புதிய பதிவுகள்2

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா!

1 month 1 week ago
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா! வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. அத்தோடு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைகின்றன. நாளைய தினம் சனிக்கிழமை மாலை முருகப் பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444272

கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை!

1 month 1 week ago
கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை! இலங்கைக்கு தாரைவார்க்கப்படடுள்ள கச்சதீவினை மீட்டு தருமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார். தமிழ் நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டிருந்தனர். நேற்றைய மாநாட்டில் விஜய் பலதரப்பட்ட அரசியல் கருத்துக்கள் தெரிவித்து இருந்த நிலையில், இலங்கை தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுவதாகவும் எனவே இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு தருமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விடயம் தற்போது இலங்கையில் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444182

தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றினால் நகரங்கள் என்ன ஆகும்?

1 month 1 week ago
தெருநாய்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தீர்ப்பை மாற்றியமைத்த இந்திய உயர் நீதிமன்றம்! தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (22) மாற்றியமைத்தது. அதன்படி, தடுப்பூசி மற்றும் கருத்தடைக்குப் பின்னர் தெருநாய்களை அதே இடங்களுக்கு மீண்டும் விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அனைத்து மாநிலங்கள் மற்றும் நகராட்சி பிரதேசங்களுக்கும் பொருந்தும் வகையில், இந்தியா முழுவதும் இந்த விடயத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவு ரேபிஸ் (விசர்) நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்குப் பொருந்தாது என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதேநேரம், நாய்களுக்கு பொதுவில் உணவளிக்க அனுமதிக்கப்படாது என்றும், தெருநாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரத்யேக இடத்தை உருவாக்க நகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் உள்ள வீதிகள் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்றுமாறு கடந்த ஆகஸ்ட் 11 அன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது. ஆகஸ்ட் 11 அன்று உயர் நீதிமன்றம், தெருநாய்களை கருத்தடை செய்த பின்னர் அவற்றின் வாழ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவரக்கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவுக்கு எதிரான சீற்றத்திற்கு மத்தியில், ஆகஸ்ட் 14 அன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவை ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444193

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 month 1 week ago
இரு பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களான எயர்பஸ் போயிங் ஆகியவை 2024 இல் மொத்தமாக 1114 விமானங்களைத் தயாரித்துள்ளன. இந்த ஆண்டில் அது 7 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் கோமக் நிறுவனம் இந்த ஆண்டு முதல் விமானங்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையால் விமான எஞ்சின்களைப் பெற முடியாமல் இந்த நிறுவனம் தனது இலக்கான 50 விமானங்களை எட்ட முடியாமல் உள்ளது. ஆனால் விரைவில் தனது உற்பத்தியை அதிகரிக்கும். உலகெங்கிலும் விமான நிலையங்கள் விஸ்தரிக்கப்படுகின்றன. விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. ஆசிய நாடுகளே அதிகமான விமானங்களை வாங்குகின்றன. இதில் இலங்கை இலாபம் ஈட்டாமல் இருப்பது அதன் மோசமான வர்த்தகக் கொள்கையைக் காட்டுகிறது. பலாலி விமானத்தளம் விஸ்தரிக்கப்பட்டால் இலங்கையின் வடக்கு - கிழக்கிற்கு வர விரும்பும் உல்லாசப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியா மூலமாக வர விரும்புவார்கள்.....

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month 1 week ago
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இன்று (22) பிற்பகல் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. ஜூன் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. இந்தநிலையில் விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி முன்னாள் ஜனாதிபதியும் அந்த திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmemmvd94000yqpu7tnp4776y

ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்

1 month 1 week ago
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் Published By: DIGITAL DESK 3 22 AUG, 2025 | 12:45 PM தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டார்கள் பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/223092

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month 1 week ago
Published By: DIGITAL DESK 3 22 AUG, 2025 | 02:19 PM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223100

குட்டிக் கதைகள்.

1 month 1 week ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·Srtodoepsn2a03c1g45576f m2t21th0656mc6t6fuc6g996ti8i4u9h862a · என்றோ படித்தது, இன்றும் நினைவில் நிற்கிறது ஒரு துறவி. அவருக்கு 5, 6 சீடர்கள். ஒருநாள், அவர்களில் ஒருவன் தன் குருவுக்கு முன்னால் வந்து நிற்கிறான். இனி, கேள்வி-பதில் பாணியில், அவர்களுக்குள் உரையாடல் தொடர்கிறது. 'என்ன வேண்டும் உனக்கு?' 'அது, குருவே! அந்த . . . இருக்கிறானே, அவன் . . .' 'நிறுத்து, நிறுத்து. நீ சொல்லப் போகும் சேதி நல்லதா, கெட்டதா?' 'குருவே, அது நல்லது இல்லை குருவே. அதைச் சொல்லத் தான் . . .' 'ஓஹோ, கெட்ட செய்தியா? இருக்கட்டும், இருக்கட்டும். அது உனக்கு எப்படித் தெரிய வந்தது? நீயே நேரில் பார்த்தாயோ?' 'இல்லை, குருவே. எனக்குத் தெரிந்த 2, 3 பேர் சொன்னார்கள்'. 'அதன் உண்மைத் தன்மையை விசாரித்து அறிந்தாயோ?' 'இல்லை, குருவே'. 'சரி, அது போகட்டும். அந்தச் சேதியை நான் தெரிந்து கொள்வதால், எனக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா?' 'அப்படிச் சொல்ல முடியாது, குருவே. ஆனாலும், உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிய வேண்டும் என்று தான் . . .' 'அப்படி ஆனால் சரி. இந்தச் சேதியை என்னிடம் சொல்வதால், உனக்கு ஏதாவது பயன் உண்டோ?' 'அது எப்படிச் சொல்ல முடியும், குருவே?'. 'சரி. இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேள்'. 'நீ என்னிடம் சொல்ல வந்தது நல்ல சேதி இல்லை. அது வேறு யாரோ சொல்லித் தான் உனக்கே தெரிய வந்தது. அதன் உண்மைத் தன்மையை நீ தீர விசாரித்து அறிந்திலாய். அதை நான் தெரிந்து கொள்வதால், எனக்கு எந்த நன்மையும் இல்லை. என்னிடம் சொல்லி, உனக்கும் பயன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை'. 'ஆகையால், நீ என்னிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம். போய், உன்னுடைய வேலையைப் பார்'. குருவின் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்த சீடன், தலை குனிந்தவாறே திரும்பிப் போகிறான். இந்தக் கதையால், நமக்கு விளங்கும் நீதி என்ன? 1. கெட்ட சேதியை வீணாகப் பரப்பலாகாது. 2. ஒரு சேதியின் உண்மைத் தன்மையை நன்கு ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல், அதை இன்னொருவரிடம் சொல்லுவது பிழை. 3. சொல்பவன், கேட்பவன் இருவருக்குமே உதவாத ஒன்றைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இது தான் தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை நோக்கம்; அதி உன்னத நோக்கம்........ ! Voir la traduction

பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேசம் பிரயோகிக்க வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

1 month 1 week ago
குடும்பங்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன; பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேசம் பிரயோகிக்க வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் 21 AUG, 2025 | 06:01 PM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் பாதுகாப்புப் படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதுடன், மறுசீரமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னரான கடந்த ஒரு வருடகாலத்தில் முறையற்ற விதத்தில் பிரயோகிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரங்களைக் கண்காணித்து அறிக்கையிடுவதற்கும் ஐ.நா கொண்டிருக்கும் உரிமையை மனித உரிமைகள் பேரவை மீளப்புதுப்பிக்கவேண்டும். அதேபோன்று மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கத்தக்க கொள்கைகள் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்த போதிலும், அதனை முன்னிறுத்தி, குறிப்பாக கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டளவிலான மாற்றமே அடையப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புகளைப் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இன்னமும் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவரும் அதேவேளை, இலங்கையில் நீதிக்கான சாத்தியப்பாடுகள் இன்னமும் பின்னடைவான நிலையிலேயே உள்ளன. இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பக்கூடியவகையில் அண்மையில் சிறுவர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் மேற்பட்டோரின் மனித எச்சங்கள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதிக்குக் கடந்த ஜுன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் விஜயம் மேற்கொண்டிருந்தார். அதுமாத்திரமன்றி இம்மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரக்கூடிய தடயவியல் நிபுணர்கள் உள்ளடங்கலாக சுயாதீன வல்லுனர்களின் பங்கேற்புடன் வலுவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். கடந்த சில தசாப்தகாலங்களில் இலங்கையில் சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேவேளை யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் செறிந்துவாழும் வட, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைக் கண்காணித்து ஒடுக்க முற்படும் பொலிஸ் மற்றும் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளின் ஆளுகை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் குறையவில்லை என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/223038

விஜய் மக்களின் நம்பிக்கைக்கு தன்னை தகுதிபடுத்திக் கொள்வாரா?

1 month 1 week ago
விஜய் மக்களின் நம்பிக்கைக்கு தன்னை தகுதிபடுத்திக் கொள்வாரா? -சாவித்திரி கண்ணன் தமிழகத்தையே நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது தவெக மதுரை மாநாடு. விஜய்யின் அபாரமான மக்கள் செல்வாக்கு கேள்விக்கிடமில்லாமல் நிருபணமாகியுள்ளது. தன்னெழுச்சியாக வந்த மக்கள் பெரும் திரள் ஒரு அரசியல் மாற்றத்தின் தேவையை உறுதிபடுத்துகிறது. அந்த தேவைக்கு தன்னை தகவமைத்துக் கொள்வாரா விஜய்? என்பதே கேள்வி? தற்போதைய தமிழகத்தில் பணம் கொடுக்காமல் இவ்வளவு பெரும் மக்கள் திரளை ஈர்க்கும் இன்னொரு அரசியல் தலைவர் கிடையாது என்பதல்ல, இதில் கால்வாசி கூட்டத்தைக் கூட காசு கொடுக்காமல் வரவழைக்கும் தலைவர்கள் இல்லை. மாலை நடக்கும் கூட்டத்திற்கு அதிகாலை தொடங்கி, தொண்டர்கள் சாரி,சாரியாக வருவது என்பதெல்லாம் இளைஞர்கள் ஒரு அரசியல் மாற்றத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளதைத் தான் காட்டுகிறது. அதுவும் இளம் பெண்கள் அணி அணியாக திரண்டு வந்ததும், குடும்பங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்திருந்ததும் புதிய அரசியலுக்கான தேடல் மக்களிடம் இருப்பதைத் தான் காட்டுகிறது. ஒரு நடிகரை நம்பி இவ்வளவு கூட்டம் கூடுகிறதே.. என்ற கவலை பலரையும் போல எனக்கும் இருக்கிறது. அதே சமயம் இந்த தேவைக்கும், தேடலுக்கும் தற்போதைய தமிழகத் தலைவர்கள் யாருமே – கொள்கைத் தெளிவு, அனுபவ ஞானம் இருந்த போதிலும் – மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கதக்க வகையில் நடக்கவில்லை.. என்ற கசப்பான யதார்த்ததையும் நாம் மறுதலிக்க முடியாது. சரி, விஜய்யின் பேச்சுக்கு வருவோம். ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பதை போல, அவரது உரை அவரது அரசியல் ஆலோசகர்களால் வடிவமைத்து தரப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், # திமுக எதிர்ப்பை வலுவாக வைப்பதன் மூலம், திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அதிமுக – பாஜக கூட்டணிக்கு போவதை தடுக்கிறார். # அதே சமயம் மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர், பாஜக ஒரு பாசிச சக்தி, கொள்கை எதிரி என்றெல்லாம் மீண்டும், மீண்டும் அழுத்தமாக சொல்வதன் மூலமும், திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்பதையும் சொல்வதால், திமுக கூட்டணியின் பாஜக எதிர்ப்பு ஓட்டையும் கணிசமாக அறுவடை செய்ய வாய்ப்புள்ளது. # ஊழல் எதிர்ப்பு, தமிழர் நலன் ஆகியவற்றைப் பேசி, கூட்டம் சேர்த்து காட்டி அண்டர்கிவுண்ட் டீலிங் செய்வது..என சீமானை டார்கெட் செய்ததன் மூலம் நாம் தமிழர் வாக்குகளையும் கணிசமாக சிதறடிக்கலாம். # எம்.ஜி.ஆரின் புகழ்பாடி அவரது வாரிசாக தன்னை காட்டுவதன் மூலம், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளை பதம் பார்க்கிறார். # இவ்வளவையும் செய்ததோடு நிறுத்தாமல், விஜயகாந்தின் மண்ணில் நிற்பதை உணர்ச்சிபூர்வமாகச் சொல்லி, அவருடனான தன் உறவு பிணைப்பை சொல்லி, தேமுதிக வாக்கு வங்கியையும் தேய்த்து எடுக்கிறார். # திமுக ஆட்சியின் குறைகளை, பலவீனங்களை சுட்டிக் காட்டியது, பாஜகவுடன் நேரடியாக அதிமுகவும், மறைமுகமாக திமுகவும் ஊழல் காரணமாக அடிபணிந்து போவதையும் கூறுவதன் மூலம் உண்மையான பாஜக எதிர்ப்பாளனாக தன்னை நிறுவப் பார்க்கிறார். எல்லாம் சரி, முதலமைச்சர் ஸ்டாலினை இது வரை ”சார்” என்றே கூறி வந்தவர் ”அங்கிள்” என்று மீண்டும், மீண்டும் அழுத்தம் தந்து சொல்லியதை புரிந்து கொள்ள முடியவில்லை. அடுத்ததாக இவ்வளவு பெரிய மக்கள் செல்வாக்கு இருக்கும் ஒருவர், அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள நேரத்தையும், உழைப்பையும் தராமல் இன்னும் தாமதம் காட்டுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. விஜய்யின் தவெக கட்சி பற்றி சமீப காலமாக அவரது கட்சியில் உள்ளவர்களும், அந்தக் கட்சியில் தொடர முடியாமல் வெகுவேகமாக வெளியேறி வருபவர்களும் பெற்ற கசப்பு அனுபவங்கள் விஜய் மீது பல கேள்விகளை எழுப்புகிறது. முக்கிய நிர்வாகிகளே விஜய்யை சந்திக்கவே முடிவதில்லை. புஸ்லி ஆனந்த் ஒருவரோடு மட்டுமே விஜய் தொடர்பில் உள்ளார். மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் கட்சி பொறுப்புக்கு வருபவர்கள் கணிசமாக லஞ்சம் கொடுத்தே கட்சி பொறுப்புகளை பெற முடிகிறது. பொறுப்புக்கு வருபவர்கள் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. ‘புஸ்லி ஆனந்திடம் பெட்டி பாம்பாக அடங்கி நடக்கும் வரை அங்கு தொடரலாம்’ என்பதே யதார்த்த நிலையாம்! சந்திக்கவே முடியாத விஜய்யை நம்புவதா? ‘நானே சகலமும்’ என்பதாக உள்ள புஸ்லி ஆனந்தை நம்புவதா? என்ற குழப்பம் அடிமட்ட நிர்வாகிகளிடம் பரவலாக காணப்படுகிறது. இதனால், புஸ்லி ஆனந்தை விழாவுக்கு அழைத்த நிர்வாகி ஒருவர், ‘வருங்கால முதல்வரே வருக’ என்று போஸ்டர் ஒட்டும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டுள்ளது. மேற்படி பிரச்சினைகளுக்கு விஜய் தீர்வு காணாத வரை, விஜய்யின் செல்வாக்கு வீழலுக்கு இரைத்த நீராகலாம். சினிமாவுக்கு அவர் தந்த நேரத்தை காட்டிலும், அதிக நேரத்தை அரசியலுக்கு முற்ற முழுக்க ஒதுக்கி, உரியவர்கள் எளிதாக சந்திக்கும் நிலையை உருவாக்கிக் கொள்ளவும், எல்லாவற்றுக்கும் ஒருவரை சார்ந்திருக்காமல் தானே நேரடியாக உண்மையான தொண்டர்களிடம், நிர்வாகிகளிடம் தொடர்பில் இருக்கவும் முடிந்தால் மட்டுமே அவர் நினைத்த இலக்கை அடைய முடியும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/22554/tvk-vijay-madurai-conference/

“இன விடுதலை“ – சர்வதேச சட்டங்களும் ஐ.நா நியமங்களும்

1 month 1 week ago
“இன விடுதலை“ – சர்வதேச சட்டங்களும் ஐ.நா நியமங்களும் August 22, 2025 5:09 am -அ.நிக்ஸன் இன விடுதலை கோரும் சமூகம் ஒன்றின் அரசியல் நியாயப்பாடுகளை கருவறுக்க அரசுகள் கையாண்ட உத்திகள் – எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி எல்லாம் ஆராய்ந்து, அறிந்து இராஜதந்திரமாக காய் நகர்த்த வேண்டிய பொறுப்பு என்பது அரசு அற்ற இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகளின் பிரதான கடமை. செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் கனேடிய அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு பற்றிய செயற்பாடுகளின் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளின் ”பயங்கரவாத செயற்பாடுகள்” – ”பாசிசம்” என்ற கோசங்கள் மீண்டும் சிங்கள ஆய்வாளர்களினால் முன்வைக்கப்படுகின்றன. இன அழிப்பு என்பதை கனடாவின் பிரதான தேசிய கட்சிகள் ஏற்றுக் கொண்டாலும், கனேடிய அரசு என்ற கட்டமைப்பின் இலங்கை பற்றிய வெளியுறவுக் கொள்கையில், தமிழ் இன அழிப்பு என்ற விவகாரம் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் நோக்கில் வெறுமனெ பேச்சு மாத்திரம் தான் விஞ்சியுள்ளன. ஆனாலும், இலங்கை அரசு என்ற கட்டமைப்பும் அதனை செப்பனிடும் அரசியல் – இராணுவ ஆய்வாளர்கள் சிலரும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்ற விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்த இடத்திலேதான் சில புரிதல்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகும். –இன அழிப்பு என்றால் என்ன?– இன அழிப்பு (Genocide) என்பது ஓர் இனத்தையும் அந்த இனத்தின் மரபுரிமைகள் – வரலாறுகள் போன்றவற்றை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழித்தலைக் குறிக்கும். குறித்த இன மக்களை திட்டமிட்டு கொலை செய்வது மாத்திரம் இன அழிப்பு என்று வரையறை செய்ய முடியாது. குறிப்பாக, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது இன அழிப்பு என்று பொருள் கொள்ள முடியும். முதலாம் உலகப் போருக்குப் பின்னர் உலக நாடுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சர்வதேச சங்கம் இன அழிப்பு என்ற விவகாரத்தையும் மனித உரிமை மீறல் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதையும் உரிய முறையில் வகுக்கத் தவறிய பின்னணியில்தான் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது, இந்த இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு ஐ.நா எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. சர்வதேச சங்கத்துக்குப் பதிலாகவே இது உருவானது. The German army marches into Poland, September 1939. இந்த ஐ.நா சபை இன அழிப்பு என்பதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய குற்றவியல் குற்றம் என வரையறை செய்து அறிவித்தது. இதன்படி ஓர் இன மக்களை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொலை செய்ய நினைப்பது அல்லது இனம் இல்லாமல் செய்வது, இன அழிப்பு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பிரதானமாக இன வேறுபாட்டை மையப்படுத்தி குழந்தைப் பிறப்பை தடுத்தல், மக்களை இடம்பெயரச் செய்தல் வேறு எவ்வகையிலேனும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இன அழிப்பு குற்றங்களாக நோக்கப்படும். இது சர்வதேச தடைச் சட்டத்தின்படி குற்றச் செயலாகும். —சட்டத்தரணியின் விளக்கம்— பெலரஸ் (Belarus) நாட்டவரான சட்டத்தரணி ரபேல் லேம்கின்(Raphael Lemkin) 1944 ஆம் ஆண்டு எழுதிய “Axis Rule in Occupied Europe” என்ற தனது புத்தகத்தில் இன அழிப்பு என்பதை பயன்படுத்தியுள்ளார். 1933 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது சர்வதேச தண்டனைச் சட்ட ஒருங்கிணைப்பு நாடுகள் மாநாட்டில் (League of Nations) அவர் ஆற்றிய உரையில், இன, மத மற்றும் இன குழுக்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச குற்றங்களாகக் கருதப்பட வேண்டும் என்று அவர் முன் மொழிந்திருந்தார். காட்டுமிராண்டித் தனமான குற்றம் (Crime of Barbarity) சர்வதேச சட்டங்களுக்கு எதிரான ஒரு குற்றம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை ரபேல் லேம்கின் ஆரம்பத்தில் எழுதியிருந்தார். இக் கருத்து பின்னர் இன அழிப்பு என பெயரிடப்பட்டு சர்வதேசத்தில் அங்கீகாரம் பெற்றிருந்தது. இப் பின்புலத்தோடுதான் ஐ.நா எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை இன அழிப்பு என்பதை ஏற்று அதனை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது. இந்த இடத்தில் அரச பயங்கரவாதம் என ஒன்றும் வரையறை செய்யப்படுகிறது. அரச பயங்கரவாதம் (State terrorism) என்பது ஒரு அரசாங்கம் தமது நாட்டில் வாழும் ஏனைய இனங்கள் மீது கட்டவிழ்த்து விடும் ஆக்கிரமிப்புகள் – இராணுவ தாக்குதல்கள் போன்றவற்றைக் குறிக்கும். தமது சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் செயல்களையும் அரச பயங்கரவாதம் என்ற சொல் குறித்து நிற்கும். ஐ.நா சட்ட விதிகள் – ஒழுங்குகளை கடைப்பிடிக்கத் தவறும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் அரச பயங்கரவாதம் என பொருள் கொள்ள முடியும். அதாவது, ஒரு அரசாங்கம் மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது அரச பயங்கரவாதம் என வகை செய்ய முடியும். குறிப்பாக போர் குற்றம், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் வன்முறை, சித்திரவதை, நியாமற்ற கைதும் தடுப்பும், பலாத்காரமாக காணாமல் ஆக்கப்படுதல், தடுத்து வைத்தல் · சட்டத்துக்கு மாறான கொலைகள், அடிமைத்தனம், சாதி சமய பாகுபாடு, மாற்று இன பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட குடியேற்றம், இன கருவறுப்பு, பண்பாட்டுச் சீரழிவுகள் போன்றவை அரச பயங்கரவாதமாகும். இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பாதிக்கப்படுகின்ற இனத்தின் இளைஞர்கள், தமது இனத்தின் ”அரசியல் விடுதலை” என்பதை மாத்திரம் முன்நிறுத்தி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டால் அதை பயங்கரவாத செயற்பாடாக பார்க்க முடியாது. உலகில் விடுதலை இயக்கங்கள் – பயங்கரவாத அமைப்புகள் என இரண்டு வகை உண்டு. விடுதலை இயக்கங்கள் தாம் வாழ்கின்ற நாட்டின் இராணுவத்திற்கு எதிராக அதாவது முப்படைகளையும் இயக்கும் அரச இயந்திரத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும். அந்தப் போராட்டத்தை பயங்கரவாதம் என வரையறை செய்ய முடியாது. ஆனால், இலங்கை போன்ற நாடுகள் அப் போராட்டங்களை பயங்கரவாதமாக சர்வதேச அரங்கில் சித்தரித்து வருகின்றன. –சர்வதே சட்டங்கள் சொல்வதென்ன?— ஆனால், 2012 இல் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச சட்டங்களின் இரண்டாம் பதிப்பு (Hand books of international law) உள்ளடக்கங்கள், எது பயங்கரவாதம் என்பதை பொருள் கோடல் செய்கின்றன. குறிப்பாக உள்நாட்டுச் சட்டங்கள், சர்வதேசச் சட்டங்கள் போன்றவற்றை ஓர் அரசு மீறும் பட்சத்தில் அது பயங்கரவாதம் என்ற தொனியை சர்வதேச சட்டங்கள் வியாக்கியானம் செய்கின்றன. லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகம் (Cambridge University Press) 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அப் பதிப்பை செய்திருக்கிறது. பொதுவாக சர்வதேச சட்டங்கள், ஐ.நா நியமங்கள் என்பதில் வேறுபாடுகள் இருக்காது. ஐ.நா நியமங்களைக் கூட ஓர் அரசு மீறினால் அது பயங்கரவாதமாகவே நோக்கப்பட வேண்டும். அதேநேரம், சர்வதேச சட்டம் என்றால் என்ன என்பது பற்றி சட்ட அறிஞர்கள் பலரும் பல்வேறு விதமாக கற்பிதம் செய்கிறார்கள். சாதாரண வழக்கிலும் சட்டம் என்பது பல வழிகளில் புரிந்து கொள்ளப்படுகிறது. சர்வதேச சட்டத்தின் இயல்புகளை விவாதிக்க முற்பட்டால், முதலில் எதிர்கொள்ள வேண்டிய வினா சர்வதேசச் சட்டம் உண்மையில் ஒரு சட்டமா? என்பதாகவே எழும். இலங்கை போன்று உள்நாட்டு இன மோதல் இடம்பெறும் நாடுகள் குறிப்பாக அரசுகள்,. உள்நாட்டு சட்ட அமைப்பு முறையின் (Domestic legal system) பிரகாரம் அந்த இன மோதலுக்குரிய அரசியல் தீர்வை கொண்டு வர முற்படும். உள்நாட்டு நீதிமன்றங்கள் ஊடாகவே அனைத்துக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளையும் நடத்த விரும்பும். ஈழத்தமிழர்கள் போன்று பாதிக்கப்பட்ட அரசு அற்ற இனம் ஒன்று சர்வதேச சட்டங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிகள் அதற்கு இடம் கொடுக்காது. குறிப்பாக சர்வதேச நீதி என்பது புவிசார் அரசியல் – பொருளாதார நலன்களின் பிரகாரமே அமைந்துள்ளது எனலாம். இந்த இடத்திலேதான், ஐ.நா வின் சில நியமங்கள் தொடர்பாகவும் அதன் கீழ் செயல்படும் ஜெனீவா மனித உரிமைச் சபை பற்றியும் கேள்விகள் சந்தேகங்கள் எழுகின்றன. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு (United Nations Commission on Human Rights) என்றுதான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் ஜெனீவாவில் இயங்கிய அந்த ஆணைக்குழு ஒழுங்கு முறையில் செயற்படவில்லை. இதன் காரணத்தால், 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜெனிவா மனித உரிமை சபையை (The United Nations Human Rights Council) ஐ.நா உருவாக்கியது. —பேராயர் டெஸ்மன்ட் —- ஜெனிவாவில் இயங்கும் இந்த மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு உறுப்புரிமை வழங்கக் கூடாது என்று தென் ஆபிரிக்க பேராயர் அமரர் டெஸ்மன்ட் டுட்டு (Desmond Tutu) பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவம் இன அழிப்பு நடவடிக்கைகளிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுவதால் புதிதாக உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வழங்க வேண்டாம் என்று ஐ.நா.வுக்கு கடும் அழுத்தம் கொடுத்திருந்தார். ஆனாலும், இலங்கை உறுப்பு நாடாக இணைந்து கொண்டது. இருந்தாலும், ஐசிசிபிஆர் எனப்படும் சர்வதேச சமவாயம் (International Covenant on Civil and Political Rights – ICCPR) எனப்படும் பிரதான நியமம் ஒன்றை இலங்கை சட்டமாக்க வேண்டும் என ஐ.நா வற்புறுத்தியது. இதன் காரணமாக சர்வதேச சமவாயத்தை அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச 2007 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 56 ஆம் இலக்க சாதாரண சட்டமாக அமுல்படுத்தினார். –ஐசிசிபிஆர் சமவாயம்—— ஆனால் அந்தச் சமவாயத்தில் உள்ள பிரதான நியமங்கள் இலங்கைச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக சுயநிர்ணய உரிமை என்ற வாசகம் அகற்றப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என அப்போது அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் பொருள்கோடல் செய்தார். இதன் காரணமாக ஐசிசிபிஆா் என்ற சமவாயத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் இலங்கைச் சட்டத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என பேராசிரியர் சுட்டிக்காட்டியிருந்தார். பேராசிரியரின் அந்த விளக்கம் ஒரு வகையில் நியாயமானது. ஏனெனில், ஐநா சமவாயத்தில் ஒரு நாட்டில் வாழும் ஏனைய தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை என்ற கற்பிதம் ஐசிசிபிஆர் என்ற அந்த சமவாயத்தின் சரம் 1 என்ற பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. இது குழப்பமானது தான். இதன் ஆங்கில வடிவம் வருமாறு- (Article 1 All peoples have the right of self-determination. By virtue of that right they freely determine their political status and freely pursue their economic, social and cultural development.) ஆகவே, ஐ.நாவின் இந்தத் தவறை தமக்குச் சாதமாகக்கியே ஐசிசிபிஆா் எனப்படும் சமவாயத்தை இலங்கை சட்டம் ஆக்கியிருக்கிறது. இது பற்றி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தன்னுடைய முதல் உரையின் போது கேள்வி தொடுத்திருந்தார். ஆகவே, புவிசார் அரசியல் – பொருளாதார இலாப நோக்கில் ஐ.நா நியமங்களும் சர்வதேச் சட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், அரசு அற்ற ஓர் இனம் குறிப்பாக ஈழத்தமிழர்கள் எந்த வகையான அணுகு முறைகளை பின்பற்ற முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழு ஒழுங்காக செயற்படவில்லை என்பதால், 2006 இல் மனித உரிமைச் சபை உருவாக்கப்பட்டு இன்று 47 நாடுகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்படுவது ஏன்? மனித உரிமைச் சபையின் ஆணையாளர் வோல்க்கர் டர்க் (Volker Türk) கடந்த ஜூன் மாதம் இலங்கை வந்தபோது, யாழ் செம்மணிக்கும் சென்று போர்க்கால மனித புதைகுழிகளை பார்வையிட்டிருந்தார். ஆனால், இலங்கை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துள்ள முன்னோடி அறிக்கையில் அது பற்றி பிரஸ்தாபித்திருந்தாரா? இன அழிப்பு நடந்தாக குறிப்பிட்டு தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதம் பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை அந்த அறிக்கையில் இருந்ததா? கடந்த ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தீர்மானங்களில் இலங்கை தொடர்பாக எடுக்கப்பட்டிருந்த கடுமையான நிலைப்பாடுகள் பற்றியேனும் ஆணையாளரின் அந்த முன்னோடி அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டிருந்தா? ஆகவே, இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு அதன் ஊடான அரசியல் – பொருளாதார லாபங்களை கணக்கிட்டு ஆணையாளர் முன்னோடி அறிக்கையை தயாரித்திருக்கிறார் என்பது மாத்திரம் இங்கே பகிரங்கமாகத் தெரிகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னணியில், மீண்டும் உள்ளக விசாரணை பொறிமுறைக்கு ஆணையாளர் பரிந்துரைத்தமை எந்த அடிப்படையில்? —தீர்மானங்களை நிராகரித்த பின்னணிகள்— ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. 2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஜெனீவா தீர்மானத்தை முற்றாகவே நிராகரித்திருந்தார். அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (OHCHR Sri Lanka Accountability Project ) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை. புதிய அரசாங்கம் என ஆணையாளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனீவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை. இந்த நிலையில், இன அழிப்பு என்று தமிழர்கள் கோருகின்ற விடயம் முற்றாகவே கவனத்தில் எடுக்கப்படவில்லை. ஒப்பாசாரத்துக்குக் கூட அது பற்றிய வார்த்தைகளே இல்லை. கடந்த ஆண்டுகளில் வெறுமனே போர்க்குற்றம் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மதிப்பட்டிருந்த அந்த விடயங்களை கூட உரிய முறையில் கவனத்தில் எடுக்காமல் வெறுமனே உள்ளக விசாரணை எனவும், இலங்கை மீது நம்பிக்கை வைப்பதாகவும் 2025 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் ஆணையாளர் குறிப்பிட்டிருப்பது பற்றிய பின்னணி என்ன? ஆகவே, தொடர்ச்சியான முறையில் சிங்கள அரசியல் தலைவர்கள் ஐ.நா நியமங்களையும் மனித உரிமைச் சபையின் தீர்மானங்களையும் புறக்கணித்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் எந்த அடிப்படையில் ஐ.நா, இலங்கை மீது நம்பிக்கை வைக்கிறது? எதற்காக ஈழத்தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது? 2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் ஈழத் தமிழர்களுக்கு ஒழுங்கான அரசியல் தலைமை இல்லை என்பது வேறு. ஒருமித்த குரல் செயற்பாடுகள் இல்லை என்பதும் வேறு. ஆனால் அவற்றைக் காரணம் காண்பித்து 2012 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் எதையும் இலங்கை செயற்படுத்தவில்லை என்பதை ஏன் மனித உரிமைச் சபை கவனத்தில் எடுக்கவில்லை? 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு, தமது அறிக்கையில், சர்வதேசக் குற்றங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்த விவகாரங்கள் பற்றி ஏன் கவனத்தில் எடுக்கப்படவில்லை? ஆகவே, அமெரிக்க – இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் நலன்களை மையப்படுத்தி ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கில் மேற்கு – ஐரோப்பிய நாடுகள் செயற்படுகின்றன என்பதும், அதற்கு ஐ.நா கட்டமைப்பு ஒத்துழைக்கிறது என்பதும் இங்கே பகிரங்கமாகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் முறைமைகளுக்குள் முடங்கி இருக்கின்றமையும் இதற்குப் பிரதான காரண – காரியமாகும். –பல்துருவ அரசியல் மையமாக மாறிவரும் உலகம்—– ஆனாலும்,ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச நீதி கிடைக்காது என்றில்லை. சர்வதேச சட்டங்கள், ஐ.நா நியமங்கள் அனைத்தும் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுக்கு சாதகமாக இருப்பதை இலங்கை எவ்வாறு தமக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்துகிறதோ, அதேபோன்ற ஒரு அணுகுமுறையில், அரசு அற்ற இனமாக வேறு நாடுகளுடன் தமிழ்த்தரப்பு உறவை பேண வேண்டும். பல்துருவ அரசியல் மையமாக மாறிவரும் உலக ஒழுங்கில் சிறிய நாடு ஒன்றுடன் அல்லது சீனா போன்ற வல்லரசுகளுடன் ஏதோ வழியில் உறவை பேணக்கூடிய வழி வகைகள் இல்லாமலில்லை. அவ்வாறு அணுகும்போது இலங்கை ஒரு சிறிய அதுவும் பொருளாதார பலவீனம் உள்ள நாடு என்ற அடிப்படையில் நிச்சயமாக ஈழத்தமிழர் விவகாரங்களில் விரும்பியோ விரும்பாமலோ கீழ் இறங்கி வர வேண்டிய கட்டாயச் சூழல் எழும். இலங்கையை தாங்கிப் பிடிக்கும் அமெரிக்க – இந்திய அரசுகள் கூட படி இறங்க வேண்டிய பின்னணி உருவாகும். ஆனால்,இந்த இராஜதந்திரம் என்பது ஈழத்தமிழ்த் தரப்பிடம் இன்று வரையும் இருப்பதாக இல்லை. சிங்களத் தலைவர்கள் காலத்துக்கு காலம் அதாவது, இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து குறிப்பாக போர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அமெரிக்க – இந்திய அரசுகள் தம்மை நோக்கி படி இறங்கி வரக்கூடிய அணுகுமுறைகள் – விட்டுக் கொடுப்புகள் போன்ற இராஜதந்திரங்களை பல சந்தர்ப்பங்களில் பேணியிருந்தனர். விமர்சனங்கள் – குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் 1983 இல் அமிர்தலிங்கம் அவ்வாறான அணுகுமுறையை கையாண்டிருக்கிறார். ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் எந்த ஒரு தமிழ்த் தலைவர்களும் அவ்வாறு அணுகவில்லை. அரசு அற்ற இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகள் அவ்வாறான அணுகுமுறைகளை ஜனநாயக வழியில் கையாளக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அத்துடன், இன அழிப்பை ஆதாரப்படுத்தும் ஆவணங்களைக் கூட ஒழுங்குபடுத்த முடியும். ஆனால், தேர்தல் வியூகங்கள் மாத்திரமே தமிழ் தேசிய கட்சிகளினால் வகுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றும் இலக்குகளும் விஞ்சியுள்ளன. இப் பலவீனங்களை சாதகமாக்கி விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் எனவும் இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குச் சாதகமான அரசியல் – இராணுவ ஆய்வாளர்கள் சிலா் மீண்டும் சர்ச்சையை கிளப்புகின்றனர். “இீன அழிப்புக்கான சர்வதேச நீதி என்பது மேலெழந்து விடக்கூடாது என்பதை பிரதானப்படுத்தியே அவ்வாறான விமர்சனங்கள் மீண்டும் எழுகின்றன. குறிப்பாக செம்மணி புதைகுழி விவகாரத்துக்குப் பின்னரான சூழலில் புலிகள் பற்றிய இவ்வாறான விமர்சனங்கள் சிங்களத் தரப்பில் எழுவதை அவதானிக்க முடிகிறது. பேராசிரியர் ரெஹான் குணவர்த்தன Sri Lanka. Sri Lanka Military Academy Journal என்ற சஞ்சிகையில் எழுதி வருகிறார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் எழுதியுள்ளார். ஆகவே,தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டையும், போராட்டங்கள் பற்றிய சம்பவங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பதுடன் நியாயப்படுத்தல் போன்ற செயல் முறைகளிலும் தமிழ்த்தரப்பு ஈடுபட வேண்டும். குறிப்பாக முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் போது ஏற்பட்ட விளைவுகள் மாத்திரமல்ல, ஆயுதப் போராட்டதுக்கு முந்திய அதாவது, 1949 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கல்லோயா குடியேற்றத் திட்டம் மற்றும் அதற்கு எதிராக 1956 இல் நடந்த போராட்டத்தின் போது இடம்பெற்ற திட்டமிடப்பட்ட படுகொலைகள் போன்றவற்றில் இருந்து இன்றைய செம்மணி புதைகுழி வரையும் ஆவணப்படுத்தல் அவசியமாகிறது. அதேநேரம்,2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என அழைக்கப்பட்ட மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் சிங்கள பௌத்த வரலாறுகள் – சிங்கள மொழித் திணிப்புகள் தமிழ் வரலாற்று பாடநூல்களில் புகுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஐ.நா யுனெஸ்கோ கல்வி நியமங்கள் அடிப்படையில், பாடநூல்கள் குறிப்பாக ஓர் இனத்தின் வரலாற்றை திரிபுபடுத்தி மொழிபெயர்ப்பு செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ஆகவே, இவ்வாறான ஆவணப்படுத்தல்கள் – இன அழிப்பு பற்றிய ஆதாரங்கள் நியாயப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்ற பிரதான நோக்கில் விடுதலைப் புலிகளை பாசிசம் – பயங்கரவாதம் என்று சித்தரிப்பதும் வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பபாணத்தில் சாதி ஒடுக்குமுறை இருப்பதாகவும் மிகைப்படுத்தி “அரசியல் விடுலை“ பற்றிய சிந்தனை இளைஞர்கள் மத்தியில் இருந்து மடைமாற்றம் செய்யப்படுகிறது. இக் கட்டுரையில் பயங்கரவாதம் – பயங்கரவாத செயற்பாடுகள் என்பது அரசு என்ற கட்டமைப்பை நோக்கியதாகவே இருக்கும் என்பது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று பாசிசம் என்பதும் அவ்வாறுதான் –பாசிசம் பற்றிய புரிதல்—- “பாசிசம் ஒரு மிகச் சிறிய அறிமுகம்” (Fascism: A Very Short Introduction) என்ற நூலை எழுதியுள்ள வரலாற்று அறிஞரான கார்டிஃப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கெவின் பாஸ்மோர் (Kevin Pasmore) பாசிசம், நாசிசம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துச் செல்பவை அல்ல என்கிறார். இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சித்தாந்தத்தின் முக்கிய புள்ளியாக இருந்தன. ஆனால், இத்தாலியில் இருந்த பாசிசம் என்பது அவ்வாறு ஒரு குறிப்பிட்ட விடயத்தைக் கொண்டு வரையறுக்கும் வகையில் இல்லை. ஆகவே, ஒரு விடுதலை இயக்கத்தின் செயலில் படுகொலைகள் – “மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்க மறுக்கும் தன்மை இருப்பதால் மாத்திரம், அவர்களை பாசிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்த முடியாது என்று இவர் விளக்குகிறார். இத்தாலியில் இருந்த பாசிசத்தில் கோர்ப்பரேட்டிசம் (Cooperativism) எனப்படும் கூட்டுப் பிழைப்புவாதம், அரசியல் ரீதியாக கலந்தே இருந்தது என்றும் இவர் வாதிடுகிறார். மக்கள் தங்களுக்கு இருக்கும் திறமையின் அடிப்படையில் ஒரு தலைமையின் கீழ் குழுக்களாக இணைந்து செயல்படுவதை வகைப்படுத்தப்படுவது எனவும் கெவின் பாஸ்மோர் மேலும் கற்பிதம் செய்கிறார். ஓர் அரசானது அரசற்ற இனம் ஒன்றின் அரசியல் விடுதலை பற்றிய நியாயங்களை திட்டமிட்டு ஒதுக்குவது, கொலை செய்வது, அந்த இனத்தின் கருத்துக்களை முடக்குவது அவர்களிடையே பிரிவினைகளை திட்டமிட்டு உருவாக்குவதும் பாசிசம் என்ற வரையறைக்குள் உள்ளடங்கும் என்றும் கெவின் பாஸ்மோர் கற்பிதம் செய்கிறார். ஆகவே,2009 இற்குப் பின்னரும் சிங்கள ஆய்வாளர்கள் சிலர் புலிகளை பாசிட்டுகள் என்றும் பயங்கரவாதிகள் எனவும் திட்டமிட்டு பரப்புரை செய்வதன் பின்னணி என்பது, இன அழிப்புக்கான சர்வதேச நீதி மேலெழுந்து விடக்கூடாது என்பதை மையமாகக் கொண்டுள்ளது எனலாம். மார்சியோ காசலோரி (Marzia Casolari) என்ற ஒரு இத்தாலி ஆய்வாளர் ஒருவர். “இந்திய தேசியத்திற்கும் நாஜி – பாசிசத்திற்கும் இடையிலான தெளிவற்ற உறவு” (Ambiguous Relationship between Indian Nationalism and Nazi-Facism) என்ற ஓர் ஆய்வு நூலை 2000 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அந்த ஆய்வு நூல் அரசு என்ற கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஓர் அரசாங்கம் மற்றும் விடுதலை இயக்கங்கள் எவ்வாறு செயற்படும் என்ற வியாக்கியானத்தை தெளிவுபடுத்தியுள்ளார். ஆகவே,2009 இற்குப் பின்னரான சூழலில் ஜனநாயக வழியில் இன அழிப்புக்கான சர்வதேச நீதியை கோருவதற்கு உரித்துடைய தமிழ்த் தரப்பு, முதலில் “ஆவணப்படுத்தல்“ – “நியாயப்படுத்தல்” என்ற இரண்டு பிரதான காரியங்களிலும் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிச் சூழல் நிலைமைகளுக்குள் விழுந்துவிடாமல், ஐ.நா நியமங்கள் – சர்வதேச சட்டங்கள் என்ற இரண்டு வழிமுறைகள் ஊடாக பயணிக்க வேண்டியதும், பாதிக்கப்பட்ட தரப்பாக தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியதும் பிரதான கடமை ஆகும். https://oruvan.com/ethnic-liberation-international-laws-and-un-standards/

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் : முழு விவரம்..!

1 month 1 week ago
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் : முழு விவரம்..! 22 Aug, 2025 | 03:33 AM தமிழக வெற்றிக் கழகம் மாநில மாநாட்டில் விஜய் தலைமையில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று வியாழக்கிழமை (21) நடைபெற்றது. மாநாட்டு மேடைக்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். சுமார் 35 நிமிடங்கள் நீடித்த அவரது பேச்சில் அரசியல் மற்றும் தேர்தல் குறித்த அதிரடியான கருத்துக்கள் இடம்பெற்றன. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழக வெற்றிக் கழகம் மாநில மாநாட்டில் விஜய் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்களும் பின்வருமாறு:- தீர்மானம் 1: பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளில் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு இறங்கியுள்ளது .இதில் பெரும்பான்மையான நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமானவை. முப்போகமும் விளையக்கூடியவை. தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதை தடுக்க, வருடக்கணக்கில் போராடி வரும் எளிய மக்களின் போராட்டத்தை நசுக்கவும், பலவந்தமாய் அவர்களின் நிலங்களைப் பறிக்கவும் பலவழிகளிலும் தொடர்ந்து தி.மு.க. அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், அரசு கையகப்படுத்த முயலும் நிலப்பரப்பில் 13 வற்றா நீர்நிலைகள் உள்ளன. விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும். சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் இந்த நீர்நிலைகளே உள்ளன. இந்த நீர்நிலைகள் அழிக்கப்பட்டால் சென்னை. காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதோடு,இங்குள்ள நீர் தேங்கும் பகுதிகள் சிதைக்கப்பட்டால் பருவமழைக் காலங்களில் சென்னையே வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது. பரந்தூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். இதற்குப் பதிலாக, விவசாயமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை விமான நிலையத்திற்காகத் தேர்வு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதில் தவறும்பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம் தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும். அதோடு எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கை வைக்கும் எந்த அரசும் அதே எளிய மக்களால் ஆட்சி.அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும் என்பதையும் இந்த தீர்மானத்தின் வழியே எச்சரிக்கையாகவும் தெரிவித்துக்கொள்கிறோம். தீர்மானம் 2: சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் இது 8.3 சதவீதமாகும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற வாக்காளர் சரிபார்ப்புப் பட்டியலில் இவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படவில்லையா? இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியிருப்பது ஜனநாயக விரோதமில்லையா? என்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்? போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள் என எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் சிறப்புத் தீவிர திருத்தத்தை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மேற்கொள்ளக் கூடாது என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மட்டுமே. அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம் 3: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம் மத்திய மற்றும் மாநில அரசுகள், மீனவர்களையும் அவர்களது பிரச்சினைகளையும் எப்போதும் அரசியல் ஆதாயமாக மட்டுமே பார்க்கின்றன. ஆனால் தமிழக வெற்றிக் கழகம், எப்போதும் உண்மையான மீனவ நண்பனாக அவர்களுடன் நிற்கும். நம் நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததால் கடலில் தத்தளிக்கும் படகு போலவே தமிழக மீனவர்களின் வாழ்வும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கைது செய்வதைத் தடுக்க, அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்வதை நிறுத்த, மீன்பிடி தொழிலையும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க, தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே கூறியது போல கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், இதுவரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களின் படகுகளை இலங்கை அரசுத் திருப்பித் தரவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம் 4: ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவச் சமூக நீதிக்கான அறநெறியை உலகிற்கே கற்றுக் கொடுத்த தமிழகம், இன்றைய திறனற்ற ஆட்சியாளர்களால் வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்திருப்பதாக உயர்நீதிமன்றமே வேதனை தெரிவித்துள்ளது. சாமானிய மனிதர்கள் சராசரி வாழ்க்கை நடத்தக்கூட அஞ்ச வேண்டிய சூழல், தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. ஆணவக் கொலைகளைத் தனிச் சட்டமியற்றித் தடுக்கத் தவறிய வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. எப்படிச் சமூக நீதி அரசாகும்? ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கும்போது, அதை இந்தத் தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம் 5: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணம் முதல் காவலர் படுகொலைகள் வரை பல்வேறு காரணங்களுக்காக, சர்வ சாதாரணமாகக் கொலைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவங்கள். மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இதனால், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இளைய சமுதாயம் பாதுகாப்பற்ற சூழலைச் சந்தித்து வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்காமல், பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறையில்லாமல் செயல்பட்டு வரும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசுக்கு இம்மாநாடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம் 6: அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் அரசுப் பணியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் போதிய வேலை வாய்ப்பின்றிப் பரிதவித்து வரும் சூழல், தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்நிலையில், அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த நடவடிக்கையால். போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வரும் இளைஞர்கள், மாணவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான நேரடிப் பணியிடங்கள் பெருமளவு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் அவுட்சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்படுவதால். TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவையே தகர்த்துவிடும் பேராபத்து ஆகும். எனவே, இந்த அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், TNPSC உள்ளிட்டத் தேர்வு வாரியங்கள் வாயிலாகத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நேர்மையான முறையில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை தமிழக வெற்றிக் கழகத்தின் இம்மாநில மாநாடு வலியுறுத்துகிறது https://www.virakesari.lk/article/223059

யாழில் இராணுவ முகாமுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

1 month 1 week ago
யாழில் இராணுவ முகாமுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் 22 Aug, 2025 | 11:10 AM பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வருமாறு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (22) நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் திங்கட்கிழமை (25) காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்பட உள்ளது. 01) வின்சன்டி போல் டக்ளஸ் போல் நகர பிதா பருத்தித்துறை நகர சபை. 02) தம்பிராசா சந்திரதாஸ் தலைவர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம். https://www.virakesari.lk/article/223080

வேலை நிறுத்த போராட்டத்தினால் ஸ்தம்பிதமடைந்த தபால் பரிமாற்ற சேவைகள்

1 month 1 week ago
சத்தியாகிரகத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். இந்த சத்தியாகிரகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) 5வது நாளாகவும் தொடர்கிறது. இந்த சூழலில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்க மறுப்பதாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், கைரேகையை கட்டாயமாக்குதல் மற்றும் மேலதிக நேரம் தொடர்பான தீர்மானம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று பாராளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தினார். 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது. பணிப்புறக்கணிப்பு காரணமாக, கடந்த சில நாட்களாக தபால் சேவைகளைப் பெறச் சென்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmemetnq3001jo2g9mif2ju0x

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 month 1 week ago
இது யாழ்ப்பாணத்தினை பொருளாதார ரீதியாக வளர்ச்சிக்குள்ளாக்கும், இதனை வரவேற்கவேண்டும் அத்துடன் காங்கேசந்துறை துறைமுகத்தினையும் விரிவாக்கம் செய்து திட்டமிட்ட சாலை ஒருங்கிணைப்பு செய்தால் ஒரு கைத்தொழில் நகரமாக யாழ்ப்பாணத்தினை மாற்றமுடியும். இதனை ஆங்கிலத்தில் Business plan என கூறுவார்கள், இரண்டுவகையான ஆய்வறிக்கைகள் முதாலந்தர ஆய்வறிக்கை (நேரடி ஆய்வறிக்கை), இரண்டாந்தர ஆய்வறிக்கையினை (நிறுவனங்களின் ஆய்வறிக்கை) மூலம் 2 வருட cash flow எதிர்வு கூறலை உருவாக்குதல் உள்ளடங்கலாக இத்திட்டம் உருவாக்கப்படும். இது சாதார வர்த்தக நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்காக நடைமுறையில் உள்ள விடயம், சில வருடங்களின் முன்னர் ஒரு வர்த்தக விடயமாக ஒரு நிறுவனத்தின் முகவரை அணுகிய போது அவர் தனது நிறுவனத்தினூடாக ஒரு கிளையினை குறித்த நகரத்தில் ஆரம்பிக்க உள்ளதாக கூறினார், ஒரு ஆர்வகோளாறில் வர்த்தக திட்டம் வைத்திருக்கிறீர்களா என கேட்டேன் அது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கே வர்த்தக திட்டம் பற்றி தெரிந்திருப்பதில்லை, ஆனால் இணையத்தில் மாதிரி வர்த்தக திட்டம் மற்றும் வழிகாட்டிகளும் உள்ளது, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் முயற்சிக்கலாம்.

‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார  அரசின் நடவடிக்கை

1 month 1 week ago
‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார அரசின் நடவடிக்கை முருகானந்தன் தவம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ‘நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ அரசுக்குள் முரண்பாடுகள், அரசு மீதான குற்றச் சாட்டுக்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள், கிண்டல்கள் என ஏதோவொன்றுக்குள் சிக்கி வருகின்றது. ஒரு சிக்கலுக்குள் இருந்து விடுபடுவதற்குள் இன்னொரு சிக்கலுக்குள் மாட்டுப்பட்டு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பிரசாரங்களுக்கும் நன்றாகத் தீனி கொடுப்பதே அரசின் நிலையாகவுள்ளது. அனுரகுமார அரசு ஆட்சி அரியணை ஏறிய நாள் முதல் கலாநிதிப் பட்டம், அரிசி, தேங்காய், குரங்கு, உப்பு, பாதாள உலகம், படுகொலைகள், சர்வாதிகாரம், இந்தியப் பிரதமரின் வருகை, ஜனாதிபதியின் இந்திய, சீன விஜயங்கள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்கு வீழ்ச்சி, மின்சாரக் கட்டணம், வடக்கு காணி சுவீகரிப்பு, 323 சிவப்பு முத்திரை கொள்கலன்கள் விடுவிப்பு,இஸ்‌ரேலுக்கான அனுமதிகள், கல்வி மறு சீரமைப்பு என பல சர்ச்சைகளில் சிக்கி இவற்றிலிருந்து இன்னும் மீளாத நிலையில், தற்போது ‘கஞ்சா’ சர்ச்சையில் சிக்கியுள்ளது. இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதன்முறையாக ‘கஞ்சா’ பயிரிடுவதற்கான சட்ட பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன வெளியிட்டுள்ளதன் மூலமே ‘மாற்றம்’ அரசு தற்போது ‘கஞ்சா’ அரசாக மாறி கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதன்முறையாக கஞ்சா (பயிரிடுவதற்கான சட்டப்பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இலங்கை முதலீட்டு சபையின் கீழ், செயல்படுத்தப்படவுள்ளது. மொத்தம் 37 விண்ணப்பங்கள் வந்த நிலையில், அவற்றில் இருந்து ஏழு முதலீட்டாளர்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இலங்கை முதலீட்டு சபை அவர்களுக்கு உரிய சட்ட அனுமதியை வழங்கியுள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஆறு மாதங்களுக்குத் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் நடைபெறும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, உரிமம் நீட்டிக்கப்படுமா என்பதைக் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும். ஒவ்வொரு முதலீட்டாளரும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை இலங்கை மத்திய வங்கியில் உத்தரவாதமாக வைப்பிலிட வேண்டும். பயிர்ச்செய்கைத் திட்டத்தை ஆரம்பிக்க குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு தேவை. கஞ்சா பயிரிடப்படும் அனைத்து உற்பத்திகளும் முழுமையாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். நாட்டிற்குள் எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாது. ஏற்றுமதி நோக்கங்கள் மருந்து உற்பத்தி மற்றும் சோதனைக்காக மட்டுமே. பயிரிடும் பகுதி பாதுகாப்பான வேலியால் சூழப்பட்டிருக்க வேண்டும். விதைகள், இலைகள், வேர்கள் உள்ளிட்ட எந்தப் பகுதியும் வெளிப்புற சூழலுக்குள் வெளியேறக் கூடாது. வளாகத்தில் சிறப்பு பணிக்குழு மற்றும் பொலிஸ் பாதுகாப்பு கட்டாயம். நில ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்பு, இலங்கை முதலீட்டு சபையின் கீழ் மீரிகம பகுதியில் 64 ஏக்கர் நிலம் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் நடைமுறையை இலங்கை முதலீட்டு சபை, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுர்வேதத் திணைக்களம் இணைந்து மேற்பார்வையிடுகின்றன. இந்த முயற்சியின் மூலம் இலங்கைக்கு கணிசமான அந்நியச் செலாவணி வருவாய் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது. ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான இலங்கையில் கஞ்சா பயிரிடும் திட்டத்தை அனுரகுமார அரசு முதன்முதலில் கொண்டுவந்திருந்தால் கூட அது பெரியளவிலான சர்ச்சைகளை, விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்காது. ஆனால், கடந்த அரசில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்த டயனா கமகே இந்த கஞ்சா பயிரிடும் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் ஒரு யோசனையாக முன்வைத்தபோது, அதனை வரிந்துகட்டிக்கொண்டு எதிர்த்தவர்கள் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமாரவும் பிரதமரான ஹரிணி அமரசூரியவும் அமைச்சரான விஜித ஹேரத்தும் கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கி அமைச்சரான டயனா கமகே இந்த யோசனையை 2021ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் முன்வைத்தார். உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சா செய்கை ஊடாக, பாரிய இலாபத்தை பெற்று வருவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். எனினும், கஞ்சா ஏற்றுமதிக்கான பயிர் செய்கையை மேற்கொள்வது சட்டமாக்கப்படுகின்றமை தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்த நிலையில், அனுரகுமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதனை கடுமையாக எதிர்த்தது. இலங்கையில் கஞ்சா தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதிலும், நாட்டிற்குள் இன்றும் கஞ்சா பயன்பாடு காணப்படுவதாகவும் இந்த நிலையில், கஞ்சா செய்கையை அனுமதித்து சட்டமாக்கும் பட்சத்தில், அது நாட்டிற்குள் மேலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது எனவும் கஞ்சா ஏற்றுமதிக்கு மாத்திரம் அனுமதி தற்போது கோரப்பட்டாலும், எதிர்காலத்தில் உள்நாட்டு பயன்பாட்டிற்கும் அனுமதி கோரப்படும் சாத்தியம் உள்ளது எனவும் இவர்கள் எதிர்த்து வாதிட்டனர். கஞ்சா என்பது போதைப்பொருள் கிடையாது என்பதுடன், கஞ்சா என்பது தலைசிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சாவிற்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், பல நாடுகள் கஞ்சா செய்கை செய்து வருகின்றன. அத்துடன், பல நாடுகள் கஞ்சாவை ஏற்றுமதி செய்யும் அதேவேளை, மருந்து வகைகளுக்கும் கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றன. கஞ்சாவிற்கான கேள்வி, நாளுக்கு நாள் அதிகரிக்கும் உலகில் நோய்கள் என்றுமே குறையாது . அதனால், மருத்துவ குணம் கொண்ட இவ்வாறான மூலிகைகள் அத்தியாவசியமானவை. எதிர்வரும் காலப் பகுதியில் பில்லியன் கணக்கான பணத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு ஏற்றுமதி பயிர் செய்கை கஞ்சா. நாடு இன்று பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து யோசிக்க வேண்டும். இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள் கிடையாது என்பதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய, செய்கை முறையிலான கேரளா கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. அதுவே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கஞ்சா என்பது இலங்கையின் கலாசாரத்துடன் இணைந்த ஒன்று. கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டிற்கு பாரிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும், கஞ்சாவின் ஊடாக பெரும்பாலான முக்கிய பொருட்களைத் தயாரிக்க முடியும். அழகு சாதன பொருட்கள், மருத்துவ வகைள் என பல்வேறு பொருட்களைத் தயாரிக்க முடியும் எனவும் டயானா கமகே தெரிவித்திருந்தார். ஆனால், அப்போது டயனா கமகேயை மிக மோசமாக, தரக்குறைவாக, அவரின் நடத்தை தொடர்பில் கூட, விமர்சித்தவர்கள்தான் தற்போது அவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த ‘கஞ்சா பயிர் செய்கை’ திட்டத்திற்கு தமது அரசில் அனுமதி வழங்கி அதனை நியாயப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா செய்கை திட்டம் கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட திட்டம். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட கஞ்சா பயிர்ச் செய்கையானது முதலீட்டு அபிவிருத்தி சபையின் திட்டம். இந்த திட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சியினரும் ஆதரவு வழங்கியிருந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தனர், இந்த திட்டத்தின் ஆபத்தான விடயங்களை அப்போது அவர்கள் எதிர்த்தனர். தற்பொழுது அந்த ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் திட்டமிட்டு கஞ்சா செய்கையில் ஈடுபடவுள்ளது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிக்கின்றார். ‘புதிய திசை’, ‘மாற்றம்’ என்ற கோஷத்தோடு ஆட்சி பீடம் ஏறிய அனுரகுமார அரசு, எந்த புதிய திசையிலும் பயணிக்க வில்லை. எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. பழைய திசையிலேயே தொடர்ந்தும் பயணிப்பதுடன், பழைய அரசுகள் கொண்டுவந்த போது தங்களினால் கடுமையாக எதிர்க்கப்பட்ட திட்டங்களையே அப்படியே ‘கொப்பியடித்து’ தமது திட்டங்களாக்கி அதனை நியாயப்படுத்தி நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். இதுவே சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் முதல் தற்போதைய ‘கஞ்சா பயிர் செய்கை’ வரை முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, ‘மாற்றம்’ என்பது அனுரகுமார அரசின் வார்த்தையாகவே மட்டும் உள்ள நிலையில் ‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார அரசின் நடவடிக்கையாக மாறிப்போயுள்ளது. அதாவது நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, தமது கொள்கையிலிருந்து, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து அனுரகுமார அரசுதான் ‘மாற்றம்’ கண்டுள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொப்பி-பேஸ்ட்-மட்டுமே-அனுரகுமார-அரசின்-நடவடிக்கை/91-363230
Checked
Tue, 09/30/2025 - 00:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed