புதிய பதிவுகள்2

பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?

2 months 3 weeks ago
அறிவார்ந்தவர்களும்,அறிஞர்களும், எல்லாம் தெரிந்தவர்களும்,விஞ்ஞானிகளும் ஒழுங்காக இருந்திருந்தால் உலகில் பிரிவினைகளும்,சண்டைகளும்,யுத்தங்களும் வந்திருக்கவே கூடாது அல்லவா? மனிதன் மனிதனை மதித்து நடந்திருந்தால் பாபாக்களும் கடவுளும் தோன்றியிருக்க மாட்டார்கள். அப்படி தோன்றியிருந்தாலும் மனித பாபாக்களையும் கடவுள்களையும் நம்பியிருக்க மாட்டார்கள். உள்ள நரக வேலைகளை செய்வது மனிதம். இதில் குறை சொல்வது இயற்கையை.....😎

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை  - 2025

2 months 3 weeks ago
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை - 2025 தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2025 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மண்ணின் விடுதலைக்காகத் தம்மை கந்தகத்தீயில் உருக்கி ஆகுதியாக்கிய வீரமறவர்களை, தியாகத்தின் உன்னதங்களை, தமிழீழ விடுதலையின் அத்திவாரக்கற்களை நெஞ்சுருகி வணங்கிடும் நவம்பர் 27 ஆம் நாள், தமிழீழத் தேசிய எழுச்சிமிகு புனித நாளாகும். இன்றைய நாள், தமிழீழத்தின் ஆன்மா எழுச்சி பெற்று, தமிழீழ விடுதலைக்காகச் சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு, தாயகம் தலைவணங்கி, தமிழீழ வீரசுதந்திர வரலாற்றை மீண்டுமொருமுறை உரத்துச்சொல்லும் எழுச்சி நாளாகும். தமிழீழ விடுதலையின் முதல் விதையான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் ஈகத்துடன் தொடங்கி, இன்றுவரை வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களும் எமது நெஞ்சில் அணையாத தீச்சுடராக, அசைக்க முடியாத நம்பிக்கையாக இன்றும் வாழ்கின்றார்கள். விடுதலையின் விதைகளாகவே தமிழீழத்தாயின் மடியில் இவர்களை விதைத்தோம். அவர்களை வரலாற்றுத்தாய் அரவணைத்துக்கொண்டாள். இந்த மானமறவர்கள் துயில்கொள்ளும் இப்புனித நிலங்களைத் துயிலுமில்லங்களாக உருவாக்கிப் போற்றி, வணங்கிவருகின்றோம். இத்துயிலுமில்லங்கள், உலக இராணுவ விதிகளைமீறிச் சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தமிழீழ மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களையும் கொதிநிலையினையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இருந்தும், இத்துயிலுமில்லங்களிலும் அதனை அண்மித்தும், சிங்கள இனவெறி அரசின் எண்ணத்திற்கு மாறாக, மாவீரர் நாளில் தாயகத்திலுள்ள தமிழீழ மக்கள் பேரெழுச்சியோடு மாவீரர்களுக்கு விளக்கேற்றி நினைவுகூர்ந்து வருகின்றார்கள். இந்த மண்ணை ஆழமாக நேசித்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை இவ்வேளை அன்புரிமையுடன் இறுகப்பற்றிக்கொள்கின்றோம். இவர்களிற்கான மதிப்பளிப்புகளைத் தாயகத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் உணர்வோடு முன்னெடுத்துவருகின்றோம் என்பதில் அகநிறைவடைகின்றோம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில், இன்று நாம் ஒரு மிக நெருக்கடியான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம். கடந்த 2009 இற்கு பின்னரான சமகால நிலமை, எமது விடுதலை நோக்கிய பயணத்தைப் பலவழிகளில் தடைகளை ஏற்படுத்தி, அவற்றை இல்லாதொழிக்க முயலும் சவால்கள் நிறைந்த காலமாக மாற்றமடைந்துவருகின்றது. எமது மாவீரர்கள் எந்த மண்ணிற்காகப் போராடினார்களோ, அந்த மண் தற்போதும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவருவதோடு, தமிழர் பகுதிகளில் சிறிலங்காப் படைகளின் எண்ணிக்கை மாறாது பேணப்படுவதும், சிறிலங்காப் படைமுகாம்களை மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் விவசாய நிலங்களிலும் அமைத்திருப்பதும் மகாவலி அபிவிருத்தி, வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற சிறிலங்கா அரச கட்டமைப்புகளாவன, தொன்றுதொட்டுத் தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்கள், மத வழிபாட்டுத்தலங்கள், தமிழ் மக்களின் உடமைகள் என்பன சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், புதிது புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி பௌத்தமயமாக்கல் மூலம் திட்டமிட்ட முறையில் சூறையாடப்படுவதால் தமிழீழத்தின் குடிப்பரம்பல் அமைப்பு மாற்றப்பட்டு, தமிழர்களின் இருப்பையே இல்லாமல் ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அத்தோடு, தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வு என்பது இன்றும் சாத்தியமற்றதொன்றாகவே உள்ளது. ஏனெனில், புனையப்பட்ட கதையான மகாவம்ச மனநிலையில் ஆழ வேரூன்றியிருக்கும் சிங்கள இனவாதத்தின் கட்டமைப்புகளான சனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்றம், பாதுகாப்புத்துறை, நீதித்துறை, பௌத்ததேரர்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளும் இணைந்து எமது தேசியப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதற்குத் தடையாகவுள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் வலதுசாரிகள், இடதுசாரிகள், புரட்சியாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என அடையாளப்படுத்தப்படும் அனைவரும் இனவெறியாளர்களே. தமிழீழத்தில் வாழும் மக்களின் இன அடையாளத்தையோ ஈழத்தீவின் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பதையோ சுயநிர்ணய உரிமையையோ அங்கீகரிக்கக்கூடாது என்பதில் தெளிவான திடமான பார்வையுள்ளவர்களாகவே இவர்கள் திகழ்கின்றார்கள். இதன் காரணமாகவே சர்வதேசக் குமுகாயகத்தினை நோக்கி, தமிழீழ மக்கள் தமது விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடாத்திவருகின்றார்கள். சர்வதேசச் குமுகாயத்தின் ஈடுபாட்டுடனான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் ஒரு நிரந்தர நீதியான தீர்வே சிங்கள தேசத்தின் வளர்ச்சிக்கும் தமிழர் தேசத்தில் வாழும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் வழிவகுக்கும். கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில், சிறிலங்காவின் வழக்கமான வலதுசாரித்துவ மேட்டுக்குடிச் சிங்கள ஆட்சித்தலைமைகளுக்குப் பதிலாக, புரட்சிகர இடதுசாரித்துவச் சிந்தனைகள் நிறைந்துள்ளதாகக் காண்பித்த ஜே.வி.பி. தலைமையிலான அரசானது, ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இவ்வரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக, தமிழ் மக்களிற்கான உரிமைகளை வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்குவந்து ஆண்டொன்று கடந்துவிட்ட நிலையிலும்கூட சம உரிமை வழங்குவதன் பெயரால், ஒற்றையாட்சிச் சிந்தனைக்குட்பட்டு, இலங்கையர் என்ற சிங்களத்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியத்தை நீர்த்துப்போகச்செய்யும் வகையில், இரண்டறக் கலக்கும் சூட்சுமமான சிந்தனையினை முன்னிறுத்தி, தமிழரின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான உரையாடலைக்கூட மறுதலிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. ஜே.வி.பி அரசின் இந்த நடவடிக்கைபற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், இன்றைய ஆட்சிக்குத் தலைமை தாங்கும் இதே ஜே.வி.பியினர் தான், தமிழர் தாயகத்தினைச் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தின் ஊடாக கூறுபோட்டவர்கள். அத்தோடு, தமிழின அழிப்புப் போரிற்குச் சிங்கள இளைஞர்களை இணைத்து, போரைத்தொடர சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களிற்கு முட்டுக்கொடுத்தவர்கள். தற்போதும், சிங்களத் தேசிய பௌத்தமயவாத சிந்தனையை வலுவேற்றி, ஆட்சி அதிகாரத்தை நீடித்துத் தம்வசம் வைத்திருக்கவே திட்டமிட்டுவருகின்றார்கள். இத்தகைய சிந்தனை உள்ளவர்கள், தமிழ் மக்களிற்கு நியாயமான அதிகாரப்பகிர்வுடனான சுயநிர்ணய உரிமையை வழங்குவதற்கு, இதயசுத்தியுடன் செயற்படுவார்களென்று எதிர்பார்க்க முடியாது. அத்தோடு, தாயகத்தில் நிலவும் சூழல் முற்றிலும் வித்தியாசமானது. சிங்களத் தேசியவாத பௌத்தமயவாதத்திற்குத் தற்போது தலைமை தாங்கும் ஜே.வி.பியானது, கிராம மட்டங்களிலிருந்து எதிர்கால சந்ததியினரையும் இளையோரையும் மூளைச்சலவை செய்யும் செயற்பாடுகளில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. சுருங்கக்கூறின், சிறிலங்கா அரசானது தமிழீழத்தேசத்தை சிங்களத்தேசமாக மாற்றி, எமது விடுதலை வேட்கையை மடைமாற்றம் செய்து, விடுதலைச் சிந்தனைகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கையையே இலக்காகக் கொண்டு நகர்த்திவருகின்றது. அன்பார்ந்த தமிழீழ மக்களே! நாம், கல்வி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும். எமது மொழி, வரலாறு, பண்பாடு என்பவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தி, எமது தமிழ்த்தேசிய உணர்வை ஆழமாக விதைக்கவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகின்றது. அத்துடன், தமிழீழ விடுதலைக்கான அரசியல் போராட்டத்தினைப் பல வடிவங்களில் முன்னெடுக்கும் அதேவேளை, தாயகத்திலுள்ள மாணவர், இளையோர், பொதுமக்கள் என்று அனைவரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக, அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி, மனிதப் புதைகுழிகளிற்கான நீதி போன்ற விடயங்களை முன்னிறுத்தி, நீதிக்கான மக்கள் போராட்டங்களைச் சிறிலங்கா அரசிற்குத் தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் பல்வேறு வழிமுறைகளில் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். அறவழியிலான இப்போராட்டங்கள், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை. புலம்பெயர் உறவுகள், எமது மாவீரர்களின் இலட்சியங்களைச் சுமந்து, நீதிக்கான குரலைத் தொடர்ந்தும் ஓங்கி ஒலிக்கச்செய்ய வேண்டும். நாம் வாழும் தேசங்களிலுள்ள அதிகார மையங்களை நோக்கி, நீதிக்கான கோரிக்கைகளை மேலும் வலுவாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பதனைப் புரிந்து அனைவரும் செயற்படவேண்டும். எமது அன்பிற்குரிய இளையோர்களே! தமிழீழத்திற்கான விடுதலைப்பயணத்தின் நாளைய சிற்பிகளே, தமிழீழத்தேசத்திற்கான அங்கீகாரத்திற்காக ஒவ்வொரு இளையோரும் தாம் வாழும் நாடுகளில் உணர்வுடன் முன்னெடுத்துவருகின்ற உரிமைக்கான, உறுதியான பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. புதிய பரிணாமத்தை அடைந்துள்ள இன்றைய தொழில்நுட்பங்களின் ஊடாக, எமது போராட்ட வரலாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாய தேவையாகும். சிறிலங்கா அரசானது தனது திட்டமிட்ட சூழ்ச்சிகளால், நாம் கடந்துவந்த வரலாற்றுப் பாதைகளைத் திசைமாற்றி, நாம் பேணிப்பாதுகாத்து வந்த எமது வரலாற்று ஆவணங்களை அழித்து, உண்மைக்குப் புறம்பான கருத்துருவாக்கங்களைத் திரைப்படங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தவறாக வெளியிட்டு, எமது போராட்டப்பாதையை மடைமாற்றத் தொடர்ந்தும் முயற்சிசெய்துவருகின்றது. இந்த ஆபத்தினைத் தடுத்து நிறுத்தி, எமது இன அடையாளங்களையும் உண்மையான போராட்ட வரலாற்றையும் அதன் ஆவணங்களையும் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினரிற்குக் கடத்தும் பாரிய பொறுப்பானது உங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்தோடு மொழி, கலை, பண்பாடு உள்ளிட்ட எமது இன அடையாளங்களைப் பாதுகாத்து, புரட்சிகரப்பயணத்தைத் தொடர்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எமக்குள்ளது. எமது அன்பிற்குரிய தேசியச் செயற்பாட்டாளர்களே! தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து, நீண்ட நெடிய எமது விடுதலைப்போராட்டப் பயணத்தில் நீங்கள் செலுத்திவரும் பங்கு மிகவும் முக்கியமானது. ஆயுதப்போராட்டம் வீச்சோடு இருந்த காலத்தில், நம்பிக்கையும் அதி உச்ச உறுதியோடும் நீங்கள் செய்த தேசம் நோக்கிய செயற்பாடுகள் அளப்பரியவை. ஆயுதப்போராட்டத்தின் மௌனிப்பிற்குப் பின்னர், புலனாய்வாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், அவமானப்படுத்தல்கள் அனைத்திற்கும் முகம்கொடுத்து, தொடர்ந்து மனத்துணிவோடு உறுதிதளராத உங்களது செயற்பாடுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. உங்களுடைய இந்த உறுதிதளராத செயற்பாடுகள்தான், இன்றுவரை எமது மாவீரர்களின் இலட்சியமாகிய தமிழீழத்திற்கான பாதையில் பயணிக்கக்கூடியதாக உள்ளது. எவ் இடர்வரினும், எமது இலட்சியத்தை நாம் அடையும்வரை உங்களது உறுதிதளராத பயணத்தை மேலும் வீச்சோடும் வேகத்தோடும் தொடர்வது அவசியமானது. இதுவே, மாவீரர்களின் ஈகங்களிற்கு நாம் செய்யும் வரலாற்றுக் கடமையாகும். எமது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களே! தமிழ்த்தேசியம், தமிழ்மொழிக்காப்பு, குமுகாயநீதிக்கான போராட்டம், அடக்குமுறை எதிர்ப்பு என்பவற்றில் ஆழமான பற்றைக்கொண்டிருப்பவர்கள் நீங்கள். எமது தாயகத்தில், கட்டமைப்புசார் தமிழின அழிப்பு இன்றும் மிகவேகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கு எதிராகவும் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு, இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும் வகையில் அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், தார்மீக அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட எமது தேசத்தை மீட்டெடுக்கும் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகத் தொடர்ந்தும் குரல் எழுப்புமாறும் வேண்டிநிற்கின்றோம். அத்துடன், மாவீரர்களின் ஈகங்களாலும் மக்களின் அர்ப்பணிப்புகளாலும் உருவான எமது விடுதலைப்போராட்ட வரலாற்றைச் சிதைத்துத் திரிபுபடுத்தி வெளிவரும் படைப்புகளிற்கு வெளிப்படையாக நீங்கள் தெரிவிற்கும் எதிர்ப்புகளிற்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் இவ் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதோடு, இதனை நிறுத்தும் வகையில் நீங்கள் தமிழ்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதோடு, எமது தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் தமிழ்நாட்டு மக்களிற்கு எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அன்பார்ந்த மக்களே! தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் வகுக்கப்பட்ட, தமிழீழ விடுதலை என்னும் மாபெரும் சித்தாந்த இலட்சியத்தைத் தாங்கி, அவருடைய சிந்தனையின் வழிகாட்டலில் தொடர்ந்தும் கொள்கை வழுவாது உறுதியுடன் தமிழீழ விடுதலைப்போராட்டச் சக்கரம் நகர்ந்துவருகிறது. இன்றைய காலப்பரப்பில், விடுதலைப்போராட்டத்தின் அடித்தளத்தையும், தேசியத்தலைவரின் சிந்தனையான இயங்குவிசையையும் சிதைத்து, அழித்துப் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய தமிழின விரோதக்குழுக்கள் சிறிலங்கா அரசினாலும் பிராந்திய உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இயங்குநிலை மரபைத் தடம்மாற்றி, அழிக்கமுனையும் சக்திகளும் தலைதூக்குகின்றன. விடுதலை அவாவுடன் போராடும் மக்களிடையே நம்பிக்கையீனத்தை விதைத்து, குழப்பத்தை ஏற்படுத்தி, தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட விடுதலைச் சிந்தனைத் தளத்திலிருந்து தமிழினத்தை விலகச்செய்து தமிழீழம் என்னும் கோட்பாட்டை அடியோடு அழித்து விடுவதே இவர்களின் சதித் திட்டமாகும். இந்த நாசகாரப் புலனாய்வு நடவடிக்கையை உணர்ந்து, இன்னும் வீரியமாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலமிதுவாகும். தமிழின விரோதிகளை தெளிவாக இனம்கண்டு, நிராகரித்துக் களையெடுக்கவேண்டும் என்னும் விடுதலை விழிப்புணர்வை ஒவ்வொரு தமிழரும் கொண்டிருக்க வேண்டியது தாயக விடுதலைக் கடமையாகும். சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அரசியலும் புலனாய்வு வலையமைப்பும் அதன் துணைச்சக்திகளும் பல தீர்வுகள், மாற்றங்கள், பொருண்மிய அபிவிருத்தி, நல்லிணக்கம் போன்ற சொற்களின் போர்வையில் ஒற்றையாட்சிக்குள் எமது தேசிய விடுதலையைப் புதைத்துவிட முயற்சிக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியின் கோரப்பிடிக்குள் சிக்குண்டுபோயுள்ள சிறிலங்கா அரசானது, புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடு என்ற பெயரில் அணுகி, அவர்களைப் பயன்படுத்தித் தமிழினத்தின் விடுதலைச் சித்தாந்தத்தை நிரந்தரமாக அழிப்பதற்கு தேவையான புதிய படிமங்களைக் கட்டமைக்க முழனகிறது. இந்த அரசியல்-பொருளாதார, புலனாய்வுச் சதித்திட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுவது தமிழினத்தின் இருப்பிற்கு அத்தியாவசியமானாதாகும். அதேவேளை, தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டிய மக்கள் போராட்டங்களை இன்னும் வீச்சோடு தொடர்வதும் சர்வதேச அரசியல் தளங்களில் இராசதந்திர உறவுகளை வலுப்படுத்துவதும் எமது விடுதலைப் பயணத்தின் முக்கிய சாராம்சங்கள் ஆகும். மாவீரர்கள் தங்கள் உயிர்விதையால் கட்டியெழுப்பிய ஒளிரும் பாதையில், தமிழீழ விடுதலையை நோக்கிய எமது பயணம் தளராது தொடரும் எத்தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறியக்கூடிய மனோபலத்தைத் தேசியத்தலைவரின் சிந்தனையும் வழிகாட்டலும் எமக்குத் தரும். மாவீரர்களின் ஆன்மபலம் எம்மோடு என்றும் துணை நிற்கும். “நாம் விதைத்த இலட்சிய விதை, எமது வீரர்களின் இரத்தத்தால் வளர்கிறது. அது விருட்சமாகி எமது கனவை நனவாக்கும்” என்ற தேசியத் தலைவரின் சிந்தனை, எப்போதும் தமிழினத்தை வழிநடத்தும் விடுதலை ஒளியாக நிலைத்திருக்கும். எமது சத்திய இலட்சியமான தமிழீழ விடுதலையினை எந்தச் சக்தியாலும் அசைக்கமுடியாது. தமிழீழ விடுதலைப் பயணத்தில் உறுதிதளராது போராடும் தமிழினம், தனது இலட்சிய விடுதலையை அடைந்தே தீரும். தேசியத்தலைவரின் சிந்தனை சுட்டி நிற்கும் விடுதலைப்பாதையில், தமிழீழம் என்னும் இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்தும் போராடுவோம் என உறுதியெடுத்துக்கொள்வோமாக! "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.” தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். https://www.thaarakam.com/news/5e3c1ac3-5de9-4fd2-807e-c8bb0dc9a3cb

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

2 months 3 weeks ago
யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்! adminNovember 27, 2025 யாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். கோப்பாய் துயிலுமில்லம்! யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். நல்லூர் நினைவாலயத்தில் யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார். எள்ளங்குளம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார். சாட்டி துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார். மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று (27) வியாழன் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. -தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது . மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2025/223152/

சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!

2 months 3 weeks ago
பகிரியில் வந்த செய்தி. அதையே இணைத்துள்ளேன். தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்தவர்களை மாவீரர்களாக போற்றி ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து வருகிறோம். இதில் தமிழ்நாட்டில் இருந்து ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்தவர்களையும் நாம் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறோம். ஈழத் தமிழர்களுக்காக 18 தமிழக தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். இது பலரும் அறிந்த செய்திதான். ஆனால் தமிழ்நாட்டில் இருந்துவந்து பல இளைஞர்கள் ஈழத்தில் போராடி வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலேகூட பலர் அறிந்திராத செய்தி. சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்பவர் கரும்புலியாக பலாலி இராணுதளத்தை தாக்கி 11.11.93 யன்று வீர மரணம் அடைந்திருக்கிறார். தமிழகத்தில் இருந்து வந்து ஈழத்தில் போராடி வீரமரணம் அடைந்த மேலும் சில மாவீரர்கள் விபரம் வருமாறு, பிரிவு: கரும்புலி நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்:செங்கண்ணன் இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர் ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்) வீரப்பிறப்பு: 25.01.1975 வீரச்சாவு: 11.11.1993 நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: மேஜர் இயக்கப் பெயர்: உமா இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 27.05.1972 வீரச்சாவு: 11.12.1999 நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: மணியரசி இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி ஊர்: தமிழகம். வீரப்பிறப்பு: 02.02.1977 வீரச்சாவு: 19.04.1996 நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: பத்மநாபன் இயற்பெயர்: பி.பத்மநாபன் ஊர்: திருச்சி, தமிழகம். வீரப்பிறப்பு: 27.07.1963 வீரச்சாவு: 16.03.1988 நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுனில் இயற்பெயர்: கதிரவன் ஊர்: தமிழகம். வீரச்சாவு: 11.04.1988 நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்) இயற்பெயர்: முத்தையா இராமசாமி ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 23.07.1962 வீரச்சாவு: 11.12.1991 நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: உதயசந்திரன் இயற்பெயர்: சேதுபாணடித்தேவர் ராமமணி சேகரன்மகாதேவர் ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 05.05.1969 வீரச்சாவு: 09.06.1992 நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு பிரிவு: கடற்புலி நிலை: கப்டன் இயக்கப் பெயர்: ஈழவேந்தன் இயற்பெயர்: துரைராசன் குமரேசன் ஊர்: தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 25.05.1969 வீரச்சாவு: 20.11.1992 நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: சச்சு இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த் ஊர்: பியர், இந்தியா. வீரப்பிறப்பு: 04.09.1975 வீரச்சாவு: 20.12.1992 நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம் படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்) இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 01.01.1966 வீரச்சாவு: 13.05.1996 நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு நிலை: கப்டன் இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு) இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 31.05.1975 வீரச்சாவு: 19.05.1996 நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது .நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குற்றாளன் இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 08.08.1969 வீரச்சாவு: 16.07.1996 நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுதா இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன் ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு வீரப்பிறப்பு: 28.10.1980 வீரச்சாவு: 05.07.1999 நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: மேஜர் இயக்கப் பெயர்: குருசங்கர் இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 18.04.1973 வீரச்சாவு: 25.07.1996 நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.. எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருந்து வந்து போராடினார்கள்? அதில் எத்தனை பேர் வீர மரணம் அடைந்தார்கள்? என்ற முழு விபரம் கிடைக்கவில்லை.

இன்று மாவீரர் தினம்!

2 months 3 weeks ago
தலைவர் பிரபாகரனுடன், தமிழீழத்தின் தன்னாட்சிக் கனவும் விடைபெற்றது. அதன் பின்னான அரசியல் யாவற்றிலும், நயவஞ்சகமும் சுயநலமுமே மேலோங்கி நிற்கின்றன. எமது விடியலுக்காய் உயிர் நீத்த மாவீரர்களுக்கும், இன்னுயிரை ஈந்த அனைத்து பொதுமக்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வீரவணக்கங்களும், கண்ணீர் அஞ்சலிகளும் உரித்தாகுக.

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

2 months 3 weeks ago
பாராளுமன்ற வளாகத்தில் மாவீரர் நாள் குகதாசன், சணக்கியன் இணைந்து நினைவுகூரல் Published By: Vishnu 27 Nov, 2025 | 08:54 PM தமிழர் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு வியாழக்கிழமை (27) மாலை பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன் மற்றும் சாணக்கியன் இணைந்து அஞ்சலி செலுத்தினர். இன்றைய தினம் வியாழக்கிழமை (27) பாராளுமன்றத்தில் மகாவலி மற்றும் நீர்பாசன அமைச்சின் முக்கிய விவாதங்கள் இடம்பெற்றிருந்ததால், தமிழரசுக் கட்சியின் பல்வேறு மக்களின் கோரிக்கைகள், காலநிலை மாற்றத்தால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டன. இதனாலேயே துயிலும் இல்லங்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாததை இருவரும் வருத்தத்துடன் தெரிவித்தனர். இருப்பினும், போராட்டங்களின் வடிவம் மாறினாலும், தமிழர் விடுதலைக்கான இலக்கு மற்றும் உறுதி எப்போதும் மாறாது என்பதை அவர்கள் வலியுறுத்தினர். https://www.virakesari.lk/article/231708
Checked
Sat, 02/21/2026 - 01:14
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed