புதிய பதிவுகள்2

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

1 month 1 week ago
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி. வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக தெற்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நிதி மோசடிகளுக்கான வழக்குகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆனால் வடக்கில் அவ்வாறு இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்டுள்ளார். எனவே தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மாத்திரமே முன்னெடுப்பதாக, மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ” குறித்த விடயம் தொடர்பில் தனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தால் அல்லது சிஜடிக்கு முறைப்பாடு செய்திருந்தால் அது தொடர்பான விபரங்களை தன்னிடம் வழங்குமாரும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் லஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பது, சுயாதீனமாக இயங்குகின்ற ஆணைக்குழு எனவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வருவதில்லை எனவும், எனினும் இரண்டு நாட்களுக்குள் இதற்கான பதிலை தான் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1443671

நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம்; தொடரும் நீர்க்கண்காட்சி

1 month 1 week ago
19 AUG, 2025 | 01:30 PM நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (24) வரை இடம்பெறவுள்ளது. நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திங்கட்கிழமை (18) மாலை செம்முகம் ஆற்றுகைக் குழுவின் "தண்ணீரின் கதை" நாடக ஆற்றுகை இடம்பெற்றது. நிலத்தடி நீரை மட்டும் நம்பியிருக்கும் யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் என்னவாகும் என்பதனை சித்தரிக்கும் வகையில் நாடகம் உயிர்ப்புள்ளதாக இருந்தது. பார்வையாளர்களை கண்ணீரில் நனைய வைத்த நாடகத்தின் பின் பலரது அனுபவ பகிர்வுகளும் உருக்கமாக அமைந்திருந்தன. நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை (19) ஆற்றுகை நிகழ்வாக பாடல் நிகழ்வுகளும், "கேணி: நீர் மரபுரிமைக் கட்டுமானங்களைக் காக்க வேண்டிச் சில முன்வைப்புகள்" என்கிற தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதன் அவர்களின் கருத்துரையும் உரையாடலும் இடம்பெறும். நிலத்தடி நீரும் எமது பிரதேச நிலக்கட்டமைப்பு மற்றும் வழுக்கையாறு திட்ட மாதிரிகளின் கண்காட்சிகள், விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வு முடிவுகள், விளையாட்டுகள், புதிர்ப்போட்டிகளில் பங்கேற்கும் சிறார்களுக்கான ஏராளமான பரிசுப் பொருட்களுடன் நிலத்தடி நீரை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கை இக்கண்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/222859

ஒரு சோறு

1 month 1 week ago
ஆக, உங்களுக்கு அந்த வீட்டின் விலை தெரிந்திருக்கிறது. சிறீலங்கன் என்றால் சும்மாவா? புலம்பெயர் தமிழர்களிடம் இந்த விவகாரம் -அது அடுத்தவன் விவகாரத்தை அறிந்து கொள்ளும் சுபாவம் அதிகம் என நினைக்கிறேன். “எங்கை வேலை செய்யிறீங்கள்? என்ன சம்பளம்? கார் நல்ல விலை வரும் போலை. எவ்வளவுக்கு வாங்கினீங்கள்?……. “ ம்… வயது வந்தவர்கள், பார்வையில் குறைபாடு ஏதும் இருந்திருக்கலாம். அல்லது வீட்டின் விலையை அறிந்து கொள்ள சாயம் பூசிய தலையில் குளிராக இருக்கட்டும் என்றும் வைத்திருக்கலாம். எது எப்படியோ, “கூட்டச் சொல்லிவிட்டால் அங்கே என்ன கதை?” என்ற குரல் வருமுன் மல்லாக்காகப் படுத்திருக்கும் தும்புத்தடியை போய் நிமிர்த்தி எடுத்து வேலையை ஆரம்பியுங்கள்

தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றினால் நகரங்கள் என்ன ஆகும்?

1 month 1 week ago
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ஆ. நந்தகுமார் பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2025, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நாடு தழுவிய அளவில் ஒரு பரந்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. குழந்தைகளைக் கடிப்பது, சாலையில் நடந்து செல்வோரைக் கடிப்பது, ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் என தெருநாய்கள் விவகாரம் ஓர் ஆபத்தான விஷயமாக மாறியுள்ளதால், ஒரு தரப்பினர் இந்த உத்தரவை வரவேற்கின்றனர். அதேசமயம் நாய்களை இப்படி கூண்டோடு அகற்றுவது மனிதாபிமானமற்ற செயல் என்றும், சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்றும் விலங்கு நல அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவென்றால் இப்படி நாய்களை ஒட்டுமொத்தமாக அகற்ற முடியுமா? அப்படி அகற்றினால் மக்கள் வசிப்பிடங்களுக்கு என்ன ஆகும் என்பதே. உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் அமைதிப் பேரணிகளும் போராட்டங்களும் நடைபெற்றன. தெருநாய்களை முற்றிலுமாக அகற்றினால் 'சுற்றுச்சூழல் பேரழிவு'- வுக்கு வழிவகுக்கும் எனவும் இதனால் மனிதர்களுக்குத்தான் பெரும் பிரச்னை எனவும் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் ரேபிஸ் இறப்புகளில் 36% இந்தியாவில் நடப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 'நகர்ப்புற சூழலியல் அமைப்பின் ஒரு பகுதி' ''நாய், பூனை, எலி போன்றவை மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலப்பரப்பில் இயற்கையாகவே தகவமைத்து வாழும் தன்மை கொண்டவை. தெருநாய்கள் ஒரு விலங்கு மட்டுமல்ல, நகர்ப்புற சூழலியல் அமைப்பின் ஒரு பகுதியாகும். அவை மற்ற உயிரினங்களையும் மனித சமூகத்தையும் சமநிலைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.'' என்கிறார் பிரிட்டன் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மனித - விலங்கு தொடர்பு குறித்த படிப்பான பொலிட்டிகல் ஈகாலஜி பேராசிரியர் கிருத்திகா. எடின்பரோ பல்கலைக்கழகத்தின் ''Decolonial Approaches to Street Dogs and Rabies Prevention in India'' எனும் ஆய்வில் தலைமை ஆய்வாளராக இவர் பணியாற்றியுள்ளார். நாய்களை ஓர் இடத்திலிருந்து அகற்றுவதால் ஏற்படும் ''Vacuum Effect" (வெற்றிடம்) காரணமாக பிரச்னை மேலும் சிக்கலாகும் என்கிறார் கிருத்திகா. படக்குறிப்பு, பேராசிரியர் கிருத்திகா ''ஒரு தெருவில் இருந்து நாய்களை அகற்றினால், ஆறு மாதத்துக்குள் ஒரு புது தெரு நாய் அங்கு வந்திருக்கும். ஏனெனில் உணவு, தங்குவதற்கு வசதி போன்றவை பிற பகுதி நாய்களை இங்கு ஈர்க்கும். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நாய்களின் இடப்பெயர்வைத் தடுக்க முடியாது. இதனால் புதிதாக வந்த நாய்களுக்குள்ளும், நாய்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் இடையே மோதல் வரும். இது சூழலை மிகவும் மோசமாக்கும்'' என்கிறார் அவர். அதனால்தான் உலக சுகாதார நிறுவனம் போன்ற உலகின் பல்வேறு அமைப்புகளும் நாய்களை அதன் இருப்பிடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை எதிர்க்கிறது என்கிறார் கிருத்திகா. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் பல்வேறு அமைப்புகளும் நாய்களை அதன் இருப்பிடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை எதிர்கிறது 'எலி, பூனை பிரச்னை அதிகரிக்கலாம்' ஐரோப்பாவில் சில நாடுகள் தெரு நாய்களை அகற்றியதால் அங்கு அந்த பிரச்சினையில்லை எனக் கூறப்படும் வாதத்துக்குப் பதில் அளித்த கிருத்திகா,''பிரிட்டன் போன்ற நாடுகளில் தெருநாய்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாய் தொடர்பான பிரச்னைகள் தீரவில்லை. குப்பையாக வீசப்படும் உணவுகளை உண்ண ஓநாய்கள் வருகின்றன. இதனால் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது'' என்கிறார் கிருத்திகா. ''உதாரணமாகப் பிரிட்டனின் எடின்பரோ நகரில் நான் வசிக்கிறேன். எனது அடிக்குமாடி குடியிருப்பின் பின் பகுதியில் உள்ள பூங்காவுக்குக் கூட ஓநாயும் கழுகும் வருகின்றன. சென்னையில் நீங்கள் வீட்டில் வெளியே எட்டிப்பார்த்தால் நாய் தூங்கிக் கொண்டிருப்பது போல என் வீட்டின் வெளியே எட்டிப்பார்த்தால் ஓநாய் தூங்கிக் கொண்டிருக்கும்'' என கூறுகிறார் அவர். சூழலியல் அமைப்பு என்பது கணிக்க முடியாதது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், மனிதர்கள் மனதில் ஒன்று நினைத்து சூழலியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்ய நினைத்தால் அதற்கான விளைவு வேறு ஒன்றாக இருக்கும் என்கிறார் கிருத்திகா. ''உதாரணத்துக்கு மும்பையில் சில பகுதிகளில் நாய்களுக்குக் கருத்தடை செய்யும் திட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்தியதால் தெருநாய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே சமயம் பூனைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்களின் எண்ணிக்கை குறைவுக்கும், பூனைகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் ஒரு முக்கிய தொடர்புள்ளது. பூனைகளுக்குக் கருத்தடை செய்யும் திட்டத்தைக் கடந்த சில ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி செயல்படுத்தி வருவதையும், பூனை தொல்லை குறித்து மக்கள் புகார் அளித்து வருவதையும் பார்க்கிறோம் '' என்கிறார் அவர். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு,'மனிதர்கள் மனதில் ஒன்று நினைத்து சூழலியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்ய நினைத்தால் அதற்கான விளைவு வேறு ஒன்றாக இருக்கும்' ''தெருநாய்கள் இயற்கையாகவே பூனை, எலிகளை வேட்டையாடும். உணவு போன்ற கழிவுகளை தின்று குப்பைகளைக் குறைக்கும். தெருநாய்கள் இல்லையெனில் எலிகள் பெருகி நோய் பரவும் அபாயம் ஏற்படும்'' என்கிறார் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும் கால்நடை மருத்துவருமான ராமகிருஷ்ணன். 1994-ஆம் ஆண்டு சூரத்தில் அனைத்து நாய்களும் அகற்றப்பட்ட பிறகு அங்கு எலிகளின் தொல்லை அதிகரித்து மக்களுக்கு பிளேக் நோய் பரவியதாக விலங்கு நல ஆர்வலரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மேனகா காந்தி பல முன்னணி ஆங்கிலப் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தில் இருந்து மாறுபடும் கிருத்திகா,'' எலி பிரச்னையோ அல்லது பூனை பிரச்னையோ என இந்தியாவில் என்ன பிரச்னை வரும் என கணிக்க முடியாது. அதுதான் சூழலியல் அமைப்பு. ஆனால், நிச்சயம் புது பிரச்னை ஏற்படும். நீண்ட கால தாக்கம் என்னவென்றால் நாய்கள் விட்டுச்செல்லும் சூழலியல் இடத்தை (உணவு, இடம்) வேறு விலங்குகள் அபகரித்துக் கொள்ளும். அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில், தெரு நாய்கள் வரலாற்று ரீதியாகத் தொடர்ந்து அகற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்தன. அந்த இடத்தை ஓநாய்களும், ரக்கூன்களும் பிடித்துள்ளதை எங்கள் மற்றொரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை காகம், கழுகு கூட நாய்கள் உண்ணும் உணவை உண்ணும் தன்மை கொண்டவைதான் '' என்கிறார். மேலும் அவர், ''பிடிக்கிறதோ இல்லையோ நாம் நாய்களுடன் வாழப் பழகிவிட்டோம். ஆனால் ஓநாய், கழுகு போன்றவற்றுடன் எப்படி வாழ்வது என்பதை அறிவது மிகவும் கடினம்.'' என்கிறார். பட மூலாதாரம், GETTY IMAGES விலங்குகள் இடப்பெயர்வால் அதிகரித்த காசநோய் பிரிட்டனில் பேட்ஜர் எனும் விலங்கு மாடுகளுக்கு காசநோயை பரப்புவதாக கண்டறியப்பட்ட பிறகு, பேட்ஜர்களை கொல்லுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டாலும், விளைவுகள் மோசமாக இருந்தது என்கிறது ஓர் ஆய்வு. ஓர் இடத்தில் இருந்த பேட்ஜர்கள் கொல்லப்பட்ட பிறகு அங்கு வேறு இடத்தில் இருந்து புதிய பேட்ஜர் அந்தப் பகுதிக்கு வந்தது. வெவ்வேறு குழுக்களை சேர்ந்த பேட்ஜர்கள் கலந்ததன் விளைவாக மாடுகளுக்கு காசநோய் பரவல் இன்னும் அதிகரித்தது. காசநோயை கட்டுப்படுத்த பேட்ஜர்களை கொல்ல எடுத்த முடிவு, நோய் பரவலை அதிகரித்து நிலைமையை மோசமடைய வைத்ததே தவிர பிரச்னையை தீர்க்கவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். அதிகரிக்கும் ஆபத்து? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'நாய்கள் பிரச்னைக்கு ஒற்றை தீர்வு என எதுவும் இல்லை' இந்தியாவில் நாய்க்கடி பிரச்னை மற்றும் ரேபிஸ் நோய் பரவலாகக் காணப்படுகிறது. உலகின் ரேபிஸ் இறப்புகளில் 36% இந்தியாவில் நடப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் ரேபிஸின் உண்மையான பாதிப்பு முழுமையாகத் தெரியவில்லை என்றும் இருப்பினும் கிடைக்கக்கூடிய தகவல்களின்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் இறப்புகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் ரேபிஸ் இறப்புகளில் சுமார் 30 - 60% 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படுகின்றன என அந்த அமைப்பு கூறுகிறது. மறுபுறம், இந்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2023 இல் 50 ஆக இருந்த ரேபிசால் ஏற்பட்ட உயிரிழப்பு 2024 இல் 54 ஆக அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 37 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் காட்டுகின்றன ''தெருநாய்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகம் தாக்குவதே சமீபத்தில் மக்களின் கோபம் அதிகரித்துள்ளதுக்கு முக்கிய காரணம். இதனால் தெருநாய்களைப் பார்த்தாலே மக்கள் பீதியடைகின்றனர்'' என்கிறார் மருத்துவர் ராமகிருஷ்ணன். சமீபத்திய உச்சநீதிமன்றம் உத்தரவு கூட டெல்லியில் தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்தே பிறப்பிக்கப்பட்டது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை நாய் தொல்லை ஒரு மோசமான ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்கிறார் மருத்துவர் ராமகிருஷ்ணன். ''நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் உணவு உண்ணத் தினமும் சுமார் 10 நாய்கள் வரும். தினமும் வழக்கமாகப் பார்த்த நாய் திடீரென ஒருநாள் என்னை கடித்தது. எந்த நாய் இயல்பாக இருக்கிறது, எந்த நாய் ஆக்ரோஷமாக இருக்கிறது என்பதைக் கண்டறிவதே கடினமாக உள்ளது. அப்போதிலிருந்து தெரு நாய்களைப் பார்த்தாலே ஒரு பதற்றம் ஏற்படுகிறது. குடியிருப்பு மக்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமெனில் கட்டாயம் தெரு நாய்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது'' என்கிறார் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி. பட மூலாதாரம், GETTY IMAGES சிறந்த தீர்வு என்ன? நாய்கள் பிரச்னைக்கு ஒற்றை தீர்வு என எதுவும் இல்லை என்கிறார் பேராசிரியர் கிருத்திகா. ரேபிஸ் நோய், நாய்க்கடி மற்றும் விழிப்புணர்வு என மூன்றாக இதனைப் பிரித்து பார்த்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்கிறார் அவர். ''நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். அகற்றுவது அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நாய்களைக் கொல்வது, ஓர் இடத்தில் இருந்து அகற்றுவது போன்றவற்றைச் செய்யாமல் இனப்பெருக்க தடுப்பு மற்றும் தடுப்பூசிகளைச் செலுத்தி வருகிறோம். ஆனால், இது முழுமையாகவும் சிறப்பாகவும் செய்யப்படவில்லை.'' எனக் கூறும் அவர் 3 விஷயங்களைப் பரிந்துரைக்கிறார். ''அனைத்து நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசியும், நாய் கடிபட்ட மனிதர்களுக்கு உடனே ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்த வேண்டும். எந்த விலங்கும் ஓரிடத்தில் இருக்கிறது என்றால் அதற்கான உணவும் பிற வசதிகளுக்கும் அங்கு இருக்கிறது என ஆர்த்தம். நாய்களுக்குத் தேவையான உணவு, குப்பை கழிவு போன்றவை ஓரு இடத்தில் அல்லது பகுதியில் அதிகம் இருக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாய்க்கடி பிரச்னையை குறைக்கலாம். இறுதியாக தெரு நாய்களுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், நாய்களுக்கு எப்படி உணவளிக்க வேண்டும் என மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும்.'' என்றார் கிருத்திகா. ''லட்சக்கணக்கான நாய்களை அடைத்து வைப்பது நடைமுறை சாத்தியமற்றது. ஏனெனில் நகர நிர்வாகத்தில் போதிய பராமரிப்பு வசதிகள் இல்லை. ஒரு நாய் சராசரியாக பத்து ஆண்டுகள் உயிருடன் இருக்கும் என வைத்துக்கொண்டால், ஒரு நாய்க்குச் சராசரியாகத் தினமும் 40 - 50 ரூபாய் செலவாகும். லட்சக்கணக்கான நாய்களுக்கு அரசால் செலவு செய்ய முடியுமா?" என்று தமிழ்நாடு மாநில வன உயிரின வாரியத்தின் உறுப்பினரும், விலங்கு நல ஆர்வலருமான ஆண்டனி ரூபின் கேள்வி எழுப்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4ge0y5mpq8o

வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு; முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைப்பதில் மகிழ்ச்சி - ரவிகரன் எம்.பி

1 month 1 week ago
வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அனுமதி வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும் பரந்தன் - கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் 50/1 ஆம் இலக்க பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் களப்புக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் இறுதியாக திருத்தப்பட்டுள்ள குறித்த பாலம் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது. அதனால், வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் இருவழிப் பாதையுடன் கூடிய புதிய பாலமாக அதனை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறைமையின் அடிப்படையில் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளுக்கமைய, கணிசமானபதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s RR Construction (Pvt) Limited க்கு இந்த நிர்மாணப் பணிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmei8d8aq02qaqp4k5tvwrtgp

வீரமுனை பெயர்ப்பலகை அமைக்க தடுத்த சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள்; அதிகாரிகளுக்கு சாதகமாக செயற்பட்ட பொலிஸார் - வீரமுனை மக்கள் குற்றச்சாட்டு

1 month 1 week ago
Published By: VISHNU 19 AUG, 2025 | 03:24 AM அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக் குறிக்கும் பெயர்ப் பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை - கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பிரதான வீதியில் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இந்த பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை இன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்தது. எனினும் அங்குவந்த சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த சம்மாந்துறை பொலிஸாரும் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு சாதகமான முறையில் செயற்பட்டதாக வீரமுனை மக்கள் தெரிவிக்கின்றனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியில் பெயர்பலகை நடுவதற்கு பிரதேசசபையிடம் எந்த அனுமதியும் பெறத்தேவையில்லாத நிலையில் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் பிரதேச மக்கள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வீரமுனை வரவேற்பு கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அதனை போலியான காரணங்கள் கூறி தடுத்தவர்கள் மீண்டும் அதே வேலையினை செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சம்மாந்துறை பிரதேச சபையில் உள்ள சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வீரமுனையின் அடையாளத்தினை இல்லாமல் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இது கண்டனத்திற்குரியது எனவும் அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222831

குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி

1 month 1 week ago
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச - தனியார் பங்குடமை முறைமையின் கீழ் ஆரம்பிப்பதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்கு இயலாமல் போயுள்ளது. அதனால், குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சர்வதேச முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmei6lpu302pzqp4k7sb5zz0g

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 1 week ago
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : { நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது } (2) ஆண் : நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று பெண் : ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று ஆண் : கண் மீனாக மானாக நின்றாடவோ பெண் : சொல் தேனாக பாலாக பண்பாடவோ ஆண் : மாலை நேரம் வந்து உறவாடவோ ஆண் : நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா மலர்கள்ளூரும் கிண்ணம் என்று ஓஹோ ஆண் : { அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா } (2) பெண் : மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் பிள்ளை அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை பெண் : { உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன் உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன் } (2) பெண் : நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது ஆண் : இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா பெண் : அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ ஆண் : { சின்ன பூமேனி காணாத கண்ணென்ன பெண் : சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன .......... ! --- நினைத்தேன் வந்தாய் நூறு வயது ---

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்

1 month 1 week ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல் ‘கேட்ச்-22’ (Catch-22) – அ. குமரேசன் போர் மீது ஒரு வசீகரம் கட்டப்படுகிற காலக்கட்டம் இது. உலகின் பல பகுதிகளிலும் போர்க் கூச்சல்கள் செவிகளைத் துளைக்கின்றன. இந்தியா–பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணிந்ததில் இருநாட்டு மக்களும் நிம்மதியடைகிறார்கள். அதற்குள் முடிந்துவிட்டதே என்று ஆதங்கப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். போரில் ஏதாவது அறிவுடைமை இருக்கிறதா என்று கேட்க வைக்கிறது, 1961ஆம் ஆண்டில் வெளியான ‘கேட்ச்–22’ என்ற நாவல். ‘கேட்ச்-22’ (Catch-22) (பிடி–22) என்றால் என்ன? தப்பிக்க முடியாத, ஒரு சிக்கலிலிருந்து தப்புவதற்கான முயற்சியே மேலும் சிக்கல்களைக் கொண்டுவரும் இக்கட்டான நிலைமையைக் குறிப்பிடுவதற்கு இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. “அவர்கள் கேட்ச்–22 நிலைமையில் மாட்டிக்கொண்டார்கள்” –இப்படி. சுவையான தகவல் என்னவென்றால், கதையை எழுதிய ஜோசப் ஹெல்லர் (1923–1999), ஏற்கெனவே மக்கள் புழங்கிக்கொண்டிருந்த சொல்லைத் தனது நாவலுக்குப் பயன்படுத்தவில்லை, மாறாக அந்த நாவலில் வரும் சொல் மக்களிடையே புழக்கத்திற்கு வந்துவிட்டது! விமானப் படையில் ‘கேட்ச்-22’ (Catch-22) என்றொரு விதி இருப்பதாக நாவல் சொல்கிறது. அதாவது, படையில் பணி புரிகிறபோது ஒரு விமானியின் மனநலம் குன்றிவிட்டால் அவர் தன்னை விடுவிக்குமாறு விண்ணப்பிக்கலாம். ஆனால், “பிடி–22” விதியின்படி மனநலம் குன்றிய ஒருவரால் அதை உணர்ந்து அப்படிக் கோர இயலாது, அவர் அப்படிக் கோருவதே அவர் மனநலத்தோடு இருப்பதால்தான், ஆகவே விண்ணப்பம் நிராகரிக்கப்படும்! “தேசவிரோத புத்தகம்”! வேடிக்கையான இந்த வேதனை நிலைமையை வைத்து, அல்லது வேதனையான இந்த வேடிக்கை நிலைமையை வைத்து நாவலைப் புனைந்திருக்கிறார் ஹெல்லர். ஆம், வைத்துச் செய்திருக்கிறார்! ஒருபுறம் அரசுகளால் போர்களில் இறக்கிவிடப்படும் படைவீரர்களோடு பொதுமக்களும் பேரிழப்புகளை எதிர்கொள்கிறார்கள். இன்னொருபுறம் ஆயுதத் தயாரிப்பு முதலாளிகளும் ஊழல் பேர்வழிகளும் ஆதாயம் அடைகிறார்கள். இந்த நிலைமையை எடுத்துக்காட்டுகிற நாவல் அப்படியே போகிற போக்கில், இதையெல்லாம் தடுத்து மக்களைக் காப்பாற்ற முடியாத கடவுள் கையாலாகாதவர் என்றும் சாடுகிறது. இதெல்லாம் போதாதா? தேசப்பற்றுக்கு எதிராகப் பேசுகிறது, அமெரிக்க அரசின் போர் நடவடிக்கைகளைப் பகடி செய்கிறது, போர் சார்ந்த தொழில்துறையை இழிவுபடுத்துகிறது, படை அதிகாரிகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது, ராணுவப் பணிக்கு வர விரும்பும் இளைய தலைமுறையினரிடையே பாதுகாப்புத் துறை பற்றிய தவறான கருத்துகளைப் பரப்புகிறது, கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தி ஒழுக்க வாழ்வைச் சீர்குலைக்கிறது என்று கிளம்பிவிட்டார்கள். பல பள்ளி நூலகங்களின் அடுக்கங்களிலிருந்து புத்தகம் அப்புறப்படுத்தப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பையும், கருத்தாளர்களின் கண்டனங்களையும் தொடர்ந்து மறுபடியும் வைக்கப்பட்டது. நாவலுக்குள்… இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் அமைக்கப்பட்ட அமெரிக்க விமானப்படைத் தளத்தில் விமானியாக இருப்பவன் யோசாரியன். தொடர்ந்து போர் விமானங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆபத்தான அந்தப் பணிகளைத் தவிர்க்கப் பல முயற்சிகளை எடுக்கிறான். தனக்கு மனநலம் குன்றிவிட்டதாகக் கூறி தன்னை விடுவிக்கக் கோருகிறான். ஆனால் அந்த ‘கேட்ச்-22’ (Catch-22) விதி அவனுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. ஆகவே, நாள்பட்ட, கடுமையான ஈரல் சீர்குலைவு எனக் கூறி ராணுவ மருத்துவமனையில் சேர்கிறான். உயரதிகாரிகள் படைவீரர்களின் உயிர் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இருப்பதையும், தங்களுடைய பதவி உயர்வு உள்ளிட்ட நோக்கங்களுடன் வீரர்களைப் பலிகொடுக்க அவர்கள் துணிவதையும் காண்கிறான். கர்னல் கேத்கார்ட் என்ற அதிகாரி, தனது பிரிவின் வீரர்களை, வேறு எந்த பிரிவையும் விடப் பல மடங்கு அதிகமான முறை தாக்குதல் விமானங்களைச் செலுத்துவதற்குக் கட்டாயப்படுத்துகிறான். அரசாங்கத்திடம் தன்னை ஒரு மகாவீரனாகக் காட்டிக்கொள்வதற்காக, வீரர்கள் வீடு திரும்ப முடியாதபடி, ஒரு சுற்றுப்பணியை முடிப்பதற்கு ஓட்டியாக வேண்டிய விமானங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்த்துகிறான். யோசாரியன் ஆகாயச் சண்டைகளையும் நண்பர்கள் உள்ளிட்ட சக வீரர்களின் மரணங்களையும் கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான்; ஒவ்வொரு பணி தரப்படும்போதும் எதிரிப்படையால் கொல்லப்படலாம் என்று அஞ்சுகிறான். அவனுடைய கோழைத்தனம் வெளிப்படுகிறது. நாவலின் போக்கில் செல்லச்செல்ல, அவன் கோழையல்ல, துணிவு மிக்கவன், கட்டுப்பாடு மிக்கவன் என்று தெரியவருகிறது. அவன் கவலைப்பட்டது எதிரிகளின் வலிமையைப் பற்றியல்ல, சொந்த நாட்டு ராணுவக் கெடுபிடிகள் பற்றித்தான். கதாபாத்திரங்களுக்கிடையில் துண்டாடப்பட்ட கதை போல, சில அத்தியாயங்களில் ஒற்றைக் கால வரிசைப்படி நகர்கிற கதை, மற்ற அத்தியாயங்களில் நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமாக மாறிமாறிப் பயணிக்கிறது. போர்க்காலத்தின் நியாயமான அச்சம் விமானிகள் எதிர்கொள்ளும் கடும் அதிர்ச்சிகளின் மூலமாக வாசகர்களுக்குக் கடத்தப்படுகிறது. தாக்குதல்களையும் மனித உயிர்கள் கொல்லப்படுவதையும் போற்றுதலுக்குரிய வீரச்செயலாக அல்லாமல், கவலைக்குரிய சோகச் சூழலாகச் சித்தரிக்கிறது என்று நூல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். பாதுகாப்பற்ற இத்தாலிய மலை கிராமத்தின் மீது அர்த்தமற்ற தாக்குதலுடன் திகில் தொடங்குகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரக்தி, போரில் மனிதர்கள் காணாமல் போவது என்று மேலேறும் நாவல், ஒரு வெகுளித்தனமான இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதோடு உச்சக்கட்டத்தை அடைகிறது. நாவல் பல்வேறு கோணங்களின் போர்க்களத் துயரங்களைக் காட்டினாலும், செத்துவிட்டான் என்று நினைத்த நெருங்கிய நண்பனான ஓர், சாகசமான முறையில் வேறுநாட்டுக்குச் சென்றதை அறிந்து மகிழும் யோசாரின், தானும் வெளியேறி ஓடுவதாக இன்பியல் காட்சியுடனேயே நிறைவடைகிறது. போர் வணிகமும் கடவுளும் படையின் உணவுப் பிரிவு அதிகாரி மிலோ. போர்ச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு வணிகப் பேரரசையே கட்டுகிற மிலோ உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், பல்வேறு தளவாடங்களையும் விமானங்களையும் கூட வாங்கி விற்கிற அளவுக்குப் பணம் குவிக்கிறான். அது மட்டுமல்ல, வீரர்களுக்குத் தேசப்பற்றுடன் எதிரிகளோடு மோதுவதற்கு ஊக்கமளித்துவிட்டு, எதிரி நாட்டுடனேயே கூட தன் வணிகத்தை விரிவுபடுத்துகிறான். ஒரு கட்டத்தில் சொந்தப் படைப்பிரிவுத் தளத்தின் மீதே குண்டு வீசுவதற்குத் தயங்காமல் ஏற்பாடு செய்கிறான். லாபம்தான் குறி என்றான பின் தேசமாவது, பற்றாவது! மிலோ மூலமாக, போர் சார்ந்த பொருள்கள் தயாரிப்பின் வணிகமய வலைப் பின்னலை அறிய முடிகிறது என்று ஒரு வாசகர் பதிவிட்டிருக்கிறார். லாபத்திற்கான பீடத்தில் பலியிடப்படுகிறவர்கள் உயிருக்கு அஞ்சாத வீரர்களும், சண்டையில் மாட்டிக்கொள்ளும் பொதுமக்களும். நடப்பதையெல்லாம் கண்டு மனம் நோகிற யோசாரினிடம் யாரோ கடவுளின் சித்தம் இது என்று சொல்கிறார்கள். கடவுளின் செயல்கள் சாமானியமாகப் புரிந்துகொள்ள முடியாதவையாகப் புதிராகத்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆவேசமடையும் யோசாரின் இவ்வாறு பேசுகிறான்: “கடவுள் புதிரான வழிகளில் செயல்படுகிறார் என்று என்னிடம் சொல்லாதீர்கள். அதில் புதிர் ஒன்றுமில்லை. கடவுள் எந்த வேலையும் செய்யவில்லை. அவர் விளையாடுகிறாராக இருக்கும் நம்மை முற்றிலும் மறந்துவிட்டாராக இருக்கும் – கிராமத்தில் ஒரு மந்தமான, குழப்பமான, அறிவில்லாத, ஆணவம் பிடித்த, முரட்டுத்தனமான பண்ணையார் போல.” தன்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறவர்களிடம் தொடர்ந்து பேசுகிறான்: “நல்ல கடவுள் தனது படைப்பின் உடலில் சளி, பல் சிதைவு போன்ற தொந்தரவுகளை ஏன் சேர்க்க வேண்டும்? வயதானவர்களுக்கு மலத்தை கட்டுப்படுத்தும் சக்தியை அவர் ஏன் பறித்தார்? அவர் ஏன் வலியை உருவாக்கினார்? ஓ, வலியின் வாயிலாகவே ஆபத்தைப் பற்றி எச்சரிக்கிறாரா? அதற்குப் பதிலாக அவர் ஏன் ஓர் அழைப்பு மணியைப் பொருத்தியிருக்க முடியாது? ஆபத்து வரும்போது அவருடைய வானக கீதங்களில் ஒன்றை ஏன் ஒலிக்கச் செய்யக்கூடாது? ஒவ்வொருவரின் நெற்றியின் நடுவில்நீலம் சிவப்பு நியான் விளக்குகள் எரிந்து எச்சரிக்கிற அமைப்பை ஏன் பயன்படுத்தியிருக்க முடியாது? ஒரு ஜூக்பாக்ஸ் தயாரிப்பாளர் கூட இதைச் செய்திருக்க முடியும் என்றால் கடவுளால் ஏன் முடியவில்லை? ஒரு வேலையை சரியாகச் செய்ய அவருக்கு இருந்த வாய்ப்பையும் சக்தியையும் கருத்தில் கொண்டு பார்க்கிறபோது, அதற்கு பதிலாக அவர் உருவாக்கிய முட்டாள்தனமான, அருவருப்பான குழப்பங்கள்தான் கண்ணில் படுகின்றன. அவருடைய முழுமையான திறமையின்மை மலைத்துப்போய் நிற்க வைக்கிறது. …” தப்பியோடிய யோசாரின் போரால் சிதைந்த இத்தாலிய நகரம் ஒன்றில் நடந்து செல்லும் காட்சியைபற்றி இவ்வாறு எழுதுகிறார் ஜோசப் ஹெல்லர்: “யோசாரியன் அங்கிருந்து விலகிச் செல்ல வேகத்தை அதிகரித்தான், கிட்டத்தட்ட ஓடினான். இரவு திகில்களால் நிறைந்திருந்தது. மேலும், கிறிஸ்து உலகெங்கும் நடந்து சென்றபோது எப்படி உணர்ந்திருப்பார் என்று அவன் நினைத்துப் பார்த்தான் – பித்தர்கள் நிறைந்த மருத்துவமனையில் ஒரு மனநல மருத்துவர் நடப்பது போல, கொள்ளையர்கள் நிறைந்த சிறைக்குள் பாதிக்கப்பட்ட ஒருவன் நடப்பது போல! ஒருவரும் எஞ்சியிராத ஊரில் ஒரு தொழுநோயாளி எதிரே வந்தால் கூட எவ்வளவு வரவேற்புக்குரியவராக இருப்பார்!” ஜோசப் ஹெல்லர் ஜோசப் ஹெல்லர் (Joseph Heller) நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளினில் கான் ஐலேண்டில் ரஷ்யாவிலிருந்து வந்த ஏழை யூதப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் எழுத்தாளர் ஜோசப் ஹெல்லர். இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க விமானப்படையில் குண்டுவீச்சு விமானியாகப் பணியாற்றியவர். போருக்குப் பிறகு ஆங்கிலம் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியராகவும், ஒரு விளம்பர நிறுவனத்தில் படியெடுப்பு எழுத்தராகவும் வேலை செய்தவர். “சம்திங் ஹேப்பண்டு”, “குட் அஸ் காட்”, “குளோசிங் டைம்” உள்ளிட்ட அவரது நாவல்களும் புகழ்பெற்றவை. அத்தனை புத்தகங்களும் அரசியல், சமூக நிலைமைகளையும் அதிகாரத்துவத்தையும் எள்ளி நகையாடுபவைதான் என்று தெரியவருகிறது. தொடக்கத்தில் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘கேட்ச்-22’ (Catch-22) பின்னர் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன் அடுத்த பாகமாகவே “குளோசிங் டைம்” நாவலை எழுதினார் என்று கூறப்படுகிறது. புத்தகம் வெளியானபோது விற்பனை மந்தமாகவே இருந்தது. இன்று, உலகில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது. திரைப்படமாகவும், வலைத்தொடராகவும் வந்து ஏராளமானோரிடம் சென்றடைந்திருக்கிறது.. https://bookday.in/books-beyond-obstacles-13-joseph-hellers-novel-catch-22-based-article-written-by-a-kumaresan/

வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்

1 month 1 week ago
வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 50 ஆவது பிறந்த தினம் வாகரை பனிச்சங்கேணியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளுடன் இன்று கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுகளை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி, கலை, கலாசாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இரத்தான நிகழ்வு நடைபெற்றது. பலர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் பனிச்சங்கேணி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசையும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது. குறிப்பாக அவரது 50 ஆவது அகவையினை முன்னிட்டு ஆதாரவாளர்களால் 50 மண் பானைகளில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். இதன்போது அவரது கட்சியின் தற்போதைய தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான திரவியம் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினருமான பிரசாந்தன், வாகரை பிரதேச சபை தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் மற்றும் கிழக்கு தமிழர் கூடட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் படுகொலை தொடர்பாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.voiceofmedia.lk/14806
Checked
Mon, 09/29/2025 - 21:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed