில் கிம் வாலை இறக்கி விட்டதாக முதலில் தெரிவித்த பீட்டர், பின்னர் தன்னுடன் கப்பலில் இருந்தபோது தலையில் ஏற்பட்ட ஒரு காயத்தால் அவர் இறந்துவிட்டதால், கடலுக்குள்ளேயே அவரைப் புதைத்துவிட்டதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25471

Categories: merge-rss, yarl-world-news

பரந்து கிடக்கும் ரோஹிஞ்சா முகாம்: ஆளில்லா விமானம் எடுத்த அதிர்ச்சிக் காணொளி

Sun, 08/10/2017 - 10:08

 

திகைக்கவைக்கும் இந்தக் காணொளியை ஓர் ஆளில்லா விமானம் எடுத்துள்ளது. நிகழந்துவரும் அகதி நெருக்கடி எவ்வளவு பெரியது என்பதைக் காட்டி உதவிகள் கோரும் நோக்கத்தோடு இந்தக் காணொளியை பேரிடர் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது.

BBC

Categories: merge-rss, yarl-world-news

வடகொரியாவை வழிக்குக் கொண்டு வர 'ஒன்றே ஒன்றுதான் சரிப்பட்டு வரும்' - ட்ரம்ப் ஆவேசம்

Sun, 08/10/2017 - 06:42
வடகொரியாவை வழிக்குக் கொண்டு வர 'ஒன்றே ஒன்றுதான் சரிப்பட்டு வரும்' - ட்ரம்ப் ஆவேசம்

 

 
trump2709220f

டொனால்டு ட்ரம்ப் | கோப்புப் படம்.

எவ்வளவு முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பயனற்று போய்விட்டது வடகொரியாவுக்கு எதிராக ஒன்றேயொன்றுதான் இனி சரிப்பட்டு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால் அந்த 'ஒன்றேயொன்று' என்னவென்று அவர் தெளிவுபடுத்தவில்லை.

ட்வீட் ஒன்றில் ட்ரம்ப் இது பற்றி கூறிய போது, ''அதிபர்களும் அவர்களது நிர்வாகங்களும் 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேசி வருகின்றனர்.

உடன்படிக்கைகள் மேற்கொண்டனர், பெரிய தொகைகள் அளிக்கப்பட்டது. ஆனால் இவையெல்லம் ஒன்றும் வேலைக்கே ஆகவில்லை, ஒப்பந்தங்கள் அதன் மை காயும் முன்பே மீறப்படுகின்றன. அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களை முட்டாளாக்குகின்றனர். எனவே மன்னிக்கவும், வடகொரியாவுக்கு எதிராக ஒரேயொரு விஷயம்தான் சரிப்பட்டு வரும்'' என்றார்.

ஆனால், ட்ரம்ப் கூறும், 'சரிப்பட்டு வரக்கூடிய ஒரே விஷயம்' ராணுவ நடவடிக்கைதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள், ஹைட்ரஜன் குண்டு சோதனை ஆகியவை உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவும், வடகொரியாவும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கி அறிக்கை விடுத்துக் கொண்டிருப்பது வழக்கமாகியுள்ளது.

http://tamil.thehindu.com/world/article19823114.ece?homepage=true

Categories: merge-rss, yarl-world-news

லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் கைது

Sat, 07/10/2017 - 17:28
லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் கைது

image-1.png
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் ஓருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தேசிய இயற்கை அருங்காட்சியகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்கென்சிங்டனின் அருங்காட்சியக வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர் ஓருவரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் நபர் ஓருவரை மடக்கிபிடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பொதுமக்களிற்கு சிறிய காயங்கள் எற்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

http://globaltamilnews.net/archives/44281

Categories: merge-rss, yarl-world-news

அமெரிக்காவில் ஐ.எஸ் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு: ஓராண்டு கழித்து வெளியாகும் செய்தி

Sat, 07/10/2017 - 16:11
அமெரிக்காவில் ஐ.எஸ் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு: ஓராண்டு கழித்து வெளியாகும் செய்தி

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் மற்றும் ரங்க ரயில் அமைப்பு மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஹாதி தாக்குதல், ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு எஃப்.பி.ஐ அதிகாரியின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நெரிசல் மிகுந்த டைம்ஸ் சதுக்கத்தில் எப்போதும் பாதுகாப்பு பலமாக இருக்கும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநெரிசல் மிகுந்த டைம்ஸ் சதுக்கத்தில் எப்போதும் பாதுகாப்பு பலமாக இருக்கும்

ஐ.எஸ். அமைப்பின் பெயரால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக, அமெரிக்காவில் வசிக்கும் கனடா நாட்டைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் எல் பஹ்னாசாவி, 19, பாகிஸ்தானில் வசிக்கும் அமெரிக்கரான தல்ஹா ஹாரூன் (19), மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ரஸ்ஸல் சாலிக், 37, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் ஒருவர் "அடுத்த செப்டம்பர் 11'' தாக்குதலை நடத்த விரும்பியதாக தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அரட்டையடிக்க பயன்படும் செயலிகளைப் பயன்படுத்தி அந்த மூவரும் 2016-ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் போல நடித்து அவர்களிடம் தொடர்பு கொண்ட ஒரு எஃப்.பி.ஐ அதிகாரியால் இந்தத் திட்டம் கடந்த ஆண்டே முறியடிக்கப்பட்டபோதிலும், இந்த விவரங்கள் கடந்த வெள்ளியன்றுதான் வெளியிடப்பட்டன.

அப்துல்ரஹ்மான் எல் பஹ்னாசாவி கடந்த மே 2016-லும், ஹாரூன் செப்டெம்பர் 2016-லும், சாலிக் ஏப்ரல் 2017-லும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூ யார்க்கின் சுரங்க ரயில் அமைப்புகள் கைது செய்யப்பட்டவர்களின் தாக்குதல் இலக்காக இருந்துள்ளது.படத்தின் காப்புரிமைREUTERS Image captionநியூ யார்க்கின் சுரங்க ரயில் அமைப்புகள் கைது செய்யப்பட்டவர்களின் தாக்குதல் இலக்காக இருந்துள்ளது.

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஹாரூன் மற்றும் பிலிப்பைன்ஸில் கைது செய்யப்பட்ட சாலிக் ஆகிய இருவரும் இன்னும் அமெரிக்கா அழைத்து வரப்படவில்லை.

2010-இல் டைம்ஸ் சதுக்கத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பெட்ரோல் மற்றும் சில வேதிப்பொருட்களை வைத்து ஃபைசல் ஷாசாத் என்னும் நபர் வைத்த வெடிபொருள் செயல்படாமல் போனதால் அவரின் திட்டம் தோல்வியில் முடிந்தது. பின்பு கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

http://www.bbc.com/tamil/global-41537257

Categories: merge-rss, yarl-world-news

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8000த்திற்கும் அதிகமான சிறுவர்கள் பலி

Sat, 07/10/2017 - 07:58
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8000த்திற்கும் அதிகமான சிறுவர்கள் பலி

 

சர்வதேச நாடுகளின்  பல பகுதிகளில் நடந்து வரும்  யுத்தத்தினால் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8000த்திற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டனியோ குவட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.

Local_News.jpg

பல்வேறு நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப்போர் மற்றும் ஆயுததாரிகளின் தாக்குதல்களினால் உயிரிழந்த சிறுவர்கள் தொடர்பிலான அறிக்கை நேற்றைய தினம் குவட்டர்ஸினால் வெளியிடப்பட்டது.

குறித்த அறிக்கையில் கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மாத்திரம் சுமார் 3,512 சிறார்கள் உயரிழந்துள்ளதாக குறிப்பிடப்படடுள்ளது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த குவட்டர்ஸ்,

59d85c2be94b0-IBCTAMIL.jpg

"சிறுவர்களை ஆயுதம் ஏந்த வைத்து போர்களுக்கு அனுப்புவது மிகவும் வேதனைக்குரியது அத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டை விட சிறுவர்களை போரில் ஈடுபடுத்தும் எண்ணிக்கை இருமடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது"  என தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/25434

Categories: merge-rss, yarl-world-news

ஜெர்மனியில் சேவியர் புயலுக்கு 4 பேர் பலி

Sat, 07/10/2017 - 05:49
ஜெர்மனியில் சேவியர் புயலுக்கு 4 பேர் பலி

 

 
treepng

ஜெர்மனியில் வீசிய சேவியர் புயலுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஜெர்மனியில் ஹம்பெர்க் நகரில் சேவியர் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனனர். பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் பல இடங்களில் ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வனவிலங்கு சாரணலயங்கள் பல சேவியர் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்லதால் அவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது என்றும் மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்றும் ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/world/article19809099.ece

ஜேர்மனிய செய்திகளின்படி 7 பேர் பலியாகியுள்ளனர்.

Categories: merge-rss, yarl-world-news

அகன்ற மத்திய ஆசியா – சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வு

Fri, 06/10/2017 - 20:58
அகன்ற மத்திய ஆசியா – சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வு

 

 

muslim-militant-300x200.jpgபூகோள மட்டத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இதனை எதிர்ப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மூலோபாயங்களை வகுத்துள்ள போதிலும் தொடர்ந்தும் சீனா தனது பூகோள அரசியல் இலக்கை அடைவதில் குறியாகவே உள்ளது.

சீனாவின் இந்த நகர்வானது ஜி20 உச்சி மாநாட்டின் போது உறுதிப்படுத்தப்பட்டது. அதாவது இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ICBM பரீட்சார்த்தத்தைக் கண்டித்து கூட்டுப் பிரகடனம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போது அதனை சீனா எதிர்த்தது.

அமெரிக்காவின் மூலோபாயக் கூட்டாளியான இந்தியா மற்றும் அமெரிக்காவின் நகர்வுகளை முறியடிக்கும் நோக்குடன் சீனாவானது பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தில் பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளதாக அண்மையில் பென்ரகன், சீனா மீது குற்றம் சுமத்தியதாக பிரதான ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் அரேபியக் கடலில் குவடார் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இது குளிர்ச்சியான நீரைக் கொண்ட ஓர் ஆழ்கடல் துறைமுகமாக விளங்குகிறது.

ஆப்கானின் எல்லையிலுள்ள தனது எல்லைப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக சீனாவானது தனது படையினரை ஆப்கானிஸ்தானின் படக்சான் மாகாணத்தில் உள்ள, வக்ஹான் மாவட்டத்தில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் பென்ரகன் வெளியிட“டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, சீனாவானது இந்தியாவைச் சூழ்ந்து கொள்ள முற்படுவதாகவும் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளதாக பென்ரகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சிறிலங்கா, பங்களாதேஸ், மியான்மார் போன்ற நாடுகளின் சில துறைமுகங்களை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் குழப்பத்தை உருவாக்க முற்படுவதாகவும் பென்ரகனின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் இக்குற்றச்சாட்டை சீன அதிகாரிகள் மறுத்திருந்தனர்.

டிஜிபோட்டியிலுள்ள தனது வெளிநாட்டு கடற்படைத் தளத்தைப் பலப்படுத்துவதற்காகவே தான் தனது படைகளை அனுப்பியுள்ளதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டில் தனது இராணுவப் பிரசன்னத்தை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் பாரியதொரு நகர்வாக இது காணப்படுகிறது.

டிஜிபோட்டியில் அமைக்கப்பட்டுள்ள சீனாவின் இராணுவத் தளமானது கண்காணிப்பு, அமைதி காப்புப் பணி, மனிதாபிமான உதவிகள் போன்ற பல்வேறு பணிகளை ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும்.

அத்துடன் இராணுவ ஒத்துழைப்பு, கூட்டுப் படை நடவடிக்கைகள், சீனாவின் வெளிநாட்டு நடவடிக்கைகள் மற்றும் அவசர மீட்புப் பணிகளைப் பாதுகாத்தல், அனைத்துலக மூலோபாய கடல்வழிப்பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்றவற்றிலும் டிஜிபோட்டியில் அமைக்கப்பட்டுள்ள சீனாவின் இராணுவத் தளம் ஈடுபடும்.

ஆபிரிக்காவிலுள்ள ஒரேயொரு நிரந்தரமான இராணுவத்தளம் அமைந்துள்ள லெமோனியர் முகாமிலிருந்து சில மைல்கள் தூரத்திலேயே சீன இராணுவப் படைகள் முகாமிட்டுள்ளனர். வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கு கடற்படைப் படகுகள் பயணிக்கும் வழியில் சீனா தனது முகாமை அமைத்துள்ளதானது இதன் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பதையே காண்பிப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இயற்கை வளங்கள் மற்றும் திறந்த புதிய சந்தைகள் போன்றவற்றை அடைவதற்கான வழிவகைகளை சீனா கண்டறிய முற்படுகிறது. இதற்காக சீனா ஆபிரிக்காக் கண்டம் முழுவதிலும் உட்கட்டுமான முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

டிஜிபோட்டி, சீனாவின் கேந்திர மையமாக விளங்குவதாலேயே இங்கு சீனா தனது வெளிநாட்டு இராணுவத் தளத்தை அமைத்துள்ளது. டிஜிபோட்டி துறைமுகமானது டிஜிபோட்டி நகரில் அமைந்துள்ளது. இது யேமனுக்குக் குறுக்காக 20 மைல்கள் தூரத்திலும் இந்தியப் பெருங்கடலின் மேற்கு எல்லையில் கடற்கொள்ளையர்களின் நடமாட்டத்தை அழிக்கக்கூடிய மையத்திலும் அமைந்துள்ளதுடன் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் கடல்வழிப்பாதைகள் ஒன்றையொன்று சந்திக்கும் மையத்திலும் இது அமைந்துள்ளதால் இது சீனாவின் மூலோபாய மையமாக விளங்குகிறது.

இதற்கும் மேலாக சீனாவானது மத்திய கிழக்கில் குறிப்பாக சிரியாவில் அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக எழும். ஏனெனில் அண்மையில் சீன-அரபு பரிமாற்ற அமைப்பும் சிரியத் தூதரகமும் இணைந்து பல நூற்றுக்கணக்கான சீன வல்லுனர்களின் உதவியுடன் உட்கட்டுமான முதலீட்டுத் திட்டமான சிரியா Day Expo  ஆரம்பித்தன. சிரியாவின் மீள்கட்டுமானத்திற்காக ஏற்கனவே ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியால் சிறியளவிலான நிதி வழங்கப்பட்டது.

அதன் பின்னர் சிரியாவில் சீனாவின் 150 கம்பனிகளுக்காக 2 பில்லியன் டொலர் முதலீட்டில் தொழிற்துறை வலயம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தை அண்மையில் சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சீனா தனது ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தை சிரியாவின் அலெப்போவிலிருந்து மெடிற்ரெறனியன் வரையும் அதன் ஊடாக ஆபிரிக்கா வரை விரிவுபடுத்த சீனா விரும்புகிறது.

இந்நிலையில் அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்தில் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் இப்பிராந்தியத்தில் சீனா மற்றும் ரஸ்யாவால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை குழிதோண்டிப் புதைப்பதற்கும் அமெரிக்காவின் மூலோபாய வல்லுனர்கள் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளதாக ஜேர்மனியின் போதைப் பொருள் – பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணி பரிந்துரைத்துள்ளது.

சுதந்திர பலுசிஸ்தானை உருவாக்குவதற்கு பலுஸ் பிரிவினைவாதிகளுக்கு அமெரிக்கா தனது பலமான ஆதரவையும் ஆயுத உதவிகளையும் வழங்க வேண்டியுள்ளது. பலுசிஸ்தான் விடுவிக்கப்பட்டு சுதந்திரமடைந்த கையோடு, சீனோ-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை மற்றும் ரஸ்யன் யூரேசியா பொருளாதார ஒன்றியம் போன்றன அழிக்கப்பட்டு விடும்.

இதற்கும் அப்பால், ஆப்கானிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானிற்கு ஊடாக பாரிய மத்திய ஆசியாவை  (Great Central Asia) உருவாக்குவதற்கு அமெரிக்கா தீவிர ஆதரவை வழங்க வேண்டும். உண்மையில் இது ஏற்கனவே இடம்பெறத் தொடங்கி விட்டது.

உஸ்பெகிஸ்தான் மற்றும் கசகஸ்தான் நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் கடந்த எட்டு மாதங்களில் காபூலுக்குப் பயணம் செய்துள்ளனர். அத்துடன் ஆப்கான் அதிபர் அஸ்ரப் கானி ஆப்கானிஸ்தானிற்கு வடக்கிலுள்ள அனைத்து அயல்நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார். ஆப்கானிற்கு குறுக்காக பாகிஸ்தான் மற்றும் இந்தியா வரையும் உஸ்பெகிஸ்தானிற்குமான  TAPI எரிவாயுக் குழாய்த் திட்டமானது துர்மெனிஸ்தானில் மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே காபூலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்டத்திட்டமானது ஆப்கானிஸ்தானில் தொடருந்துப் பாதைகளைப் புனரமைப்பதற்கான இலக்கைக் கொண்டுள்ளது.

இதேவேளை உலக வங்கியின் CASA 1000 திட்டத்தின் கீழ் கிர்கிஸ்தானிலிருந்து தஜிகிஸ்தான், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் வரை மிக விரைவில் மின்சாரம் அனுப்பபடவுள்ளது.

இப்பிராந்தியத்தில் சீனாவின் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்  என அமெரிக்கா விரும்பினால் பாரிய மத்திய ஆசியாவை அமெரிக்கா உருவாக்க வேண்டும். அத்துடன் அமெரிக்காவானது இதயசுத்தியுடன் பலுசிஸ்தானின் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். பலுசிஸ்தான் சுதந்திரமடைந்தால் அதுவே பாரிய மத்திய ஆசியா உருவாவதற்கான முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.

இதன் மூலம் பாரிய மத்திய ஆசியாவானது அரேபியக் கடலைத் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும். இதன் மூலம் சுதந்திரமான கடல் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கு அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை இப்பிராந்தியத்திற்கு அனுப்புவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான கதவு திறக்கப்படும்.

வழிமூலம்       – Eurasia review
ஆங்கிலத்தில் –  Ajmal Sohail*
மொழியாக்கம் – நித்தியபாரதிhttps://www.kuriyeedu.com/?p=96628

Categories: merge-rss, yarl-world-news

தெரேசா மே அரசிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையுமா?

Fri, 06/10/2017 - 18:44
தெரேசா மே அரசிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையுமா?

brexit.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரித்தானியாவின்  தெரேசா மே அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் தீவிரமடையத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான பிரித்தானியாவின் என்ற எதிர்பார்ப்பில் ஐரோப்பிய ஓன்றியம் தன்னை அதற்காக தயார்படுத்த தொடங்கியுள்ளது.

பிரித்தானியாவிற்கும்; ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் இடையிலான பேச்சுக்கள் தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்பில் அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஓன்றிய நாடுகளின் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஜேர்மனியின் அதிகாரிகள் இதனை உறுதிசெய்துள்ளனர். பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஓன்றியத்தின் சார்பில் கலந்துகொள்ளும் மைக்கல் பார்னியரும் இதனை தெரிவித்துள்ளார்

நாங்கள் அனைத்துவிதமான சூழ்நிலைகளிற்கும் தயாராகவுள்ளோம்  எனவும் பிரித்தானியாவுடன்   உடன்பாடு எதுவும் ஏற்பாடத சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐரோப்பிய ஓன்றியத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவரும் பேச்சுவார்த்தைகள் முறிவடையலாம் அல்லது தோல்வியடையலாம் என்ற உணர்வு காணப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவின் உள்நாட்டு அரசியலே இதற்கு காரணமாகயிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/archives/44172

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 06/10/17

Fri, 06/10/2017 - 17:02

 

ஒட்டுமொத்த ஸ்பெயினிலும் ஒரே விவாதப்பொருளான கெடலோனியா ! பிரிவினை பிரச்சனையில் அடுத்தது என்ன? இலங்கை, தனது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மத்தள விமானநிலையத்தையும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அளிக்க வலுக்கும் எதிர்ப்பு! ஹம்பாந்தோட்டை ஆர்பாட்டத்தை கலைக்க கண்ணீர்புகையை ஏவிய காவல்துறை!! மற்றும் பதினைந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்தவரிடம் அசைவை ஏற்படுத்திய பரிசோதனை முயற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Categories: merge-rss, yarl-world-news

அணு ஆயுதங்களுக்கு எதிரான ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

Fri, 06/10/2017 - 10:58
அணு ஆயுதங்களுக்கு எதிரான ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்புக்கு வழங்கப்படுகிறது.

 
 
 
 
அணு ஆயுதங்களுக்கு எதிரான ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு
 
ஓஸ்லோ:

அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ‘ஐகேன்’ அமைப்புடன் உலக நாடுகளில் அணு ஆயுதங்களை ஒழிக்கவும், அணு ஆயுதங்களால் ஏற்படும் மிகப்பெரிய பேரழிவை சுட்டிக்காட்டியும் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, ஏராளமான அணு ஆயுதங்களை குவித்து வைத்திருந்த ஈரான் நாட்டை அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் கையொப்பமிட வைத்ததிலும், பிறநாடுகளில் அணு ஆயுதங்கள் உற்பத்தியை கணிசமாக குறைத்ததிலும், வடகொரியாவின் அணு ஆயுத வெறிக்கு எதிராக சர்வதேச சமூகத்தை ஒன்றிணைத்ததிலும் இந்த அமைப்பின் பணி முக்கியமானதாக கருதப்படுகிறது.
 
201710061513482703_1_nobelprize1._L_styv

இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ‘ஐகேன்’ அமைப்பு தேர்வாகியுள்ளது. நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட அந்நாட்டு நோபல் கமிட்டியின் தலைவர் பெரிட் ரீய்ஸ்-ஆண்டர்சன் வெளியிட்டுள்ளார்.

மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுத பயன்பாட்டை தடுக்கவும், அணு ஆயுதங்கள் பரவுவதை தடுக்க பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்த உறுதுணையாக இருந்ததற்காகவும் ‘ஐகேன்’ அமைப்புக்கு இந்த பரிசு அளிக்கப்படுவதாக பெரிட் ரீய்ஸ்-ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/06151341/1111622/Anti-nuclear-campaign-ICAN-wins-Nobel-Peace-Prize.vpf

Categories: merge-rss, yarl-world-news

ரஷ்ய ரயில் விபத்து 19 பேர் பலி

Fri, 06/10/2017 - 10:43
ரஷ்ய ரயில் விபத்து 19 பேர் பலி

 

 

ரஷ்யாவின் மத்தியப்பகுதியில் ரயிலுடன் பஸ் ஒன்று மோதியதினால் ஏற்பட்ட விபத்தில் கைக்குழந்தை உட்பட 19 பேர் உயிரழந்துள்ளதாகவும், ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Local_News.jpg

ரஷ்ய தலநைகர் மொஸ்கோவின் கிழக்கு பகுதியிலிருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விளாடிமிர் நகரத்திலேயே இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

skynews-russia-train-bus-crash_4120892.j

இவ் விபத்தில் ரயிலில் பயணித்த எவருக்கும் எது வித பாதிப்பும் இல்லை எனவும் பஸ்ஸில் பயணித்த 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

skynews-russia-bus-train-crash_4120893.j

படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் பஸ் சாரதியின் கவனக் குறைவினாலேயே விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

http://www.virakesari.lk/article/25396

Categories: merge-rss, yarl-world-news