புதிய பதிவுகள்2

Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary

1 month ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Low Profile Vessels 1 (class name lost in time) IBM Uduruvi 2006-01 1 2 (class name lost in time) OBM (2) 'This craft was beached after the steerer was killed by SLN on Dec 27, 2008' Pazhani 6 Used to transfer fuel from Ships to shore. - Pazhani was the first craft to sink. - Fitted with ram and explosives to avoid capture. 3 (class name lost in time) IBM (craft name lost in time) 1 4 (class name lost in time) IBM Without the steerer cabin cover: (craft name lost in time) 1 - A boat with 2 ram points. - 3 men can travel in it. - Sometimes the steerman area is covered with a room-like structure. - Camouflaged with unusual colours (blue, green, yellow, white and red) 5 (class name lost in time) IBM Image Credits: HI Sutton Satheesh 1 - Its craft name was written in Tamil (big letters) and English (small letters) 6 (class name lost in time) IBM (1) (craft name lost in time) 1 This is a trimaran. - Used for logistic transportation 7 Not Named IBM (1) Not named 1 This is a catamaran type LPV This was captured in a boatyard belonging to a Tamil in Thailand, along with other submersibles. Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total in construction Note LPVs under construction 1 (class name lost in time) IBM (1) Imagined finished structure | Img. credits: HI Sutton Real image: Not named 1 2 (class name lost in time) IBM (1) Not named 1

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
மிகச்சிறந்த கண்ணோட்டம் வசி! நீங்கள் எழுதியதும் அத்தனையும் உண்மையே. ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ அமைப்புகளும் விரிவடைய வேண்டுமாம். ஆனால் ரஷ்யா கூனிக்குறுகி நிற்க வேண்டுமாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்றைய மனநிலை இப்படித்தான். உக்ரேனுக்கு நேட்டோ ஆசையும் ஐரோப்பிய ஒன்றிய ஆசையும் வருவதற்கு முதல் ஒழுங்காகத்தான் அந்த நாடு இருந்தது. ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இந்தியா அதி முக்கிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடாகி விட்டது.எனவே மேற்குலகில் இருந்து ஈழத்தமிழர்களுக்காக கதவும் திறக்காது படலையும் திறக்காது என்பது என் கணிப்பு.

யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

1 month ago
அரகல அசையுது ...ஆமிக்கு காசுகொடுக்காவிட்டால் ....அனுரவும் அவுட்..

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
1- மனிதாபிமானம் அல்லது உரிமை சார்ந்த சந்தேகங்கள் ஒருபுறம் இருக்க பக்கத்து வீட்டு கதவு தானே உடைக்கப்படுகிறது என்று தூங்காத அவர்களை பார்த்து சிரிக்க முடிந்தால் தாராளமாக சிரியுங்கள். ஏனெனில் அதற்குள் தான் நம் வீட்டுக்கதவும் இருக்கிறது. 2- கிந்தியா என்ற யானை எமக்கு எப்படியோ அவ்வாறு தான் உக்ரைனுக்கு ரசியா.

Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary

1 month ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Semi-Submarines 1 (class name lost in time) IBM (craft name lost in time) 1 2 (class name lost in time) IBM (craft name lost in time) 1 3 (class name lost in time) IBM MS 380 1 4 Kokulan IBM Kokulan - 2 1992 1 Captured in India in the year 1993 in Mahabalipuram. Image credits: HI Sutton Kokulan - 24 2008 1 Image credits: HI Sutton Kokulan - 45 2008 1 Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total in construction Note Semi-Submarines under construction 1 (class name lost in time) IBM Original image: Image credits: HI Sutton (craft name lost in time) 1 2 (class name lost in time) IBM (craft name lost in time) 1 3 (class name lost in time) IBM (craft name lost in time) 1

டபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..?

1 month ago
இதை இணைப்பதன் காரணம் இரான் - ரசிய உறவு எப்படி உள்ளது என்பதற்கு. அதில் உள்ள நெருக்கம், இடைவெளி போன்றவற்றை தெரிவதற்கு முன்பே இங்கு சொல்லி இருக்கிறேன், ஈரான் இதில் அதன் பலத்திலேயே எதிர்க்கிறது. Robert Lansing InstituteRussia, Iran, Israel: Assessing Mohammad Sadr’s Claim tha...On Aug 24–25, 2025, Iranian statesman Seyyed Mohammad Sadr (member, Expediency Discernment Council) publicly alleged that Russia provided

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month ago
“அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 23 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 23 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / ''பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவில் ஒரு பெண்ணைக், 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தார் என்றால் யாராவது நம்புவார்களா?' தீபவம்சத்தின்படி, அலவத்த [புலகத்த] சபியா (பாகிய), பனய, பழைய மற்றும் தட்டிக ஆகிய ஐந்து தமிழ் மன்னர்கள் [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன் / Alavatta (Pulahattha), Sabhiya (Bahiya), Panaya, Palaya, and Dathika] மொத்தம் பதினான்கு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தனர். ஆனாலும் இவர்கள் இலங்கைக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று தீபவம்சம் கூறவில்லை. தீபவம்சம் 20-17ன் படி தட்டிக என்பது தமிழர் பெயர் என்பதைக் கவனியுங்கள். மகாநாமதேரர் [மஹாநாம] தீபவம்சத்தில் உள்ள ஐந்து தமிழர்களை, ரோகணத்தில் இருந்து ஒரு பிராமணனையும் மற்றும் ஏழு தமிழர்களையும் சேர்த்து, எட்டு பேராக மகாவம்சத்தில் திரித்து விரிவுபடுத்தினார். அதாவது தீபவம்சத்தில் அரியணைக்கு போட்டியிட்ட ஐந்து போட்டியாளர்கள், மகாவம்சத்தில் எட்டு பேர் ஆனார்கள். மேலும் பிராமணனை தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தினர். பிராமணனின் பெயர் திஸ்ஸ. எனவே, முன்பு கூறியது போல், பிராமணனும் ஒரு தமிழனாக இருக்கலாம்? பின்னர் ஏழு தமிழர்கள் பிராமணனையும் மன்னனையும் தோற்கடித்தனர். மேலும் மன்னன் தனது இரண்டு மனைவிகளில் ஒருவரான சோமாதேவியை, அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். ஏழு தமிழர்களில் ஒருவன் சோமாதேவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றுவிட்டான். ஆனாலும் அனுலாவும் சோமாதேவியும் [Anula and Somadevi] வட்டகாமினியின் மனைவிகள் என்று தீபவம்சம் ஒன்றும் கூறவில்லை. ஒருவன் வெளியில் இருந்து வந்து, நாட்டை கைப்பற்ற போரில் ஈடுபட்டு, ஏற்கனவே திருமணமான தோற்ற மன்னனின் மனைவி, தனக்கு காணும் என்று அவளுடன் திருப்தி அடைந்து, நாட்டை விட்டுவிட்டு திரும்பி போனார் என்பதை, யாராவது நம்புவார்களா? மற்றொரு தமிழர், ஒரு பௌத்தர் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர் புத்தரின் பிச்சைப் பாத்திரத்துடன் திருப்தியடைந்து நாடு திரும்பினாராம் ! பின்னர் தீபவம்சத்தில் கூறப்பட்டதைப் போலவே மற்ற ஐந்து பேரும், இலங்கையை அடுத்தடுத்து ஆண்டனர். இது ஒன்றே மற்றைய மூவரையும் வலிந்து கதையில் உட் புகுத்தியதைக் காட்டுகிறது. பின்னர் அரசன் வட்டகாமினி திரும்பி வந்து, தமிழ் அரசன் தட்டிகனை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைத் கைப்பற்றி, பன்னிரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தார். அவர் தனது மற்றொரு மனைவி சோமாதேவியையும் இந்தியாவிலிருந்து அழைத்து வந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒருவர், பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார் என்றால் யாராவது நம்புவார்களா? எப்படியாகினும், அந்த காலத்திலும் இலங்கை மற்றும் தென்னிந்தியா இடையே வணிகம், சமயப் பரிமாற்றம் மற்றும் அரச மரியாதை தொடர்புகள் இருந்ததுடன், பௌத்த பிக்குகள் மற்றும் வணிகர்கள் இரண்டு தீவுகளுக்கும் இடையே சுதந்திரமாகச் சஞ்சரித்தனர். எனவே, பௌத்த பிக்குகள், வணிகர்கள், மற்றும் இராசஅரண்மனையினர் வழியாக சோமதேவியின் இருப்பிடம் பற்றிய தகவல் அரசனிடம் வந்திருக்கலாம் என்று நம்பவும் ஒரு அரிய வாய்ப்பு உண்டு. குறிப்பாக, காஞ்சிபுரம், மதுரை, அனுராதபுரம் போன்ற பகுதிகள் பல உறவுகளால் அன்று இணைக்கப்பட்டிருந்தன என்பதற்கு வரலாற்று சான்றுகள் உண்டு. மகாவம்சத்தின் 33 ஆம் அத்தியாயம் பத்து அரசர்களைப் பற்றியது, அடுத்த அத்தியாயம் பதினொரு மன்னர்களைப் பற்றியது, அதுக்கு அடுத்த அத்தியாயம் பன்னிரண்டு மன்னர்களைப் பற்றியது, மகிழ்ச்சியான ஒரு ஏறுவரிசையில் அதிகரிப்பு! வட்டகாமினி மதக்கொள்கை கோட்பாட்டை முதல் முறையாக புத்தக வடிவில் எழுதச் செய்தார். பிற்காலப் பகுப்பாய்வில் தமிழ் அரசன் தட்டிக மிகவும் முக்கியமானவராக வருகிறார். வட்டகாமனிக்குப் பிறகு மகசுழி மகாதீசன் [Mahachuli Mahatissa] பதினான்கு ஆண்டுகள் கி.மு. 76 தொடக்கம் கி.மு. 62 வரை ஆட்சி செய்தார். பின்னர் வட்டகாமனியின் மகன் கோரநாகன் [Coranaga] பன்னிரண்டு ஆண்டுகள் கொள்ளையனைப் போல அரசாண்டான். மகசுழியின் மகன் திஸ்ஸா [Tissa], கோரநாகனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். பின்னர் சிவா [Siva] ராணி அனுலாவுடன் ஒன்றாக இணைந்து வாழ்ந்து, ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்த வடுக [Vatuka], ஒரு தமிழன் ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். வடுகா என்பது தெலுங்கு பேசும் மக்களைக் குறிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு சொல், ஆனால் இங்கு அவர் ஒரு தமிழர் என்று குறிக்கப் பட்டுள்ளது. பின்னர் திஸ்ஸ ஒரு வருடமும் ஒரு மாதமும் ஆட்சி செய்தார். பின்னர் ஒரு தமிழ் மன்னர் நிலயா [Nilaya] மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். தீபாவம்சம் 20 - 30 இன் படி, அனுலா மேற் கூறிய சிறந்த நபர்களைக் கொன்று நான்கு மாதங்கள் ஆட்சி செய்தார். இந்த அனுலா வட்டகாமினியின் மூத்த சகோதரனின் மனைவி என்றால், அவள் மிகவும் வயதான காலத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது?. வட்டகாமினி அவளை அழைத்துச் சென்றபோது அவள் ஒரு குழந்தையுடன் இருந்தாள். எனவே அப்பொழுது அவளுக்கு 25 வயது என்றால், வட்டகாமினி இறக்கும் போது அவளுக்கு 37 வயது இருக்க வேண்டும். பிறகு மற்றவர்கள், 14+12+3+4, மொத்தமாக 33 ஆண்டுகள், ஆட்சி செய்தனர். எனவே, அவள் 70 வயதிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். இருப்பினும், அது தெளிவாக இல்லை, ஆனால் சாத்தியம் உள்ளது. சிவா, வடுக, நிலயா என்பன தமிழ்ப் பெயர்கள், இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் சிறந்த மனிதர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். திஸ்ஸா கூட தமிழ் பெயராக இருக்கலாம்? Part: 23 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Who would believe that, over two thousand years ago, a man from Lanka could find a woman in India after twelve long years?' Then as per the Dipavamsa, five Damila kings, Alavatta (Pulahattha), Sabhiya (Bahiya), Panaya, Palaya, and Dathika ruled for fourteen years and seven months in total. The Dipavamsa does not say that they come from outside. Note that Dathika is a Damila name as per the Dipavamsa 20-17. Mahanama twisted and elaborated the five Damilas in the Dipavamsa into one Brahman from Rohana and seven Damilas who landed at Mahatittha in the Mahavamsa. The five contestants for the throne in the Dipavamsa became eight in the Mahavamsa. The Brahman and the seven Damilas claimed the throne, and the king set the Brahman against the Damilas. The Brahman’s name is Tissa and, as stated earlier, the Brahman could be a Tamil too. Then the seven Damilas defeated the Brahman and the king, and the king ran away leaving one of his two wives, Somadevi. One of the Damilas took Somadevi and went back. The Dipavamsa does not say that Anula and Somadevi are wives of the King Vattagamni. Would anyone believe that one came from outside, fought a war and satisfied with an already married woman to go away with her? Another one returned with the alms bowl of the Buddha, implying that Damila was a Buddhist! Then the rest is same as given in the Dipavamsa. Then the king Vattagamani came back, and defeated the Damila king Dathika and resumed his reign. He reigned for the total of twelve years and five months. He also brought back his other wife Somadevi from India. Would anyone believe that one, from Lanka, was able to find a woman in India after twelve years? Chapter 33 of the Mahavamsa is about ten kings, the next chapter is about eleven kings and the next chapter is about twelve kings, a happy sequential increase! Vattagamni made the doctrine to be written in the form of books for the first time. The Damila king Dathika is very important in the analysis later. Mahachuli Mahatissa reigned after Vattagamni for fourteen years. Then Vattagamni’s son Coranaga reigned twelve years like a robber. Tissa, the son of Mahachuli, reigned three years after Coranaga. Then Siva cohabited with queen Anula, and ruled for one year and two months. Then Vatuka from foreign country, a Damila, ruled for one year and two months. Vatuka is a term used to denote Telugu speaking people, but he is a Damila here. Then Tissa ruled for one year and one month. Then a Damila king Nilaya ruled for three months. Anula killed the above excellent persons, and ruled for four months, as per the Dipavamsa 20-30. If this Anula was the wife of the elder brother of Vattagamani, then she must have been very active even at very old age. She was with a child when Vattagamani took her with him. If she was 25 years of age, then she should be 37 by the time Vattagamni died. Then others ruled for, 14+12+3+4, 33 years. She should have actively involved even at the age of 70 years. However, it is not clear but the possibility is there. Siva, Vatuka, Nilaya are Tamil names, and all these rulers are described as excellent persons. Even Tissa could be a Tamil name. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 24 A தொடரும் / Will Follow https://www.facebook.com/share/p/1JSZZBCcpV/?mibextid=wwXIfr

கற்க கசறும்

1 month ago
🤣............... 15 அல்லது 20 வருடங்களிற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு அடிக்கடி வந்து போயிருக்கின்றோம். அப்பொழுது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தார்கள். என் மனைவியின் குடும்பத்தவர்கள் அதிகமானோர் அங்கேயே இருக்கின்றார்கள். பிள்ளைகள் வளர்ந்த பின் ஆஸ்திரேலியா போய் வருவது குறைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் பல வகையான அனுபவங்கள் ஏற்பட்டன என்று தான் சொல்லவேண்டும். இந்திய மாணவர்களுக்கும், ஆஸ்திரேலியர்களுக்கும் ஏதோ தகராறாகி, பின்னர் அதுவே சில தாக்குதல்கள் ஆகவும் ஆகியிருந்த ஒரு காலம். தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பன் ஒருவனின் மைத்துனன் ஒருவர் தாக்கப்பட்டும் இருந்தார். ஒரே குத்து, ஆள் மயங்கிப் போனார் என்று நண்பன் சொல்லியிருந்தான். அந்த நாட்களில் நாங்கள் அங்கே தனியே நடந்து போகக் கூடாது என்று சொல்வார்கள். அங்கே வீட்டின் அருகே இருந்த வாசிகசாலை ஒன்றுக்கும், அதன் அருகே இருந்த நகரக் கடைகளுக்கும் நடந்தே போய் வந்து கொண்டிருந்தேன். கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே இருந்தேன். குறைந்தது இரண்டு குத்துகளுக்காவது தாக்குப் பிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்...................🤣. அந்த வாசிகசாலை பற்றி எழுதவேண்டும். நான் அப்படி ஒரு வாசிகசாலையை அந்த சிறிய ஊரில் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அதே போலவே அந்த ஊரில் இருந்த ஒரு பேக்கரி. அது இப்பொழுதும் அங்கே இருக்கும் என்று நம்புகின்றேன். அதை நடத்தியவர்கள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதிகள். பாண் என்ற சொல்லே பிரெஞ்ச் மொழி என்று அவர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன். அவர்கள் சொன்ன வரலாறும் புதியதே. தலைக்கு மேலே பறந்து திரியும் விதம் விதமான பறவைகள் ஆஸ்திரேலியாவின் சிறப்பும், வியப்பும். அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
"பல்துருவ உலகம்" பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அத்தகைய பல்துருவ உலகிற்கு நானும் ஆதரவு😎. ஆனால், ஒட்டு மொத்த சமூகத்திற்கும், எங்கள் மண்ணிறத் தோல் கொண்டு உலாவரப் போகும் அடுத்த சந்ததிக்கும் எதிரான திட்டங்களை வகுக்கும் ஜேர்மன் AfD நவநாசிகள், பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக வைத்திருக்க திட்டமிடும் ஹங்கேரி, போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் அதி வலதுசாரிகள் - இந்த தரப்புகள் ஒரு துருவமாக இருக்கவே கூடாது. வலதுசாரிகளாக மாறி விட்ட அமெரிக்காவிற்கு எதிரான துருவமாக முற்போக்கான ஐரோப்பிய ஒன்றியம் இருக்க வேண்டும். இது தான் நான் எதிர்பார்க்கும் "பல்துருவ" உலகு. என் அவதானிப்பின் படி, ஐரோப்பிய ஒன்றியம் சரியான திசையில் நகர்கிறது. உக்ரைனில் ஊழலை ஒழிக்க முயலும் அதே வேளை, போலந்தில் நீதித் துறையை வலதுசாரிகள் முடக்கி விடாமலிருக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் வேலை செய்கிறது. பிரான்சிலும், ஜேர்மனியிலும் குடியேறிகளுக்கெதிரான கட்சிகள் ஆட்சிக்கு வர முயலும் போது, அந்த நாடுகளின் மிதவாத சக்திகளோடு சேர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் அவர்களை ஆட்சிக்கு வர முடியாமல் முடக்கியிருக்கின்றன. இதை நீங்கள் "மக்களின் தேசிய விருப்பிற்கெதிரான நகர்வுகள்" என்று கண்டிப்பது போலத் தெரிகிறது. இப்படி 33% வீத மக்களின் தேசிய விருப்பின் படி தான் நாசிகள் ஆட்சிக்கு வந்தார்கள் - வரலாற்றில் அதனால் நிகழ்ந்த அழிவுகளை யூ ரியூபிலாவது தேடிப் பார்த்து அறிந்தால், இதைக் கண்டிப்பீர்களா தெரியவில்லை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
முதலில் டாக்ரர் வழங்கிய தகவல்கள் எல்லாமே உண்மையா என்று உறுதிப்படுத்துங்கள். மேல்நிலையில் உள்ள அதிகாரிகள் அனைவருமே இதுவரை ஆண்ட கட்சிகளின் அடிப்படையிலேயே பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். எனவே அவர்கள் தமது தலைவர்களுக்காகவே செயல்படுவார்கள். வைத்தியசாலையில் மட்டுமல்ல பல துறைகளிலும் இந்தப் பிரச்சனையை என்பிபி அரசு எதிர்கொண்டுள்ளது.

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு யூரோ நாணயம் வந்த போது டாலரை வீழ்த்தவே என்று பேசிக் கொண்டார்கள். இதை நம்பி ஈராக் ஜனாதிபதியும் யூரோவில் வியாபாரம் செய்யப் போய் ஆளும் இல்லை நாடும் இல்லை.

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆலோசனை. ! ?

1 month ago
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆலோசனை. ! ? தலைமறைவாகியுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான உத்தரவினை வழங்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. கொழும்பு பிரதான நீதிவானிடம் நேற்று (26) இந்த மனுவைத் தாக்கல் செய்த இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, ராஜித சேனாரத்னவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்திரவினையும் பிறப்பித்துள்ளது. இந்தநிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரது தொலைபேசி இணைப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வேண்டுமென்றே கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை கடந்த 21ஆம் திகதி ராஜித சேனாரத்னவுக்கு எதிராக அறிவித்தல் அனுப்பப்பட்டும் அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டின் வாசலில் அறிவித்தல் கட்சிப்படுத்தியிருந்தனர். நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை ஆஜராகுமாறு தெரிவித்தே குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்தியதால் அரசுக்கு 262 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444813

பிரதமர் ஹரிணி - அமெரிக்கத் தூதர் ஜூலி சங் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்

1 month ago
27 Aug, 2025 | 04:13 PM பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை குழுவின் (HDP) உறுப்பினர்கள் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை பிரதமர் ஹரிணி சந்தித்தார். இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் பொருளாதாரம், சட்டங்கள், அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை குழுவின் பங்களிப்பு எடுத்துக்காட்டப்பட்டது. இதன்போது, பிரதமர், இலங்கையில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, சட்டவாக்கத்தின் பலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுத் (HDP) திட்டத்தின் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட HDP பிரதிநிதிகள், பாராளுமன்றத்துடன் முன்னெடுக்கப்படும் கண்காணிப்புச் செயல்முறை, குடிமக்களின் பங்களிப்பு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பில் அவர்களது பங்களிப்பை பற்றிச் சுட்டிக்காட்டியதோடு, இக்கலந்துரையாடலின் போது பாராளுமன்றத்திலும் தேசிய தலைமைத்துவத்திலும் பெண்களின் பங்களிப்பு மற்றும் தொழில் படையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung, பாராளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்பு குழுவின் (HDP) நிறைவேற்றுப் பணிப்பாளர் Derek Luyten,, பிரதமரின் செயலர் பிரதீப் சபுதந்திரி, பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலர் சாகரிகா போகாவத்த ஆகியோர் உட்பட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பிரதமர் ஹரிணி - அமெரிக்கத் தூதர் ஜூலி சங் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல் | Virakesari.lk
Checked
Tue, 09/30/2025 - 09:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed