புதிய பதிவுகள்2

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 1 week ago
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது ஆண் : நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே பெண் : குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே ஆண் : எந்தன் நாளானது இன்று வேரானது வண்ணம் நூறானது வானிலே ஆண் : தீர தீர ஆசையாவும் பேசலாம் மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம் பெண் : என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம் ஆண் : என்னாகிறேன் என்று ஏதாகிறேன் பெண் : எதிா் காற்றிலே சாயும் குடையாகிறேன் ஆண் : எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது அது பறந்தோடுது வானிலே பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது ஆண் : மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மழையிலே அது மழையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே பெண் : வைரம் போல பெண்ணின் மனது உலகிலே அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே ஆண் : கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி பெண் : என் பாதையில் இன்று உன் காலடி ஆண் : நேற்று நான் பாா்ப்பதும் இன்று நீ பாா்ப்பதும் நெஞ்சம் எதிா் பாா்ப்பதும் ஏனடி ......... ! --- யாா் இந்த சாலை ஓரம் ---

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month 1 week ago
•யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து வையுங்க உள்ளே😂 மிஸ்டர் கிளீன் அல்லது திருவாளர் பரிசுத்தம் என்று அழைக்கப்படும் ரணில் அவர்கள் இப்போது மாட்டியிருப்பது பட்டலந்தை முகாம் கொலைகளுக்காக அல்ல. மாறாக மக்கள் பணம் 150 லட்சம் ரூபாவை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியமைக்காகவே. இத்தனை நாளும் தன்னை ஒரு கறை படியாத தூய அரசியல்வாதியாக நடித்து வந்தவரின் ஒரு முகம் இன்று தோலுரிக்கப்பட்டுள்ளது. தெரிந்ததே இவ்வளவு என்றால் தெரியாமல் எவ்வளவு சுருட்டியிருப்பார் இந்த யோக்கியன்? இங்கு வேடிக்கை என்னவென்றால் இது ஒரு அரசியல் பழி வாங்கல் என்று நாமல் ராஜபக்சா கண்ணீர் வடிக்கிறார். ஏனெனில் அடுத்து தன்னையும் கைது செய்து இந்திய நடிகைக்கு கொடுத்த பணம் குறித்து விசாரணை செய்வார்களோ என்ற அச்சம் அவருக்கு.😂 அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சுருட்டி வைத்திருக்கும் மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும். தோழர் பாலன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month 1 week ago
காலம் - 13 நவம்பர் 1989 இடம் - பட்டலந்தை வதைமுகாம் விஜயவீரா- என்னை சட்டப்படி நீதிமன்றில் நிறுத்துங்கள். நான் என் கருத்தை அங்கு கூறுகின்றேன். ரணில் - சட்டமாவது மயிராவது. உனது தோழர்கள் 60ஆயிரம் பேரை எப்படி கொன்று புதைத்தோமோ அதேபோன்று உன்னையும் கொல்லப் போகின்றோம். விஜயவீரா- இதற்குரிய பதிலை என் தோழர்கள் ஒருநாள் தருவார்கள். காலம் - 22 ஆகஸ்டு 2025 இடம் - கொழும்பு நீதிமன்றம். அரசு பணத்தை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருக்கிறார். மிஸ்டர் கிளீன் அவர்களின் உண்மை முகம் நாட்டு மக்களுக்கு இனங் காட்டப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர்கள் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அவருக்கு நீரிழிவு நோய், மனைவிக்கு புற்றுநோய் எனவே பிணையில் விடுதலை செய்யுங்கள் என மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளுக்கு பதவியில் இருக்கும்போது எந்த நோயும் இருப்பதில்லை. ஊழல் வழக்கில் கைது செய்தவுடன் எல்லா நோயும் வந்துவிடுகின்றன. செய்தி – பிணை மறுக்கப்பட்டு ரணில் சிறை செல்கிறார். விஜயவீராவின் தோழர்கள் உரிய பதிலை ரணிலுக்கு வழங்கியுள்ளனர். பாராட்டுகள். இது மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும். தோழர் பாலன்

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

1 month 1 week ago
ஆடடிச்சு அழகாகக் கழுவியெடுத்து அரிஞ்சு வைப்போம் ஓரமாக ஆறாகப் பாய்ந்த ஆட்டின் இரத்தத்திலே அருமையாகச் சுண்டிவைப்போம் ஆட்டுத்தலை பிளந்து அற்புதமாகப் பிரட்டியெடுப்போம் ஆட்டுக்கறி சமைத்து அயல் அண்டையார் சூழ ஆகா! ஓகோவெனப் புகழ்ந்து அகம் நிறைய உண்ணுவோம் 😂 Sinnarajah Shanmuganathan ############################ ######################### ஆட்டுக்கறியும்... ஆட்டக்காரியும் குழைச்சு வெளுக்க குடுத்து வைக்கவேணும் 😂 Sinnarajah Shanmuganathan

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month 1 week ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்! இன்று மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1444328

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month 1 week ago
Home > செய்திகள் > விலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்டு, வெலிக்கடையில் அடைக்கப்பட்ட ரணில் Friday, August 22, 2025 செய்திகள் கை விலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட ரணில், வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month 1 week ago
சுத்துமாத்து சுமந்திரன்.... தனது பின்கதவு ஆருயிர் நண்பர் ரணில் சிறை செல்வதை இட்டு, ஹர்த்தால் செய்யவில்லையா. 😂 அல்லது ஏற்கெனவே அறிவித்த ஹர்த்தாலில் வாங்கிய மரண அடியில் இருந்து இருந்து இன்னும் மீளவில்லையோ. 🤣

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month 1 week ago
கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு விளக்கமறியல்! Published By: VISHNU 22 AUG, 2025 | 10:39 PM கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். லண்டனுக்கு ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) சென்றிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 166 இலட்சம் ரூபா பொதுமக்கள் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது. குறித்த பிணை தொடர்பில் மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் தீலிப்ப பீரிஸ் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து குறித்த பிணை வழங்கலில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பலத்த இழுபறிக்குப் பின்னர் இரவு 10 மணியளவில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223141 கை விலங்கிடப்பட்டு சிறை செல்கிறார் ரணில் Published By: VISHNU 22 AUG, 2025 | 11:13 PM 166 இலட்சம் ரூபா பொதுமக்கள் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவர் கை விலங்கிடப்பட்டு சிறைச்சாலை பேருந்தில் கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டார். முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். லண்டனுக்கு ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) சென்றிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/223143

யாழில் அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்

1 month 1 week ago
செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்பப்பாண மாவட்ட செயலகத்தின் கச்சேரி - நல்லூர் வீதியின் பக்கமாக கடவுச்சீட்டு அலுவலகத்திற்கென பிரத்தியேகமான கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தின் நிர்மாண வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. வாக்குறுதியளித்த ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்று நிறுவப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். இதேவேளை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் யோசனை சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/passport-distribution-begins-in-jaffna-september-1755849582

கற்க கசறும்

1 month 1 week ago
இதை விளங்கி கொள்ள பெற்றோருக்கு புரிந்துணர்வு வேண்டும் . ஒரு வருடம் வீணா போச்சு என்று பிள்ளையை மனம் நோகாமல் பிள்ளை அதற்குள் கிடந்தது அழுந்தாமல் . வெளிய வா பிடிக்கவிட்டால் வேறு துறையை தெரிந்து எடு ....என ஊக்க படுத்த வேண்டும். இங்கும் கனடாவிலும் நடக்கிறது

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? A-Z தகவல்கள்

1 month 1 week ago
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் அன்பு வாகினி பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் மனித வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம் கருத்தரிப்பிலிருந்து இரண்டு வயது வரையிலான முதல் 1000 நாட்கள். இந்த காலகட்டத்தில் குழந்தையின் உடல், மன, உணர்வுபூர்வமான வளர்ச்சி வேகமாக நிகழ்கிறது. இந்த நாட்களில் சரியான ஊட்டச்சத்து கிடைப்பது குழந்தையின் வாழ்நாள் ஆரோக்கியம், அறிவுத்திறன், உற்பத்தித்திறனை தீர்மானிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனிசெஃப், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவும் இந்த காலகட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் 'தாய்ப்பால் கொடுப்பதை முன்னுரிமைப்படுத்துங்கள், நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குங்கள்'. உலகளவில் 44% குழந்தைகளுக்கு மட்டுமே 6 மாதங்கள் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது என்கிறது உலக சுகாதார மையம். இந்தியாவில் இது 64% ஆக உள்ளதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS 5) கூறுகிறது. ஆண்டுதோறும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்கள், தாய்ப்பால் ஊட்டத்தால் மட்டுமே காப்பாற்றப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. முதல் 1000 நாட்களின் முக்கியத்துவம், தாய்ப்பாலின் பங்கு, ஊட்டச்சத்து தேவைகள், தாய்ப்பால் இல்லாத நிலையில் ஏற்படும் பாதிப்புகள், இந்தியாவில் தாய்ப்பால் ஊட்டுதலின் நிலை, சமூக-பொருளாதார தாக்கங்கள், தேவையான கொள்கை மாற்றங்கள் பற்றி விரிவாகக் காணலாம். முதல் 1000 நாட்கள் ஏன் முக்கியமானது? 1. உடல் - மூளை வளர்ச்சி கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் உருவாகின்றன. பிறந்த பிறகு முதல் 2 வயது வரை, எலும்புகள், தசைகள், உள் உறுப்புகள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன. மூளையின் 80% இரண்டு வயதுக்குள் முழுமையாக வளர்ச்சி அடைகிறது. DHA (ஓமேகா-3), இரும்பு, அயோடின், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மூளை செல்களை வலுப்படுத்துகின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், வளர்ச்சி குன்றிய நிலை (Stunting), ஐ.க்யு. (IQ) குறைவு, கற்றல் திறன் பாதிப்பு ஏற்படும். 2. நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் இம்யூனோகுளோபுலின் IgA, லாக்டோஃபெரின் போன்ற நோயெதிர்ப்புப் பொருட்கள் உள்ளன. இவை குழந்தையை வயிற்றுப்போக்கு, நிமோனியா, அலர்ஜி போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகத் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது 3. எதிர்கால ஆரோக்கிய குறைபாடுகள் முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், பிற்காலத்தில் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை எளிதாக வருவதற்கு சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பால் ஏன் குழந்தைக்குப் பொன்னான உணவு? (1) தாய்ப்பாலின் ஊட்டச்சத்து மதிப்பு தாய்ப்பாலில் புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நோய் எதிர்ப்புப் பொருட்கள், ஹார்மோன்கள் போன்றவை உள்ளன. கொலோஸ்ட்ரம் (சீம்பால் அல்லது முதல் பால்) பிறந்த முதல் 2-3 நாட்களில் வெளியாகும் மஞ்சள் நிறமான பால். இதை இயற்கையான தடுப்பூசி என்று அழைக்கிறார்கள். IgA, லாக்டோஃபெரின், வைட்டமின் A நிறைந்தது. DHA (மூளை வளர்ச்சிக்கு), லாக்டோஸ் (ஆற்றல் தரும்), ஓலிகோசாக்ரைடுகள் (oligosaccharides) (குடல் நோய்க்கிருமிகளை ஒழிக்கும்) இதில் அதிகமாக உள்ளது. (2) தாய்ப்பால் ஊட்டுதலின் நன்மைகள் (i) குழந்தைக்கான நன்மைகள் நோய்த்தடுப்பு: வயிற்றுப்போக்கு, நிமோனியா, காது தொற்றுகள், திடீர் குழந்தை மரணம் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தாயுடன் உள்ள உடல் தொடர்பு, கண்காணிப்பு குழந்தையின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூளை வளர்ச்சி: DHA மற்றும் ARA கொழுப்பு அமிலங்கள் மூளை செல்களை வலுப்படுத்துகின்றன. தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் ஐ.க்யு. 5-7 புள்ளிகள் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உணர்ச்சிப் பிணைப்பு: தாயுடன் உள்ள உடல் தொடர்பு, கண்காணிப்பு குழந்தையின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. (ii) தாய்க்கான நன்மைகள் புற்றுநோய் குறைப்பு: மார்பகப் புற்றுநோய் 28%, சூலகப் புற்றுநோய் (ovarian cancer) 21% குறைகிறது என்று ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கின்றன. உடல் எடை குறைதல்: தாய்ப்பால் கொடுப்பதால் 500 கலோரிகள் ஒரு நாளில் செலவிடப்படுவதால், தாயின் உடல் எடை கூடாமல் பாதுகாக்கப்படுகிறது. மகப்பேறு மன அழுத்தம் குறைப்பு: ஆக்சிடோசின் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் தாய்மார்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, அறிவாற்றல் முன்னேற்றத்துக்கு முக்கியமானது தாய்ப்பால் இல்லாமல் ஒரு குழந்தை வளர முடியுமா? தாய்ப்பால் இல்லாமல் ஒரு குழந்தை வளர்வது நடைமுறையில் சாத்தியமே. ஆனால், உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனிசெஃப், பல சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வுகள் தாய்ப்பால் இல்லாத வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் (Victora et al., 2016; World Bank, 2020) ஏற்படுவதை தெளிவாக நிரூபிக்கின்றன. 2023இல் ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸில் வெளியான ஒரு மெட்டா-அனாலிசிஸ் ஆய்வின்படி, தாய்ப்பால் பெறாத குழந்தைகளில் நிமோனியா, வயிற்றுப்போக்கு நோய்களின் விகிதம் 50% அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தாய்ப்பாலில் உள்ள IgA, லாக்டோஃபெரின், லைசோசைம் போன்ற சிறப்பு புரதங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதே (Ballard & Morrow, 2013; Chowdhury et al., 2015). மூளை வளர்ச்சியின் அடிப்படையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 10 வருட ஆய்வு ஒன்று தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் மூளையில் சுமார் 20-30% அதிக நரம்பியல் இணைப்புகள் உள்ளதை கண்டறிந்துள்ளது (Isaacs et al., 2010. இந்த வித்தியாசத்துக்கு தாய்ப்பாலில் அதிக அளவில் காணப்படும் டோகோசா ஹெக்சானோயிக் அமிலம் (DHA) (Ballard & Morrow, 2013) முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. 2022இல் நேச்சர் நியூரோசயின்ஸில் வெளியான ஆய்வு தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பள்ளியில் 12% சிறந்த செயல்திறன் கொண்டிருப்பதை நிரூபித்துள்ளது. நீண்ட கால ஆரோக்கியத் தாக்கங்களில், லான்செட் ஜர்னலின் 2021ஆம் ஆண்டு ஆய்வு தாய்ப்பால் இல்லாமல் வளர்ந்த குழந்தைகளின் பிற்காலத்தில் டைப்-2 நீரிழிவு வருவதற்கான சாத்தியம் 35% (Victora et al., 2016)அதிகமாக இருப்பதை கண்டறிந்தது. தாய்ப்பாலின் சமூக - பொருளாதார முக்கியத்துவம் குறித்து உலக வங்கியின் 2020 அறிக்கை குறிப்பிடுகையில், தாய்ப்பால் கொடுக்கப்படும் குழந்தைகள் வளர்ந்த பின் சராசரியாக 20% அதிக வருமானம் ஈட்டுவதாக கணக்கிட்டுள்ளது. இந்த வித்தியாசத்துக்கு மேம்பட்ட அறிவுத் திறன், குறைந்த நோய் தாக்க நாட்கள் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன (Victora et al., 2015; World Bank, 2020). எப்போது தாய்ப்பால் கொடுக்கக் கூடாது? தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது எனினும், சில சூழ்நிலைகளில் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது நல்லது. தாய்க்கு ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ், HTLV-1 புற்றுநோய்கள், நரம்பு மண்டல பிரச்னைகள் போன்ற நோய்கள் இருந்தால், அவற்றை குழந்தைக்கு பரப்பும் அபாயம் இருப்பதால் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. குழந்தை கேலக்டோசீமியா (Galactosemia) போன்ற மரபணுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், பாலில் உள்ள சர்க்கரையை ஜீரணிக்க முடியாமல் போகும். மேலும், புற்றுநோய் சிகிச்சை (Chemotherapy), கதிரியக்க மருந்துகள் (Radioactive drugs) அல்லது சில தீவிர மருந்துகளைத் தாய் எடுத்துக்கொண்டால், அவை பாலில் கலந்து குழந்தையை பாதிக்கலாம். அதிகப்படியான மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு, சிகரெட் புகைப்பது போன்றவை பாலின் தரத்தை பாதிக்கின்றன. குழந்தைக்கு கடுமையான இரைப்பை குடல் நோய் (NEC) இருந்தாலும் தாய்ப்பால் தவிர்க்கப்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில், மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்று ஊட்டமுறைகளை பின்பற்றுவது நல்லது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தாய்ப்பால் சேமிப்பை சரியாக புரிந்துகொண்டு பயன்படுத்தினால், தாய்மார்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகும். தாய்ப்பால் சேமிப்பு முறைகள் - முக்கியத்துவம் தாய்ப்பால் சேமிப்பு என்பது ஒரு அறிவியல்பூர்வ முறை. இதை சரியாக புரிந்துகொண்டு பயன்படுத்தினால், தாய்மார்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகும். பணிபுரியும் தாய்மார்கள், படிப்பில் ஈடுபட்டுள்ள தாய்மார்கள் அல்லது வேறு காரணங்களால் குழந்தைக்கு நேரடியாகப் பாலூட்ட முடியாத நேரங்களில், இந்த முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. தாய்ப்பாலை சரியான முறையில் சேமிப்பதன் மூலம், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாவிட்டாலும், முன்பே பாலை எடுத்து பிரிட்ஜ் அல்லது பிரீஸரில் சேமித்து வைக்கலாம். இந்த முறை மூலம், தாய்மார்கள் தங்கள் வேலை, குழந்தை பராமரிப்பையும் சமநிலைப்படுத்த முடிகிறது. பால் சேமிக்கும்போது குளிர்சாதன பெட்டியில் (4°C) 4 நாட்கள் வரை அல்லது ஐஸ் பாக்கெட் உள்ள கூலர் பையில் பாதுகாப்பாக வைக்கலாம். நீண்ட காலத்துக்கு பிரீஸரில் (-18°C) 6 மாதங்கள்வரை சேமிக்கலாம். தாய்ப்பால் வணிகமயமாக்கல் தாய்ப்பாலின் வணிகமயமாக்கல் என்பது சமீபத்தில் உலகளவில் வளர்ந்துவரும் ஒரு தீவிர பிரச்னை. தாய்ப்பால் எடுத்து சேமிப்பது ஒரு பயனுள்ள முறையாக இருந்தாலும், இதன் வணிகரீதியான பயன்பாடு பல சவால்களை உருவாக்கியுள்ளது. இணையதள சந்தை, தாய்ப்பால் வங்கிகள் மூலம் இந்த தாய்ப்பால் விற்பனை செய்யப்படுகிறது. இது தூய்மை, பாதுகாப்பு, நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, ஏழைத் தாய்மார்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பாலை விற்கும்போது அவர்கள் சுரண்டப்படும் அபாயம் உள்ளது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி மருத்துவமனை, பால் வங்கிகள் மூலம் முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள், அவசர தேவை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் பெறப்பட்டு வழங்கப்பட வேண்டும். இது ஒரு சமூகப் பொறுப்பாக கருதப்படுகிறது. இந்த வணிகமயமாக்கல் முயற்சிகள் தாய்ப்பாலின் தரம், பரிமாற்றத்தின் பாதுகாப்பு, தாய்மார்களின் உரிமைகள் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்குக் கடுமையான சட்டரீதியான கட்டுப்பாடுகள், நெறிமுறை வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. மகப்பேறு விடுப்பு, குழந்தையின் வளர்ச்சியில் அதன் தாக்கம் தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு (Maternity Leave) ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, அறிவாற்றல் முன்னேற்றத்துக்கு முக்கியமானது. முறைசார்ந்த, முறைசாரா துறைகளில் இந்த விடுப்பின் மூலம் கிடைக்கும் தன்மை, அளவு குழந்தையின் வளர்ச்சி மீது நேரடியாக தாக்கம் செலுத்துகிறது. இந்தியாவில், அரசு/தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தாய்மார்களுக்கு 26 வாரங்கள் (6 மாதங்கள்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு (Maternity Benefit Act 2017) வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே தரப்பட வேண்டும். இந்த காலத்துக்கு விடுப்பு கிடைப்பது இதை உறுதி செய்கிறது. முறைசாரா துறையில் (விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள்) பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய விடுப்பு கிடைப்பதில்லை. பெரும்பாலான ஏழைத் தாய்மார்கள் பிறந்த 2-3 மாதங்களுக்குள் வேலைக்குத் திரும்ப வேண்டியுள்ளது. இதனால் தாய்ப்பால் ஊட்டுதல் குறைகிறது. இது குழந்தையிடம் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுக்கிறது. முறைசாரா வேலையில் ஈடுபட்டுள்ள தாய்மார்களின் குழந்தைகள் முதல் 1000 நாட்களில் சரியான ஊட்டச்சத்து- பாதுகாப்பைப் பெற, குழந்தைப் பராமரிப்பு மையங்கள் ஒரு அவசியத் தீர்வாகும். இது தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவிக்கும், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும், தாய்மார்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும் உதவும். எனவே, இந்த மையங்களை அரசு கொள்கைகள், சமூக நலத் திட்டங்களின் மூலம் உறுதிப்படுத்துவது அவசியம். தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: ·தாய்மார்களுக்கு கூடுதல் ஊதிய விடுமுறை (குறைந்தது 26 வாரங்கள்). ·பணியிடங்களில் பால் ஊட்டும் வசதிகள் (குழந்தை பராமரிப்பு அறை, பால் ஊட்டும் இடைவேளை). ·ASHA தொழிலாளர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம். ·ஃபார்முலா பால் விளம்பரங்களை கட்டுப்படுத்துதல். ·பால் வங்கிகளை அதிகரித்தல் கருத்தரிக்காமலேயே தாய்ப்பால் கொடுக்க முடியுமா? மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன? ஃபார்முலா பாலில் மறைந்துள்ள ஆபத்து என்ன? இந்தியாவின் பாரம்பரிய முறை சிறந்ததா? பால் சுரக்காத தாய்மார்கள்: குழந்தைகளுக்கு தாயாக விளங்கும் தாய்ப்பால் வங்கி பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? தாயின் ஆரோக்கியம், சமூக ஆதரவு தாய்ப்பால் ஊட்டுவதை பாதிக்கும் காரணிகள் பல உள்ளன. தாயின் ஊட்டச்சத்து நிலை, மன ஆரோக்கியம், குடும்ப ஆதரவு, பொருளாதார நிலை ஆகியவை முக்கியமானவை. ரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பால் குறைவாக இருக்கும். பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தம் தாய்ப்பால் ஊட்டுதலை பாதிக்கும். கணவர், குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால், தாய்ப்பால் ஊட்டுதல் எளிதாகிறது. ஏழைத் தாய்மார்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவது கடினமாக உள்ளது. தாய்ப்பால் ஊட்டுதல் என்பது தனிப்பட்ட தேர்வு மட்டுமல்ல, அது பொது சுகாதாரத் தேவை. தாய்ப்பால் ஊட்டுதலை நாடு ஊக்குவிக்க தேசிய அளவில் கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும். சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். சமூக கற்பிதங்களைக் களைய வேண்டும். முதல் 1000 நாட்களில் முதலீடு செய்வது ஆரோக்கியமான, புத்திசாலியான, உற்பத்தி திறன் மிக்க தலைமுறைக்கு வழிவகுக்கும். குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், அறிவுத் திறனுக்கு தாய்ப்பால் முக்கியமானது. எனவே, ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கான சரியான வழிகளை அறிந்துகொள்ள வேண்டும். அரசு, சமூகம், குடும்பம் அனைவரும் இதில் பங்கு வகிக்க வேண்டும். - கட்டுரையாளர் உணவுத் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கிறார். இதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் அவரது சொந்தக் கருத்துகளே. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gmvdlr225o

கற்க கசறும்

1 month 1 week ago
🤣.................... டோராவும், போக்கிமோன் பிகச்சுவும், இன்னுமொரு சிறுவர் பாத்திரமும் இங்கு உள்ளூர் தொலைக்காட்சியில் வருவார், பிள்ளைகளுக்கு நிறையவே சொல்லிக் கொடுத்தார்கள்...... இங்கு வட கோளத்தில் கோடை காலம் முடிந்து கொண்டு வருகின்றது. எல்லோரும் விடுமுறைகளை முடித்து வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பாடசாலைகள் இந்த மாதம் ஆரம்பித்துவிட்டன. கல்லூரிகள் இந்த மாதமும், அடுத்த மாதமும் ஆரம்பிக்கின்றன. இந்த கோடை காலம் முழுவதும் இங்கு வந்து எழுதுவதற்கு எனக்கு நேரம் அதிகம் கிடைக்கவில்லை. இன்னும் ஒரு பயணம் இருக்கின்றது............. உங்களின் நாட்டிற்கு............... ஆர்வம் அல்லது விருப்பம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கின்றது. சில பல நேரங்களில் கூட்டத்துடன் சேர்ந்து ஓடிப் போய், பின்னர் உணர்ந்து கொண்டு வெளியேயும் வந்து விடுகின்றார்கள். இங்கு பல்கலைப் படிப்பே அப்படித்தான் இருக்கின்றது. ஒரு வருடம், இரண்டு வருடங்களில் ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு போகின்றார்கள். அவர்களுக்கு பொருந்தும் ஒன்றை தேடும் வசதிகள் இருப்பது மிகவும் நல்ல ஒரு விடயம் என்றே நினைக்கின்றேன்.

“மலையக தமிழ் மக்கள்” என்ற சொல்லை சட்ட ஆவணங்களில் சேர்க்கத் தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - விஜித்த ஹேரத்

1 month 1 week ago
22 AUG, 2025 | 04:17 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) “மலையக தமிழ் மக்கள்” என்ற சொற்பதத்தை சட்ட ஆவணங்களில் உள்ளடக்க தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் மலையக தமிழ் மக்கள் என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மலையக மக்கள் பிரத்தியேக கலாச்சாரங்களை கொண்ட மக்கள் என்று ஏற்றுக் கொண்டுள்ளோம். அது எங்களின் கொள்கையாகும். ஹட்டன் பிரகடனத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி அந்த மக்கள் மலையக தமிழ் மக்கள் என்று இன்றைய பிரேரணையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் அவ்வாறு இந்த மக்களை அழைப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்ததாக சட்ட ஆவணங்களிலும் இந்த வசனம் உள்ளடக்கப்பட வேண்டும். இதற்காக சில சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளோம். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் இந்த வசனத்தை பயன்படுத்த தேவையான சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம். சில தரப்பினர் இணங்காமல் இருந்தாலும் அவர்களையும் இணங்கச் செய்து அதனை செய்வோம். மலையக மக்கள் இலங்கையர்களே. அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் உரிமைளை பாதுகாக்க வேண்டியது எங்களின் பொறுப்பாகும். அவர்களுக்கென காணிகள்,வீடுகள் இருக்க வேண்டும். அத்துடன் சிறந்த கல்வி மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டும். அதன்படியே ஹட்டன் பிரகடனத்தை நாங்கள் முன்வைத்தோம். இவர்களே இந்த நாட்டில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/223118

கற்க கசறும்

1 month 1 week ago
ஆரம்பத்திலயே கண்டறிந்து அதற்கு ஏற்ப செயல் பட்ட நல்ல பெற்றோர். நன்றி..ஏன் ஏனில் இவ்வாறு புரியாதவற்றை பேசும் பிள்ளைகளை வைத்தியரிடம் கொண்டு போய் காட்டும் பட்சத்தில் அவர்கள் வேறு ஓரு கோணத்தில் தான் சிந்திப்பார்கள்.சில வேகைளில் பிள்ளைகளை வாழ் நாள் வருத்தக்காரர்களாக்கியும் விடும்.
Checked
Tue, 09/30/2025 - 03:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed