2 months 3 weeks ago
1979 காலப்பகுதியில் இயக்கத்தில் இணைந்து பிரபாகரன், குமரப்பா , புலேந்திரன், சீலன் போன றவர்களுடன் ஒன்றாக தங்கியிருந்து தலைமைறைவு வாழ்க்கையை ஆரம்பித்தவர். தனது இளமைகாலம முழுவதையும் போராட்டத்திற்காக தியாகம் செய்தவர் A/L இரண்டம் வருடம் sciences திறமையாக படித்துக்கொண்டிருந்த சிவசங்கரை (பொட்டமானை) படிப்பை குழப்பி இயக்கதில் சேர்ததவர். இன்று புலம் பெயர்ந்த போலித் தேசியம் பேசும் வியாபாரிகளிடம் கெஞ்சவேண்டிய நிலை. 😢
2 months 3 weeks ago
போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு Mano ShangarNovember 26, 2025 12:31 pm 0 ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை மொஸ்கோவில் சந்திக்க தனது சிறப்பு தூதுவருக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாக புதிய வரைவு ஒப்பந்தம் குறித்து ரஷ்யாவிடம் இன்னும் ஆலோசனை நடத்தப்படவில்லை ரஷ்ய தரப்பு தெரிவித்திருந்தது. மேலும், திட்டத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்காமல் போகலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் ஆரம்ப கட்டமைப்பிற்கு ஆதரவாக இருந்தபோதிலும், அமைதி ஒப்பந்தம் தொடர்பான ஒப்பந்தம் கணிசமான மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தால் நிலைமை அடிப்படையில் வேறுபட்டிருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிய திட்டத்தின் நகல் கிடைக்கவில்லை என்று லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மேலும், ஐரோப்பா, அமெரிக்கவின் அமைதி முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும், ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகள் பகிரங்க கருத்துகளை வெளியிடவில்லை. எனினும், அமெரிக்க இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோலும் ரஷ்ய பிரதிநிதிகளும் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அபுதாபியில் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆழமாக முரண்படும் சில பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://oruvan.com/us-peace-deal-to-end-war-ukraine-announces-general-agreement-reached/
2 months 3 weeks ago
சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இந்தியா – தென்னாப்பிரிக்கா வரலாற்று சாதனை Mano ShangarNovember 26, 2025 1:11 pm 0 இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 408 ஓட்டங்களால் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகளை கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை வெள்ளையடிப்பு செய்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில், தோல்வியடையச் செய்துள்ளனர். இதன்மூலம், தென்னாப்பிரிக்கா இந்தியாவை இரண்டு முறை சொந்த மண்ணில் முழுமையாக வென்ற முதல் அணியாக மாறியது. முன்னதாக, 1999-2000 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸில், 489 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்காக செனுரான் முத்துசாமி 206 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள, மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்களாக 109 ஓட்டங்களை குவித்தார். இந்தியா அணிக்காக, குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், ஜடேஜா, பும்ரா மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பதிலுக்கு, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 50 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தார். தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜான்சன் ஆறு விக்கெட்டுகளையும், சைமன் ஹார்மர் மூன்று வெற்றிகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸின்படி, தென்னாப்பிரிக்கா 288 ஓட்டங்கள் முன்னிலை பெற்றனர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 260 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதனால் இந்திய அணிக்கு 549 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய அணி 140 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக, சொந்த மண்ணிலும் இந்தியாவின் மிகப்பெரிய டெஸ்ட் தோல்வியாகும். இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு நாக்பூரில் அவுஸ்திரேலியா அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. மேலும், 13 மாதங்களில் ஒரு அணி சொந்த மண்ணில் இந்தியாவை டெஸ்ட் தொடரில் முழுமையாக வென்றது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2024 ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து இந்தியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/india-suffered-its-biggest-defeat-on-home-soil-south-africa-makes-history/
2 months 3 weeks ago
சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து! ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈர்த்த சிங்கள, முஸ்லீம் போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அங்கு மேலும் கருத்துரைக்கையில், இலங்கையிலுள்ள நான்கு இனங்களைச் சேர்ந்த பேராளிகளும் மாவீரர்கள் ஆகியுள்ளனர். எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்தே இறுதி யுத்தம் வரை உறுதியுடன் போராடியுள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே! வருடாவருடம் இந்த விடயம் தொடர்பாக நான் வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக 2022ஆம் ஆண்டு மாவீரர் நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் எழுத்து மூலமாக நான் விடுத்த வேண்டுகோள் புறந்தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மூன்று மாவீரர்களின் அன்னையான சிங்களப் பெண்மணி துயிலும் இல்ல வாசலில் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமையை ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையில் தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தியது. ‘நான்கு இனத்தவர்களின் ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம்’ என்ற தலைப்பில் கடந்த 23ஆம் திகதி உதயன் சஞ்சீவியில் வெளிவந்த நான் எழுதிய கட்டுரையின் பிரதிகளை கிளிநொச்சி ஜெயந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களிடம் வழங்கினேன். எனது எதிர்பார்ப்பின் நியாயத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எனவே கடந்த ஆறு வருடங்களாக நான் விடுத்த அதே வேண்டுகோளை நேற்று (24) கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் அவரது பணிமனைக்குச் சென்று நினைவுபடுத்தினேன். அத்துடன் சிங்கள-முஸ்லிம் மாவீரர்கள் நினைவாக உங்களது நிலைப்பாடு என்ன என்று கேட்டேன். ஏனெனில் இவர் 2022ஆம் ஆண்டு மாவீரர் நாள் காலப்பகுதியில் அடுத்த ஆண்டு கட்டாயம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வீரவேங்கை ரமீஸின் பெற்றோர் கௌரவிக்கப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கியவர். தற்போது அவரது பதில் எனக்கு ஆச்சரியமளித்தது. ‘புலம்பெயர் உறவுகள் சிங்கள-முஸ்லிம் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிப்பது குறித்து கடும் சினத்துடன் ஆட்சேபிக்கிறார்கள்’ என்பதே அந்தப் பதிலாக அமைந்தது. தவறான புரிதல் இது. மக்கள் பிரதிநிதி அதுவும் உள்ளூராட்சிச் சபையின் தவிசாளர் எமது மாவீரர்களின் பெற்றோரின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியவர், இப்படிப் பதில் சொல்வதை நீங்களும் ஏற்கமாட்டீர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். இவரது பதிலைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் விரைந்த நான் கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தைச் சந்தித்து விடயத்தைச் சொன்னேன். ‘எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்துகொண்டு விடுதலைப்போரில் ஆகுதியானோரின் பெற்றோர் நிச்சயம் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களே’ என அவர் பதிலளித்தமை ஆறுதலாக இருந்தது. நடந்த விடயங்களைக் கேட்டு மனம் வருந்திய அவர் இந்தக் கௌரவிப்புகள் ஏற்கனவே நடத்திருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தில் ஏதோ முடிந்தளவு என்னால் பங்காற்றியுள்ளேன். இன்று நான் உயிரோடு இருப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஆற்றிய பங்களிப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவு கூருவேன். மாவீரர் பெற்றோரை புறந்தள்ளுவதைத் தேசியத் தலைவரின் ஆன்மாவும் மன்னிக்காது. எனவே புலம்பெயர்ந்து வாழும் தாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் தலைமையை ஏற்றுப் போராடிய சிங்கள-முஸ்லிம்-பறங்கி என மாவீரர்களின் பெற்றோர் புறந்தள்ளப்படுவது குறித்த ஆட்சேபனைகளையும், எதிர்காலத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையையும் கரைச்சி பிரதேசசபைத் தலைவருக்கும் அவரை வழிநடத்தும் மாவட்டத் தலைமைக்கும் உடனடியாக சாத்தியமான சகல வழிகளிலும் தெரிவியுங்கள். நன்றி மறந்த இனத்தவராக நாம் மாறக்கூடாது. கைதிகள் பரிமாற்றம் மூலம் இரு போராளிகளை விடுவிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர்களில் ஒருவராக காமினி என்ற சிங்களப் போராளியைக் கிட்டு குறிப்பிட்டார். விடுதலையாகி வந்த அந்தப் போராளி மட்டக்களப்பில் போராடி 04.05.1987 வந்தாறுமூலையில் வீரச்சாவடைந்தார். இறுதி யுத்தம் வரை முஸ்லிம் போராளிகள் போராடினர். இவையெல்லாம் சாமானியமான விடயங்களா? உங்களுக்கு மாவீரர் நாளுக்கு நிதி வேண்டுமாயின் நான் உண்டியல் குலுக்கி வழங்கத் தயார் என வேழமாலிகிதனுக்குத் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டுகிறேன். இன்னொரு விடயம் மாவீரர் நினைவேந்தல் மற்றும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்புகளை தமது அரசியல் எதிரிகளைச் சாடும் களங்களாக மாற்றவேண்டாமென தயவுசெய்து சம்பந்தப்பட்டவர்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள். இன உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள ஒரு முஸ்லிம் குழுவினர் ஏதாவதொரு மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு முஸ்லிம் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கவேண்டும். இதற்கான முழுச் செலவையும் தாங்கள் பொறுப்பேற்கிறோம் என எனக்குத் தெரிந்த ஒரு தரப்பு மூலம் வேண்டுகோள் விடுத்தனர். இந்தவேண்டுகோள் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைமைக்கு அதன் மத்திய குழு உறுப்பினர் மூலம் தெரியப்படுத்தியும் அந்தப் பேச்சைத் தொடர அவர்கள் விரும்பவில்லை என்தைக் குறிப்பால் உணர்த்தினர். எனவே, தேசியத்தலைமையை நேசிக்கும் புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது உறவுகள், முன்னாள் போராளிகள் இந்த விடயத்தில் தங்களது முடிவை உடனடியாகக் கிளிநொச்சிக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.” என்றார். https://akkinikkunchu.com/?p=350178
2 months 3 weeks ago
26 Nov, 2025 | 01:15 PM தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று புதன்னிழமை (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் விஜயம் செய்து, நீரில் மூழ்கியுள்ள மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்ட வீதிகள் தொடர்பிலும் நிலைமையை கேட்டறிந்ததோடு, உடனடியாக அவ்வீதிகளை மூழ்கடித்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விஜயத்தின்போது சபை நிர்வாகிகள் முள்ளிப்பொத்தானை பாதிமா பாலிகா பாடசாலை வீதி, 4ஆம் வாய்க்கால் வீதி, பாலம் போட்டாறு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அங்கு கனமழை தொடர்ந்தும் பெய்து வருவதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் வீதியில் பயணிக்க முடியாமல் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். https://www.virakesari.lk/article/231487
2 months 3 weeks ago
Published By: Vishnu 26 Nov, 2025 | 01:55 AM இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை , கோட்டாஞ்சேனையில் உள்ள செயிண்ட் லூசியா கதீட்ரலில், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் தலைமையில், பிரதி தலைமை அதிகாரி,விநியோகம் மற்றும் சேவை இயக்குநர் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவிலன் தலைமையில், 2025 நவம்பர் 21 அன்று நடைபெற்றது. 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை கடற்படை கிறிஸ்தவ சங்கம், மிக உயர்ந்த கடற்படை பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்படி தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாக கூட்டு உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனையை நடத்தி வருகிறது. இந்த உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் எமெனுவேல் அவர்களின் தலமையின் கீழ், மேலும் இது எட்டு கத்தோலிக்க பாதிரியார்களின் கருணைமிக்க இருப்பு மற்றும் பிரார்த்தனைகளுடன் மிகவும் கண்ணியமான முறையில் நடைபெற்றது. "கடலின் பாதுகாவலரே, எங்கள் இறைவனின் அமைதியும் பலமும் உங்களுடன் இருக்கட்டும்," என்று திருகோணமலை ஆயர் டாக்டர் நோயல் இம்மானுவேல், இலங்கை கடற்படை அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும் கடவுளைப் புகழ்ந்து நன்றி தெரிவித்தார். தாய்நாட்டிற்கு அமைதியைக் கொண்டுவருவதற்காக உன்னத தியாகங்களைச் செய்த அனைவரையும் மரியாதையுடன் நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவ மத நடைமுறைகளுக்கு ஏற்ப கடற்படைக் கொடி மற்றும் கடற்படை கட்டளைக் கொடிகளுக்கு ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், கடற்படையின் 75 ஆண்டுகால வரலாற்றில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் போரில் வீழ்ந்த அனைத்து கடற்படை வீரர்களுக்கும், தற்போது பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், முழு கடற்படைக்கும் ஆசீர்வாதங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், இந்த சேவையில் (ஓய்வு பெற்ற) முன்னாள் கடற்படைத் தளபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி உள்ளிட்ட கடற்படை இயக்குநர் ஜெனரல்கள், இலங்கை கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல், கடற்படை சேவா வனிதா நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழு கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/231456
2 months 3 weeks ago
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த IMF பரிசீலனை! November 26, 2025 இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு அடுத்தகட்ட ஒப்புதலுக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபையினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர், இக்காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடாத்தியதுடன் பெரும்பாகப் பொருளாதார அபிவிருத்திகள், பொருளாதார மற்றும் நிதியியல் கொள்கைகளை அமுல்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர். அதனையடுத்து மேற்படி விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதுடன், நாணய நிதிய செயற்திட்டத்துக்கு அமைவாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைக் கருத்திற்கொண்டே அதற்கு இயக்குநர் சபையின் அனுமதி வழங்கப்படும் என எவான் பபஜோர்ஜியோ அறிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நாணய நிதியத்தின் இயக்குநர் சபையினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இப்பரிசீலனையைத் தொடர்ந்து உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு இயக்குநர் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக 347 மில்லியன் டொலர் நிதியைப் பெறுவதற்கான தகுதியை இலங்கை பெறுவதுடன், அதன்மூலம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியின் பெறுமதி 2.04 பில்லியன் டொலராக உயர்வடையும். அதன்படி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக்கு உட்பட்ட முக்கிய விடயங்களில் பெரும்பாலானவற்றை 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் உள்வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/imf-review-of-extended-financial-facility-for-sri-lanka/
2 months 3 weeks ago
Published By: Vishnu 26 Nov, 2025 | 01:38 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்மை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது. எனவே இளம் பிக்குகள் மற்றும் தேசிய அமைப்புகள் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கும் அதேவேளை, மீண்டும் தனி ஈழத்துக்புகு பாதை அமைப்பதற்கு இடமளித்து விடக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இராஜகிரியவிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் பௌத்தர்களின் உணர்வுகளைத் தூண்டும் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாகும். இதுபோன்ற விஷயங்களைக் கையாளும் போது அரசாங்கம் விவேகத்துடனும் தூரநோக்குடனும் செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பல்வேறு குழுக்களும் சக்திகளும் தமது தேவைக்கேற்ப நிலைமையைக் கையாள இது வழிவகுக்கும். கனடாவில் வசிக்கும் அயூப் அஸ்மின் என்ற நபர் திருகோணமலை சம்பவத்தின் போது தனது முகநூலில் 'நீங்கள் இப்படியே தொடருங்கள், சிலைகளை உடைக்கும் ஒரு இயக்கம் உருவாகும்வரை' எனப்பதிவிட்டிருக்கின்றார். இந்த நபர் ஜமாஅத் அமைப்பில் மாணவர் இயக்கத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டிருக்கின்றார். அவ்வாறு செயற்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், பட்டியலூடாக 5 ஆண்டுகள் மாகாணசபை உறுப்பினராகக் காணப்பட்டார். இவர் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் மற்றும் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஆபத்தான நபராவார். அவர் தலைமை தாங்கிய மாணவர் குழுவே மாவனெல்லையில் உள்ள புத்தர் சிலைகளை அழித்தன. அஸ்மி உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதக் குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம். இலங்கையை ஒரு முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சிப்பதுடன், வெளிநாட்டில் இருந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அதிதீவிரவாதக் கருத்துக்களை நோக்கித் தள்ளுவதாகவும் சந்தேகிக்கின்றோம். எனவே நல்லாட்சியின் போது இடம்பெற்றதைப் போன்று உலகளாவிய பயங்கரவாத வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய நபர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு விரிவடைந்தன என்பதை விசாரிக்க ஒரு விசேட ஆணைக்குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். பெரும்பான்மை சமூகத்தினருக்கு மனவேதனையை ஏற்படுத்திய நடவடிக்கைகளாலேயே முந்தைய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, நாடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை எதிர்கொண்டது. திருகோணமலை போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து பௌத்த சிங்கள சமூகத்திலிருந்து வரும் ஆரவாரமும் கோபமும், அதிதீவிரவாதத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களால் தமக்கான தீவிரவாத கருத்துகளுக்குத் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை விரைவாகச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இளம் பிக்குகள் மற்றும் தேசிய அமைப்புகள் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறும், பொலிஸால் கையாளப்பட வேண்டிய விடயங்களில் தேவையற்ற விதத்தில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். அவர்களது கோபமான எதிர்வினைகள், அவர்களை இனவாதிகள் அல்லது மத அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்த விரும்புபவர்களின் கைகளுக்குள் விளையாட வழிவகுக்கும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கனடாவில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவிக்கப்பட்டன. 30 ஆண்டுகாலப் போருக்குப் பிறகும், விடுதலைப் புலிகள் செய்த பல படுகொலைகளுக்குப் பிறகும் அவர்களை நினைவுகூர வேண்டிய தார்மீக அதிகாரம் இருக்கின்றதா? இந்த புதிய சித்தாந்தங்களை இப்போதே தோற்கடிக்கத் தவறினால், நாடு தவிர்க்க முடியாமல் ஒரு ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படும். அத்தகைய சூழ்ச்சிகளுக்குத் தூண்டப்பட அனுமதித்தால், முந்தைய அரசாங்கம் சந்தித்த அதே வீழ்ச்சியை இந்த அரசாங்கமும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றேன். விடுதலைப்புலிகளுடன் இணைந்து அஸ்மின் மீண்டும் வடக்கு, கிழக்கை மற்றொரு பலஸ்தீனாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகிறது. தனி ஈழத்துக்கு பாதை அமைக்க இடமளிக்க கூடாது. 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு பதிலாக அதனை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகிறது. பிரதேசசபையின் அனுமதியின்றி தொல்பொருள் பெயர் பலகையை நிறுவ முடியாது என முரண்படும் நிலைமைக்கு அரசாங்கம் இடமளிக்கின்றதா? இந்த நிலைமைகள் இப்போதே அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/231454
2 months 3 weeks ago
பிணை வழங்கப்படமுடியாத மிகக்கொடூரமான தொல்லியல் சட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும் - எம்.ஏ.சுமந்திரன் Published By: Vishnu 26 Nov, 2025 | 01:31 AM (நா.தனுஜா) இலங்கையில் பிணை வழங்கப்படமுடியாத ஒரேயொரு சட்டமாக இருக்கக்கூடிய தொல்லியல் சட்டத்தை மிகக்கொடூரமான சட்டம் என்று கூறமுடியும். தொல்லியல் சட்டத்தின் ஊடாக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைத் தவறாகப் பிரயோகித்து, இன மற்றும் மதரீதியான ஆக்கிரமிப்புக்களை நிகழ்த்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே அச்சட்டம் கட்டாயமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்கிழமை (25) பிணை வழங்கியது. அந்த ஐவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வழக்கின் முடிவில் நீதிமன்றுக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: ஒரு வீட்டிலிருந்து அல்லது ஒரு கட்டடத்திலிருந்து அல்லது ஒரு கப்பலில் இருந்து ஏதாவதொரு பொருள் திருடப்பட்டால், அது தண்டனைக்குரிய குற்றம் என்று இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 369 ஆவது பிரிவு கூறுகிறது. அந்தப் பிரிவின் கீழேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அத்தோடு 410, 417 என்ற பிரிவுகளும் பொலிஸாரின் அறிக்கையிலேயே காண்பிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு இந்த வழக்குடன் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதுடன் அந்தப் பிரிவுகளில் கூறப்பட்டிருக்கும் விடயம் ஒரு அரச உத்தியோகத்தர் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் ஒரு விடயத்தை செய்தாலோ அல்லது அறிவிப்புப் பலகையைப் பொருத்தினாலோ, அதனை அப்புறப்படுத்துவது குற்றம் என்பதேயாகும். எனவே இச்சம்பவத்தில் வீதியிலிருந்து பெயர்ப்பலகைகள் திருடப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறுவது பொருத்தமற்ற குற்றச்சாட்டு என நான் மன்றிலே சுட்டிக்காட்டினேன். இலங்கையில் தொல்லியல் சட்டத்தை மிகக்கொடூரமானதொரு சட்டம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் எமது நாட்டில் பிணை வழங்கமுடியாத ஒரேயொரு சட்டமாக இருப்பது தொல்லியல் சட்டம் மாத்திரமேயாகும். மற்றைய எல்லாச் சட்டங்களின் கீழும், குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கூட பிணை வழங்கமுடியும். ஆகவே இந்தச் சட்டம் மாற்றப்படவேண்டும். ஏனெனில் தொல்லியல் இடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது எமது எல்லோருடைய விருப்பம். ஆனால் அந்தப் போர்வையின்கீழ் ஏராளமாக ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தொல்லியல் பொருட்கள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை அதிகாரிகள் தவறாகப் பிரயோகித்து மத மற்றும் இன ரீதியான ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இருப்பினும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில், தொல்லியல் சட்டம் கட்டாயமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/231453
2 months 3 weeks ago
சில தினங்களுக்கு நாடு முழுவதும் காற்றுடன் மழையுடனான வானிலை! 26 Nov, 2025 | 07:25 AM அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக இலங்கையின் தென் திசையில் தாழ் அமுக்கப் பிரதேசம் நிலைகொண்டிருந்தது. இது அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடையும். இதன் தாக்கத்தின் காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும். ஆகையினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 மில்லமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்வதுடன் நாட்டின் ஏனைய பிரராந்தியங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கமாக விருத்தியடைய இருப்பதால் இன்று முதல் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளம் தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். https://www.virakesari.lk/article/231468
2 months 3 weeks ago
மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன் November 25, 2025 மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே மாவீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம். புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்று எல்லா புறப்படலங்களிலும் வீர மறவரின் துணிவும், அவர்கள் எதிரிகளை எதிர்த்து போராட தயங்காமையும் கூறப்பட்டுள்ளது. அகத்தில் பெரும்பாலும் வீரம் முன் மொழியாவிடினும், பல செயல்களில் தலைவ னும், தலைவியும், பாங்கியும், நற்றாயும், செவிலித் தாயும், பல்வேறு சமூக உறுப்பினர்களும் தான் விரும்பியதை அடைய வீரத்தை உபயோகிக்க வேண்டியுள்ளது. வீரத்தின் தன்மை. 1.தன் நாட்டைக்காத்தல் 2.நேர்மையாக இருத்தல் 3. தன் கடமையினை எவ்வித தடை வரினும் சிரமேற்று வெற்றி பெறுதல் 4.நினைத்ததை சாதித்தல் 5..விடாமுயற்சி 6 தன்னைச் சார்ந்தோரைக் காத்தல் இந்த ஆறு உன்னத வீரம்தான் “மாவீரம்” அதை களத்தில் இனத்துக்காய் போராடி செய்கையில் காட்டிய ஈழத்தில் ஒரேயொரு விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகள் மட்டுமே அவர்களின் உன்னத தியாகத்தால் தன்னை ஆகுதியாக்கிய புனிதர்கள் தான் விடுதலைப்புலிகளின் “மாவீரர்கள்” அந்த ஒப்பற்ற உயிர் தியாகம் செய்தவர்களை ஒரே நாளில் தேசமாக திரண்டு அஞ்சலி நினைவு கூரும் நாளாக 1989, கார்த்திகை27ம் நாளை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பிரகடனப்படுத்தியிருந்தார். அந்த தினம் விடுதலைப்புலிகளின் போராளி சங்கர் வீரச்சாவை தழுவிய நாள் 1982 கார்த்திகை, 27 அந்த நினைவு நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. எதிர்வரும் வியாழக்கிழமை 2025 நவம் பர் 27ல் வழமை போன்று ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆகுதியான மாவீர்களை நினைவு கூர்ந்து துயிலும் இல்லங்களிலும், புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும், மத்தியகிழக்கு நாடுகளில் தொழிலுக்காக சென்ற தமிழ் இளைஞர்களும், தமிழ் நாட்டிலும் மக்கள் திரண்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு எழுச்சியாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. 2025 ல் இடம்பெறும் மாவீர் தினம் 36 வது மாவீரர் தினமாகும். 2008 கார்திகை,27 வரை ஈழத்தில் விடுதலைப்புலிகளால் 20 மாவீரர் தினங்கள் இடம்பெற்றன இந்த 20 தினங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 20 மாவீரர் உரைகளை நிகழ்த்தியுள்ளார். அவருடைய உரை ஒரு தீர்க்க தரிசன உரையாகவே பார்க்கப் பட்டது. அவர் இறுதியாக 2008,கார்த்திகை,27 ல் மாவீர் நாள் உரையில் கூறியது “இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமை யோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப் பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோ மாக” . என கூறியிருந்தார் இதனை அவதானித்தால் சர்வதேசத்தை நோக்கி விடுதலைப்பயணம் செல்லவேண்டிய தேவையையும் புலம்பெயர்ந்து வாழும் இளையோருக்கும் அந்தபணி உண்டு என்பதையே மேலோட்டமாக தமது உரையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்தை நோக்க முடிகி றது. ஒரு விடுதலைக்கான போராட்டம் அந்த நாட்டில் ஆரம்பித்தாலும் விடுதலைக்கான வெற்றி யையும், அந்த நோக்கத்தையும் தீர்மானிக்கும் சக்தி சர்வதேசமாகும் தலைவர் பிரபாபரனின் இறுதி உரையில் தேசவிடுதலையை தீவிரமாக முன்எடுத்து வருபவர்கள் புலம்பெயர்ந்துவாழும் இளையோர் என்பதை தெளிவாக கூறி அவர்களிடம் போராட்டத்தை ஒப்படைத்ததாகவே அந்த உரையின் தார்ப்பரியம் தெரிந்தது. சர்வதேசம் மூலமாக எமது இலக்கை அடைவதற்கான வேண்டுகோளாகவே இந்த உரை அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் மௌனிப்பதற்கு முன்னம் 2008 கார்த்திகை 27 வரை துயிலும் இல்லங்களில் நடைமுறையானது மாவீரர்களின் பெற்றோர் சுடர் ஏற்றவேண்டிய கல்லறைகள், நினைவு கற்களுக்கு முன்னால் கார்த்திகை 27 ம் நாளில் பி.ப 5.15 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ள பட்டிருக்கும் தேசியத் தலைவரின் மாவீரர் நினைவுரை இடம்பெறும் பின்னர் நினைவொலி மணி ஒலி எழுப்பபட்டு ஒருமணித்துளி நேரம் எழுப்பப் படும், அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் பொதுச் சுடர் தளபதிகளில் ஒருவர் ஏற்றுவார் அதனை தொடர்ந்து ஈகை சுடர்களை பி.ப 6.07 மணிக்கு சகலரும் ஏற்றுவார்கள். விடுதலைப்புலிகள் மௌனத்திற்கு பின் னர் 2009 கார்த்திகை 27 தொடக்கம் எதிர்வரும் 2025, கார்த்திகை 27 வரை 16 வருடங்களாக மாவீரர் தினங்கள் முன்னாள் போராளிகள், பொது அமைப்புகள், சில தமிழ்த்தேசிய கட்சிகள் இராணுவ முகாம் இல்லாத துயிலும் இல்லங்களில் தலைவரின் உரை, தேசிய கொடி மட்டும் இன்றி ஏனைய நடைமுறைகளை அப்படியே சகல துயிலும் இல்லங்களிலும் எழுச்சியுடன் செய்யப் பட்டு வருவதை காணலாம். புலம்பெயர் நாடுகளில் தலைவரின் உரை மட்டுமே இடம்பெறாது ஏனைய புலிக்கொடி ஏற்றப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் அப்படியே நடைபெற்று வருவதை காணலாம். வீரச்சாவை தழுவிய மாவீரர்கள் 2009 மே 18 வரை ஐம்பதாயிரம் வரையில் உயிர் நீத்துள்ளனர். விடுதலைப்புலிகளால் 2008 ல் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தரவில் 1982 தொடக்கம் 2008 வரையும் 22390 மாவீர்கள் ஆகுதியானதாக மாவட்ட ரீதியான விபரத்தை அப்போது வெளியிட்டிருந்தனர். இந்த தொகையில் வடமாகாணத்தை சேர்ந்த மாவீரர்கள்:14957 (ஆண்கள்:10834 பெண்கள்:4123 கிழக்கு மாகாண மாவீரர்கள்: 7083, (ஆண்கள்: 6580 பெண்கள்:503) வடகிழக்கு சாராதவர்கள்:350 (ஆண்கள்:282 பெண்கள்:68) 2009 ஜனவரி தொடக்கம் மே 18 வரை ஐந்து மாதங்களில் உக்கிரமான போர் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்கள் முழுவதும் இடம்பெற்று இறுதியில் முள்ளி வாய்க்கால், நந்திக்கடல், வரை 2009 மே 18 ல் போர் மெளனிக்கும் வரை 05 மாதங்கள் மட்டும் ஏறக்குறைய 27000, மாவீர்ர்கள் வீரச்சாவை தழு வினார்கள் என நம்பப்படுகிறது அவர்களை டைய கணிப்பு இதுவரை உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை 2008 ல் விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வ மாக அறிவித்த 22360 மாவீர்ர்களுடன் சேர்த்து மொத்தமாக 50000, மாவீரர்கள் ஆகுதியானார்கள் என்பதை முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பின்னர் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. அந்த ஐம்பதாயிரம் மாவீர்களை நினைவு கூர்ந்து தொடர்ச்சியாக 2009 கார்த்திகை,27 தொடக்கம் தற்போது 16 வருடங்களாக நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளின் மௌனத்திற்கு பின்னர் 16 வருடங்களாக மாவீர்களுக்காக வணக்கம் செலுத்தும் நாம் அவர்களுடைய கனவு நினைவேற வேண்டுமானால் குறைந்த பட்சம் சிதறிக்கிடக்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் ஈழத்தில் ஒற்றுமையாக ஒரு அணியாக ஒரே குரலில் சர்வதேசம் நோக்கி அரசியல் தீர்வுக்காக கோரிக்கையை முன்வைக்க கூடியதாக செயல்படக்கூடிய தமிழ்தேசிய கட்சிகள் ஒற்றுமை படவில்லை . 2025 கார்த்திகை 27 மாவீரர் நாளிலாவது தமிழ்தேசிய கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட்டு மாவீரர்களுடைய கனவு நனவாக உழைக்க உறுதி பூணுவோம். https://www.ilakku.org/மாவீரர்களின்-தியாகத்தை-உ/
2 months 3 weeks ago
ஸிம்பாப்வேயை வெளுத்துக்கட்டிய இலங்கைக்கு இறுதிக்கு செல்ல இன்னும் ஒரு வெற்றி தேவை Published By: Vishnu 25 Nov, 2025 | 10:09 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற மிகவும் தீர்மானம் மிக்க மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஸிம்பாப்வேயை வெளுத்துக்கட்டிய இலங்கை 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. ஆனால், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்த்தாட இலங்கை தகுதிபெறுவதாக இருந்தால் எஞ்சியுள்ள பாகிஸ்தானுடனான இரண்டாம் கட்டப் போட்டியிலும் வெற்றிபெற்றாக வேண்டும். பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் விஜயத்தில் இரண்டு தொடர்களில் 6 போட்டிகளில் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் அணிகள் நிலையில் ஸிம்பாப்வேயும் இலங்கையும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால், நிகர ஓட்ட வேக அடிப்படையில் ஸிம்பாப்வே தொடர்ந்தும் 2ஆம் இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் விளையாட ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டது. இன்றைய போட்டியில் ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 16.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. மிகவும் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 58 பந்துகளில் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 98 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 12 ஓட்டங்களைப் பெற்ற காமில் மிஷாரவுடன் 34 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெத்தும் நிஸ்ஸன்க இட்டுக்கொடுத்தார். தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 64 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினர். குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ரெயான் பேர்ல் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 37 ஓட்டங்களையும் ப்றயன் பெனட் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தனர். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடைசி லீக் போட்டி நாளைமறுதினம் நடைபெறுவுள்ளது. ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க. https://www.virakesari.lk/article/231444
2 months 3 weeks ago
ஏன் அவர் ஒப்பற்ற தலைவர் : ஜெரா November 26, 2025 இலங்கை தீவில் இழந்துவிட்ட தம் இறைமையை மீட்கவே முடியாது என்ற பெருங்கவலையோடு ஈழத்தமிழர்கள் பல சந்ததிகளைக் கடந்தனர். இடையிடையே எல்லாளன், சேனன், குத்திகன், பண்டாரவன்னியன், கயிலைவன்னியன், செகராசசேகரன், பரராசசேகரன், சங்கிலியன் எனப் பலர் அந்தக் கனவை ஏந்தி வரலாற்றில் வந்துபோயினர். ஆனால் எவராலும், விஜயனிடம் இழந்த ஈழத்தமிழர் இறைமையை முழுமையாக அடைய முடியவில்லை. ஒரே ஒருவரால் அது முடிந்தது. வெறுங்கனவாக மாத்திரமிருந்த ஈழத்தமிழர் இறைமையை ஆட்சி சிம்மாசனத்தில் ஏற்றி 30 வருடங்களாக அழகுபார்க்க முடிந்தது. அவரே நம் தலைவர். அவரே இன்றைய நாளுக்குரியவர். அதுவரைக்குமான உலகில் கண்டுபிடிக்கப்படாதிருந்த அனைத்துவித அறவழிப்போராட்டங்களிலும் ஈடுபட்டு, தோற்றுப்போயிருந்த தருணத்தில்தான் தலைவர் வந்தார். பெற்றோரின், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்றி முடிவெடுக்க முடியாத வயதில், இனத்தையே வழிநடத்தத் துணிந்தார். தம்மிடமிருக்கும் ஆயுதங்களை வைத்து ”எவ்விதமான” காரியங்களையும் செய்யத்துணியும் வயதில், அனைத்துவித பாசங்கள் மீதான பற்றுக்களையும் அறுத்தெரிந்தார். இனவிடுதலை ஒன்றே தாம் ஏந்தியிருக்கும் ஆயுதத்தின் ஒரே இலக்கு என்பதைத் தன்னைச் சூழ்ந்திருந்த இளையோருக்குப் போதித்தார். இன்றைய உலக அனுபவங்களை வைத்துக் கற்பனை செய்துபாருங்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் கனரக ஆயுதங்களும், வெளியுலகத் தொடர்புகளற்ற ஒரு பிராந்தியத்தை நிர்வகிக்கவல்ல அதிகாரமும் கிடைத்தால் என்ன செய்திருப்பர். உலக அனுபவங்களைப்போன்று எதுவும் நடக்கவில்லை. இனவிடுதலை என்கிற இலக்கு ஒன்றிற்காக ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் அவர் தலைமையில் விதையாகி வீழ்ந்தபோதிலும் யாரை நோக்கியும் ஒரு தீயசொல் பாயவில்லை. ”அவரின் எத்தனையோ படங்களை மீட்டோம். ஒரு படத்தில்கூட மது போத்தல்களைக் காணவில்லை” என எதிரிகளே புகழுமளவிற்கு உலகின் மிகஉன்னதமான சுய ஒழுக்கமிக்க இயக்கமொன்றைக் கட்டமைத்தார் அவர். அதனை இம்மியளவும் வழிபிசகாமல் இறுதிவரையில் வழிநடத்தினார். அதனால்தால் அவர் தலைவர். விடுதலை கோரி போராடத்தை ஆரம்பிக்கும் ஆயுத இயக்கங்கள், வெகுவிரைவிலேயே திசைமாறிப் போவது உலக வழக்கம். உலகநாடுகளின் சதிகளில் சிக்கி தான் வந்த வழியையே மறந்து, விடுதலை இயக்கங்களின் மறைந்துபோவதும் பொதுப்போக்கு. தலைவரை நோக்கியும் உலக வல்லரசு நாடுகள் அந்த வலையை தொடர்ச்சியாக முப்பதாண்டுகள் வீசிவந்தன. ”நான் இனவிடுதலை என்கிற இலட்சியத்திலிருந்து விலகினால் என் மெய்பாதுகாவலரே என்னை எவ்வேளையிலும் சுட்டுக்கொல்லலாம்” என்கிற கொள்கையில் தலைவர் துளியளவும் விடாப்பிடியாக இருந்தார். அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வொன்றிருந்தது. ஒரே மகள், இரண்டு ஆண் மகன்கள் என்கிற அரியதொரு குடும்பமிருந்தது. அன்பிற்கே அடையாளமான தாய், தந்தையர் இருந்தனர். ஒரு மனிதனின் வாழ்க்கை வரம்பின் உச்சமெதுவெனில் இப்படியொரு அன்பான குடும்பம்தானே. ஆனால் இந்த இனவிடுதலைக்காக தன் மொத்தக் குடும்பத்தையும் தியாகித்தார் தலைவர். தானும் தன் பிள்ளைகளும், தன் உறவினர்களும் ஏழேழு தலைமுறையாக செழித்து வாழவேண்டியளவுக்கு நாட்டைச் சூறையாடி சொத்துச் சேர்க்கும் தலைவர்கள் மத்தியில், ஒரு ரூபாயைக்கூடத் தனக்காகவோ, தன் குடும்பத்திற்காகவோ எடுத்துச்செல்லாத – தன் மொத்தக்குடும்பத்தையும் இனத்திற்காக வித்தாக்கிய ஒப்பற்ற தலைவர் உலகில், இந்தப் பூகோள வரலாற்றில் வேறெந்த இனத்திற்கு வாய்த்திருக்கும். சதாகாலமும் போர் நடத்திக்கொண்டு, கடல், தரை, வான் என எல்லைகளைக் காத்துக்கொண்டு, புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டு ஒரு நிழல் அரசைக் கட்டமைப்பதும், அதனை நேர்த்தியாக வழிநடத்துவதும் கற்பனைகூட செய்துபார்க்கமுடியாத ஒன்று. உலகம் பாதுகாப்புசார் துறைகளில் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட பிறகும்கூட நவீன அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள், திட்டமிட்டக் குற்றச்செயல்களுக்காக உருவாகும் குழுக்கள் என எல்லாவற்றையும் 30 ஆண்டுகளாக ஒருவர் கட்டுப்படுத்தினார் எனில் அது தலைவரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்..! எல்லாவற்றுக்கும் மேலாக, படையக் கட்டுமானம்..! சோழர்களுக்குப் பிறகு 30 ஆண்டுகள் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய ஒரே படையக் கட்டமைப்பைத் தலைவர் உருவாக்கினார். அவரின் காலத்தில் இலங்கைத் தீவின் மீதான புவிசார் அரசியல் இன்றிருக்கிற அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியா, சீனா என எந்நாட்டுக்கும் ஒரு துண்டு நிலம்கூட இத்தீவிலிருந்து விற்கப்படவில்லை. இன்று இந்நாட்டின் தலைநகரில் பெரும்பகுதியைப் பிடித்து சீனா தனக்கான தனிநாடொன்றை உருவாக்கிக்கொள்ளுமளவிற்கு இந்நாடு புவிசார் அரசியல்விடயத்தில் தோல்வியடைந்திருக்கின்றது. இந்தியாவின் தலையீடுகள் சொல்லத்தேவையில்லை. அவர் உருவாக்கிய வலிதான – ஓர்மம் மிக்க படையக் கட்டமைப்புக்களின் வழியே தமிழர்களின் கடல் மற்றும் நிலம் சார் இறைமை மாத்திரமின்றி, முழு இலங்கைத்தீவின் இறைமையும் காப்பாற்றப்பட்டது. ஆனால் அவரற்ற பதினாறு வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலை…! இப்படி தன்னினத்திற்கு மாத்திரமல்லாது, இத்தீவில் வாழுகிற எதிர் இனத்திற்குமாகப் போராடியவர் எம் தலைவர். அதனால்தான் குற்றவுணர்வால் உந்தப்படும் எதிரிகள்கூட அவ்வப்போது தலைவர் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகின்றனர். உலகில் தோன்றிய ஆச்சரியமிகு – மேன்மைமிகு தலைவர்களின் வரிசையில் நின்றுநிலைத்துவிட்ட தலைவருக்கு இன்று அகவைத் திருநாள். வானும் தன் ஆசி வழங்கி, வாழ்த்தி நிற்கும் இன்நன்நாள் குறித்து நம் தலைமுறைக்கு ஒரு பெருமிதம் உண்டு. அது எதுவெனில், தலைவ…நாம் நின் காலத்தில் வாழ்ந்தோம்..! https://www.ilakku.org/ஏன்-அவர்-ஒப்பற்ற-தலைவர்-ஜ/
2 months 3 weeks ago
'சென்யார்' புயல் உருவானது - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை எச்சரிக்கை? பட மூலாதாரம், IMD 26 நவம்பர் 2025, 02:20 GMT புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.13 மணிக்கு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மலாக்கா நீரிணையில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து, 'சென்யார்' புயலாக தீவிரமடைந்துள்ளது என தெரிவித்துள்ளது. "நவம்பர் 26, 2025 காலை 05:30 மணி நிலவரப்படி, 'சென்யார்' புயல் நான்கோவ்ரிக்கு (நிக்கோபார் தீவுகள்) கிழக்கு - தென்கிழக்கே 600 கிமீ மற்றும் கார் நிக்கோபருக்கு (நிக்கோபார் தீவுகள்) தென்கிழக்கே 740 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது." மேலும், "அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்யார் புயலின் தீவிரம் குறையாது, பின்னர் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது. அது இன்று (நவம்பர் 26) காலையில் மேற்கு நோக்கி நகர்ந்து இந்தோனீசியா கடற்கரையைக் கடக்கும். அதன் பிறகு, அது மேற்கு - தென்மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி திரும்பும்" எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் மற்றொரு சுழற்சி இது தவிர, ''நேற்று தென்மேற்கு வங்ககடல் பகுதியை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது''. என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது இது வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், IMD சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா நவம்பர் 24 அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். இந்த இரு சுழற்சிகளாலும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் நவம்பர் 26: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நவம்பர் 27: தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நவம்பர் 28: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. நவம்பர் 29: புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. நவம்பர் 30: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை 'ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ள வானிலை ஆய்வு மையம், 'தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் நவம்பர் 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்' என்றும் தெரிவித்துள்ளது. இலங்கையில் என்ன நிலை? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இலங்கை (கோப்புப் படம்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், ஏனைய பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடை 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதுடன், ஏனைய பகுதிகளில் இடைக்கிடை 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல பகுதியில் கடந்த 21ம் தேதி பாரிய கல்லொன்று சரிந்து ஏற்பட்ட மண்சரிவில் 6 பேர் உயிரிழந்திருந்ததுடன், மாவனெல்ல பகுதியில் 23ம் தேதி முச்சக்கரவண்டியொன்றின் மீது மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்திருந்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, பதுனை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட, ஹங்குரங்கெத்த ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை எச்சரிக்கைகளே விடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் சில தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளன. கடந்த சில தினங்களாக மழையுடனான வானிலை நிலவிவந்த போதிலும், இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் அதிகளவான மழையுடனான வானிலை நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyl4zdd5wvo
2 months 3 weeks ago
தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப்பலகை அகற்றிய விவகாரம்: வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை Published By: Vishnu 26 Nov, 2025 | 05:28 AM (வாழைச்சேனை நிருபர், பட்டிருப்பு நிருபர்) தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (22) வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்குப் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன. வாழைச்சேனை பிரதேசசபைக்கு உட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதி பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாகத் தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் அப்பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர். அதற்கமைய வாழைச்சேனை பிரதேச சபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்று முன்தினம் கைப்பற்றிய வாழைச்சேனை பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரைக் கைதுசெய்தனர். அதேவேளை இதனுடன் தொடர்புபட்ட வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன், பிரதி தவிசாளர், இரண்டு உறுப்பினர்கள் உட்பட நால்வர் நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இந்நிலையில் அவர்கள் சார்பில் நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தனது தரப்பினர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பொருத்தமற்றவை என நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அத்தோடு 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின்கீழ் வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேசசபைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சட்டத்தின் பிரகாரம் பிரதேசசபை தவிசாளர் அதிகாரமுடையவர் எனவும் சுட்டிக்காட்டினார். எனவே அந்த அதிகாரத்துக்கு அமைவாகச் செய்யப்பட்ட விடயத்தை 'பெயர்ப்பலகைகளை அகற்றினார்' என்று குற்றச்சாட்டாக முன்வைக்கமுடியாது எனவும் சுமந்திரன் வாதத்தை முன்வைத்தார். அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் அனுமதியைப்பெற்றே பெயர்ப்பலகை இடப்படவேண்டும் என்பதை சுமந்திரன் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப்பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர். அவ்வாறு முறையாக அனுமதி கோரும்போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்று சுமந்திரன் கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கடலாம் என்ற காரணத்தினாலும், பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிணைவழங்ககூடிய காரணங்களைக் கொண்டிருப்பதனாலும் நீதிவானால் ஐந்து பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதற்கமைய வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் இருவர் உள்ளடங்கலாக ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231467
2 months 3 weeks ago
அண்ணை, அண்மையில் அவர்களிடம் தோற்றதால் கடினமான அணியாகத் தோன்றுகிறதோ?!
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙏 ❤️
2 months 3 weeks ago
யாழில் மாவீரர் வாரத்தில் பொலிஸாரின் கெடுபிடிகள்! மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு பொலிஸாரின் கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடினையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்றுமாறும் வல்வெட்டித்துறை பொலிஸார், குறித்த பதாகையில் உள்ள பாதணி விடுதலைப் புலிகளினை உருவகப்படுத்துவதாக சுட்டிக்காட்டி சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சின்னங்கள், இலட்சிணைகள் பயன்படுத்தாமல் உயிரிழந்தவர்களை நினைவு கூர முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேவேளை நேற்று மாலை மல்லாகம் சந்தி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இலத்திரனியல் உபகரணத்தில் பாடல் ஒலிக்க விடப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு வந்த தெல்லிப்பழை பொலிஸார் குறித்த உபகரணத்தை கைப்பற்றி வழக்கு சான்றுப் பொருளாக இலக்கமிட்டுள்ளனர். மாவீரர் நாள், நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் காணப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். https://newuthayan.com/article/யாழில்__மாவீரர்__வாரத்தில்__பொலிஸாரின்_கெடுபிடிகள்!#google_vignette
2 months 3 weeks ago
அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 560 பேருக்கு பாதிப்பு! வடமாகாணத்தில் தற்போது நிலவும் அசாதாரண கால நிலை காரணமாக, 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவின்பிரதிப்பணிப்பாளர் ரி.என். சூரியராஜா தெரிவித்துள்னர். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலைகாரணமாக சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சங்கானை பிரதேசசெயலர் பிரிவில் மின்னல் தாக்கம் மற்றும் வெள்ள இடர் காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஊர்காவற்றுறை பிரதேசசெயலர் பிரிவில் கடும் காற்று காரணமாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 7பேர் பாதிக்கப் பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் காரணமாக 29 குடும்பங்களைச் சேர்ந்த 98பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பிரதேசசெயலர் பிரிவில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 385பேர் வெள்ளம் மற்றும் மின்னல் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன். ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. காரைநகர் பிரதேசசெயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். https://newuthayan.com/article/அசாதாரண_காலநிலை_காரணமாக_யாழில்_560_பேருக்கு_பாதிப்பு!
Checked
Thu, 02/19/2026 - 22:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed