புதிய பதிவுகள்2

வேலை நிறுத்த போராட்டத்தினால் ஸ்தம்பிதமடைந்த தபால் பரிமாற்ற சேவைகள்

1 month 1 week ago
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்திர சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்தார். இருப்பினும், மத்திய தபால் நிலையத்தில் குவிந்து கிடந்த தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தபால் மா அதிபர் ருவான் சத்குமார கருத்து தெரிவிக்கையில், “சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து நிதி பெறப்பட வேண்டும். வேலைநிறுத்தத்தின்போது சம்பளக் கொடுப்பனவுகளுக்கு நிதி விடுவிக்கப்படாது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடமைக்குத் திரும்பியவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று கடமைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என்றார். https://www.samakalam.com/வேலைநிறுத்தத்தில்-ஈடுபட/

முன்னாள் ஜனாதிபதி ரணில் CIDயால் அழைக்கப்பட்டுள்ளார்

1 month 1 week ago
ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/ரணில்-விக்ரமசிங்க-குற்றப/

நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி கைது!

1 month 1 week ago
நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி கைது! adminAugust 22, 2025 நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நல்லூர் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் (21.08.25) வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது இளம் யுவதி ஒருவர் , பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேளை, அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர். அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்த காவற்துறையினரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவற்துறையினர் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்த போது அவரது உடைமையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன. அதனை அடுத்து யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து , யுவதியை கையும் களவுமாக பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் காவற்துறையினர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதேவேளை தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக 08 பேர் காவற்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/219514/

தேசிக்காய் பாணம் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு தண்டம்!

1 month 1 week ago
தேசிக்காய் பாணம் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு தண்டம்! adminAugust 22, 2025 சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள உணவகங்கள் பழக்கடைகள் என்பவற்றுக்கு , தேசிக்காய் கரைசல் என கூறி , அதற்கான துண்டு சீட்டுக்களும் ஒட்டப்பட்டு , சிற்றிக் அமிலம் கரைசலை 4 லீற்றர் கொள்கலன்களில் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வந்துள்ளது. குறித்த நிறுவனத்தின் விற்பனை வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட சண்டிலிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் செபமாலை பிறின்சன் அவற்றில் இருந்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்டு வந்த சிற்றிக் அமிலம் கொள்கலன்களை மீட்டு , நிறுவனத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். அதனை அடுத்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்ட சிற்றிக் அமிலம் கொள்கலன்களை , அரச பகுப்பாய்விற்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு மன்று பணித்தது. பகுப்பாய்வு அறிக்கையில், அவ்கரைசல் தனியே சிற்றிக் அமிலம் என்பதுடன் முழுவதும் கிருமித்தொற்றுடனும் மனித பாவனைக்கு உகந்ததல்லாதகாவும் இருந்தாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, குறித்த நிறுவன உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. இயற்கை பழச்சாறு என விற்கப்பட்ட பானங்கள் இந்த கரைசலை பயன்படுத்தியே தயாரித்து விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219516/

கற்க கசறும்

1 month 1 week ago
வடதுருவ நாடுகளில் தற்போது கோடைகாலம் என கருதுகிறேன், பல உறவுகளை யாழில் காணமுடிவதில்லை, திடீரென உங்களது பதிவுகளும் குறைந்து விட்டது. குழந்தைகளின் திறமை அதன் சூழலில் மட்டுமல்ல அவர்களின் விருப்புகளிலும் தங்கியுள்ளது, அதனை திறமை என கூறமுடியாது எனகருதுகிறேன், ஆர்வம் என கூறலாம் அது தொடர்ந்து ஒரு கலை வடிவம் பெறாமலும் போகலாம் (கலை என்பது கலா எனும் சொற்பதத்திலிருந்து உருவாகியதாகவும் கலா என்றால் தொடர்ந்து வளர்ச்சியடையும் எனும் பொருளாம்). எனது முதலாவது குழந்தை பேச ஆரம்பிக்கும் போது ஒரு மொழியில் பேசினார், அது தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை. எனது மனைவிக்கு ஒரு சந்தேகம் அது முற்பிறவி பற்றியதாக இருந்தது, ஆனால் எனக்கு அந்த மொழி எங்கோ கேட்ட மொழி போன்ற உணர்வு இருந்தது ஆனால் அது என்ன மொழி என புரியவில்லை. அது ஒரு எண்ணிக்கை போல இருந்தது, இணையத்தில் 1, 2, 3 ஸ்பானிஸ் மொழியில் கூறுவது எப்படி என தேடிய போதுதான் புரிந்தது அவர் பேசிய மொழி ஸ்பானிஸ், அவர் ஸ்பானிஸ் பேசுவதற்கு சூத்திரதாரி டோரா எனும் கார்டூன் என கண்டுபிடித்து அந்த வழக்கை வெற்றிகரமாக முடித்துவைத்தேன்🤣.

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

1 month 1 week ago
உக்கிரேன் இரஸ்சிய போர் சமாதானமாக தீர்க்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் குறைவடைந்து வருவது போல காணப்படுகிறது, அமெரிக்க அதிபரின் அண்மைய கூற்று இதனை பிரதிபலிப்பதாக இருக்கிறது, உக்கிரேன் தற்காப்பு நடவடிக்கை தாக்குதலின் மூலம் எதிராளியினை தோற்கடிக்க முடியாது என கூறிய அவரது கருத்து, எதிர்வரும் காலங்களில் இரஸ்சியாவிற்குள் உக்கிரேன் இராணுவத்தாக்குதலை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகிறது. இது அமெரிக்காவின் பலத்தின் மூலமான சமாதானம் எனும் நியோகொன்னின் அடிப்படையாகும். ஆனால் எங்கோ நிம்மதியாக இருந்த ஒரு தேசத்தினை பாதுகாப்பற்றதாக்கிவிட்டு, அதன் பாதுகாப்பிற்கு போராடுவதாக பிரமையினை உருவாக்கி மற்றவர்கள் அழிவில் குளிர்காய்பவர்கள் சமாதானம் பற்றியும், அதற்கேற்ப சூழ்நிலை பற்றியும் பேசுவது வேடிக்கை. உக்கிரேன் சுதந்திரத்திற்கு முன்னர் ஏற்றுக்கொண்ட எக்காலத்திலும் நடுநிலையான ஒரு தேசமாகவும், அணுஆயுதமற்ற தேசம் எனும் கோட்பாடும், பின்னர் உக்கிரேனில் இருந்த அணு ஆயுதங்களை ஒப்படைக்கும் போது அதற்கு பாதுகாப்பு உறுதி வழங்கப்பட்டிருந்தது, அந்த பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்ப்பட்ட அணியில் அமெரிக்கா, இங்கிலாந்து இரஸ்சியா என்பன இருந்தன, அதே இரஸ்சியாவினால் உக்கிரேனிற்கு பாதுகாப்பிற்கு அச்சுறத்தல் 2014 இல் நடுநிலையான உக்கிரேன் அரசினை மேற்கின் ஆதரவுடன் மேடான் சதிப்புரட்சியால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் கருங்கடல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரிமியாவில் இருந்த இரஸ்சிய கடற்படை நிலத்திற்கான குத்தகையினை மேற்கு சார்பு உக்கிரேன் புதிய அரசு இரத்து செய்துவிடலாம் எனும் அச்சத்தில் கிரிமியாவினை கைப்பற்றியதுடன் ஆரம்பமானது. 2014 பின்னர் வெளிப்படையாக இரஸ்சியாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்; உக்கிரேன் படை பல அதிகரிப்பு என ஒரு தொடர்ச்சியான அச்சுறுத்தல் நிலவிய நிலையில் இரஸ்சியா 2021 இறுதிப்பகுதியிலிருந்து உக்கிரேன் போர் தொடங்குவதற்கு முன்னர் வரை இரஸ்சியாவிற்கு நேட்டோவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் கோரி வந்தது அது நேட்டோவினால் மறுக்கப்பட்டது, உக்கிரேன் மீதான போருக்கு காரணமாக இருந்தது. போரின் ஆரம்பத்தில் ஏற்படுத்த முயன்ற சமாதான முயற்சிகள் கூட மேற்கினால் திட்டமிட்டு குழப்பப்பட்டு போர் தீவிரப்பட்டது. இந்த போருக்கு அடிப்படைக்காரணம் மேற்கின் இரஸ்சியாவின் இருப்பு தொடர்பான கொள்கை வகுப்பு. உக்கிரேன், இரஸ்சியர்களின் அழிவுகளுக்காக அழுவதெல்லாம் ஆடு நனைகிறதே என அழும் ஒரு ஒநாயின் அழுகுரல். இரஸ்சிய இணைய ஊடுருவிகளால், உக்கிரேன் பாதுகாப்பு துறையில் இருந்த ஆவணங்கள் இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது அதன் விபரங்களை பார்க்கவில்லை ஆனால் அந்த எண்ணிக்கை பார்க்கும் போது தமது சுயநலத்திற்காக மற்றவர்களை கோர்த்துவிட்டு பின்னர் சமாதானம் என தம்மை விளம்பரப்படுத்துவது பின்னர் மீண்டும் பலமாக மோதுங்கள் என கூறும் இந்த மனிதரை நம்பி தொடர்ந்தும் முட்டாள்தனமாக இரஸ்சியாவும் உக்கிரேனும் மோதினால் முட்டாள்களுக்குத்தான் நட்டம். இந்த போர் அழிவிகளின் பின்னராவது குரங்கினை அப்பம் பிரிக்க அழைக்காமல் சம்பந்தப்பட்ட இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்விற்கு வரவேண்டும். சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் இந்த போரினால் பாதிக்கப்படவில்லை, உலகெங்கும் இதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டுள்ளது உலக மக்கள் அனைவரும் விரும்பும் அமைதிக்கு குறுக்கே நிற்கும் அரசுகளை அங்கு வாழும் மக்கள் புறக்கணிக்கவேண்டும்.

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

1 month 1 week ago
மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை! யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” எமது அமைச்சின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்துக்கென ஒரு துறைமுகமொன்று இருக்கவில்லை. எனவே, மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அதற்குரிய வேலைத்திட்டம் ஆரம்பமாகும். அத்துடன், 165 மில்லியன் ரூபா செலவில் யாழ். கொழும்புத் துறையிலுள்ள துறைமுகத்தையும் நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத குறைப்பாடு காணப்படுகின்றது. வாழைச்சேனை துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். ஏனெனில் ஒலுவில் துறைமுகம் இன்று செயல் இழந்து காணப்படுகின்றது. விஞ்ஞானப்பூர்வமான ஆய்வின்றி கட்ட வேண்டும் என்பதற்காகவே குறித்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழைச்சேனை துறைமுகத்தை நோக்கியே மீனவர்கள் படையெடுத்து வருகின்றனர். எனவே, வாழைச்சேனை துறைமுகத்தை மேலும் விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும். இதற்காக 1, 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார், பேசாலையில் இறங்குத்துறையை அமைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேசாலையில் வாழும் மக்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் குறைப்பாடுகளை தீர்த்து, பேசாலையிலும் துறைமுகமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யாழ். குருநகர் பகுதியில் இறங்குத்துறைமுகமொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது. இப்பணி முடிந்த பின்னர் நிதி ஒதுக்கப்படும்” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444114

தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images

1 month 1 week ago
திரு நெடியவனுடன் தமிழ் இளையோர் அமைப்பின் (TYO) உறுப்பினர்கள். 2004/2005 இவர்கள் யாவரும் வன்னிக்கு கற்கைநெறிக்காக வந்த போது நெடியவன் அவர்களுடன் அமர்ந்திருந்து எடுத்த படங்கள் இவையாகும். இவற்றை தாம் காஸ்ட்ரோ அவர்களின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றியதாக சிங்களம் கூறி வெளியிட்டது.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

1 month 1 week ago
லெப். கேணல் எழிலவன் எ ஜீவனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளின் போது 6/02/2002 இலுப்படிச்சேனை "உச்சிவரை முகர்ந்து உயிர் நனைய உறவாடிய உதயத்தின் காதலருக்காக" அன்னாரின் சிலையை அவரது தாயார் திறந்துவைக்கிறார்
Checked
Tue, 09/30/2025 - 00:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed