3 weeks 6 days ago
தமிழரசு: சுமந்திரனின் வலையில் சிக்கிய சிறிதரன்…! January 27, 2026 — அழகு குணசீலன் — இலங்கை தமிழரசுக்கட்சி என்றால் சுமந்திரன், சுமந்திரன் என்றால் தமிழரசுக்கட்சி என்ற நிலை இரா .சம்பந்தர் – மாவை சேனாதிராஜா காலத்து விளைவு. இந்த வலை தமிழரசுக்கட்சி தன்னைச் சுற்றி தானாகவே பின்னிக்கொண்ட ஒன்று. கடந்த ஒன்றரை தசாப்தங்களாக சுமந்திரனை எல்லா சந்தர்ப்பங்களிலும் நியாயப்படுத்தி வந்த தமிழரசுக்கட்சியின் சிலந்திகளும் சேர்ந்து பின்னிய வீடுதான் இந்த சிலந்திவலை. இப்போது அனைவரும் அதில் சிக்கிக்கொண்டுள்ளனர். பா.அரியநேந்திரன், கே.வி.தவராசா, சி.யோகேஸ்வரன்,…….. என்ற வரிசையில் தற்போது சிக்கி இருப்பவர் சி.சிறிதரன். ஞா.சிறிநேசனும் விரைவில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சிறிதரன் விவகாரத்தில் அவரின் முடிவே அதைத் தீர்க்மானிக்கும். சிலந்திகள் பற்றி பேசும் போது வலை ஒன்றை பின்னுவதற்கு பல தடவைகள் முயன்று தோற்றுப்போன ஒரு சிலந்தி, முயற்சியை கைவிடாது தொடர்ச்சியாக முயற்சி செய்து ஆறாவது தடவை அதை சாதித்தது என்ற ஆரம்பப்பள்ளிபாடம் நினைவுக்கு வருகிறது. அந்த சிலந்திதான் சுமந்திரன். தமிழரசு கட்சியில் ஒரு தலைமைத்துவமாக, நிர்வாக ஆளுமையாக, அரசியல் விவகாரங்களை விரைவாக விளங்கிக்கொண்டு செயற்படுபவராக, உள்நாட்டு, வெளிநாட்டு தரப்புகளுடன் தொடர்புகளை பேணக்கூடிய ஒருவராகவும் மட்டும் அல்ல, அவர்களின் நம்பிக்கையை பெற்ற ஒருவராகவும் சுமந்திரனே இருக்கிறார். இதற்கு அவரது சட்டத்துறை நிபுணத்துவமும், மொழிவளமும், பூகோள அரசியல் அறிவும் பக்க பலமாக இருக்கிறது. இந்த குணாம்சங்களுடன் ஒப்பிடும்போது தமிழரசின் மற்றைய எம்.பி.க்களும், முக்கியஸ்த்தர்களும் பெயரளவில் தான் உள்ளனர். அரசியல் விவகாரங்களை தர்க்கரீதியாக விவாதிப்பதில், நியாயப்படுத்துவதில், பொய்யையும் பொருந்த சொல்வதில் சுமந்திரனுக்கு நிகர் தமிழரசில் சுமந்திரன் தான். தமிழரசு வண்டியை இரண்டு சக்கரங்களாக சுமந்திரனும், சாணக்கியனும் சேர்ந்து ‘உருட்டுகிறார்கள்’ சிவஞானம் பின்னால் நின்று தள்ளிக்கொடுக்கிறார். இங்கு பேசப்படுகின்ற வலைப்பின்னல், உருட்டுதல் என்ற வார்த்தைகளில் சுமந்திரனின் அரசியலின் மறுபக்கம் மறைந்து இருக்கிறது. அதற்குள் அவரின் அரசியல் குறித்த நேர்மை, நீதி, நியாயம், வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம்…. என்ற கேள்விகள் இல்லாமல் இல்லை. ஆனாலும், அனைத்து சுத்துமாத்துக்களுக்கு மத்தியிலும் சுமந்திரனே வெற்றி பெறுகிறார். தன்னோடு ‘ஒத்து ஓடாதவர்களை ஓரங்கட்டுதல்’ என்பது சுமந்திரனின் கைவந்த கலை. தமிழரசுக்கட்சியின் சம்பந்தருக்கு பின்னரான காலத்தை திரும்பி பார்த்தால் இது புரியும். திருகோணமலை பொதுச்சபைக்கூட்டமும், தலைவர்தேர்வும், கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியதும், உள்ளூராட்சி தேர்தலில் சுமந்திரன் பேசிய பொறிமுறையும் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உடைவும், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை நிராகரித்தமையும், தீவிர தமிழ்த்தேசியவாதத்தை எதிர்த்து சஜீத் பிரேமதாசவை ஆதரித்தமை, பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் பின்னரும் பாராளுமன்றத்திற்கு வெளியில் மட்டும் அன்றி உள்ளும் சத்தியலிங்கம், சாணக்கியன் ஊடாக சுமந்திரனே தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளார், தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை, மத்திய குழு, அரசியல் குழுக்களை கட்டுப்படுத்தும் திட்டமிட்ட செயற்பாடுகளால் சுமந்திரன் அணியே இவற்றை கட்டுப்படுத்துதல், சத்தியலிங்கத்தை தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமித்து பாராளுமன்றத்திற்கு உள்ளே சாணக்கியனுக்கும், வெளியே தனக்கும் பலத்தை அதிகரித்தமை, பாராளுமன்றத்தில் சத்தியலிங்கத்தை பிரதம கொறடாவாகவும், சாணக்கியனை பாராளுமன்ற செயற்பாடுகள் பொறுப்பாளராகவும் நியமித்தமை, சிறிதரனுக்கு எதிராக சாராயத்தவறணைகளுக்கு சிபாரிசு செய்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு தொடர்ந்தும் அரசாங்கத்தை கோருதல், அரசியல் அமைப்பு சபையில் கணக்காய்வாளர் நாயக தேர்வில் சிறிதரனின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்தியமை, ஓடு மீன் ஓடி உறுமீன் வரும்வரையும் காத்திருந்த கொக்காக கிடைத்த சந்தர்ப்பங்களில் படிப்படியாக காய்களை நகர்த்தி, இன்று கணக்காய்வாளர் நியமனத்தில் சிறிதரனுக்கு எதிராக வலுவான குற்றச்சாட்டு தமிழரசுக்கட்சியிடம் இருந்து மட்டும் அல்ல எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் எழும்போது சாட்டையை கையில் எடுத்திருக்கிறார் சுமந்திரன். அரசியல் குழு சிறிதரனை அரசியல் அமைப்பு குழுவில் இருந்து விலகுமாறு கோரியது. அது இன்னும் நிகழவில்லை அது சுமந்திரனால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அடுத்து தயாராக வைத்திருந்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியை விட்டு விலகுமாறு முன்னையதற்கு சமாந்தரமாக அடுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியைப் பறிப்பது தமிழரசுக்கட்சியின் சுய தீர்மானத்தில் தங்கியிருக்கிறது. இதை செய்யாமல் இருப்பதாயின் சிறிதரன் பாராளுமன்ற குழுவிலும், அரசியல், மத்திய குழுக்களிலும், ஏன் பொதுச்சபையிலும் கூட தனது பெரும்பான்மையை காட்ட வேண்டி வரலாம். ஆனால் அதற்கான – சிறிதரனுக்கு சாதகமான சூழல் இன்றில்லை என்றே கூறப்படுகிறது. நீதி மன்றத்தை நாடினால் சுமந்திரனை எதிர்த்து வாதிடவேண்டி இருக்கும். சிறிதரன் கிளிநொச்சிக்குள் தனித்து விடப்பட்டுள்ளார். கிளி நொச்சியில் சிறிதரனுக்கு எதிரான சந்திரகுமார் அணி சரியான நேரத்தில் சுமந்திரனுக்கு சார்பாக காய்களை நகர்த்துகிறது. பதிவுகளை பார்த்திருப்பீர்கள். இப்போது கிழக்கு எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை தக்க வைக்க சிறிதரனின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவிக்கு ஆப்பு வைக்க தீர்மானித்து விட்டனர். அமரர் இராசமாணிக்கத்தின் 113 வது ஜனனதின விழாவில் சிவஞானமும், சுமந்திரனும் வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிட்டவர்களே , அழைப்பின்றி ஓடிப்போய் நிகழ்வில் கலந்து. கொண்டிருக்கிறார்கள். யார் என்னத்தை சொன்னாலும், தமிழரசை காப்பாற்ற மட்டும் அல்ல சிறிதரனையும் காப்பாற்ற சுத்துமாத்துக்களை செய்தாவது சுமந்திரனால் மட்டுமே முடியும். https://arangamnews.com/?p=12635
3 weeks 6 days ago
மாவைக்கு முதல் செத்த... "தீபாவளி நாயகன்" சம்பந்தனுக்கு, ஏன் இன்னும் சிலை வைக்கவில்லை. 🤣
3 weeks 6 days ago
சுத்துமாத்து சுமந்திரனுக்கு… அழைப்பு கொடுக்கவில்லையா. 😂
3 weeks 6 days ago
📜 பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்: adminJanuary 31, 2026 இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பின்றி முன்னெடுப்பதற்காக, மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் (Essential Services) பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் (Public Security Ordinance) கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு (LP Gas) விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு, வைத்தியசாலைகள், மருந்தகங்கள் (Nursing homes/Dispensaries) மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு தொடர்பான அனைத்து சேவைகள், பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்துக்கான அனைத்து சேவைகள், புகையிரத போக்குவரத்து மற்றும் வீதிப் போக்குவரத்து சேவைகள்மற்றும் துறைமுகச் சேவைகள் மற்றும் உணவு விநியோகம் தொடர்பான அத்தியாவசிய நடவடிக்கைகள் உள்ளடங்குகின்றன. இந்தச் சேவைகளை அத்தியாவசியமாக்குவதன் மூலம், இந்தத் துறைகளில் பணிபுரிபவர்கள் பணிப்புறக்கணிப்பு (Strike) செய்வதற்கோ அல்லது சேவைகளுக்குத் தடை ஏற்படுத்துவதற்கோ சட்டப்படி முடியாது. மீறினால் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களுக்குத் தடையில்லாச் சேவையை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். அத்தியாவசிய சேவைகள் தொடர்பான இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும். தேவைப்படின், ஒவ்வொரு மாதமும் புதிய வர்த்தமானி மூலம் இது நீடிக்கப்படலாம். அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட துறைகளில் பணியாற்றுவோர், பணிக்கு சமூகமளிக்கத் தவறினால் அல்லது சேவைகளுக்குத் தடை ஏற்படுத்தினால், அவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்படவும், பிணையின்றி விளக்கமறியலில் வைக்கப்படவும் சட்டத்தில் இடமுண்டு. அத்துடன் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் பல தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இது தங்களது ஜனநாயக ரீதியான போராட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பள உயர்வு அல்லது சீர்திருத்தங்கள் கோரி போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வந்த நிலையிலேயே, அரசாங்கம் இந்தத் தடையை விதித்துள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்யச் சில தொழிற்சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன. https://globaltamilnews.net/2026/228028/
3 weeks 6 days ago
🌊 திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்: adminJanuary 31, 2026 திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் சரியாக 3:49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த அதிர்வு கடலில் ஏற்பட்ட போதிலும், கடற்கரையோர நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் சிலருக்குச் சிறியளவிலான அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், இது மிகச் சிறிய அளவிலானது என்பதால் சுனாமி (Tsunami) ஆபத்து எதுவும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் கடந்த சில காலங்களாக இதுபோன்ற சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன. பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். https://globaltamilnews.net/2026/228035/
3 weeks 6 days ago
யாழில். மாவைக்கு சிலை திறப்பு adminJanuary 31, 2026 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள , தனியார் காணியில் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2026/228035/
3 weeks 6 days ago
குதிரையின் குணம் அறிந்துதான் கடவுள் கொம்பு கொடுக்கவில்லையாம்.
3 weeks 6 days ago
ஈழப் போராட்டத்தை... வல்லரசு நாடுகள் நசுக்கும் போதும், கொத்துக் குண்டுகளை வீசும் போதும்... நேரடியாக ஐ.நா. தனது பிரத்தியேக சற்றலைட் மூலம் பார்த்துக் கொண்டு இருந்ததை "நியூயோர்க் ரைம்ஸ்" அம்பலப் படுத்திய பின்பும்... பாதிக்கப் பட்ட அந்தத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க முன் வராத ஐ.நா. அமைப்பு உலகத்திற்கே தேவையில்லாத கையாலாகாத அமைப்பு. இருப்பதை... விட தொலைந்து போவதே மேல். 🤬 ஐ.நா. இதுவரை... புடுங்கின ஆணியே போதும். 😂 இனி... ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். மூடிட்டு கிளம்புங்க. நீங்கள் "மிக்சர்" சாப்பிடுவதற்கு ஒரு சபை தேவையில்லை.
3 weeks 6 days ago
3 weeks 6 days ago
இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்! இலங்கை பொலிஸ் சேவையில் சுமார் 32,000 அதிகாரிகள் தற்போது தேவையான எண்ணிக்கையை விடக் குறைவான எண்ணிக்கையில் கடமைகளைச் செய்து வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றங்களைத் தீர்ப்பதில் காவல்துறை குற்றப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள கைரேகை அதிகாரிகள், குற்றப் பகுப்பாய்வு அதிகாரிகள் மற்றும் தடயவியல் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கொழும்பில் இன்று (30) காலை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் மேலும் உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், 2026 ஆம் ஆண்டில் 2,500 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெற உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மேலும் 2,700 அதிகாரிகள் ஓய்வு பெறவும் உள்ளனர். எனவே, நிலைமையைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இலங்கை காவல்துறையில் 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். https://athavannews.com/2026/1462356
3 weeks 6 days ago
193 உறுப்பு நாடுகளுக்கு அவசர கடிதம் எழுதிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ். அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உடனடியாக நிதிச்சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் நிறைவேற்ற வேண்டும். அல்லது உடனடி நிதிச் சரிவைத் தடுக்க, உறுப்பு நாடுகள் நமது நிதி விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடிதத்தில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடவில்லை. ஐ.நா.வுக்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா தற்போது ஐ.நா.வின் வழக்கமான வரவு செலவுத் திட்டத்திற்கு 2.16 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க வேண்டும். மேலும் இந்த ஆண்டுக்கு 767 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க வேண்டியுள்ளது. வெனிசுலா 38 மில்லியன்டொலர் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது வெனிசுலா பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளது. அமெரிக்கா 2025 இறுதியில் 1.568 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது. இது 2024-ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு என அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1462420
3 weeks 6 days ago
கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கோல்டன் (Coltan) கனிமத்தை வழங்கும் முக்கிய சுரங்கமாக கருதப்படும் ருபாயா (Rubaya) சுரங்கத்திலேயே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது. உலகிற்குத் தேவையான கோல்டன் கனிமத்தில் சுமார் 15% இந்த ருபாயா சுரங்கத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சுரங்கம் 2024 ஆம் ஆண்டிலிருந்து AFC/M23 எனப்படும் கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. https://athavannews.com/2026/1462423
3 weeks 6 days ago
கொழும்புத் துறைமுக அபிவிருத்தியில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம் Published By: Vishnu 31 Jan, 2026 | 02:43 AM இலங்கையும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை துறைகளை மேம்படுத்துவது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரக தூதுவர் கலீத் நாசர் அல்அமேரிக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் வியாழக்கிழமை (29) அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, சிவில் விமான சேவைத் துறையின் தலைவர்களுக்கான சர்வதேச நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் பெப்ரவரி 03 முதல் 06 வரை துபாயில் நடைபெறவுள்ளதுடன் அந்நிகழ்வில் பங்கேற்குமாறும், பெப்ரவரி 03 துபாயில் உலக அரச உச்சி மாநாடு மையத்தில் நடைபெறவுள்ள உலகளாவிய சேவை வழங்கல் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடலிலும் பங்கேற்குமாறு அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கு தூதுவர் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார். மேலும், கொழும்புத் துறைமுக அபிவிருத்திக்காக அபு தாபி துறைமுக நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாகவும், அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யத் தயார் எனவும் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையில் காணப்படும் திறமையான விமான பொறியியல் மனித வளமும், குறைந்த செயற்பாட்டு செலவுகளும் விமான சேவை துறையை மேம்படுத்துவதற்கு சாதகமாக அமையும் எனவும், இலங்கையில் பிராந்திய விமான பராமரிப்பு மையம் ஒன்றை நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. விமான சேவை மற்றும் துறைமுக சேவை வழங்கல் துறைகளில் நடைமுறை மற்றும் நீண்ட கால கூட்டாண்மையை உருவாக்குவதற்கு தொடர்ந்து நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/237440
3 weeks 6 days ago
7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி SCOT 🆚 ITA - SCOT 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் SCOT 🆚 NEP - SCOT 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Select WI 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group C - Second WI அண்ணை, தடித்த எழுத்தில் எனது பதில்.
3 weeks 6 days ago
ஆமாம் நீங்கள் ஜேர்மனியர் என்பதால் உங்களது ஜனாதிபதியாக அவர் இருக்கமாட்டார்.
3 weeks 6 days ago
இந்தப் பொடியள் கனடாவிலை ....
3 weeks 6 days ago
Scotland (7, 13), ENG AND WI (47, 48)
3 weeks 6 days ago
ஆதிமந்தி ஆட்டனத்தி - சுப.சோமசுந்தரம் உலகில் பரவலாக அறியப்படும் காதல் இணையரான ரோமியோ - ஜூலியட், ஆன்டனி - கிளியோபாட்ரா, லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்று சங்க காலத்தில் நம் தமிழ் நிலத்தில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலானது காவியம் போல் பேசப்பட்டுள்ளது என்பது சங்க இலக்கியங்களான குறுந்தொகை, அகநானூறு, மற்றும் சங்க மருவிய காலத்து சிலப்பதிகாரம் மூலமாகத் தெளிவு. ஆனால் இன்றைய பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம் இக்காதலை அறியாமல் போனது விந்தையிலும் விந்தை. ஈழத் தமிழறிஞரான திரு.கந்தையா விநாயகலிங்கம் அவர்கள் யாழ் இணையதளத்தில் எழுதிய கட்டுரையானது அடியேனையும் எழுதத் தூண்டியது எனலாம். அன்னார் எழுதியதிலிருந்து பெரிதும் வேறுபட்ட எதனையும் எழுத எண்ணாமையால், பின் ஏன் இந்த எழுத்து எனும் கேள்வி எழல் இயல்பு. திருக்குறளுக்குக் காலந்தோறும் வெவ்வேறு சான்றோர் உரை எழுதுவது ஒவ்வொரு எழுத்தும் பார்வையும் தனித்தன்மை கொண்டமையாலும், உயரிய பொருள் மீண்டும் மீண்டும் உரைக்கப் பெற்று மென்மேலும் வளம் பெறுவதினாலுமேயாம். கண்ணதாசன் எழுதிய கவிதை நாடகமான ஆதிமந்தி ஆட்டனத்தி, அதன் திரை வடிவமான மன்னாதி மன்னன், பாரதிதாசன் படைத்த சேரதாண்டவம் எனும் நாடக நூல் ஆகியவை ஈண்டு கவனத்தில் கொள்ளத்தக்கவை. இவை நாம் முன்னம் குறித்த சங்கப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரம் வழியமைந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி கதையினை ஒட்டி அமைந்த புனைவு இலக்கியங்களாகும். நாம் இக்கட்டுரையில் கையிலெடுப்பது சங்கப்பாடல்கள் வழி நின்ற கதையை மட்டுமே. சோழன் கரிகால் பெருவளத்தான் காலத்தில் ஆடற் கலையில் சிறந்த ஆட்டனத்தி (ஆடல் + அத்தி) என்ற வீர இளைஞனும் ஆதிமந்தி எனும் ஆடல் மகளும் காதல் வயப்பட்டனர். சோழ நாட்டவர் தமக்குச் சோறிடும் காவிரி அன்னைக்குப் (காவிரியாற்றுக்கு) பெருவிழா எடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாளன்று சோணாட்டின் கழார் என்னும் துறையில் மன்னன் கரிகாலன் முன் ஆட்டனத்தி காவிரியில் தன் ஆட்டத்தின் திறம் காட்டிச் சாகசம் புரிந்தான்; நீர் விளையாட்டும் ஆட்டத்தில் ஒரு வகையாக இருந்திருக்க வேண்டும். அவன் ஆடற்திறம் கண்டு மன்னனும் மக்களும் குதூகலித்தனர் - ஆதிமந்தியும்தான். அப்போது காவிரியில் திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளம் அவனை வாரிச்சுருட்டிச் சென்று விட்டது. காவிரி கடலில் கலக்குமிடம் கரை ஒதுங்கிக் கிடந்தவனை மருதி எனும் மீனவப்பெண் கண்டெடுத்துப் பேணி வந்தாள். கட்டழகன் அத்தியிடம் கட்டுக்கடங்காத காதல் கொண்டாள். (அவனும் அந்த மீனவப் பெண்ணின் காதல் வலையில் கட்டுண்டு பேரின்ப உலகில் திளைத்திருக்க வேண்டும். ஆடவன் பல காதல் கொள்ளும் முறை சங்க காலத்தில் இருந்தமைக்கான சான்றுகள் உண்டு (polygamist society). எனவே தற்கால ஒழுக்க அளவுகோல் அங்கு அவசியமில்லை). காதலனை இழந்த காரிகையான ஆதிமந்தி அருந்துயருற்றுக் கையறு நிலையில் அவனைத் தேடி காவிரிக் கரையிலுள்ள ஊரெல்லாம் அலைந்து திரிந்தாள். இறுதியாக மருதியிடம் வந்து சேர்ந்தாள். ஆதிமந்தி அத்தியிடம் கொண்ட காதல் திறம் கண்ட மருதி அவனை அவளிடமே ஈந்து தான் கடலுள் மாய்ந்து அக்காலத்தில் அழியா புகழ் பெற்றாள். இந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலும், பிறிதின் நோய் தந்நோயாய்ப் போற்றிய மருதியின் தகைமையும் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளிப் பருகுவோமா ? முதலில் நம் கண் முன் காட்சி தருவது குறுந்தொகையில் ஆதிமந்தியார் எனும் பெயர் கொண்ட பெண்பாற்புலவரின் பாடல். புறநானூற்றில், பாட்டுத்திறம் படைத்த சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் நிகழ்வினைத் தானே பாடியது போல் சங்க காலத் தலைவி ஆதிமந்தியே ஆடற்கலையுடன் பாடல் திறனும் கொண்டு, தன் நிலையைக் கூறி இப்பாடலைப் பாடி இருக்கலாம். அல்லது ஔவையைப் போல் ஆதிமந்தியும் அப்போது பொதுவான பெயராய் இருந்து (common name), ஆதிமந்தியார் எனும் புலவர் தம் பெயரையுடைய நாயகியைப் பாடியிருக்கலாம். மூன்றாவது வாய்ப்பாக, பாடலின் புலவர் பெயர் தெரியாததால் பாடலில் உள்ள தலைவியின் பெயரே அவருக்குச் சூட்டப்பட்டிருக்கலாம் (பாடலில் உள்ள சொல்லால் பெயர் பெற்ற செம்புலப் பெயல்நீரார், அணிலாடு முன்றிலார் போல). பாடியவர் குறித்த வரலாறு தெளிவற்று இருப்பினும், பாடற் பொருள் தெளிவானது; பாடல் சுட்டும் வரலாறும் தெளிவு. பாடலில் தலைவி ஆதிமந்தி தோழியிடம் தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்துகிறாள். இவ்வெளிப்பாடு காவிரியாற்றுக் கோர நிகழ்வுக்குப் பின் ஆற்றங்கரை ஊர்களில் அவனைப் பல இடங்களில் அவள் தேடித் திரிந்ததைச் சொல்கிறது. "வீரர்கள் கூடும் விழாக்கள், (அவன் ஆடற்தலைவன் என்பதால்) துணங்கை கூத்து நடைபெறும் இடங்கள் எனப் பலவாறு தேடியும் மாட்சிமை பொருந்திய அவனைக் காணேன். யானும் ஓர் ஆடுகள மகளே ! சங்கினை அறுத்து அமைக்கப்பெற்ற என் கை வளையல்கள் (நான் உடல் மெலிந்ததால்) நெகிழ்ந்திடக் காரணமான பெருமைமிக்க தலைவனான அவனும் ஓர் ஆடுகள மகனே !"என்கிறாள். "மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே" (குறுந்தொகை பாடல் 31; பாடியவர் ஆதிமந்தியார்) அருஞ்சொற்பொருள் : மள்ளர் - வீரர்; குழீய - குழுமிய, கூடிய; விழாவினானும் - விழாக்களிலும்; மகளிர் தழீஇய - மகளிரைத் தழுவிய; துணங்கையானும் - துணங்கைக் கூத்து நிகழிடங்களிலும்; யாண்டுங் காணேன் - எவ்விடத்தும் யான் காணவில்லை; மாண் தக்கோனை - மாட்சிமை பொருந்தியவனை; கோடு - சங்கு; ஈர் - அறுத்து; இலங்கு வளை - அமைத்து விளங்கும் வளையல்களை; நெகிழ்த்த - நெகிழ வைத்த; பீடு கெழு - பெருமை பொருந்திய; குரிசில் - தலைவன் (குருசிலுமோர் - குருசிலும் ஓர்). அடுத்து அகநானூறு பாடல் 45 ஐக் காண்போம். பாடுபொருள் வேறாய் இருப்பினும் ஆதிமந்தி பற்றிய குறிப்பு அதன் கண் வரல் சிறப்பு. பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவியொருத்தி தோழி எத்துணைத் தேற்றினாலும் தேறாது, "காதலனால் ஏற்பட்ட சிறுமையுடன் (ஊரார் புறம் பேசும் சிறுமை), பிரிவுத் துயர் எனும் நோய் மேலிட ஆதிமந்திபோல் மனம் பேதலித்து ஆதரவற்று (அலந்து) உழன்று திரிவேனோ (உழல்வென் கொல்லோ)?" என்று புலம்புகிறாள். "காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்துஆதிமந்தி போல பேது உற்றுஅலந்தனென் உழல்வென் கொல்லோ" (அகநானூறு பாடல் 45 ன் பகுதி; பாடியவர் - வெள்ளி வீதியார்) சங்கப் புலவர் பரணரின் பாடல்களில் இருந்து வரலாற்றுக் குறிப்புகளும் கிடைப்பதால் அவர் வரலாற்றுப் பதிவாளராயும் அறியப்பெறுகிறார். எடுத்துக்காட்டாக, பரணர் பாடிய அகநானூறு பாடல் எண் 135 ன் முற்பகுதியில் ஆதிமந்தி பற்றிய குறிப்பும் பிற்பகுதியில் வேளிர் குடி அரசர் பதினான்கு பேர் சேர்ந்து தாக்கிய தலைநகர் காமூரையும் கழுவுள் அரசனையும் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. நாம் தற்போது கையிலெடுத்துள்ள தலைப்பைக் கருத்தில் கொண்டு பாடலின் முற்பகுதியை மட்டும் பேசி, பிற்பகுதியை இக்கட்டுரையை வாசிப்போர்க்கே விட்டு விடுகிறோம். மீண்டும், பிரிவாற்றாமையில் வாடும் தலைவியொருத்தி தோழியிடம் கூறுவது : " திதலை மாமை தளிர் வனப்பு அழுங்கபுதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பபசலை பாய்ந்த நுதலேன் ஆகிஎழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்துஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி பேது உற்றிசினே காதலம் தோழி" (அகநானூறு பாடல் 135 ன் முற்பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : எனது தேமல் (திதலை), மாநிறம் ஆகியவற்றின் தளிர் வனப்பு கெட (அழுங்க), புதர்களில் படர்ந்த (புதல் இவர்) பீர்க்கின் புதுமலர் (எதிர் மலர்) போன்ற (கடுப்ப) பசலை படர்ந்த நெற்றிடையுடையவள் ஆனேன் (நுதலேன் ஆகி). ஓவியம் போன்ற எழில் மிக்க, குளிர்ச்சி பொருந்திய கண்கள் அழும்படியாக (எழுது எழில் மழை கண் கலுழ) பிரிவுத் துயருற்று (நோய் கூர்ந்து) ஆதிமந்தி மதி மயங்கியது போல் (ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி) பேதலித்து நிற்கிறேன் (பேது உற்றிசினே), அன்பு கொண்ட அழகிய தோழியே ! (காதல் அம் தோழி ). பிரிவுத் துயரில் வாடி நின்ற ஒரு தலைவியைத் தோழி அழைக்கிறாள் : "முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇதாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்தஆதிமந்தி காதலன் காட்டி படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்சென்மோ வாழி தோழி" (அகநானூறு பாடல் 222 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : முழவின் (ஒரு வகை முரசு) முகம் உலறா வண்ணம் (முகம் புலரா) - அதன் இடைவிடாத முழக்கத்தினால் - ஆர்ப்பரிக்கும் (கலி கொள்) கழார் என்னும் (காவிரி) துறையில் மென்மேலும் பெருகும் அழகுடன் (ஈட்டு எழில்) பொலிந்து எடுப்பான தோள்களுடன் திகழும் (ஏந்து குவவு) வலிமையான (மொய்ம்பின்) ஆட்டனத்தியின் நலன்களை விரும்பி (நலன் நயந்து), தனது பரந்து (உரைஇ) தாழ்ந்த இருண்ட கூந்தலால் (தாழ் இரும் கதுப்பின்) காவிரி கவர்ந்து கொண்டதால் (வவ்வலின்), திசையெல்லாம் தேடி (மாதிரம் துழைஇ) மதிமயங்கி (மதி மருண்டு) ஆதரவற்றுத் திரிந்த (அலந்த) ஆதிமந்தியிடம் அவளது காதலனான ஆட்டனத்தியைக் காட்டி - ஈந்து - ஒலிக்கும் கடல் புகுந்த (படுகடல் புக்க), புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்பினையுடைய மருதியைப் போல் புகழ் பெறச் செல்வோமாக ! வாழிய தோழி ! (அஃதாவது தலைவனைத் தேடியும் காணாவிடத்து உயிர் துறந்து புகழ் பெறலாம் எனச் சொல்கிறாளோ !). (பாடலைப் போன்றே முற்றுப்புள்ளியின்றி பொருளை எழுதியமைக்கு மன்னிக்கவும். அப்படிதான் எழுத வந்தது !). பிரிவாற்றாமையை வகை வகையாய் பதிவு செய்கிறது அகநானூறு. "......................................அல்கல் அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பகொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கைஅறியாமையின் அழிந்த நெஞ்சின்ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை ஆட்டன்அத்தியை காணீரோ எனநாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று எனகலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்தஆதிமந்தி போல ஏதம் சொல்லி பேது பெரிது உறலே" (அகநானூறு பாடல் 236 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இரவில் (அல்கல்) மணம் வீசும் சந்தனம் பூசி (அணி கிளர் சாந்தின்) அழகிய பட்டாடையினால் பொலிவு பெற்று (அம் பட்டு இமைப்ப), வளைந்த குழையணிந்த மகளிரிடம் (கொடுங்குழை மகளிரின்) அவன் சேர்ந்த இடம் (ஒதுங்கிய இருக்கை) அறியாது வருந்திய மனதுடன் (அறியாமையில் அழிந்த நெஞ்சின்) உள்ளேன். காளையைப் போன்று தீரத்துடன் நடையும் (ஏற்று இயல் எழில் நடை) பொலிவு பெற்ற வலிமையான தோள்களும் (பொலிந்த மொய்ப்பின் தோட்டு) கரிய சுருள் முடியும் (இரும் சுரியல்) கொண்டவனை (ஆட்டனத்தியைக் குறிப்பது) மணந்து பித்துப் பிடித்தவளாய் (மணந்த பித்தை), "ஆட்டனத்தியைக் கண்டீரோ ?"என்று நாடு நகரெங்கும் கூவித் திரிந்து, "கடல் கொண்டதோ ? ஆற்று வெள்ளம் (புனல்) ஒளித்துக் கொண்டதோ ?" என்று அழுத கண்ணோடு காதலனால் வருந்திய (காதலன் கெடுத்த) ஆதிமந்தி போல துயரினைக் கூறிப் (ஏதம் சொல்லி) பெரிதும் வருந்துகிறேன் (பேது பெரிது உறலே). பரணர் பாடிய அகநானூறு 76 ஆம் பாடலில் பரத்தை ஒருத்தி, "(இடுப்பில்) கச்சினை அணிந்தவனும், (காலில்) கழலை அணிந்தவனும், தேனொழுகும் மாலையினை மார்பில் அணிந்தவனும் (தேம் தார் மார்பினன்), வகையாக அமைக்கப்பெற்று வனப்புடன் பொலிவுறும் மாலையை அணிந்தவனும் (வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்), சுருள் முடியுடன் (சுரியல்) திகழும் அழகிய (அம்) கூத்தனைக் (பொருநனை) கண்டீரோ என ஆதிமந்தி பித்துப் பிடித்து (பேதுற்று) அரற்றித் (இனைய) திரிய, கரையினில் மோதி (சிறை பறைந்து) உராய்ந்து (உரைஇ) செந்நிறம் கொண்ட கிழக்குத் திசையில் (செம் குணக்கு) பாயும் (ஒழுகும்) அழகிய குளிர்ச்சி பொருந்திய காவிரி (அம் தண் காவிரி) போல - காவிரியாறு ஆட்டனத்தியை இழுத்துச் சென்றது போல - (என்னிடம் வந்த தலைவனை) நானும் (யானே) கரம் பிடித்துக் கொண்டு செல்ல எண்ணுகிறேன் (கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின்)" என்கிறாள். "கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்சுரியல் அம் பொருநனை காண்டிரோ எனஆதிமந்தி பேது உற்று இனைய சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும்அம் தண் காவிரி போலகொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே" (அகநானூறு பாடல் 76 ன் பகுதி; பாடியவர் பரணர்) அகநானூறு பாடல் 376 ல் காதல் பரத்தை தலைவனுடன் பேசுவதாக வருவது : "செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்கல்லா யானை கடி புனல் கற்று எனமலி புனல் பொருத மருது ஓங்கு படப்பைஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறைகலி கொள் சுற்றமொடு கரிகால் காண தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசைஒண் பொறி புனை கழல் சே அடி புரளகரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்றுஇரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பபுனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு மன்னோநும் வயின் புலத்தல் செல்லேம்" (அகநானூறு பாடல் 376 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : செல்லாதே, மருதநிலத் தலைவனே ! (செல்லல் மகிழ்ந). உனக்கு நான் செய்யும் கடமை உள்ளது. (பாகனிடம்) கல்லாத யானை செறிந்த நீரோட்டத்தில் (கடி புனல்) விளையாடக் கற்று நீரில் மோத அதனால் பேரலையாய் எழுந்த நீர் (மலி புனல்) மோதும் மருத மரங்கள் உயர்ந்து நிற்கும் நிலங்களையும் (மருது ஓங்கு படப்பை), செழித்து வளர்ந்த கதிர்களைக் கொண்ட வயல்களையும் உடைய கழார் என்னும் ஊரின் (காவிரி) முன் துறையில் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும் சுற்றத்தாரோடு (கலி கொள் சுற்றமொடு) (சோழ மன்னன்) கரிகாலன் கண்டு மகிழ, புனல் விழாக்கோலம் பூண்டு (தண் பதம் கொண்டு) இன்னிசை தரவல்ல ஒளிரும் சதங்கை அணிந்த கழல் (இன்னிசை ஒண் பொறி புனை கழல்) சிவந்த காலடியில் புரள (சேவடி புரள), கருமையான கச்சு அணிந்து காண்பதற்கு அழகிய தன் வயிற்றில் (கருங் கச்சு யாத்த காண்பின் ஆம் வயிற்றில்) பெரும் பொன்னாலான (இரும் பொலம்) பாண்டில் எனும் இசை கருவி மணியுடன் ஒலிக்க (பாண்டில் மணியொடு தெளிர்ப்ப), புனலைப் பெரிதும் விரும்பி (புனல் நயந்து) ஆடிய அத்தியின் (ஆட்டனத்தியின்) அழகினை விரும்பி (ஆடும் அத்தி அணி நயந்து) காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல உன்னைக் கவர்ந்து வைத்துள்ளேன் (காவிரி கொண்டு ஒளித்தாங்கு அன்றோ). (உன் தலைவி உன்னைக் கவர்ந்து செல்லுமாறு) உன்னுடன் புலந்து நிற்க மாட்டேன் (நும் வயின் புலத்தல் செல்லேம்). அகநானூறு 396 லும் காதல் பரத்தை ஒருத்தி தலைவனிடம் சொல்கிறாள் : "இனி யான் விடுக்குவென் அல்லென் மந்திபனி வார் கண்ணள் பல புலந்து உறையஅடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇநெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின்மனையோள் வவ்வலும் அஞ்சுவல்" (அகநானூறு 396 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இனி உன்னை விடமாட்டேன் (இனி யான் விடுக்குவென் அல்லென்). ஆதிமந்தி நீர் வார்த்த கண்ணுடன் பலவற்றைச் சொல்லித் துயருறுமாறு (மந்தி பனிவார் கண்ணள் பல புலந்து உறைய), போர்த் திறம் கொண்ட ஆட்டனத்தி (அடுதிறல் அத்தி) ஆடும் அழகினை விரும்பி (ஆடு அணி நசைஇ) பெருவெள்ளம் கொண்ட காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல் உன்னை ஒளித்து வைத்துள்ளேன் (நெடுநீர் காவிரி கொண்டு ஒளித்தாங்கு). (அவனை மீண்டும் அவன் தலைவி ஆதிமந்தி கவர்ந்து கொண்டதைப் போல்) உன் மனையாள் உன்னைக் கவர்ந்து கொள்வாள் என அஞ்சுகிறேன் (நின் மனையாள் வவ்வலும் அஞ்சுவல்). இறுதியாக சங்கமருவிய காலத்துக் காப்பியமான சிலப்பதிகாரம் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைக் குறிக்கக் காணலாம். "மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் ..............." (சிலப்பதிகாரம்; மதுரைக் காண்டம்; வஞ்சின மாலை; வரிகள் 11-15) பொருள் : வஞ்சி நகரத் தலைவனைப் (ஆட்டனத்தியை) பேராற்று வெள்ளம் கொண்டு செல்ல, மன்னன் கரிகாலன் பெருவளத்தான் மகள் (ஆதிமந்தி) தானும் அப்புனலின் வழி சென்று, "மலையொத்த தோளினை உடையவனே (கன்னவில் தோளாயோ)" என்று கூவிக் கதற, கடலானது அவனை அவள் முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழுவிப் பொற்கொடியைப் போல் திரும்பி வந்தாள். சிலம்பில் ஆதிமந்தி மன்னன் கரிகாலனின் மகளாகவும் ஆட்டனத்தி வஞ்சித் தலைவனாகவும் காட்டப்படுகின்றனர். ஆனால் அவர்களைப் பேசும் சங்கப்பாடல் எதிலும் அத்தகைய வரலாற்றுக் குறிப்பு இல்லை. குறிப்பாக, வரலாற்றுப் பதிவாளராகக் கொள்ளப்படுகிற பரணர் அவர்களைக் குறித்த ஆறு பாடல்களில் ஒன்றில் கூட அவ்வாறு குறிப்பிடவில்லை. எனவே சங்க இலக்கியங்களிலிருந்து, அவர்கள் இருவரும் ஆடுகள மக்களாகவே புலப்படுகின்றனர். சங்கமருவிய காலத்திலேயே காப்பியங்கள் தோன்றின. காப்பியங்கள் தன்னேரில்லாத் தலைவனையே முதன்மைப்படுத்தின. சிலம்பு குடிமக்கள் காப்பியம் எனப் பெயர் பெற்றாலும் கோவலனும் கண்ணகியும் சாதாரணக் குடிமக்கள் அல்லர். மன்னர் குலத்தவராக இல்லாவிடினும் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் செல்வச் செழிப்புள்ள வணிகர் குலத் தோன்றல்களாகவே காட்டப் பெறுகின்றனர். எனவே சிலம்பில் புகழ்பெற்ற தலைவன் - தலைவியாக சுட்டப்பெறும் ஆட்டனத்தி - ஆதிமந்தியும் ஏற்கனவே அக்கால மக்கள் வழக்கில் திரிபுகளைப் பெற்று மன்னர் குலத்தவராகக் கருதப்பட்டது இயல்பான ஒன்றே. புனைவும் காப்பியத்தின் அங்கம்தானே ! எது எப்படி ஆயினும் உலகக் காதலர்களைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் முதலில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைத் தலையாயதாய்க் கொண்டாடுவதும், அதனை உலகோர் பார்வைக்குக் கொண்டு செல்வதும் தமிழர் பண்பாட்டை உலகிற்குக் கடத்தும் முயற்சியில் ஒன்றாய் அமையும்.
3 weeks 6 days ago
கிருபன் அய்யா...நீங்கள் கேட்ட திருத்தங்களை சிவப்பு கலரில் எழுதியுள்ளேன்...நன்றி
3 weeks 6 days ago
அரசியல் மாற்றங்கள் எழுதி வைத்து நடப்பதல்ல. நாளைய உலகில் ரஷ்ய அதிபர் புட்டினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் அவர்களும் மறைந்து விட்டால் இன்னொரு புதிய அரசியல் முகங்கள் உருவாகலாம்.அவர்கள் வேறு கோணங்களிலும் வேறு பாதைகளிலும் பயணிக்கலாம். யார் கண்டார். உலக அரசியல் அரங்கில் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். எதுவும் நிரந்தரமில்லை. ஐரோப்பிய-இந்திய ஒப்பந்ததிற்கு பெரிய ஆதரவில்லை என்பது நான் கண்ட அனுபவம்.
Checked
Fri, 02/27/2026 - 20:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed