புதிய பதிவுகள்2

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குற்றக் கும்பலால் கொல்லப்பட்டது பசு மாடு

1 month ago
26 Aug, 2025 | 04:41 PM யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரமாக இருந்த பசு மாடு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளது. காரைநகரை சேர்ந்த யோகநாதன் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு வேளைகள் பால் தர கூடிய மாடே படுகொலை செய்யப்பட்டுள்ளது. மாடு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிமையாளரினால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை மாடுகளை களவாடி இறைச்சியாக்கும் சட்டவிரோத கும்பல் பசுமாட்டை தடம் வைத்து பிடிக்க முற்பட்ட வேளையே மாடு உயிரிழந்த நிலையில், மாட்டின் உடலத்தை சம்பவ இடத்தில் இருந்து அகற்ற முடியாத நிலையில் மாட்டினை கைவிட்டு சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தீவகம் பகுதிகளில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களினால் தொடர்ந்து களவாடப்பட்டு அவை இறைச்சியாக்கி விற்பனை செய்யப்படுகின்றது. அதனால் அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருவதால், அவற்றை கட்டுப்பட்டுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குற்றக் கும்பலால் கொல்லப்பட்டது பசு மாடு | Virakesari.lk

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
இவர்களை உள்வாங்கினால் இஸ்ரேலின் எண்ணம் சுலபமாக நிறைவேறாதா? ஓரிரு நாடுகள் தமது நன்மை கருதி நண்பர்களுக்கு தோள்கொடுக்கிறோம் என்றே உதவுகின்றன. தென்னாபிரிகா இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுவதற்கு அரபு நாடுகள் பின்னால் நிற்கின்றன. தாங்களால் நேரே செய்ய முடியாததை இன்னொரு நாட்டை வைத்து முயற்சி செய்கிறது.

மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : இலங்கையின் 2 ஆவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது 'செம்மணி'

1 month ago
26 Aug, 2025 | 08:45 PM நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான இன்றைய தினம் (ஓகஸ்ட் 26) செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார். அகழ்வு தளத்தை பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் குழந்தைகளினுடையது என சந்தேகிக்கப்படக்கூடிய எலும்புகளை கண்டுள்ளனர், எவ்வாறெனினும் தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே இது தொடர்பில் உறுதிப்படுத்தப்படும் என சட்டத்தரணி ரனிதா கூறுகிறார். செம்மணி புதைகுழியிலிருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது இன்றைய தினமாகும். செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை குழந்தைகள் உள்ளிட்ட 166 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 32 நாட்கள் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. 18 நாட்களின் பின்னர் அகழ்வாய்வுகள் நேற்று (ஓகஸ்ட் 25) மீண்டும் ஆரம்பமாகியபோது ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய அகழ்வு தளத்தை விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள சதொச மனித புதைகுழியாகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியான கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியிலிருந்து குறைந்தது 88 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதன் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஐந்தாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழியாகும். அங்கு 2013 இல் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்த நேரத்தில், 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன. மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : இலங்கையின் 2 ஆவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது 'செம்மணி' | Virakesari.lk

சம்பூர் பகுதியில் மனித எச்சங்களை ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக பட்ஜட் மன்றில் சமர்ப்பிப்பு

1 month ago
26 Aug, 2025 | 07:24 PM (துரைநாயகம் சஞ்சீவன்) சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை (26) பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மாகாண மேல் நீதிமன்ற அனுமதியுடன் மேலதிக நடவடிக்கைக்காக குறித்த வழக்கானது செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கானது மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இன்றைய தினம் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் உத்திதேச பட்ஜட் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குறித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்திடம் இருக்கின்ற ஜி.பி.ஆர் என்ற ஸ்கான் இயந்திரத்தை கொண்டு குறித்த பகுதியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்வதற்காக சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஒப்பமிடப்பட்டு குறித்த உத்தேச பட்ஜட் ஆனது தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பட்ஜட் ஆனது மூதூர் மாவட்ட நீதிமன்ற கட்டளையுடன் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு மாகாண மேல் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி குறித்த வழக்கானது தவணையிடப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனோர் அலுவலகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் தெரிவித்தார். சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ஆயுபு என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பின்னர் மிதிவெடி அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சம்பூர் பகுதியில் மனித எச்சங்களை ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக பட்ஜட் மன்றில் சமர்ப்பிப்பு | Virakesari.lk

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
பலஸ்தீனர்களின் பட்டினி பற்றி நீங்கள் "உண்மையாக" கவலைப் படுகிறீர்களா?😂 அப்படியானால் ட்ரம்பின் மீதல்லவா உங்கள் தீவிரமான கோபம் வெளிவர வேண்டும்? இப்படியொரு நிலை வராமல் இருக்க சில நடவடிக்கைகளையாவது எடுத்த பைடன் தோற்க வேண்டும் என்று விரும்பிய அதே ஆளா நீங்கள்??😎

மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழமா? ஆய்வில் தெரியவந்த அறிவியல் உண்மை

1 month ago
உங்களுக்கு இதைப் பதிலாக எழுதினாலும், ஏனையோருக்கு சரியான தகவல் தரும் நோக்கத்தில் எழுதப் படுகிறது: "செயற்கையாக சுவையூட்டிய மாம்பழம்" என்பது தவறான தகவல். பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் செயற்கையான முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைக்கிறார்கள். கல்சியம் கார்பைட் என்ற தடை செய்யப் பட்ட இரசாயனத்தைப் பாவித்து இதைச் செய்கிறார்கள். இதனால் மாம்பழத்தின் இனிப்போ, சீனியின் அளவோ அதிகரிப்பதில்லை. இந்த செயற்கை முறைப் பழுக்க வைத்தலில், நச்சுப் பொருட்கள் சேர்கின்றன என்பது வேறு விடயம், அதைப் பற்றியல்ல இங்கே பேசுகிறோம். எனவே, மெக்சிகோ, பாகிஸ்தான், இந்தியா, சிறி லங்கா எங்கேயிருந்தும், எப்படிக் கனிந்த மாம்பழத்தை சாப்பிட்டாலும், சீனி அளவு ஏறுவது ஒரே மாதிரித் தான் இருக்கும்.

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
நேட்டோவில் இல்லாத நாடுகளும் உதவுகின்றன. உதாரணமாக ஆஜண்டீனா போர் விமானங்களை வழங்கியிருந்தது. அவுஸ்திரேலியா ஆயுதங்களை வழங்கியிருந்தது. பலஸ்தீனுக்கு இஸ்லாமிய நாடுகள் இராணுவ உதவிதான் செய்ய வேண்டும் என்பதில்லை. மனிதாபிமான உதவிகள் செய்யாவிட்டாலும் குறைந்தபட்சம் அகதிகளையாவது உள்வாங்கியிருகலாம் அல்லவா ?

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
உக்ரேனுக்கு உதவுவது அயலவர்கள் அல்ல ரசியாவை குறிவைத்து நேட்டோ நாடுகள் உதவுது. இஸ்ரேலுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளபடியால் அரபுநாடுகள் மட்டுமல்ல உலக நாடுகளே வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள்.(இந்தியா உட்பட)

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
உக்ரேனியர்களுக்கு ஒரே இனமாக இல்லாத அயலவர்கள் உதவுவதும் பாலஸ்தீனத்தின் ஒரே இனமான அயலவர்கள் வேடிக்கை பார்ப்பதும் தான் காரணம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 50 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ஒருவன் இன்னொருவன் பணத்தை எடுத்ததும் அவனை “பிக்பாக்கட் திருடன்” என கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசியல்வாதி ஒருவன் மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடியுள்ளான். அவனை “மிஸ்டர் கிளீன்”( திருவாளர் பரிசுத்தம்) என்று கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கின்றனர். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கின்றனர். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கின்றனர். ஆனால் மக்கள் பணத்தை சுருட்டிய ரணில் சட்டத்திற்கும் மேலானவர் என்கின்றனர். அவரை திருடன் என்று கூறக்கூடாதாம். அவருக்கு கை விலங்கு போடக்கூடாதாம். அவரை சிறை மருத்துவனையில் தங்க வைக்க வேண்டும். அதுவும் வசதி இல்லை என்றால் அதைவிட வசதியாக பொது மருத்துவமனையில் வைக்க வேண்டுமாம். எல்லாவற்றையும்விட அவருக்கு சிறை உணவு வழங்கக்கூடாதாம். அவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டுமாம். என்னடா நியாயம் இது? அரசியல்வாதிகள் சிறிய தவறுக்காக தண்டிக்கப்படக்கூடாது என்கிறார் மகிந்த ராஜபக்சா. அதாவது மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடுவது சிறிய குற்றமாம். அதற்காக தண்டிக்கப்படக்கூடாதாம். மகிந்தா பரவாயில்லை. எங்களுடைய “தமிழ் கிளீன்” சுமந்திரன் அவர்கள் ரணிலை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் நிறுத்தியது தவறாம். மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடிய ரணிலை சிறையில் அடைத்தது தவறு. அவருக்கு உடன் பிணை வழங்கியிருக்க வேண்டும் என்று வேற கூறியிருக்கிறார். அரசியல்வாதிகளை வெள்ளிக்கிழமை கைது செய்யக்கூடாது என்றோ அல்லது கைது செய்தாலும் அவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கக்கூடாது என்றோ அவர் எந்த சட்டப் புத்தகத்தில் படித்தார்? தனது நோயாளி மனைவிக்கு உணவு வழங்கவேண்டியிருப்பதால் ரணிலுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றில் கெஞ்சினார். ஆனால் இதே ரணில் லண்டனில் தனது மனைவிக்கு சமைக்க ஒரு நாளைக்கு ஆயிரம் பவுண்ட் ( 4 லட்சம் ரூபா) சம்பளத்தில் ஒரு சமையல்காரரை நியமித்தாராம். அப்படிப்பட்ட யோக்கியரைக் காப்பாற்றத்தான் மகிந்த ராஜபக்சா முதல் சுமந்திரன் வரை பலரும் ஓடி வருகின்றனர். ரணில் கைது பல திருடர்களையும் அவர்களது கூட்டாளிகளையும் மக்களுக்கு நன்கு இனங்காட்டியுள்ளது. தோழர் பாலன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
லண்டனில் இரண்டு நாள் தங்கிய மனைவிக்கு சமையல் செய்ய ஒழுங்கு செய்த சமையல்காரரின் ஒரு நாள் சம்பளம் நாலு லட்சம் ரூபா. அப்படி என்ன சாப்பாட்டை அந்த சமையல்காரர் சமைத்துக் கொடுத்தார் என்று கேட்டால், றோயல் கல்லூரிக்கு ஒரு பழைய வீடும் நிறைய நூல்களும் ரணில் வழங்கியுள்ளார் என்கிறார்கள். சுமந்திரன் பதில் தருவாரா? தோழர் பாலன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
வேலிக்கு ஓணான் சாட்சி... 2016ம் ஆண்டு 4 வருடங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவராக "எரிக் சொல்ஹம் "நியமிக்கப்பட்ட நிலையில் 2018 அந்த பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்படுகிறார்... காரணம் 22 மாதங்களில் 529 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கோண்டு 488,500 டாலர்கள் செலவு செய்த நிலையில் அதில் 76 நாட்கள் தனிப்பட்ட பயணங்களாக மேற்கொண்டமை கணக்காய்வில் பிடிபட்டது 😄 உண்மை உரைகல்
Checked
Tue, 09/30/2025 - 09:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed