புதிய பதிவுகள்2

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
அரசியல் திருடர்கள் தங்களுள் பங்காளிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் இந்த வெள்ளைநரியும் கூட்டென்பது வெட்கத்திற்கரியது. ஆனால் இவர்கள் வெட்கப்படுவார்களா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
அயல் அரபு நாடுகள் பலஸ்தீன அகதிகளை உள்வாங்காமல் இருக்க இது ஒரு காரணம். ஆனால், இதை விட முதன்மையான காரணம், அகதிகள் முகாம்களில் ஹமாஸ் போன்ற பலஸ்தீன அமைப்புகள் மக்களோடு மக்களாக டோரா போட்டு, ஆட்சேர்த்து, அந்த நாடுகளிலேயே இஸ்ரேல் வந்து குண்டு போடும் அளவுக்கு வைத்து விடுவார்கள் என்ற பயம். இது பல தசாப்தங்களாக நடந்து வரும் ஒரு போக்கு. அயல் நாடான ஜோர்தானில் (ஜோர்தான் நதியின்) கிழக்குக் கரை -East Bank இருக்கிறது. அங்கே இஸ்ரேல் உருவாக்கப் பட்ட போது குடிபெயர்ந்த பலஸ்தீனர்கள் இன்றும் வாழ்கிறார்கள், அவர்களோடு அரபாத்திற்கும் இடம் கொடுத்திருந்தார்கள். 70 களில் என நினைக்கிறேன், ஒரு பயணிகள் விமானத்தை அரபாத்தின் கீழிருந்த போராளிகள் கடத்திச் சென்று அம்மானில் தரையிறக்கி வைத்திருந்தார்கள். விமானத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்ட ஜோர்தான் படைகளுக்கு அடி தான் பதிலாகக் கிடைத்தது😂. ஒரு பெரும் நடவடிக்கை மூலம் அப்போதைய ஜோர்தான் மன்னர், அரபாத்தின் படைகளை வேட்டையாட ஆரம்பித்தார். அரபாத் ஒரு முஸ்லிம் பெண் போல உடையணிந்து தப்பிச் சென்று சிரியா சேர்ந்தார். சிரியாவிலும் அதே கதை, ரணகளம். அங்கிருந்து ஒரு கட்டத்தில் லெபனான் சென்றார்கள் பலஸ்தீனப் போராளிகள். ஷியா, சுனி, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கூட்டாட்சி செய்த லெபனானில், ஷியாக்கள் அதிக பங்கு கோரிப் போராட ஆரம்பித்த போது, அகதிகளாக வந்த பலஸ்தீனர்களும், அமைப்புகளும் ஷியாக்களை ஆதரித்தார்கள். லெபனானும் ரணகளமாகியது. இப்படி மீள மீள நடக்கும் போது, பலஸ்தீன அகதிகளை எந்த முஸ்லிம் நாடு ஏற்றுக் கொள்ளும்?

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

1 month ago
ஒருவேளை உலாவியில் தற்காலிகமான பிழையாகவும் இருக்கலாம். மறுபடி முயன்று பாருங்கள்.. வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை உள்ளதா ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை!- ஜனாதிபதி. எத்தகைய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எமது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” அனைவரும் சட்டத்தின் சமமே என்ற கலசாரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உருவாக்கப்படும். செல்வம் அதிகாரம் பதவி இவை எதுவும் அதற்கு விதிவிலக்கல்ல. சட்டத்தின் முன்பு அனைவரும் சமமே. எமது நாட்டில் என்றோ ஒருநாள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும். ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும் அல்லது பொதுமக்களின் சொத்தினை வீணடித்திருந்தாலும் அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள். அதற்கான அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். அதுபழிவாங்கல் அல்ல. தண்டிக்கப்படுவதுமல்ல. நீதித்துறை தொடர்பிலான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இன்று நாட்டில் பொதுவெளியில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பாக நம்பக்கையற்ற நிலை காணப்படுகிறது. அனைவரும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் நாம் நடவடிக்கை எடுப்போம். எமது இந்த தீர்மானத்தில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரபலத்தின் ஊடாக மக்களின் சொத்துக்களை வீணடிப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444736

மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்

1 month ago
யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஒன்றும், வல்வெட்டித்துறையில் ஒன்றுமாக இரண்டு நீச்சல் தடாகங்கள் சென்ற அரசாங்கத்தில் திறந்து வைக்கப் பட்டது. இப்போ அவை… பாசி பிடித்து, நுளம்பு உற்பத்தி செய்யும் மையங்களாக மாறி விட்டதாக சொல்கிறார்கள். 😂 அதே போல் இந்த கிரிக்கெட் மைதானம் பகலில் ஆடு, மாடு மேயவும்… இரவில் கஞ்சா, கசிப்பு, விபச்சாரம் செய்யும் இடமாக மாறினாலும் மாறலாம். 🤣 பிற் குறிப்பு: மண்டைதீவு யாழ்ப்பாணத்தில் இருந்து அவ்வளவு தூரம் இல்லை. இளமைக் காலத்தில் சைக்கிளில் போய் ஈச்சம்பழம் வெட்டிக் கொண்டு வருவோம். அங்கு ஒரு உப வானொலி நிலையமும் இருந்தது. இப்போ என்ன நிலைமையில் இருக்கின்றது என தெரியவில்லை.

மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்

1 month ago
வடக்கில் ஒரு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் தேவை தான். ஆனால் அதற்கு மண்டைதீவு சரியான இடமா? ஒருநாளும் அந்தப்பக்கம் போனது கிடையாது. இந்த இடம் உண்மையில் மக்கள் போவார்களா? அல்லது நாளடைவில் கட்டாக்காலி மாடுகள் தங்குமிடம் ஆகுமா?

இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.

1 month ago
எப்படி வேறு நாடுகளில் இந்தியக் கார்களை விற்பது? வட அமெரிக்காவில் எந்த நாட்டு வாகனத்தை விற்பதாக இருந்தாலும் IIHS , NHTSA ஆகிய இரு அமைப்புகளால் பரிசோதிக்கப் பட்டு மதிப்பீடு செய்ய்ப் பட்டிருக்க வேண்டும். அதே போலவே ஐரோப்பாவிலும் ஒரு பரிசோதனை அமைப்பு இருக்கிறது -இதுவும் அமெரிக்காவின் தராதரமுடையது. இந்தியா தன் தயாரிப்புகளைப் பரிசோதிக்க GNCAP என்ற அமைப்பை வைத்திருக்கிறது. ஊழல் மலிந்த நாடு என்பதால் இதன் பரிசோதனை முடிவுகளை யாரும் நம்புவதில்லை. ஜப்பானிய வாகனங்களை விட விலை குறைவாக இருப்பதாலும், சில சமயங்களில் அரச திணைக்களங்களுக்கு இலவசமாக வழங்கப் படுவதாலும் இலங்கை போன்ற நாடுகளில் இந்திய வாகனங்கள் ஓடுகின்றன.

மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்

1 month ago
26 Aug, 2025 | 04:47 PM வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கவலை தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச மைதானம் அமைக்கப்படுவதற்கு தற்போது சில எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதை அவதானித்துள்ளோம். வடக்கில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதற்காக பலரும் நீண்ட காலமாக முயற்சி செய்கின்றனர். அதற்காக பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு, மண்டைதீவை தெரிவு செய்தனர். வடமாகாண சபை இயங்கிய கால பகுதியில் கூட அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவை எதனையும் சாத்தியமாக்க தெற்கில் உள்ள எவரும் விரும்பவில்லை. எங்கள் மண்ணின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். அதற்காக சர்வதேச விளையாட்டு மைதானம் , சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட அக்கடமி தேவை. அதற்காக இலங்கை துடுப்பாட்ட சங்கத்துடன் பல்வேறு தடவைகள் பேச்சுக்கள் நடாத்தி கோரிக்கைகளையும் முன் வைத்தும் அது ஏதேனும் சாத்தியமாகவில்லை. தற்போது சர்வதேச மைதானத்தின் ஆரம்ப பணிகள் நடைபெறவுள்ளதாக அறிகிறோம். அது வரவேற்க தக்கது. சர்வதேச தரத்திலான மைதானம் வரும் போதே, எமது வீரர்களுக்கு வாய்ப்புக்கள் அமையும். அது மாத்திரமின்றி பொருளாதார அபிவிருத்தியை நோக்கியும் நாம் முன்னேற முடியும். சர்வதேச மைதானம் அமையப்பெற்று , சர்வதேச போட்டிகள் நடைபெறுமாக இருந்தால், சர்வதேச வீரர்கள், ரசிகர்கள் என பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதனூடாக எமது சுற்றுலா துறை முன்னேற்றம் அடையும். தற்போது எந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், அதனை எதிர்ப்பது என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருவது கவலைக்குரிய விடயம். சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரு அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அதனை நாம் வரவேற்க வேண்டும். மண்டைதீவில் மைதானம் அமைக்கப்படுவதால், சுற்று சூழலுக்கு பெரும் பாதகம் ஏற்பாடு என்பது எனது நிலைப்பாடு ,அவ்வாறு பாதகம் இருந்தால், அது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும் என்றார். மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன் | Virakesari.lk

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
பிணையில் விடுதலையானார் ரணில் ! 26 Aug, 2025 | 07:26 PM குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கடந்த 22 ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நோய் நிலைமையை கருத்திலெடுத்த கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கியுள்ளது. பொது சொத்து சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப் புலனாய்வுத் பிரிவிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகத நிலையில், சூம் காணொளி தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோய் நிலைமை அதிகரித்துள்ளதால் பாரிய உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்த நிலையில், நீதிமன்றம் ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற பகுதியில் எதிர்க்கட்சியினர், ரணிலின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. ( படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார் ) பிணையில் விடுதலையானார் ரணில் ! | Virakesari.lk
Checked
Tue, 09/30/2025 - 09:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed