2 months 4 weeks ago
26 Jun, 2025 | 04:47 PM கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி வாகனம் இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை தடம் புரண்டுள்ளது. முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த குறித்த எரிபொருள் தாங்கி இன்று அதிகாலை 1.மணிக்கு தடம்புரண்டது. குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை பெருமளவான டீசல் வெளியேறிதனால் பொது மக்கள் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
2 months 4 weeks ago
26 Jun, 2025 | 04:55 PM வலி வடக்கில் விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் , யாழ் . மாவட்ட கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ராசிக குமார இன்றைய தினம் வியாழக்கிழமை (26) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். சந்திப்பின்போது, வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலியை அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. மேலும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிக்கும்போது அங்கு களவுகள் இடம்பெறுவதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதற்கு அமைவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அவற்றைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார். வடக்கில் நிலவும் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் இராணுவத் தளபதி ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இந்தச் சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்களை ஆளுநரும், இராணுவத் தளபதியும் பரிமாறிக்கொண்டனர். வலி. வடக்கில் விடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அருகில் உள்ள இராணுவத்தின் முன்னரங்க வேலிகளை நகர்த்த கோரிக்கை | Virakesari.lk
2 months 4 weeks ago
இவர் பிரபல திரைப்பட இயக்குனரான மீரா நாயரின் மகன் என்று இன்று அறிந்தேன். பல நல்ல திரைப் படங்களை உருவாக்கிய சமூகப் பிரக்ஞையுடைய இயக்குனர்!
2 months 4 weeks ago
ரம்ப் ஆட்சியில் தான் ஈரான் இராணுவ தளபதி 2020ம் ஆண்டு ஈராக்கில் வைத்து கொல்லப் பட்டார் , அதன் பின் ஈரானியர்கள் கோவத்தின் உச்சிக்கு போனதை மறக்க முடியாது , ஈரான் அரசு ஈரான் மக்களிடம் ஒவ்வொருதரும் 1டொலர் தாருங்கள் அமெரிக்காவை பழி தீர்க்க என வெளிப்படையா அறிவித்தவை...................... யார் என்ன சொன்னாலும் , எனது ஆதரவு எப்பவும் ஈரானுக்கு தான் , பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முதல் நாடு ஈரான் மற்றது கட்டார்..........................................
2 months 4 weeks ago
26 Jun, 2025 | 05:46 PM பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பொதுநலவாயக் கல்வி அமைப்பின் (COL) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 2025 ஜூன் 24 ஆம் திகதி கனடாவின் வான்கூவர் நகரை சென்றடைந்தார். அங்கு அவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கம், பொதுநலவாயக் கல்வி அமைப்பு மற்றும் கனடாவின் உலகளாவிய விவகாரங்கள் (Global Affairs Canada) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அத்தோடு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த "கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" எனும் தலைப்பிலான சிறப்பு சமூக கலந்துரையாடலில் கலந்துகொண்டார். இந்நிகழ்வு, கனடாவில் வசிக்கும் சமயத் தலைவர்களுக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது. "கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" - கனடாவில் பிரதமர் | Virakesari.lk
2 months 4 weeks ago
செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது 26 Jun, 2025 | 07:28 PM செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றும் என்ற உத்தரவிற்கு அமைய வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினத்துடன் இதுவரை 22 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது | Virakesari.lk
2 months 4 weeks ago
26 Jun, 2025 | 07:34 PM (இராஜதுரை ஹஷான்) நெருக்கடியான சூழநிலையில் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானத்தை செயற்படுத்தினால் உலக பொருளாதாரம் மற்றும் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் இந்த தீர்மானத்தை நாங்கள் அமுல்படுத்தவில்லை என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் தெரிவித்தார். மனிதப் படுகொலை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும். உலக அமைதியை ஈரான் என்றும் வலியுறுத்துகிறது. இருப்பினும் எமது தேசியம் மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக போராடும் பொறுப்பு எமக்கு உண்டு எனவும் ஈரானிய தூதுவர் குறிப்பிட்டார். கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்வதேச யுத்த சட்டங்களுக்கு எதிராகவே இஸ்ரேல் செயற்படுகிறது. காஸாவின் உண்மை நிலையை சகல உலக நாடுகள் நன்கறியும்.அங்கு நாளாந்தம் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட சிவில் பிரஜைகள் கொல்லப்படுகிறார்கள். மனிதப் படுகொலை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும்.அனைவருக்கும் பொதுவான கடப்பாடுகள் உள்ளன. உலக நாடுகளின் அமைதியை ஈரான் என்றும் வலியுறுத்துகிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவுள்ளோம்.இருப்பினும் ஒருசில நாடுகள் இராஜதந்திர கொள்கையை பின்பற்றவில்லை. எமது தேசிய மற்றும் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. ஈரான் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு அமைவாகவே செயற்படுகிறது. மக்களின் அபிலாசைகளும்,அரச தீர்மானங்களும் தற்போதைய நிலையில் ஒருமித்ததாக உள்ளது. நெருக்கடியான சூழநிலையில் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானத்தை செயற்படுத்தினால் உலக பொருளாதாரம் மற்றும் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் இந்த தீர்மானத்தை நாங்கள் அமுல்படுத்தவில்லை. தற்போதைய நெருக்கடியான சூழலில் இலங்கை ஈரானுடன் இணக்கமாக பொதுவான வெளிவிவகார கொள்கையில் செயற்பட்டுள்ளது.இலங்கை எமது வரலாற்று ரீதியிலான நண்பன் என்றே குறிப்பிட வேண்டும்.இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். மனிதப் படுகொலை, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் - இலங்கைக்கான ஈரானிய தூதுவர் | Virakesari.lk
2 months 4 weeks ago
ஆஹா... நல்லதொரு உதாரணம். ரசித்து சிரிக்க முடிந்தது.😆 ட்றம் தன் முதல் ஆட்சியில் செய்த வேலைகளில் ஒன்று, ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியை கொன்றது. அத்துடன் ஈரானுடனான அணு ஆயுதம் தொடர்பான உடன்படிக்கையில் இருந்து வெளியேறியது. இரண்டாம் தடவை ட்றம் வந்தால் கண்டிப்பாக ஈரானின் முல்லாக்களுக்கு அடி இருக்கு என்று அவர் வர முன்னரே சில தடவைகள் யாழில் எழுதியிருந்தேன். இதே கருத்தை வாலியும் தெரிவித்து இருந்தார்.
2 months 4 weeks ago
நிழலி… ட்றம்பின் ஆட்சியை, இரண்டாக பிரிக்கலாம். 1) பைடனுக்கு முன். 2) பைடனுக்கு பின். பைடனுக்கு முன்… ட்றம்பின் ஆட்சியில் போர் வெறி இல்லாமல் உலகம் அமைதியாக இருந்தது. இடையில் வந்த பைடன், உக்ரைன் - ரஷ்யப் போருக்குள் உலகத்தையே இழுத்து விட்டு போர் வெறி கொண்டு ஆடி, அதன் மறைமுக பாதிப்புக்களை ஒவ்வொரு ஐரோப்பியருக்கும் கொடுத்தது மிகவும் எரிச்சலூட்டியதால் ட்றம்ப் ஆதரவு நிலை எடுத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த மாதிரி ட்றம்பின் இரண்டாவது ஆட்சி அமையாமல்… அவரின் செய்கைகள் மிகவும் அருவருக்கத்தக்க, கேலித்தனமாக உள்ள ஆட்சியாக அமைந்துள்ளதை பார்த்து… ட்றம்புக்கு எதிர் நிலை எடுக்க வேண்டி வந்துள்ளது. 🙂 நாம் வெட்டிய கிணற்றில்…. உப்புத் தண்ணீர் வந்தால், அதனை குடித்துக் கொண்டு இருக்க முடியாது தானே… 😂 அதனை மூடி விட்டு, அடுத்த கிணற்றை வெட்ட வேண்டியதுதான். 🤣 அரசியலில்…. இதெல்லாம் சகஜமப்பா. 😂 🤣
2 months 4 weeks ago
இலங்கை சொற்களா அல்லது சிங்கள சொற்களா?
2 months 4 weeks ago
🥰👍👍👍👍👍👍👍
2 months 4 weeks ago
மேட்ற்கு, us , இஸ்ரேல், Trump வெளிப்படையாகவே வென்று கொண்டு இருக்கிறோம், இரான் அம்மணமாக நிற்கிறது வேண்டிய இடத்தில் தொடலாம் என்று மேட்ற்கு, us, இஸ்ரேல் துள்ளி குதித்தும் ஏன் Trump சண்டை நிறுத்தத்துக்கு வந்தார்? அநேகமாக கீழே இருக்கும் செய்தியால் வந்த விளைவும் பெரிய பங்கு வகித்து இருக்கும் என்றே கொள்ள வேண்டி இருக்கிறது. (அத்துடன் Trump இன் சண்டை நிறுத்த தொனியும்) https://www.wsj.com/world/china/china-rare-earths-exports-2fd0dab4 China Is Still Choking Exports of Rare Earths Despite Pact With U.S. Western companies are struggling to secure approvals for rare-earth imports from Chinese authorities, despite U.S.-China deal ... (முழுச்செய்திக்கும் சந்தா செலுத்த வேண்டும்.)
2 months 4 weeks ago
PBS NewsFrance passes anti-radicalism bill that worries MuslimsThe bill covers most aspects of French life but has been hotly contested by some Muslims, lawmakers and others who fear the state is intruding on essential freedoms and pointing a finger at Islam."பிரான்ஸ் ஏதாவது புதிய சட்டங்கள் இயற்றியிருக்கிறதா?" என்று தேடினால் 2021 இல் இயற்றப் பட்ட மத மயப்படுத்தலுக்கு எதிரான சட்டம் மட்டும் தான் வருகிறது. நான் நினைக்கிறேன் யாரோ கோமாவில் இருந்து விழித்து, பழைய செய்திகளை மெதுவாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள், இப்போது தான் 2021 இற்கு வந்திருக்கிறார்கள்😂!
2 months 4 weeks ago
இதில் உள்ள பல விடயங்கள் ஏற்கனவே பிரெஞ்சு அரசியல் யாப்பில் உள்ளவை. உதாரணமாக சமயத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்ய முடியது. பாடசாலைகளில் சமயம் கிடையாது. அது எந்த மதமாக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான். சில வருடங்களுக்கு முன் முஸ்லிம் கட்சி என்று ஒரு கட்சியை உருவாக்க முயன்றர்கள். அது உடனடியாகவே சட்ட ரீதியாகக் கலைக்கப்பட்டது. ஆனால் செய்தியில் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவே எல்லாச் சட்டங்களும் மக்ரோனால் கொண்டுவரப்பட்டது போல் சொல்லப்பட்டுள்ளது. மதராசாக்களில் படிக்க முடியாது, வீடியோப் பதிவு அனுப்பப்பட வேண்டும் போன்ற தகவல்கள் முற்றிலும் பொய்யானது.
2 months 4 weeks ago
இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரியான தகவல்களாக இருக்க வாய்ப்பில்லை. பிரான்ஸ் இவ்வாறான புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஏதேனும் உறுதிப்படுத்தக் கூடிய செய்திகள் உள்ளனவா?
2 months 4 weeks ago
தமிழ் சிறி, இவர் அமெரிக்க அதிபராக வரவேண்டும் என்று மிகவும் விரும்பியர்களில் நீங்களும் ஒருவர் என நினைவு. ஆனால் இப்ப ஏன் இந்த திடீர் மாற்றம்?
2 months 4 weeks ago
பாகிஸ்தான் சில தினங்களுக்கு முன் ட்ரம்பைப் புகழ்ந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்தது. அதன்பின் பாகிஸ்தான் அணுகுண்டினைச் சுமந்து நீண்டதூரம் செல்லக் கூடிய ஏவுகணையை உருவாக்குவது பற்றி அமெரிக்காவ்லிருந்து கண்டனம் எழுந்தவுடன் பாகிஸ்தான் ட்ரம்பைத் திட்ட ஆரம்பித்துள்ளது.
2 months 4 weeks ago
தகவலுக்கு நன்றி கோசான். இதைப்பற்றி @தனிக்காட்டு ராஜா இன்னும் விபரமாக தெரிந்திருக்கலாம்.
2 months 4 weeks ago
உலகம் எங்கே போகிறது? நோபல் பரிசுக்கே, அல்லது இதுவரை அந்த பரிசை பெற்றவர்களுக்கே அவமானம். அமெரிக்காவின் அடுத்த இலக்கு பாகிஸ்தான் தானாம். அது அணு ஆயுதம் தயாரிப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது. அதனால பாகிஸ்தான் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து கோபத்தை, தாக்குதல் இலக்கை திசை திருப்ப பார்க்கிறதா?
2 months 4 weeks ago
இவர்களின் விசுவாசத்தால் சிங்களம் இதுவரை பிழைத்துக்கொண்டது, ஆனாலும் இவர்களை தமக்காக பாவிக்குமே ஒழிய வேறேதுமில்லை. கிழக்கின் விடிவெள்ளிகளின் இன்றைய நிலையை பி பார்த்தால் புரியும்.
Checked
Fri, 09/26/2025 - 00:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed