1 month 1 week ago
உங்களுடைய டிரம்ப் தமிழருக்கு என்ன நன்மை விளைவிப்பார் என்று வாய்பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? இவ்வளவு விரிவாக டிரம்பிற்கு வக்காளத்து வாங்கும் நீங்கள் அவரது தமிழர் சார்பான நடவடிக்ஐகளையும் விரிவாச்சொல்லுங்கோவன்😂
1 month 1 week ago
1 month 1 week ago
1 month 1 week ago
இதன் அர்த்தம் உக்ரைன் தனியே இல்லை என்பதை சொல்வதாகும்.
1 month 1 week ago
விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபன் அவர்களுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்துமணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் நான்கரை மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதுவரை விசாரணைகள் முடிவடையவில்லை.
1 month 1 week ago
பட மூலாதாரம், MANSI THAPLIYAL படக்குறிப்பு, இந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன. கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்திகள் 17 ஆகஸ்ட் 2025, 03:35 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவை உலுக்கும் கோடைகாலத்தில், மும்பையைச் சேர்ந்த முன்னணி நீரிழிவு நிபுணர் ராகுல் பாக்ஸியிடம் நோயாளிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி, "மாம்பழம் சாப்பிடலாமா?" என்பது தான். "மாம்பழம் அதன் இனிப்பு சுவையாலும், பலவித வகைகளாலும் இந்தியாவின் கோடைகாலத்தில் முக்கியமான பழமாக இருக்கிறது. மக்கள் ஏன் அதை விரும்பிச் சாப்பிட விரும்புகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும் ," என்கிறார் ராகுல் பாக்ஸி. ஆனால், இந்த எளிய கேள்வி பல தவறான எண்ணங்களை உள்ளடக்கியது. சிலர் மாம்பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். மறுபுறம், சிலர் "அதிகமாக மாம்பழம் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகிவிடும்" என்று நம்புகிறார்கள். ஆனால், இந்த இரண்டு எண்ணங்களுக்கு இடையிலும் வேறொரு உண்மை உள்ளது. அதேபோல் இந்தக் குழப்பமும் கோடைகாலத்துடன் முடிவதில்லை. "மாம்பழப் பருவம் முடிந்த பிறகு, பல நோயாளிகள் மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். சில சமயங்களில், இதற்குக் காரணம் மாம்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டதுதான்," என்கிறார் மருத்துவர் ராகுல் பாக்ஸி. இந்தத் தொடர்ச்சியான குழப்பம், நீரிழிவு நோயாளிகளை "பழங்களின் ராஜா" என்று அழைக்கப்படும் மாம்பழத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வைத்துள்ளது. ஆனால், புதிய ஆராய்ச்சிகள் மாம்பழம் தவறான பழமல்ல என்று கூறுகின்றன. இந்தியாவில் நடந்த இரண்டு புதிய மருத்துவ ஆய்வுகள், பழைய உணவு நம்பிக்கைகளை மாற்றியுள்ளன. ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக, குறைவாகவும் கட்டுப்பாட்டுடனும் மாம்பழம் சாப்பிடுவது, டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவையும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று கூறுகின்றன. கணையம் இன்சுலினை குறைவாகவோ அல்லது உற்பத்தி செய்யாமலோ இருக்கும்போது டைப்-1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது, அதே நேரத்தில் டைப்-2 நீரிழிவு நோயில், உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் எதிர்க்கிறது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) கூற்றின்படி, உலகளவில் 90% க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு டைப்- 2 நீரிழிவு நோய் உள்ளது. இது உலகில் நோய்களால் ஏற்படும் பாதிப்புகளில் எட்டாவது முக்கிய காரணமாக உள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் இது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதிக உடல் எடை, வயது, இனம் மற்றும் குடும்பத்தில் நீரிழிவு வரலாறு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுவதன்படி, இந்தியாவில் சுமார் 7.7 கோடி பேருக்கு டைப்-2 நீரிழிவு நோய் உள்ளது. கிட்டத்தட்ட 2.5 கோடி பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். பட மூலாதாரம், HINDUSTAN TIMES VIA GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய நகரங்களில் மாம்பழத் திருவிழாக்கள் தொடங்கப்பட்டு, அதன் கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டாடுகின்றனர். ஆனால் இத்தகு சவால்களுக்கு மத்தியிலும், புதிய ஆய்வுகள் மாம்பழ பிரியர்களுக்கு ஆச்சரியமான நம்பிக்கையை அளிக்கின்றன. கிளினிகல் நியூட்ரிஷன் என்ற ஐரோப்பிய இதழில் இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று விரைவில் வெளியாகிறது. 95 பேரை உள்ளடக்கிய அந்த ஆய்வில் இந்தியாவின் பிரபலமான மாம்பழ வகைகளான சஃபேடா, டாஷேரி, மற்றும் லாங்ரா ஆகியவை வெள்ளை ரொட்டியை விட குறைந்த அல்லது அதனை ஒத்த ரத்த சர்க்கரை உயர்வை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது. (ரத்த சர்க்கரை உயர்வு என்பது, ஒரு உணவைச் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு வேகமாக, எந்த அளவில் உயர்கிறது என்பதைக் குறிக்கிறது.) டைப்- 2 நீரிழிவு நோயாளிகளையும், நீரிழிவு இல்லாதவர்களையும் மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்த போது, நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிட்ட பிறகு, உணவுக்குப் பிந்தைய ரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இந்தக் குறைவான ஏற்ற இறக்கங்கள், நீண்ட காலத்திற்கு உடலுக்கு நன்மை தரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "மாம்பழம் அனைவராலும் விரும்பப்படும் பழம், ஆனால் இது ரத்த சர்க்கரையையும் உடல் எடையையும் அதிகரிக்கும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்," என்கிறார் இரண்டு ஆய்வுகளிலும் பிரதானமாக அங்கம் வகித்த மருத்துவர் சுகந்தா கெஹர். "பரிந்துரைக்கப்பட்ட உணவு முறைகளுக்குள், மாம்பழம் சாப்பிடுவது ரத்த சர்க்கரைக்கு தீங்கு விளைவிப்பதில்லை, மாறாக நன்மையைத் தரலாம் என்று இந்த ஆய்வுகள் காட்டுகின்றன," என்று அவர் கூறுகிறார். டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் சி-டிஓசி மருத்துவமனையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட எட்டு வார ஆய்வு, இந்தக் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு, நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் என்ற இதழில் வெளியாகியுள்ளது. டைப்- 2 நீரிழிவு உள்ள 35 பேர் , தங்கள் காலை உணவில் ரொட்டிக்குப் பதிலாக 250 கிராம் மாம்பழம் சாப்பிட்டனர். இதன் விளைவாக, சாப்பிடுவதற்கு முன்பான அவர்களின் ரத்த சர்க்கரை, HbA1c (சராசரி இரத்த சர்க்கரை அளவைக் காட்டும் பரிசோதனை), இன்சுலின் எதிர்ப்பு, உடல் எடை, இடுப்பு அளவு, மற்றும் HDL (நல்ல) கொழுப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டனர். இவை நீரிழிவு கட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. "காலை உணவில் ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக சிறிய அளவு மாம்பழம் சாப்பிடுவதன் நன்மைகளை முதல் முறையாக இரண்டு விரிவான ஆய்வுகளில் நிரூபித்தோம். மாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற தவறான கருத்துகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்தோம்," என்கிறார் ஆய்வின் மூத்த ஆசிரியரும் தலைவருமான பேராசிரியர் அனூப் மிஸ்ரா. "ஆனால், மிதமாக சாப்பிடுவதும், மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதும் முக்கியம். மாறாக, எவ்வளவு வேண்டுமானாலும் மாம்பழம் சாப்பிடலாம் என்று அர்த்தம் அல்ல" என்று அவர் எச்சரிக்கிறார். பட மூலாதாரம், BLOOMBERG VIA GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் 77 மில்லியன் நபர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாம்பழத்தை மிதமாக சாப்பிடுவது என்றால் என்ன என்று பேராசிரியர் அனூப் மிஸ்ராவிடம் கேட்டேன். "ஒரு நாளைக்கு உங்கள் கலோரி எல்லை 1,600 ஆக இருந்தால், மாம்பழத்தின் கலோரிகள் அதற்குள் அடங்க வேண்டும், கூடுதலாக இருக்கக் கூடாது. 250 கிராம் மாம்பழம், அதாவது ஒரு சிறிய பழம் சுமார் 180 கலோரிகளைக் கொண்டது. ஆய்வில் கூறியபடி, அதேபோன்ற முடிவுகளைப் பெற, ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக மாம்பழத்தை உண்ண வேண்டும்," என்று அவர் என்னிடம் விளக்கினார். மருத்துவர் பாக்ஸியும் தனது நோயாளிகளுக்கும் இதே போன்ற அறிவுரையைச் சொல்வதாகக் கூறுகிறார். "ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால், என் நோயாளிகளை குறைந்த அளவு மாம்பழம் (அதாவது 15 கிராம் கார்போஹைட்ரேட் தரும் அளவு) , நாளொன்றுக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ பாதி பழத்தை சாப்பிட ஊக்குவிக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். அளவைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். மாம்பழத்தை இனிப்பாக அல்லாமல், உணவுக்கு இடையில் சாப்பிட வேண்டும். புரதம் அல்லது நார்ச்சத்து மிக்க உணவுகளுடன், அதனை சேர்த்து சாப்பிடுங்கள். மாம்பழத்தை ரொட்டி, சாறு அல்லது மில்க் ஷேக் போன்ற சர்க்கரை உணவுகளுடன் கலந்து சாப்பிடுவதைத் தவிருங்கள் என்று மருத்துவர் பாக்ஸி தனது நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார். மாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இந்தியர்களுடைய வாழ்விலும் பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. இது கலாசார, சமூக, மற்றும் ராஜ தந்திர ரீதியில் முக்கியத்துவம் கொண்ட ஒரு பழம். "மாம்பழ ராஜ தந்திரம்" என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் பிரபலமான சொல். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாம்பழப் பெட்டிகள் அரசியல் ஒப்பந்தங்களை எளிதாக்கலாம், கூட்டணிகளை வலுப்படுத்தலாம், அல்லது பதற்றமான பேச்சுவார்த்தைகளை சுமூகமாக்கலாம். பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவின் போது, முன்னாள் இந்தியத் தூதர் ரோனன் சென், அப்போதைய அமெரிக்க வேளாண் செயலாளர் மைக் ஜோஹன்ஸுக்கு இந்திய மாம்பழங்களின் கூடையை வழங்குகிறார். இந்திய நகரங்களில் மாம்பழத் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு , இந்தப் பழத்தின் கலாசார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டாடப்படுகிறது. இந்தப் பழம் விரும்பப்படும் உணவாகவும், சக்தி வாய்ந்த சமூக மதிப்பைக் காட்டுவதாகவும் உள்ளது. "பெரும்பாலான இந்தியர்களுக்கு மாம்பழத்தின் மீது தனிப்பட்ட விருப்பம் உள்ளது. தங்கள் ஊரின் மாம்பழம் தான் சிறந்தது என்று பலர் வாதிடுவார்கள்" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் சமையல் நிபுணருமான புஷ்பேஷ் பந்த். "நல்ல மாம்பழங்கள் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல. அவை நகைகளைப் போன்ற அழகும் மதிப்பும் கொண்டவை. "சிறந்த மாம்பழங்கள், அதிக பணம் கொடுக்கத் தயாராக இருப்பவர்களிடம் சென்று சேர்கின்றன" என்று Mangifera indica: A Biography of the Mango என்ற புத்தகத்தில், இந்தப் பழத்தையும் அதன் ரசிகர்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார் சோபன் ஜோஷி. இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் மாம்பழங்கள் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன என்று ஜோஷி குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு வகைகளான லாங்ரா, டாஷேரி, சௌசா, மற்றும் ஹிம்சாகர் ஆகியவை மிகவும் இனிப்பாக உள்ளன, அதே நேரத்தில் தெற்கு வகைகள் மென்மையான இனிப்பு-புளிப்பு சுவையைத் தருகின்றன. மேற்கு இந்தியாவின் அல்போன்சா மாம்பழம், சர்க்கரை மற்றும் அமிலத்தின் தனித்துவமான சமநிலையால் தனித்துவமான சுவையைப் பெறுகிறது. இந்தியர்களின் வாழ்க்கையில் மாம்பழம் மிகவும் முக்கியமானது. ஒரு ஆண்டின் தொடக்கமே பல இடங்களில் மாம்பழம் பூக்கும் காலத்துடன் ஆரம்பிக்கிறது. கவிஞர் காலிப் மாம்பழத்தை "மூடிய தேன் குவளை" என்று அழைத்தார். அதன் வசீகரத்தைக் கொண்டாடி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. மாம்பழம் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது, மறு பக்கம் அடையாளமாக விளங்குகிறது. எப்போதும் மக்களை மகிழ்விக்கும் பழம், தற்போது ஆச்சர்யமளிக்கும் விதமாக அறிவியலின் ஆதரவையும் பெற்றுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70x9x80pd2o
1 month 1 week ago
நாளை அமெரிக்காவில் டிரம்புக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் யேர்மன் ஜனாதிபதி Merz ம் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் வான் டெர் லேயனும் பங்கேற்பார்கள்.
1 month 1 week ago
Published By: DIGITAL DESK 3 17 AUG, 2025 | 02:55 PM முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணனை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சென்றார். விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபன் அவர்களுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்துமணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் நான்கரை மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதுவரை விசாரணைகள் முடிவடையவில்லை. https://www.virakesari.lk/article/222743
1 month 1 week ago
எனக்கு ஒன்று, @Paanch அண்ணைக்கு ஒன்று என, இரண்டு கேக் கொண்டு வாருங்கள். 😂
1 month 1 week ago
1 month 1 week ago
சுமந்திரனின் கர்த்தால்? - நிலாந்தன் சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். அவரைச் சுற்றியிருக்கும் யாருமே அவருக்கு கடந்த 15ஆம் திகதி மடுப் பெருநாள் என்பதைச் சொல்லவில்லையா? இது நல்லூர் திருவிழாக் காலம் என்பதைச் சொல்லவில்லையா? இந்த இரண்டு திருவிழாக்களுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் அவர்களை ஏற்றி இறக்க பேருந்துகள் ஓடும். குறிப்பாக மடுத் திருவிழாவுக்கு இந்துக்களும் போவார்கள். அது மத பேதமின்றி இன பேதமின்றி யாத்திரிகர்கள் வந்துகூடும் ஓராலயம். பெருநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்னரே யாத்திரிகர்கள் வரத்தொடங்கி விடுவார்கள். எனவே தொடர்ச்சியாக சில நாட்களுக்கு வடக்கிலிருந்து பேருந்துகள் ஓடும். இந்த விடயங்களை ஏன் சுமந்திரன் கவனத்தில் எடுக்கவில்லை? அவரைச் சுற்றியிருக்கும் யாருமே இதை அவருக்குச் செல்லவில்லையா? அல்லது தனது மக்களின் பண்பாட்டு பெருவிழாக்களைக் குறித்துச் சிந்திக்க முடியாத அளவுக்கு அவர் தன்னுடைய மக்களின் பண்பாட்டு இதயத்திலிருந்து புறத்தியாக நிற்கின்றாரா ? இது போன்ற பண்பாட்டு விடயங்களைச் சுட்டிக்காட்டுவதற்கு அவருக்கு அருகில் யாரும் இல்லையா? அல்லது அவர் யாரிடம் கேட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்? அல்லது அவர் முடிவெடுக்கும்பொழுது யாரிடமும் எதையும் கேட்பதில்லையா? அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி அல்ல. அவருடைய வார்த்தைகளில் சொன்னால் மக்களின் ஆணை அவருக்கு இல்லை. கட்சிக்குள்ளும் அவர் பதில் செயலாளர்தான். பதில்தான். ஆனால் அவர்தான் கட்சியின் முகமாக,கட்சியின் எல்லாமமாகத் தோன்றுகிறார். அண்மையில் அவர் வெளி நாடுகளுக்குப் போயிருந்தார். அங்கே அவர் ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாக அவருடைய அரசியல் எதிரிகள் கூறுகிறார்கள். வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு அவர் அவ்வாறு மேற்கத்திய ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அது தனிப்பட்ட பயணம் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆனால் அவர் ராஜதந்திரிகளைச் சந்தித்ததாகப் புலம்பெயர்ந்த தமிழர் தரப்புகள் கூறுகின்றன. அவை கூறுவது உண்மையாக இருந்தால்,அவர் கட்சியின் அனுமதியோடுதான் அச்சந்திப்புகளில் ஈடுபட்டாரா? அங்கே என்ன கதைக்கவேண்டும் என்பதனை கட்சி ஏற்கனவே கூடி முடிவெடுத்திருந்ததா? அவ்வாறான சந்திப்புகளில் என்ன கதைக்கப்பட்டது என்பதனை அவர் கட்சிக்குத் தெரிவித்தவரா? அதை அவர் மக்களுக்குக் கூறத் தேவையில்லையா? நடப்பு நிலைமைகளைப் பார்த்தால், அவர் யாரோடும் எதையும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. கடந்த 20 மாதங்களாக, அதாவது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது கட்சி ஆட்களாலேயே நிராகரிக்கப்பட்ட பின், அவருடைய நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால், ஏறக்குறைய மந்திரித்துவிட்ட சேவலைப் போல அவர் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். அடிக்கடி காணொளிகளில் வருகிறார். கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்துவது;கட்சியின் முகமாகத் தொடர்ந்தும் தோன்றுவது; கட்சியின் தீர்மானங்களைத் தானே எடுப்பது; மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது; எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக கட்சி தொடர்பான ராஜதந்திர நகர்வுகளை தானே முன்னெடுப்பது….இதைத்தான் கடந்த 20 மாதங்களாக அவர் செய்து வருகிறார். கட்சிக்குள் யாரும் அதை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. அவர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த விடயம் சரியானது. அதை மனோ கணேசனும் முஸ்லீம் தலைவர்களும் ஆதரித்துள்ளார்கள். . படையின் முகாம்கள் மக்கள் குடியிருப்புகள் மத்தியில் இருப்பதினால்தான் கடந்த வாரம் முல்லைதீவில் இடம்பெற்றது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக சுமந்திரன் கூறுகிறார். தமிழர் தாயகத்தில் படையினரை நீக்கக் கோரி தமிழ் மக்கள் போராட வேண்டும். அதில் சந்தேகம் இல்லை. அந்த இடத்தில் சுமந்திரன் சரி. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கடந்த 16ஆண்டுகளாக படைமய நீக்கம் முழுமையாக நிகழவில்லை. இலங்கையின் மொத்தப் படைக் கட்டமைப்பில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதி தமிழ் பகுதிகளில்தான் நிலை கொண்டிருக்கிறது என்று உத்தியோகப்பற்றற்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே படைமய நீக்கம் அவசியம். அதை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட வேண்டியதும் அவசியம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் பிரச்சினை எங்கே வருகிறது என்றால், அதற்காக கடையடைப்பு ஒரு பொருத்தமான போராட்டமா என்பதுதான். சுமந்திரனை எதிர்க்கும் பலரும் கடையடைப்பையும் எதிர்க்கிறார்கள். அது தவறு. அரசியலில் சில சமயம் பிழையான ஆட்கள் சரியான செயல்களைச் செய்வதுண்டு. கடையடைப்பு என்ற போராட்ட வடிவம் குறித்து கேள்விகளை எழுப்பலாம். வேறு போராட்ட வடிவங்களைக் குறித்துச் சிந்திக்கலாம். அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்திலும் அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் குறிப்பாக, ஐநாவின் கவனத்தை ஈர்க்கும்விதத்திலும் அதைவிடக் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்கள் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கும் “கோ குரூப்” நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கத்தக்க போராட்ட வடிவங்களைச் சிந்திக்கலாம். அரசாங்கத்துக்கு நோகத்தக்க விதத்தில் போராடுவது என்று சொன்னால் சம்பவம் நடந்த மாவட்டத்தில் ஒரு மக்கள் பேரெழுச்சியை ஒழுங்குபடுத்தலாம். அதை ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தலாம். இது முதலாவது. இரண்டாவதாக,அரசு அலுவலகங்களை முடக்கக்கூடிய விதத்தில் அரசு அலுவலகங்களைச் சுற்றி வளைக்கலாம். மூன்றாவதாக,ஐநாவில் முடிவெடுக்கும் நாடுகளின் தூதரகங்களின் முன்னாள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்யலாம். அந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் படைப்புத்திறன் மிக்கவைகளாக இருக்கவேண்டும். மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வந்த பொழுது நிகழ்த்தப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தைப் போல. எனவே இதுபோன்ற பல வழிகளிலும் அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்தில் போராடலாம். கடையடைப்பு அழைப்பவருக்கு இலகுவான ஒரு போராட்டம். மாறாக,கடைகளை மூடும் வியாபாரிகளுக்கும் பொதுப் போக்குவரத்தை நிறுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் அன்றாடம் காய்சிகளுக்கும் அன்றாடம் வேலை செய்பவர்களுக்கும் அதனால் இழப்பு ஏற்படும். அந்த இழப்பைக்கூட நாட்டுக்காக ஒருநாள் செய்யும் தியாகம் என்று நியாயப்படுத்த முடியும். ஆனால் கடையடைப்போ அல்லது பொது முடக்கமோ எதுவாக இருந்தாலும் அது அரசாங்கத்துக்கு நோக வேண்டும். அரசாங்கத்துக்கு நோகக் கூடிய விதத்தில் அழுத்தமாகப் போராட வேண்டும். அப்படிப்பார்த்தால் கடையடைப்பு அரசு அலுவலகங்களுக்கு நோகாது. ஏனென்றால் கடையை அடைத்தாலும் பொதுப் போக்குவரத்தை முடக்கினாலும் அரச அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும். ஏன் பாடசாலைகளே இயங்கும். ஆசிரியர்கள் வருவார்கள்; அதிபர்கள் வருவார்கள்; மாணவர்கள் மட்டும் வர மாட்டார்கள். நாளை, இரண்டாம் தவணை விடுமுறை முடிந்து பாடசாலைகள் மீண்டும் தொடங்குகின்றன. எனவே கடையடைப்பைவிட அழுத்தமான, கூர்மையான படைப்புத்திறன்மிக்க அறவழிப் போராட்டங்களை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதற்குக் கூடிக்கதைக்க வேண்டும். அதைவிட முக்கியமாக தமது சொந்த மக்களை நேசிக்க வேண்டும். தனது மக்களை விசுவாசிக்கும் எந்த ஒரு செயற்பாட்டாளருக்கும் போராட்டத்தின் வழி தானாகத் திறக்கும். அதிலும் குறிப்பாக உலகில் வெற்றி பெற்ற பெரும்பாலான எல்லா அறவழிப் போராட்டங்களும் சட்ட மறுப்புப் போராட்டங்கள்தான். சட்டத்தரணிகள் தங்களுடைய சட்டரீதியிலான சௌகரிய வலையத்துக்கள் நின்றுகொண்டு போராட முடியாது.சட்ட மறுப்பாகப் போராட சுமந்திரன் தயாரா? ஆனால் சுமந்திரனின் போராட்டத்தை விமர்சிப்பவர்கள் அவ்வாறு பார்க்கவில்லை. “அவர் மக்களுக்காகப் போராடவில்லை. அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காகப் போராடவில்லை. அல்லது படைமய நீக்கத்துக்காகப் போராடவில்லை. மாறாக கட்சிக்குள் தன் முதன்மையைப் பலப்படுத்தவும் தமிழ்த்தேசிய அரசியலில் தன்னுடைய இன்றியமையாமையை நிருபிப்பதற்கும் அவர் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்துகிறார்” என்றுதான் அவர்கள் விமர்சிக்கின்றார்கள். அவ்வாறு விமர்சிக்கத்தக்க விதத்தில்தான் அவருடைய நடவடிக்கைகளும் காணப்படுகின்றன.கடந்த வாரம் ஐநாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிவில் சமூகங்களோடு இணைந்து அந்தக் கடிதத்தைத் தயாரித்தது.அந்தக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போடவில்லை. அந்த முடிவைப் பெரும்பாலும் சுமந்திரனே எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது. அவர் சொன்னதைச் சிவஞானம் திரும்பிச் சொல்கிறார் என்றுதான் எல்லாரும் நம்புகிறார்கள். எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கு சுமந்திரன் தயாராக இருக்கவில்லை. அந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணைந்து முடிவெடுத்திருந்திருந்தால் இன்றைக்கு கடையடைப்பை அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு போராட்டத்தை எல்லாருமாகச் சேர்ந்து தரமாகச் செய்திருக்கலாம். அதற்குத் தமிழரசுக் கட்சியின் ஈகோ இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு சுமந்திரன் ஒவ்வொரு நாளும் காணொளியில் வந்து விளக்கம் கொடுக்கிறார்.அவர் தரும் விளக்கங்களில் முக்கியமானது, நாங்களே பெரிய கட்சி நாங்களே முதன்மைக் கட்சி எனவே நீங்கள் கடிதத்தை எழுதிவிட்டு எங்களை அதில் கையெழுத்துப் போடுமாறு கேட்க முடியாது என்ற பொருள்பட அமைந்துள்ள விளக்கந்தான். அதில் ஒரு பகுதி உண்மை. அவர்கள்தான் பெரிய கட்சி; அவர்கள்தான் முதன்மைக் கட்சி. அதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், கடந்த 16 ஆண்டுகளாக அவர்களே முதன்மைக் கட்சியாகவும் முடிவெடுக்கும் கட்சியாகவும் இருந்து தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? கடந்த 16 ஆண்டுகாலத் தமிழரசியலில் ஏற்பட்ட தேக்கங்கள்,தோல்விகள், பின்னடைவுகள் போன்ற எல்லாவற்றிற்கும் அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமல்ல அனைத்துலக அளவில் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்களின் விவகாரம் மேலும் நீர்த்துப்போகக்கூடிய ஆபத்து தெரிகிறது. அதற்கும் தமிழரசுக் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். 2015இலிருந்து ஐநாவின் நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தை நோக்கி தமிழரசியலைச் செலுத்தியது முக்கியமாக சுமந்திரனும் சம்மந்திருந்தான்.அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று பின்னர் சுமந்திரன் சொன்னார். அது அவர்களுடைய தனிப்பட்ட தோல்வி அல்ல. இனத்தின் தோல்வி.இப்பொழுதும் ஐநாவை கையாளும் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் அணுகுமுறை வெளிப்படையாயானதாக, ஐக்கியமானதாக இல்லை.இதில் வரக்கூடிய தோல்விக்கு யார் பொறுப்புக் கூறுவது? கட்சி வேறுபாடுகளைத் தூக்கி ஓரத்தில் வைத்து விட்டு இனமாகத் திரள வேண்டிய விடயங்களில் அதாவது ஐநாவைக் கையாள்வது,படை நீக்கத்துக்காகப் போராடுவது போன்ற விடயங்களில் இனமாகத் திரள முடியாததற்கு யார் பொறுப்பு ?சுமந்திரன் பொறுப்பில்லையா? https://www.nillanthan.com/7654/#google_vignette
1 month 1 week ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
1 month 1 week ago
இவர்... வருகின்றாரா அல்லது போகின்றாரா. 😂
1 month 1 week ago
வாடகை வீடு தேடும் மகிந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வரும் பின்னணியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறித்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் ஓய்வு காலத்தைஉத்தியோகபூர்வ இல்லத்திற்கு கழிக்க உரிமை இல்லை. இந்நிலையில், அவர் தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது. மெதமுலானையில் உள்ள தனது வீட்டிற்கு அவர் செல்ல விரும்பினாலும், கொழும்புக்கு கணிசமான தூரம் பயணிப்பதில் உள்ள சிரமத்தையும், அவரது மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமத்தையும் கருத்தில் கொண்டு அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர் தங்குவதற்கு பொருத்தமான வீடுகள் குறித்து பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவை இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=337253
1 month 1 week ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் – பயணிகள் பெரும் அவதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும், செக்-இன் கவுண்டர்கள் மற்றும் குடியேற்ற மையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தங்கள் விமானங்களை தவறவிட்டதாக பல பயணிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் அதிக கொள்ளளவுக்கு அதிகமாக இயங்கியதாகவும், ஒரே நேரத்தில் பல விமானங்கள் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இதனால் புறப்படும் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். குழப்பமான சூழ்நிலை குறித்து பலர் விரக்தியை வெளிப்படுத்தினர். எதிர்காலத்தில் இதுபோன்ற இடையூறுகளைத் தவிர்க்க பணியாளர்கள் மற்றும் திட்டமிடல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி பலர் சமூக ஊடகங்களில் வலியுறுத்தினர். https://akkinikkunchu.com/?p=337247
1 month 1 week ago
இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பது தமிழ், முஸ்லிம் இன விரிசல்களை ஏற்படுத்தும் - அருட்தந்தை மா.சத்திவேல் இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப் படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொடூர இனப்படுகொலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கும் அதன் இனப்படுகொலையை ஆதரிக்கும் நேச நாடுகளுக்கு எதிராகவும் நேற்றுமுன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு பொரல்லை மலையன சுற்றுவட்டாரத்தில் ஆரம்பித்து கெம்பல் மைதானத்தில் நடந்த எதிர்ப்பு போராட்டம் எதிர்ப்பு கோசத்தோடு முடிவுக்கு வந்தது. இப்போராட்டம் இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து தொடர் இன அழிப்பிற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை முகம் சுழிக்க வைத்ததோடு ஆர்ப்பாட்டத்தில் இருந்து வெளியேறும் மனநிலையை உருவாக்கியமை வேதனைகுரியதே. இலங்கையின் இனப்படுகொலைக்கு முழு மூச்சாக ஆதரவு தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களின் விடுதலை அமைப்பை பாசிச வாத அமைப்பு என்றும், தேசிய தலைவரை பாசிச வாதி எனவும் மேடை கட்டி பேசியவர்கள் கூட்ட முன் வரிசையை அலங்கரித்தோடு மேடை ஏறி வீர வசனம் பேசியமை மட்டுமல்ல நிகழ்வு ஆரம்பம் இலங்கை தேசியக்கொடி திரையில் அசைந்தாட தேசிய கீதத்தோடு ஆரம்பமானது. இலங்கையில் இன அழிப்பு,இன சுத்திகரிப்பு, இனப்படுகொலை என்பன தேசிய கொடியோடும் தேசிய கீதத்தோடும் நடத்தப்பட்டதோடு அதன் வெற்றியின் அடையாளமாகவே சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதம் அதனை தம் அடையாளமாக கொண்டுள்ளது. பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு முழுமூச்சாக ஆதரவு தெரிவித்து படைக்கு தேவையானவர்களை கிராம புறத்தில் இருந்து திரட்டி கொடுத்து முள்ளிவாய்க்கால் இனபடுகொலையை பாதையில் பால் சோறு சமைத்து தேசிய வெற்றியாக கொண்டாட வைத்து மகிழ்ந்தவர்கள் பாலஸ்தீன மக்கள் முகம் கொடுக்கும் இனப்படுகொலைக்கு எதிரானவர்களாக இருப்பதாக காண்பிப்பது முஸ்லிம்களை தமது அரசியலுக்குள் இழுப்பதற்காகவே அன்றி வேறில்லை. போராட்ட ஒழுங்கமைப்பினர் போராட்ட பேரணியில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையினை தமது பதாதைகளிலோ கோசங்களிலோ வெளிவராத வகையில் திட்டமிட்டிருந்தனர். இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளாத மனநிலை மட்டுமல்ல சிங்கள பௌத்தத்தையும் அதன் காவலர்களையும் இனப்படுகொலையாளர்களையும் பகைத்துக் கொள்ள விரும்பாத அரசியல் என்பதே உண்மை. அது மட்டும் அல்ல தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தையும் அரசியல் அபிலாசைகளையும் மறுக்கும் செயலாகவுமே நாம் கருதுகின்றோம். சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு 1948 ல் கிடைத்த சுதந்திரம் இனப்படுகொலைக்கும், இன சுத்திகரிப்பிற்கும், இன அழிப்பிற்குமான சுதந்திரம் என்பது எமது அனுபவம். இன்று பாலஸ்தீனர்கள் சந்திக்கும் இனப்படுகொலைக்கு முன்னர் இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது என்பதை முஸ்லிம் உறவுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலை வழி நடத்தி இனப்படுகொலை புரியும் வல்லரசுகளை அன்று தமது அரசியலுக்காக இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதிகளை வழி நடத்தி பெரும் இனப்படுகொலையோடு ஆயுத யுத்தத்தை மௌனிக்கச் செய்து தமிழர்களை அரசியல் ரீதியில் அங்கவீனமாக்கினர். தொடர்ந்து தமிழர்களின் அரசியலை அழிக்க பெரு முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களை பொறுத்தவரையில் பாலஸ்தீனர்களின் சுதந்திர தேசம் தமிழர்களின் போராட்டத்திற்கான அங்கீகாரமாகும். அதேபோன்று தமிழர்களின் சுதந்திர தாயகம் பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகத்திற்கான வெற்றியாகும். இத்தகைய அரசியலை மக்கள் மயப்படுத்தி போராட்டங்களை முன்னெடுத்தல் தமிழ்- முஸ்லிம் உறவை பலப்படுத்தும். மக்கள் விடுதலை போராட்டத்தில் மக்கள் அரசியலாகி மக்களைபெரும் சக்திகளாக கொண்டுவர வேண்டும். அதனை விடுத்து இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என்பதையும் மிக கவலையோடு கூறுகின்றோம். தற்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு தமிழ் முஸ்லீம் மக்கள் தமக்கு முழுமையான ஆதரவளித்துள்ளனர் என கூறுவது தமிழ் முஸ்லிம் இன உறவுகளை பிரிக்கும் இன அழிப்பை தொடரும் கூற்றாகவே கொள்ளல் வேண்டும். புதிய அரசியல் உறவை பலப்படுத்தி இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவது காலத்தின் அரசியல் தேவையுமாகும் என வலியுறுத்துகின்றோம். https://akkinikkunchu.com/?p=337232
1 month 1 week ago
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1426776825241648 👈 உடற்பயிற்சி செய்யும்... ரசனி.
1 month 1 week ago
ட்ரம்பை சந்திக்கவுள்ள ஷெலன்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஷெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பானது வொஷிங்டன் டிசியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் ஜனாதிபதியும் தமது டெலிகிராம் கணக்கில் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இடம்போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை டொனால் ட்ரம்பின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இலங்கை நேரப்படி இன்று இடம்பெற்றிருந்த நிலையில், அது எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது. இன்றைய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்பட்டிருக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி ஒரு சமாதான ஒப்பந்தம்தான் என்றும் அவர் கூறியுள்ளார். எல்லாம் சரியாக நடந்தால், ஜனாதிபதி புட்டினுடன் ஒரு சந்திப்பை நாங்கள் திட்டமிடுவோம். அதன்மூலம் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=337156
1 month 1 week ago
ஹர்த்தாலுக்கான அழைப்பின் மூலம் கேலிக்கூத்தாடும் இலங்கை தமிழரசு கட்சி! ஹர்த்தாலுக்கு ஆதரவை திரட்டுமாறு தமிழரசுக் கட்சியின் உயர்மட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் குடைச்சலை கொடுத்து வருவதாக அறியமுடிகிறது. அதாவது ஹர்த்தாலுக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் இவ்வாறு ஆதரவை திரட்டுமாறு உயர்மட்டமானது கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில் பதில் தலைவரானத சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல கௌரவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் அன்புடையீர். எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதிய கடையடைப்பு (ஹர்த்தால்) தொடர்பானது எமது கட்சியினால் மேற்சொன்ன நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே. இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளுராட்சி தவிசாளர்களும் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சகலரது ஆதரவை கோருவது அவசியமாகும். அத்தோடு அனைத்து வணிகர் சங்கங்களையும் சந்தித்து ஆதரவை கோருவதோடு உறுப்பினர்கள் நேரடியாக சந்தைக்கும் கடைக்கும் சென்று இதை செய்வது நல்லது. கட்சியின் நிர்மானத்தை வலுவாக நிறைவேற்ற உங்கள் முழுமையான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடையடைப்புகளை மேற்கொள்ளும்போது வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் அழைத்து கலந்துரையாடியே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழரசுக் கட்சியானது தன்னிச்சையாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துவிட்டு, தங்களது அழைப்பானது நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இவ்வாறு ஊடக சந்திப்புகளையும், நேரடி சந்திப்புகளையும் நடாத்துமாறு உறுப்பினர்களை கட்டாயப்படுத்துவது கேலிக்கூத்தாக மாறியுள்ளது. https://akkinikkunchu.com/?p=337186
1 month 1 week ago
போர் நிறுத்தம் வேண்டுமா?; எனக்கு டொனெட்ஸ்க் வேண்டும்!; டிரம்பிடம் புடின் வைத்த நிபந்தனை போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சில நிலப்பரப்புகளை விட்டுத் தர வேண்டும் என்று டிரம்பிடம் புடின் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலையான அமைதி ஒப்பந்தம் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே நடைபெற்ற 3 மணி நேர பேச்சுவார்த்தை நிலையான முடிவு எதுவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து கருத்து தெரிவித்த டிரம்ப், ரஷ்யா மிகப்பெரிய சக்தி, உக்ரைன் ஆனால் அப்படி இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தனது “ட்ரூத் சோஷியல்” சமூக வலைதள பக்கத்தில், பெரும்பாலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நிலைப்பது இல்லை, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர போர் நிறுத்த ஒப்பந்தத்தை விட, நிலையான அமைதி ஒப்பந்தமே சிறந்தது என அனைத்து தரப்பினராலும் முடிவு செய்யப்பட்டுள்ளது என டிரம்ப் பதிவிட்டுள்ளார். டொனெட்ஸ்க் பிராந்தியத்தை விட்டுத் தர வேண்டும் பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியுடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாடிய நிலையில், போர் நிறுத்தத்திற்கு மாற்றாக உக்ரைன் தங்களின் நிலப்பரப்பு சிலவற்றை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உரையாடல் குறித்து நம்பகமான ஆதாரங்கள் வழங்கிய தகவலில், ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் டொனெட்ஸ்க்(Donetsk) பிராந்தியத்தை விட்டுத்தர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் முன்மொழிந்து இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த முன்மொழிவை உக்ரைனிய ஜனாதிபதி முழுவதுமாக நிராகரித்துவிட்டார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை வாஷிங்டனில் சந்தித்து பேசவுள்ளார். ரஷ்யா ஏற்கனவே உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், முக்கிய மூலோபாய நகரான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை கோருவது உக்ரைனை வேதனையில் தள்ளியுள்ளது. 2024ம் ஆண்டு இந்த பிராந்தியத்திற்கு நுழைந்த ரஷ்ய படைகள் ஏற்கனவே டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கால் பங்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=337240
Checked
Mon, 09/29/2025 - 18:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed