புதிய பதிவுகள்2

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
சிறிலங்கா ஆட்சியாளர்கள் மிகத்திறமையானதும் காலத்துக்கேற்றவாறான சிங்களத்தேசியத்தை நிலைநிறுத்தும் நகர்வுகளில் தலைசிறந்த முன்னோடிகள் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். ரணிலின் கைதின் ஊடாகத் தீவின் பல முதன்மைப் பிரச்சினைகளைப் பின்தள்ளி ஊடகங்கள் ரணிலோடு கட்டிப்புரளுகின்றன. யே.வி.பியா கொக்கா. கொழும்பு உயர்குழாம் மட்டுமா வித்தை காட்டும். நாங்களும் காட்டுவம் இல்லை என்று அனுர சிரித்துக்கொண்டு திரிகிறாராம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ரணிலுக்கு வைத்தியம் பார்க்கும்... வைத்தியர், ரணிலின் கூட்டாளி. இப்போதைக்கு அவர் ரணிலை... வைத்தியசாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அனுப்ப விட மாட்டார் போலுள்ளது. தேசிய மருத்துவமனையில் "நீரிழப்பு" கண்டறியப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரணில் விக்கிரமசிங்க, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூட முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது மிகவும் சந்தேகத்திற்குரியது. இந்த மருத்துவ நோயறிதலைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் முன்னர் பல ஊழல்களுடன் தொடர்புடையவருமான "டாக்டர் ருக்ஷன் பெல்லனாவின் "கீழ் பணிபுரியும் மருத்துவர்களால் இது வெளியிடப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு. விக்கிரமசிங்கவின் உண்மையான நிலை குறித்து ஒரு பாரபட்சமற்ற மருத்துவ விசாரணை நடத்தப்படுவது அவசியம். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுயாதீன மருத்துவர்கள் குழு, கூறப்பட்ட நோயறிதல் உண்மையானதா அல்லது பெல்லனாவும் அவரது கூட்டாளிகளும் நீதித்துறையை தவறாக வழிநடத்தவும் உரிய சட்ட செயல்முறையைத் தடுக்கவும் முயற்சிக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும். உண்மை உரைகல்

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க

1 month ago
ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க. ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வழங்கியுள்ள ஆணையில், இது முக்கியமான விடயமாகும் எனவே அதனை விரைவில் நிறைவேற்றுவோம்” என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444628

சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு!

1 month ago
சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு! சாவகச்சேரி நகர சபைக்கும், சாவகச்சேரி பிரதேச சபைக்கும் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகளை இரத்துச் செய்து, அவர்கள் போட்டியிட்ட வட்டாரங்களில் அடுத்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைச் சபையின் உறுப்பினர்களாக அறிவிக்கக் கோரி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதாடி முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்டு எதிர்த் தரப்புக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்க நீதிபதி கட்டளையிட்டார். மேற்படி இரு உள்ளூராட்சி சபைகளிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பெண் உறுப்பினர்கள் அந்தந்த சபைகளில் போட்டியிடுவதற்கான தகமையற்றவர்கள், தகுதியீனம் உடையவர்கள் என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. அந்தத் தீர்ப்பின்படி மேற்படி இரு பெண் உறுப்பினர்களும் அந்தந்தச் சபைகளின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியற்றவர்கள் எனக் காணப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட இரு வேட்புமனுக்களிலும் இருக்க வேண்டிய பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் குறைந்து அந்தப் பட்டியல்களே தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்து விட்டன எனத் தற்போது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அது தொடர்பான விளக்கங்களை செவிமடுத்த நீதிபதி அதன் அடிப்படையில் எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். சாவகச்சேரி பிரதேச சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 23 வேட்பாளர்களும் சாவகச்சேரி நகர சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 16 வேட்பாளர்களும் இந்த மனுக்களில் மனுதாரர்கள் ஆவர். இரண்டு சபைகளிலும் போட்டியிட்ட மற்றைய கட்சிகள் அனைத்தினதும் வேட்பாளர்கள் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதன்படி சாவகச்சேரி பிரதேச சபை தொடர்பான வழக்கில் 225 பேரும், சாவகச்சேரி நகர சபை தொடர்பான வழக்கில் 151 பேரும் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களின்படி இத்தகைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு முதல் தடவை நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தினத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரித்து முடிவுறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த இரு வழக்குகளும் காலம் இழுபடாமல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், பெனிஸலஸ் துஷான் ஆகியோரும் மன்றில் ஆஜராகினர். https://akkinikkunchu.com/?p=338425

காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி

1 month ago
காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி 26 Aug, 2025 | 10:57 AM காசாவில் உள்ள சுமார் 40 மாணவர்கள் நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவுக்கு வரவழைக்கும் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. செவனிங் திட்டத்தின் கீழ் (Chevening scheme) புலமைப் பரிசில்கள் ஊடாக ஒன்பது மாணவர்களுக்கு காசாவை விட்டு வெளியேற உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவனிங் திட்டம் என்பது, சர்வதேச மாணவர்கள் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பைப் படிப்பதற்காக, பெருமளவில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் கல்வி திட்டம் ஆகும். ஏனைய தனியார் திட்டங்கள் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட புலமைப் பரிசில்கள் கிடைத்த சுமார் 30 மாணவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களுக்கும் உள்நாட்டு செயலாளர் அனுமதி அளித்துள்ளதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது. 2023-ல் ஹமாஸ்-இஸ்ரேல் போர் ஆரம்பித்த பின்னர், பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கு காசாவை விட்டு வெளியேறும் முதல் மாணவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இருப்பினும், ஒவ்வொரு மாணவரும் அப்பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும். காசாவில் இஸ்ரேல் அதன் போர் தொடர்பான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால், செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரித்தானியா கூறியதிலிருந்து இஸ்ரேலுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன. மேலும், ஒரு போர் மண்டலத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதில் கணிசமான சவால்களும் இருக்கும். விசா பயோமெட்ரிக் சோதனைகளுக்காக அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு மூன்றாவது நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். உள்நாட்டு அலுவலக வட்டாரம் ஒன்று இந்தத் திட்டத்தை "சிக்கலானதும் சவாலானது" என்று விவரித்தாலும், மாணவர்கள் பிரித்தானியாவில் தங்கள் இடங்களைப் பெற வேண்டும் என உள்நாட்டு செயலாளர் "தெள்ளத்தெளிவாக" தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் இருந்து அனுமதி பெற்ற 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மாணவர்கள் சார்பாக அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் மற்றும் பிறர் பல மாதங்களாக மேற்கொண்ட பரப்புரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சமீபத்திய முடிவின் கீழ் சுமார் 40 மாணவர்கள் சேர்க்கப்பட்டாலும், நிதி உதவி இல்லாத மற்ற மாணவர்களும் உள்ளனர். https://www.virakesari.lk/article/223370

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் !

1 month ago
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் ! 26 Aug, 2025 | 10:30 AM வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும், இந்த ஆண்டுக்குள் அந்த சந்திப்பு நிகழலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி லீ ஜே மியுங் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவில் தேவாலயங்கள் தொடர்பான சோதனைகளைக் குறிப்பிட்டு, அங்கு ஒரு "துடைப்பு அல்லது புரட்சி" நடப்பதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால், சந்திப்பின் போது, ஜனாதிபதி லீ, டிரம்ப்பை பெரிதும் புகழ்ந்து பேசியதையடுத்து, டிரம்ப் தனது முந்தைய கருத்தை "ஒரு தவறான புரிதல்" என்று கூறி நிராகரித்தார். வட கொரிய விவகாரத்தில் லீயின் அணுகுமுறையும் தனது அணுகுமுறையும் ஒரே மாதிரியானவை என டிரம்ப் நம்புவதாகக் கூறினார். மேலும், கிம் ஜாங் உன்னின் சகோதரியைத் தவிர வேறு எவரையும் விட தனக்கு நன்றாகத் தெரியும்" என்று டிரம்ப் குறிப்பிட்டார். டிரம்ப் "அமைதியைக் காப்பவர் அல்ல, அமைதியை உருவாக்குபவர்" என்று தென்கொரிய ஜனாதிபதி லீ புகழ்ந்தார். மேலும், "நீங்கள் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பதையும், வட கொரியாவில் டிரம்ப் டவர் கட்டப்படுவதையும், அங்கு நீங்கள் கோல்ஃப் விளையாடுவதையும் நான் எதிர்பார்க்கிறேன்" என்று லீ குறிப்பிட்டார். தன்னுடைய சந்திப்புக்குப் பின்னர் ஆற்றிய உரையில், வட கொரியா ஆண்டுக்கு 10 முதல் 20 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடும் என்றும், அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டிருக்கலாம் என்றும் லீ எச்சரித்தார். அமெரிக்கப் படைகளின் இருப்பிற்காக தென் கொரியாவிடம் இருந்து அதிக நிதியுதவியை டிரம்ப் கோரினார். மேலும், அமெரிக்காவின் இராணுவத் தளம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையை அமெரிக்கா எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். தென் கொரியாவின் இடதுசாரி தலைவர்களுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தும் ஒரு கருத்தாகக் கருதப்படுகிறது. தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியான லீ ஜே மியுங் வட கொரியாவுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறார். அவர், வட கொரியாவுடனான இராணுவ எல்லையில் ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பப்படும் கிம் எதிர்ப்பு செய்திகளை நிறுத்துவது போன்ற சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இந்த சந்திப்பு, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்க ஒரு முக்கியமான தளமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223377

அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு

1 month ago
அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு 26 Aug, 2025 | 10:27 AM வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்றது. அதன்போது, மகளிர் விவகார அமைச்சு, சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டன. நிதி ஆணைக்குழு, அடுத்த ஆண்டுக்குரிய திட்டங்களை இந்த ஆண்டிறுதிக்குள்ளேயே அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளமை சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், விரைவாக திட்டங்களை அடையாளம் காணவேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் விளைவுகள் என்ன என்பதையும் அதை முன்னிறுத்தியே திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆகியோரும், சமூகசேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் லு.தனுஜா, தொழிற்றுறை திணைக்களத்தின் பணிப்பாளர் செ.வனஜா, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் அகல்யா சேகராஜா, கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பா.அபிராமி கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/223376

ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர்

1 month ago
ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர் 26 August 2025 தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகம், திறன்கள், தொழில்துறைகள்) ஜகத் வீரசிங்கவிடம், எமது செய்தி சேவை வினவிய போது, ”மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பெரும்பாலும் சாத்தியமில்லை” என்று தெரிவித்தார். அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், அந்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். இருப்பினும், சூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தால், அது தொடர்பாகத் தேவையான வசதிகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார். https://hirunews.lk/tm/416623/ranil-wickremesinghe-cannot-be-produced-before-the-fort-magistrates-court-commissioner-of-prisons

கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு

1 month ago
கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்க தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன, கூடுதலாக, எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாக பதிலளிக்க கலகத் தடுப்புப் படைகள் மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/கலகம்-தடுக்கும்-படைகள்-குவிப்பு/175-363499

நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம்

1 month ago
நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியல் தொடர்பாக நான்கு விளக்கக் காணொலிகளை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் வெவ்வேறு கோணங்களில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. சமூகவியல் விளக்கத்தை களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்புத் துறைத்தலைவர் மனோஜ் ஜிந்தாச வழங்கியுள்ளார். மத மற்றும் நல்லிணக்கக் கண்ணோட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஓமரே புண்யசிறிதேரர் வழங்கியுள்ளார். சட்ட விளக்கத்தை மூத்த சட்டக்கல்வியலாளர் பேராசிரியர் பிரதிபா மகாநாமஹேவா வழங்கியுள்ளார். அதேநேரம் ஊடக மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தை ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன வழங்கியுள்ளார். https://newuthayan.com/article/நான்கு_காணொலிகளில்_ரணில்_கைதுக்கு_விளக்கம்

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

1 month ago
பாகம் - 2 15.9.90 அன்று தற்காலிகமாக நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அடுத்த இடத்தை நோக்கிச் சென்றோம். இந்தப்பிரயாணம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் நீடித்தது. இதில் ஒரு மணித்தியாலம் நடைப்பயணம். காட்டின் நடுவே அமைந்திருந்த ஒரு பெரிய முகாமுக்குச் சென்றோம். அடர்ந்த கானகத்தினூடே ஒரு குட்டி நகரம் போல் அந்த முகாம் காட்சியளித்தது. புலிகளின் வைத்தியசாலை அரசியற் பிரிவின் தலைமைச் செயலகம் போன்றவை அங்கே அமைந் திருந்தன. அரசியற் பொறுப்பாளர் ரூபன் பெரும்பாலும் இங்குள்ள அலுவலகத்தில் தான் தங்கியிருப்பார். இவரது அலுவலகம் காட்டிலேயே அமைந்திருந்தாலும் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் எவ்வாறு அரசியற் பிரிவின் செயலகம் அமைந்திருக்குமோ அதே போன்ற அமைப்புடன் விளங்கியது. முகாமைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட மாத்தயா அவர்கள் வழியில் சந்திக்கும் ஒவ்வொரு போராளிகளுடனும் உரையாடினார். க. பொ. த (சாதாரணம்) வகுப்பு வரை படித்துள்ள 21 வயதான போராளியொருவரை முதலில் சந்தித்தார். தம்பி உங்கள் ஊர் எது? ஆலங்கேணி. ஆலங்கேணியில் இப்ப எவரும் இல்லையே. அப்பா அம்மா எல்லோரும் எங்கே? அகதியாகப் போய்விட்டனர். எங்கே போனார்கள்? எங்கையென்று தெரியாது. பெரும்பாலும் முல்லைத்தீவுப் பக்கமாகத்தான் போயிருப்பினம். போகும்போது அவர்களைச் சந்திக்க முடிந்ததா? ஓம். இந்த வழியால்தான் போனவை. அப்ப நான் சென்றில் நிண்டனான். என்ன சொன்னவை? “நீ தப்பி விட்டாய் என்று சொல்லி விட்டுப் போனவை” எனக்கு யாழ்ப்பாண நிலைமைதான் உடனே நினைவுக்கு வந்தது. எத்தகைய போர் நிலைமை இருந்தாலும் தங்களுடைய பிள்ளைகள் இயக்கத்துக்குச் சென்றால் எப்படியாவது அவர்களை மீட்டெடுக்கப் பெற்றோர் என்ன பாடுபடுவார்கள்? அனைத்துப் பெற்றோரும் தமக்குப் பெண் பிள்ளைகள் உண்டு. இவர் ஒருவர்தான் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று சொல்வார்கள். போராட்டத்தினால் விளைந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி எந்த நாட்டுக்காவது ‘அகதி’யாக அனுப்பப் பார்ப்பார்கள். ஆனால் கிழக்கிலோ தாம் அடைந்த அகதிநிலை பிள்ளைகளுக்கு வரக்கூடாது. இயக்கத்துக்குள் செல்வதனால் ஒருவன் தப்பிவிடுகிறான் என்ற மனோபாவம். வடக்கும் கிழக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அங்கே சூழ்நிலையின் கொடூரம் மக்களை உறுதியாக்குகிறது. தொண்ணூறுக்கு மேற்பட்ட முகாம்கள் உள்ள திருமலையில் இயக்கத்துக்குள் சென்றவன் தப்பிவிட்டான் என்று எண்ணுகிறார்கள். யாழ்ப்பாணத்திலோ மண்போனாலும் பரவாயில்லை. மகன் வந்தால் போதும் என்றநிலை. மேலும் சிலரை மாத்தயா விசாரித்தார். பொதுவாக எல்லோரிட மிருந்தும் ஒரே பதில். வீட்டுக்காரர் எங்கே? தெரியாது. இப்ப எங்கே போயிருப்பினம் என்றுநினைக்கிறீங்கள்? தெரியாது. உயிரோட இருக்கினம் எண்டாவது தெரியுமோ? தெரியாது. குழுத் தலைவராக/இருக்கும் ஒருவரை அவர் விசாரித்தார். குடும்பத்தில் மூன்று ஆண் பிள்ளைகள். ஒரேயொரு சகோதரி. மூன்று ஆண்பிள்ளைகளுமே இயக்கத்தில்தான் உள்ளனர். தற்போதைய போரில் காயமடைந்து யாழ்ப் பாணம் வந்த அந்தப்போராளி திருமலைக்குச் செல்லும் வழியில் முல்லைத்தீவில் அகதிகளாக இருக்கும் தாய், தந்தை யரைச் சந்தித்தார். உணவு பரிமாறும் போது அந்தத் தாய் சகோதரியின் நிலைமையை மட்டும் அறிந்துவிடு என்று கேட்டுக் கொண்டார். தொழில் வாய்ப்பின் நிமித்தம் மட்டக்களப்புக்குச் சென்ற அவர் அங்கே என்னபாடோ தெரியாது என்று கவலைப்பட்டார். சகோதரியின் நிலை என்ன என்பதை இனித்தான் அறிய என்று முயற்சிக்க வேண்டும் என்று அப்போராளி அவரிடம் தெரி வித்தார். "குடும்பமே சிதறிய நிலையிலும் இவர்கள் போராட்டத்திலிருந்து விலகும்படி பிள்ளைகளைக் கேட்கவில்லை. தங்களுக்கு உழைத்துத் தர யாருமே இல்லாத நிலையிலும் இந்தச் சுமைகளை தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை அவர்கள் அடைந்துவிட்டார்கள். யாழ்ப்பாணத்திலோ சகோத ரிகளை கரைசேர்க்க வேண்டும். அண்ணன் திருமணம் செய்துவிட்டார். இனி குடும்பப் பொறுப்பு எனது தலையில் தான் என்று கூறி போராட்டத்திலிருந்து தளர்ந்து போகிறார்கள். பொதுவாக எந்தக்குடும்பத் தைப் பார்த்தாலும் மனைவி ஓரிடம், கணவன் ஓரிடம் தாய் தந்தையர் ஓரிடம் பிள்ளைகள் வேறிடம் என்ற நிலைமைதான். இப்படி இருந்தும் இவர் களைப் பொறுத்தவரை போராட்டம் பற்றிய தெளிவும் உறுதியும் உள்ளது" என்று கூறினார் மாத்தயா. எமது இருப்பிடத்திற்குத் திரும்பிவந்து எமக்காக வைக்கப்பட்டிருந்த உணவைப் பார்த்தோம். பாண், பணிஸ் போன்றவை இருந்தன. இவற்றை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறீர்கள் என்று விசாரித்தோம். நாம் சொந்தமாக பேக்கரி அமைத்து எமது தேவைக்கென பாண், பணிஸ் என்பவற்றைத் தயாரித்துக் கொள்கிறோம் என்றார் பதுமன். அப்போது ரூபன் “ஒவ்வொரு முகாமுக்கும் தேவை மரக்கறி வகைகளை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம்” என்றார். யாழ்ப்பாணத்தில் அரிதாகக் கிடைக்கும் மரக்கறிகளை அங்கே சாதாரணமாக காணமுடிந்தது. அடுத்து திருமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளரின் அலுவலகத்துக்குச் சென்றோம். மாவட்டத்தின் நிலைமைபற்றி விசாரித் தோம். மூதூர்ப் பகுதியில் மட்டும் ஆயிரத்து ஐம்பத்தேழு வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றார். எவ்வளவு மக்கள் வெளியேறி யுள்ளார்கள் என்று கேட்டோம். கங்குவேலி 180 குடும்பம் 834 பேர், புளியடிச் சோலை 125 குடும்பம் 502 பேர், பாரதிபுரம் 25 குடும்பம் 90 பேர்... என்று ஒரு நீண்ட பட்டியலைக் காட்டி னார். அகதிகளாக வெளிமாவட்டங்களுக்குச் சென்ற வர்களின் பெயர் விபரம் போன்ற பட்டியலைக் கூடக் கண்டோம். காட்டின் மத்தியில் இருந்து கொண்டு இவ்வளவு தெளிவாக புள்ளி விபரங்களைப் பெற்றுக்கொள்கிறீர்களே! என்று வியந்தோம். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்டெண்டாலும் எனக்குப் பிறகு இந்தப் பொறுப்பை எடுப்பவர் எல்லா விபரத்தையும் உடனே தெரியவேணும் தானே. அதுதான் எப்படி எண் டாலும் எஞ்சியிருப்பவர்கள் மூலம் இவ்விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறன்” என்றார். திருக் கோணமலை மாவட்டத்தில் யுத்தம் இவர் மீதான தாக்குதலுடன் தான் ஆரம்பமானது என்பது நினைவுக்கு வந்தது. அந்தத் தாக்குதலில் இவருடன் கூடச் சென்ற இருவர் உயிரிழந்தனர். இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் இவரையும் துளைத்தன தற்போதும் முதுகில் குண்டு இருப் பதனால் இயல்பாக கடமைகளை ஆற்றமுடியாத நிலை. எனவே நாளைக்கு எனக்கு ஒண்டெண்டாலும் என்று தொடங்கி இவர்கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் என் கண்கள் பனித்தன. இதுதான் புலிகளின் பலம், இம்மாதிரி இயக்கத்தை கட்டி வளர்த்ததே புலிகளின் தனித் துவத்துக்குக் காரணம் என நினைத்துக் கொண்டேன். அகதிகள் முகாம்களின் நிலை எப்படியுள்ளது? என்று கேட்டேன். “திருமலையில் இருப்பவை அகதிமுகாம்கள் என்ற கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள் அவை தடுப்பு முகாம்கள்”என்று ஆரம்பித்து அவை பற்றி கூறத் தொடங்கினார் ரூபன். (தொடரும்)
Checked
Tue, 09/30/2025 - 09:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed