உலக நடப்பு

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு!

1 week 6 days ago

New-Project-1-7.jpg?resize=600%2C300&ssl

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு!

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார்.

இதனால், அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அரசு துறைகளுக்கான நிதியை விடுவிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிதி முடக்கத்தால், 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். அதே நேரத்தில், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால், அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

அதில் விமான போக்குவரத்து துறையும் ஒன்று.

நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லான்டா என முக்கிய விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களிலும், 50 சதவீத ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையால் விமான தாமதங்கள், ரத்து போன்ற அசௌகரியங்கள் பெருமளவில் ஏற்படுகின்றன.

இதனால் பயணியர் பாதிக்கப்படுவதை தடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கையாகவும், 40 முக்கிய விமான நிலையங்களில், 10 சதவீதம் விமான சேவைகளை குறைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1452288

துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?

1 week 6 days ago

கிரேட் எகிப்திய அருங்காட்சியம், துட்டன்காமன் அருங்காட்சியகம், எகிப்து

பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Images

படக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும்

கட்டுரை தகவல்

  • கெய்ன் பியரி

  • பிபிசி நியூஸ்

  • 6 நவம்பர் 2025

பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது.

120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் - பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு பெரியது.

பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்ட துட்டன்காமன் உடன் புதைக்கப்பட்ட இதுவரை உலகத்தின் பார்வைக்கு காட்டப்படாத பொக்கிஷங்கள் உட்பட 70,000 முதல் 100,000 பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம் 2002-இல் அறிவிக்கப்பட்டது. 2012-இல் திறப்பதாக திட்டமிடப்பட்ட இந்த அருங்காட்சியகம், பெரும் செலவு, அரசியல் குழப்பங்கள், கோவிட்-19 தொற்றுநோய், பிராந்திய மோதல்கள் என தொடர்ந்து பலமுறை தாமதங்களை எதிர்கொண்டது.

இந்த மெகா திட்டத்திற்கு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை செலவாகியுள்ளது, இதில் பெரும்பகுதி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன்களால் மேற்கொள்ளப்பட்டது.

கிரேட் எகிப்திய அருங்காட்சியம், துட்டன்காமன் அருங்காட்சியகம், எகிப்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார்.

மர்மங்களுக்குப் பெயர் போன இடம்

இந்த அருங்காட்சியகத்தை எகிப்தின் "உலகிற்கான பரிசு" எனக் குறிப்பிடுகிறார் அந்நாட்டின் பிரதமர் மொஸ்தபா மட்பௌலி.

இந்த அருங்காட்சியம் எகிப்திய கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கெய்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார்.

"பண்டைய எகிப்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது" என்று கூறும் சலீமா, "கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் போனீஷியர்கள் கூட எகிப்தை மர்மம் மற்றும் அறிவு நிறைந்த நிலமாக நினைத்தார்கள்" என்றார்.

நவீன கால எகிப்தியர்களை அவர்களின் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்க இந்த அருங்காட்சியகம் உதவும் என்று நம்பப்படுகிறது.

வீடு திரும்பும் துட்டன்காமன்

கிரேட் எகிப்திய அருங்காட்சியம், துட்டன்காமன் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், Grand Egyptian Museum

படக்குறிப்பு, கிரேட் எகிப்திய அருங்காட்சியம்

1922-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் எகிப்தியலாளர் ஹோவர்ட் கார்ட்டர் துட்டன்காமன் கல்லறையைக் கண்டுபிடித்ததிலிருந்து, அவரைப் பற்றிய செய்திகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

உலகெங்கிலும் பல நகரங்களில் பல தசாப்தங்களாக காட்சிப்படுத்தப்பட்ட பின்னர், துட்டன்காமனின் தங்க முகக் கவசம், சிம்மாசனம் மற்றும் அவருடன் புதைக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட பொக்கிஷங்கள் (இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படாதவை உட்பட) முதல் முறையாக முழுமையாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

"துட்டன்காமனின் கல்லறையில் கிடைத்த பொருட்களை ஒரே இடத்தில் வைப்பது அற்புதமானது" என்கிறார் சலீமா.

"எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் துட்டன்காமனின் காட்சியகங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன்." என்கிறார் மான்செஸ்டர் அருங்காட்சியக எகிப்து மற்றும் சூடான் காப்பாளரான கேம்பல் பிரைஸ். இவர் ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார்.

"முக்கிய காட்சியகங்கள் அனைத்துமே கண்களை கொள்ளை கொள்ளக்கூடியவை, ஒவ்வொரு பொருளும் வியப்படையச் செய்கிறது. எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது, என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது." என்று அவர் தெரிவித்தார்.

கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம், ராமேசஸ் தி கிரேட் சிலை, கெய்ரோ

பட மூலாதாரம், REUTERS/Mohamed Abd El Ghany

படக்குறிப்பு, 3,200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ராமெசஸ் தி கிரேட் என்ற பிரமாண்டமான சிலை

கிங் டுட்டின் பொக்கிஷங்களுடன், அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தில் 3,200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ராமெசஸ் தி கிரேட்-இன் பிரமாண்டமான சிலை உட்பட பிற குறிப்பிடத்தக்க படைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

கிமு 7000 ஆம் ஆண்டு வரையிலான பல பொக்கிஷங்களைப் போலவே, இந்த சிலையும் இங்கு வந்த கதை சுவராஸ்யமானது.

கெய்ரோவின் பிரதான ரயில் நிலையத்தின் முன் 51 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த இந்த சிலை, புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக நகர் முழுவதும் காட்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

உலகின் பழமையான மற்றும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்ட கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படும், 4,600 ஆண்டுகள் பழமையான, கிங் கூஃபுவின் 'சூரிய ஒளிப் கப்பலுக்காக' பிரத்யேக சிறப்புப் பிரிவு ஒன்றும் உள்ளது.

கிரேட் எகிப்திய அருங்காட்சியம், துட்டன்காமன் அருங்காட்சியகம், எகிப்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எகிப்தியவியலாளர் ஜாஹி ஹவாஸ் (நடுவில்), கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் தொடங்கப்பட்டதிலிருந்து நிதி திரட்டவும் அதை மேம்படுத்தவும் உதவியுள்ளார்.

"எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும்"

இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா என்பது பொக்கிஷங்களை காட்சிப் பொருளாக வைப்பது மட்டும் அல்ல, அதற்கும் அப்பாற்பட்டது என்கிறார் எகிப்தின் இந்தியானா ஜோன்ஸ் என்று அழைக்கப்படும் தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ்.

மேலும், இது எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

"நமது நினைவுச் சின்னங்களை ஆராயும் விஞ்ஞானிகளாக நாம் மாற வேண்டிய நேரம் இது" என்று கூறும் அவர், "அரசர்களின் பள்ளத்தாக்கில், 64 அரச கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும், அதில் ஒன்றைக் கூட எகிப்தியர்கள் தோண்டி எடுக்கவில்லை" என்றார்.

துட்டன்காமனின் கல்லறை உட்பட எகிப்தின் பெரும்பாலான முக்கிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தது வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்பதை ஹவாஸ் சுட்டிக்காட்டுகிறார்.

எகிப்தியர்கள் தங்கள் சொந்த பாரம்பரியத்தை அறிந்து கொள்வதிலும், தேடி பாதுகாப்பதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கூறும் அவர், அவற்றை உறுதி செய்வதை தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.

இந்த அருங்காட்சியகம் அனைத்து எகிப்தியர்களுக்குமான இடமாக கருதப்பட்டாலும், சிலருக்கு நுழைவுக் கட்டணம் அதிகமாகத் தோன்றலாம். வயது வந்த எகிப்தியர்களுக்கான டிக்கெட் 200 எகிப்திய பவுண்டுகள் (சுமார் ரூபாய் 354) ஆகும்.

இந்தக் கட்டணம், வெளிநாட்டு பார்வையாளர்களிடம் வசூலிக்கப்படும் 1,200 பவுண்டுகளுடன் (சுமார் ரூபாய் 2100) ஒப்பிடும்போது மிகவும் குறைவானதுதான் என்றாலும், பல உள்ளூர் குடும்பங்களுக்கு இந்தக் கட்டணம் மிகவும் அதிகமானதாக தோன்றக்கூடும்.

"இறந்தவர்களை மட்டும் கவனித்துக் கொண்டிருக்காமல், உயிருள்ளவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்," என்று பேராசிரியர் சலீமா கூறுகிறார். "இது அனைவருக்கும் பொதுவானது, இருப்பினும் சில எகிப்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் சற்று அதிகம் என்றே தோன்றும்."

கிரேட் எகிப்திய அருங்காட்சியம், துட்டன்காமன் அருங்காட்சியகம், எகிப்து

பட மூலாதாரம், Mohamed Elshahed /Anadolu via Getty Images

படக்குறிப்பு, இந்த அருங்காட்சியகம் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

தொல்பொருளியலின் புதிய சகாப்தம்

ஹவாஸைப் பொறுத்தவரை, கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்தின் திறப்பு விழா கடந்த காலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எகிப்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும் ஆகும்.

நினைவுச்சின்ன காட்சியகங்களுக்கு அப்பால், இந்த வளாகத்தில் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன. அவை, எகிப்திய மற்றும் சர்வதேச குழுக்கள் பல தசாப்தங்களாக தொடர்ந்து ஆய்வு செய்து, மீட்டெடுத்து, புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் இடங்கள் ஆகும்.

"இப்போது கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள லக்சர் மற்றும் சகாராவில் அகழாய்வு செய்து வருகிறேன். எங்கள் நினைவுச்சின்னங்களில் 30% மட்டுமே நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் - இன்னும், 70% மணலுக்கு அடியில் உள்ளது," என்கிறார் ஹவாஸ்.

அருங்காட்சியகம் அதன் பரந்த அரங்குகளை பொதுமக்களுக்குத் திறந்தாலும், எகிப்தின் மிகப்பெரிய பொக்கிஷங்கள் இன்னும் அதன் பாலைவனங்களுக்கு அடியில் காத்திருக்கின்றன - எகிப்தின் தொல்பொருளியலின் புதிய சகாப்தம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

கூடுதல் செய்தி சேகரிப்பு: பிபிசி நியூஸ் அரபிக்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg1135klrxo

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக எலான் மஸ்க்!

2 weeks ago

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக எலான் மஸ்க்!

07 Nov, 2025 | 12:38 PM

image

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலர் சொத்துடைய முதல் நபர் என்ற பெருமைக்குரியவராகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்திடம் தனக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்துள்ளார். 

இந்நிலையில், அவருக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியத்தினை வழங்க, டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். 

மொத்தமாக உள்ள நிறுவனத்தின் பங்குதாரர்களில் 75 வீதமானோர் இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எலான் மஸ்க் இந்நிறுவனத்தில் மேலும் 7 ஆண்டுகள் சேவையை தொடர்வது உறுதியாகியுள்ளது. 

தற்போது 1.5 ட்ரில்லியன் டொலராக உள்ள  டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பினை, 8.5 ட்ரில்லியன் டொலராக உயர்த்தவேண்டும் என்ற நிபந்தனையோடு எலான் மஸ்க்கின் சம்பள உயர்வுக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். 

இந்த சம்பளத்தை பணமாக அல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டொலர் பணக்காரராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக எலான் மஸ்க்கின் அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் டெஸ்லா கார்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையிலேயே எலான் மஸ்க்  அதிகப்படியான ஊதியமாக, ஒரு ட்ரில்லியன் டொலரை கேட்டு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவரது கோரிக்கைக்கு நிறுவன பங்குதாரர்கள் இணங்கியுள்ள நிலையில், கேட்டபடி ஊதியத்தை எலான் மஸ்க் பெற்றுவிட்டால், அவர்,  உலகிலேயே ஒரு ட்ரில்லியன் சொத்துக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக கருதப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.https://www.virakesari.lk/article/229703

இப்போது எப்படி இருக்கிறது காஸா? - போரின் பேரழிவை நேரில் கண்ட பிபிசி

2 weeks 1 day ago

இப்போது எப்படி இருக்கிறது காஸா? - போரின் பேரழிவை நேரில் கண்ட பிபிசி

இரண்டு ஆண்டு போருக்குப் பிறகு காஸாவின் நிலை - பிபிசி நேரில் கண்டது என்ன?

கட்டுரை தகவல்

  • லூசி வில்லியம்சன்

  • மத்திய கிழக்கு செய்தியாளர், காஸா

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸா நகரை நோக்கி இருக்கும் கரையிலிருந்து காணுகையில் போரின் விளைவுகளை மறைக்க முடியாது.

வரைபடங்கள் மற்றும் நினைவுகளிலிருந்து காஸா நகரம் அழிந்துவிட்டது. ஒருபுறம் பெயிட் ஹனூன் முதல் மறுபுறம் காஸா சிட்டி வரை தரை மட்டமாக ஒரே நிறத்தில் காட்சியளிக்கும் இடிபாடுகளே நினைவில் உள்ளன.

இன்னும் தொலைதூரத்தில் நின்றுகொண்டிருக்கும் கட்டடங்களை தவிர, காஸா நகரில் நீங்கள் பயணிப்பதற்கோ அல்லது பல பத்தாயிர மக்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததற்கான அடையாளங்களை காண்பதற்கோ உங்களுக்கு எதுவும் இல்லை.

போரின் ஆரம்ப வாரங்களில் இஸ்ரேலிய தரைப்படையினர் நுழைந்த பகுதிகளில் இதுவும் ஒன்று. இதையடுத்து, தங்களின் வலுவான பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் இணைந்ததால், இஸ்ரேலிய படையினர் பலமுறை திரும்பி வந்துள்ளனர்.

காஸாவிலிருந்து செய்தி நிறுவனங்கள் சுயாதீனமாக செய்தி சேகரிக்க இஸ்ரேல் அனுமதிப்பதில்லை. புதன்கிழமையன்று, பிபிசியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் உட்பட சிலரை காஸா முனையில் இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றது.

குறுகிய நேரம் நீடித்த இந்த பயணம் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது, இதில் பாலத்தீனர்களையோ அல்லது காஸாவின் மற்ற பகுதிகளையோ அணுக முடியவில்லை.

செய்திகள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே அவை ராணுவ அதிகாரிகளால் பார்க்கும் வகையில் இஸ்ரேலின் ராணுவ தணிக்கை சட்டங்கள் உள்ளன. எனினும் இந்த செய்தியாக்கம் மீதான தனது கட்டுப்பாட்டை பிபிசி உறுதி செய்தது.

காஸா நகரத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷெஜையாவில் காணப்பட்ட  இடிபாடுகள்

படக்குறிப்பு, காஸா நகரத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷெஜையாவில் காணப்பட்ட இடிபாடுகள்

நாங்கள் சென்றுவந்த பகுதியில் அழிவு எந்தளவுக்கு உள்ளது என இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் நாடவ் ஷோஷானியிடம் கேட்டபோது, "எங்கள் இலக்கு அதுவல்ல" என பதிலளித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

"பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதுதான் எங்களின் இலக்கு. கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் பதுங்குக்குழி அல்லது கண்ணி பொறி அல்லது ராக்கெட் மூலம் செலுத்தப்படும் எறி குண்டு அல்லது குறிபார்த்து துப்பாக்கி சுடும் அமைப்பு உள்ளது," என அவர் தெரிவித்தார்.

"இங்கிருந்து நீங்கள் வேகமாக வாகனத்தை இயக்கினால், ஒரு நிமிடத்திற்குள் இஸ்ரேலிய மூதாட்டி அல்லது குழந்தையின் வீட்டின் அறைக்குள் இருப்பீர்கள். அதுதான் அக்டோபர் 7 அன்று நடந்தது."

2023ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் 1,100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

அப்போதிலிருந்து, காஸாவை சேர்ந்த 68,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் நடத்தும் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாம்பல் நிற இடிபாடுகள்

இந்த பகுதியில் பணயக்கைதிகள் சிலரின் உடல்கள் கண்டறியப்பட்டதாக கூறும் லெப்டினன்ட் கர்னல் ஷோஷானி, அதில் இந்த வாரம் ஹமாஸால் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட இடாய் சென்னின் உடலும் அடங்கும் என்றார். மற்ற ஏழு பணயக்கைதிகளின் உடல்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நாங்கள் சென்ற இஸ்ரேலிய ராணுவ தளமானது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைதி திட்டத்தின் படி அமைக்கப்பட்ட தற்காலிக எல்லையான மஞ்சள் கோட்டிலிருந்து சில நூறு மீட்டர்களில் அமைந்திருந்தது, இந்த பகுதி காஸாவில் ஹமாஸ் கட்டுப்படுத்தும் பகுதிகளில் இருந்து இன்னும் இஸ்ரேலிய படைகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளை பிரிக்கிறது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மற்றும் பொதுமக்களை எச்சரிக்கும் விதமாக, அந்த மஞ்சள் கோட்டு பகுதியில் படிப்படியாக தடுப்புகளை அமைத்து இஸ்ரேலிய ராணுவம் குறியிட்டு வருகிறது.

கோட்டின் இந்த பகுதியில் எந்த எல்லைகளும் இன்னும் வரையறுக்கப்படவில்லை எனக்கூறிய இஸ்ரேலிய படையை சேர்ந்த ஒருவர், கட்டடங்களின் சாம்பல் நிற இடிபாடுகளுக்கு இடையில் ஒரு சிறிய மணல் பகுதியை வழிகாட்டியாகப் பயன்படுத்தி சுட்டிக்காட்டினார்.

காஸா நகரத்தில் புதன்கிழமை காணப்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, காஸா நகரத்தில் புதன்கிழமை காணப்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர்

போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு மாதமாகிவிட்டது, ஆனால் மஞ்சள் கோட்டு பகுதியில் ஹமாஸ் துப்பாக்கிதாரிகளுடன் "கிட்டத்தட்ட தினமும்" தாங்கள் சண்டையிடுவதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். காஸா நகரத்தை நோக்கியிருக்கும் கரைகளில் உள்ள துப்பாக்கிச் சூடு நிலைகள் வெண்கல நிற தோட்டா உறைகளின் குவியல்களால் குறிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் "நூற்றுக்கணக்கான முறை" போர் நிறுத்த விதிகளை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது, மேலும் அதன் விளைவாக 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட அமைதி திட்டத்துக்கு இஸ்ரேலிய படைகள் உறுதி பூண்டுள்ளதாக கர்னல் ஷோஷானி கூறுகிறார், ஆனால் இஸ்ரேலிய குடிமக்களுக்கு ஹமாஸ் இனியும் ஓர் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை தாங்கள் உறுதி செய்வோம் என்றும், தேவையானவரை தாங்கள் இருப்போம் என்றும் கூறினார்.

"ஹமாஸ் ஆயுதங்களை வைத்துள்ளது மற்றும் காஸாவை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்பது எல்லோருக்கும் மிக தெளிவாக தெரியும்," என்கிறார் அவர். "இதற்கு தீர்வு காணத்தான் நாம் முயற்சிக்கிறோம், ஆனால் அது வெகு தொலைவில் உள்ளது" என ஷோஷானி தெரிவித்தார்.

காஸா நகரின் கட்டடங்கள் சாம்பல் நிற இடிபாடுகளாக உள்ள காட்சி

பட மூலாதாரம், Moose Campbell/ BBC

படக்குறிப்பு, காஸா நகரின் கட்டடங்கள் சாம்பல் நிற இடிபாடுகளாக உள்ள காட்சி

அடுத்த கட்டம் என்ன?

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்தின்படி, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, அதிபர் டிரம்ப் உட்பட சர்வதேச தலைவர்கள் உள்ள பாலத்தீன குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், அதிகாரம் மற்றும் ஆயுதங்களை கைவிடுவதற்கு பதிலாக, ஹமாஸ் அதற்கு எதிரானதை செய்துவருவதாக கர்னல் ஷோஷானி கூறுகிறார்.

"காஸா மீதான கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்தை நிறுவுவதற்காக, ஹமாஸ் தன்னை ஆயுதமயப்படுத்தி கொள்ள முயற்சிப்பதாக," அவர் என்னிடம் கூறினார். "பொதுமக்களை பயமுறுத்துவதற்காகவும் காஸாவில் யார் தலைமை வகிக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்வதற்காகவும் ஹமாஸ் மக்களை பட்டப்பகலில் கொலை செய்கிறது. ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிடுவதை உறுதி செய்ய இந்த ஒப்பந்தம் போதுமான அழுத்தத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்."

இஸ்ரேலியப் படையினர், இடிபாடுகளுக்கு அடியில் கண்டுபிடித்ததாகக் கூறும் சுரங்கப்பாதைகளின் வரைபடத்தை எங்களுக்குக் காட்டினர். "சிலந்தி வலை போன்ற பெரியளவிலான சுரங்கப்பாதைகளை" தாங்கள் கண்டதாக அவர்கள் தெரிவித்தனர், அதில் பல ஏற்கெனவே அழிந்துவிட்டன, சில அப்படியே உள்ளன, இன்னும் சில சுரங்கப்பாதைகளை படையினர் தேடிவருகின்றனர்.

இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தில் என்ன நடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த ஒப்பந்தம் காஸாவை பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. சூழல் எந்தளவுக்கு நிலையற்றதாக உள்ளது என்பதை அமெரிக்கா அறிந்துள்ளது, மேலும் போர் நிறுத்தம் ஏற்கெனவே இருமுறை தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையற்ற மோதலில் இருந்து நீடித்த அமைதியை நோக்கி முன்னேற அமெரிக்கா கடுமையாக முயற்சித்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு அமெரிக்கா அனுப்பிய வரைவு தீர்மானம் பிபிசியால் பார்க்கப்பட்டது, அதில் காஸாவின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தவும் ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவும் ஒரு சர்வதேச ஸ்திரப்படுத்தும் படைக்கு (International Stabilisation Force - ISF) இரண்டு ஆண்டு கால அதிகாரத்தை வழங்குகிறது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிக தகவல்கள் தெரியவில்லை: ஹமாஸ் ஆயுதக் குறைப்புக்கு முன்னதாக காஸாவைப் பாதுகாக்க எந்த நாடுகள் படைகளை அனுப்பும், இஸ்ரேலிய படைகள் எப்போது திரும்பப் பெறப்படும் அல்லது காஸாவின் புதிய தொழில்நுட்ப நிர்வாகத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து காஸாவை மத்திய கிழக்கு மையமாக கட்டமைக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையை அதிபர் டிரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார். காஸா இன்று இருக்கும் சூழலில் அந்த நோக்கம் வெகு தொலைவில் உள்ளது.

சண்டையை யார் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பது மட்டுமல்லாமல், காஸா இஸ்ரேலால் பெரும்பாலும் அழிக்கப்பட்டு டிரம்பால் முதலீடாகக் கருதப்படும் நிலையில், காஸா மக்கள் தங்கள் நகரங்கள் மற்றும் நிலங்களின் மீது எதிர்காலத்தில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துவார்கள் என்பதும் கேள்வியாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62e0z9166do

ட்ரம்பின் உலகளாவிய வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் சந்தேகம்!

2 weeks 1 day ago

New-Project-48.jpg?resize=750%2C375&ssl=

ட்ரம்பின் உலகளாவிய வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் சந்தேகம்!

உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை (05) சந்தேகங்களை எழுப்பினர்.

இது ஜனாதிபதி ட்ரம்பின் அதிகாரங்களுக்கான பெரிய சோதனையாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் உற்பத்தித் தளத்தை மீட்டெடுக்கவும் அதன் வர்த்தக ஏற்றத்தாழ்வை சரிசெய்யவும் அவசியம் என்று ஜனாதிபதி கூறிய இறக்குமதி வரிகளை வெள்ளை மாளிகை நியாயப்படுத்துவது குறித்து பல பழமைவாதிகள் உட்பட பெரும்பான்மையான நீதிபதிகள் சந்தேகங்களை இதன்போது வெளிப்படுத்தினர்.

ட்ர்பின் வரி விதிப்பானது பல சிறு வணிகங்களாலும், மாநிலங்களின் சில குழுக்களாலும் சவால் செய்யப்படுகின்றன. 

ஜனாதிபதி வரிகளை விதிப்பதில் தனது அதிகாரத்தை மீறிவிட்டதாக அவர்கள் வாதிடுகின்றனர். 

6-3 பழமைவாத பெரும்பான்மையைக் கொண்ட அமெரிக்காவின் உயர் நீதிமன்றம், ஒரு வழக்கில் இறுதி முடிவுகளை எட்டுவதற்கு வழக்கமாக பல மாதங்கள் எடுக்கும்.

ஆனால், இந்த வழக்கில் அது வேகமாக நகரும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.

இது ட்ரம்ப் நிர்வாகத்தின் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கான உந்துதலின் முதல் பெரிய சோதனையாகவும் கருதப்படுகிறது.

இந்த வழக்கு 1977 ஆம் ஆண்டு சட்டமான சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) மையமாகக் கொண்டுள்ளது.

இது அவசரநிலைக்கு பதிலளிக்கும் விதமாக வர்த்தகத்தை “ஒழுங்குபடுத்தும்” அதிகாரத்தை அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்குகிறது.

ட்ரம்ப் முதன்முதலில் கடந்த பெப்ரவரியில் சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு வரி விதிக்க IEEPA ஐப் பயன்படுத்தினார்.

ஏப்ரல் மாதத்தில் அவர் அதை மீண்டும் பயன்படுத்தி, உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வரும் பொருட்களுக்கு 10% முதல் 50% வரை வரிகளை விதிக்க உத்தரவிட்டார். 

அந்த வரிகள் இந்த கோடையில் நிலைபெற்று, அமெரிக்கா நாடுகளை ஒப்பந்தங்களை செய்யத் தள்ளியது.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரிகள் – அடுத்த தசாப்தத்தில் அமெரிக்காவிற்கு டிரில்லியன் கணக்கான டொலர்கள் வருவாயைச் சேர்க்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1452111

நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!

2 weeks 2 days ago

Zihran-Mamdani-New-York.webp?resize=750%

நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் ஆளுனர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.

கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆரம்பமான வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் மலிவுத் திறன் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரது பிரச்சாரம் அமைந்திருந்தது.

தனது முற்போக்கு கருத்துகளால் நியூயோர்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் ஸோரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவிலான வாக்குகளாக 20 இலட்சம் வாக்குகள் பதியப்பட்டதாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்; தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து).

இதனிடையே, ஸோரான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும்நிலையில், மேயர் தேர்தலில் ஸோரான் வெற்றி பெற்றால், நியூயோர்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்தி விடுவதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1452021

பிலிப்பைன்சை தாக்கும் அடுத்தடுத்த சூறாவளிகள்

2 weeks 2 days ago

கல்மேகி சூறாவளி : பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கால் 58 பேர் பலி

05 Nov, 2025 | 09:43 AM

image

மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் கல்மேகி சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால்  58 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதுடன் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த கல்மேகி சூறாவளி புதன்கிழமை (05) தென் சீனக் கடலை நோக்கிச் நகர்ந்து சென்றது.

ap25308514692721.webp

https://www.virakesari.lk/article/229523

weather-2025-11-04.jpg

05-11-manila.jpg

"பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது" - டிரம்ப் குற்றச்சாட்டு : பாகிஸ்தான், சீனா மறுப்பு

2 weeks 3 days ago

"பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது" - டிரம்ப் குற்றச்சாட்டு : பாகிஸ்தான், சீனா மறுப்பு

04 Nov, 2025 | 10:43 AM

image

ரஷ்யா மற்றும் சீனா மட்டுமின்றி, வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் ஆசியப் பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப், அங்கு அணு ஆயுதச் சோதனை நடத்தப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்ட நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில்,

"ரஷ்யாவும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. ஆனால் இது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேச மாட்டார்கள்." "ஆனால் நாம் அப்படி இல்லை. நாம் வேறுபட்டவர்கள், வெளிப்படையான சமூகம். நாம் சோதனைகளை நடத்தப் போகிறோம் என வெளிப்படையாகக் கூறியுள்ளோம்." "மற்றவர்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்தித்தான் வருகிறார்கள். வடகொரியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன."

டிரம்ப் ஆசியப் பயணத்தில் இருந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகின (எனினும் ரஷ்யா ஏவுகணை அணு ஆயுத வல்லமை பெற்றதல்ல என மறுத்தது). இதனைத் தொடர்ந்து, ஆசியப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப், அணு ஆயுதச் சோதனை நடத்த அந்நாட்டுப் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதச் சோதனைகள் குறித்துப் பேசியதற்குப் பின்னர் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ பதில்கள் மற்றும் மறுப்புகள் உடனடியாக வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் இரகசியமாக அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியதற்குப் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைப்பில் இருந்து உடனடியாகவும், அதிகாரப்பூர்வமாகவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான், அணு ஆயுதப் பரவல் தடுப்பு குறித்த சர்வதேச விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்குத் தொடர்ந்து கட்டுப்படுவதாகவும், அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைப்பதற்கான அதன் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதாகவும் வலியுறுத்தியுள்ளது.

டிரம்ப் அணு ஆயுதச் சோதனை குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னர், சீன வெளியுறவு அமைச்சகம் உடனடியாகப் பதிலளித்தது. அணு ஆயுத சோதனைகளில் சீனா ஈடுபட்டு வருவதாக டிரம்ப் கூறிய குற்றச்சாட்டைச் சீனா திட்டவட்டமாக மறுத்தது. அணு ஆயுதச் சோதனைகளைத் தடை செய்யும் விரிவான அணு சோதனைத் தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty - CTBT) சீனா உறுதியாக ஆதரிப்பதாகவும், அதன் உறுப்பினராக இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தி வைப்பதற்கான அதன் வாக்குறுதியை சீனா எப்போதும் மதிக்கும் என்று தெரிவித்தது.

வடகொரியாவைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் அணு ஆயுதச் சோதனைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் ஒரு புதிய விஷயம் அல்ல. வடகொரியா பொதுவாக இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு நேரடியான பதில் அளிப்பதை விட, அமெரிக்காவின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் குறித்துப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. வடகொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்துகிறது. இதற்கு முன்னரும், டிரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் இடையே அணு ஆயுத 'பட்டன்' குறித்து வெளிப்படையான வார்த்தைப் போர் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது

https://www.virakesari.lk/article/229440

ரஷ்யாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் : அச்சத்தில் மக்கள்!

2 weeks 3 days ago

04 Nov, 2025 | 10:28 AM

image

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திங்கட்கிழமை (03) மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 159.93 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இதனையடுத்து, நேற்று மதியம் 2.14 மணியளவில் அப்பக்குதியில் ரிக்டர் 6.1 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளில் இருந்து வெளியில் ஓடினர்.

https://www.virakesari.lk/article/229439

வெளியுலக தொடர்பே இல்லாத இந்த அமேசான் பழங்குடிகள் நெருப்பு பற்ற வைப்பது எப்படி? அவர்களே அளித்த பதில்

2 weeks 3 days ago

மாஷ்கோ பைரோ பழங்குடியின மக்கள்

பட மூலாதாரம், Fenamad

கட்டுரை தகவல்

  • ஸ்டெஃபானி ஹெகார்ட்டி

  • உலக மக்கள் தொகை செய்தியாளர்

  • 3 நவம்பர் 2025, 03:18 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025, 05:26 GMT

பெருவின் அமேசான் பகுதியில் உள்ள ஒரு சிறிய திறந்த வெளியில் தாமஸ் அனெஸ் டோஸ் சான்டோஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டில் காலடிச் சத்தம் நெருங்குவதைக் கேட்டார்.

அவர் தான் சூழப்பட்டுவிட்டதை அறிந்து உறைந்து போனார்.

"ஒருவர் நின்று, அம்புடன் குறிவைத்துக் கொண்டிருந்தார்," என்று அவர் கூறுகிறார். "எப்படியோ நான் இங்கு இருப்பதை அவர் கவனித்துவிட்டார், நான் ஓடத் தொடங்கினேன்."

அவர் மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடியினரை நேருக்கு நேர் எதிகொண்டார். பல தசாப்தங்களாக, நுவேவா ஓசியானியா (Nueva Oceania) என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் தாமஸ், வெளியாட்களுடன் தொடர்பைத் தவிர்க்கும் இந்த நாடோடி மக்களுக்கு அண்டை வீட்டாராகவே இருந்தார். இருப்பினும், மிகச் சமீப காலம் வரை, அவர் அவர்களை அரிதாகவே பார்த்திருந்தார்.

மாஷ்கோ பைரோ மக்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகத்துடனான தொடர்பைத் துண்டித்துள்ளனர். அவர்கள் நீண்ட வில் மற்றும் அம்புகளைக் கொண்டு வேட்டையாடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றுக்கும் அமேசான் மழைக்காடுகளை நம்பியுள்ளனர்.

"அவர்கள் மிருகங்களைப் போலவும், பல வகையான பறவைகளைப் போலவும் சத்தம் எழுப்பியும், விசில் அடித்தும் என்னைச் சுற்றி வளைக்கத் தொடங்கினர்," என்று தாமஸ் நினைவு கூர்கிறார்.

"நான் தொடர்ந்து 'நோமோல்' (Nomole) (சகோதரர்) என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். பின்னர் அவர்கள் கூடினர், அவர்கள் நெருக்கமாக இருந்ததாக உணர்ந்தோம். எனவே நாங்கள் ஆற்றை நோக்கி ஓடினோம்."

தாமஸ் அனெஸ் டோஸ் சான்டோஸ்

படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்களைப் பாதுகாக்க தாமஸ் விரும்புகிறார்: "அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே வாழ விடுங்கள்."

மனித உரிமைகள் அமைப்பான சர்வைவல் இன்டர்நேஷனல் (Survival International) சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கை, உலகில் இன்னும் குறைந்தது 196 'தொடர்பற்ற குழுக்கள்' இருப்பதாகக் கூறுகிறது. மாஷ்கோ பைரோ பழங்குடியினர் அவற்றில் மிகப் பெரிய குழுவினர் என்று நம்பப்படுகிறது. அவர்களைப் பாதுகாக்க அரசுகள் அதிக நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தக் குழுக்களில் பாதி பேர் அடுத்த தசாப்தத்தில் அழிக்கப்படலாம் என்று அறிக்கை கூறுகிறது.

மரங்களை வெட்டுதல், சுரங்கத் தொழில் அல்லது எண்ணெய் எடுப்பது போன்றவற்றால் அவர்களுக்கு மிகப் பெரிய அபாயங்கள் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. தொடர்பற்ற குழுக்கள் சாதாரண நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள். எனவே, சுவிசேஷ மிஷனரிகள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுடனான தொடர்பு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

சமீபத்தில், மாஷ்கோ பைரோ மக்கள் நுவேவா ஓசியானியாவுக்கு அதிகமாக வரத் தொடங்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கிராமம் ஏழு அல்லது எட்டு குடும்பங்களைக் கொண்ட ஒரு மீன்பிடி சமூகம். இது அருகிலுள்ள குடியிருப்புக்கு படகில் செல்ல 10 மணி நேரம் ஆகும் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்தப் பகுதி தொடர்பற்ற குழுக்களுக்கான பாதுகாக்கப்பட்ட காப்பகமாக அங்கீகரிக்கப்படவில்லை. இங்கு மரங்களை வெட்டும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

மரங்களை வெட்டும் இயந்திரங்களின் சத்தம் சில சமயங்களில் இரவும் பகலும் கேட்கிறது. மாஷ்கோ பைரோ மக்கள் தங்கள் காடு அழிக்கப்படுவதைக் காண்கிறார்கள் என்று தாமஸ் கூறுகிறார்.

நுவேவா ஓசியானியாவில், மக்கள் முரண்பட்ட உணர்வுகளுடன் இருப்பதாகக் கூறுகின்றனர். மாஷ்கோ பைரோவின் அம்புகளைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள், ஆனால் காட்டில் வாழும் தங்கள் "சகோதரர்கள்" மீது அவர்களுக்கு ஆழ்ந்த மரியாதை உள்ளது, மேலும் அவர்களைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்.

"அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே வாழ விடுங்கள், நாம் அவர்களின் கலாசாரத்தை மாற்ற முடியாது. அதனால்தான் நாங்கள் இடைவெளியைக் கடைப்பிடிக்கிறோம்," என்று தாமஸ் கூறுகிறார்.

மாஷ்கோ பைரோ மக்கள்

பட மூலாதாரம், Fenamad

படக்குறிப்பு, பெருவின் மாட்ரே டி டியோஸ் மாகாணத்தில் ஜூன் 2024 அன்று எடுக்கப்பட்ட மாஷ்கோ பைரோ மக்களின் புகைப்படம்

மாஷ்கோ பைரோவின் வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு, வன்முறை அச்சுறுத்தல் மற்றும் மரங்களை வெட்டுபவர்களால் மாஷ்கோ பைரோ மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாக நுவேவா ஓசியானியா மக்கள் கவலைப்படுகிறார்கள்.

நாங்கள் கிராமத்தில் இருந்தபோது, மாஷ்கோ பைரோ மக்கள் மீண்டும் தங்கள் இருப்பை உணர வைத்தனர். இரண்டு வயது மகள் கொண்ட இளம் தாய் லெடிசியா ரோட்ரிக்ஸ் லோபஸ் காட்டில் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் சத்தத்தைக் கேட்டார்.

"பலரின் கூக்குரல் சத்தங்களை கேட்டோம். ஒரு பெரிய குழு கத்துவது போல இருந்தது," என்று அவர் எங்களிடம் கூறினார்.

மாஷ்கோ பைரோ மக்களை அவர் சந்தித்தது அதுவே முதல் முறை, அதனால் அவர் ஓடினார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகும், பயத்தால் அவரது தலை துடித்துக் கொண்டிருந்தது.

"மரம் வெட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் காடுகளை வெட்டுவதால் அவர்கள் பயத்தில் ஓடி வந்து எங்களுக்கு அருகில் வந்து விடுகிறார்கள்," என்று அவர் கூறினார். "அவர்கள் எங்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது."

2022 இல், இரண்டு மரம் வெட்டுபவர்களை மாஷ்கோ பைரோவினர் தாக்கினர். ஒருவர் வயிற்றில் அம்பு பாய்ந்தது. அவர் உயிர் பிழைத்தார், ஆனால் மற்றொருவர் உடல் சில நாட்களுக்குப் பிறகு ஒன்பது அம்பு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

பெரு அரசு தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அவர்களுடன் தொடர்பை ஆரம்பிப்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடனான ஆரம்ப தொடர்பால், நோய், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்பட்டு முழு குழுக்களும் அழிக்கப்படுவதைக் கண்ட பழங்குடி உரிமைக் குழுக்களின் பல தசாப்தகால போராட்டத்திற்கு பிறகு இந்த கொள்கை முதல் முறையாக பிரேசிலில் உருவானது.

1980களில், பெருவில் உள்ள நஹாவ் (Nahau) மக்கள் வெளி உலகத்துடன் ஆரம்பத் தொடர்பு கொண்டபோது, அவர்களின் மக்கள் தொகையில் 50% பேர் சில ஆண்டுகளில் இறந்தனர். 1990களில், முருகானுவா (Muruhanua) மக்கள் அதே விதியை எதிர்கொண்டனர்.

"தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்கள் தொற்றுநோயியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். எந்தவொரு தொடர்பும் அவர்களுக்கு நோய்களைப் பரப்பக்கூடும். எளிமையான நோய்கள் கூட அவர்களை அழித்துவிடக்கூடும்," என்று பெருவியன் பழங்குடி உரிமைக் குழுவான ஃபெமனாட்டைச் சேர்ந்த இஸ்ஸ்ரைல் அக்விஸ்ஸே கூறுகிறார். "கலாசார ரீதியாகவும் எந்தவொரு தொடர்பும் அல்லது தலையீடும் ஒரு சமூகமாக அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்களின் ஆரோக்கியத்துக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்."

தொடர்பற்ற பழங்குடியினரின் அண்டை பகுதியை சேர்ந்தவர்களுக்கு, இந்த கொள்கையின் யதார்த்தம் சிக்கலானதாக இருக்கலாம்.

மாஷ்கோ பைரோவை அவர் சந்தித்த காட்டுத் திறந்தவெளியில் தாமஸ் எங்களைச் சுற்றிக் காட்டும்போது, அவர் நின்று, கைகளை குவித்து விசில் அடித்து, பின்னர் அமைதியாகக் காத்திருக்கிறார்.

"அவர்கள் பதிலளித்தால், நாம் திரும்பிச் செல்ல வேண்டும்," என்று அவர் கூறுகிறார். பூச்சிகள் மற்றும் பறவைகளின் சலசலப்பு மட்டுமே கேட்கிறது. "அவர்கள் இங்கு இல்லை."

ஒரு பதற்றமான சூழ்நிலையைத் தனியாகச் சமாளிக்க நுவேவா ஓசியானியாவின் குடியிருப்பாளர்களை அரசு விட்டுவிட்டதாகத் தாமஸ் கருதுகிறார்.

மாஷ்கோ பைரோ குழுவினர் எடுத்துச் செல்ல தனது தோட்டத்தில் அவர் காய், கனிகளைத் தரும் செடிகளை நடுகிறார். இது அவரும் மற்ற கிராம மக்களும் தங்கள் அண்டை வீட்டாருக்கு உதவவும், தங்களைப் பாதுகாக்கவும் கண்டுபிடித்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

'இந்த வாழைப் பழங்களை வைத்துக்கொள்ளுங்கள், இது ஒரு பரிசு', நீங்கள் அவற்றைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். என்மீது அம்பு எய்யாதீர்கள் என அவர்களிடம் சொல்வதற்கான வார்த்தைகள் எனக்கு தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும்."

கட்டுப்பாட்டு நிலையத்தில்...

அடர்ந்த காட்டின் மறுபுறத்தில், சுமார் 200 கிமீ தென்கிழக்கில், நிலைமை மிகவும் வேறுபட்டது. அங்கு, மனு ஆற்றுக்கு அருகில், ஒரு வனக் காப்பகமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியில் மாஷ்கோ பைரோ வாழ்கின்றனர்.

பெருவின் கலாசார அமைச்சகம் மற்றும் ஃபெனமாட் இங்கு 'நோமோல்' கட்டுப்பாட்டு நிலையத்தை நடத்தி வருகின்றன. இதில் எட்டு முகவர்கள் பணியாற்றுகின்றனர். மாஷ்கோ பைரோவுக்கும் உள்ளூர் கிராமங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல கொலைகளில் முடிந்தபின்னர், 2013 இல் இது அமைக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு நிலையத்தின் தலைவராக உள்ள அன்டோனியோ ட்ரிகோசோ யடால்கோவின் வேலை அது மீண்டும் நிகழாமல் தடுப்பதுதான்.

மாஷ்கோ பைரோ மக்கள் அடிக்கடி, சில சமயங்களில் வாரத்திற்குப் பல முறை வருகிறார்கள். அவர்கள் நுவேவா ஓசியானியாவுக்கு அருகிலுள்ளவர்களை விட வேறுபட்டவர்கள். அவர்களுக்கு ஒருவருக்கொருவர் தெரியாது என்று முகவர்கள் நம்புகிறார்கள்.

மாஷ்கோ பைரோ மக்கள்

பட மூலாதாரம், Fenamad

படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தை அணுகுகின்றனர்

"அவர்கள் எப்போதும் ஒரே இடத்தில் வெளியே வருகிறார்கள். அங்கிருந்துதான் அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்," என்று அன்டோனியோ அகலமான மனு ஆற்றின் குறுக்கே எதிரே உள்ள ஒரு சிறிய கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையைச் சுட்டிக் காட்டுகிறார். அவர்கள் வாழை, மரவள்ளிக்கிழங்கு அல்லது கரும்புகளைக் கேட்கிறார்கள்.

"நாங்கள் பதிலளிக்கவில்லை என்றால், அவர்கள் நாள் முழுவதும் அங்கேயே உட்கார்ந்து காத்திருக்கிறார்கள்," என்று அன்டோனியோ கூறுகிறார். சுற்றுலாப் பயணிகள் அல்லது உள்ளூர் படகுகள் கடந்து சென்றால், முகவர்கள் அதைத் தவிர்க்க முயல்கிறார்கள். பொதுவாகக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார்கள். கட்டுப்பாட்டு நிலையத்தில் உணவுப் பயிர்களை வளர்க்க ஒரு சிறிய தோட்டம் உள்ளது. உணவு தீர்ந்து போகும்போது, அவர்கள் உள்ளூர் கிராமத்தில் இருந்து பொருட்களைக் கேட்கிறார்கள்.

இவை கிடைக்கவில்லை என்றால், இன்னும் சில நாட்களில் திரும்பி வருமாறு முகவர்கள் மாஷ்கோ பைரோவினரிடம் சொல்கின்றனர். இதுவரை அது வேலை செய்து சமீபத்தில் சிறிய மோதல்கள் மட்டுமே நடந்துள்ளன.

வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 40 பேரை அன்டோனியோ வழக்கமாகப் பார்க்கிறார்.

அவர்கள் தங்களுக்கு விலங்குகளின் பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள். தலைவருக்கு கமோடோலோ (தேனீ) என்று பெயர். அவர் ஒரு கண்டிப்பான மனிதர் என்றும் ஒருபோதும் சிரிப்பதில்லை என்றும் முகவர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு தலைவர், ட்கோட்கோ (கழுகு) ஒரு நகைச்சுவை உணர்வு கொண்டவர், அவர் நிறையச் சிரிக்கிறார் மற்றும் முகவர்களை கேலி செய்கிறார். யோமாக்கோ (டிராகன்) என்ற ஒரு இளம் பெண் இருக்கிறார், அவருக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதாக முகவர்கள் கூறுகிறார்கள்.

மாஷ்கோ பைரோ வெளி உலகத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் சந்திக்கும் முகவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பற்றியும், அவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்றும் கேட்கிறார்கள்.

குரங்கு பல் அட்டிகை

படக்குறிப்பு, நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ள முகவர்களில் ஒருவருக்கு, மாஷ்கோ பைரோ மக்களால் பரிசாக வழங்கப்பட்ட குரங்குப் பல் அட்டிகை

ஒரு முகவர் கர்ப்பமாகி மகப்பேறு விடுப்பில் சென்றபோது, குழந்தை விளையாடுவதற்கு ஒரு ஹவுலர் குரங்கின் தொண்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட கிலுகிலுப்பையை (rattle) அவர்கள் கொண்டு வந்தனர்.

அவர்கள் முகவர்களின் உடைகள், குறிப்பாக சிவப்பு அல்லது பச்சை நிற விளையாட்டு உடைகள் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். "நாங்கள் நெருங்கும் போது, பழைய, கிழிந்த, பொத்தான்கள் இல்லாத ஆடைகளை அணிந்து கொள்கிறோம் - அதனால் அவர்கள் அவற்றைப் பறித்துக் கொள்ள மாட்டார்கள்," என்று அன்டோனியோ கூறுகிறார்.

"முன்பு, பூச்சி நார்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அழகான பாரம்பரிய பாவாடைகளை அணிந்தார்கள், ஆனால் இப்போது அவர்களில் சிலர், சுற்றுலாப் படகுகள் கடந்து செல்லும்போது, ஆடைகள் அல்லது பூட்ஸ்களைப் பெறுகிறார்கள்," என்று கட்டுப்பாட்டு நிலையத்தில் ஒரு முகவரான எட்வர்டோ பாஞ்சோ பிஸார்லோ கூறுகிறார்.

மாஷ்கோ பைரோ மக்கள்

பட மூலாதாரம், Fenamad

படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் யார் என்பது பற்றி இன்னும் குறைவாகவே அறியப்படுகிறது.

ஆனால் காட்டில் உள்ள வாழ்க்கை பற்றி குழுவினர் கேட்கும்போதெல்லாம், மாஷ்கோ பைரோ உரையாடலைத் துண்டிக்கிறார்கள்.

"ஒருமுறை, அவர்கள் எப்படித் தீ மூட்டுகிறார்கள் என்று நான் கேட்டேன்," என்று அன்டோனியோ கூறுகிறார். "அவர்கள் என்னிடம், 'உங்களிடம் மரம் இருக்கிறது, உங்களுக்குத் தெரியும்' என்று சொன்னார்கள். நான் வலியுறுத்திக் கேட்டபோது, அவர்கள், 'உங்களிடம் ஏற்கெனவே இந்த விஷயங்கள் அனைத்தும் உள்ளன - நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்?' என்று கேட்டனர்."

யாராவது சிறிது காலம் வராமல் இருந்தால், அவர்கள் எங்கே என்று முகவர்கள் கேட்பார்கள். மாஷ்கோ பைரோ, "கேட்காதே" என்று சொன்னால், அந்த நபர் இறந்துவிட்டார் என்று அர்த்தம் என்று அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

பல வருட தொடர்பு இருந்தபோதிலும், மாஷ்கோ பைரோ எப்படி வாழ்கிறார்கள் அல்லது ஏன் காட்டில் இருக்கிறார்கள் என்பது பற்றி முகவர்களுக்கு இன்னும் குறைவாகவே தெரியும்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், "ரப்பர் பிரபுக்கள்" என்று அழைக்கப்படுபவர்களால் பரவலான சுரண்டல் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பி, ஆழமான காட்டுக்குத் தப்பிச் சென்ற பழங்குடி மக்களின் வாரிசுகள் என்று நம்பப்படுகிறது.

மாஷ்கோ பைரோ, தென்மேற்குப் பெருவின் ஒரு பழங்குடி மக்களான யினியுடன் (Yine) நெருங்கிய உறவுடையவர்கள் என்று வல்லுநர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ஒரே மொழியின் பழமையான வட்டார மொழியைப் பேசுகிறார்கள். அதை முகவர்களும் (அவர்களும் யினி பழங்குடியினரே) கற்றுக்கொள்ள முடிந்தது.

ஆனால், யினி மக்கள் நீண்ட காலமாக ஆற்றுப் பயணிகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களாக இருந்தனர். அதேசமயம், மாஷ்கோ பைரோ இந்த விஷயங்களை எப்படிச் செய்வது என்பதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க நாடோடிகளாகவும் வேட்டையாடுபவர்களாகவும் மாறியிருக்கலாம்.

"அவர்கள் ஒரு பகுதியில் சிறிது காலம் தங்கி, ஒரு முகாமை அமைத்து, முழு குடும்பமும் கூடுகிறார்கள் என நான் புரிந்துகொள்கிறேன்," என்று அன்டோனியோ கூறுகிறார். "அந்த இடத்தை சுற்றியுள்ள அனைத்தையும் வேட்டையாடியவுடன், அவர்கள் வேறொரு இடத்துக்குச் செல்கிறார்கள்."

மாஷ்கோ பைரோ மக்கள் பயன்படுத்தும் ஈட்டிகள் மற்றும் அம்புகள்

பட மூலாதாரம், Fenamad

படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் அமேசான் மழைக்காடுகளில் ஈட்டிகள் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி வேட்டையாடுகிறார்கள்.

ஃபெனமாட்டின் இஸ்ஸ்ரைல் அக்விஸ்ஸே, 100-க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நேரங்களில் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு வந்துள்ளனர் என்று கூறுகிறார்.

"அவர்கள் தங்கள் உணவை பல்வகைப்படுத்த வாழைப்பழங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கைக் கேட்கிறார்கள், ஆனால் சில குடும்பங்கள் அதன்பிறகு மாதங்கள் அல்லது வருடங்களாக மறைந்துவிடுகின்றன," என்று அவர் கூறுகிறார்.

"அவர்கள், 'நான் சில காலம் சென்றுவிட்டு, பின்னர் திரும்பி வருவேன்' என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்கள்."

இந்தப் பகுதியில் உள்ள மாஷ்கோ பைரோ மக்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஆனால் சட்டவிரோதச் சுரங்கத் தொழில் பரவலாக இருக்கும் ஒரு பகுதியுடன் இணைக்கும் ஒரு சாலையை அரசு கட்டமைக்கிறது.

ஆனால், மாஷ்கோ பைரோ வெளி உலகத்துடன் இணைய விரும்பவில்லை என்பது முகவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

"இந்த நிலையத்தில் எனது அனுபவத்திலிருந்து, அவர்கள் வெளியுலகுடன் நெருங்கிய தொடர்பை விரும்பவில்லை என்பது தெரிகிறது," என்று அன்டோனியோ கூறுகிறார்.

கைகளில் பைனாகுலருடன் அன்டோனியோ

படக்குறிப்பு, நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தில் வழக்கமாக சுமார் 40 பேரைப் பார்ப்பதாக கூறுகிறார் அன்டோனியோ

"ஒருவேளை குழந்தைகள் விரும்பலாம், அவர்கள் வளரும்போது, நாங்கள் ஆடை அணிந்திருப்பதைக் காணும்போது ஒருவேளை 10 அல்லது 20 ஆண்டுகளில் மாறலாம். ஆனால் பெரியவர்கள் மாற மாட்டார்கள். நாங்கள் இங்கு இருப்பதை கூட அவர்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார்.

2016 இல், மாஷ்கோ பைரோவின் காப்பகத்தை நுவேவா ஓசியானியா உள்ளிட்ட பகுதிகளுக்கு நீட்டிக்க ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அது ஒருபோதும் சட்டமாக இயற்றப்படவில்லை.

"அவர்கள் எங்களைப் போலச் சுதந்திரமாக இருக்க வேண்டும்," என்று தாமஸ் கூறுகிறார். "அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் அமைதியாக வாழ்ந்தார்கள், இப்போது அவர்களின் காடுகள் அழிக்கப்படுகின்றன - அழிக்கப்பட்டு வருகின்றன என்பதை நாங்கள் அறிவோம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj6ny718p8yo

வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர்.

2 weeks 4 days ago

வடக்கு ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரிஃப் நகருக்கும், வடக்கு ஆப்கானிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான குல்ம் நகருக்கும் அருகில் 28 கிலோமீட்டர் (17.4 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பால்க் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜைத் கூறுகையில், இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "நாங்கள் நிதி மற்றும் மனித இழப்புகளைச் சந்தித்துள்ளோம், பலர் காயமடைந்துள்ளோம், இதுவரை கிடைத்த தகவல்கள் நான்கு பேர் இறந்ததை உறுதிப்படுத்துகின்றன," என்று அவர் கூறினார்.

https://www.cnn.com/2025/11/02/asia/northern-afghanistan-earthquake-latam-intl

உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.

2 weeks 4 days ago

உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
Tetyana Vysotska,
Anastasia Protz — 31 அக்டோபர், 16:18

உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.

ஒரு வயலில் தானியங்களை அறுவடை செய்தல். புகைப்படம்: கெட்டி இமேஜஸ்

1835

உக்ரைனுடனான மேம்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் 2025 அக்டோபர் 29 அன்று நடைமுறைக்கு வந்த பிறகு, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. சில உக்ரைனிய விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான ஒருதலைப்பட்ச தடைகளை நீக்குமாறு நாடுகளை வற்புறுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மூலம்: ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைமை செய்தித் தொடர்பாளர் ஓலோஃப் கில்லை மேற்கோள் காட்டி ஐரோப்பிய பிராவ்தா

விவரங்கள்: புதிய ஒப்பந்தம் சமநிலையான வர்த்தக நிலைமைகளை வழங்குகிறது என்ற அடிப்படையில், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து ஆகியவை சில உக்ரேனிய விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான ஒருதலைப்பட்ச கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று EU விரும்புகிறது.

மேற்கோள்: "எனவே, மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த வாரம் மேம்படுத்தப்பட்ட EU-உக்ரைன் ஆழமான மற்றும் விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான DCFTA அமலுக்கு வந்தது. மேம்படுத்தப்பட்ட DCFTA, உக்ரைனுக்கு நல்ல வர்த்தக நிலைமைகளின் முக்கிய பொருளாதார உயிர்நாடியை வழங்குவதற்கும், மறுபுறம், EU-வில் உள்ள நமது உணர்திறன் மிக்க பொருளாதாரத் துறைகளுக்கு, குறிப்பாக சில விவசாய-உணவுத் துறைகளுக்கு வலுவான மற்றும் பொருத்தமான பாதுகாப்புகளை வழங்குவதற்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துகிறது என்று நாங்கள் நம்புகிறோம்."

மேலும் விவரங்கள்: புதிய ஏற்பாடு பொருத்தமான சமநிலையை எட்டியுள்ளது என்று பிரஸ்ஸல்ஸ் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

மேற்கோள்: "ஏற்றுமதி தடைகளை நீடிப்பதற்கு எந்த நியாயமும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை... அந்த நம்பிக்கையின் அடிப்படையில், மேற்கூறிய உறுப்பு நாடுகளுடன் அந்தத் தடைகளை நீக்க அவர்களைப் பணிய வைக்கும் நோக்கில் நாங்கள் இப்போது ஈடுபடுவோம்.

அதுதான் நாங்கள் இப்போது கவனம் செலுத்தப் போகும் ஒரே விஷயம், அதுதான் எங்கள் முதல் முன்னுரிமை."

மேலும் விவரங்கள்: மூன்று மாநிலங்களும் தங்கள் கட்டுப்பாடுகளை கைவிட கட்டாயப்படுத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆணையம் பரிசீலிக்கிறதா என்று கேட்டபோது, "அந்தப் பேச்சுவார்த்தைகள் விரும்பிய முடிவுக்கு வழிவகுக்காதபோது மட்டுமே மற்ற அனைத்து விருப்பங்களையும் ஆணையம் பரிசீலிக்கும்" என்று கில் குறிப்பிட்டார் .

பின்னணி:

  • உக்ரைனின் விவசாய ஏற்றுமதியில் தனிப்பட்ட நாடுகள் ஒருதலைப்பட்ச தடைகளை நீட்டித்தால், ஐரோப்பிய ஆணையத்திடமிருந்து விரைவான மற்றும் போதுமான பதிலை எதிர்பார்ப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக கூறியது.

  • ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையின் கொள்கைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய-உக்ரைன் சங்க ஒப்பந்தத்தின் விதிகளை எந்த சூழ்நிலையிலும் மீற முடியாது என்றும், பதிலளிக்க சட்டப்பூர்வ கருவிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை உக்ரைன் கொண்டுள்ளது என்றும் கீவ் வலியுறுத்துகிறார்.

  • ஆகஸ்ட் 25, 2023 அன்று, போலந்து விவசாய அமைச்சர் ராபர்ட் டெலஸ், ஐந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உக்ரேனிய தானிய இறக்குமதி மீதான தடையை நீட்டிக்கக் கோருவதற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறினார் .

  • உக்ரைன் ஏற்றுமதிகளுக்கான ஒருதலைப்பட்ச தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் நீக்க வேண்டும் என்பதில் உக்ரைன் உறுதியாக உள்ளது.

https://www.pravda.com.ua/eng/news/2025/10/31/8005283/


கெய்வ் உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, உக்ரேனிய இறக்குமதியைத் தடை செய்ததற்காக நாடுகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதை ஐரோப்பிய ஆணையம் நிராகரிக்காது.

கேளுங்கள்

உக்ரைன்-ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள சுமி பகுதியில் பொதுமக்கள் வாழ்க்கை

உக்ரேனியப் பொருட்கள் மீதான ஒருதலைப்பட்ச இறக்குமதித் தடைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் மூன்று நாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை நிராகரிக்க ஐரோப்பிய ஆணையம் மறுத்துவிட்டது. | விளாடா லிபரோவா/கெட்டி இமேஜஸ்

அக்டோபர் 31, 2025 காலை 4:30 மணி CET

Bartosz Brzeziński மற்றும் Rebecca Holland மூலம்

உக்ரேனியப் பொருட்கள் மீது ஒருதலைப்பட்சமாக இறக்குமதித் தடைகளை வைத்திருக்கும் மூன்று நாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை நிராகரிக்க ஐரோப்பிய ஆணையம் மறுத்துவிட்டது.

கெய்வ் உடனான திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதால், போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை வர்த்தக உறவுகளை மீட்டமைக்கும் முயற்சிகளை வெளிப்படையாக மீறுகின்றன. உக்ரேனிய தானியங்கள் மற்றும் பிற பண்ணை பொருட்களை உள்ளடக்கிய தடைகள், தேசிய வர்த்தக தடைகளைத் தடை செய்யும் ஐரோப்பிய ஒன்றிய ஒற்றை சந்தை விதிகளை மீறுகின்றன.

இந்த எதிர்ப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைனுடனான வர்த்தக உறவு எவ்வளவு அரசியல் ரீதியாக நெருக்கடியானதாக மாறியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தலைநகரங்கள் பிரஸ்ஸல்ஸை வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை விட கெய்வுக்கு முன்னுரிமை அளிக்கத் துணிகின்றன.

"இந்த தேசிய நடவடிக்கைகளைப் பராமரிப்பதற்கு எந்த நியாயத்தையும் நாங்கள் காணவில்லை," என்று ஆணையத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஓலோஃப் கில் வியாழக்கிழமை தெரிவித்தார், உக்ரேனிய இறக்குமதிகளின் ஓட்டத்தால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் குறித்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு.

ஒரு மின்னஞ்சலில், ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகி விட்டுக்கொடுக்காத தலைநகரங்களுடன் "அதன் தொடர்பைத் தீவிரப்படுத்துவார்" என்று கில் கூறினார். மீறல் நடவடிக்கைகளைத் தொடங்க ஆணையம் நிராகரித்துவிட்டதா என்று கேட்டதற்கு, கில் பதிலளித்தார்: "அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன."

2023 ஆம் ஆண்டு தடைகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பிரஸ்ஸல்ஸ் செயல்படத் தயங்கி வருகிறது , புதுப்பிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் அவற்றை தேவையற்றதாக மாற்றும் என்று நம்புகிறது. பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த அதிகாரிகள் அரசியலும் இதில் பங்கு வகிக்கிறது என்று கூறுகின்றனர். போலந்தை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது டொனால்ட் டஸ்கின் ஐரோப்பிய ஒன்றிய சார்பு அரசாங்கத்துடனான உறவைப் பாதிக்கக்கூடும் , அதே நேரத்தில் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவைத் தனிமைப்படுத்துவது இரட்டை நிலைப்பாடாகத் தோன்றும்.

போலந்தின் விவசாய அமைச்சகம் இந்த வார தொடக்கத்தில் POLITICO இடம், புதிய EU ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் "தானாகவே நீக்கப்படாது" என்றும் அவை அமலில் இருக்கும் என்றும் கூறியது. 

அதேபோல், புடாபெஸ்ட் அதன் தேசிய அளவிலான பாதுகாப்பைப் பராமரிக்கும் என்று ஹங்கேரியின் விவசாய அமைச்சர் இஸ்த்வான் நாகி கூறினார், அதே நேரத்தில் பிரஸ்ஸல்ஸ் "உக்ரேனிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக" குற்றம் சாட்டினார்.

அவரது ஸ்லோவாக் சமமான ரிச்சர்ட் டகாக், புதிய ஒப்பந்தத்தின் பாதுகாப்புகள் உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க "போதுமானதாக இல்லை" என்று கூறி, பிராடிஸ்லாவாவும் இதைப் பின்பற்றும் என்று பரிந்துரைத்தார்.

GettyImages-2224934344-1024x683.jpg

உக்ரேனிய தானியங்கள் மற்றும் பிற பண்ணை பொருட்களை உள்ளடக்கிய இந்தத் தடைகள், தேசிய வர்த்தக தடைகளைத் தடைசெய்யும் ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தை விதிகளை மீறுகின்றன. | உக்ரின்ஃபார்ம்/கெட்டி இமேஜஸ்

அக்டோபர் 13 அன்று EU நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் , ரஷ்யாவின் 2022 படையெடுப்பிற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக வர்த்தக தாராளமயமாக்கலை மாற்றுகிறது, இது ஐரோப்பிய விவசாயிகளுக்கு பாதுகாப்புகளைச் சேர்க்கும் அதே வேளையில் உக்ரேனிய ஏற்றுமதிகளுக்கு மிகவும் நிலையான கட்டமைப்பை வழங்குகிறது.

இந்தக் கதை புதுப்பிக்கப்பட்டது.

https://www.politico.eu/article/poland-hungary-and-slovakia-defy-brussels-as-ukraine-trade-deal-takes-effect/

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து - 9 பேர் காயம்

2 weeks 5 days ago

Nov 2, 2025 - 08:18 AM

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து - 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. 

தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். 

கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சம்பவத்தை அடுத்து, அந்த ரயிலின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நகரத்தின் பல வீதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் மூடியுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmhh436c301c7o29ng88tb3uv

80 வயது மூதாட்டியை தீவிலேயே விட்டு புறப்பட்ட சுற்றுலா கப்பல் - இறுதியில் நடந்தது என்ன?

2 weeks 6 days ago

சுற்றுலா கப்பல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கட்டுரை தகவல்

  • லானா லாம்

  • பிபிசி செய்தியாளர்

  • 42 நிமிடங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற 'கோரல் அட்வென்ச்சர்' என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், "கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே'' தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 'கோரல் அட்வென்ச்சர்' கப்பலின் '60 நாள்' பயணம் நிறுத்தப்பட்டுள்ளது.

"சுசான் ரீஸின் துயர மரணம் மற்றும் அதற்கு முன்னர் கப்பலில் கண்டறியப்பட்ட இயந்திர சிக்கல்கள் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோரல் அட்வென்ச்சர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விஷயம் புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டது" என கப்பல் நிறுனவனமான கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஃபைஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

"பயணிகளுக்கு டிக்கெட்டிற்கான முழுப் பணமும் திரும்ப வழங்கப்படும் என்றும், தனி விமானங்கள் மூலம் பயணிகளை திருப்பி அனுப்புவதற்கான பணிகளை கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வருவதாகவும்" அவர் ஒரு அறிக்கை மூலம் கூறியுள்ளார்.

பயணக் கப்பல்

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, சுசான் ரீஸ்

என்ன நடந்தது?

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 26) கிரேட் பேரியர் ரீஃபில் உள்ள லிசார்ட் தீவில் உயிரிழந்த நிலையில் சுசான் ரீஸ்-இன் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமையன்று, அவர் தனது சக பயணிகளுடன் தீவில் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு கப்பல் புறப்பட்டபோது அதில் அவர் இல்லை என்பதை யாரும் அறியவில்லை.

கோரல் அட்வென்ச்சர் கப்பல், தீவில் இருந்து கிளம்பும்போது "என் அம்மா இல்லாமல் கிளம்பியது என்ற செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக" உயிரிழந்தவரின் மகளான கேத்தரின் ரீஸ் கூறியுள்ளார்.

தனது தாய் சுறுசுறுப்பானவர், ஆரோக்கியமானவர், தோட்டப் பராமரிப்பில் ஆர்வமுள்ளவர் மற்றும் காட்டுப்பகுதிகளில் நடப்பதில் ஆர்வம் கொண்டவர் என்று அவர் விவரித்தார்.

"எங்களுக்குச் சொல்லப்பட்ட சில விஷயங்களிலிருந்து, கவனக்குறைவு மற்றும் அடிப்படை அறிவு இல்லாததே இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிகிறது," என்று அவர் கூறினார்.

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Coral Expeditions

ஆஸ்திரேலியாவைச் சுற்றிப்பார்க்க 60 நாள் பயணமாக கோரல் அட்வென்ச்சர் கப்பல் இந்த வார தொடக்கத்தில் கெய்ர்ன்ஸ் நகரத்திலிருந்து புறப்பட்டது. இதில் பயணித்த நியூ செளத் வேல்ஸைச் சேர்ந்த சுசான் ரீஸ், இந்தப் பயணத்தின் முதல் நிறுத்தமான லிசார்ட் தீவில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று தெரிகிறது.

பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலுத்தி இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள், ஒரு நாள் பயணத்திற்காக பிரத்யேக தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பயணிகளுக்கு மலையேற்றம் அல்லது ஸ்நோர்கெல்லிங் என இரண்டு விருப்பத்தெரிவுகள் இருந்தன.

தீவின் மிக உயரமான சிகரமான குக்ஸ் லுக்கிற்கு சுசான் நடந்து செல்ல முடிவு செய்து மலையேற்றக் குழுவில் சேர்ந்தார். இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் குழுவிடமிருந்து பிரியும் சூழல் ஏற்பட்டது.

பயணக் கப்பல்

"காவல்துறை அளித்த தகவலில் இருந்து நாங்கள் புரிந்துகொண்டது என்னவென்றால், அன்று வெப்பம் அதிகமாக இருந்துள்ளது, மலை ஏறும் போது அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது," என்று கேத்தரின் கூறினார்.

"அவரை தனியாக கீழே செல்லும்படி கூறியிருக்கின்றனர். பின்னர் கப்பல் கிளம்பும்போதும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடாமல், அம்மாவை விட்டுவிட்டு சென்றுள்ளனர்."

"இதில் ஏதோ ஒரு கட்டத்தில், அல்லது பிறரிடமிருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, தனியாக இருந்த அம்மா இறந்துவிட்டார்."

"அம்மாவின் உயிரைக் காப்பாற்ற நிறுவனம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது விசாரணையில் தெரியவரும்" என்று நம்புவதாக கேத்ரின் கூறினார்.

ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம்(Amsa), இந்த மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், கப்பல் பணியாளர்களைச் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்கு காணாமல் போன மூதாட்டி குறித்து கப்பலின் கேப்டன் முதலில் தகவல் தெரிவித்ததாக Amsa செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தகவல் கிடைத்த சில மணி நேரத்தில், பயணியைத் தேடி தேடல் குழு ஒன்று தீவுக்குத் சென்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தேடும் முயற்சிகள் நிறுத்தப்பட்டாலும், பின்னர் ஒரு ஹெலிகாப்டர் திரும்பி வந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுசானே ரீஸ்-இன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று பேசிய, கோரல் எக்ஸ்பெடிஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஃபிஃபீல்ட், "சுசானே ரீஸ்-இன் மரணத்திற்கு நிறுவனம் 'மிகவும் வருந்துவதாகவும்', ரீஸ் குடும்பத்திற்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும்" கூறினார்.

"குயின்ஸ்லாந்து காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம், அவர்களின் விசாரணைக்கு உதவுகிறோம். விசாரணை முடியும் வரை நாங்கள் எந்தவிதக் கருத்துகளையும் கூற முடியாது" என்று மார்க் ஃபிஃபீல்ட் கூறினார்.

நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கோரல் அட்வென்ச்சர் கப்பல் 46 பணியாளர்களுடன் 120 விருந்தினர்கள் பயணிக்கும் வசதி கொண்டது. இது ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் உள்ள தொலைதூரப் பகுதிகளை அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் பகல்நேர சுற்றுலாக்களுக்காக பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் 'டெண்டர்ஸ்' எனப்படும் சிறிய படகுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது போன்ற சம்பவங்கள் அரிதானவை என்றும், மேலும் பயணக் கப்பல்களில் எந்தப் பயணிகள் ஏறுகிறார்கள் அல்லது இறங்குகிறார்கள் என்பதைப் பதிவு செய்யும் அமைப்புகள் உள்ளன என்றும் பயண வலைத்தளமான செய்ல்அவேஸ்-இன் (Sailawaze) 'க்ரூஸ்' பிரிவு ஆசிரியர் ஹாரியட் மாலின்சன் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பயணக் கப்பல் நிறுவனங்கள் இந்த நடைமுறைகளை மிகவும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. தற்போது நடைபெற்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒன்று என்றாலும், இது அரிதான நிகழ்வாகும்" என்று மாலின்சன் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp85jk2znvno

தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி !

2 weeks 6 days ago

தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி !

01 Nov, 2025 | 01:49 PM

image

தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டதாக பிரதான எதிர்க்கட்சித் தரப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்யப்பட்டதால், எதிர்க்கட்சியை நசுக்கும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema) கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார்.

தலைநகர் டார் எஸ் சலாமில் சுமார் 350 பேரும், மவான்ஸா (Mwanza) நகரில் 200-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டதாகவும், பிற பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சேர்த்து, மொத்த பலி எண்ணிக்கை சுமார் 700 ஆக இருக்கலாம் என்றும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அவர்கள் இந்த உயிரிழப்பு விவரங்களை வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் மூலமாகக் கட்சி உறுப்பினர்களின் வலையமைப்பு மூலம் சேகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாகவும், மொத்த எண்ணிக்கை 700 முதல் 800 வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகமும் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்து கவலை தெரிவித்ததுடன், பாதுகாப்புப் படைகள் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கிடைத்த தகவல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுக்கு முன்னரே பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டனர். இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறையைக் கட்டுப்படுத்த நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை குறித்த தகவல்களைச் சரிபார்க்க முடியாத அளவிற்கு நாடு முழுவதும் இணையத்தள சேவை துண்டிக்கப்பட்டிருப்பதும் தகவல் சரிபார்ப்பை கடினமாக்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/229225

நமீபியாவில், பாலைவனச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?

3 weeks ago

இந்தச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?

பாராட்டுகளை பெற்ற கடல்சார் பெண் சிங்கத்தின் புகைப்படம்

பட மூலாதாரம், Griet Van Malderen

கட்டுரை தகவல்

  • இசபெல் கெர்ரெட்சன்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

நமீபியாவில், ஒரு பாலைவனச் சிங்கக் குழு தங்கள் பாரம்பரிய வேட்டையாடும் இடங்களை விட்டு வெளியேறி, அட்லாண்டிக் கடற்கரைக்குச் சென்று, உலகின் ஒரே 'கடல்சார் சிங்கங்களாக' மாறியுள்ளன. இந்த வியத்தகு நடத்தையை ஒரு புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார்.

அது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் புகைப்படம்: நமீபியாவின் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில் ஒரு பெண் சிங்கம் தூரத்தில் பார்வை பதிந்திருக்க, பின்னணியில் சீற்றமான அலைகள் கரையில் வந்து மோதிச் சிதறுகின்றன.

நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையின் கடினமான சூழலில் உயிர்வாழ கடல்நாய்களை வேட்டையாடக் கற்றுக் கொண்ட பாலைவனச் சிங்கங்களில் காமாவும் ஒன்று.

அந்த சிங்கத்தைப் பெல்ஜிய புகைப்படக் கலைஞர் கிரீட் வான் மால்டரென் வியத்தகு முறையில் படம் பிடித்துள்ளார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் நடத்தப்படும் மதிப்புமிக்க 'ஆண்டின் சிறந்த வன உயிர் புகைப்படக் கலைஞர்' போட்டியில் அவரது புகைப்படம் மிகவும் பாராட்டப்பட்டது.

"அது நாள் முழுவதும் அந்த கடல்நாயைக் கவனித்துக் கொண்டிருந்தது," என்று வான் மால்டரென் கூறுகிறார். அவர் காரில் இருந்தபடியே காமாவைப் பார்த்துக் கொண்டே, அந்தப் படத்தைப் பிடிக்க பல நாட்கள் காத்திருந்தார்.

மொத்தம் 80 சிங்கங்களைக் கொண்ட நமீபியாவில், ஸ்கெலிட்டன் கடற்கரையில் 12 பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன.

அவை வறண்ட நமீபிய பாலைவனத்திலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்கு உணவைத் தேடி இடம்பெயர்ந்து, இந்த புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப 2017-ஆம் ஆண்டில் தங்கள் உணவு மற்றும் நடத்தையை கடுமையாக மாற்றிக் கொண்டன. மேலும், இந்த மாற்றத்தால் அவை செழித்து வளர்வதாகவும் தெரிகிறது.

'எல்லாமே ஒரு போராட்டம்தான்'

"இந்த விலங்குகள் எவ்வளவு மீள்தன்மை கொண்டவை என்பதைப் புகைப்படம் காட்டுகிறது... அவை உயிர்வாழத் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக் கொள்கின்றன," என்கிறார் வான் மால்டரென்.

"இந்தச் சிங்கங்கள் கடினமானவை. வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதைப் பற்றியது, இங்கு எல்லாமே ஒரு போராட்டம்தான்."

காமாவுக்கு மூன்று மாத வயதானதிலிருந்தே அதை வான் மால்டரென் கவனித்து வருகிறார். அதற்கு இப்போது மூன்றரை வயது. "கிட்டத்தட்ட அது வயது வந்த சிங்கமாகிவிட்டது," என்று அவர் கூறுகிறார்.

மேலும், அந்தப் பெண் சிங்கம் ஒரே இரவில் 40 கடல்நாய்களைக் கொல்லக்கூடிய அச்சமூட்டும் வேட்டைக்காரியாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

நமீபியாவின் பாலைவனச் சிங்கங்களை 1980 முதல் கண்காணித்து வரும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் பிலிப் ஸ்டாண்டர், ''காமா, ஸ்கெலிட்டன் கடற்கரையில் வளர்ந்த முதல் தலைமுறை சிங்கங்களில் ஒன்று. வான் மால்டரெனின் புகைப்படம் உண்மையிலேயே முக்கியமானது. ஏனெனில் அது காமா, கடற்கரையில் தனியாக இருந்த முதல் நாளைக் காட்டுகிறது" என்று கூறுகிறார்.

நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் 1980களில் ஸ்கெலிட்டன் கடற்கரையில் வாழ்ந்தன, ஆனால் ஒரு வறட்சி மற்றும் விவசாயிகளுடனான மோதல் காரணமாகப் பெரும்பாலான சிங்கங்கள் அழிந்த பிறகு அவை பாலைவனத்திற்குத் திரும்பின என்று ஸ்டாண்டர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த விலங்குகள் "மீண்டும் கடற்கரைக்குத் திரும்பும் வழியைக் கண்டுபிடித்துள்ளன," என்று அவர் கூறுகிறார்.

'நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை'

இந்த விலங்குகள் "மிகவும் வாழத் தகுதியற்ற நிலப்பரப்பில், தாவரங்கள் இல்லாத பெரிய மணல் குன்றுகளின் பரப்பில்" வாழப் பழகியுள்ளன என்று 1997 இல் 'பாலைவனச் சிங்கப் பாதுகாப்பு அறக்கட்டளையை' (Desert Lion Conservation Trust) நிறுவிய ஸ்டாண்டர் கூறுகிறார்.

"பாலைவனச் சிங்கங்கள் நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை," என்கிறார் ஸ்டாண்டர். அவை எந்தச் சிங்கத்தை விடவும் மிகப்பெரிய வாழ்விடத்தைக் கொண்டுள்ளன என்று அவர் கூறுகிறார்.

மேலும் "அவை மிகவும் ஆரோக்கியமான, சிறந்த விளையாட்டு வீரர்கள். ஒரு பாலைவனச் சிங்கத்தின் சராசரி வாழ்விட எல்லை சுமார் 12,000 சதுர கிமீ (4,600 சதுர மைல்கள்)'' என்று அவர் கூறுகிறார்.

அதேசமயம் செரெங்கேட்டியில் உள்ள ஒரு சிங்கத்தின் வாழ்விட எல்லை பொதுவாக சுமார் 100 சதுர கிமீ (39 சதுர மைல்கள்) இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். அவை தண்ணீர் இல்லாமலும் உயிர்வாழப் பழகிவிட்டன. "அவை உண்ணும் இறைச்சியிலிருந்து நீர் தேவையின் பெரும்பகுதியை பூர்த்தி செய்கின்றன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார்.

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உயிர் அறிவியல் துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளரான நடாஷா கூப்பர் கூறுகையில், "சவன்னா வனப்பகுதியில் அல்லது 'லயன் கிங்' படத்தில் வருவது போல ஒரு பெரிய பாறையின் மீது சிங்கங்களைப் பார்த்து நாம் பழகிவிட்டோம், எனவே கடற்கரையில் ஒன்றைப் பார்ப்பது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. இது மிகவும் விந்தையாகவும் அசாதாரணமானதாகவும் உணர்கிறோம்."

பாலைவனச் சிங்கங்கள் சவன்னா சிங்கங்களை விடச் சிறிய குழுக்களாகப் பயணிக்கின்றன என்று கூப்பர் கூறுகிறார். "பொதுவாக, அதிக இரைகள் இருக்கும் பகுதிகளில், குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் சிங்கங்கள் வசிக்கின்றன," என்று அவர் கூறுகிறார்.

"இந்த பகுதியில், போதுமான உணவைப் பெறுவதற்காகச் சிறிய குழுக்களாக அதிக தொலைவுக்குச் சுற்றித் திரிகின்றன."

இது சிங்கங்களைப் படம் பிடிக்கும் பணியை இன்னும் சவாலானதாக ஆக்குகிறது.

"ஒரு புகைப்படக் கலைஞராக இது அருமையாக உள்ளது, ஏனெனில் இந்தச் சிங்கங்கள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "அவை சும்மா படுத்துத் தூங்காமல், உயிர்வாழ எப்போதும் வேட்டையாடுகின்றன."

நமீபியாவின் கடல்சார் சிங்கம்

பட மூலாதாரம், Griet Van Malderen

படக்குறிப்பு, நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக உள்ளன

மீண்டும் கடற்கரைக்கு பயணம்

2015 இல், வறட்சி காரணமாகச் சாதாரணமாக அவை வேட்டையாடும் தீக்கோழிகள், ஓரிக்ஸ் மற்றும் ஸ்ப்ரிங்பாக் போன்ற உள்நாட்டு இரைகள் குறைந்த பிறகு, சிங்கங்கள் மீண்டும் கடலைக் கண்டறிந்து கடற்கரையில் கடலோர இரைகளை வேட்டையாடத் தொடங்கின.

"கடல்நாய்கள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "காலநிலை மாற்றம் இந்த பாலைவனச் சிங்கங்களை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இது, அட்லாண்டிக் கடற்கரையில் உயிர்வாழ அசாதாரண வழிகளில் அவற்றைப் பழக்கப்படுத்தியுள்ளது."

பல தலைமுறைகளாகச் சிங்கங்களின் நடத்தை மாறுவதைப் பார்ப்பது "ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்ட முதல் பாலைவன பெண் சிங்கம் "ஒட்டகச் சிவிங்கிகளை வேட்டையாடுவதில் சிறப்புப் பெற்றிருந்தது," என்று அவர் கூறுகிறார். "இப்போது இந்த கடல்நாய் சிங்கங்களுக்கு ஒரு சிறிய ஓய்வு இடைவெளியைக் கொடுக்கிறது."

2025 மார்ச்சில் கடற்கரையில் இரண்டு குட்டிகள் பிறந்தன என்று வான் மால்டரென் மேலும் கூறுகிறார். "இந்த பரிணாம வளர்ச்சியைக் கண்காணிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்."

நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக இருக்கின்றன. "நாங்கள் அவற்றை கடல்சார் சிங்கங்கள் என்று குறிப்பிடுகிறோம், ஏனெனில் அவை கடல் சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ளவும் கடலில் இருந்து உணவை உட்கொள்ளவும் கற்றுக் கொண்டுள்ளன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார்.

ஸ்டாண்டர் நடத்திய ஒரு ஆய்வில், மூன்று இளம் பெண் சிங்கங்கள் 18 மாத காலப்பகுதியில் உட்கொண்ட உயிரிப்பொருட்களில் (biomass) 86% நீர்க்காகங்கள் (cormorants), ஃபிளமிங்கோக்கள் மற்றும் கடல்நாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டது.

"இது ஒரு சிறிய சிங்கங்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், கடலைப் பற்றிய அறிவை பயன்படுத்தி அவை இப்போது மீண்டு வரும் என்று நம்புகிறோம். ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்," என்கிறார் ஸ்டாண்டர்.

இதற்கு ஸ்கெலிட்டன் கடற்கரையில் வசிக்கும் மனிதர்களுடனான மோதலைக் குறைக்க வேண்டும். சிங்கங்கள் மனிதக் குடியிருப்புகளுக்கு மிக அருகில் வரும்போது அவற்றைப் பயமுறுத்தச் சிங்கங்களை பாதுகாக்கும் காவலர்கள் பட்டாசுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஸ்டாண்டர் கூறுகிறார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்க, சிங்கங்கள் கடக்கும்போது ஒரு எச்சரிக்கையை அனுப்பும் மெய்நிகர் வேலி அமைப்பையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.

சிங்கங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரைப் புகைப்படக் கலையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தான் புகைப்படம் எடுக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதே தனது வேலையின் முக்கிய நோக்கம் என்று வான் மால்டரென் கூறுகிறார். "[எனது புகைப்படங்கள்] இந்த விலங்குகளின் அழகையும் அவற்றின் பலவீன நிலையையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றின் மீள்தன்மை நமக்கெல்லாம் ஒரு பாடம். மாற்றத்தை எதிர்கொள்ள, தகவமைத்துக் கொள்ள மற்றும் காலம் கடப்பதற்கு முன் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

"விலங்குகள் மீண்டு வரும், அவை, அவற்றின் அறியப்பட்ட அழகு மற்றும் வலிமையைப் மீண்டும் பெறும் திறன் கொண்டவை. நாம் அவற்றிற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற அழகான பாடத்தை அந்தப் புகைப்படம் நமக்குக் கடத்துகிறது" என்று ஸ்டாண்டர் ஒப்புக்கொள்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9v1dkp7793o

சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா

3 weeks ago

சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா

October 31, 2025 11:09 am

சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா

தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக வொஷிங்டன் குறைத்துள்ளது.

ஆசிய – பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் இடையில், டொனால்ட் ட்ரம்ப்பும் சீ ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது என்றதோடு, ஃபெண்டானில் (வலிகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து) உற்பத்தியைத் குறைக்க சீ ஜின்பிங் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.”ஃபெண்டானில் நிலைமையை கவனித்துக் கொள்வதாக சீனா உறுதி அளித்திருக்கிறது.

அவர்கள் உண்மையிலேயே வலுவான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என நான் நம்புகிறேன். எனவே, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாகக் குறைத்துள்ளேன். இனி, சீன பொருட்களுக்கான ஒட்டுமொத்த இறக்குமதி வரி 47 சதவீதமாக இருக்கும். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது ஓராண்டுக்கான ஒப்பந்தம்.

எனினும், இந்த ஒப்பந்தம் தொடரும் என நம்புகிறேன். ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாக நாங்கள் மீண்டும் சந்தித்து இது குறித்து கலந்துரையாடுவோம்.நான் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வேன். அதன் பிறகு சீன அதிபர் சீ ஜின்பிங் அமெரிக்கா வருவார். சீனா உடனான அரிய புவி கனிய மணல்கள் குறித்த பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது.

அது உலகத்துக்கானது. தாய்வான் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. உக்ரைன் குறித்து நாங்கள் அதிகம் விவாதித்தோம். இதில், ஏதாவது முடிவு எட்டப்படுமா என்பது குறித்து நாங்கள் இணைந்து செயல்படப் போகிறோம். சீ ஜின்பிங் எங்களுக்கு உதவப் போகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://oruvan.com/us-reduces-import-tariffs-on-china-by-10-percent/

அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு

3 weeks ago

அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு

October 31, 2025

அமெரிக்க அணு ஆயுதங்களை உடனடியாக சோதனை செய்து பார்க்குமாறு அமெரிக்க போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

“பிற நாடுகளின் சோதனை திட்டங்களால் நான் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதே அளவில் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

உலகில் எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா இரண்டாவது இடத்திலும், அதை விட மிக குறைவாக ஆயுதங்களை கொண்டு சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால், “ஐந்து ஆண்டுகளில் நாம் சமமாக இருப்போம்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அணு ஆயுதங்கள் அபாரமான அழிக்கும் சக்தியை கொண்டுள்ளன என்று அங்கீகரிக்கும் டிரம்ப், ஆயுதங்களை மேம்படுத்துவதை தவிர தனக்கு “வேறு வழியில்லை” என்றும் கூறியுள்ளார்.

https://www.ilakku.org/trump-orders-immediate-testing-of-us-nuclear-weapons/

சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு…

3 weeks ago

சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு…

October 31, 2025

சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேற்று மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை இராணுவப் படையினர் கொடுரமாகக் கொன்றனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.

நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.

https://www.ilakku.org/சூடானில்-மருத்துவமனை-மீத/

இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்!

3 weeks ago

New-Project-347.jpg?resize=750%2C375&ssl

இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! 

ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோரரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரை விண்ட்சர் மாளிகையான ரோயல் லோட்ஜை விட்டு வெளியேற வெளியேற உத்தரவிட்டுள்ளார். 

பக்கிங்ஹாம் அரண்மனை இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியது.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் உறவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க பல வாரங்களாக எழுந்த அழுத்தங்களின் பின்னணியில் இந்ந நடவடிக்கை வந்துள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அவமானப்படுத்தப்பட்ட இளவரசரைச் சுற்றியுள்ள ஊழலில் இருந்து அரச குடும்பத்தை விலக்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இதனை பலர் கருதுகின்றனர்.

இது தொடர்பில் வியாழக்கிழமை (30) பிற்பகுதியில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆண்ட்ரூ தனது ரோயல் லோட்ஜ் என்ற மாளிகையை விட்டுக்கொடுக்க முறையான அறிவிப்பு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் மாற்று தனியார் தங்குமிடத்திற்குச் செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஆண்ட்ரூ இளவரசராக அல்லாமல் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது.

புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மன்னரின் இந்த முடிவு, நவீன பிரிட்டிஷ் வரலாற்றில் அரச குடும்ப உறுப்பினருக்கு எதிரான மிகவும் வியத்தகு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

மன்னர் சார்லஸின் இந்த முடிவினை அவரது குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மேலும் பல கேள்விகளை எதிர்கொண்ட பிறகு, ஆண்ட்ரூ இந்த மாத தொடக்கத்தில் யார்க் டியூக் உட்பட தனது பிற அரச பட்டங்களை கைவிட்டார்.

ஆண்ட்ரூ ஒரு காலத்தில் ஒரு துணிச்சலான கடற்படை அதிகாரியாகக் கருதப்பட்டார் மற்றும் 1980களின் முற்பகுதியில் அர்ஜென்டினாவுடனான பால்க்லாந்து போரின் போது இராணுவத்தில் பணியாற்றினார்.

ஆனால் அவர் 2011 இல் இங்கிலாந்து வர்த்தக தூதர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2019 இல் அனைத்து அரச கடமைகளையும் இராஜினாமா செய்தார், பின்னர் 2022 இல் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவரது இராணுவ தொடர்புகள் மற்றும் அரச ஆதரவுகள் பறிக்கப்பட்டன, அதை அவர் எப்போதும் மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451614

Checked
Fri, 11/21/2025 - 16:47
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe