1 month 1 week ago
தங்க விலை இந்தியா மக்களை நம்பியே இருக்கின்றது, அவர்கள் இருக்கும் வரை உலகில் பல தங்க சுரங்கங்களை திறந்து கொண்டே இருப்பார்கள்
1 month 1 week ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
1 month 1 week ago
ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்! August 19, 2025 — அழகு குணசீலன் — முத்தையன்கட்டு குளத்தில் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம், அவரது மரணம் குறித்து பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் இளைஞனின் கொலைக்கு இராணுவமே காரணம் என்று பெரும்பாலானவர்கள் நம்பிய நிலையிலேயே, தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் ஹர்த்தால் அழைப்பு வெளியானது. சுமந்திரனின் இந்த அழைப்பு தனிநபர் அழைப்பு என்பதே மக்களதும், பொது அமைப்புக்கள், கட்சிகளின் நிலைப்பாடாக ஆரம்பம் முதல் இன்று வரை இருக்கிறது. இடையில் இது குறித்த விசாரணைகள் வேறு பல குற்றவியல் உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளன. இந்த உண்மைகள் மரணம் குறித்து மக்களுக்கு இருந்த ஆத்திரத்தை தணித்தன. இராணுவ பக்கம் நீட்டப்பட்ட சுட்டுவிரலை மக்கள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் பக்கம் திருப்பினர். இதனால் அறிவித்த வேகத்தில் ஹர்த்தாலை முன்னெடுப்பதில் மக்கள் ஒத்துழைப்பில் இருந்து விலகி இருந்தனர். கஞ்சா வியாபாரிக்கும், திருட்டு கும்பலுக்கும் நியாயம் கோரி ஹர்த்தாலா? என்று கேட்டனர். அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்தது. குறிப்பிட்ட முகாமைச் சேர்ந்த மூன்று இராணுவச்சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர். இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கட்டத்திலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமந்திரனுடன் தொடர்பு கொண்டு “அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் ஹர்த்தால் அறிவிப்பு எதற்கு” ? என்று கேட்டுள்ளார். மறுபக்கத்தில் சுமந்திரன் தன்னிச்சையான இந்த முடிவு குறித்து தமிழரசுக்கட்சிக்கு உள்ளும், வெளியும், தமிழ்த்தேசிய பரப்பிலும் அதிருப்திகள் வெளியிடப்பட்டன. ஹர்த்தாலுக்கு திகதியிடப்பட்ட 15ம்திகதி குறித்து விமர்சனங்கள் வெளிவந்தன. திகதி 18 க்கு மாற்றப்பட்டது. விமர்சனங்கள் குறையவில்லை. முழுநாள் ஹர்த்தால் அறிவிப்பை சில மணித்தியாலங்களுக்கு குறுக்க வேண்டிய நெருக்குவாரம் சுமந்திரனுக்கும், சிவஞானத்திற்கும் ஏற்பட்டது. நல்லூர் ஆலய நிருவாகம் இந்த ஹர்த்தால் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. யாழ்.குடாநாட்டில் சுமந்திரனின் ஹர்த்தால் அறிவிப்பின் தாக்கம் ஒரு “புஷ்வாணம்” என்று நிருவாகம் நினைத்திருக்கலாம். இதை யாழ்ப்பாணத்தில் ஹர்த்தாலின் தோல்வியாக எம்.ஏ. சுமந்திரனும், சி.வி.கே. சிவஞானமும் ஊடகச் சந்திப்பில் ஏற்றுக்கொண்டனர். நல்லூர் அலட்டிக்கொள்ளாதபோதும், மன்னார் ஆயர் இல்லம் குறிப்பிட்ட 15ம் திகதி நிர்ணயம் குறித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. இதனால் பதறியடித்த ஹர்த்தால் அறிவிப்பாளர் சுமந்திரன் மன்னார் சென்று ஆயரைச்சந்திக்க முயற்சித்துள்ளார். கடையடைப்பைக் கோரிய சுமந்திரன் ஆயர் தனக்கு கதவடைப்பை செய்வார் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார். சுமந்திரனை சந்திக்க ஆயர் மறுத்துவிட்டார். குருவானவர் ஒருவரை சந்தித்து விட்டு வெறுங்கையோடு வந்த சுமந்திரன் விடுத்த மறு அறிவிப்பு தான் ஹர்த்தால் 18ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதாகும். மறுநாள் அது மற்றொரு திருத்தத்துடன் 18ம்திகதி காலை மட்டும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கோணல் முற்றும் கோணல். இவை அனைத்தும் எதனைக் காட்டுகின்றன? 75 ஆண்டுகள் பழம்பெரும் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் எடுக்கும் சக்தியையா? பெருமையையா? தமிழரசுக்கட்சியின் யாப்பு கட்டமைப்பில் அரசியல் குழு, மத்திய குழு, வேட்பாளர் தெரிவுக்குழு, பாராளுமன்றக்குழு, மாவட்டக்குழு, பிரதேசக்குழு, கிராமியக்குழு என்பனவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாட்டையா? ஹர்த்தாலுக்கான இந்த முடிவை எந்த குழு, எங்கு கூடி, எப்போது எடுத்தது என்று அறியலாமா….? இவை தமிழ்ச்சமூகம் எழுப்பிய கேள்விகள். வடக்கு கிழக்கு மக்களோடு தொடர்பு பட்ட, மக்கள் அரசியல் செயற்பாட்டு முடிவில் உள்வாங்கப்பட்ட பொது சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக சமூகம், வடக்கு கிழக்கில் செயற்படும் பெண்கள் அமைப்புகள், மத நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், …. மற்றும் அமைப்புகள் எவை? என்ற கேள்வியும் வலுப்பெற்றது. “இராணுவ பிரசன்னத்தை குறைத்தல்” என்ற இந்த ஹர்த்தாலுக்கான மகுடத்தில் உள்வாங்கப்பட்ட தமிழ்த்தேசிய, தமிழ்த்தேசியம் சாராத அரசியல் கட்சிகள் எவை? வடக்கு கிழக்கின் ரெலோ, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழர் முற்போக்கு முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லீம் காங்கிரஸ் போன்று வெறும் ஆதரவு அறிக்கை கட்சிகள் வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கத்திற்கு, கொழும்பு அரசாங்கத்தை திரும்பி பார்க்க வைப்பதற்கு இன்றைய ஹர்த்தாலுக்கு வழங்கிய வகிபாகம் என்ன? ஒரு வகையில் இந்த ஆதரவு அறிக்கைகளும் சுமந்திரன் பாணியிலான தனிநபர் அறிக்கைகள் தான். இந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் ஹர்த்தாலுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை. வேறு தமிழ்த்தேசிய கட்சி ஒன்று இப்படி தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்து தமிழரசிடம் ஆதரவு கோரியிருந்தால் அந்த கோரிக்கையை ஏற்று தமிழரசு -சுமந்திரன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பாரா? ரி.என்.ஏ. உடைவு, பொதுவேட்பாளர், உள்ளூராட்சி தேர்தல் பொறிமுறை, தேர்தலுக்கு பின்னர் ஒன்றிணைதல்….. போன்ற அரசியல் ஏமாற்று செயற்பாடுகளில் ஒத்துப்போகாத தமிழரசுக்கும் -சுமந்திரனுக்கும் தன்னிச்சையாக முடிவை எடுத்து விட்டு மற்றைய தரப்புமீது ஆதரவு கோருவதற்கான -திணிப்பதற்கான யோக்கியதை உண்டா…? இதனால் தான் இந்த ஹர்த்தால் அறிவிப்பு சுமந்திரன் எதேச்சையாக, எடுத்த எடுப்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு என்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. அத்தோடு இந்த ஹர்த்தால் படுதோல்வியில் முடிவடைந்திருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம். இதற்கான முற்று முழுதான பொறுப்பும் சுமந்திரனைச்சாரும். சமூக ஊடகங்களும், வடக்கு கிழக்கின் ஊடகவியலாளர்களும் ஹர்த்தால் தோல்வியையே பதிவு செய்துள்ளன. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் கடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல்மாவட்ட மக்களால் பாராளுமன்றத்திற்கு வெளியே ஜனநாயக வழியில் தூக்கி வீசப்பட்டவர். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று 2010 முதல் தமிழ் தேசிய அரசியல் ரீதியான சுமந்திரனின் செயற்பாடுகள் மீதான அதிருப்தி. மற்றையது என்.பி.பி. அநுர அலையில் யாழ்ப்பாணம் அள்ளுண்டு போனது. எனினும் தமிழரசு என்றால் சுமந்திரன், சுமந்திரன் என்றால் தமிழரசு என்ற நிலைப்பாட்டை கட்சிக்குள் வளர்ப்பதில், தன்னைச் சுற்றி ஒரு ஆதரவாளர் கூட்டத்தை அவர் கடந்த தேர்தலுக்கு முன்னர் இருந்தே திட்டமிட்டு உருவாக்கி வந்தார். ஆனாலும் தேர்தல் தோல்வியில் இருந்து தப்பிக்க முடியவில்லை. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தனது கையில் இல்லை என்பது சுமந்திரனுக்கு மெல்ல மெல்ல வெளிச்சமாகியது. இதன் மிகப் பிந்திய வெளிப்பாடே அவரே ஏற்றுக்கொண்ட ஹர்த்தால் தோல்வி. இப்போது சுமந்திரனுக்கு இருக்கின்ற நெருக்கடி தனது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான மாற்று தளம் ஒன்றை தேடவேண்டும். அது யாழ்ப்பாண குடா நாட்டிற்கு வெளியே வன்னியில் அல்லது கொழும்பிலேயே சாத்தியம். இந்த நெருக்கடியில் விடப்பட்ட வெள்ளோட்டம் தான் இந்த ஹர்த்தால். வன்னியில் இராணுவ கெடுபிடிகள் அதிகம், இராணுவ பிரசன்னம் அதிகம், நில அபகரிப்பு, விகாரைகள், குடியேற்றங்கள், போரின் விளைவுகள் என்று பல பிரச்சனைகள் உண்டு இவற்றை தனது அரசியலுக்கு முதலிடும் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த ஹர்த்தால் வெள்ளோட்டம். வன்னி மக்களைப் பொறுத்தமட்டில் இராணுவ அடக்குமுறையை அவர்கள் எதிர்க்கின்ற போதும் அதைவிடவும் கடுமையாக சுமந்திரனின் அரசியலை எதிர்க்கின்றனர். வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்த சுமந்திரனுக்கு குடா நாட்டில் ஆதரவற்ற நிலையில், அதை ஈடுசெய்ய வன்னியில் வாக்கு கேட்கவேண்டிய நிலை. இது இந்த ஹர்த்தால் அறிவிப்பின் பின்னணி. 2020 வரை இராணுவத்தின் பாதுகாப்பில் பவனிவந்த சுமந்திரன் இப்போது அதே “பாதுகாப்பு” இராணுவத்தை வெளியேறத் கோருகிறார். தனக்கு பாதுகாப்பு வழங்கியது இராணுவம் அல்ல எஸ்.ரி.எப். என்ற விசேட அதிரடிப்படை என்று தமிழ்பேசும் மக்களை முட்டாள்கள் ஆக்கும் கயிறு திரிப்புகள் வேறு. இது நீதிமன்றத்தில் சட்டவாதத்திற்கு சரியாகலாம் மக்கள் அரசியலுக்கு அல்ல. இலங்கை பேரினவாத அரச இயந்திரத்தை பாதுகாக்கின்ற படைகளைக் கொண்ட பல இராணுவ கட்டமைப்புகள் உண்டு. இதில் இராணுவம் – விசேட அதிரடிப்படை இடையேயான வித்தியாசம் என்ன? எஸ்.ரி.எப். தமிழ்பேசும் மக்களின் பாதுகாப்பு படையா? கிழக்கு மாகாணத்தை சூறையாடிய விசேட அதிரடிப்படை பயங்கரவாதத்தை அழிக்க அமெரிக்க, இஸ்ரேல் ஆலோசனையில் ஜே.ஆர்.காலத்தில் அமைக்கப்பட்ட எஸ்.ரி.எப். இராணுவத்தை விடவும் மிகவும் மோசமான விசேட பொலிஸ் படையணி என்பது சுமந்திரனுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. சம்பவம் நடந்த இராணுவ முகாம் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் உள்ளது. 200 பேர்வரை இருந்த இந்த முகாமில் தற்போது 25 பேர் வரைதான் உள்ளனர். மூடப்படுகின்ற முகாமில் உள்ள எச்சசொச்ச பொருட்களை எடுக்கவே இந்த இளைஞர்கள் அங்கு சென்றுள்ளனர். இது அரசாங்கம் படிப்படியாக முகாம்களை மூட எடுத்துள்ள முடிவின் ஒரு விளைவு. இதில் அணில் கிணறு தோண்டிய கதையாக பேரெடுக்கும் அரசியல் செய்ய பார்க்கிறார் சுமந்திரன். இந்த ஹர்த்தால் தவறானதல்ல ஆனால் அதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை அணுகுமுறை, காலப்பொருத்தம், தவறானது. சிலர் இராணுமுகாம்களால் இராணுவம் – மக்கள் உறவு வளர்கிறது என்று கதிகலங்குகின்றனர். இராணுவம் நிலை கொண்டு இருப்பதால் தான் அரசாங்கம் அரசியல் தீர்வில் அக்கறையற்று இருக்கிறது என்றும் கதை விடுகிறார்கள். இராணுவம் இல்லாத காலத்தில் அரசியல் தீர்வு கிடைத்ததா? இராணுவம் – மக்கள் உறவு துரோகத்தனம் என்று சென்.ஜோன்ஸ். அதிபர் ஆனந்தராஜா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் அரசியல் தீர்வு கிடைத்ததா? சுட்டுக்கொண்டவர்களும் படைத்தளபதிகளும் கை குலுக்கவில்லையா? அல்லது கிடைத்த தீர்வைத்தான் ஏற்றுக் கொண்டீர்களா? இந்த ஹர்த்தாலுக்கு பதிலாக கொழும்பில் ஒரு போராட்டத்தை ஏன்? செய்யமுடியாது என்ற கேள்வி சமூக ஊடகங்களில் கேட்கப்பட்டது. பல பதிவுகள் உண்ணாவிரதத்தை முன்மொழிந்தன. அந்த உண்ணாவிரதத்தை தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டும்பேரும் செய்யவேண்டும் என்றும், முடியுமானால் சாகும்வரை செய்யவேண்டும் என்றும் கேட்கப்பட்டது. இவை ஒரு பகுதி தமிழ்பேசும் மக்களின் கருத்துக்கள். இதற்கு தமிழரசின் பதில் என்ன? முடியுமானால் ஹர்த்தாலுக்கு ஆதரவு அறிக்கை விட்டவர்களும் நோன்பிருந்தால் அதன் கனதி சர்வதேசத்தில் அதிகமாக இருக்கும். இப்பவும் காலம் கடந்து விடவில்லை. ஹர்த்தால் போட்டு அன்றாடம் உழைக்கும் கூலிகளை பட்டினி போடுவதை விடவும் இது இதயசுத்தியான அரசியல். அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் காலத்தில், ஜனாதிபதி ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்றும் காலத்தில் தமிழரசு எம்.பி.க்கள் சாகும்வரை உண்ணாவிரதம்? இது எப்படி இருக்கு? இதைச் செய்யலாமே. ஒரு வகையில் மக்களுக்கு கட்டளையிட்டு அவர்களை வதைப்பதை விடவும், மக்கள் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டதாகவும் வரலாற்றில் அமையும். இராணுவ முகாம்களை மூடுவது என்பது நூறு வீதம் அரசாங்கத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது. காலாவதியாகிப்போன ஹர்த்தால்களால் அதை சாதிக்க முடியாது. இந்திய இராணுவம் வந்திறங்கிய போது இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவின் படி இராணுவம் முகாமுக்குள் முடங்கவில்லையா? அரசியல் தீர்வுக்கும் – இராணுவ பிரசன்னத்திற்கும் போடும் முடிச்சு முழங்காலுக்கும், மொட்டத்தலைக்குமானது. ஜதார்த்தமற்றது, உண்மையான, நேர்மையான அரசியல் அற்றது. அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் போது இராணுவம் வரையறுக்கப்பட்ட வகையில் குறைக்கப்படலாம். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்றால், தனிநாடே வழி. இதற்கு போராட, புருடா விடாமல் சுமந்திரனும், தமிழரசுக்கட்சியும் தயாரா? அரசாங்கம் நல்லெண்ண அடிப்படையில் இந்த யுத்த சூழல் எச்சங்களை படிப்படியாக குறைக்க முயற்சிக்கிறது. அரசாங்கம் தென்னிலங்கை சிங்கள பௌத்த தீவிர அரசியல் சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாத தமிழ்த்தேசிய உணர்ச்சி எதிர்ப்பு அரசியல் இராணுவத்தை நிலைநிறுத்தவும், இனப்பிரச்சினைக்கான தீர்வை பின் தள்ளவும், பயங்கரவாத சட்டத்தின் நீக்கத்தை தடுக்கவும் தமிழ்த்தேசியம் அரசாங்கத்திற்கு செய்யும் சேவகமாக அமையும். எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். இதுதான் தமிழரசுக்கட்சியினதும், சுமந்திரனதும் பின்கதவு இலக்கா….? இது தந்தை செல்வாவின் அசரீரி, “சுமந்திரா..! உனது முதலமைச்சர் கனவு வில்லங்கமானது. உன்னை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஆமேன்..!” https://arangamnews.com/?p=12259
1 month 1 week ago
ஓமந்தை A9 வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள்: ஓர் ஆய்வு August 20, 2025 10:37 am A9 வீதியில் நடக்கும் விபத்துக்களுக்கு அமானுஷ்யங்கள் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருவதை அவதானித்து இருந்தேன். இந்த விபத்துக்களுக்கான காரணங்களில் 1% கூட இந்த அமானுஷ்யங்கள் செல்வாக்குச் செலுத்துவதில்லை. மாறாக இந்தக் கூற்றுக்கள் மேலும் விபத்துக்கள் ஏற்படுவதற்குக் காரணமான கவனக்குறைவுகளுக்கு வழி கோலுகின்றன. ஏழு ஆண்டுகள் ஓமந்தைப் பிராந்தியத்திலும் இரண்டு ஆண்டுகள் ஓமந்தையிலும் கடமையாற்றும் அனுபவத்தில் இந்த விபத்துக்களின் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் விரிவாக எழுதியுள்ளேன். வழக்கமான காரணங்களை இந்தக் கட்டுரையில் தவிர்த்துள்ளேன். விசேடமான காரணங்களை மட்டும் இணைத்து எழுதியுள்ளேன். ஒருமுறை என்னுடைய பறக்கும் கெமரா (Drone) மூலம் மகிழங்குளம்- றம்பைக்குளம் சந்தியில் இருந்து குறிப்பிட்ட அளவு உயரம் உயர்த்தி தெற்குநோக்கி கெமராவைத் திருப்பிய போதுதான் இந்த 7.5km பிரம்மாண்டத்தை கண்ணால் கண்டுகொண்டேன், அதாவது குறிப்பிட்டளவு உயரத்திலேயே நொச்சிமோட்டையின் வளைவு மகிழங்குளத்தில் Drone மூலம் நேர்சாலையாகப் பார்க்கமுடிகிறது. வடக்கில் அதிக விபத்துக்கள் நிகழும் ஓமந்தையின் A9 வீதியானது கிட்டத்தட்ட 7.5 km நீளமான நேர்பாதையாகும். எந்த வளைவுகளும் இல்லாத வடக்கின் நேர்வேகப் பாதையின் நுழைவாயில் இதுவாகும். இதே போன்று முறிகண்டி தொடக்கம் ஆனையிறவு வரையான A9 பாதை 28 km நேர்நீளமானது. இங்கு ஏற்படாத விபத்துக்கள் ஓமந்தையில் ஏற்படப் பல பௌதிக-உளவியல் காரணங்கள் உள்ளன. ஓமந்தையில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 60% ஆனவை தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற போது ஏற்பட்டவையாகும். கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் நேரடியாக இணைக்கும் நெடுஞ்சாலைக்கு A9 வீதி என்று பெயர். இச்சாலை இலங்கையின் சகல மாவட்டங்களையும் யாழ்ப்பாணத்துடன் இணைத்துப் பயணத்திற்கு உதவுகிறது. தென்னிலங்கையில் இருந்து யாழ் செல்பவர்கள் தம்முடைய பயணத்தில் கவனச் சிதறல் ஏற்படாத வண்ணம் வவுனியா நகரை அடைந்துவிடுகின்றனர். வவுனியா நகருக்கும் கண்டிக்கும் இடையில் பலநூறு வளைவுகளைச் சந்தித்து வருவதும் இதற்கு ஒரு காரணம். வவுனியா நகரில் இருந்து யாழ் நோக்கிச் செல்லும் போது மிக வேகமாகச் செல்லக்கூடிய முதலாவது நேர்ப்பாதை நுழைவாயில் என்றால் ஓமந்தையிலுள்ள 7.5 km நீளமான நெடுஞ்சாலையாகும். இந்த 7.5 km நீளமான நெடுஞ்சாலையைக் கடக்கும் போது கடந்த எட்டுமாதங்களில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர், ஐம்பதிற்கும் அதிகமானவர்கள் காயமுற்றுள்ளனர், பல வாகனங்கள் வீதியை விட்டு விலகிக் குடைசாய்ந்துள்ளன. இதற்குப் பிரதான காரணங்கள் 1. பல வளைவுகள் கொண்ட ஏனைய மாவட்டங்களின் பாதைகளைக் கடந்துவரும் சாரதிகள் வடக்கின் முதலாவது நேர்பாதை நுழைவாயிலில் நுழைந்ததும் ஓட்டுநர் கவனம் சிதறல் (Driver Distraction) ஏற்பட்டு நீண்ட, நேராக செல்லும் சாலைகள் சலிப்பை ஏற்படுத்தி, ஓட்டுநர்களின் கவனத்தைச் சிதறச் செய்துவிடுகிறது. இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படலாம். அத்துடன் நேராக இருக்கும் சாலைகள் ஓட்டுநர்களை அதிக வேகத்தில் செல்ல தூண்டும். இதனால் வாகனங்களின் மீது கட்டுப்பாடு இழக்கப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடுகின்றது. குறிப்பாக, வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, எதிர் வரும் வாகனங்களுக்கு சரியான எதிர்வினையாற்ற முடியாமல் போவது போன்ற காரணங்களால் விபத்துக்களை மேலும் தீவிரப்படுத்துகின்றது. ஆனால் சாலைகளை நேராக அமைப்பது போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் என்பதனை இங்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டும். 2. கண்டி தொடக்கம் வவுனியா இரட்டைப் பெரியகுளம் வரையும் பலநூறு வளைவுகள் சாரதிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கின்றது. தூக்கம் போன்ற காரணங்களைத் தவிர்த்து அவர்கள் கவனத்தைச் சிதறவிடுவது மிகக் கடினமாகும். ஆனால் ஓமந்தையின் 7.5 km நீளமான பாதை அவ்வாறானதல்ல. Travel Shock இனை அளிக்கும் வகையில் ஓமந்தைப் பகுதியிலுள்ள பௌதிகக் காரணிகள் உள்ளன. இந்த 7.5km நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருபதுக்கும் மேற்பட்ட குறுக்குப் பாதைகள் உள்ளன. அறுபதிற்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளுக்கான வழிப்பாதைகள் உள்ளன, அந்தக் குறுக்குப் பாதைகளுக்கு உள்ளாக வரும் உள்ளூர் வாசிகள் பலர் பிரதான A9 வீதியில் நுழையும் போது வாகனங்களைக் கவனிக்காமலே பிரதான சாலையில் நுழைகின்றனர், இதனால் 7.5 km நீளமான நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தை நோக்கித் தள்ளப்படுகின்றன. 3. அண்மையில் ஓமந்தை வாகன விபத்தில் கொல்லப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகராலய கலாசார உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மரணம் கூட குறித்த காரினை ஓட்டிய குறித்த உத்தியோகத்தரின் தூக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான், ஆனால் அவர் கொழும்பில் இருந்து இவ்வளவு தூரம் வந்தபோது ஏற்படாத தூக்கம் ஓமந்தைப் பகுதியின் நீள்சாலையில் ஏற்படக் காரணம் இந்த தடுப்புகளற்ற நீளமான சாலைதான். 7.5 km சாலையின் கால்வாசிப் பகுதியில் நுழையும் போதே குறித்த கார் விபத்துக்குள்ளாகி அவர்களின் மரணம் சம்பவித்துள்ளது. 4. அண்மையில் கூட குறித்த ஓமந்தை சாலையில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். சென்ற மாதம் இந்திய தூதரக அதிகாரி விபத்தில் உயிரிழந்த இடத்திற்கும், அதற்கும் முதல்மாதம் வைத்தியர் ஒருவர் அவரது Hilux இல் சென்றபோது விபத்தில் இறந்த இடத்திற்கும் இடையிலுள்ள ஒரு இடத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 7.5 km நீளமான சாலையாக இருப்பது போக்குவரத்தை வினைத்திறனாக்கும் என்றாலும், சாரதிகளின் கவனயீனம் மற்றும் உள்ளூர் வாசிகளின் அலட்சியம் என்பவற்றால் இந்த விபத்துக்கள் அதிகம் சம்பவிக்கின்றன. அந்த கவனயீனங்கள் அதிகம் இந்தப் பகுதியில் நிகழ்வதுதான் துன்பியல் சம்பவமாகும். இவற்றைத் தடுக்க இனி என்ன செய்யலாம்? 1. நொச்சிமோட்டை- பறனட்டகல் வளைவில் தொடங்கி மகிழங்குளம்- இறம்பைக்குளம் பகுதிக்கு இடையில் இந்த 7.5km நீளமான விபத்து வழக்கமாக நடைபெறும் நேர் பாதை அமைந்துள்ளது. இந்த நேர்சாலையை தூரப்பிரதேசங்களில் இருந்துவரும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வெறும் நான்கரை நிமிடங்களில் கடந்துவிடுகின்றன, அதாவது 100km/h வேகத்தில் செல்கின்றன. உள்ளூர் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் கூட ஏழு நிமிடத்திற்குள் கடந்துவிடுகின்றன. இவை அவ்வீதியில் கட்டுப்படுத்த முடியாத வேகமாகும். முறிகண்டியில் இருந்து ஆரம்பிக்கும் நேர்ச்சாலையானது ஆனையிறவில் முடிவடைகிறது, கிட்டத்தட்ட 28 km நேரான தூரமாகும். இதனைக் கடக்க முதல் இளைப்பாறும் நிலையம் ஒன்றை முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் ஆரம்ப காலங்களில் தமிழர்கள் அமைத்துள்ளனர், விபத்துக்களைத் தவிர்க்க இது ஒரு உளவியல் செயற்பாடாகக் கருதமுடியும். ஆனால் வடக்கிற்கான நுழைவாயிலில் உள்ள 7.5km நீளமான நேர்சாலையில் அதாவது நொச்சிமோட்டைக்கும் ஓமந்தைக்கும் இடையில் ஒரு இடைத்தங்கல் இளைப்பாறல் நிலையம் ஒன்று அமைக்கப்படாமை இவ்விபத்துக்கள் நிகழ ஒரு காரணமாக இங்கு முன்மொழியலாம், அப்படி ஒன்றை அமைத்துவிடுவது இதனைக் குறைக்க ஒரு தீர்வாக இங்கு குறிப்பிடலாம். அத்துடன் 28km நேர்ச் சாலையை விடவும் 7.5 km நேர்ச்ச்லையில் நிகழும் விபத்துக்களும் மரணங்களும் அதிகம் என்பதனை நாம் உணர வேண்டும். 2. இந்த 7.5km தூரத்திற்குள் மூன்று அதிவேக மட்டுப்படுத்தல் முறைமைகளை (Overspeed Board) அமைப்பது விபத்துக்களைத் தவிர்க்க ஒரு வழியாக இருக்கும். A. நொச்சிமோட்டை வளைவுக்கும் ஓமந்தை காவல் நிலையத்திற்கு இடையிலும், B. ஓமந்தை காவல் நிலையத்திற்கும் ஓமந்தை பாடசாலைக்கு இடையிலும், C. ஓமந்தை பாடசாலைக்கும் மகிழங்குளம்-இறம்பைக்குளம் சந்திக்கு இடையிலும் (ஏற்கனவே உண்டு- இதில் விபத்துக்கள் தற்போது ஓரளவு குறைவு) அமைப்பதுவும் அதில் பொலிஸாரைக் கடமையில் ஈடுபடுத்துவதும் இப்பகுதியில் நடைபெறும் விபத்துக்களைத் தவிர்க்க மற்றொரு வழியாக அமைந்திருக்கும். 3. ஓமந்தை அம்மாச்சிக்கும், அருகில் அமைந்துள்ள மதுபான சாலைக்கும் இடையில் மஞ்சள் கடவை ஒன்றை இடுவதும், அதில் வீதிக்கரையில் வழிவியாபாரங்கள் மேற்கொள்வோரைக் கட்டுப்படுத்தலும் பிரதானமாகும், இப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இதுவரை ஆறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்த 7.5 km நீளமான நேர்ச்சாலையில் இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்க்க முறிகண்டியில் அமைக்கப்பட்டது போன்று ஒரு இடைத்தங்கல் நிலையத்தை நொச்சிமோட்டைக்கும் பறனட்டகல் சந்திக்கும் இடையில் அமைப்பதும், மூன்று வேகத்தடுப்பு பலகைகளை (Overspeed Board) பொலிசாரின் பங்கேற்புடன் கொண்டுவருவதும், இதற்கும் மேலாக இந்த 7.5km நேர் தூரத்தைக் கடக்கும்போது சாரதிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் மனநிலை அதற்கு ஏற்ப இசைவாக்கம் அடைவதும் மிக முக்கியமாகும். (குறித்த ஓய்வு நிலையங்களை அமைக்க வாய்ப்புகள் இல்லையென்றால் பயணம் செய்யும் நபர்களாவது குறித்த இடங்களுக்கு முன்னதாகத் தரித்துச் செல்வது நல்லது) வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த இடங்களைப் பார்வையிட வடக்கிற்கு வெளியிலுள்ள ஒன்றரைக் கோடிப் இலங்கையரும் ஆர்வமாக இருப்பர். அதனால் தினமும் ஓமந்தை நேர்ச்சாலையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும், ஆகவே எதிர்வரும் விபத்துக்களைத் தவிர்க்க முயன்று பார்ப்போம். வழக்கமான காரணங்களை விடுத்து விசேடமான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையுமே இங்கு என் அனுபவத்தில் இங்கு எழுதியுள்ளேன். இவற்றை எல்லாம் இணைத்தது போல வள்ளுவர் கூறுவார் “எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்” வரவிருக்கும் ஆபத்தை அறிந்து அதற்கேற்ப தன்னை காத்துக் கொள்ளும் அறிவாளிகளுக்கு, அதிர்ச்சியூட்டும் துன்பம் எதுவும் ஏற்படாது என்பது அதன்பொருள்! தொகுப்பு – சுயாந்தன் https://oruvan.com/accidents-on-the-omanthai-a9-road-are-increasing-a-study/
1 month 1 week ago
1 month 1 week ago
யாழில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு Published By: Vishnu 20 Aug, 2025 | 09:21 AM யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்று காணப்பட்டதை அடுத்து , கொடிகாம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரை பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவை கோர்வைகள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து அவற்றை மீட்டு கொடிகாம பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் அவற்றுள் 1393 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும் , அவற்றினை நீதிமன்றில் பரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர் https://www.virakesari.lk/article/222908
1 month 1 week ago
1 month 1 week ago
அனைவருக்கும் புரியும்படியாக இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது. இந்திய கார்களுக்கு மட்டுமல்ல அனைத்து சிறிய மலிவான வாகனங்களுக்கும் இது பொருந்தும். ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் வாகன உற்பத்தியாளர்கள் புதிய கார்களை உருவாக்கும்போது அவற்றின் வடிவமைப்பில் aerodynamics (காற்றியக்கவியல்) என்னென்ன தாக்கங்களை உருவாக்கும் என்பதை பல்வேறு கட்டங்களாக ஆய்வுகூடங்களில் வைத்து பரிசோதித்து பார்த்தபின் உரிய மாற்றங்களை செய்வார்கள். இந்திய தயாரிப்புகளில் இந்த பரிசோதனைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு நம்பிக்கையான சான்றுகள் உண்டா என்பது தெரியவில்லை. காற்றியக்கவியலுக்கு இசைவாக வடிவமைக்காப்படாத வாகனங்கள்வேகமாக செலுத்தப்படும்போது அதை ஒரு விமானம் ஓடுபாதையில் ஓடி வேகமெடுத்து தரையைவிட்டு உயர்ந்து கிளம்ப தயாராவதை ஒப்பிடலாம். வேகமாக செலுத்தப்படும் மேற்சொன்ன வாகனங்களின் சக்கரங்கள் காற்றியக்கவியல் காரணமாக படிப்படியாக உயர்த்தப்பட்டு தரையில் முட்டாமல் அந்தரத்தில் செல்லவேண்டி ஏற்படலாம். இதனால் வேகமாக செல்லும் இந்த வாகனங்களில் உள்ள பிரேக் இயங்காமல்போக வாகனம் விபத்துக்குள்ளாவதையும் சாரதியால் தவிர்க்கமுடியாமல் போகலாம். வாகனங்களில் உள்ள பிரேக் சிறப்பாக இயங்குவதற்கு சில்லுகள் எப்போதும் தரையை இறுக்கமாக தொட்டு நிற்கவேண்டியது அவசியம்.
1 month 1 week ago
சமூகத்தின் மனப்பான்மை ரீதியான மாற்றத்திற்க அரச ஊடகங்களின் பங்களிப்பைப் பெறத் திட்டம் தயாரிக்குக - ஜனாதிபதி 20 Aug, 2025 | 10:19 AM சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள 04 திணைக்கலன்களில் உள்ள 41 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்துவதற்கான தற்போதைய திட்டங்கள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார். தற்போது 30,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார சேவையை 10,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப மற்றும் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப சுகாதார சேவையில் நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் இங்கு ஆராயப்பட்டது. சுகாதாரத் துறையின் கட்டுமானங்கள் மற்றும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. சுகாதாரத் துறையில் தற்போது எழுந்துள்ள ஒரு பாரிய பிரச்சினையான ஆயுர்வேதத் துறையை உள்ளடக்கிய கொள்முதல் வழிகாட்டுதல்களை புதுப்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டது, அதே நேரத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்துகளை கொள்வனவு செய்யும் போது மருந்துகளின் தரத்தை உறுதி செய்வது தொடர்பான வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது. தேசிய இரத்தமாற்று சேவை போன்ற சேவைகளுக்கு தேவையான வாகனங்களை இந்த வருடத்திற்குள் கொள்வனவு செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நவீன தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப சுகாதார சேவையின் பௌதீக மற்றும் மனித வளங்களை மாற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு ஒரு தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளின் கீழ் பெறப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்தி அவற்றினால் எதிர்பார்க்கும் பயனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மாகாண சபை மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்து வைப்பது குறித்தும் இதன் போது பரிந்துரைக்கப்பட்டது. சுகாதாரத் துறையில் வழங்கப்படும் நன்கொடைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மானியங்களை வழங்கும் மற்றும் பெறும் நபர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் முன்மொழியப்பட்டது. தற்போது நாட்டின் 272 இடங்களில் செயற்படுத்தப்படும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை மேலும் விரிவுபடுத்தி அதனை 400 இடங்கள் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. வெகுஜன ஊடக அமைச்சு தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. சமூக மனப்பாங்குகளின் மாற்றத்தில் தலையிடுவது அரச ஊடகங்களின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எனவே, சமூக மனப்பாங்குகளின் மாற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் பொருத்தமான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அரச ஊடகங்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார். தபால் சேவையை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. கூரியர் சேவைகள் போன்ற சேவைகளை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி தபால் சேவையை புதிய மாதிரிக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. தேவையான திட்டங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமையே முன்பிருந்த பிரச்சினை என்றும், அந்த நிலைமையை மாற்றுவதற்காக, கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் போதுமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட நிதியாண்டில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு அந்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் முறையாகப் பயன்படுத்தி, மக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/222916
1 month 1 week ago
1 month 1 week ago
1 month 1 week ago
புடின் - செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு சாத்தியமானதாக இல்லை - கிரெம்ளின் 20 August 2025 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், யுக்ரைனின் வோலோடிமிர் செலென்ஸ்கிக்கும் இடையே விரைவில் ஒரு உச்சிமாநாடு நடைபெறுவதை கிரெம்ளின் இன்னும் சாத்தியமான விடயமாக அறிவிக்கவில்லை. எனினும், யுக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க இரண்டு தலைவர்களும் சந்திக்க வேண்டும் என்ற தனது அழைப்பை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி கடந்த வாரம் அலஸ்காவில் புடினைச் சந்தித்தார் பின்னர், ஏழு ஐரோப்பியத் தலைவர்களையும், செலென்ஸ்கியையும் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னரே, ரஷ்ய-யுக்ரைன் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்த அழுத்தம் வந்துள்ளது. இந்தநிலையில், "இந்த பிரச்சினை கடினமானது" என்று ட்ரம்ப் ஒப்புக் கொண்டார், அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விரோதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதேவேளை, யுக்ரைனுக்கான, அமெரிக்கா அனுசரணையிலான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், அத்தகைய உறுதிமொழிகள் கியேவின் இறையாண்மைக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று செலென்ஸ்கியும், ஐரோப்பியத் தலைவர்களும் ட்ரம்பை நம்ப வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/415506/putin-zelensky-meeting-unlikely-kremlin
1 month 1 week ago
1 month 1 week ago
முத்தையன்கட்டு சம்பவம்: கைதான 4 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல் 20 August 2025 முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணைக்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னதாக கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இராணுவ சிப்பாய் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/415507/muthaiyankattu-incident-4-arrested-army-soldiers-remanded
1 month 1 week ago
1 month 1 week ago
1 month 1 week ago
1 month 1 week ago
ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்க கோரிக்கை 20 August 2025 ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்பட்டாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பல வருட தாமதம் காரணமாக இனப்படுகொலை குற்றவாளிகளைப் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு (FGTO), வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA), இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், எழுதிய கூட்டு கடிதம் ஒன்றின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இதனை குறிப்பிட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தமைக்காக இலங்கையை அந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன. அத்துடன், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து 16 ஆண்டுகளில் எந்தவொரு உறுதியான பொறுப்புக்கூறலையும் வழங்குவதற்கான பேரவையின் இயலாமை குறித்து அந்த அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, 1998 ஆம் ஆம் ஆண்டு கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றத்தில், செம்மணியில் 300–400 உடல்கள் இராணுவ உத்தரவால் புதைக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார். எனினும், 1999 ஆம் ஆண்டு 15 உடல்கள் மட்டுமே தோண்டியெடுக்கப்பட்டு, விசாரணைகள் நிறுத்தப்பட்டன. தற்போது செம்மணியில் 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டியதுடன்,சுயாதீன சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்தனர். அதேநேரம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் மைய அரசியல் பிரச்சினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்தன. பிரித்தானியர்கள் 1948 ஆண்டு சுதந்திரம் வழங்கியபோது, அவர்கள் தமிழர்களிடமிருந்து எந்த ஆணையையும் கோராமல் சிங்களவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர். அவர்கள் தமிழ் தேசத்திற்கான சுயநிர்ணயக் கொள்கையை நிலைநிறுத்தத் தவறிய ஒரு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்க செயல்முறையை மேற்கொண்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த கடிதம் மூலம் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து சந்தேகிக்கப்படும் புதைகுழிகளிலும் சர்வதேச தடயவியல் விசாரணைகளை ஆதரித்தல், ஐ.நா. பாதுகாப்பு சபை மூலம் இலங்கைக்கான விசேட தீர்ப்பாயத்தை நிறுவ அழுத்தம் கொடுத்தல், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, ஐ.நா.வின் கண்காணிப்பில் சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை அந்த அமைப்புகள் முன்வைத்துள்ளன. https://hirunews.lk/tm/415520/demand-to-recognize-the-eelam-tamil-struggle-as-an-unresolved-decolonization-issue
1 month 1 week ago
1 month 1 week ago
10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தாய்லாந்து! தாய்லாந்தின் அமைச்சரவை 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான கொடிய எல்லை மோதலைத் தொடர்ந்து கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்புவதால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, வயதான மக்கள் தொகை மற்றும் சுருங்கி வரும் பணியாளர்கள் எண்ணிக்கை என்பவற்றினால் விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தது 3 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்புக்காக இலங்கையில் இருந்து 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். மேலும், முதல் கட்டத்தில் 10,000 பேர் தாய்லாந்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சர் பொங்காவின் ஜங்ருங்ருங்ராங்கிட் செய்தியாளர்களிடம் கூறினார். இது நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த மாதம் தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சினை, பல தசாப்தங்களில் மிக மோசமான சண்டையாக மாறியது. எல்லையின் இருபுறமும் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளும் இப்போது ஒரு பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. மோதல் தொடங்குவதற்கு முன்பு, 520,000 க்கும் மேற்பட்ட கம்போடியர்கள் தாய்லாந்தில் பணிபுரிந்தனர். இது நாட்டின் வெளிநாட்டுப் பணியாளர்களில் 12 சதவீதமாகும் என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தில் பணிபுரியும் சுமார் 400,000 கம்போடியர்கள் மோதலின் போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கம்போடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், தொழிலாளர்களின் முக்கிய ஆதாரமாக உருவெடுத்துள்ள இலங்கை, 2024 ஆம் ஆண்டில் சாதனை அளவில் 314,786 குடிமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. பொருளாதார நெருக்கடி பலரை வெளிநாடுகளுக்கு வேலை தேடத் தள்ளியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளே இலங்கையர்களின் முதன்மையான இடமாக அதில் உள்ளது. மேலும் பலர் தென் கொரியா மற்றும் ஜப்பானிலும் வேலை புரிகின்றனர். தெற்காசிய தீவு நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மிகப்பெரிய ஆதாரமாக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443783
Checked
Mon, 09/29/2025 - 21:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed