2 months 3 weeks ago
நிழலி சொல்லியிருப்பது நியாயமான கருத்து. பொட்டர் மட்டுமல்ல, திலீபன் கூட மருத்துவக் கல்லூரி செல்லும் வாய்ப்பிருந்த ஒரு படிப்பாளி என்று அறிந்திருக்கிறேன். @island உங்கள் கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்!
2 months 3 weeks ago
அன்றைய நாட்களில் பல உயர்தர மாணவர்கள் தாமாகவே புலிகளில் இணைந்தனர். நூற்றுக்கணக்கானோர் அல்ல, ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு இணைந்தனர். அவ்வாறு சுய விருப்பில் இணைந்த அனைவரையும் உங்கள் இந்த கருத்து அவமானப்படுத்துகின்றது. நாமெல்லாம் வசதியான வாழ்க்கையை நோக்கி நகரும் பொழுது படிப்பை விட, தாயக மீட்பு முக்கியம் என சென்ற ஆயிரக்கணக்கானோரை அவமானப்படுத்தி உள்ளீர்கள் இங்கு.
2 months 3 weeks ago
கண்ணால் கண்ட கடவுள் தமிழர்களின் தலைவர் பிரபாகரன் எங்கிருந்தாலும் வாழ்க.
2 months 3 weeks ago
ஆகா தாத்தா சிறி வாழ்த்துக்கள். சிவானிகுட்டி நலமோடு வாழ வேண்டுகிறேன்.
2 months 3 weeks ago
26 Nov, 2025 | 03:51 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்பு கடி உள்ளிட்ட தவிர்க்க கூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க விமான படையினர் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231500
2 months 3 weeks ago
"இலங்கைக்கு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து ஒன்றாக இணைந்து தாழமுக்கமாக மாறவுள்ளன. இவ்வாறு இரு காற்றுச் சுழற்சிகள் இணைந்து இலங்கை ஊடாக நகர்கின்றமை 130 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை. இதனால், எதிர்வரும் 30ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தில் கனமழை தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்றுறையின் மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராசா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச்சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று புதன்கிழமை ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளன. காற்றழுத்த தாழ்வுநிலை இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஆரம்பத்தில் இலங்கையின் நிலப்பகுதி ஊடாகவும், பின்னர் இலங்கையின் கிழக்குக் கரைப்பகுதி ஊடாகவும் நகரவுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதியளவிலேயே அந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை வடக்கு மாகாணத்தில் இருந்து நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேவேளை இன்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50 கிலோமீற்றர் தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது." என்றார். https://tamilwin.com/article/close-proximity-to-sri-lanka-in-the-last-130-years-1764154057
2 months 3 weeks ago
மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை Nov 26, 2025 - 02:37 PM கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை காரணமாக விசேடமாக தமன, அம்பாறை, இறக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று (26) நண்பகல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, நேற்று (25) அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 225 மி.மீ. அம்பாறையில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்படாவிட்டாலும், ஏனைய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் சூரியபண்டார தெரிவித்தார். அதிக மழைவீழ்ச்சி காரணமாக தற்போது நாட்டின் 25 பிரதான குளங்களும் 26 நடுத்தர குளங்களும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று ஆற்றுப் படுக்கைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. சோமாவதிய மற்றும் மனம்பிட்டி ஆகிய பிரதேசங்கள் இன்று மாலைக்குள் நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாகவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். யான் ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களும் அப்பகுதி ஊடாகப் பயணிக்கும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், விசேடமாக குச்சவெளி, பதவிய ஸ்ரீபுர, கெப்பித்திகொல்லாவ, கோமரன்கடவல, ஹொரவபொத்தானை, மொரவெவ, கஹட்டகஸ்திகிலிய மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, முந்தானை ஆற்றுப் படுக்கையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, முந்தானை ஆறு படுக்கையைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட முந்தானை ஆறு சார்ந்த தாழ்வான பகுதிகளில், தற்போதிருந்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. மாதுறு ஓயா படுக்கையைச் சேர்ந்த கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, மஹாஓயா, பதியத்தலாவ, தெஹியத்தகண்டி, திம்புலாகல, வெலிகந்த மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மாதுறு ஓயா சார்ந்த தாழ்வான பகுதிகளில் தற்போதிருந்து அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmifs777r020io29nbtfh9odi
2 months 3 weeks ago
ஜீவன் தொண்டமானும் மனைவி சீதை ஸ்ரீ நாச்சியாரும் இலங்கை வந்தடைந்தனர் 26 Nov, 2025 | 05:38 PM இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் அவரது மனைவியான சீதை ஸ்ரீ நாச்சியார் இன்று புதன்கிழமை (26) இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கடந்த 23 ஆம் திகதி திருப்பத்தூரில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று காலை 11.05 மணிக்கு இந்தியாவின் திருச்சியிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-132 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/231498
2 months 3 weeks ago
வெகு சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் பச்சிலைப்பள்ளி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பளை பகுதியில் இன்றையதினம் (26.11.2025) காலை 9:30 மணியளவில் பளை பிரதான பேருந்து தரிப்பிடத்தின் அருகாமையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த கௌரவிப்பு நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மங்கள வார்த்தை இசையுடன் அழைத்து வரவேற்கப்பட்டு மாவீரர் பெற்றோரால் நினைவு சுடர் ஏற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்த கௌரவிப்பு நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவீரர் பெற்றோர் மற்றும் மாவீரர் உரித்துடையோர் என பலரும் கலந்து கொண்டனர். செய்தி - எரிமலை யாழில் கட்டப்பட்டுள்ள கொடிகள் மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். நகர் பகுதி எங்கும் மஞ்சள் மற்றும் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு பகுதிகளில் மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் இன்று வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. செய்தி - தீபன் https://tamilwin.com/article/the-sixth-day-of-maaveerar-work-1764159995
2 months 3 weeks ago
அததெரண கருத்துப்படம்.
2 months 3 weeks ago
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 408 ரன்களில் இந்தியா தோல்வி - 5 காரணங்கள் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் எடுத்தார் செனுரன் முத்துசாமி கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 26 நவம்பர் 2025, 08:03 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது இந்திய அணி. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. இதன் மூலம் 2000 ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் போட்டியில் தோற்றிருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கான 5 காரணங்கள் என்ன? 1. சவால் கொடுத்த லோயர் மிடில் ஆர்டர் இந்தப் போட்டியின் முதல் நாள் இந்தியா ஓரளவு நல்ல நிலைக்கு வந்தது. தென்னாப்பிரிக்க அணி 201/5 என்ற நிலையில் இருந்தது. அங்கிருந்த அந்த அணியை 300 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், வழக்கம் போல் லோயர் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் இந்திய அணி பௌலர்களுக்கு சவால் கொடுத்தது. வழக்கமாகவே பல போட்டிகளில் டாப் ஆர்டரை விரைந்து ஆட்டமிழக்கச் செய்தபின் அதன் பிறகு வரும் வீரர்களை அவுட் ஆக்க முடியாமல் இந்தியா தடுமாறும். சமீபத்திய போட்டிகளிலேயே அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. பட மூலாதாரம், Getty Images நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் (பெங்களூரு, 2024) வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி 65 ரன்கள் எடுத்து இந்தியாவை சோதித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் (2025) இரண்டாவது இன்னிங்ஸில் 91/6 என்றிருந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பிறகு மட்டும் 47.4 ஓவர்கள் ஆடியது. கடைசி விக்கெட்டுக்கு நாதன் லயான், ஸ்காட் போலாண்ட் இருவரும் மட்டும் 19.3 ஓவர்கள் ஆடினார்கள். சமீபத்தில் கூட இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட்டின் (2025) முதல் இன்னிங்ஸில் பிரைடன் கார்ஸ் 55 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் ஸ்கோரை அதிகப்படுத்தினார். இது இந்த கவுஹாத்தி போட்டியிலும் தொடர்ந்தது. செனுரன் முத்துசாமி, மார்கோ யான்சன் மற்றும் கைல் வெரெய்னே ஆகியோர் இந்திய பௌலர்களுக்கு சவால் கொடுத்தனர். ஏழாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, எட்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தனர். அதன் விளைவாக அந்த அணி 489 ரன்கள் குவித்தது. முத்துசாமி 109 ரன்கள் அடிக்க, யான்சன் 93 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. பட மூலாதாரம், Getty Images 2. பதம் பார்த்த 12 ஓவர்கள் இந்தப் போட்டியில் பேட்டிங் செய்வது அவ்வளவு கடினமாக இருந்திருக்கவில்லை. தென்னாப்பிரிக்காவின் பெரிய இன்னிங்ஸுக்குப் பிறகு, இந்தியாவும் நல்ல தொடக்கத்தையே கண்டிருந்தது. 32.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. தென்னாப்பிரிக்காவின் தொடக்கத்தை விட இது ஓரளவு சிறப்பானதாகவே இருந்தது. ஆனால், அங்கிருந்து பெரும் சரிவைச் சந்தித்தது இந்தியா. 32.1 ஓவர்களில் 95/1 என்ற இந்தியா 43.3 ஓவர்கள் முடிவில் 122/7 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த இடைப்பட்ட 11.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்தார்கள். அதில் பெரும்பாலானவை மோசமான ஷாட்களினால் வீழ்ந்த விக்கெட்டுகள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மோசமான ஷாட் தேர்வால் முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்டர்கள் விரைந்து ஆட்டமிழந்தனர் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து 'ஷார்ட் லென்த் பால்'களாக வீச, இந்திய பேட்ஸ்மேன்கள் அதை அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டுகளை இழந்தார்கள். துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட், ஜடேஜா, நித்திஷ் குமார் ரெட்டி என அடுத்தடுத்து விக்கெட்டுகள் அப்படியே வீழ்ந்தன. ஹார்மர் பந்துவீச்சில் அவுட்டான சாய் சுதர்ஷன் கூட தவறான ஷாட் ஆடித்தான் ஆட்டமிழந்தார். அது இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படக் காரணமாக அமைந்தது. அதிலிருந்து கடைசி வரை இந்திய அணி மீண்டு வரவேயில்லை. 3. அனைத்து திசையிலும் அணைபோட்ட யான்சன் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பௌலிங் இரண்டு ஏரியாவிலுமே இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கினார் யான்சன். முன்னர் தன்னுடைய அதிரடி இன்னிங்ஸால் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை உயரச் செய்தார். 91 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் அவர். இது இந்திய பௌலர்களுக்கு ஒருபக்கம் நெருக்கடி ஏற்படுத்தியதோடு, மறுபக்கம் பேட்டிங் செய்துகொண்டிருந்த முத்துசாமி மீதான நெருக்கடியையும் குறைத்தது. பேட்டிங்கில் சோபித்ததோடு மட்டுமல்லாமல், அடுத்ததாக பந்துவீச்சிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார் யான்சன். இந்திய அணி தங்கள் முதல் இன்னிங்ஸில் அந்த பெரும் சரிவை சந்திக்க அவர்தான் முக்கியக் காரணமாக இருந்தார். 'ஷார்ட் லென்த்' பந்துகளாக தொடர்ந்து வீசிய அவர், இந்திய பேட்டர்களை பெருமளவு சோதித்தார். அதில் வேகமும் இருந்ததால், இந்திய பேட்டர்களால் அதிரடியும் காட்ட முடியவில்லை. அதன் விளைவாக பண்ட், ஜுரெல், ஜடேஜா, நித்திஷ் ஆனைவரும் அவரது ஷார்ட் லென்த் பந்துகளில் பெவலியின் திரும்பினார்கள். கடைசி கட்டத்தில் வந்து குல்தீப் மற்றும் பும்ரா ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர். 19.5 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 288 என்ற மிகப் பெரிய முன்னிலை பெறுவதற்கு அவர் மிக முக்கியக் காரணமாக விளங்கினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டு பிரிவிலும் சோபித்தார் மார்கோ யான்சன் 4. சவாலான தருணத்தில் தரப்பட்ட டிக்ளரேஷன் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் திட்டம் பலருக்கும் புதிராக இருந்தது. விரைந்து ரன்கள் சேர்த்து, நல்ல முன்னிலை பெற்றதும் டிக்ளேர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களோ வேறொரு திட்டம் வைத்திருந்தார்கள். 83.5 ஓவர்கள் பேட்டிங் செய்த அந்த அணி 260 ரன்கள் எடுத்து, 548 ரன்கள் முன்னிலை பெற்றதும் டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியபோது 450 - 480 என்ற இலக்கை நிர்ணயித்து விட்டு டிக்ளேர் செய்வார்கள் என்று வல்லுநர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கு அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 170 - 200 ரன்கள் அடித்திருந்தாலே போதும், அதை அவர்கள் அதிரடியாக அடிப்பார்கள் என்றுதான் வர்ணனையாளர்கள் விவாதித்தார்கள். ஆனால், தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மிகவும் நிதானமாக விளையாடியது தங்களுக்கு ஆச்சர்யமளிப்பதாகக் கூறியவர்கள், அதற்கான காரணத்தை பெருமளவு விவாதித்தார்கள். பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் நன்றாக இருக்கிறது என்பதால் அவர்கள் இந்தியாவுக்கு அதிக ஓவர்கள் கொடுக்கவேண்டாம் என்று திட்டமிட்டிருக்கலாம் என்று தமிழ் வர்ணனையாளர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இந்தியாவை ஆல் அவுட் செய்ய 100 -110 ஓவர்கள் கொடுப்பது முக்கியம் என்றும் விவாதிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது செஷன் முடிந்ததும் கூட டிக்ளேர் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா அதைச் செய்யவில்லை. மூன்றாவது செஷனிலும் 8 ஓவர்கள் ஆடிவிட்டு அந்த அணி டிக்ளே செய்ய, வெளிச்சம் சற்று குறைவான, மிகவும் சவாலாக கடைசி கட்டத்தில் புதிய பந்தை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா. இறுதியில் நான்காம் நாளின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இது கடைசி நாள் சரிவுக்கு அடித்தளம் போட்டதாக அமைந்துவிட்டது. ஒருவேளை முன்னதாகவே இந்திய அணியின் இன்னிங்ஸ் தொடங்கியிருந்தால் அவர்கள் நல்ல தொடக்கம் கண்டிருக்கலாம். அது போட்டியை டிரா நோக்கி நகர்த்தியிருக்கலாம். ஒருவேளை அந்த இரு விக்கெட்டுகள் கிடைக்காவிட்டாலும் கூட இந்தப் போட்டி டிரா ஆகியிருக்கலாம். ஆனால் தென்னாப்பிரிக்க அணி அந்த ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தது. அவர்கள் அதிக ஓவர்கள் பிடித்து இந்தியாவை கடைசி கட்டத்தில் ஆடவைக்கவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்திருக்கிறார்கள். அதை சிறப்பாகவும் நடைமுறைப்படுத்தினார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி 5. 'உத்வேகம் இல்லையா?' இந்தப் போட்டியின்போது வல்லுநர்கள் பலரும் விவாதித்த இன்னொரு விஷயம், இந்திய வீரர்களிடம் உத்வேகம் இல்லை என்பது. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது இந்திய வீரர்கள் யாரும் பெரிதாக உரையாடல்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை. வழக்கம்போல் ரிஷப் பண்ட் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். இதை அப்போது வர்ணனையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஶ்ரீதர் கூடக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் கூட இதைப் பற்றி வர்ணனையில் விவாதித்தார். "இந்தப் போட்டியில் இந்திய வீரர்களிடம் பெரிதாக உத்வேகம் காணப்படவில்லை" என்று அவர் கூறினார். கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. 2000ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு தொடரை இழப்பது இதுவே ஐந்தாவது முறை. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு முறை தோற்றிருக்கிறது இந்தியா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czdg5d76r5po
2 months 3 weeks ago
26 Nov, 2025 | 04:39 PM மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இங்கிலாந்தில் எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒரு "சுமுகமான ஆர்ப்பாட்டம்" என்று பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்தார். புதன்கிழமை (26) எதுல் கோட்டையில் நடைபெற்ற பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் வழக்கறிஞர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், தில்வின் சில்வாவுக்கு எதிராக புலிக்கொடிகள் ஏந்தி வந்தபோதும், எந்தவொரு கோரிக்கையையோ அல்லது கோஷத்தையோ அவர்கள் முன்வைக்கவில்லை. அவர் வாகனத்திலிருந்து இறங்கி விழா நடைபெறும் இடத்திற்குச் செல்வதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை, 2012இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் நடந்த புலிகளின் ஆர்ப்பாட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அன்றைய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோபத்துடன் வெறித்தனமாக இருந்தனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரணம் வேண்டும் என்று கோஷமிட்டனர். அன்றைய தினம் அவர் மேலும் பத்து நிமிடங்கள் அங்கு நின்றிருந்தால், அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் பின்னர் குறிப்பிட்டனர். ஆனால், தில்வின் சில்வாவுக்கு எதிராக நாம் கண்டது ஒரு பெயரளவு ஆர்ப்பாட்டம், ஒரு சுஹத (சுமுகமான/நட்பான) ஆர்ப்பாட்டம், ஏதோ கடமைக்காகச் செய்த ஆர்ப்பாட்டம். எப்படியும், வடக்கின் பயங்கரவாதிகளுக்கும் தெற்கின் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஒரு சகோதரத்துவ பிணைப்பு உள்ளது. நாங்கள் செய்ய முடியாததை இவர்கள் செய்துவிட்டார்களே என்று வடக்கின் பயங்கரவாதிகளுக்கு தெற்கின் பயங்கரவாதிகள் மீது ஒரு பெரிய மரியாதை இருக்கிறது. திசைகாட்டி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிராகரிப்பு: நம்பகத்தன்மையை மீட்டெடுக்க புலிகளின் உதவி? திசைகாட்டி (NPP) அரசாங்கம் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்த முயற்சித்து, தனது தென் பகுதி வாக்குகளை இழந்துவிட்டதாக கம்மன்பில குற்றம் சாட்டினார். ரணவிருவோக்களுக்கு (போர் வீரர்களுக்கு) 'சிப்பாய்கள்' என்று கூறினர். புலிகள் அமைதிக்குத்தான் போராடினர் என்று கூறினர். வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றினர். வடக்கில் சிங்களவர்களுக்கு தொந்தரவு கொடுக்க உள்ளூராட்சி சபைத் தலைவர்களை ஏவி விட்டனர். வடக்கில் பௌத்த விகாரைகளை அகற்றும் ஆர்ப்பாட்டங்களில் தமது உறுப்பினர்களைப் பங்கேற்க அனுமதித்தனர். கிழக்கில் விகாரைகளை டோசர் செய்ய முயன்றனர். கிழக்கில் உள்ள விகாரைகளின் புத்த சிலைகளை பொலிஸாரைப் பயன்படுத்தி அகற்றினர். இதனால் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை அரசாங்கத்தின் மீது உடைந்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட சமஷ்டி (Federal) யாப்பை கொண்டுவர வேண்டுமானால், இந்த நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். அதனால்தான், லண்டன் புலிகள் ஆர்ப்பாட்டம், தெற்கின் பயங்கரவாதிகள் மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெற வடக்கின் பயங்கரவாதிகளிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு என்ற நியாயமான சந்தேகம் நமக்கு எழுகிறது, என அவர் தெரிவித்தார். 6 நிறைவேற்றப்படாத பிரிவினைவாதக் கோரிக்கைகள் அம்பலம் கனடிய தமிழ்க் காங்கிரஸ், ஜனாதிபதி அனுர திசாநாயக்க வெற்றிக்குப் பின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், "நாங்கள் எங்கள் கடமையைச் செய்துவிட்டோம், நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டதை கம்மன்பில நினைவுபடுத்தினார். "ஜனாதிபதி எனது கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ஆனால், கனடிய தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், தலைவர் குமார் ரத்னம் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட கோரிக்கைகள் பட்டியலையும் முன்வைத்துள்ளனர். திசைகாட்டி அரசாங்கம் புலிகள் ஆதரவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் இவைதான், என்று கூறி, கம்மன்பில அந்தக் கோரிக்கைகளைப் பட்டியலிட்டார்: * அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல் (கைதிகளாக உள்ளவர்கள் பயங்கரவாதிகளே தவிர, அரசியல் கைதிகள் அல்ல என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்). * பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல். * இராணுவ முகாம்கள் அமைப்பதற்காகப் பெறப்பட்ட அனைத்துப் தனியார் நிலங்களையும் அதன் அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து, இராணுவ முகாம்களை அகற்றுதல். * வடக்கில் விகாரைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்துதல். * புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல். * இராணுவம் உணவகங்கள் நடத்துவது போன்ற வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக விலகி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ நிலைநிறுத்தலை மற்ற மாகாணங்களுக்கு இணையாகக் குறைத்தல். "இவைதான் திசைகாட்டி அரசாங்கம் புலிகள் ஆதரவாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள். பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கும் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவும் ஒப்புக்கொண்டுள்ளனர். அவற்றை நிறைவேற்றாததின் ஆவேசமே லண்டனில் இருந்து வெளிவந்துள்ளது," என்று அவர் கூறினார். "அனுரவே இலங்கையின் வரலாற்றில் ஊழல் மிகுந்த ஜனாதிபதி" நுகேகொட கூட்டத்தில் முன்வரிசையில் இருந்த அனைவருக்கும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் (CIABOC) நான்கு அல்லது ஐந்து கோப்புகள் இருப்பதாக திசைகாட்டி உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு கம்மன்பில சவால் விடுத்தார். "நானும் முதல் வரிசையில்தான் அமர்ந்திருந்தேன். எனக்கு எதிராக நான்கு ஐந்து கோப்புகள் அல்ல, ஒரே ஒரு கோப்பு இருப்பது பற்றி உங்களால் கூற முடியுமா என்று திசைகாட்டி உறுப்பினர்களுக்கு சவால் விடுக்கிறேன். நாங்கள் இலஞ்சமோ, கொள்ளையோ, ஒழுக்கக்கேடோ செய்யாததால்தான், அனுர திசாநாயக்கவே இலங்கையின் வரலாற்றில் ஊழல் மிகுந்த ஜனாதிபதி என்றும், திசைகாட்டி அரசாங்கம் ஊழல் நிறைந்தது என்றும் பயமின்றி கூறுகிறோம்," என்றார். அனுர திசாநாயக்கவின் நிர்வாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய முறைகேடுகளை பட்டியலிட்ட கம்மன்பில, பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டினார்: * ஊழலை விசாரிக்கும் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியானவரை நியமிக்காமல், அரசுத் தணிக்கையில் அனுபவமில்லாத கேளனி பல்கலைக்கழக சகா ஒருவரை நியமிக்க முயன்ற முதல் ஜனாதிபதி. * ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாதவ தென்னக்கோன் என்பவரை நீக்கி, சதி மூலம் தனக்குச் சாதகமான ஒருவரை நியமித்தது. * 323 கொள்கலன்கள் மோசடியாக விடுவிக்கப்பட்டதில் ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சுக் குழுவால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 'சீவலி அருக்கொடவுக்கு' தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, மரபுகளை மீறி சேவைக் கால நீட்டிப்புடன் பணிப்பாளர் நாயகமாகப் பதவி உயர்வு வழங்கியது. "இதைவிட ஊழல் மிகுந்த ஜனாதிபதி யாராவது இருந்தால், அவரை பெயரிடுமாறு நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்," என்று கம்மன்பில தெரிவித்தார். "பொய் வழக்குகள் போட்டால், அதுவே அரசாங்கத்திற்குப் பெரிய சிக்கலாகும்" நுகேகொட கூட்டம் "திருடர்களின் கூட்டம்" என்று கூறப்பட்டதை நிராகரித்த கம்மன்பில, "திசைகாட்டி தலைவர்கள் வாயைத் திறந்தாலே அப்பட்டமான பொய்களைத்தான் சொல்கிறார்கள். நுகேகொட கூட்டத்தில் இருந்தவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானதா, பொய்யானதா என்று எங்களுக்குத் தெரியாது. அதனால், அரசியலில் ஈடுபடும் அனைவருடனும் நாம் இணைந்து பணியாற்ற நேரிடும். எங்களில் யாராவது திருடர்கள் இருந்தால், பேசிக்கொண்டிருக்காமல் அவர்களைக் கைது செய்யுங்கள். நாங்கள் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம். திருடர்களைப் பிடிப்பதாக வாக்குறுதி அளித்ததால் தானே, மக்கள் ஆணை கிடைத்தது," என்று வலியுறுத்தினார். "ஆனாலும், எங்களைப் பயமுறுத்தி நிறுத்த முடியாமல், சிறையில் அடைப்பதற்காகப் பொய் வழக்குகளைப் புனைய முயற்சித்தால், அது அரசாங்கத்திற்கு ஒரு பேரழிவு சக்தியாக மாறும் என்று இப்போதே எச்சரிக்கிறேன்," என்றும் அவர் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/231514
2 months 3 weeks ago
பிரான்ஸிலிருந்து வந்த இளைஞனின் படுகொலை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு! பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ராஜகுலேந்திரன் பிரிந்தனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 01ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராஜகுலேந்திரன் பிரிந்தன், கடந்த 18ஆம் திகதி (18.11.2025) நள்ளிரவு, வெளிநாட்டிலிருந்து பொதி ஒன்று வந்திருப்பாதாக தொலைபேசியில் கூறப்பட்டு யாழ். வடமராட்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே வரவைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மட்டக்களப்பு அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (25.11.2025) பிற்பகல் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர். நீதிமன்ற அனுமதி இதன்போது, குறித்த சந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என நெல்லியடி பொலிஸாரால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நெல்லியடி பொலிஸாரின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய எதிர்வரும் 01ஆம் திகதி வரை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. https://tamilwin.com/article/court-order-on-france-youth-murder-in-jaffna-1764148005#google_vignette
2 months 3 weeks ago
உங்கள் வீட்டு குட்டி புது வரவுக்கு வாழ்த்துக்கள்.🖐
2 months 3 weeks ago
தன்னிகரல்லாத தலைவனுக்கு இனிய அகவைநாள் வாழத்துகள்.
2 months 3 weeks ago
பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி! பெங்களூருவில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். பாதிக்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சந்தித்து, பின்னர் ஆன்லைன் நட்பை வளர்த்துக் கொண்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் நட்பு வளர்ந்த பின்னர், 24 வயதான இலங்கை மாணவி வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளப்பட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான நம்பிக்கையை மாணவி பெற்றதால், அவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் உரையாடலைத் தொடங்கினர். இந்த வீடியோ அழைப்புகளின் போது, தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோக்களை குற்றம் சாட்டப்பட்டவர் தனது அனுமதியின்றி ரகசியமாக பதிவு செய்ததாக இலங்கை மாணவி தனது பொலிஸ் முறைப்பாட்டில் கூறியுள்ளார். தனது தனிப்பட்ட வீடியோக்களை எடுத்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீக்குவதற்கு ஈடாக பணம் கோரியுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக பெங்களூரு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2025/1453940
2 months 3 weeks ago
2026´ம் ஆண்டில்... உலகையே ஆளும் சக்தி கொண்டவராக மாற இருக்கும், விளாடிமிர் புட்டின் அவர்களுக்கு முற் கூட்டிய வாழ்த்துக்கள்.
2 months 3 weeks ago
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயார் என்பதற்கான எந்த அறிகுறியையும் தான் காணவில்லை என்று உக்ரைக் ஆதரவு கூட்டணியின் வீடியோ மாநாட்டிற்கு பின்பு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கிறார். மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்ய தலைமையை தொடர்ந்து கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
2 months 3 weeks ago
நேற்று 25 கார்த்திகை அன்று தம்பி தமிழ்சிறியை அவர் மகள் யாழினி தாத்தாவாக்கிவிட்டார். அவர் குடும்பத்தில் உதித்த முதல் பேரப்பிள்ளை, பேத்தியின் பெயர் சிவானி. பேத்தி சிவானி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!!🙌
2 months 3 weeks ago
கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 03 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 03] / In English & Tamil அந்த இரவு மிக வித்தியாசமாக அமைதியாக இருந்தது. பீரங்கி சத்தமில்லை. பறவைகள் மிருகங்கள் கத்தும் சத்தமில்லை. கடலின் மெதுவான மூச்சுக் குரலும், காற்றில் சாயும் கிளைகளின் நடுங்கும் சத்தமுமே கேட்டன. அவள் அவன் சட்டையைப் பற்றிக் கொண்டாள். “கவின்... கேள். இதை உடனடியாக எழுதி வை...” என்றாள். அவன் அங்கே நிலத்தில் இருந்த ஒரு பிஸ்கட் பெட்டியிலிருந்து ஒரு அட்டையைக் கிழித்தான். எரிந்த ஒரு மரக்கிளை குச்சியை எழுது கோலாகப் பாவித்து, அவள் கிசுகிசுத்தபடி அவன் எழுதத் தொடங்கினான். அவனது கைகள் சாம்பலால் நிறைந்திருந்தன. சட்டையின் கைப்பகுதி கிழிந்திருந்தது. ஆனால் அவன் எழுத்து மட்டும் இன்னும் நேர்த்தியாக, மென்மையாக இருந்தது **“நான் இறந்தால்... நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்று உலகிற்குச் சொல்லுங்கள். நாங்கள் மனிதர்கள். எங்களுக்கு கனவுகள் இருந்தன. எங்களுக்கு பெயர்கள் இருந்தன. எங்களுக்கு அன்பு இருந்தது. நான் குண்டுகளுக்கு அடியில் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தேன் என்று சொல்லுங்கள்... அவர்கள் இந்த சூழலிலும் சிரித்துக்கொண்டு தான் இருந்தார்கள் . இருட்டில் நீங்கள் என் கையைப் பிடித்திருந்தீர்கள், ஆனால் நான் பயப்படவில்லை. அங்கு ஒரு கட்டுப்பாடு ஒழுங்கு எந்த நிலையிலும் இருந்தது என்று சொல்லுங்கள் ... முள்ளிவாய்க்கால் மரண இடம் அல்ல என்று அவர்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் உண்மையாக மாறிய இடம் அதுதான்.”** அவள் உதடுகள் நடுங்கின. அவள் இறுதி மூச்சு ஒரு கிசுகிசுப்பாக இருந்தது: "எங்கள் இருவருக்காகவும் நீ வாழ வேண்டும்." அந்த இறுதி வார்த்தையுடன் அவள் கை சோர்ந்து விழுந்தது ... அவள் கண்கள் உறைந்தன - ஆனால் இன்னும் திறந்திருந்தன, அவள் ஒருபோதும் பார்க்காத எதிர்காலத்தைத் தேடிக்கொண்டிருந்தன. அவள் இறந்ததைக் கண்டு ,கவின் சத்தமாக கத்தவில்லை. அந்த ஒலி காற்றை கிழிக்கவில்லை ஆனால் அவன் ஆன்மாவைக் கிழித்து சென்றது. கடிதம் எழுதப்பட்டது — அவளுக்காக. ஆனால் அவனுக்குள் ஏதோ ஒன்று சொன்னது: இந்தக் கடிதம் இன்று வாசிக்கப்படுவதற்கல்ல … நாளைக்காக … என்றாலும் கடல் காற்று அந்தக் காகிதத்தின் ஓரத்தைத் தூக்கியபடி, வார்த்தைகளைப் படிக்க முயல்வதைப்போல் அசைந்தது. அவன் கடிதத்தை மெதுவாக மடித்து கவனமாக தன் கால்சட்டை சட்டைப்பைக்குள் வைத்தான் — ஒரு வாழ்க்கைப் பக்கம் மூடப்படுவது போல… இறுதி தாக்குதல் முடிந்த போது, மாதங்களாக அழுத வானம் திடீரென மௌனமானது, துப்பாக்கிகளும் குண்டுகளும் அசாதாரண அமைதியில் உறைந்தது, கவின் இன்னும் காயங்களுடன் இருந்தாலும் உயிருடன் இருந்தான். அவனைச் சுற்றி உடல்கள் கிடந்தன — சில அறிந்த முகங்கள், பல தெரியாத மனிதர்கள். உயிருடன் இருந்தவர்கள் நிழல்கள் போல நடுங்கிக் கொண்டு, குண்டுகளால் எரிந்தும் உணவு இன்மையால் தளர்ந்தும் இருந்தார்கள், அவர்கள் இராணுவத்தினரால் கூட்டமாக இழுத்துச் செல்லப்பட்டனர். சில காயங்களுக்கு துணி கட்டப்பட்டது; பல காயங்கள் புறக்கணிக்கப்பட்டன. பலர் கருகிய மணலோடு மங்கிப் போயினர். ஆனால் கவினின் இறுகப் பிடித்த கைக்குள், இரத்தமும் மண்ணும் படிந்த விரல்களுக்கு நடுவே, ஒரு சிறிய கிழிந்த மட்டைத் துண்டு இருந்தது. அதன் ஓரங்கள் கருகியிருந்தன; எழுத்துக்கள் மங்கியிருந்தன; ஆனாலும் அது புனிதமான உண்மை — ஈஸ்வர்யாவின் இறுதி உண்மை. மேலும் ஐக்கிய நாடுகள் சபை (2011 நிபுணர் குழு அறிக்கை): "நம்பகமான ஆதாரங்கள் 40,000 பொதுமக்கள் வரை இறந்திருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளன" என்பதுடன், ஐக்கிய நாடுகள் சபை (உள் மதிப்பாய்வு குழு 2012): பின்னர் வந்த ஒரு உள் அறிக்கையின் படி , இந்த எண்ணிக்கை குறைந்தது 70,000 பேர் கணக்கில் வராதவர்கள் என்று கூறியது. அதேநேரம் உள்ளூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு: உள்ளூர் அரசு மற்றும் உலக வங்கி மக்கள்தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்ட புள்ளிவிவரங்களின் படி, போருக்குப் பிறகு மோதல் பகுதிகளில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கணக்கில் வராதவர்கள் என்பதைக் எடுத்துக் காட்டுகிறது. 2009 மே 18 அன்று கொழும்பில் கொண்டாட்டங்கள் நடந்தன; பட்டாசு, முழக்கம், கொடிகள் — “வெற்றி தினம்” என்று அதை அழைத்தனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் அந்த “வெற்றி” சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்களை — ஆண், பெண், குழந்தை, முதியோர் — இராணுவக் கட்டுப்பாட்டிலான முகாம்களுக்குள் அடைத்த நாடாகவே இருந்தது. அவற்றுள் மிகப்பெரியது மெனிக் பாம்; முள்ளுக் கம்பிகள், கண்காணிப்பு கோபுரங்கள், ஆயுதம் தூக்கி நிற்கும் சிப்பாய்கள், உணவே கைப்பிடி அளவு, நம்பிக்கை ஒரு மௌன கிசுகிசுப்பாக மட்டுமே இருந்தது. அங்கு கவின் ஒரு பெயர் அல்ல; ஒரு எண் மட்டுமே! 2009 டிசம்பரில் சில கம்பிகள் திறந்தன, 2012-ல் கடைசி முகாம்களும் மூடப்பட்டன; அவன் விடுவிக்கப்பட்ட கடைசி ஆண்களில் ஒருவன் — அவன் ஆபத்தானவன் என்பதாலோ அல்ல, நேரடி சாட்சியாக உண்மையைச் சுமந்தவன் என்பதாலே, இந்தக் கெடுபிடி! பிறகு ஒரு எதிர்பாராத அதிசயம் நடந்தது: லண்டனில் இருந்த அவனுடைய பழைய பேராசிரியர் அவனை நினைவுகூர்ந்தார்; அவனின் பொறியியல் கல்வியின் திறமை அவரின் மனதில் இன்னும் இருந்தது. அவர் தான் இப்ப கற்பிக்கும் அதே பல்கலைக்கழகத்தில் அவனுக்கு ஒரு இடம், ஒரு கல்வியுதவியுடன், ஒரு ஆண்டு விலக்குடன் பெற்றுக் கொடுத்தார். கவினுக்கு அது ஒரு தற்காலிக மீட்ப்பாக இருந்தது. கவின் எந்தச் சாமானும் எடுத்துச் செல்லவில்லை; புகைப்படம் இல்லை; நினைவுப் பொருட்கள் இல்லை. அவனுடன் இருந்தது அந்தக் கிழிந்த காகிதத் துண்டு மட்டும் — அந்த உண்மை மட்டும்! நாளடைவில், லண்டனில் பகலில் சிவில் இன்ஜினியரிங் படித்து, இரவில் மனித உரிமைகள் குறித்து பேசும் குரலாக மாறினான். பல்கலைக்கழக அரங்கங்களிலும், நினைவேந்தல் கூட்டங்களிலும் அவன் முள்ளிவாய்க்காலைப் பற்றிப் பேசினான். அந்தச் சிறு மட்டையை உயர்த்தி, “இது ஈஸ்வர்யாவின் கடைசி கடிதம். இது முள்ளிவாய்க்காலின் உண்மை. குரல் இல்லாதவர்களின் குரல் இது” என்று கூற என்றும் தவறவில்லை. சிலர் அழுதார்கள், சிலர் உறைந்தனர், சிலர் வெளியேறினர் — ஆனால் கவின் ஒருபோதும் நிறுத்தவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மே 18 மற்றும் நவம்பர் 27 அன்று அவன் இரண்டு தீபங்கள் ஏற்றினான்: ஒன்று அவளுக்காக, ஒன்று அவள் காப்பாற்றிய குழந்தைகளுக்காக. அவன் திருமணம் செய்யவில்லை. போரில் எரிந்த காதல் அவனுக்குள் இன்னும் அணையாத தீபமாக எரிந்துகொண்டிருந்தது. 2025-ஆம் ஆண்டு, பல ஆண்டுகளாக எடுத்துச் சென்ற சாட்சியத்துக்கும் போராட்டத்துக்கும் பிறகு, கவின் மீண்டும் இலங்கைக்குத் திரும்பினான். முள்ளிவாய்க்கால் கரையில் நின்றபோது, அலைகள் ஆவிகளின் குரல்கள் போல மெதுவாகக் கிசுகிசுத்தன. அவன் ஈஸ்வர்யாவின் கடைசிக் கடிதத்தை ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியில் வைத்து, ஒரு இளம் பனையடியின் அடியில் புதைக்கிறபோது, அவனுக்கு உலகமே நின்றுவிட்டது போல இருந்தது. அவன் மிகவும் மெதுவாக “இப்போது நீ வீட்டுக்குத் திரும்பிவிட்டாய்” என்று சத்தமில்லாமல் உரைத்தான். காற்று, அவள் பதில் சொல்வது போல, இலைகளை அன்போடும் பரிச்சயமான தொடுதலோடும் அசைத்தது. என்றும் கரையை நோக்கி திரும்பும் அந்தக் கடல், அவர்களுடைய காதலும் வலியும் நிறைந்த கதையை, காலம் கொண்டாடும் நித்தியத்துக்குள் [அழியாமைமைக்குள்] எடுத்துச் சென்றது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 03 That night was strangely quiet. There was no cannon fire. There was no sound of birds or animals screaming. All that could be heard was the gentle breathing of the sea and the trembling sound of branches swaying in the wind. She clutched his shirt. “Kavin… listen. Write this down…” she said. He tore a piece of cardboard from a biscuit box, that was on the ground there.Using a burnt twig as a writing utensil, he began to write as she whispered.His hands were covered in ashes. The sleeves of his shirt were torn. But his handwriting was still neat and smooth. **“If I die… tell the world we were not terrorists. We were people. We had dreams. We had names. We had love. Tell them I taught children under bombs… and they still smiled. Tell them you held my hand in the dark… and I was not afraid. Tell them Mullivaikkal is not a place of death. It is where we all became truth.”** Her lips trembled. Her final breath was a whisper: “Live… for both of us.” Her hand fell. Her eyes froze — still open, still searching for a future she would never see. Kavin did not scream loudly. The sound tore through his soul instead of the air. When the final assault ended, when the sky fell silent after months of screaming, when the last echoes of artillery faded into an unnatural stillness — Kavin was still alive. Bodies surrounded him — some known, many unknown. The living were herded like shadows: trembling, burnt, broken. Wounds were wrapped or ignored. Names were lost in ash. But in his clenched fist, beneath blood and grime, he held something sacred: A torn piece of cardboard. Burnt edges. Fading words. Yet holy. It was her truth. May 18, 2009 In Colombo, the capital erupted in celebration. Drums pounded. Flags waved. Fireworks split the sky. “Victory Day,” they called it. But in Mullivaikkal, victory looked like this: Nearly 300,000 Tamil civilians were rounded up — men, women, children, the elderly — and confined in military-guarded detention camps. The largest was Menik Farm, surrounded by barbed wire, watchtowers, armed soldiers, and silence. No movement. No voices. Food in handfuls. Hope in whispers. Kavin became a number. A body to be inspected. A truth to be feared. By December 2009, some gates opened. By 2012, the last camps closed. He was one of the final men released — not because he was dangerous, but because truth was. An unexpected miracle followed. From his forgotten past, a professor in London had remembered him. A place awaited him. A scholarship. One year exemption. It was not just admission — it was a lifeline. He carried no suitcase. No photographs. Only that piece of cardboard. Only that truth. In London, by day he studied Civil Engineering. By night, he became a voice. University halls. Human-rights forums. Memorial gatherings. He spoke of Mullivaikkal. And he held up the cardboard and said: “This is Ishwarya’s last letter. This is Mullivaikkal’s truth. This is the voice of the voiceless.” Some cried. Some froze. Some walked out. But he never stopped. Every year, on May 18 and November 27, he lit two lamps: One for her. One for the children she saved. He never married. The love burned in war continued to burn within him — like an undying flame. In 2025, after years of advocacy, Kavin returned to Sri Lanka. He stood at Mullivaikkal shore, where the waves whispered like ghosts. He placed Ishwarya’s letter in a small glass box and buried it beneath a young palmyrah sapling. He whispered: “Now you are home.” The wind rustled the leaves — soft, familiar, loving. As if she answered. And the sea, endlessly returning to the shore, carried their story towards eternity. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Ended துளி/DROP: 1915 [கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 03 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 03] https://www.facebook.com/groups/978753388866632/posts/32553773044271255/?
Checked
Thu, 02/19/2026 - 22:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed