புதிய பதிவுகள்2

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார். அதன்படி, ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்த நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றிருந்தார். இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார். இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444334

காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

1 month ago
காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு August 23, 2025 7:43 am மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் தெரிவித்துள்ளார். இதை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய்யின் அடிப்படையிலானது என பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 15-ம் திகதி நிலவரப்படி காசா நகரில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதியில் காசா முனையின் டெய்ர்-எல்-பலாஹ் மற்றும் கான் யூனிஸ் பகுதியிலும் இந்த நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழந்து வருகின்றனர் என ஐபிசி கூறியுள்ளது. கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது. அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 62 ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/famine-in-gaza-500000-people-in-need/

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ரணில் ஏன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்? விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகரித்த சர்க்கரை அளவு காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியலைத் தொடர்ந்து, நேற்று (22) இரவு பல அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்குச் சென்றனர். முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க மற்றும் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ஆதரவாளர்கள் குழுவுடன் சிறைச்சாலைக்கு வந்தனர். இருப்பினும், அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை, பின்னர் வெளியே காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணில்-ஏன்-வைத்தியசாலையில்-அனுமதிக்கப்பட்டார்/175-363333

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month 1 week ago
ஊழல் விசாரணை வருகிற வரையும் ஊடகவியலாளர் சந்திப்பு, அறிக்கை, கூட்டம், வெளிநாட்டுப்பயணம் என பிசியாக இருக்கும் அரசியல்வாதிகள் விசாரணை என்றவுடன் உலகத்தில் இல்லாத நோய்கள் எல்லாம் வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விடுகிறார்கள். இதிலிருந்து விளங்குவது என்ன? ஏன் மக்கள் அதை உணர்கிறார்கள் இல்லை? இவரது கைதுக்கு சரியான விளக்கம் கொடுக்கப்பட்டு மக்கள் யதார்த்தத்தை உணர்ந்து, நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வைக்கச் செய்தால் செய்தால் மட்டுமே அடுத்து வரும் பெரிய தலைகளை இலகுவாக கைது செய்ய முடியும். இப்பவே தங்கள் கைதுகளை தடுக்கும் வழிமுறைகளை தயார் செய்ய தொடங்கி விடுவார்கள் ராஜ பாக்ஸர்கள். இன்றைக்கே மஹிந்தா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்பதே ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி அதையே செய்வதாக விளக்க வேண்டும். ஆம், அவர்கள் புலிகளை கொலை செய்வதற்கு மக்கள் வாக்களித்தார்கள் என்று சர்வதேசத்திலும் நாட்டிலும் கூறி தமிழ் மக்களை அழித்து சாதித்தார்கள் யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஊழல்வாதிகளை கைது செய்தவுடன் நாடும் சர்வதேசமும் ஏதோ தியாகியை கைது செய்வதுபோல் கொந்தளிக்கிறார்கள்.

"கோட்டாபய ஒரு கொடுமைக்காரன்"? - ரிஷாத் அதிரடி பேச்சு

1 month 1 week ago
நீதிமன்ற விசாரணையின்போது தனக்கு மொழிப்பிரச்சனை என்று சொன்னவர், இன்று அதை மறந்து விளாசுகிறார். தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்குமாம். புலிகளை சாட்டி, காட்டி அரபு முஸ்லீம் நாடுகளிடம் இரு இனமும் பெற்றவை அப்பப்போ வெளிவருகிறது. கட்டார் பள்ளி கட்ட நிதியளித்ததாம். தனக்கு பாதிப்பு வருகிறதென்றால் வீராவேசமாக நீதி கதைப்பார்கள். இன்னும் சிறிது நாளில் இவரும் விசாரணை வலையத்துக்குள் வருவார், அதுவரை தன் முன் கூட்டாளிகளை காட்டிக்கொடுக்கட்டும்.

கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர் : தலைவரை வெளியேற்ற எடுத்த முயற்சி | நன்னிச் சோழன்

1 month 1 week ago
நான்காம் ஈழப்போரின் கடைசிக்கட்டம் நடைபெற்ற பகுதிகளை காட்டும் வரைபடம் | படிமப்புரவு: அறியில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month 1 week ago
ஊழல் வாதிகளுக்கு தோள்கொடுத்து அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வைத்தவர் இவர்தான். ஏன் இவர் ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும்? சட்டத்தின்முன் ஏன் நிறுத்தவில்லை? இப்போ; ராஜபக்ச குடும்பத்தினருக்கு உளறல் எடுத்திருக்கும். முன்னே அவர்களுக்கு தெரியும் தங்கள் கைது செய்யப்படுவோம் என்று. அதனாலேயே வீடற்றவராக காண்பித்து மக்களிடம் பிச்சை எடுக்கிறார்கள். எந்த மக்களை சுரண்டினார்களோ ஏமாற்றினார்களோ அந்த மக்களை தமது சுயநலத்திற்காக பாவிக்கிறார்கள். இவர்களின் ஊழலால் தெருவுக்கு வந்து பிச்சை எடுக்கிறார்கள், இவர்களின் செல்வாக்கிற்காக போர் செய்து அவயவங்களை இழந்து, உறவுகளை இழந்து நீதிக்காய் உண்மைகளை வெளியிட்டவர்களை கொலை செய்து தனித்தவர்களுக்கு இந்த மக்கள் உணவும் வீடும் கொடுப்பார்களா? மக்களை எந்த விதத்திலும் ஏமாற்றி, கலவரத்தை தூண்டி தங்கள் நலனை பாதுகாப்பதில் இவர்கள் பலே கில்லாடிகள். இப்போ சட்டம் செய்ய வேண்டியது; இவர்களது ஊழல்கள் எல்லாவற்றையும் விசாரித்து உடனுக்குடன் மக்களுக்கு தெளிவுபடுத்தி நாட்டில் எவ்வளவு சுரண்டினார்கள், அதை என்ன செய்தார்கள், யாரெல்லாம் உடந்தை என்பதை வெளிச்சமாக வெளியிடவேண்டும். இவர்களால் கொலை செய்யப்பட்டவர்களை வெளியிட வேண்டும். இவர்களால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புகளை வெளியிட வேண்டும். இல்லையேல் நாட்டில் கலவரம் ஏற்பட்டு கொலைகள் நடப்பதை தவிர்க்க முடியாது. இதனால் தமிழர்மேலேயே வன்முறைகள் திரும்பும். அனுமதியற்ற, தேவையற்ற விகாரைகளை யார் கட்டினார்கள், எங்கிருந்து பணம் வந்தது, எதற்காக கட்டினார்கள் என்கிற சட்ட விசாரணை செய்து தண்டிக்கப்பட வேண்டும். நிஞாயமான முறையில் விசாரணைகள் நடைபெறாமை, சட்டத்தை தமக்கு சார்பாக வளைத்தமையே இப்படிப்பட்டவர்கள் கைது செய்யப்படும்போது அரசியல் பழிவாங்கல் என்று தப்பிப்பதும், மக்களை தூண்டி விடுவதும் நடைபெறுகிறது. சட்டம் தன் வேலையை செய்திருந்தால், தப்பு செய்பவர் தண்டனை பெறுவார் என்கிற மனநிலை மக்கள் மனதில் நிலைத்திருக்கும். சாட்சியத்தின் விசாரணைகளின் பெயரிலேயே இவர்களுக்கு தண்டனை என்பதை மக்கள் உணரச்செய்ய வேண்டும். பாவம் மக்கள், தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.

கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர் : தலைவரை வெளியேற்ற எடுத்த முயற்சி | நன்னிச் சோழன்

1 month 1 week ago
முகவுரை: தமிழர் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட கடைசி வலிதாக்குதல் (offensive) நடவடிக்கையான "கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர்" இற்காக எழுதப்படும் கட்டுரை இதுவாகும். இவ்வூடறுப்புச் சமரானது தரையிறங்கி செய்யப்பட்டதால் ஈழப்போர் வரலாற்றில் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட கடைசி தரையிறக்கமாகவும் பதியப்படுகிறது. வீரச்சாவடைந்துவிட்ட தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார் என்று கூறி நம்பவைக்கும் கபட நாடகத்திற்கு பாவிக்கும் முக்கிய கதையும் இதுதான். எனவே அன்று நடந்த அத்தரையிறக்கம் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டுவதற்காக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையினை எழுதுவதற்கு இச்சமர்க்களத்தில் நேரடியாக களம்கண்ட கட்டளையாளர்களான திரு வீரமணி, திரு ஜெயாத்தன் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பா சில போராளிகள், மற்றும் நேரில்லாமல் பங்கெடுத்த திரு சங்கீதன் எ தயாபரன் போன்றவர்களிடமிருந்து பல்வேறு மூலங்கள்கொண்டு பெறப்பட்ட தகவலானது பாவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் திரு வீரமணி மற்றும் திரு ஜெயாத்தன் ஆகியோரின் தகவலாக பதியப்பட்டுள்ளது அவ்விருவரும் ஊடகவியலாளர் திரு. நிராஜ் டேவிட் அவர்கட்கு 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் வழங்கிய நேர்காணலிலிருந்து பெறப்பட்ட தகவலாகும். மேலும் வேறு விடயங்களை எழுதுகையில் இச்சமர் தொடர்பில் தொட்டுச்சென்ற தொடர் கட்டுரையான போராளி அபிராம் அவர்களால் எழுதப்பட்ட “ஒரு போராளியின் அம்மா” உம் கட்டுரையாக்கத்திற்கு பாவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மே 15ம் திகதி நடைபெற்ற மக்கள் சரணடைதலின் சில நிகழ்வுகளும் தரைத்தோற்றமும் தேவை கருதி இதனுள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை கட்டுரையாசிரியரான நன்னிச் சோழனின் தனிப்பட்ட அனுபவங்களாகும். மொத்தத்தில், இக்கட்டுரையானது இச்சமர் தொடர்பிலான ஆவணங்களில் ஒன்றாக எதிர்கால தலைமுறைகளுக்கு விளங்கும் என்று கட்டுரையாசிரியர் எதிர்பார்க்கிறார். முன்னுரை: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை எப்படியேனும் பாதுகாப்பாக வெளியேற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளும் முதன்மை நோக்கத்துடன் ஒரு முற்றுகை உடைப்புச் சமர் மேற்கொள்ளப்பட்டது. அது இறுதித் தருவாயில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சியாகும். இவ்விறுதி முயற்சியே இவ்வெஞ்சமர் ஆகும். இச்சமரானது எவ்வடிவிலான வழங்கலுமில்லாமல் புலிகளின் மனத்திடத்தையும் நம்பிக்கையையும் பெரும் வலுவாகக்கொண்டு சூட்டாதரவுகூடயின்றி மேற்கொள்ளப்பட்டது. இதில் கரும்புலிகள் கூட முன்னின்று தரைப்புலிகளாக பொருதி வெடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இம்முயற்சி இரண்டு தடவைகள் முயலப்பட்டு இரு தடவையும் தோல்வியிலேயே முடிந்தது. இவ்விரு முயற்சியிலுமாக சில மூத்த கட்டளையாளர்களுட்பட மொத்தமாக நூற்றிற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர். சமர்க்களச் சூழ்நிலை: நான்காம் ஈழப்போரின் இறுதி நாட்களில் கணைகள், ஆளணி, மருத்துகள் என்பன முற்றிலும் வரத்தின்றி அனைத்திலும் வறிய நிலையிலேயே தமிழர் சேனை பொருதிக்கொண்டிருந்தது. இறுதியாக நிலைகொண்டிருந்த ஆட்புலமான வெள்ளா முள்ளிவாய்க்காலின் ("முள்ளிவாய்க்கால் ஆ பகுதி" என்று இதற்கு அக்காலத்தில் புலிகள் பெயர்சூட்டியிருந்தனர்) புவியியலும் பெரும் படையொன்று நிலைகொண்டிருந்து பொருதுவதற்கான தரைத்தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. அத்துடன் காப்புமறைப்புகளுக்கு ஏதுவான இயற்கை தரைத்தோற்றம் அங்கு காணப்படவில்லை. பரந்தன்-முல்லை வீதியின் கோவில் பக்கத்திய ஆகக்கூடிய இயற்கை மறைப்பாக வடலிக்காடுகள், பனைகள், பற்றைகள் மற்றும் இன்னபிற மரங்கள் போன்றனவே இருந்தன. நந்திக்கடலையொட்டிய பக்கம் காய்ந்த பற்றைகளும் பெரும்பாலும் தரவை வெளியுமாக இருந்தது. மேலும் எல்லா இடத்திலும் மக்களின் தரப்பாள் கொட்டில்களும் சிங்கள எறிகணை வீச்சிலிருந்து தம்முயிர் காக்க பதுங்ககழிகளும் அமைக்கப்பட்டிருந்தன. விரல் விட்டு எண்ணக்கூடியளவில் கல் வீடுகள் காணப்பட்டன. 2025ம் ஆண்டு கால வெள்ளா முள்ளிவாய்க்கால் பரப்பின் தரைத்தோற்றத்தைக் காட்டும் படிமம். விடத்தலடி பிள்ளையார் கோவிலுக்கு கீழுள்ள பரப்பிற்குள்தான் கடைசி சமர் நடைபெற்றதாக சிங்களம் கூறுகிறது | படிமப்புரவு: கூகிள் மப் மொத்தமாக அந்த சின்னஞ்சிறு பரப்பே சமர்க்களமாக விளங்கியது. மேற்கூறிய காரணங்களுடன் சிங்களச் சேனையும் தமிழரின் ஆளுகைக்குட்பட்டிருந்த இறுதி ஆட்புலம் மீதான தனது முற்றுகையினை இறுக்கிவிட்டிருந்தது. அதிலும் மே மாதத்தின் இரண்டாவது கிழமையிலிருந்து சிங்கள முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையின் (FDL/ Forward Defence Lines) முதல் படைவேலியானது நெருக்கமாக காவலரண்கள் அமைக்கப்பட்டு ஆளிடப்பட்டிருந்தது. அத்துடன் நெருக்கமாக கனவகை படைக்கலன்களாலும் வலுப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, மே மாதம் 15ம் திகதி வட்டுவாகல் பாலத்திற்கு செல்லும் வீதியின் இரு மருங்கிலும் சிற்சில அடி இடைவெளியில் சீனத் தயாரிப்பு விஃவ்ரி கலிபர் சுடுகலன்கள் நிறுத்தப்பட்டு அந்த முன்னரங்க நிலை வலுப்பட்டிருந்ததை தனது கண்களால் கட்டுரையாசிரியரான நன்னிச் சோழன் கண்டார். இவற்றிற்குப் பின்னால் தகரிகள் கொண்டு அமைக்கப்பட்ட இரும்புச்சுவர் போன்ற இரண்டாவது படைவேலி அமையப்பெற்றிருந்தது. அதற்குப் பின்னால் மற்றொரு படைவேலியும் அமைத்திருந்தார்கள். திட்டம் (மேலோட்டமானது): மேலே சுருங்க கூறியுள்ள சிங்களத்தின் வலுவுடன் புலிகளின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு பெரும் படையொன்று உடைத்து ஊடறுத்து வெளியேற முடியாத நிலையிருந்தது. ஏனெனில் பெரும் படையொன்று வெளியேறும் சமயத்தில் அவர்களில் ஏற்படும் காயக்காரர்களிற்கு மருந்திடவும் வெளியேறும் ஆளணியை பராமரிக்கவும் (உணவுகள் மற்றும் ஏனைய பராமரிப்புகள்) இயலாத நெருக்கடியான சூழ்நிலை அங்குநிலவியது. மேலும் பெரும் படை வெளியேறும் போது நகர்வுப் பாதைகளிலுள்ள தடயங்களைக்கொண்டும் இலகுவாக பகைவரால் பாதைகளை கண்டறிய முடியும். அதுவே சிறிய படையெனில் அதற்கேற்படும் மேற்கூறிய நெருக்கடிகள் யாவற்றையும் தணிக்கமுடியும். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே உடைத்து ஊடறுக்கும் பொழுதில் எத்தனை பேர் அந்த ஊடறுப்புக்குள்ளால் வெளியேறுவது என்பது தொடர்பிலான திட்டம் தீட்டப்பட்டது. அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான போராளிகளே வெளியேறுவது திட்டமாகயிருந்தது. திட்டத்தின் படி புலிகளின் பல்வேறு சண்டை உருவாக்கங்களிருந்து (combat formations) களமுனை பட்டறிவு கொண்ட தலைமைக்கு விசுவாசமிக்கவரென்ற 450 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். → எ.கா. ராதா வான்காப்புப் படையணியின் படைக்கலன் பாதுகாப்பு அணியிலிருந்து மொத்தம் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்கள் யாவரும் 18 பேர்கொண்ட 25 அணிகளாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு மூத்த கட்டளையாளர் தலைமை தாங்கினார். அவரின் வழிநடத்தலிலேயே இவர்கள் இயங்குவர், உடைத்து வெளியேறிய பின்னராயினும். தரையிறக்கமானது பகைவரின் கரையிலிருந்து 1200 மீட்டர் தொலைவில் நடத்தப்படும். பின்னர் அங்கிருந்து இவர்கள் நீருக்குள்ளால் ஓசையின்றி விரைவாக நடந்து சென்று பகைவர் மீது தாக்குதல் தொடங்க வேண்டும். சமரைத் தொடங்குகையில் நீர்ப்பரப்புக்குள் நின்று சுட்டபடி தான் தொடங்க வேண்டும். அவ்வாறு சுட்டு முன்னேறி தடைகளை உடைத்தபடி தான் நிலப்பரப்பினை அடையவேண்டும். இதில் கடினமான விடையம் என்னவென்றால் நீர்ப்பரப்பிற்குள்ளும் சிங்களவர் கொட்டன் ஊன்றி இரண்டு அ மூன்று அடுக்கிற்கு சுருட்கம்பி வேலி அடித்திருந்தனர். இவற்றை தடைவெடிகள் (torpedo) கொண்டு தகர்த்தபின்னரே கரையேற முடியும். கேப்பாப்பிலவு நீர்ப்பரப்பு பக்கமிருந்த பகைவரின் முட்கம்பிகள் கொண்ட வேலி | படிமப்புரவு: ரூபபாகினி களமுனையில் ஊடறுத்து உடைத்த பின்னர் ஒவ்வொரு அணியும் உட்சென்று நகரவேண்டிய பாதை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அவ்வழியில் குறித்த சில இடங்களில் புவிநிலைகாண் தொகுதி (GPS) மூலம் குறிக்கப்பட்ட இடங்களில் புலிகளால் உணவுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வுணவுப்பொருட்கள் மிகக் குறைந்தளவிலான போராளிகளுக்கே போதுமாகயிருந்தது. இப்பணியினை தமிழீழப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த கட்டளையாளர்களான பேரின்பம் (மாவீரர்) மற்றும் ஜூட் எ முகுந்தன் (மாவீரர்) ஆகியோரின் கட்டளைபெறும் அணிகள் முன்கூட்டியே உட்சென்று செவ்வன செய்துமுடித்திருந்தன. உடைப்பு சரிப்பட்டு வருமாயின் தேசியத் தலைவருடன் நிற்கும் அணியும் வெளியேறும் என்பது திட்டமாகயிருந்தது. தலைவருடன் வெளியேறிச் செல்வோரை பெற்றுக்கொள்ள விடுதலைப் புலிகளின் வான்புலிகளைச் சேர்ந்த "நீலப்புலி" வானோடி தெய்வீகன் (பின்னாளில் புலம்பெயர் தமிழ் வஞ்சகர்களின் நயவஞ்சகத்தால் சிங்களப்படையிடம் அகப்பட்டு சாக்கொல்லப்பட்டார்.) அவர்கள் தலைமையிலான அணியொன்று கேப்பாப்பிலவு பகுதிக்குள் ஊடுருவி நின்றனர். பகைவரின் விழிப்பும் எம்மவரின் நம்பிக்கையும்: இந்த திட்டமானது மிகவும் தீர்க்கமாக புலிகளின் கட்டளையாளர்களால் வகுக்கப்பட்டிருந்தது. இந்நகர்வு மூலம் மிகக் குறைந்த அளவிலான போராளிகளே வெளியேற முடியும் என்பதால்தான் ஏனையை போராளிகளுக்கு தத்தமது சொந்த முடிவுகளை எடுக்குமாறு பணிப்புரையிட்டனர். கட்டளையாளர்கள் யாவரும் பகைவரின் கரையோர படைவேலியின் வலுவினை நன்றாக அறிந்திருந்தும் இம்முயற்சியில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்தனர். கடைசி வரையும் தமக்கேயுரித்தான மனத்திடத்தோடு புலிகள் இருந்தனர். அதுமட்டுமின்றி புலிகள் தாம் உடைத்து ஊடறுக்கப்போகும் இடத்தினை பகைவர் அறிந்திருந்ததையும் நன்கறிந்திருந்தனர். பகைவரும் அதற்கேற்ப நந்திக்கடலை முழுக் கண்காணிப்புக்குள் வைத்திருந்தனர். நீர்ப்பரப்பில் தமிழர் சேனையின் நடமாட்டத்தை நோக்க கதுவீ (RADAR) முதற்கொண்டு பூட்டி ஆயத்தமாக கரையிலிருந்தான். ஆகவே கெடுவேளையாக முயற்சி தோல்வியில் முடியுமட்டில் இறுதிவரை சிங்களப்படையுடன் பொருதி அதால் வரும் விளைவுகளை ஏற்பது, அது வீரச்சாவாக இருந்தாலும், என்பதில் உறுதியாக இருந்தனர். தமிழீழத்தின் கடைசி சொட்டு ஆட்புலத்தையும் சிங்களப்படை குருதி சிந்தியே தமிழரிடத்திலிருந்து வன்வளைக்கவேண்டும் என்று புலிவீரர்களும் அவர்தம் கட்டளையாளர்களும் ஒடுவிலில் (கடைசியின் இறுதி) உறுதிபூண்டிருந்தனர். பயணத் திசை: இத்தாக்குதலிற்காக புலிவீரர்கள் வெள்ளா முள்ளிவாய்க்கால் கரையிலிருந்து (விடத்தலடிப் பரப்பு) வெளிக்கிட்டு நந்திக்கடல் களப்பூடாக பயணித்து கேப்பாப்பிலவு பரப்பை அடைய வேண்டும். அடைந்து தரையிறங்கிய பின்னர் சிங்களப் படையினரின் கரையோரக் காவலரண்களையும் சிறு முகாம்களையும் தாக்கியழித்து அவற்றிற்கு பின்னாலுள்ள கவச வேலியை ஊடறுத்துத்தான் கேப்பாப்பிலவு காட்டுக்குள் ஊடுருவ வேண்டும். பாவிக்கப்பட்ட கடற்கல வகை: முதலாம் முயற்சியில் தரையிறக்கத்திற்கு வகுப்புப் பெயர் அறியில்லா ஓரிரு கட்டைப்படகுகள் பாவிக்கப்பட்டன. முதல் முயற்சியிலிருந்து கிட்டிய பட்டறிவின் மூலம் இரண்டாம் முயற்சியிற்கு மேலதிக கடற்கலங்கள் தேவையென அறிந்துகொண்டனர். அதற்காக வகுப்புப் பெயர் அறியில்லா 3 கட்டைப் படகுகளும் (சிறிய வகை மீன்பிடிப்படகு) அவற்றோடு இணைக்க 3 மிதவைகளும் பாவிக்கப்பட்டிருந்தன. அதாவது ஒரு படகிற்கு ஒரு மிதவை வீதம் மொத்தம் 3 மிதவைகள் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு கட்டைப்படகும் ஒரு மிதவையிலுமாக ஒரே நேரத்தில் 30 (15+15) பேரை ஏற்றிப்பறிக்க இயலும். இந்த மிதவையானது ஒரே நாளில் உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி: பயிற்சி மே மதம் 3ம் திகதி மட்டில் தொடங்கி பத்து நாட்கள் நடந்தது. பயிற்சிகளை அன்பு மாஸ்டர் அவர்கள் வழங்கினார். உடைத்து வெளியேறும் போதில் ஏறத்தாழ 60 கிமீ தொலைவு நடந்து கடக்கவேண்டி வரும் என்று கணிப்பிடப்பட்டிருந்ததால் அதற்கேற்பவே பயிற்சிகளும் வடிவமைக்கப்பட்டன. அதற்கான நடை பயிற்சியை முள்ளிவாய்க்கால் கடற்கரையில் போராளிகள் மேற்கொண்டனர். இறுதியாக புலிகளின் ஆட்புலத்திலிருந்த 6 கிலோமீட்டர் நீளமான கடற்கரையில் குறிப்பிட்ட 3 கிலோமீட்டர் நீளத்திற்கு 20 தடவைகள் இவர்கள் நடந்தனர். அதாவது 60 கிலோமீட்டர் தொலைவு நடைபயிற்சி செய்தனர். நடப்பதற்கு இலகுவற்ற மணல் பாங்கான தரையில் 50 கிலோ எடையுள்ள படையப்பொருட்களையும் சுமந்தபடியேதான் 450 போராளிகளும் பயிற்சி செய்தனர். இடையிடையே சூட்டுப்பயிற்சிகளையும் மேற்கொண்டனர். பயிற்சியின் போது இவர்கள் உட்கொள்வதற்கு தேவையான சத்தான உணவுகள் கூட இல்லாமல் தான் பயிற்சிகள் செய்தனர். முதல் இரு நாட்களும் எவ்வித உணவுமின்றி பயிற்சிகள் போய்க்கொண்டிருந்தன. இதில் நடைபயிற்சியின் போது நீர் அருந்தக் கூட தடை விதிக்கப்பட்டது. காட்டிலே நீர் கிடைக்காது என்பதால் ஒரு கலன் நீருடன் மட்டுமே இவ்வளவு பயிற்சியையும் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மூன்றாம் நாள் பின்னேரம் மூவருக்கு ஒரு பொதியென்று உணவு வந்திருந்தது. அதை அவர்கள் பகிர்ந்துண்டனர். இவ்வாறாக சில நாட்களில் உணவுகள் இன்றியும் சில வேளைகளில் அரிதாக கிடைத்தும் பத்து நாட்கள் பயிற்சிகள் நடந்தன. இறுதித் திட்டம்: 13ம் திகதி பொட்டம்மான் அவர்களின் பதுங்ககழிக்குள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்பதுங்ககழியானது முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்திற்கு அருகிலிருந்த பிட்டியிலிருந்தது (வீதிக்கு பெருங்கடல் பக்கம்). அது தேக்கங்குத்திகளால் ஆனதாகும். அக்கூட்டதிற்கு பிரிகேடியர் ஜெயம், பிரிகேடியர் சொர்ணம், கேணல் தரநிலை கொண்ட வேலவன் (போர்க்கைதியாகி தடுப்பில் படுகொலையானார்), ரட்ணம் மாஸ்டர் (மாவீரர்), சாள்ஸ் (மாவீரர்), திரு வீரமணி உள்ளிட்ட பல கட்டளையாளர்கள் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் தான் தலைவரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான திட்டமிடலும் முடிவும் எடுக்கப்பட்டது. இம்முடிவானது கட்டளையாளர்களால் எடுக்கப்பட்டதாகும். தலைவரை எவ்வாறு ஆனந்தபுரம் முற்றுகைச் சமரில் வெளியேற்றினரோ அதையொத்த நடவடிக்கை மூலம் இங்கிருந்தும் தலைவரை வெளியேற்ற முடிவெடுக்கப்பட்டது. வெளியேற்ற நடவடிக்கைக்கான வலிதாக்குதல் மே மாதம் 15ம் திகதி இரவு நடத்துவதாக அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேற்கொண்டு ஏனைய நகர்வுத் திட்டங்களும் தீட்டப்பட்டன. திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளபடியான சமர் தொடங்குகையில் அதற்கேற்ப சிங்களப் படையினை திசைதிருப்ப ஓர் போலி சமர் இரட்டைவாய்க்கால் பரப்பில் செய்வதென்றும் முடிவானது. திட்டமிடல் முடிந்த பின்னர் வீரமணி அவர்கள் ரட்ணம் மாஸ்டருடன் உரையாடுகையில் தலைவரை கொண்டு செல்லும் படகில் தலைவரின் முன்னை நாள் மெய்க்காவல் அணி பொறுப்பாளர் திரு வீரமணி அவர்களையும் செல்லும்படி ரட்ணம் மாஸ்டர் கேட்டுக்கொண்டார். அப்போது வீரமணி அவர்கள் தன்னுடன் நிற்கும் போராளிகளை என்ன செய்ய என்று ரட்ணம் மாஸ்டரிடம் கேட்டதிற்கு அவர்களை கரைக்கு வரச்சொல்லுமாறு பணித்தார். அதே நாள் அரசியல்துறையினர் செஞ்சிலுவைச்சங்கத்தோடு மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக மே 15ம் திகதி நண்பகல் 2 மணிக்கு பொதுமக்களை சிங்களக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டது. அரசியல்துறைப் போராளிகள் முதற்கட்டமாகவும், அவர்களுக்குப் பின்னால் காயப்பட்டவர்களும் அதன் பின்னால் பொதுமக்களும் வெளியேறுவர். அவர்களைத் தொடர்ந்து ஏனைய போராளிகள் வெளியேறுவர். மக்கள் சென்ற பின்னர் - மக்கள் தொகை குறைவாக இருப்பதை பாவித்து - மக்களின் இழப்புகளை குறைத்து தாக்குதல் செய்ய தலைமை முடிவு செய்தது. முன்னேற்பாடுகள்: சமர் தொடங்கும் தகவலானது சிறப்புப் பயிற்சியிலிருந்த 450 போராளிகளுக்கும் மே தாம் 14ம் திகதி அறிவிக்கப்படுகிறது. எனவே அடுத்த நாள் இரவில் களப்பைக் கடந்து மேற்கொள்ளப்போகும் தாக்குதலிற்கான ஆயத்தப்பணிகளில் புலிகளின் போராளிகள் ஈடுபட்டனர். உலர் உணவுகள், பழக்கலன்கள் மற்றும் இறைச்சி துண்டு கலன்களை போராளிகள் பொதி செய்தார்கள். மூன்று மாதத்திற்கு தேவையான பொதி செய்யவேண்டிய உணவுகள் என்று கொடுக்கப்பட்டிருந்த உணவுகள் கூட சொற்ப உணவுகளாகவே இருந்தன. போராளிகள் பொதிசெய்த உணவுகளின் ஒரு பகுதி | படிமப்புரவு: ரூபபாகினி போராளிகள் ஆயுதங்களையும் நன்றாக தூய்மைப்படுத்தி நீர்க்காப்பிட்டனர். அதே நேரம் ஏனைய போராளிகளை தத்தமது உற்றார் உறவினர்களின் வீடுகளிற்குச் செல்லுமாறும் அவரசரத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம் என்றும் சுற்றறிவிப்பு முறைப்படியாக அனுப்பப்பட்டது. இதனை கட்டுரையாசிரியரின் குடும்பத்தினரிருந்த பதுங்ககழிக்குள் அவரின் சுற்றத்தினராக இருந்த மகளிர் போராளியொருவர் நேரில் வந்து தெரிவித்துவிட்டு தனது பெற்றாரின் இருப்பிடத்தையும் அறிந்துகொண்டு சென்றார். (அன்று சாமம் முள்ளிவாய்க்கால் கிழக்கின் மேற்குப் பரப்பில் நிலமே அதிர வெடித்து வானில் பெரும் தீப்பிழம்பொன்று எழும்பியதை கட்டுரையாசிரியர் கண்டுள்ளார். அவர் அப்போது வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையாக வீதியில் நின்றுகொண்டிருந்தார்.) சமர் தொடங்குதல்: மே மாதம் 15ம் திகதி விடிந்தது. அன்று இரவு ஓர் நகர்விற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. நண்பகல் ஒரு மணியளவில் வெள்ளா முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் கோவிலின் கருவறைக்கு அருகில் புலிகளின் மூத்த கட்டளையாளர் ஒருவர் தலைமையில் சந்திப்பு ஒன்று நடந்தது. இக்கோவிலானது முள்ளி. உண்டியல் சந்திக்கு அருகாமையில் அமைந்திருந்தது. சந்திப்பின் போது போராளிகளுக்கு கட்டளையாளர் அறிவுரையினை வழங்கினார். அவர் வழங்கிய அறிவுரை கீழ்க்கண்டவாறு இருந்ததாக யாழ் கள எழுத்தாளர் @அபிராம் அவர்கள் தனது தொடர் கட்டுரையான "ஒரு போராளியின் அம்மா" என்பதின் பாகம்- 17 இல் எழுதியுள்ளார்: இவர் இவ்வாறு கதைத்துக்கொண்டிருக்க இவர்களுக்கு அருகிலிருந்த கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் சேர்த்திருந்த புதிய போராளிகளால் காக்கப்பட்ட இரட்டைவாய்க்கால் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையானது சிங்களப் படைகளால் உடைக்கப்பட்டது. இவர்கள் இருந்த இடத்திற்கு மிக நெருக்கமாக பகைவர் நெருங்குகிவருவதை நடைபேசி மூலம் இளநிலை கட்டளையாளரொருவர் அறியத்தந்தார். மேலும் பகைவர் மக்களுடன் மக்களாக மக்களை மனிதக் கேடயமாக பாவித்தபடி வரிப்புலியில் வருவதாகவும் தகவல் வந்தது. அத்துடன் அவர் இந்த முற்றுகை உடைப்பிற்கு தயாராகிவரும் போராளிகளை பின்னகருமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு மறுப்புத் தெரிவித்த மூத்த கட்டளையாளர் தனக்கு அறிவிக்கப்பட்ட நிலைமையை அங்கிருந்த போராளிகளுக்கு விளக்கிக் கூறினார். அதை செவிமடுத்த அகிலன் என்ற இளநிலை கட்டளையாளர் தன்னுடைய 18 போராளிகளையும் அழைத்துக்கொண்டு மூத்த கட்டளையாளரிடம் இசைவுபெற்ற பின்னர் பகைவர் உடைத்த முன்னரங்க நிலை நோக்கி வேகமாக ஓடினான். அவர்களிற்கான சண்டை பொறுப்பை அன்பு மாஸ்ரர் நெறிப்படுத்தினார். அங்கு சென்ற அகிலனின் அணியினர் தம்மால் இயலுமட்டும் பகைவருடன் பொருதினர். தம்மால் நெடிய நேரம் தாக்குப்பிடிக்க இயலாது என்பதை அன்பு மாஸ்டரிற்கு நடைபேசியில் அகிலன் அவர்கள் அறிவித்தார். மேலும் தமக்கு கரும்புலி ஒன்று வேண்டும் என்றும் கிடைத்தால் கொஞ்ச நேரம் தாக்குப்பிடிக்கலாம் என்றார். அவ்விக்கட்டான சூழ்நிலையில் பின்னகர்த்தப்பட்ட கரும்புலிகளை முன்னகர்த்துவது கூட்ட நெரிசலில் கடினம் என்று அம்மூத்த கட்டளையாளர் அன்பு மாஸ்டரிற்கு எடுத்துரைத்தார். அப்போது ஊடறுப்புத் தாக்குதலிற்கு ஆயத்தமாகயிருந்த போராளிகளிலிருந்து ஒரு போராளி கரும்புலியாக செல்ல முன்வந்தார். அவரை இரட்டைவாய்க்கால் சிங்களத் தரைப்படையின் 58 வது படைப்பிரிவின் முன்னரங்க முன்னணி கட்டளை மையத்தின் 30 மீட்டருக்குள் கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ள கட்டளை பிறப்பித்தனர். இதற்காக வெடிமருந்து கட்டிய உந்துருளியில் கரும்புலியை தயார்படுத்தினர். கரும்புலி தாக்குதலிற்கு செல்கையில் அவருக்கு காப்புச் சூடு வழங்க இன்னும் இரு போராளிகள் அனுப்பப்பட்டனர்; எழில்வண்ணன் என்பான் கரும்புலியுடன் உந்துருளியில் பின்னிற்கு எழும்பி நின்று காப்புச் சூடு கொடுக்க வேண்டும், கனிவாளன் என்பான் வீடொன்றின் மேலிருந்து காப்புச் சூடு வழங்க வேண்டும். இவர்கள் புறப்பட்டுச் செல்ல எல்லையில் நின்ற அகிலனின் அணியினர் வெடிப்பிலிருந்து ஏற்படப் போகும் பாதிப்பிலிருந்து தம்மை காக்க பின்னுக்கு நகர்ந்தனர். சம நேரத்தில் உந்துருளியை முல்லை-பரந்தன் வீதி வழியே ஓட்டிச் சென்ற கரும்புலி வீரன், இலக்கை நெருங்கியதும் எழில்வண்ணன் கீழே குதித்திட கரும்புலி இலக்கை அடைந்து வெடித்தான். இதனால் அங்கிருந்தான பகைவரின் முன்னகர்வு தடைப்பட்டது. மேற்கூறிய கரும்புலித்தாக்குதலுட்பட மொத்தம் மூன்று சக்கை தாக்குதல்கள் அற்றை நாளில் மேற்கொள்ளப்பட்டன. சக்கை உந்துருளி தாக்குதலிற்கு முன்னர் நண்பகல் வேளையில் ஒரு கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அது வெள்ளாமுள்ளிவாய்க்காலின் இரட்டைவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த 58வது படைப்பிரிவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலை சக்கை நிரப்பிய சிவப்பு நிற சாகாடு (Double cab/ Pickup) ஒன்றில் சென்ற இரு கரும்புலி மறவர்கள் மேற்கொண்டனர். இலக்கை நெருங்குகையில் பகைவரின் ஆர்.பி.ஜி உந்துகணை தாக்குதலிற்கு சாகாடு இலக்காகி வெடித்துச் சிதறியதால் அத்தாக்குதல் கைகூடவில்லை. மூன்றாவதாக 58வது படைப்பிரிவினர் மீது மீளவும் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எம்மவர் முன்னரங்க நிலை மீது தாக்க ஆயத்தமாகிகொண்டிருந்த படையினர் மீது சக்கை நிரப்பிய உழுபொறி ஒன்றில் சென்ற கரும்புலிகள் இடித்து வெடித்தனர். எனினும் இத்தாக்குதலின் பெறுபேறுகள் தெரியவில்லை. பங்கெடுத்த போராளிகளோடான தனிப்பட்ட தொடர்பாடல்: சமரில் பங்கெடுக்கப் போகும் முன்னர் கட்டளையாளரான கடற்புலி லெப். கேணல் சிறிராம் அவர்கள் தன் உற்ற நண்பனான திரைப்பட இயக்குநரும் ஊடகவியலாளருமான திரு. அன்பரசனை கண்டு கதைத்தார். அப்போது அன்பரசனிடம், என்றார் லெப். கேணல் சிறிராம். பின்னர் மேலும் சில கதைத்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றார். எனினும் இசைப்பிரியாவை தம்முடன் வர அழைத்த போது, என்று கூறி மறுத்தாக திரு அன்பரசன் அவர்கள் கூறியுள்ளார் (ஆதாரம்: இயக்குநரும் ஊடகவியலாளருமான அன்பரசனின் கடைசி நேர அனுபவங்கள்). மக்கள் சரணடைதல்: பொதுமக்களின் சரணடைவானது வட்டுவாய்க்கால் பக்கமாக நடந்தது. இரண்டு மணிக்கு சரணடைய வேண்டிய மக்களை உள்ளெடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தியது சிங்களப் படைத்துறை. ஏறத்தாழ 3:15 மணியளவில் மக்கள் மேல் சிங்களப் படையினர் சுடுகலன்களால் சுட்டனர். அப்போது நன்னிச் சோழன் கிரவில் வீதிக்கு அண்மையில் நின்றிருந்தார். சிங்களப் படைத்துறையிடம் செல்ல கிரவல் வீதிக்கு ஏறிய அவரது சுற்றத்தினன் ஒருவர் தனது ஓர் கைக்குழந்தியினை கையில் ஏந்தியபடி அவரின் கண்முன்னே நிலத்தில் வீழ்ந்திறந்தார். பின்னர் மீளவும் மாலை 4 மணிக்கு முயற்சித்து சிங்களத்திடம் சரணடைந்தனர் மக்கள். சரணடையும் போதிலும் சிறு சண்டை வெடித்து இரு மூதாளர்கள் படையினரால் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டதை கட்டுரையாசிரியர் தன் கண்களால் கண்ணுற்றார். (இது தொடர்பான வரலாற்றை பின்னாளில் எழுதுகிறேன்) வெள்ளா முள்ளிவாய்க்காலின் சர்வாறுத்தோட்டப் பரப்பையும் வட்டுவாகல் பரப்பையும் காட்டும் வரைப்படம். மேலும் சிறிலங்காப் படையினரின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் (Forward Defense Lines) 12ம் திகதி மட்டில் எங்கிருந்தது என்பதையும் இவ்வரைப்படம் காட்டுகிறது. இதில் தெரியும் முல்லை-பரந்த வீதியூடாகவே கட்டுரையாசிரியரும் குடும்பத்தினரும் சிங்களப் படையினரிடத்தில் 15ம் திகதி பின்னேரம் சரணடைந்தனர் | வரைபட விளைவிப்பு மற்றும் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலை குறியிட்டது: சிறிலங்கா படைத்துறை | படிமப்புரவு: அமல் சமந்த, ரூபபாகினி | படிம விளக்கம்: நன்னிச் சோழன் வெள்ளா முள்ளிவாய்க்காலின் வட்டுவாய்க்கால் எ வெட்டுவாய்க்கால் கரையோரமாக புலிகள் அமைத்துள்ள 5 அடி உயர மண்ணரண் | படிமப்புரவு: அமல் சமந்த, ரூபபாகினி வெள்ளா முள்ளிவாய்க்காலின் வட்டுவாய்க்கால் எ வெட்டுவாய்க்கால் முகத்துவாரப் பக்கம் புலிகள் அமைத்துள்ள 5 அடி உயர மண்ணரண் | படிமப்புரவு: அமல் சமந்த, ரூபபாகினி முதல் முயற்சி: சாமம் நெருங்கிய வேளை நந்திக்கடலின் களப்பு ஊடாக முதல் முயற்சி புலிகளால் எடுக்கப்பட்டது. அப்போது முதல் உடைப்பு அணி ஆயத்தமாகி நின்றது. இரண்டாவது அணி கேணல் ரமேஸ் அவர்கள் தலைமையிலும் மூன்றாவது அணி ஜெயாத்தன் அவர்களைக் கொண்ட அணியாகவும் நின்றது. இவர்களிற்குப் பின்னால் ஏனைய அணியினர் ஆயத்தமாக நின்றனர். அப்போராளிகள் களப்பை நோக்கி மக்கள் பார்த்திருக்க நகர்கையில் இறுக்கமான முகத்துடன் யாருடனும் எதுவும் பேசாமல் நகர்ந்தனர். நகர்ந்து சென்றவர்கள் நீரினுள் இறங்கி அங்கால் நின்ற படகுகளில் ஏறினர். அங்கால் (கேப்பாப்பிலவு) பகைவர் தம் முன்னரங்க நிலைகளில் மின்வெளிச்சம் பாச்சி திருவிழா போல வைத்திருந்தான். ஊடறுப்புக்கு தயாரான கரும்புலிகள் உள்ளிட்ட போராளிகள் கடற்புலிகளின் படகுகள் துணைகொண்டு தரையிறங்கித் தாக்க முயற்சித்தனர். இவர்களின் நகர்வை கண்ட சிங்களப் படையினர் இவர்கள் மேல் கடும் தாக்குதல் தொடுத்தனர். எவ்வித சூட்டாதரவுமின்று தமிழர் சேனை பொருதியது. மே மாதம் 16ம் திகதி விடியப்புறம் 5 மணிவரை மேற்கொண்ட ஊடறுப்பு முயற்சி சிறிய இழப்புகளுடன் தோல்வியில் முடிந்தது. முன்சென்றவர்களின் தொடர்புகள் இல்லாமல் போகின. அற்றை நாள் திரும்பி வந்தோரை ஓம்பமாக (safe) வேறு இடங்களில் இருக்குமாறு பணிக்கப்பட்டது. → எ.கா: அதன் படியே படைக்கலப் பாதுகாப்பு அணியில் இருந்தோரை வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் வீதியோரமாக பாதுகாப்பாக இருக்கும்படி கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்கள் வெளியேற்றத்தின் போது மக்களை கேடயமாக பாவித்தனர் படையினர். மக்களோடு மக்களாக புலிகளின் முன்னரங்க வலுவெதிர்ப்பை உடைத்துகொண்டு இவர்கள் இருந்த இடத்தை நெருங்கிவந்தனர். எனவே படையினரை தடுக்கும் நோக்கோடு இவ் அணி கடும் எதிர்தாக்குதலை மேற்கொண்டனர். அம்முயற்சியில் இப்படைக்கலப் பாதுகாப்பு அணியின் கணக்காளரான சுகுமார் என்ற போராளி 16/05/2009 அன்று மாலைப்பொழுதில் சிங்களப்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தார் (ஆதாரம்: படைக்கல பாதுகாப்பு அணியின் கணக்காளர் சுகுமார்). இரண்டாம் முயற்சி: முதல் முயற்சி தோல்வியில் முடிந்த பின்னர் மே மாதம் 16ம் திகதி இரவில் மற்றொரு முயற்சி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அன்று அதிகாலையே தொடங்கின. அந்நடவடிக்கையில் தலைவரை மறுகரைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான லெப். கேணல் சிறிராம் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. நந்திக்கடல் கரையிலிருந்த ஓர் மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பதுங்ககழிக்குள் லெப். கேணல் சிறிராம், பொட்டம்மான் (மாவீரர்) மற்றும் ரட்ணம் மாஸ்டர் ஆகியோர் இருந்த படி திரு வீரமணி அவர்களை அவ்விடத்திற்கு வருமாறு அழைத்தனர். முதல்நாள் தாக்குதலிற்கு சென்றோரின் தொடர்புகள் இல்லமல் போனதால் இம்முறை தாக்குதலிற்கு இவரை தலைமை தாங்கும்படி பணித்தார், ரட்ணம் மாஸ்டர். தாக்குதலிற்கான ஆயத்தங்களை உடனே தொடங்கினார் திரு வீரமணி அவர்கள். அவ்விடத்திலிருந்த இரு இரு கட்டைப்படகுகளையும் எடுத்துக்கொண்டனர். நடவடிக்கைக்கு மேலும் படகுகள் தேவைப்பட்டதால் கடற்புலிகளின் தர்மேந்திரா படைத்தளத்திற்கு அருகிலிருந்த கடற்புலிகளால் பாவிக்கப்பட்ட செம்மைப்படுத்தப்பட்ட ஓர் புளு ஸ்ரார் வகுப்பைச் சேர்ந்த கட்டைப்படகொன்றையும் எடுத்துக்கொண்டனர். அது பரந்தன் - முல்லை வீதிக்கு அந்தப் பக்கம் இருந்ததால் அப்படகினை எடுத்துத் தருமாறு ஜெயந்தன் படையணியின் கட்டளையாளர் திரு. ஜெயாத்தன் அவர்களிடத்தில் லெப். கேணல் சிறிராம் அவர்கள் கோரினார். அவரும் தன்னிடத்திலிருந்த 10 போராளிகளை அனுப்பி அப்படகினை தூக்க உதவி செய்தார். படகினை தோளில் தூக்கி நந்திக்கடலின் கரை வரை கொண்டுவந்து வைத்தனர். பின்னர் பன்னிரண்டு (2x6) மண்ணெண்ணை உருள்கலன்களை ஒன்றாக்க கட்டி ஓர் தெப்பம் போல உருவாக்கி அதை படகுடன் இணைத்தனர். இவ்வாறு மூன்று படகிலும் இணைத்தனர். இதன் மூலம் படகு பயணிக்கும் போது அதனுடன் சேர்ந்து இச்செம்மைப்படுத்தப்பட்ட தெப்பமும் இழுவிண்டுகொண்டு செல்லும் வகையில் உருவாக்கினர். படகில் 15 பேரும் தெப்பத்தில் 15 பேருமாக மொத்தம் 30 பேர் ஒரே நேரத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. முதல் அலையில் கரும்புலிகள் மற்றும் தடையுடைப்பு அணிகளை இறக்கியபின்னர் ஒரு 300 முதல் 400 போராளிகள் வரை கொண்டு சென்று இறக்கி நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததென்றால் தேசியத் தலைவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்பது இதில் திட்டமாகயிருந்தது. 17 ம் திகதி விடிசாமம் 12 மணி சொச்சத்திற்கு புலிகளின் இறுதி வலிதாக்குதலிற்காக அணிகள் மெல்லப் புறப்பட்டன. ஓர் படகில் வீரமணியுடன் 30 போராளிகளும் மற்றொரு படகில் அவருடனிருந்த பங்கையனுடன் 30 போராளிகளும் மூன்றாவது படகில் தூயமணி எ அற்புதன் மற்றும் கணனிப் பிரிவைச் சேர்ந்த நரேஸ் ஆகியோருடன் 30 போராளிகள் என ஒட்டு மொத்தமாக 90 பேர் முதலில் புறப்பட்டுச் சென்றனர். இவர்களை சிங்களப் படையினரின் கண்ணில் படாதவாறு கொண்டு சென்று கேப்பாப்பிலவு நோக்கியவாறு தரையிறக்க வேண்டும். தரையிறக்கமானது சிங்களக் கரையிலிருந்து 1200 மீட்டர்கள் தொலைவில், சிங்களவர் நோக்காதவாறு நிகழ்த்தல் வேண்டும். அதன்படியே கடற்புலிகளும் தம் பணியினை செவ்வனே முடித்திருந்தனர். கழுத்தளவு நீர் நிரம்பிய நீர்ப்பரப்புக்குள் ஓசைபடாதவாறு போராளிகள் தரையிறக்கப்பட்டனர். தரையிறங்கியோர் தத்தம் இலக்குகள் நோக்கி மெள்ளமாக நகரத் தொடங்கினர். சம நேரத்தில் புலிகளின் ஆட்புல நந்திக்கடல் கரையோரமாக நந்திக்கடல் நீரிற்குள் செயலாற்றக்கூடியளவு ஆழம்வரை போராளிகள் இறங்கி நின்றனர். அவர்கள் மீது வெள்ளா முள்ளிவாய்க்காலின் இரு பக்கத்தின் கரையிலுமிருந்து தெறுவேயங்கள் (Cannon) கொண்டு சிங்களப் படையினர் சுட்டபடியே இருந்தனர் (வாக்குமூலம்: புலனாவுத்துறைப் போராளி அரவிந்தன், 2018, Tiktok காணொளி) அதே நேரம் முதல் அலை தரையிறக்கப்பட்ட பின்னர் இரண்டாவது அலையை ஏற்ற படகுகள் தளம் திரும்பின. அவையும் 90 போராளிகளை ஏற்றியபடி இறக்கியயிடத்திற்கு சென்று காத்திருந்தனர். நேரம் அதிகாலை 2.40 ஐ கடந்துகொண்டிருந்தது. முதலில் இறக்கிய 90 பேரும் இன்னும் சண்டையைத் தொடங்காததால் என்ன செய்யவென்று வீரமணி அவர்கள் லெப். கேணல் சிறிராம் அவர்களிடத்தில் வினவினார். சிறிராம் அவர்களும் வீரமணியிடம் உள்ள 90 பேரையும் நேரே கொண்டு சென்று இடித்திறக்குமாறு கட்டளையிட்டார். அதன் படி வீரமணி அவர்களும் ஒழுகினார். ஏறத்தாழ கரையிலிருந்து 400- 500 மீட்டர் தொலைவில் கொண்டு செல்ல புலிகளை கண்ட சிங்களவர் தாக்குதலை தொடங்கினர். 50 கலிபர் சுடுகலன் சன்னங்கள் மழைபோல வரத் தொடங்கின. இருப்பினும் இயலுமட்டும் படகுகளை முன்கொண்டு சென்ற கடற்புலிகள் கரையிலிருந்து 200 - 300 மீட்டர் தொலைவில் போராளிகளை தரையிறக்கினர். அப்போது எதிர்ப்பட்ட சன்னங்களால் வீரமணி அவர்களின் படகிலிருந்த போராளி ஒருவர் வீரச்சாவடைய இன்னும் இருவர் காயமடைந்தனர். புலிகளும் படகுகளிலிருந்து குதித்திறங்கி சுடத் தொடங்கினர். சமரும் வெடித்தது. அதே சமயம் இவர்களுக்கு முன்னர் மெள்ளமாக நகர்ந்து சென்று கரையை அண்மித்த முதல் அலையினரும் சண்டையைத் தொடங்கினர். சமரெனில் பெருஞ்சமராகும். கரும்புலிகளும் தடையுடைப்பு அணிகளுமாக மாறி மாறி வெடித்துக்கொண்டிருந்தனர். புலிகளால் அறுக்கப்பட்ட கம்பிவேலிகளும் அதில் சிதறிக்கிடக்கும் முதுகுப்பைகளும் | படிமப்புரவு: ரூபபாகினி போதாக்குறைக்கு சிங்களப் படைகளும் எறிகணை மழை பொழிந்துகொண்டிருந்தனர். சிங்கள முப்படைகளும் நாலா புறமுமிருந்து புலிகளை நோக்கி சரமாரியாக சுட்டுக்கொண்டிருந்தனர். வானே வெளிச்சாமகுமளவிற்கு சிங்களவர் வெளிச்சக்குண்டுகளை ஏவியபடியிருந்தனர். அதில் தெரியும் தலைகளை நோக்கி சன்னங்கள் கூவியபடி வந்துகொண்டிருந்தன. களப்பினுள் காப்பு மறைப்புகள் ஏதுமின்றி அந்த இறுதி ஊடறுப்பு முயற்சிக்கான போராளிகள் அடிபட்டுக்கொண்டிருந்தனர் (ஆதாரம்: ‘நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்கள்.......’, த .கதிரவன்). சமர் இவ்வாறு அங்கே களப்புக்குள் நடந்துகொண்டிருக்க மீண்டும் மூன்றாவது அலையினை ஏற்ற புலிகளின் படகுகள் திரும்பின. அப்போது நேரம் ஏற்கனவே அதிகாலை 5 மணியைத் நெருங்குவதால் நிலமும் வெளிக்கத்தொடங்கியது. அதே நேரம் பங்கயன் அவர்கள் சென்ற படகும் சிங்களவரின் நேரடி தகரிச் சூட்டிற்கு இலக்காகி மூழக்கத் தொடங்கியது. ஆகவே மேற்கொண்டு கொண்டு செல்லவேண்டாம் என்று கட்டளைப்பீடம் கட்டளை பிறப்பித்தது. சண்டையையும் நிறுத்த பணித்தனர். இயன்றவரை முயன்ற புலிகளின் அணிகள் முற்றாக ஏலாத கட்டத்தில் பலர் வீரச்சாவடைந்தனர். எஞ்சியவர்கள் நீரினுள் மூச்சை அமுக்கிப் பிடித்தவாறு தாழ்வதும் பின்னர் மூச்சுவிட மெள்ள தலையைத் தூக்குவதுமாக கரை நோக்கி நடந்தனர். கையில் பட்ட காயக்காரர்களையும் வீரச்சாவுகளையும் இறுகப்பற்றி இழுத்துக்கொண்டு ஏனைய போராளிகள் புலிகளின் கட்டுப்பாட்டு நந்திக்கடல் கரையை (வெள்ளா முள்ளிவாய்க்கால் விடத்தலடி) அடைந்தனர். களப்பின் கேப்பாப்பிலவு பக்க கரையிலிருந்து பார்க்கும் போது மறுகரையிலிருந்து பெரும் புகை எழுவதை காணலாம் | படிமப்புரவு: ரூபபாகினி சமர் முடிந்த கையோடு சிங்களப் படையினர் கரையில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் | படிமப்புரவு: ரூபபாகினி புலிகளின் தாக்குதலிற்குள்ளான கரையோரக் காவலரண்களிலொன்றில் நின்று சிங்கள அதிகாரிகள் கதைவளிப்படும் காட்சி | படிமப்புரவு: ரூபபாகினி இச்சமரில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த கட்டளையாளர்களான முகுந்தன் எ ஜூட், முத்தப்பன், ஆதித்தன் எ பிரதீப் மாஸ்டர் உள்ளிட்ட தரநிலை அறில்லாத 80இற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர். இவர்களில் 9 மகளிர் போராளிகள் உட்பட 70இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் சிங்களவரால் கைப்பற்றப்பட்டன. இத்தகவலானது சமர் முடிந்த பின்னர் சிங்களப் படைகளால் களப்பிலிருந்து எடுக்கப்பட்ட போராளிகளின் வித்துடல் எண்ணிக்கையினைக் கொண்டு அறியப்பட்டுள்ளது. புலிகளின் நீல நிற செம்மைப்படுத்தப்பட்ட படகொன்று உட்பட பல படைக்கலன்களும் சிங்களவரால் கைப்பற்றப்பட்டன. இவ்வாறாக தலைவரை வெளியேற்ற புலிகள் எடுத்த இறுதி முயற்சி வெஞ்சமரிற்கிப் பின்னர் தோல்வியில் முடிந்து போனது. இவ்விரண்டாவது முயற்சிதான் தமிழீழ வரலாற்றில் தமிழர் சேனையால் மேற்கொள்ளப்பட்ட கடைசி தரையிறக்கமாகும். “உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்!” ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்

தமிழீழ பாடல்கள்

1 month 1 week ago
சின்னப்பூவே சின்னப்பூவே பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரை பாடியவர்: பிறின்சி ரஞ்சித்குமார் இசை: தமிழீழ இசைக்குழு இறுவட்டு: தேசத்தின் புயல்கள் - 02 பல்லவி சின்னப்பூவே சின்னப்பூவே உன்னில் ஏனோ சோகம் - எட்டுத் திசையும் வீசும் காற்றே உந்தன் கண்ணில் ஏனோ ஈரம் அனுபல்லவி தம்பி சுபேசனை நினைத்தீரோ மங்கை தனாவுடன் சென்றதற்கழுதீரோ சரணங்கள் சீனன்குடாவுக்குள் சென்று வானூர்தியைத் தீயிட்டு எரித்த கரும்புலிகள் - பின்னர் ஆனையிறவுக்குள் போன பொழுதிலும் வீரம் விளைத்த பெரும்புயல்கள் வேரைத் தறித்தெங்கள் ஊரை எரித்தவர் வீட்டைக் கொளுத்திய வீரர் இவர் - தமிழ் வீரம் பணிந்தெவர் காலும் விழாதெனப் பாடலிசைத்த குயில்கள் இவர் ஒன்றுக்குள் ஒன்றான அன்புக்குள் ஆடியே பாடி மகிழ்ந்தவர் நாங்களம்மா - பகை வென்றிடச் சென்றவர் வீடு வரவில்லை வெந்து மடிகிறோம் நாங்களம்மா

கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை"

1 month 1 week ago
கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 04 ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா பற்றி பல கதைகள் வாசித்த நாளில் இருந்து, எப்படியும் அவர்களை பார்க்கவேண்டும் என்ற ஆசை மனதில் இருந்தது. நாட்டியத்தில் சிறந்து விளங்கும், அழகான ஊர்வசி, ஹிமாலயத்தின் மகள் மற்றும் சக்திவாய்ந்த, மயக்கும் மேனகா, இந்து தொன்மவியலில், அழகின் அடையாளமாக கருதப்படும், தெய்வீக ரம்பா மற்றும் பிரம்மனால் உருவாக்கப்பட்ட, திகைப்பூட்டும் திலோத்தமா என்ற ஒரு எண்ணம் தான் என் மனதில் இருந்தது. அது சரியா பிழையா, இன்றுதான் அதை முடிவு செய்யப் போகிறேன். நான் என் மனையாளை, நேரத்துக்கு தகுந்தவாறு ' ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா' என்று கூப்பிட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது. இந்த அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் உண்டு. அப்ஜம் என்றால் தாமரை. சரஸ் என்றால் தடாகம், குளம் என்று பொருள். அப்சரஸ் என்றால் தடாகத்தில் தோன்றிய தாமரை எவ்வளவு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்குமோ அவ்வளவு அழகு நிரம்பியவர்கள் அரம்பையர்கள் ஆவர். ரம்பை தான் இவர்களின் தலைவியாக கூறப்படுகிறாள். இவர்கள் தங்களுக்கென்று ஓர் இடம் வேண்டும் எனவும், தாங்கள் என்றும் இளமை மாறாமல் இருக்க வேண்டும் எனவும் சிவனிடம் வரம் வேண்ட, அவரும் அவ்வரங்களை அளித்து, அவர்களுக்காக "அப்சரஸ்' எனும் லோகத்தையும் உருவாக்கி கொடுத்தார் என்று யாழ் மத்திய கல்லூரியில் படித்தது ஞாபகம் வந்தது. அது போகட்டும், முதலில் எங்கே இசை எங்கே ஓடி விட்டான் என்று பார்க்க வேண்டும் என்று துடித்தேன். உடனடியாக தேடிப்பார்க்க ஒரு டாக்ஸி தேடினேன், அங்கு அப்படி ஒன்றும் நான் காணவில்லை. அப்பத்தான் எனக்கு தெரிந்தது, தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானையும் இருக்கிறது என்று. நான் யானையை வரவழைத்து, என்னுடன் நாரதரையும் அழைத்துக் கொண்டு அங்கு இசையைத் தேடத் தொடங்கினோம். கொஞ்ச தூரத்தில் விநாயகர் எலிகள் புடைசூழ, வயிறை தடவி, தடவி, மோதகம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். ஒரு மூலையில் முருகன் மயிலில் இருந்து இறங்கி, வள்ளியுடன் உலாவிக் கொண்டு இருந்தார். நாம் கிட்ட போனோம். இசை ஒரு எலியை கையில் பிடித்து வைத்துக் கொண்டு ரட் [Rat] ரட் என்று துள்ளி துள்ளி சொல்லியபடி, மயிலின் ஒரு இறகை பிடுங்கிக் கொண்டு இருந்தான். எங்களை கண்டதும், கையில் இருந்த எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, எலிபான்ட் [elephant] எலிபான்ட் என்று ஓடி வந்தான். நான் பின் இசையுடன் மண்டபத்துக்குள் நுழைந்தேன். வாசலில் நின்ற காவலாளி, நாரதர் கலகம் செய்வார் என்று உள்ளே விடவில்லை. அங்கு அழகான ஊர்வசி, மயக்கும் மேனகா, தெய்வீக ரம்பா மற்றும் திகைப்பூட்டும் திலோத்தமா என நால்வரும் இந்திரன், பிரேமா விஸ்ணுவுடன் நின்றனர். சிவனும் பார்வதியும் தங்கள் முழு குடும்பத்துடன் வந்ததும் இரவு நடனம் ஆரம்பிக்கும் என்று அறிவித்தனர். அரம்பையர்கள் தேவலோகத்தில் மொத்தம் 60,000 பேர் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. என்றாலும் இது ஒரு தனிப்பட்ட ஒழுங்கு என்பதால், தேர்ந்து எடுக்கப்பட்ட சிலரை மட்டும் அங்கு உள்ளே வர அனுமதித்தனர். அவர்களில் கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை ஆகிய மூவரும் எங்களை வரவேற்று, முன் வரிசைக்கு அழைத்து சென்றனர். இசைக்கு கொஞ்சம் உயர்ந்த இருக்கை கொடுக்கப்பட்டது. நால்வரின் அசைவுகள் பண்டைய கதைகளைச் சொன்னது - அன்பு மற்றும் ஏக்கம், தைரியம் மற்றும் தியாகம். "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர", என்ற விதியின் படி அப்படியே இருந்தது. அதுமட்டும் அல்ல, 'பண்வழி நடக்கும் பாட்டின் போக்கும், பாட்டின் வழியே தாளம் பயிலும், தாள வழியே காலடி தட்டும்' பண்ணின் சிறப்பினைப் பாடலும், பாடலின் போக்கைத் தாளமும், தாளத்தின் அமைப்பில் ஆடலும் இணைந்து சிறந்து அங்கு விளங்கியது. கை, கால், உடலசைவுகளுக்கு மட்டுமின்றி மன உணர்ச்சிக்கும் அங்கு வேளை இருந்தது. "பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் " என்பது போல, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினார் நால்வரும்! ‘அகம் உயிர் ஆகச் சுவை உளம் ஆக இழை உடல் ஆக இயல்வது கூத்து’, என்பதை நான் முற்றிலும் அங்கு கண்டேன் ! நீரானவா நிலமானவா விண்ணானவா காற்றானவா ஒளியானவா உயிரினவா பிரபஞ்சத்தை ஆளும் முழுமுதற்க் கடவுளே! நீயே உயிர்கெல்லாம் முதலானவன் எல்லா உலகத்துக்கும் உறவானவன் உயிர்கள் கூடி தாளம்போடும் இசையானவன் எம்மை எந்நாளும் தொடர்கின்ற நிழலானவன் நதியில் நீராகி நிலவெல்லாம் ஒளியாகி பனியில் துளியாகும் இறையானவா புவியில் திறனாகி உயிரெல்லாம் கருவாகி காற்றில் அசைந்தாடும் நிறைவானவா வரம் வேண்டியே உனைப் பாடினோம் சத்தியம் வாழவே நாம் மகிழ்ந்தாடினோம் ! சலங்கை ஒலியாக சரிந்தாடும் மயிலாக தாளத்தின் உயிராக நாம் நடமாடினோம் சபையில் இனிதாக இதம்தேடும் முகமாக இதயம் கலந்தோரை நாம் புகழ்ந்தாடினோம்! இசை தனது மகிழ்ச்சியில் தனது சிறிய கைகளைத் தட்டினார். என்னுடைய இதயமும் மீண்டும் இளமையாக மாறியது போல உணர்ந்தேன். என் கால்கள் என்னை அறியாமலே தாளங்களுக்கு ஒத்ததாக கால்களைத் தட்டியது. நடனத்திற்குப் பிறகு, நாங்கள் நான்கு அப்சரஸ்களுடன் இறுதி இரவு உணவைப் பகிர்ந்து கொண்டோம் - அமிர்தத்தில் தோய்த்த பழங்கள், மணம் கொண்ட பிரியாணி மற்றும் முத்துக்கள் போல ஒளிரும் பால். ரம்பா மிக அருகில் வந்து, சிரித்துக்கொண்டே, “கந்தையா தில்லை, நீ இனி பூமி போக வேண்டும். வரலாற்றில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேச பூமிக்கு உன்னைப் போன்ற எழுத்தாளர் தேவை” என்றாள். ஊர்வசி இசையிடம் சாய்ந்து, “மழலையே , உன் புன்னகையால் அன்பு மற்றும் உறவு பாலங்களைக் கட்டுவாய்” என்று கிசுகிசுத்தாள். திலோத்தமா அடி மேல் அடி எடுத்து வந்து இசைக்கு திகைப்பூட்டி விளையாட தொடங்கினாள். அந்த இடைவெளியில், தன் அழகு, கவர்ச்சி, இளமை மூன்றையும் கலந்து எடுத்து, மேனகா எனக்கு ஒரு மயக்கம் தந்தாள்!. நல்ல காலம், அங்கே திடீரென புத்தர் வந்தார். அவர் கொஞ்சம் சத்தமாக ' ஒரு மனிதன் பெண்களிடம் கொள்ளும் காம ஆசை இருக்கும் வரை, அவன் மனம் வாழ்க்கையை பற்றிக் கொண்டிருக்கும். அவாவின் விலங்குகளில் கட்டுண்டு மக்கள் நெடுங்காலம் துயரத்தை அனுபவிக்கிறார்கள்' என்று கூறிக் கொண்டு என்னிடம் வந்தார். நானும் மயக்கத்தில் இருந்து விழித்து என்னை அறிந்தேன். அப்சரஸ் நால்வரும் உடனடியாக மிதந்து மெதுவாக மறைந்தனர். அவர்களுடன் சேர்ந்து மேகங்களும் மறைந்தன. தங்க ஒளி மங்கியது. காலை சூரிய ஒளி படுக்கையறைக்குள் பாய்ந்தது. கதவில் யாரோ தட்டும் ஒலி காதில் கேட்டது. ஒருவேளை மேனகா திரும்பி வந்தாளா என்ற ஒரு நற்பாசையில், மெல்ல எழுந்து போய் கதவைத் திறந்தேன். "அப்பா, எழுந்திரு! வேலைக்குப் போறதுக்கு முன்னாடி இசையை டேகேர்ல [Daycare] விடணும்" மூத்த மகளின் குரல் கேட்டது. நான் கண்டும் காணாதது போல் மௌனமாக இருந்தேன். இசை இன்னும் மடியில் சுருண்டு, தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தார். எனக்குள் இன்னும் எதோ ஒரு குழப்பம், "அது ஒரு கனவா? அல்லது மறுபக்கத்திலிருந்து வந்த ஒரு நினைவா?" இசை விழித்தெழுந்ததும், மேலே பார்த்து மெதுவாகச் சொன்னான், "தாத்தா, அடுத்த கோடையிலும் நாம் சொர்க்கத்திற்கு போகலாமா?" நான் சிரித்து, அவனது நெற்றியில் முத்தமிட்டு, "நிச்சயமாக, என் குட்டி நட்சத்திரமே. ஆனால் இன்று நீங்கள் உங்கள் காலை உணவை மிச்சம் விடாமல் முடித்துவிட்டால் மட்டுமே" என்றேன். வானத்திற்கு அப்பால் ஒரு அசாதாரண விடுமுறைக்குப் பிறகு, ஒட்டாவாவில் மீண்டும் மற்றொரு சாதாரண நாள் தொடங்கியது! புளுகிவிட்டான் சொர்க்கம் நரகம் என்று புராண கதையும் ஏமாற்ற இயற்றிவிட்டான் புற்றுநோய் போல் அது பரவி புரியாத எம்மை வலைக்குள் வீழ்த்திவிட்டது! நீச செயல்களை என்றும் செய்யாது நீதி செய்தால் உலகம் வரவேற்கும் நீங்காமல் உன்புகழ் இங்கு நிலைக்கும் நீர்க்குமிழி வாழ்க்கைக்கும் பெருமை சேர்க்கும்! புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே முற்பிறவியில் எவனோ செய்த கர்மாவுக்கு இப்பிறவியில் உனக்கு தண்டனை வேடிக்கையே! மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது மதிக்கப் படுகிறாய் போற்றப் படுகிறாய் மகிழ்ச்சியும் இன்பமும் அங்கே பிறக்கிறது மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் முடிவுற்றது https://www.facebook.com/share/p/17BGSH5dok/?mibextid=wwXIfr

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

1 month 1 week ago
வவுனியாவில் 2003ம் ஆண்டு கட்டப்பட்ட பொங்கு தமிழ் எழுச்சி விழா நினைவுத்தூண் 23/03/2003 "கட்டுமானப் பணியின் போது" 24/03/2009 திறப்பின் போது

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

1 month 1 week ago
பொங்கு தமிழ்ச் சாற்றாணை நினைவுத்தூண் பொங்குதமிழ் கோரிக்கைகள் சாற்றாணைப் படுத்தப்பட்ட போது அதன் நினைவாக ஒரு நினைவுப்பலகை சனவரி 2001 இல் இவ்விடத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் அதை மேம்படுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நினைவுத்தூண் ஒன்று செப்டெம்பர் 17, 2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் அவர்கள் இதனைத் திறந்து வைத்தார். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீட முன்றலில் அமைந்துள்ளது. "தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம்" ஆகிய மூலாதாரக் கோரிக்கைகளை உள்ளடக்கியதான வட்டுக்கோட்டை தீர்மானமான புலிகளின் கொள்கைகளே பொங்கு தமிழின் கோரிக்கைகள் ஆகும். கீழுள்ளதுதான் பழைய நினைவுப்பலகை ஆகும். உந்தப் பழைய நினைவுப் பலகை தற்போதும் அங்குள்ளதாம். இது 2005ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images

1 month 1 week ago
கிருஷ்ணா வைகுந்தவாசன் தமிழீழம் தொடர்பில் முதன் முதலில் ஐநாவில் பேசியவர். Video: https://eelam.tv/watch/krishna-vaikunthavasan-speech-at-un-1978_yArZXB2383FPb9h.html இவரது நூல்கள்: https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%87.

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

1 month 1 week ago
புலிகளிடத்தில் செஸ்னா ஸ்கைமாஸ்டர் வகை வானூர்திகள் இருப்பதாகவும் அவை இரணைமடு, எழிலன்புரம் வான்பரப்பில் பறந்ததை அவ்வூர் மக்கள் கண்டதாக ஆசிய ரிபியூன் என்ற புலி எதிர்ப்பு இணையம் 2006ம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது. இதே வலைத்தளம் 2006இல் புலிகளிடம் இரு Zlin z 143 உள்ளதாக செய்தி வெளியிட்டு அது பின்னாளில் மெய்மையாகிய செய்தி குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month 1 week ago
ரணிலின் புண்ணியத்தினால் பார் லைசன்ஸ் எடுத்து பினாமிகளை வைத்து பார் நடாத்தி செல்வந்தராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடாளுமன்றில் ரணிலின் சிறப்புரிமை மீறல் குறித்து குரல்கொடுக்க வேண்டும். மக்களின் வயிற்றில் அடித்ததுதான் போகட்டும், கடைசி செஞ்சோற்றுக்கடன் செய்த புண்ணியமாவது கிடைக்கும்! 😁

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

1 month 1 week ago
தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Published By: Vishnu 23 Aug, 2025 | 12:52 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காணிகள் விடுவிப்பு,காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சினை உள்ளிட்ட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதியாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி சிவஞானம் ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவது உறுதி. அந்த வகையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு , இரண்டு மாதங்களுக்குள் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அரசியல் கைதிகள் விடுதலை போன்றவை தொடர்பிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தமிழ் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் அதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கும்போதும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாகியிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று நேற்றைய பிரச்சினையல்ல. அது காலங்காலமாக புரையோடிப் போயுள்ள பிரச்சினையாகும். அதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது ஒரு சிலர் கூறுவது போல இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் கேள்விக் குறியாகி இருக்கின்றன. தமிழ் மக்களின் நிலங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்பில் பாகுபாடுகள் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி யுள்ளது. 1981 ஆம் ஆண்டு நாட்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படி யாழ் மாவட்டத்தில் 8 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாழ்ந்துள்ளார்கள். அந்த நிலை தொடர்ந்திருக்குமானால் இன்று 16, 18இலட்சம் மக்கள் அங்கு வாழ்ந்திருப்பார்கள். தற்போது அங்கு ஆறு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதே வேதனைக்குரிய விடயம். அன்று 11 பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்போது ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள். அடுத்து அதுவும் குறைவடையலாம். அந்த வகையில் அரசியல் ரீதியான இருப்பும் கேள்விக் குறியாகியுள்ளது. அந்த மக்களின் வெளியேற்றமே இந்த கேள்விக்குறிக்கான காரணம். கடந்த யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். அதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். இதன் மூலமே பல்லாயிரக்கணக்கான மக்கள் இழக்கப்பட்டுள்ளார்கள். இப்போதும் மாணவர்கள், புத்திஜீவிகள் அங்கிருந்து வெளியேறும் மனநிலை அதிகரித்திருக்கின்றது. ஒரு காலத்தில் கல்வி ரீதியில் பெரும் முன்னேற்றமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்கியது. எனினும் கடந்த 10 வருடங்களைப் பார்க்கும் போது கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையே காணப்படுகிறது. இம்முறை அது ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளது. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் ஆற்றப்படவில்லை. அதன் காரணமாகவே இவ்வாறான ஒரு பிரேரணையை ஸ்ரீதரன் எம்பி சபையில் முன் வைத்துள்ளார். இவ்வாறு மக்கள் வெளியேறுவார்களானால் இன்னும் சில காலங்களில் மக்கள் இல்லாத யாழ்ப்பாணமே இருக்கும். இந்த நிலைமையில் இருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே நாம் சிந்திக்கின்றோம். அதற்காகவே அரசாங்கம் வடக்கிற்கான துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அந்த வகையில் பல திட்டங்கள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மூன்று தொழில்பேட்டைகளை அங்கு உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை, பரந்தன்,மாங்குளம் பகுதிகளில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விமான நிலையம் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கை தரும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களையே எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இழக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கில் மக்கள் வாழவேண்டும். அதன் பின்னரே சுய நிர்ணய உரிமைக்காக போராடுவதா அல்லது தனி நாட்டுக்காக போராடுவதா என்பதை தீர்மானிக்க முடியும். அவர்கள் இலங்கையில் வாழுகின்ற மனநிலையை உருவாக்குவது அவசியமாகும் என்றார். https://www.virakesari.lk/article/223146
Checked
Tue, 09/30/2025 - 03:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed