புதிய பதிவுகள்2

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 1 week ago
இதை முன்னரே செய்திருந்தால் இந்த சண்டையே வந்திருக்காது போல. இவருக்கு மட்டுமல்ல ஐரோப்பாவுக்கும் ஆப்பு தான்.

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 1 week ago
Trump tells Zelensky to give up Crimea and agree to never join NATO. European leaders head to US: Ukrainian President Volodymyr Zelensky will be joined by key European leaders when he meets with Donald Trump on Monday. Trump has previewed the message he’ll deliver: Zelensky must agree to some of Russia’s conditions — including that Ukraine cede Crimea and agree never to join NATO — for the war to end. https://www.cnn.com/politics/live-news/trump-putin-zelensky-ukraine-news-08-17-25

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும்!

1 month 1 week ago
மீனவர்களுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு தொழிலாளிகளுக்கும் விவசாயிகள் உட்பட ஓய்வூதிய திட்டமும் அதற்குரிய காப்புறுதிகளும் கட்டாய சட்டமாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வயோதிப வாழ்க்கை நம்பிக்கைகரமானதாக இருக்க வேண்டும். பிள்ளைகள் உற்றார் உறவினர்களை நம்பி இருக்கக்கூடாது.

மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழமா? ஆய்வில் தெரியவந்த அறிவியல் உண்மை

1 month 1 week ago
மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியால் எதை எதையெல்லாமோ பேச வேண்டி இருக்கு! உணவே மருந்து என்ற காலம் போய் உண்ணும் உணவே விஷம் எனும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த உணவை உண்டால் இந்த மருந்து எடுக்க வேண்டும் என்ற நியதிக்காலம். இந்த நீரிழிவு நெருக்கடிகள் ஏன் நம் பாட்டன் பூட்டன் காலங்களில் இல்லை?

உணவு செய்முறையை ரசிப்போம் !

1 month 1 week ago
🟢 வித்தியாசமான செய்முறையாய் இருக்கு...அதுவும் மைசூர் பருப்பில.... இதே மாதிரி செய்து பாக்கத்தான் இருக்கு.... இறைச்சி பிரியர்களுக்கு வெள்ளி செவ்வாய் நாட்களில் நெஞ்சை குளிர வைக்கும்.... செய்தி.😂

பலஸ்தீனம்: அங்கீகரித்தலின் அரசியல்

1 month 1 week ago
இஸ்ரேலின் நடவடிக்கைகளை பார்த்தால் அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும். ஐரோப்பாவும் அமெரிக்காவும் என்றுமே யூத இனத்தை கைவிட மாட்டார்கள். இன வரலாறுகளும் சந்ததி வரலாறுகளும் இனிவரும் காலங்களில் எடுபட மாட்டாது. நாளைய தேவை எதுவோ அதை மட்டும் செய். இதைத்தான் அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றது.

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

1 month 1 week ago
டிரம்ப் ஐயா மீதான எனது அபிமானத்திற்கும் தமிழர்களுக்கும் சம்மந்தம் இல்லை. சிங்கத்தை எனக்கு பிடித்துள்ளது. அவ்வளவுதான்!

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 1 week ago
ரஷ்யாவின் நிபந்தனைகள் நியாயமான நிபந்தனைகள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உக்ரேனுக்கு ஐரோப்பிய முதலாளித்துவம் மட்டுமே ஆதரவு. ஆனால் ரஷ்யாவிற்கோ உலகளாவிய ரீதியில் ஆதரவும் செல்வாக்கும் உள்ளது. சிஎன் என் ஊடகத்துக்கு டொனால்ட் ரம்ப கண்ணிலையும் காட்டக்கூடாது. அதே போல் டொனால்ட் ரம்புக்கும் அந்த ஊடகத்த கண்ணிலையும் காட்டக்கூடாது. அதை விட சீச்சீ என் என் சொல்லுறதெல்லாம் உண்மை கண்டியளோ..🤣

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 1 week ago
ரொய்டர்ஸ் ஊகத்தினடிப்படையில் இரஸ்சிய நிபந்தனைகள். டொனஸ்க்ட் பிராந்தியத்தில் உக்கிரேன் வெளியேற்றம். கேர்சன் சப்பரோசியா பகுதியில் நிலைகளில் மேலதிக முன்னேற்றம் மேற்கோள்ளப்படாது. சுமி, கார்கோவ் பகுதிகளை உக்கிரேனிடமே திரும்ப கொடுப்பது. நிலையான தீர்வு எட்டப்படும் வரை போர் நிறுத்தம் இல்லை. கிரிமியாவினை இரஸ்சிய பகுதியாக அங்கீகரித்தல். பகுதி பொருளாதார தடை விலக்கல். உக்கிரேன் எப்போதும் நேட்டோவில் இணையமுடியாது. ஆனால் அதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கல். உக்கிரேனில் இரஸ்சிய மொழிக்கு உத்தரவாதம் மற்றும் பழமையான கிறிஸ்தவ ஆலய பாதுகாப்பு (உக்கிரேனில் இரஸ்சிய மொழி பேசுபவர்கள் மீது கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்) மறுவளமாக செலன்ஸ்கி 1. உடனடி போர்நிறுத்தம் பின்னரே பேச்சுக்கள். 2. தற்போதுள்ள முன்னிலைகளின் அடிப்படையிலேயே பேச்சுக்களை ஆரம்பிக்கலாம். 3.டொனஸ்க்ட் இனை வழங்கமுடியாது. 4. பாதுகாப்பு உத்தரவாதம் அவர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புருமையினை தற்போது கோருகிறார் (நேட்டோ பற்றி குறிப்பிடப்படவில்லை)

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 1 week ago
https://x.com/AGPamBondi/status/1956829431831605620/photo/1 மெலனி ட்ரம்ப் புட்டினுக்கு அனுப்பிய கடிதத்தில் இரஸ்சியாவினால் கடத்தப்பட்ட உக்கிரேனிய குழந்தைகள் பற்றி கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பலஸ்தீனம்: அங்கீகரித்தலின் அரசியல்

1 month 1 week ago
காசாவில் பல இஸ்ரேலிய குடியேற்றங்களை புதிதாக உருவாக்குகிறார்கள் என கூறபடுகிறது, இதன் மூலம் அவர்களது தாயக கோட்பாட்டை சிதைக்க முற்படுகிறார்கள் இஸ்ரேலியர்கள்.

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 1 week ago
திங்கள்கிழமை ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்கி சந்திப்பில் செலன்ஸ்கி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக உருசுலா வொன்டலைன் கலந்து கொள்வதாகவும் தன்னுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என கூறியுள்ளார். உருசுலா அமெரிக்க எரிபொருளை சந்தை விலையினைவ்ட பலமடங்கு அதிகமாக வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அண்மையில் கைசாத்திட்டிருந்தார், ஜேர்மன் அதிபரும் திங்கள்கிழமை நடைபெறும் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜேர்மன் தரப்பு கூறியுள்ளது. இரஸ்சியாவின் மீதான பொருளாதார தடையின் அவசியம் பற்றி இச்சந்திப்பில் பேசப்படும் என ஜேர்மன் தரப்பு கூறியுள்ளது, புட்டின் ட்ரம்ப் சந்திப்பின் பின்னர் ட்ரம்பிற்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் செலன்ஸ்கியுடன் ட்ரம்ப் தொலை தொடர்பு உரையாடலில் ஈடுபட்டிருந்தார் எனும் நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் ட்ரம்புடனான திங்கள்கிழமை சந்திப்பில் உக்கிரேன் சார்பான பார்வையினை ட்ரம்பிடம் வலியுறுத்த விரும்புவதாக கூறிய்ள்ளனர். கடந்த 3 வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்ட இந்த கொள்கைகளே பல உயிரிழப்பு பொருளிழப்பு என்பவற்றிற்கு காரணமாக அமைந்து உக்கிரேன், இரஸ்சியா, ஐரோப்பா, ஒட்டு மொத்த உலகிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பழைய பாதையில் தொடர்ந்து பயணிக்க விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் நிலைப்பாடாக உள்ளது. இந்த நிகழ்வில் புகழ்பெற்ற ஓவல் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதியும் (ஜெ டி வான்ஸ்) கலந்து கொள்ளவுள்ளார், கடந்த ஐரோப்பிய ஒன்றிய மானாட்டில் அவர் பேசிய மக்கள் விருப்பிற்கெதிராக மக்களால் தெரிவு செய்யப்படும் ஐரோப்பியநாடுகளின் தலைவர்கள் நீக்கப்படுவது ஜனநாயக விரோத போக்கு என கூறியிருந்தார். ஐரோப்பாவில் பலவீனமான கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சிகளின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதாக கருதுகிறேன், அதன் மூலம் தனது அதிகாரத்தினை பேண முயற்சிக்கும் ஒரு முயற்சியாக இதனை பார்க்கமுடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த போரை தொடர விரும்புவது கூட அதன் ஒரு தொடர்ச்சியாக இருக்கலாம், இந்த சந்திப்பில் பின்லன்ட் அதிபர் அலெக்சான்டர் ஸ்டப் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது, ருமேனிய அதிபர் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. போரை தொடர முயற்சிக்க இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரஸ்சியாவினை பலவீனப்படுத்துவதன் மூலம் போரை வெல்லலாம் எனும் அடிப்படையில் மேலதிக பொருளாதார தடை பற்றி விவாதிக்க விரும்புகின்றார்கள், அத்துடன் உக்கிரேனிற்கான பாதுகாப்பு உறுதியினை அமெரிக்காவிடம் கோரவும் முடிவு செய்துள்ளார்கள். இந்த முயற்சி ஒரு புறமிருக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோஸிங்டனில் புடின், ட்ரம்ப், செலன்ஸ்கி என ஒரு முத்தரப்பு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக இருப்பது போல தெரிந்தாலும் திங்கள்கிழமை சந்திப்பின் பின்னரே போரா சமாதானமா என்பது தெரியவரும்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்

1 month 1 week ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) தவறுகளைத் திருத்திக்கொள்ளாத தலைமுறைகளின் கதை – அ. குமரேசன் பெருந்தொழில் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கம், உழைப்புச் சுரண்டல், போர், அரசியல் கொந்தளிப்புகள் ஆகிய காரணங்களால் ஆட்டுவிக்கப்படும் ஒரு நகரத்து மக்களின் நூறாண்டு வாழ்க்கையைச் சித்தரிக்கிறது, ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட ஒரு நாவல். கல்வித்துறையினர் “இலக்கியக் குப்பை” என்று தள்ளிவைத்தனர், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் “கட்டாயம் படித்தாக வேண்டிய புத்தகங்கள்” பட்டியலிலிருந்து அந்தப் புத்தகம் நீக்கப்பட்டது. மோசமான சொல்லாடல்கள், பாலியல் சித்தரிப்புகள் என்றெல்லாம் கூறி அந்த நாவலைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆனால் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மீறி தனித்து நிற்கிறது “தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள்” (One Hundred Years of Solitude). கொலம்பியா நாட்டின் கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez 1927–2014) எழுதிய இந்தப் புத்தகம் 1967ஆம் ஆண்டில் வெளியானது. ஒரு கற்பனை நகரத்தில், ஒரு குடும்பத்தின் பல தலைமுறைகளை சந்திக்க வைக்கிற இந்நாவல் “மாய மெய்யியல்” உத்தியில் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இன்று மதிக்கப்படுகிறது. மனிதர்களின் தனிமை, வரலாற்றின் சுழற்சி ஆகிய கருப்பொருள்களை ஆராய்ந்து, மெய்யியலின் அழகிய கூறுகளை இணைக்கிற நாவல், விதியை மாற்ற முடியாது என்ற நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கிறது என்ற விமர்சனம் கூட எழுந்தது. நாவல் என்னதான் சொல்கிறது? கற்பனை நகரம் ஜோஸ் ஆர்காடியோ புயேண்டியா, அவரது இணையர் உர்சுலா இகுவாரன் இருவரும் தங்களின் சொந்த ஊரைவிட்டு வெளியேறி மகோண்டோ என்ற புதிய நகரத்தைக் கட்டமைக்கின்றனர். தனிமையான சொர்க்கம் என்று சொல்லத் தக்கதாக இருந்த அந்த நகரத்தை ஒரு தனியார் நிறுவனத்தின் சுரண்டல்கள், உள்நாட்டுப் போர்கள், அரசியல் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை ஆழமாகப் பாதிக்கின்றன. புயேண்டியா குடும்பம் இயல்பான காதல், உறவு, இன்பம், சோகம் என எதிர்கொள்வதோடு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் அனுபவிக்கிறது. குறியீடுகளால் நிறைந்துள்ள நாவலில் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். புயேண்டியா குடும்ப உறுப்பினர்கள், பலர் ஒரே விதமான பெயர்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், தங்கள் முன்னோர்களின் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள், அந்தத் தவறுகளின் விளைவுகளும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. இது வரலாற்றின் சுழற்சி முறையை வலுப்படுத்துகிறது. சுதந்திரமாக உலகெங்கும் சுற்றுகிற ஜிப்ஸி (நாடோடி) இனப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அறிவியல் ஞானம் கொண்டவரான மெல்குயாடஸ் என்ற கலகலப்பான மனிதரின் தலைமையில் அடிக்கடி அந்த நகரத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வேதியியல் புதுமைகள் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துகிறார்கள், இது ஜோஸ் ஆர்காடியோ புயேண்டியாவை கவர்ந்திழுக்கிறது. மெல்குடயாஸ் ஒரு மர்ம மனிதராகவும், ரகசியக் குறிப்புகளாக ஏதோ எழுதிவைக்கிறார். புயேண்டியா இணையரின் மகன் ஜோஸ் ஆர்காடியோ வலிமையானவன் ஆனால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறவன். மற்றொரு மகன் ஆரேலியானோ நிதானமானவன், ஆனால் புதிரானவன். இவன் பின்னர் அரசியல் கிளர்ச்சியில் பங்கேற்று தலைமைப் பொறுப்புக்கு வருகிறான். மகோண்டா நகரம் அரசியல் மோதல்களின் களமாகிறது. வியக்கத்தக்க மாற்றங்களுக்கும் உள்ளாகிறது. நகரத்திற்கு ஒரு பெரிய வாழைப்பழ நிறுவனம் வருகிறது. விவசாயிகளிடமிருந்து வாழைத்தார்களைக் கொள்முதல் செய்து எந்திரங்களின் மூலம் பதப்படுத்தி, பல்வேறு பொருள்களையும தயாரிக்கிற அந்த நிறுவனம் நவீனமயமாக்கலோடு, அப்பட்டமான உழைப்புச் சுரண்டலிலும் இறங்குகிறது. ஆட்சி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கிறது. கொந்தளிக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அந்தப் போராட்டத்தின்போது ஒரு படுகொலை நடக்கிறது. நிறுவன உரிமையாளரின் செல்வாக்கால் அந்தக் கொலை பதிவிலிருந்தே நீக்கப்படுகிறது. இந்த நிகழ்வுப் போக்குகள் நகரத்தின் குழப்பத்தையும் வீழ்ச்சியையும் குறிக்கின்றன. நகரத்தையே உருவாக்கிய புயேண்டியா குடும்பத்தின் தலைமுறைகள், புதிய அணுகுமுறைகள் இல்லாதவர்களாகப் பழைய தவறுகளைத் தொடர்கிறார்கள், அழிவைச் சந்திக்கிறார்கள். எஞ்சியிருக்கும் புயேண்டியா அந்த ஜிப்ஸி தலைவர் மெல்குயாடஸ் ரகசியமாக எழுதிவைத்திருந்த கையெழுத்துப் பிரதியை எடுத்து, புதிரான குறியீடுகளுக்குப் பொருள் கண்டுபிடிக்கிறான். அதில் தன் குடும்பத்தின் அழிவு குறித்து முன்னரே அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறான். தலைவிதி போல எழுதப்பட்டிருப்பது பற்றிய யோசனையோடு படித்துக்கொண்டிருக்கும்போதே புயல் தாக்குகிறது. ஊரை முற்றிலுமாகக் குலைத்துப் போடுகிறது. ஒவ்வொரு தலைமுறையும் மகோண்டோவை எவ்வாறு பாதிக்கிறது என்று நாவல் சித்தரிக்கிறது. நகரம் உருவாக்கப்பட்ட லட்சியத்திலிருந்து அது முடிந்து போகும் சோகம் வரையிலான காலத்தின் ஓட்டமே கதையாகிறது. கதாபாத்திரங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்களா, தலைவிதித் தத்துவத்தை நாவல் போதிக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது. ஆனால், மாற்றமே இல்லாமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் செயல்படுகிறபோது அடுத்தடுத்த தலைமுறைகள் ஒரே மாதிரியான முடிவுகளை எதிர்கொள்ளத்தானே வேண்டியிருக்கும், அதை ஒருவர் கணித்து எழுதியிருப்பது வழக்கமான தலைவிதி நம்பிக்கையாகாது என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள். பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட புறச்சூழல்கள் தனி மனிதர்களின் காதல் உறவுகளைக் கூடச் சீர்குலைக்கின்றன; பல கதாபாத்திரங்களைத் தனிமைக்குக் கொண்டு செல்கின்றன; விதிப்படி நடப்பது போலக் காட்சியளித்து, நுட்பமான முறையில் மனிதச் செயல்களே எதையும் தீர்மானிக்கின்றன என்றும், மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் உணர்த்துகின்றன என்றும் விளக்கமளிக்கிறார்கள். நாவலுக்கு எழுந்த எதிர்ப்புக்குக் காரணம், உழைப்புச் சுரண்டலையும், பாரம்பரியத்தின் பெயரால் தொடரும் பழமைப் போக்குகளையும் கேள்விக்கு உட்படுத்துவதுதான் என்ற கருத்தும் பகிரப்பட்டிருக்கிறது. முன்னோடி நாவலின் படைப்பாளி கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். வாழ்க்கையின் உண்மை நடப்புகளையும், கற்பனை வளர்ச்சிகளையும் இணைக்கிற மாய மெய்யியல் படைப்பாக்க உத்தியின் முன்னோடிகளில் ஒருவராகப் புகழப்படுகிறார். அவருடைய இந்த நாவல் பன்னாட்டு அளவில் பாராட்டுகளைப் பெற்றது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பெருமிதத்திற்குரிய படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. “காலரா காலத்தில் காதல்” (Love in the Time of Cholera –1985) “ஒரு மரண முன்னறிவிப்பின் காலவரிசை” (Chronicle of a Death Foretold – 1985) உள்ளிட்ட நாவல்களும் குறிப்பிடத்தக்கவை. பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். லத்தீன் அமெரிக்காவின் வாழ்க்கையையும் சிக்கல்களையும் பிரதிபலிக்கும் நாவல்கள், சிறுகதைகளுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1982 ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவில் இந்தக் குறிப்பிட்ட நாவலுக்குக் கல்வி நிறுவனங்கள் தடைவிதித்ததை எதிர்த்து ஆங்கில ஆசிரியர் ஒருவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். பின்னர் நாவல் நூலகங்களுக்குள் வந்தது. கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எதிர்ப்புக்கு உள்ளானதன் பின்னணியில் அவரது சோசலிசக் கருத்துகளும், கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுடனான தொடர்பும் இருந்தன. அமெரிக்காவிற்குச் செல்ல முயன்றபோது அவருக்கு விசா மறுக்கப்பட்டது. ஓடிடி திரையில் இந்த புத்தகத்திற்கு பெரிய இலக்கிய விருது எதுவும் கிடைக்கவில்லை என்றாலும். 2007இல் நடந்த ஸ்பானிஷ் மாநாட்டில் இது அந்த மொழியின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல் 46 மொழிகளில் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. உலகளவில் 5 கோடிக்கும் அதிகமான படிகள் விற்பனையாகியுள்ளன. “தனிமையின் நூறாண்டுகள்” ஸ்பானிஷ் மொழியில் வலைத் தொடராகத் தயாரிக்கப்பட்டு, ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன், சென்ற ஆண்டிலிருந்து நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. கவிதையழகோடு உருவாகியுள்ளதாகப் பாராட்டப்படும் இந்தத் தொடர் மார்க்வெஸ் குடும்பத்தினரின் ஆதரவுடன் படமாக்கப்பட்டுள்ளது. https://bookday.in/books-beyond-obstacles-gabriel-garcia-marquez-one-hundred-years-of-solitude-book-based-article-written-by-a-kumaresan/
Checked
Mon, 09/29/2025 - 21:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed