புதிய பதிவுகள்2

சம்பூர் பகுதியில் மனித எச்சங்களை ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக பட்ஜட் மன்றில் சமர்ப்பிப்பு

1 month ago
எப்படியும் குறுக்காலை போகும் குருக்கள் மடம் ...செப்டம்பருக்கு முன்..

மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்

1 month ago
பிறீயா விட்டால்...பாகிஸ்தானின் அனுசரணையுடான் பென்னாம் பெரிய அல்லா கோவில்கட்டி...இசுலாமிய கோட்டலும் ...நலன்புரி ..மண்டபமும் கட்ட..பெரிய பிளான் போட்டவை உங்களுக்கு எதுவேணும் பிரியன் சார்...(முன்னாள்...கொ.விதானையார்)>..மைதானமா ...அல்லா கோவிலா....கொட்டடியில் இருந்தாலே...அல்லாமுழக்கம் பீக்கரில் கேட்குமாம்

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

1 month ago
கிளிநொச்சி பூநகரிப் பரப்பிலிருந்த என்னால் இனங்காண முடியா நினைவுத்தூண் (பெயர் தெரிந்தோர் கூறவும்) "சிங்களப் படைஞர்கள்"

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
உலகத்தில்அமைதி ஏற்பட்டால் அமெரிக்கா ஐரோப்பா எப்படியாம் பிழைத்துக் கொள்வது? வல்லரசுகளின் ஆதரவு இல்லாமல் உலகத்தில் ஏதாவது யுத்தம் நடந்ததா? இல்லை என்று தான் எண்ணுகிறேன். அரபு நாடுகளை பொறுத்தவரை வாகனம் உள்ளது. ஆனால் ஓட்டத் தெரியாது.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

1 month ago
😂 விளங்கியது. இன்று இவரின் காணொளி ஒன்று அனுப்பினார்கள். விஜய் தனது மாகாநாட்டில் ஏன் ஈழத்தமிழர்கள் பற்றி ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை என்பது அது. விஜய் அப்படி பேசுவார் என்று இவர் எப்படி எதிர்பார்த்தார்! காணொளியை அப்படியே நீக்கிவிட்டேன்.

இரசித்த.... புகைப்படங்கள்.

1 month ago
நான் இந்த படத்தை ரசித்ததை விட இயற்கையின் அற்புதத்தை வியந்து இரசித்தேன். பனம் குருத்து பனை ஓலையாகி காவோலையாக விழும் மட்டும் தான் தூக்கணாங்குருவியின் வாழ்காலம். இவ்வளவு நுண்ணியமாக கூடு கட்டி தன் சந்ததியை பெருக்கி விட்டு காவோலை விழ அதன் வாழ்க்கையும் அஃதே.

மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்

1 month ago
வளர்ந்த நாடுகளில் ஒரு சர்வதேச நிகழ்வு வருகின்றது என்றால் ஒரு பிரபல்யமில்லாத அல்லது பின் தங்கிய இடங்களை தேர்வு செய்வார்கள்.அதன் பின் சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்து அந்த இடத்தை முன்னேற்றுவார்கள். ஆனால் இது இலங்கை அரசியலுக்கு சரி வருமா என தெரியவில்லை.மகிந்த கட்டின விமானநிலையம் நெல்லு காயப்போட லாய்க்கு இல்லை என எங்கேயோ வாசித்த ஞாபகம்.😂

இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.

1 month ago
இலங்கையில் இந்திய வாகனங்களை விரும்பி வாங்குவது இல்லையாம் அவர்கள் விரும்பி வாங்குவது ரொயோட்டா யாறிஸ் சுசுகி Wagon R போன்ற யப்பான் வாகனங்களை அப்படி இருக்க இலங்கை வாகன விபத்துக்களுக்கு காரணமாக இந்திய வாகனங்களை கட்டுரரையாளர் கொண்டுவந்திருக்க வேண்டியது இல்லை

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
அமெரிக்காவை மீறி எதையும் செய்ய வலிமை உள்ள ஐரோப்பாவிற்கே தைரியம் இல்லை என்பதற்கு இந்த புகைப்படம் நல்ல சாட்சி. அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வளர்ந்த அரபுநாடுகள் எப்படி மேற்குலகின் செல்லப்பிள்ளை இஸ்ரேலின் அஜாரகங்களை எதிர்ப்பார்கள்?எண்ணைக் குழாய்களில் அடைப்பு வந்தால் கூட அந்த அடைப்பை எடுக்க அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே தேவை. நிலமை இப்படி இருக்க....? ஆனால் உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்கும் வல்லமையும் அமெரிக்காவிடம் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ரணிலுக்கு இருக்கும் வருத்தங்கள் எவ்வளவு காலமாக இருக்கிறது?பல ஆண்டுகளாக இருக்கிறதா?அல்லது கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னரா? பல ஆண்டுகளுக்கு முன்னர் என்றால் எப்படி ஜனாதிபதியாகப் பதவியில் இருந்தார்?மீண்டும் எப்படி ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டார்.இந்த வருத்தங்களுடன் ரணிலை நாளை ஜனாதிபதியாக பதவியேற்கச் சொன்னால் ரணில் ஏற்றுக் கொள்வாரா?அல்லதுசகவீனத்தைக் காரணம் காட்டி மறுப்பாரா?மேலும் சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவ சிகிச்சையெப் பெறுவதற்கு என்ன தயக்கம்?

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
உக்ரேனின் மீது உள்ள மனிதாபிமானத்திற்காக/உரிமைக்காக ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் உதவுகின்றது என விசுகர் நினைத்தால் குமாரசாமி ஆகிய நான் விழுந்து உருண்டு பிரண்டு சிரிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆக்கிரமிப்பு என்பதன் அர்த்தம் எல்லா இடங்களிலும் ஒன்றுதான். ஆனால் பிராந்திய அரசியல் என ஒன்று வரும்போது அதன் வடிவங்களும் அர்த்தங்களும் வேறுபடும். எம்மவர்கள் பலர் இன்றும் ஹிந்தியாவை திட்டிக்கொண்டிருக்கின்றார்கள். ஏன்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ஏதோ பழி தீர்க்கும் படலமாகவே எனக்கு தெரிகின்றது. எதற்கு வெட்கப்பட வேண்டும். அவர்களின் தொழிலே அதுதானே. தமிழர் பிரச்சனையை தீர்க்க வந்த வெள்ளைப்புறா 2009ன் பின்னர் ஏன் தமிழர் பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருக்கின்றது? இப்போது சிங்களவர்களின் பிரச்சனையை தீர்க்கப்போகுகின்றதா? அது வெள்ளைப்புறா அல்ல வெள்ளை நரி.
Checked
Tue, 09/30/2025 - 09:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed