1 month 1 week ago
பொலிஸ் மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு குவியும் முறைப்பாடுகள்! 18 AUG, 2025 | 02:10 PM நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்காக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த ஐந்து நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, 071- 8598888 என்ற வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட முடியும் என ஆகஸ்ட் 13 ஆம் திகதி பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார். அதன்படி, ஆகஸ்ட் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/222790
1 month 1 week ago
1 month 1 week ago
கடைசி பஸ்ஸையும் பிடிக்கேலாமல் போட்டுது. அதனாலேதான் லேட். பிறந்தநாள் வாழ்த்து குமாரசாமி. நலமோடு மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன்.
1 month 1 week ago
போர் குற்றவாளியான புடின்னுக்கு சிவப்பு கம்பளம் விரித்த டிரம் தமிழல் ஒரு பாட்டு இருக்கின்றதாம் நான் பேச நினைபது எல்லாம் நீ பேச வேண்டும் புடினின் குரலாக டிரம் இருக்கின்றார் வேறு என்ன வேண்டும்
1 month 1 week ago
குயிலே கவிக்குயிலே .......... ! 😍
1 month 1 week ago
வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா பெண் : குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா பெண் : இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே…. இனிமை சுவை காணும் உள்ளம் தனிமை உறவாடுதே…. பெண் : ஜாடை சொன்னது என் கண்களே வாடை கொண்டது என் நெஞ்சமே பெண் : குயிலே அவரை வரச்சொல்லடி இது மோகனம் பாடிடும் பெண்மை அதைச் சொல்லடி பெண் : பருவச் செழிப்பினிலே பனியில் நனைந்த மலர் சிரிக்கும் சிரிப்பென்னவோ நினைக்கும் நினைப்பென்னவோ பெண் : மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம் பெண் : அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா இது எவ்வனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி பெண் : என்னை ஆட்கொண்ட ராகம் என்றும் ஒரு ராகமே இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே வாழ்வில் மின்னல் போல் வந்தது யாரோ யாரோ யார் கண்டது பெண் : குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி ......... ! --- குயிலே கவிக்குயிலே ---
1 month 1 week ago
இன்று சுமந்திரன் மட்டுமே ஹர்த்தால் செய்துள்ளார் போலுள்ளது. அடுத்த போராட்டமாக… சுமந்திரன் 🔥 தீக்குளிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றார்கள். 😂
1 month 1 week ago
சுமந்திரன்… தமிழ் மக்களிடம் மீண்டும் சாணியடி வாங்கிய தருணம். 💩 😂
1 month 1 week ago
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் தீபக் மண்டல் பிபிசி செய்தியாளர் 18 ஆகஸ்ட் 2025, 02:39 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிறுநீரகங்கள் நம் உடலில் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. அவை உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுகின்றன. திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கின்றன. அவை ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, ரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும் உதவுகின்றன. ஆனால் மக்கள் பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள். இந்த அறிகுறிகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சையையும் சீக்கிரமாகவே தொடங்கலாம். நாம் பெரும்பாலும் கவனம் செலுத்தாத அந்த ஐந்து அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவை சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். 1. சிறுநீர் அடிக்கடி கழித்தல் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீர் அடிக்கடி கழிப்பது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். இது பாலியூரியா என்று அழைக்கப்படுகிறது. சிறுநீரகம் சேதமடைந்தால், தேவையானதை விட குறைவான சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும், சிறுநீரில் நுரை வருவது இதன் அறிகுறியாகக் கூறப்படுகிறது. "ஆனால் இது கட்டாயமில்லை, பிற நோய்களாலும் சிறுநீரில் நுரை வரலாம்" என்கிறார் சர் கங்காரம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், மருத்துவர் மொஹ்சின் வாலி. 2. உடலில் வீக்கம் கண்கள் மற்றும் கால்களில் வீக்கம் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். கணுக்காலில் வீக்கம் இருந்தால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. இது சிறுநீரக நோயைக் குறிக்கிறது. மணிப்பால் மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் கரிமா அகர்வால், "கால்கள் வீங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கண்கள், முகம் மற்றும் பாதங்களில் வீக்கம் சிறுநீரக நோயைக் குறிக்கிறது" என்று கூறுகிறார். 3. ரத்த அழுத்தம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, "ரத்த அழுத்தம் என்பது இருமுனைக் கத்தி போல. உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது." சிறுநீரக செயலிழப்பு காரணமாக ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே, ரத்த அழுத்தம் குறித்து ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "பல நேரங்களில் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல், பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் அளவு அதிகரிக்கப்படுகிறது. இதுவும் சிறுநீரக நோயின் அறிகுறியாகும்" என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார். 4. நீரிழிவு நோய் நீரிழிவு நோயால் சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சிறுநீரக நோயாளிகளில் 80 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார். நீரிழிவு நோயாளிகளில் 30 முதல் 40 சதவீதம் பேருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக நோய் உருவாகத் தொடங்கினால், அவர்களின் ரத்த சர்க்கரை அளவும் குறைகிறது. உடலில் பல வருடங்களாக சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் காரணமாக சிறுநீரக நோய் உருவாகத் தொடங்குகிறது. 5. சோர்வு, அரிப்பு மற்றும் குமட்டல் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரக நோயால் உடலில் பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. சோர்வு, உடலில் அரிப்பு மற்றும் குமட்டல் ஆகியவை சிறுநீரக நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் பாஸ்பரஸ் இல்லாததால் அரிப்பு ஏற்படுகிறது. சிறுநீரக நோய் உடலில் பாஸ்பரஸ் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு குமட்டல் ஏற்படத் தொடங்குகிறது. அவர்களுக்கு சாப்பிடுவதில் விருப்பம் இருக்காது. சிறுநீரக நோயைத் தடுப்பதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வழக்கமான உடற்பயிற்சி, போதுமான அளவு தண்ணீர் குடித்தல், உப்பு மற்றும் சர்க்கரையை குறைவாகப் பயன்படுத்துதல் ஆகியவை சிறுநீரக நோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சிறுநீரக நோய் வராமல் தடுக்க 7 வழிமுறைகளை மருத்துவர் மொஹ்சின் வாலி மற்றும் மருத்துவர் கரிமா அகர்வால் இருவரும் பிபிசியிடம் தெரிவித்தனர். 1. போதுமான தண்ணீர் குடிக்கவும் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்கவும். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது, சிறுநீரகங்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளியேற்ற போதுமான சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. மேலும், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படும் அபாயம் குறைகிறது. நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால், உங்கள் சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருக்கும். பொதுவாக ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார். 2. உப்பு குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள் அதிகப்படியான உப்பு சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல, ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது. ஊறுகாய், அப்பளம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். நூடுல்ஸ் போன்ற உணவுகளில் அதிக உப்பு உள்ளது. அவற்றைத் தவிர்க்கவும். 3. பாறை உப்பைத் தவிர்க்கவும் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பாறை உப்பு சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இப்போதெல்லாம் பாறை உப்பை (Rock Salt) உட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் பாறை உப்பை உட்கொள்ளக்கூடாது. "சாதாரண உப்பை விட பாறை உப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பொதுவாக நம்பப்படுகிறது. அதில் பொட்டாசியம் குறைவாகவும் சோடியம் அதிகமாகவும் உள்ளது." என்கிறார் மருத்துவர் மொஹ்சின் வாலி. 4. சர்க்கரையை குறைக்கவும் சிறுநீரக நோய்களைத் தவிர்க்க விரும்பினால், இனிப்புகளைக் குறைவாகச் சாப்பிடுங்கள். சர்க்கரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. கேக், பிஸ்கட், பேஸ்ட்ரி மற்றும் கோலா போன்றவற்றில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உள்ளது. சர்க்கரை உடல் பருமனை அதிகரித்து சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. 5. எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள் பட மூலாதாரம், DISNEY VIA GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரக நோயைத் தவிர்க்க விரும்பினால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் எடையைக் கட்டுப்படுத்துங்கள். பருமனான நபர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதால், அவர்கள் எடையைக் குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (BMI) குறைவாக இருக்க வேண்டும். அது 24க்கும் குறைவாக இருந்தால், அது மிகவும் நல்லது. லேசான உடற்பயிற்சி செய்யுங்கள். இது மிகவும் முக்கியம். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை நன்றாக வைத்திருக்கும். இது நன்றாக இருந்தால், 50 வயதை எட்டும்போது, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறையும். 6. சமச்சீரான உணவை உண்ணுங்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள். புரோபயாடிக் உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. அவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள். வறுத்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளுதல்ல், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். 7. உங்கள் மருத்துவரிடம் கேட்காமல் மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள். "மக்கள் பலரும் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்கி உட்கொள்கிறார்கள். பலர் வலி நிவாரணிகளை தாங்களாகவே எடுத்துக்கொள்கிறார்கள்" என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார். "முதியோர்கள் பெரும்பாலும் உடல் வலி மற்றும் மூட்டுவலிக்கு (ஆர்த்ரிட்டீஸ்) வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறார்கள். சில மருந்துகளில் கன உலோகக் கூறுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் இருக்கலாம். இது சிறுநீரகங்களை சேதப்படுத்தும்." என்று கூறுகிறார் கரிமா அகர்வால். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c776kr5v6v2o
1 month 1 week ago
Published By: VISHNU 18 AUG, 2025 | 02:02 AM (இராஜதுரை ஹஷான்) முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் திங்கட்கிழமை (17) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுமையாக முடங்க வேண்டும். அதனுடாக அரசாங்கத்துக்கு வலுவான செய்தியை எடுத்துரைக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுமக்களிடம் வலியுறுத்துகிறது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8 ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களை இராணுவத்தினர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி முத்தையன்கட்டு முகாமிற்குள் அழைத்துச் சென்றதாகவும், இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அதனால் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு 'முத்தையன்கட்டு முகாமிற்குள் ஒருதரப்பினர் அனுமதியின்றி சென்றதாகவும், அவர்களை விரட்டியடிக்கும் போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக குறிப்பிட்டு,.இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை மேற்கொள்வதாக'குறிப்பிட்டிருந்தது. முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடிகொண்டுள்ள இராணுவ பிரசன்னத்துக்கும், இளைஞனின் மரணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது. இந்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுத்துமூலமாக அறித்து கடந்த 15 ஆம் திகதி ஹர்த்தாலில் ஈடுபட அறிவித்திருந்தது. இருப்பினும் பல்வேறு நியாயமான காரணிகளால் ஹர்த்தால் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த பூரண ஹர்த்தாலுக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், சிவில் தரப்பினர், வணிக அமைப்பினர் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தாலில் அமுல்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹர்த்தாலில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி சகல தரப்பினரிடமும் வலியுறுத்துகிறது. https://www.virakesari.lk/article/222768
1 month 1 week ago
ஒரு முகப்பட வேண்டிய சூழல் August 16, 2025 — கருணாகரன் — முல்லைத்தீவு – முத்தையன்கட்டில் இராணுவத்தினரோடு ஏற்பட்ட பிரச்சினையில் கபில்ராஜ் என்ற இளைஞர் மரணமடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடையடைப்புப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவைத் தெரிவித்துள்ளது. பொது அமைப்புகளும் தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிகிறது. இதற்கான முழுமையான ஆதரவை எல்லோரும் வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கோரியுள்ளார். சிவஞானத்தின் கோரிக்கை, வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மக்கள் வாழிடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை விலக்க வேண்டும் என்பதேயாகும். அதற்கு அவர் இந்தக் கொலைச் சம்பவத்தோடு ஒரு மக்கள் எழுச்சியைக் கோருகிறார். இதே கருத்துப்படத்தான் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தப் போராட்டம் தொடர்பாக பொது அமைப்புகளுடன் பேசிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன், “இராணுவம் அல்லது படையினர், மக்கள் வாழிடங்களில் நிலைகொண்டிருப்பதால்தான் இந்த மாதிரியான சம்பவங்களும் பிறழ்வு நடவடிக்கைகளும் உருவாகுவதற்கான சூழல் ஏற்படுகிறது. அத்துடன், அரசியல் தீர்வைப் பற்றி ஆட்சியாளர்கள் சிந்திக்காமல் இருப்பதற்கும் அதைத் தவிர்ப்பதற்கும் படைகளின் நிலை கொள்ளல் (படை ஆதிக்கம்) பிரதானமான காரணமாக உள்ளது. மக்களுடன் படைகளை நெருக்கமடைய வைப்பதன் மூலம் இராணுவப் பிரசன்னத்தை அல்லது படைகள் நிலைகொள்வதை நியாயப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கிறது. நீண்ட காலமாக மக்கள் வாழிடங்களில் படையினர் இருக்கும்போது மக்களுக்கும் படையினருக்குமிடையில் பல வழிகளிலும் உறவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். சந்தை, கடை, அலுவலங்கள், வழி, தெரு எனச் சகல இடங்களிலும் படையினர் புழங்கும்போது மக்களுக்கும் படையினருக்குமிடையில் உறவு ஏற்படும். இது படையினரின் பிரசன்னத்தை (இராணுவ மேலாதிக்கத்தை) பற்றிய தெளிவின்மையை மக்களிடத்திலே ஏற்படுத்தும்“ என்ற அடிப்படையில் இந்த விடயத்தைப் பார்க்க வேண்டும் என்ற சாரப்படக் கூறியுள்ளார். ஆக, இந்தக் கடையடைப்புப் போராட்டம், இராணுவத்தை அல்லது படைகளை விலக்குவதையே பிரதானமாகக் கொண்டுள்ளது. அது ஒரு முக்கியமான விடயமே. யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த பிறகும் அரசியற் தீர்வைப் பற்றி நேர்மையாகச் சிங்களத் தரப்புகள் பேசவில்லை. சிந்திக்கவில்லை. அதற்காக முயற்சிக்கவே இல்லை. பதிலாக படை மேலாதிக்கத்தின் மூலமாக வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களைக் கையாளலாம் என்று அரசு சிந்திக்கிறது. உண்மையும் அதுதான். படைமேலாதிக்கத்தில் ஆட்சியாளர்களுக்கு உள்ள நம்பிக்கையே அரசியற் தீர்வைப் பற்றிய அக்கறையின்மையாகும். 2009 க்கு முன்னர் இராணுவத்தினரைக் குறித்து மக்களிடம் இருந்த உணர்வு வேறு. இப்பொழுது உள்ள உணர்வு வேறு. அப்பொழுது படையினரைக் குறித்த அச்சமே அனைவரிடத்திலும் இருந்தது. படைகளுக்கும் அப்படித்தான். அவர்கள் எல்லோரையும் சந்தேகித்தனர். ஆக இரண்டு தரப்புக்குமிடையில் இடைவெளி இருந்தது. இந்த இடைவெளியை இல்லாதொழிக்கவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இதற்காக அது படையினரைப் பொது அரங்கில் இறக்கியுள்ளது. உணவுக் கடைகள், சலூன்கள், தையற்கடை போன்றவற்றைப் படையினர் நடத்துகிறார்கள். மட்டுமல்ல, மக்களுடைய காணிகளை அபகரித்து, அங்கே மரக்கறி உற்பத்தி செய்து சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். தென்னைப் பயிர்ச்செய்கை, நகர அழகு படுத்தல், சிரதானங்கள், இரத்ததானம் செய்தல் என சனங்களோடு ஐக்கியமாகும் உபாயங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் வறிய மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறோம் என்ற பேரில் சில வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. விளையாட்டுக் கழகங்கள் சிலவற்றுக்கு சில உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி எந்தெந்த வகையில் சனங்களுக்குள் ஊடுருவ முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுள்ளனர். இதையெல்லாம் படைத்தரப்பு தன்னிச்சையாகச் செய்யவில்லை. இதற்குப் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் உண்டு. அதைக் குறித்தே நாம் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். இப்போது – இந்தச் சந்தர்ப்பத்திலும் பேச வேண்டியுள்ளது. மக்களுடன் படைகள் பல வகையிலும் உறவாடும்போது ஒரு நெருக்கமான உணர்வு மக்களுக்கு ஏற்படும். அவர்கள் பிறகு படையினரை ஒரு மேலாதிக்கச் சக்தியாகப் பார்க்க மாட்டார்கள் என்று அரசாங்கம் எண்ணுகிறது. இதில் அரசாங்கம் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. ஏனென்றால் கிராமங்களில் உள்ள சாதாரண மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள், அரசியல் செயற்பாட்டில் உள்ளவர்கள், இலக்கியத் துறையில் இயங்குகின்றவர்கள், வணிகர்கள் எனப் பலரும் படைத்தரப்போடு தனிப்பட்ட ரீதியிலும் பழகும் அளவுக்கும் உறவை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கும் நிலைமை வளர்ச்சி அடைந்துள்ளது. சில இடங்களில் கொண்டாட்டங்களில் படையினர் கலந்து கொள்ளும் அளவுக்கு இது உயர்ந்துள்ளது. மட்டுமல்ல, குடிவிருந்து கூட நடக்கிறது. இதையெல்லாம் சரியென்று விமல் வீரவன்ஸ கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால், படைகளின் வேலையே வேறு. தேசிய பந்தோபஸ்தில் (தேசிய பாதுகாப்பில்) இவை பற்றி எந்த வாக்கியமும் இல்லை. அல்லது யுத்த காலத்தில் படைகள் இந்த மாதிரிப் பணியாற்றியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் பல ஆயிரம் பேர் உயிர் தப்பியிருப்பார்கள். அதில் பல ஆயிரம் படையினரும் இருந்திருப்பார்கள். யுத்தத்திற்குப் பிறகு, படையினர் செய்திருக்க வேண்டியது மீள்நிலைப்படுத்துதலை. அப்படியென்றால், அவர்கள் பழைய நிலைகளுக்குத் திரும்புவதைச் செய்திருக்க வேண்டும். கூடவே உடைந்த – அழிக்கப்பட்ட ஊர்களையும் கட்டிடங்களையும் மீள்நிலைப்படுத்தியிருக்கலாம். அதைக் கூடத் தனியாகச் செய்திருக்க்க் கூடாது. குறித்த பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகள், மக்கள் அமைப்புகள், அரசாங்கத் திணைக்களங்களின் திட்டம், தீர்மானம் போன்றவற்றை நிறைவேற்றும் ஒரு தரப்பாக இருந்து அந்தப் பணிகளைச் செய்திருக்கலாம். அப்படி நடக்கவே இல்லை. இப்பொழுது நடப்பதோ எதிர்மாறான சங்கதிகள். அரசாங்கம் செய்திருக்க வேண்டியது மீளமைப்பை. இயல்பு வாழ்க்கையில் மக்கள் முழுமையாக ஈடுபடக் கூடிய சூழலை உருவாக்கியிருக்க வேண்டும். அரசியல் தீர்வை எட்டியிருக்க வேண்டும். அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் படைகள் ஊர்களில் இருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது. ஆக அடிப்படையிலேயே தவறு நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில் – காரணங்களின் அடிப்படையில்தான் இந்தப் பிரச்சினையையும் இந்தப் போராட்டத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. தமிழரசுக் கட்சி ஹர்த்தாலை அறிவித்தவுடன் அதற்கு சில இடங்களில் மாற்று நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இணையத் தளங்களிலும் இதைக் குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏன் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே சில கறுப்பாடுகள் எதிர் நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக முத்தையன்கட்டில் கொலையான கபில்ராஜின் மரணம் தொடர்பாகப் பல விதமான கதைகள் (கருத்துகள்) உண்டு. அதை விட அது ஒரு தனிப்பட்ட விவகாரம். படையினரில் சிலருக்கும் கபில்ராஜ் மற்றும் நண்பர்களுக்கும் இடையில் நடந்த கொடுக்கல் வாங்கல், மதுப் பரிமாற்றம், முகாமைக் காலி செய்யும்போது மிஞ்சும் பொருட்களை எடுத்தல் அல்லது கையகப்படுத்தல் போன்றவற்றினால் ஏற்பட்ட விளைவு என்று சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனாலும் இதனால் நடந்திருப்பது ஒரு மரணம். இப்படியெல்லாம் படைத்தரப்போடு உறவு வைத்துக் கொள்ளும் அளவுக்குத்தான் நிலைமை உள்ளது என்பதை இந்தக் கட்டுரை வாதிட்டதை இந்தக் கொலை அல்லது மரணம் நிரூபிக்கிறது; ஒப்புக்கொள்கிறது; உண்மை என ஏற்றுக்கொள்கிறது. இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். 2009 க்கு முன்பு இந்த மாதிரி படைத்தரப்புக்கு மதுவை வாங்கிக் கொடுப்பதற்கு யாராவது முன்வருவார்களா? அல்லது, படையினர்தான் சந்தேகமில்லாமல் அதை வாங்கிப் பருகுவார்களா? அப்பொழுது படைமுகாம்களில் யாராவது திருடவோ பொருட்களை எடுக்கவோ செல்வார்களா? செல்ல முடியுமா? அதற்குப்படையினர் அனுமதிப்பார்களா? ஆகவே இதைக் குறித்தெல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சமூகத்தைப் பிளவு படுத்தும் உத்தியில் அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது. அதன் ஓரம்சமே இதுவும். இனி தமிழரசுக் கட்சியின் ஹர்த்தாலுக்கு வருவோம். ஹர்த்தால், ஊர்வலம், பாராளுமன்றத்தில் முழக்கம், தேர்தல் மேடைகளில் ஆவேசம், அரசியல் பத்திகளில் கண்டனம் போன்றவற்றினால் அரசியல் தீர்வோ, மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளோ கிடைக்கும் என்பது பொய்யென நிரூபிக்கப்பட்டாயிற்று. வடக்குக் கிழக்கை மையப்படுத்தி நடத்தப்படும் போராட்டங்களால் எந்தப் பயனுமில்லை. இதற்கு உதாரணம் அறகலய. அது கொழும்பில் நடத்தப்பட்டது. அரசாங்கத்தை முடக்கும் விதமாக நடத்தப்பட்டது. பல்வேறு தரப்புகளையும் பல தரப்புச் சக்திகளையும் ஒருங்கிணைத்து அல்லது அவற்றின் ஆதரவோடு நடத்தப்பட்டது. அதுதான் அந்தப் பெரிய வெற்றியை ஈட்டுவதற்குக் காரணமாகியது. வடக்கு கிழக்குக்கு மட்டுமான பிரச்சினைக்கு எப்படிக் கொழும்பில் ஆதரவைத்திரட்ட முடியும்? என்ற கேள்வியை யாரும் எழுப்பலாம். வடக்குக் கிழக்குப் பிரச்சினை என்பது வடக்குக் கிழக்குக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. அது முழு நாட்டுக்குமான பிரச்சினை என்பதை கடந்த கால வரலாற்று அனுபவம் சொல்கிறது. ஆகவே, அதைக்குறித்த புரிதல் உள்ள சக்திகளோடு இணைந்து எல்லோருக்கும் சொல்ல வேண்டும். நடத்தப்படும் போராட்டத்தை அரசு உணரக் கூடிய பொறிமுறை – இடம் போன்றவற்றைப் பற்றிச் சிந்திப்பது அவசியம். அதைக்குறித்து நாம் பேச வேண்டும். உரையாட வேண்டும். அதற்கு முன் சரியோ, தவறோ, தன்னுடைய பாரம்பரிய முறைமையின்படி தமிழரசுக் கட்சி இந்தப் போராட்டத்தை அறிவித்து விட்டது. அதைப் பலவீனப்படுத்தாமல் முழுமையாக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் மனோ கணேசன் போன்றவர்களும் பேசியிருக்கிறார்கள். எதிர்காலப் போராட்டங்களைப் பற்றி புதிதாகச் சிந்திப்போம். அதற்கான உரையாடல்களை விரிந்த தளத்தில் செய்வோம். ஏனென்றால், குழுக்களாகச் செயற்படும் காலம் முடிவுக்கு வருகிறது. அதனால் எந்தப் பயனுமில்லை என்பதை அனுபவங்கள் சொல்கின்றன. பல தரப்பும் இணைந்து ஒருமுகப்பட்டுச் சிந்திப்பதும் செயற்படுவதுமே இன்று வேண்டப்படுவது. அதைச் செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இங்கே இப்பொழுது நடந்து கொண்டிருப்பது கட்சிகளுக்கிடையிலான முதன்மைப்போட்டியே தவிர, மக்களுக்கான அரசியல் விளைவுகளல்ல. என்பதால்தான் ஒரு கட்சி எடுக்கும் முயற்சியை மறு தரப்புகள் விமர்சிப்பதும் நிராகரிப்பதும் நடக்கிறது. இந்தப் பண்பு – பழக்கம் மாற வேண்டும். சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு தரப்பின் அறிவிப்பை மறுதரப்பு மறுதலிக்காமல் இருக்கலாம். இப்படித்தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்திலும் தவறுகள் இழைக்கப்பட்டன. https://arangamnews.com/?p=12257
1 month 1 week ago
வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம் August 18, 2025 8:55 am வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுவிபத்திற்குள்ளாகியது. விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர். மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிய பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் குறித்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்கள் , சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர் உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி வயது33, சுயன் வயது 30 என்று தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்று விட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பாக வவுனியா ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். https://oruvan.com/fatal-accident-in-omanthai-vavuniya-two-people-including-a-woman-killed-many-in-critical-condition/
1 month 1 week ago
பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள் August 18, 2025 10:33 am வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வழமை போல் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து, கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தும் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது. இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை , சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது. இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர். அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர். அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் வியாபார நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பாடசாலைகள், மருந்தகங்கள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது. எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/hartal-ends-in-chaos-business-as-usual-in-mullaitivu-and-ampara/
1 month 1 week ago
கிழக்கில் மக்களின் பேராதரவுடன் இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக பூரண ஹர்த்தால் இடம்பெறுவதாக சாணக்கியன் அறிவிப்பு வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னாம் முடிவுக்கு வரவேண்டும்…!; வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் இன்றைய தினம் வடக்கு மற்றும் கிழக்கில் பூரண ஹர்த்தால் மக்களின் பேராதரவுடன் இடம்பெறுகின்றது. இதனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடு செய்ததுடன் இதற்கான பாரிய ஆதரவினை ஆதரவினை பலர் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம்..! என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது..! எமது மக்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என சாணக்கியன் M.P மேலும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=337354
1 month 1 week ago
தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்; ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு - செல்வம் அடைக்கலநாதன் Published By: Vishnu 18 Aug, 2025 | 01:57 AM இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத் திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.எனினும் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் 'ரெலோ' ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (17) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசுகளின் முப்படைகளாலும் அரங்கேற்றப் பட்டு வரும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, இன அழிப்பு படுகொலைகளை வெறுமனே நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. முப்படையினரின் இனவாத செயற்பாடுகள் நடைபெற வடக்கு கிழக்கிலே காணப்படும் அதிகூடிய தேவை யற்ற இராணுவ முகாம்களும் முப்படையின் பிரசன்னமுமே காரணமாகும். 2009 போர் மெளனிப்பிற்கு பிறகும் கூட தமிழினத்தை நிம்மதியாக வாழ விடக்கூடாது என்கிற நிகழ்ச்சி நிரலில் படையினர் செயற்படுவதாக நாம் கருதுகின்றோம். அன்றைய காலத்தில் எம்மினத்தின் மீது பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து வந்த எமது மக்களை பாதுகாப்பதற்காக வடக்கு கிழக்கில் இருந்து ராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தையும் முற்றாக அகற்ற பொது மக்களின் சுதந்திர வாழ்வியல் இராணுவ பிரசன்னத்தை அகற்றுவதன் ஊடாக உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையிலும் மக்களையும்,மண்ணையும் காத்திட தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் ஆயுதம் ஏந்தினோம். இன்றைய சூழ் நிலையில் மக்களை அச்சுறுத்தும் அதிக இராணுவ பிரசன்னம் அதன் அடக்குமுறை இன அழிப்பு வடிவங்காரும் எமது இனத்தின் எதிர்கால இருப்பை கேள்விக்குரியக்குகின்றது. அந்தவகையிலேயே 18/08/2025 ம் ‘திகதி நாளைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தலுவிய இராணுவ பிரகன்ணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் "ரெலோ" ஆதரவாளிக்கின்றது. இதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும். இருந்த போதிலும் இனத்தின் அடிமை விலங்கொடிக்க ராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தை எமது தாயக பூமியான வடக்கு கிழக்கில் இருந்து முற்றாக அகற்ற வேண்டும். அதன் ஊடாக தமிழினத்தை சுதந்திரமாக வாழ விட வேண்டும் என்ற உயரிய நோக்கில் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் "ரெலோ" ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222767
1 month 1 week ago
யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் - உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை! யாழ் கந்தரோடையில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டிடத்தின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் யாழ்.கந்தரோடையில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையத்தை நேற்றையதினம் (16) சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் என்ற பெயரில் இராணுவ முகாமுக்கு அருகில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடம் தொடர்பில் எங்களுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்றைய தினம் அதைப் பார்வையிட்டிருக்கின்றோம். இந்தக் கட்டுமானத்தை நிறுத்துமாறு ஒட்டப்பட்ட பிரசுரம் அகற்றப்பட்டிருக்கின்றது. இந்தக் கட்டுமானத்தை பௌத்த பிக்கு ஒருவர் கட்டுவதாக அறிந்திருக்கின்றோம். எதிர்காலத்தில் பௌத்த சின்னங்களை அல்லது விகாரைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக அறிகின்றேன். அதனால் இதனை உடனடியாக நிறுத்துமாறு கோரியிருக்கின்றோம். அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்மந்தமாக சபை உறுப்பினர்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.” என தெரிவித்தார். இந்த விஜயத்தின் போது தவிசாளருடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர். https://newuthayan.com/article/யாழில்_அமைக்கப்படும்_பௌத்த_மத்திய_நிலையம்_-_உடனடியாக_நிறுத்துமாறு_கோரிக்கை!#google_vignette
1 month 1 week ago
ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – வழமைப் போன்று இயங்கும் யாழ். நகர்! வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே குறித்த இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதிகோரி வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்தது. முன்னதாக கடந்த 15ஆம் திகதி இந்த கதவடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக இன்று திங்கட்கிழமை (18ஆம் திகதி) பிற்போடப்பட்டிருந்தது. இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில், அதற்கு சமமாக எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முன்னெடுக்கவுள்ள கதவடைப்பு போராட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். எனவே, இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு பொது மக்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/ஹர்த்தாலுக்கு-ஆதரவில்லை/
1 month 1 week ago
அடுத்த வருடத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்? மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். “நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம். அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம். சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம். அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது. அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை. அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு. மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்.” என்றார். https://www.samakalam.com/அடுத்த-வருடத்தில்-மாகாண/
1 month 1 week ago
1 month 1 week ago
சுமந்திரன் தன்னிச்சையாக விடுத்த இன்றைய ஹர்த்தால் அழைப்பை புறக்கணித்த வடபகுதி தமிழ்மக்கள், வளமை போல தமது அன்றாட வேலைகளில் ஈடுபட்டனர்.
Checked
Mon, 09/29/2025 - 21:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed