2 months 3 weeks ago
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அவசர உதவி மையம்! 29 Nov, 2025 | 12:26 PM இந்திய உயர் ஸ்தானிகராலயம், சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. பயணிகளுக்கு உணவு மற்றும் நீர் உட்படத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வழங்கி வருகிறது. உதவி தேவைப்படும் எந்தவொரு இந்தியப் பயணியும் அவசர இலக்கமான +94 773727832 ஐத் தொடர்புகொள்ள முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231908
2 months 3 weeks ago
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ அமெரிக்கா தயார்! 29 Nov, 2025 | 12:16 PM சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களை மீட்கும் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதி பேச்சாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார். "டிட்வா" புயலின் விளைவாகத் தொடர்ந்து மோசமான கலாநிலை,வெள்ளம், மண்சரிவு என்பன பதிவாகிவரும் நிலையில் இலங்கையர்களுக்கு எமது ஆழந்த அனுதாபங்கள். உயிரிழந்தோருக்காகப் பிரார்த்திப்பதுடன் தொடர் மீட்பு உதவிகளை வழங்கிவருவோருக்கு நன்றி எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதி பேச்சாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231907
2 months 3 weeks ago
ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருக்கும் - இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்! 29 Nov, 2025 | 12:09 PM இலங்கை முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்திய “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டு தங்கள் அன்பு உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் மனம் ஒற்றுமையில் நிற்கிறது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் துயரங்களை எதிர்கொள்ளும் அனைவரின் துயரத்தையும் என் இதயம் உணர்கிறது. தேவைப்படும் மக்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவும் பகல் இரவு பாராமல் பாடுபடும் அவசர மீட்புப்படையினர், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் மிக ஆழமாக பாராட்டப்படுகின்றன. ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருந்துள்ளது, மேலும் இனியும் உங்கள் பக்கம் நிற்கும். பாதிக்கப்பட்ட அனைவரும் வலிமை, நம்பிக்கை பெற்று விரைவில் பாதுகாப்பான மற்றும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிடுவீர்கள் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231906
2 months 3 weeks ago
இலங்கைக்கு உடனடி நிவாராணமாக 2 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 'டிட்வா' சூறாவளியின் கடுமையான பாதிப்புகளிலிருந்து நாடு தொடர்ந்து மீண்டு வருவதால், இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளை ஆதரிக்கவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தீவு முழுவதும் உள்ள சமூகங்கள் கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தால் "கடினமான நாட்களை" எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடியின் போது இலங்கையுடன் ஒற்றிணைந்து அமெரிக்கா நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கும்,இலங்கையை மீள கட்டியெழுப்புவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது என்றார். https://tamilwin.com/article/us-commits-usd-2-million-urgent-flood-relief-1764401818
2 months 3 weeks ago
Courtesy: Rajugaran மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திரும்பி வந்த இராணுவத்தினர் இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது. அதனை தொடர்ந்து, விமான படையினரின் உதவி நாடப்பட்ட போது அப்பகுதியில் அதிக மேக மூட்டம் காரணமாக மீட்புக்கு ஹெலிகொப்டர்களை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் எமது பிராந்திய செய்தியாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். மேலும், மன்னார் மாந்தை பகுதியில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mannar-maanthai-eaxtreme-flood-40-trapped-1764414289
2 months 3 weeks ago
29 Nov, 2025 | 01:47 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சுத்தமான நீரை பயன்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வித்துள்ளது. சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்! | Virakesari.lk
2 months 3 weeks ago
29 Nov, 2025 | 02:51 PM நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று, நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் ஏற்பட்ட மண்மேடு சரிவின் காரணமாக சோதனைச் சாவடி முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. அப்போது 19வது இலங்கை தேசிய இராணுவப்படையைச் சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ஒருவரை உள்ளடக்கிய ஐந்து வீரர்கள் சோதனை சாவடி நிலையத்தில் வழக்கம் போல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சரிவு ஏற்பட்டதை முதலில் கவனித்த நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் உடனடியாக லக்சபான இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியைத் தொடர்புகொண்டனர். தகவல் கிடைத்ததையடுத்து, கட்டளை அதிகாரி உடனடியாக மீட்புக் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். பின்னர், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மண்க்குள் சிக்கியிருந்த வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட ஐந்து பேரும் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும், வீதியில் உள்ள மண்மேட்டை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு! | Virakesari.lk
2 months 3 weeks ago
29 Nov, 2025 | 02:57 PM யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இடர்மிகுந்த சூழலில் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்ட செயலாளர்கள் , விமானப்படை, கடற்படை இராணுவம், பொலிஸார் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் மீட்பு பணியாளர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக மீட்டமைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகல மாவட்ட அரச அதிபர்களுடனான ஜனாதிபதியின் zoom கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய வெள்ள நிலவரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயலாளர், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. . பல்வேறு நெருக்கடிகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி | Virakesari.lk
2 months 3 weeks ago
வடக்கு - கிழக்கில் செயலிழந்திருந்த தொலைபேசி சேவைகள் வழமைக்கு.. வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு நாளாக செயலிழந்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள நேற்றிலிருந்து இணைய வசதிகளும் தொலைபேசி வசதிகளும் முற்றுமுழுதாக செயலிழந்திருந்தன. தற்போதைய நிலைமை.. இந்நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், குறித்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள், மின்சார துண்டிப்பு, அங்குள்ள இணைய வசதிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவே தொலைபேசிகள் செயலிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே தற்போது குறித்த தொடர்பு சேவைகள் வடக்கு - கிழக்கு பகுதிகளில் மீண்டும் செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://tamilwin.com/article/telephone-calls-down-cyclone-ditwah-intensifies-1764424845
2 months 3 weeks ago
குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! 29 Nov, 2025 | 05:24 PM குருநாகல் பன்னல நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! | Virakesari.lk
2 months 3 weeks ago
வெள்ளம் மற்றும் மண்சரிவு: நாடு முழுவதும் 206 வீதிகள் தடை Nov 29, 2025 - 07:12 PM சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாடு முழுவதும் பல வீதிகள் மற்றும் பாலங்களுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார். அதன்படி, பிரதான வீதிகள் உட்பட நாடு முழுவதும் 206 வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 10 பாலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கான அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வீதிகளும் தற்போது தடைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmikcclsq0265o29nj5tbh7mf
2 months 3 weeks ago
29 Nov, 2025 | 05:33 PM கடும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி இருந்த வவுனியா நகரம் தற்போது மெல்ல மெல்ல வழமையான நிலைமைக்கு திரும்பி வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான மழையின் காரணமாக பல்வேறு பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மக்கள் பலர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை தன்னார்வ செயற்பாட்டாளர்கள் வழங்கி வந்ததோடு அரச திணைக்களங்கள் சில வழங்கி இருந்தன. இதேவேளை வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு பேரிடர் ஏற்பட்ட நிலையில் வவுனியா மாவட்டத்தில் இரு உயிரிழப்புக்கள் இடம்பெற்றதோடு பல்வேறு அசெளகரியத்திற்கு மக்கள் முகம் கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. நீரில் அகப்பட்டு மரணங்கள் வவுனியா சாந்தசோலை பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொது சுகாதார பரிசோதகரான 51 வயதான குமார செனவிரத்தின என்ற மட்டக்களப்பை சேர்ந்த ஆணும் 38 வயதுடைய 306 ஏ காத்தான்குடி என்ற முகவரியை சேர்ந்த முகமது முஸாபின் சப்ரினா எனவும் தெரியவந்துள்ளது. வெள்ளத்தில் அகப்பட்ட மக்கள் இதேவேளை வவுனியாவில் கந்தசாமி நகர், பழைய மெனிபார்ம், கோதண்டர்நொச்சிக்குளம், பூம்புகார் ஆகிய இடங்களில் வெள்ளத்தில் அகப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற முடியாத நிலையில் காணப்பட்ட நிலையில் அவர்களை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது குளங்களின் நிலை இந் நிலையகல் பாவற்குளத்தின் நான்கு வாண் கதவுகளும் முழுமையாக பத்து அடிவரை திறக்கப்பட்டுள்ளதுடன் பேராறு அணைக்கட்டின் மூன்று வான்கதவுகளும் ஐந்து மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளது. இக் குளங்களுக்கு கீழுள்ள பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதேவேளை பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதன் காரணமாக குளக்கட்டுகளை வெட்டி நீரை வெளியேற்றும் செயற்பாட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து இந்நிலையில் வவுனியாவில் இருந்து மக்கள் தென்பகுதி நோக்கியோ யாழ்ப்பாணம் நோக்கியோ செல்ல முடியாத வகையில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் சாந்தசோலை பகுதியில் பல அடி உயரத்திற்கு நீர் ஏ9 வீதியை ஊடறுத்து சென்றதுடன் கல்குண்ணாமடு மற்றும் ஈரப்பெரியகுளம் போன்ற பகுதிகளிலும் ஏ9 வீதி ஊடறுத்து பல அடி உயரத்துக்கு நீர் சென்ற காரணத்தால் குறித்த பகுதிகளின் ஊடாக மக்கள் போக்குவரத்து செய்வதற்கு பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில் தற்போது குறித்த பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோடி இருப்பதன் காரணமாக பழமையான போக்குவரத்து நடைமுறைகள் இடம் பெற்று வருகின்றது. தொலைத்தொடர்புகள் இந்நிலையில் கையடக்க தொலைபேசி வலையமைப்புக்கள் பல இடங்களில் செயழிலந்துள்ளமையினால் மக்களை தொடர்பு கொள்வதிலும் பெரும் சிரமங்களுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றனர். வழமைக்கு திரும்பும் வவுனியா | Virakesari.lk
2 months 3 weeks ago
சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம். 9 Nov, 2025 | 05:31 PM சூறாவளி ஏற்படும் நிலைமை நாட்டை விட்டும் நகர்ந்து செல்கின்ற நிலையில் நேரடி பாதிப்பு நீங்கியுள்ள போதிலும், மறைமுகமான அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கிறது.இதன் விளைவாக, வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். இது தவிர மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் ஏனைய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார். இருந்த போதும், கடுமையான மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், அனர்த்த நிலைமை இன்னும் தணியவில்லை என்பதால் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்குமாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் கோரினார். சூறாவளி நிலைமையின் காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பிகள் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்பதோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அவர் மேலும் வலியுறுத்தினார். அத்தோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் கிணறுகளை சுத்திகரிக்காமல் குடிநீருக்காக அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இது பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். இருப்பினும், இதன் மறைமுகமான தாக்கங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிக்கும் என்பதோடு நாட்டிற்குள்ளேயும் சுற்றியுள்ள கடற் பிரதேசத்திலும் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் மீன்பிடி மற்றும் கடற் போக்குவரத்து நடவடிக்கைகளை இன்றைய தினம் தவிர்க்குமாறும் அவர் கோரினார். இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும் போது நீங்கும் எனவும் அதன் பின்னர் சுமூகமான வானிலை நிலைமை உருவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் | Virakesari.lk
2 months 3 weeks ago
சீரற்ற வானிலை: உயிரிழப்பு 153 ஆக அதிகரிப்பு Nov 29, 2025 - 06:35 PM சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (29) மாலை 6.00 மணிக்கு அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 100,898 பேர் தற்போது 798 பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmikb0jtm0264o29nz7prtcbc
2 months 3 weeks ago
பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் திட்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் இன்று மதியம் (நவம்பர் 29 சனிக்கிழமை) வரை 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 176 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கொழும்புக்கு செல்ல வேண்டிய சர்வதேச விமானங்கள் பல நேற்று (நவம்பர் 28) இந்தியாவுக்கு திருப்பிவிடப்பட்டன. இந்நிலையில், துபையில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த தமிழர்கள் உட்பட பலர், கொழும்புவின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 'கொழும்பு விமான நிலையத்தில் ஒரு அவசர உதவி மையம் அமைக்கப்படுகிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உணவு, தண்ணீர் உள்பட தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக' இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒரு எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது. +94 773727832 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் கூறியது என்ன? பட மூலாதாரம்,UGC திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஞானியார் சுபைர், சௌதி அரேபியாவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "துபையில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வருவதே பயணத் திட்டம். வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) இலங்கை வந்து சேர்ந்தோம். திட்வா புயல் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை, கொச்சிக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று கூறிவிட்டார்கள். 24 மணிநேரங்களைக் கடந்தும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக வந்தவர்கள் கூட இங்கு சிக்கியுள்ளனர்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இங்கு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். ஆனால், கடந்த 2 நாட்களாக, உறங்குவதற்கான இடமோ, உணவு மற்றும் தண்ணீரோ வழங்கப்படவில்லை. விமான நிலையத்தில் இருப்பவர்களிடம் கேட்டால் முறையான தகவல்கள் எதுவும் கூறவில்லை." என்கிறார். இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவிகள் ஏதும் கிடைத்ததா எனக் கேட்டபோது, "இந்திய தூதரக அதிகாரிகள் இன்று மதியம் தான் வந்து எங்களை சந்தித்தனர். தேவையான உதவிகள் உடனடியாக செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்கள். ஆனால் எந்த உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை" எனக் கூறினார். பட மூலாதாரம்,UGC கொழும்பு விமான நிலையத்திலிருந்து பேசிய தஞ்சாவூரைச் சேர்ந்த மகேஸ்வரி, "உணவு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களுக்கு மேலாக எங்களால் எப்படி இருக்க முடியும். விமான நிலையத்தில் இந்திய ரூபாயை ஏற்க மறுக்கிறார்கள். அதற்காக போராட்டம் கூட நடத்தினோம். இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை சந்தித்து உதவுவதாக கூறினர். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை. உணவு இல்லாமல் இங்கு சிலர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்கள்" என்று கூறினார். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறிய மகேஸ்வரி, "இங்கு தமிழ்நாட்டை சேர்ந்த பலர் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். கூட்ட நெரிசலில் பலரது பாஸ்போர்ட்டுகள் காணாமல் போய்விட்டன எனக் கூறுகிறார்கள். இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார். நவம்பர் 27 அன்று அபுதாபியிலிருந்து இலங்கை வந்துசேர்ந்த அறந்தாங்கியைச் சேர்ந்த சதீஷ்குமார், "இந்திய தூதரக அதிகாரிகள் வந்து அளித்த உணவு இங்கு இருந்த பாதி பேருக்கு கூட போதவில்லை. விமான நிலையத்தில் உள்ள பணியாளர்கள், அதிகாரிகளும் அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை. நான் இந்தியாவுக்கு வர சில நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்திருந்தேன். இப்போது இங்கேயே 3 நாட்கள் கழிந்துவிட்டது. உடல்நிலை சரியில்லாமல் பலரும் அவதிப்படுகிறார்கள்" என்று கூறினார். இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு கூறியது என்ன? பட மூலாதாரம்,@IndiainSL படக்குறிப்பு,திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா இதுவரை 12 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தள பக்கத்தில், இலங்கை விமான நிலையம் மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் இருந்தும், இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற அவசர எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் ஒரு அவசர உதவி மையம் அமைக்கப்படுகிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உணவு, தண்ணீர் உள்பட தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா இதுவரை 12 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். "'ஆபரேஷன் சாகர்பந்து' தொடங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் C-130 விமானம் - கூடாரங்கள், தார்பாய்கள், போர்வைகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு சென்றடைந்தது" என்று எஸ். ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கொழும்பு விமான நிலையத்தில் உள்ள தமிழர்களை மீட்பது குறித்து தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசரிடம் கேட்டபோது, "இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்." என்று கூறினார். மேலும், "இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். அவர்களுடன் ஒருங்கிணைந்து கொழும்பு விமான நிலையத்தில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yqdrnll3ro
2 months 3 weeks ago
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 10214 குடும்பங்களை சேர்ந்த 31634 பேர் பாதிப்பு 29 Nov, 2025 | 01:04 PM சீரற்ற வானிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 10214 குடும்பங்களை சேர்ந்த 31634 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 182 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து சனிக்கிழமை (29) காலை 8.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 294 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 9602 குடும்பங்களை சேர்ந்த 29809 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.14 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 612 குடும்பங்களை சேர்ந்த 1825 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 360 குடும்பங்களை சேர்ந்த 1056நபர்களும், தம்பலகாமம் 369 குடும்பங்களை சேர்ந்த 1149 நபர்களும்,மொறவெவ 105 குடும்பங்களை சேர்ந்த 321 நபர்களும்,சேருவில 173 குடும்பங்களை சேர்ந்த 582 நபர்களும், வெருகல் 398 குடும்பங்களை சேர்ந்த 1272 நபர்களும், மூதூர் 4024 குடும்பங்களை சேர்ந்த 11754 நபர்களும்,கிண்ணியா 2375 குடும்பங்களை சேர்ந்த 7763 நபர்களும்,கோமரங்கடவல 41 குடும்பங்களை சேர்ந்த 120 நபர்களும் , பதவிஸ்ரீபுர 371 குடும்பங்களை சேர்ந்த 1187 நபர்களும், குச்சவெளி 1795 குடும்பங்களை சேர்ந்த 5720 நபர்களும், கந்தளாய் 203 குடும்பங்களை சேர்ந்த 710 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/231911
2 months 3 weeks ago
தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை Nov 29, 2025 - 05:43 PM நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகத் தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணையத்தள தொடர்பாடல் வலையமைப்புகளை உடனடியாக வழமைக்குத் திருப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, அரசாங்கத்திற்கும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையில் இன்று (29) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம், 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகம், டிஜிட்டல் அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒலிபரப்பு கோபுரங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டமை மற்றும் வலையமைப்பு செயலிழப்பினால் மக்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் தமது உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாமை குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது. மின்சாரம் தடைப்பட்டுள்ள கோபுரங்களுக்கு உடனடியாக மின்தோற்றிகள் (generators) அல்லது மாற்று வலுசக்தியை வழங்க, குறித்த நிறுவனங்களுக்கும் மின்சார சபையிற்கும் இடையில் நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. சேதமடைந்த கோபுரங்களைச் சீரமைக்கத் தேவையான தொழில்நுட்பக் குழுக்களை அனர்த்தப் பகுதிகளுக்கு அனுப்ப, அரசாங்கத்தின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்பை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. அனர்த்த வேளைகளில் வலையமைப்பு நெரிசலைக் குறைத்து, அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க சேவை வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்தனர். இப்பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் முழுமையானத் தலையீட்டை வழங்குவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதன்போது வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmik968ce025zo29n0e62jf2m
2 months 3 weeks ago
இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 248 ஆக உயர்வு 29 Nov, 2025 | 03:50 PM இந்தோனேஷியாவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 248 ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் சுழற்புயல் காரணமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ன உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் இந்தோனேஷியாவின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231940
2 months 3 weeks ago
கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் நட்சத்திரன் செவ்விந்தியன் ஈழத்தின் முதலாவது விமானத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து தமிழன் என்பதற்காக டிலுக்ஸன் மோகனுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றுதான் டிலுக்சன் மோகன் என்கிறவர் குறைந்தது மூன்று பேட்டிகளில் அடித்துச் சொல்லியுள்ளார். இதற்கு முதல் ஈழத்தில் யாராவது ஒரு விமானத்தை உருவாக்கவில்லையா என்று யாருமே கேட்கவில்லை. உண்மை என்னவென்றால் ஈழத்தில் இதற்கு முதலே ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல. ஈழத்தின் முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கியவரே ஒரு தமிழர்தான். இலங்கை வான் படை Wing Commander N.குணரத்தினம் என்பதே அவர் பெயர். Sri Lanka Air Force's own locally manufactured aircraft is the result of years of hard work in designing, manufacturing and test flying. Pazmany PL2 aircraft project was started in year 1977 and the aircraft made its maiden test flight on 11th April 1980. This twin seater aircraft has taken part in many a fly-past since entering the Sri Lanka Air Force service. Pazmany PL2 aircraft was built by the Aircraft Engineering Wing of the Sri Lanka Air Force, under the personal supervision of Wing Commander N. Gunarathnam. This was the first instance in the history that an aircraft has been completely built in Sri Lanka. இதற்கு முதல் பரீட்சார்த்தமாக பறந்த விமானங்களை உருவாக்கியவர் பிலிப் றே விஜயவர்த்தன இவரது விமானங்கள் பறந்திருந்தாலும் சிவில்/ இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் குணரத்தினத்தின் விமானம் வான் படையால் பயன்படுத்தப்பட்டதால் இவரே இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார். உண்மை வரலாறு இப்படி இருக்க இப்போது சோபாசக்தி முற்றிலும் தன் ஆக்கத்தை எழுதிக்கொடுத்த படுபட்சி என்கிற திருட்டு இலக்கியப்பிரதி மூலம். “ நாவலாசிரியர்” அவதாரம் எடுத்துள்ள டிலுக்சன் மோகன் அடித்து விட்டுள்ள அண்டப்புழுகுகள், ஆகாசப்புழுகுகளை ஒவ்வொன்றாக ஆதாரங்கள், தரவுகள், தருக்கங்களுடன் அம்பலப்படுத்துகிறோம். ரமணன் சந்திரசேகரமூர்த்திக்கு வெடிப்புழுகன் டிலுக்சன் வழங்கிய யூரியுப் பேட்டிதான் அண்மையது. அதில் ரத்மலானையில் தான் Aeronautical Engineering படித்து முடித்தேன் என்று சொல்லியுள்ளார். முன்னதாக Jaffna Monitor க்கு வழங்கிய பேட்டியில் தான் Ratmalana Aeronautical Engineering College ல் படித்ததாகச் சொல்லியுள்ளார். அப்படி ஒரு Engineering கொலீஜே இலங்கையிலில்லை. இலங்கையில் இன்று வரைமும் Aeronautical Engineering ல் BSe பட்டம் பெற இரண்டே இரண்டு இடங்களே உண்டு. 1. Kotelawela Defence University (KDU) 2. மொரட்டுவப் பல்கலைக்கழகம். இந்த இரண்டு இடங்களிலும் இவர் படித்திருக்க வாய்ப்பே இல்லை. இவர் அப்படிச் சொல்லவும் இல்லை. இவரின் LinkedIn பக்கத்தில் Skyline Aviation Sri Lanka வில் படித்ததாகவும் ஒரு Associate Degree பெற்றதாகவும் பதிவு உள்ளது. அங்கு டிப்ளோமா பட்டங்களே உண்டு. BSc இல்லை. ஆனால் தனது இணையத்தில் தனக்கு ஒரு BSc( Aeronautical Engineering) உண்டு என்னு அண்டப்புபுழுகை அவிட்டுவிட்டுள்ளார். இனிமேல் தான் வடிவேலுவின் கிணற்றைக் காணோம் வகையான டிலுக்சனின் அண்டப்புழுகு கொமடிகளுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம். சிரிக்க தயாராகிக் படிக்க வாருங்கள். காமெடி 1. ஈழயுத்தம் முடிந்தபின் தான் Ratmalana Aeronautical Engineering College ல்( அப்படி எதுவுமே ஈழத்தில் இல்லை) படித்துக்கொண்டிருக்கும்போது தான் விமானம் செய்யும் யோசனையை சொன்னதால் நாலாம் மாடிக்கு கொண்டு சென்று அடித்து விசாரித்தாங்களாம். பிறகு இரண்டாம் விசாரணை Air Force வைத்ததாம். தான் இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்கப் போவதாகச் சொன்னபோது இலங்கையின் முதல் விமானத்தை இராவணற் தான் உருவாக்கியதாக Air Force சொன்னதாம். பிறகு மூன்றாம் விசாரணையை Air Force Wing Commander செய்தாராம். அவர் தன் ஆசையைக் கேட்டபின் இலங்கையின் முதல் விமானத்தை புலிகள் செய்து விட்டார்கள் என்று சொன்னாராம். உண்மையிலேயே இலங்கை வான்படை தளபதிகளோ உத்தியோகத்தர்களோ விசாரணை செய்திருந்தால் இந்த காமெடிகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இலங்கையின் முதல் விமானத்தை யார் உருவாக்கியது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அவர்களுடைய மியூசியங்களில் தமிழ் Wing Commander குணரத்தினம் உருவாக்கிய Pazmany PL‑2 light aircraft ஐ மட்டுமல்ல பிலிப் றே விஜயவர்த்தன உருவாக்கிய பல விமானங்களை மட்டுமல்ல அதற்கு முதல் ஈழத்தவர்களால் உருவாக்கப்பட்ட பறந்த , பறக்க எத்தனித்த பல நூறு விமானங்களையும் பார்த்திருப்பார்கள். ஆக இவை டிலுக்சனதும் ஆட்டிலறியை தோளில் வைத்து அடித்ததாக கதை எழுதிய சோபாசக்தியினதும் அண்டப்புழுகுகள். கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம். Archive
2 months 3 weeks ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·proednsoSta0mufc51gmtai900h1m153h7cu2a0galmg306cf38at338 fgh · #கேவலமான #உண்மைகள் !!!!!! படித்தேன்!!!பகிர்ந்தேன்!!!! 1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! 4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!! 5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!! 6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!! 7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி ன்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!! 8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!! படித்ததில் பிடித்தது:- 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது.. 3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.! 4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 5. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்க, பொருள் கொடுங்க, உணவு கொடுங்க, உடை கொடுங்க.. ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க.. 6. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு.. அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு.. 7. டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் விசித்திரமான உலகம் இது.! 8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட, ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான் பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.! 9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள், பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை. 10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்.. இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்... 11.கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்.. மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.! 12.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.. ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்.. மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்.. 13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை.. அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்.. 14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம். 15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க? 16. அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய் மனமுவந்து வேண்டுகின்றேன்......!
Checked
Sat, 02/21/2026 - 22:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed