1 month ago
யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல். நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்குவதற்கான, நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. பாதுகாப்பு அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒவ்வொரு துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கெடெட் அதிகாரிகளுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது. நாட்டின், பாதுகாப்புப் படை உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், அதற்கான தேவையான பயிற்சி மற்றும் வசதிகளுக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டுப் பயிற்சி குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த பயிற்சி ஏனைய அரச துறைகளிலுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியை விட தனித்துவமானது என்பதால் அது குறித்து அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அரசாங்கம் ஏற்கனவே பெருமளவு நிதியை செலவிட்டு வரும் நிலையில் , அதனால் வழங்கப்படும் சேவைகள் பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனுள்ளதாகவும் திறம்படவும் வழங்கப்படவேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். பாதுகாப்பு அமைச்சு தொடர்பான நிர்மாணப்பணிகள், பாதுகாப்புப் படையினரின் நலன்புரி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444817
1 month ago
27 Aug, 2025 | 05:43 PM இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் வீதிக்கு குளிரூட்டப்பட்ட இரண்டு பேருந்துகள் திருத்தப்பட்டு மீள் பயன்பாட்டுக்காக இன்று (27) கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த இரண்டு பேருந்துகளும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட விருந்தினர்களால் நாடா வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு மீள கையளிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கை போக்குவரத்து சபை களஞ்சியத்தால் பழுது பார்க்கப்பட்ட இந்த இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகளும் யாழ்ப்பாணம் – கொழும்பு சேவைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சிறீபவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபை துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். குளிரூட்டப்பட்ட இரண்டு பேருந்துகள் யாழ். வீதியில் மீண்டும் சேவையில்! | Virakesari.lk
1 month ago
Published By: Vishnu 27 Aug, 2025 | 07:24 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 169 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 158 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 35வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செம்மணி-சித்துபாத்தி புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு | Virakesari.lk
1 month ago
வைத்தியர் ருக்ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் கருத்துத் தெரிவிக்கையில் “கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர், மருத்துவர் ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நோயாளிகளின் உடல் நிலைமை மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தகவல்களை பொதுவாக ஊடகங்களுக்கு வழங்குவதில்லை. அவ்வாறு செயற்படுவதில் ஒழுக்கம் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுகின்றது. இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவத்துடன், நோயாளியின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை ஊடகங்கள் அவ்வாறே வெளியிட்டுள்ளன. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது ஆகவே, அது ஒழுக்க விதிமுறைகளை மீறும் செயற்பாடு இந்நிலையில் நாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம். ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. வைத்தியருக்கு அத்தகைய அறிவிப்புகளை வெளியிட உரிமை இல்லை. ரணில் வேறு மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு நோயாளி எங்களிடம் வரும்போது, சுகாதார அமைச்சாக எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். ஆனால் தேசிய மருத்துவமனையுடன் சம்பந்தப்பட்ட வைத்தியர் அவருக்கு சம்பந்தம் இல்லாத வேலையைச் செய்துள்ளார். ஒரு நோயாளியின் பதவி எதுவாக இருந்தாலும், ஊடகங்களுக்குத் தகவல் அளிக்க வைத்தியருக்கு எந்த உரிமையும் இல்லை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1444904
1 month ago
கடஞ்சா கூறுவது போல இரஸ்சியாவினல் வேறொரு நாட்டின் அதன் வான் பாதுகாப்பு சாதன நிலையினை அறிந்துகொள்ளகூடிய உள்ளககட்டுமானம் அதற்கு இல்லை என கூறுகிறார்கள். இஸ்ரேலின் உளவுப்படை பெருமளவில் ஈரான் ஈரான் இராணுவ கட்டளைத்தளபதி வரை ஊடுறுவும் திறமை கொண்டது, அனத்து மட்டங்களிலும் இஸ்ரேலின் உளவாளிகள் ஈரானில் ஊடுறுவிய நிலையே காணப்பட்டது. இரஸியாவின் உளவுத்துறையினால் தமது நாட்டிலே நிகழும் சதிச்செயல்களையே முறியடிக்கமுடியாதவர்களால் ஈரானில் துல்லியமாக இஸ்ரேலினை விட உளவு பார்க்கமுடியுமா எனத்தெரியவில்லை.
1 month ago
ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட போது அது உருக்கு மற்றும் நிலக்கரி வர்த்தகத்தினை பேணும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகிறார்கள், காலப்போக்கில் அதற்கென ஓரு சட்டம் உருவாக்கி தற்போது அந்த சட்டம் அதில் அங்கத்துவ நாடுகளிலும் அந்த சட்டம் தாக்கத்தினை உருவாக்குகிறது, இந்த ஐரோப்பிய ஆணையம் தனக்கு தேவையான ஆட்சியினை தீர்மானிக்கு சக்தியாகவும் இருந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இரஸ்சியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்கள் என கவலைப்படும் அதே நேரம் இன்னொரு புறம் தேர்தல் அற்ற தான் தோன்றித்தனமான ஆட்சி நடத்தும் செலன்ஸ்கியினை ஆதரிக்கிறார்கள். செலன்ஸ்கியின் ஆட்சியின் மூலம் தமக்கு வேண்டிய விடயங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருந்து கலகம் செய்யும் கங்கேரி, ஸ்லோவாக்கியா மீது அதன் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தின் பின்னணியாக இரஸ்சியாவிலிருந்து வரும் எரிபொருள் வழங்கி மீதான தாக்குதலில் செலன்ஸ்கியின் ஆணவமான பதில்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுடனேயே இது நடத்தப்பட்டிருக்கலாமோ என சந்தேகிக்க வைக்கிறது, ஐரோப்பிய ஒன்றைய நாட்டினது எரிபொருள் வழங்கள் மீதான தாக்குதலை மன்னிக்க முடியாத அதற்கான பிரதிபலனை செய்தவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என நோர்ட்ஸ்ரிம் 2 தாக்குதலை இரஸ்சியா மேற்கொண்டது எனும் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்தது, தற்போது நேரடியாகவே செலன்ஸ்கி இந்த தாக்குதலை தாமே நிகழ்த்தியதாக கூறியிருந்தும் இது தொடர்பில் எந்த வித கருத்து தெரிவிக்காமல் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசீர்வாதத்தினனுடனேயே இது நிகழ்ந்திருக்கலாமோ என தோன்றுகிறது,. ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரத்திற்கு சவாலாக இருக்கும் விடயங்களை முளையிலேயே களையநினைக்கிறார்கள், பெரும்பான்மை மக்கள் ஆதரவு கொண்ட தேசிய எண்ணம் கொண்ட கட்சிகளுக்கெதிராக அந்தந்த நாடுகளின் சட்டத்தினை பயன்படுத்தி இல்லாமல் செய்து தமது அதிகாரத்தினை பேணுகிறார்கள். ஆனால் அதே செலன்ஸ்கியின் மீது தமது பிடியினை இறுக்குவதற்கு அதே சமயம் வேறு வழி வகைகளையும் கைக்கொள்ளுகிறார்கள், அவரது பலவீனமான ஊழலலே அது. அண்மையில் தன்னிச்சையாக இயங்கிய ஊழல் ஒழிப்பு துறையினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததிற்கெதிராக உடனடியாக நடத்தப்பட்ட எதிர்ப்பார்பாட்டமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனத்திற்கு பின் செலன்ஸ்கி அந்த சட்டத்தினை கொண்டு வந்த கையோடே அதனை குப்பையில் மிக வேகமாக போட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எப்போதும் உக்கிரேன் விடுமுறை பயணம் போவது போல போகும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உக்கிரேனிய ஊழல் ஒழிப்புத்துறையினை பிரசெல்ஸிற்கு அழைத்து சந்தித்துள்ளது செலன்ஸ்கின் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதனை காட்டுகிறது. இதனிடையே சிறப்பாக களத்தில் செயற்பட்ட உக்கிரேனிய முன்னாள் தளபதியினை செலன்ஸ்கி அவரது பதவியினை பறித்து இங்கிலாந்து தூதுவராக நியமித்த சலூஸ்னியினை கடந்த வருடம் கார்த்திகை மாதத்தில் சந்தித்த செலன்ஸ்கியின் ஆலோசகர் வேண்டுகோளான எதிர்காலத்தில் நிகழும் தேர்தலில் செலன்ஸ்கியிற்கு ஆதரவாக இருக்குமாறு கோரிய கோரிக்க்கையினை மறூத்த செய்தியினை தற்போது மேற்கு ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. எப்படி ஒரு பிராண்ட்டினை வர்த்தகத்தில் உருவாக்குவார்களோ அதே போல உருவாக்கிய ஒருவரை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக போனால் அதனை விட மோசமான தேசத்துரோகியாக்கி மக்களை கொண்டு அடித்து விரட்டுவார்கள். இந்த போரில் சிக்குண்டுள்ள இரஸ்சியாவும் உக்கிரேனும் மிக நீண்டகாலத்திற்கு பொருளாதார ரீதியாக பாதிப்புள்ளாகப்போகிறார்கள், அதே வேளை இந்த போரை அனையவிடாமல் காக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அதே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள். பலவீனமான கூட்டணி ஆட்சிகளை உருவாக்கி தமது அதிகாரத்தினை பேணுகிறார்கள், இல்லாவிட்டால் ஆட்சிகளை கவிழ்க்கிறார்கள், ஐரோப்பாவின் எதிர்காலம் ஒரு அழிவுப்பாதையினை நோக்கி நகர்கிறது.
1 month ago
நந்தன் அவர்களுக்கும், இன்றுவரை வாழ்த்தத் தவறிய உறவுகள் அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌💐
1 month ago
இது இஸ்ரேல் இன் பிரச்சாரம் ஆகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஈரானின் ஓய்வுபெற்ற அதிகாரி சொல்லி இருப்பதாக செய்திகள்.
1 month ago
இது இஸ்ரேல் இன் பிரச்சாரம் ஆகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஈரானின் ஓய்வுபெற்ற அதிகாரி சொல்லி இருப்பதாக செய்திகள்.
1 month ago
முன்னெச்சரிக்கை! அவுஸ்ரேலியர்கள் மட்டுமல்ல இங்குள்ள எம்மவர்களும் கிட்டதட்ட அவுஸ்ரேலியர்கள் போலவே நடந்து கொள்வார்கள், ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும், சிலருக்கு பழகிவிடும், சிலருக்கு சரிப்பட்டு வராது அப்படியானவர்கள் கொஞ்சம் அவர்களுடன் இடைவெளியுடன் இருந்தால் சேதம் இருக்காது🤣.
1 month ago
நன்றி! என்றும் பெற்றோரால் தமது குழந்தைகளை சரியாக புரிந்து கொள்ளமுடிவதில்லை, ஒரு முறை இதே போல ஒரு சம்பவம் 3 வயது குழந்தையிடம் அதன் பெற்றோர் இது கூடவா விளங்கவில்லை என கடிந்து கொண்டார்! குழந்தையின் பெற்றோருக்கு 30 வயது அவர் 3 வயதில் அந்த குழந்தையின் புரிதல் கூட இல்லாமல் இருந்திருக்ககூடும். இதே மாதிரியான நிலை வேலைகளிலும் காணப்படும், புதிதாக வேலைக்கு வருபவருக்கு பயிற்றுவிப்பர் வெறுப்பாக இது கூடவா விளங்கவில்லை என கூறுவார் (குறிப்பாக ஆசிய பின்புலத்தவர்கள்), அதே நபர் வேலையினை ஆரம்பிக்கும் போது அதனை விட மோசமாக இருந்திருப்பார், ஒரு புதிய விடயங்களை முதன் முதலில் அணுகும் போது உள்ள நிலைக்கும் அதே ஒரு கைவந்த கலையாக வந்தபின்னராக இருக்கும் போது மன நிலை வேறுபடும். இதனை சம்பந்தப்பட்டவர்களிடம் அவர்கள் அதனை தப்பாக எடுக்காதவாறு கூறுவது மிகவும் கடினமாக இருக்கும், அவர்கள் ஆலோசனைகளை தமது கருத்து தவறானது என நிறுவ முனைவதாக நினைத்து, தனிப்பட்ட தாக்குதலில் இறங்குவார்கள் இதற்கு காரணம் கல்வியாக இருக்குமோ என நினைப்பதுண்டு, அதிக பட்ச புள்ளிகளை பெறுவது ஒரு சரியான விடயமாக நீண்டகாலமாக உருவகித்து அதில் ஏற்படும் ஒவ்வொரு புள்ளி இழப்பு தவறும் ஒரு கொலைக்குற்றமாக உருவகித்து கொண்டிருப்பவர்களிடம் அவர்கள் பார்க்காத பக்கத்தினை பற்றி பேசும் போது தம்மை தவறானவர்களாக சித்தரிப்பதாக நினைத்து அதற்கெதிராக போராடுவார்கள். Perception எனும் புரிதல் எமது சூழலும் அதனூடான அனுபவவுமாக இருக்கிறது, பெரும்பாலான வாழ்க்கையில் இறுதிவரை எம்மை பற்றிய சரியான புரிதலே எமக்கு கிடைப்பதில்லை, இதில் மற்றவர்களை புரிந்து கொள்வதென்பது மிகவும் சவாலாகவே இருக்கும்.
1 month ago
1 month ago
1 month ago
1 month ago
1 month ago
இந்த வரியால் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படும்.
1 month ago
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா ........ ! 😍
1 month ago
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : கலைமகளே உன்னை அழைக்கின்றேன் காவிய சுவையினை அறிகின்றேன் நிலையாய் இசையுடன் இணைந்தவளை நான் பாடுகின்றேன்…… பெண் : நாட்டிய கலையே அபிநயமாகும் நங்கையின் மொழியே கவி நயமாகும் நாட்டிய கலையே அபிநயமாகும் நங்கையின் மொழியே கவி நயமாகும் பெண் : முகிலாட துகிலாட புது கோலங்கள் விழியாட மொழி பாட தேன்முகிலாட துகிலாட புது கோலங்கள் விழியாட மொழி பாட தேன் ராகங்கள் ராகங்கள் பெண் : தாமரை மலரில் வண்டுகள் ஆடும் தை தை என்றே ஜதி ஸ்வரம் பாடும் தாமரை மலரில் வண்டுகள் ஆடும் தை தை என்றே ஜதி ஸ்வரம் பாடும் பெண் : மலை மீது தவழ்ந்தாடும் வெண் மேகங்கள் மயிலாட நின்றாடும் பூஞ்சோலைகள் மலை மீது தவழ்ந்தாடும் வெண் மேகங்கள் மயிலாட நின்றாடும் பூஞ்சோலைகள் ....... ! --- கலைமகளே உன்னை அழைக்கின்றேன் ---
1 month ago
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் . .......... ! 🌻
1 month ago
வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து வசிக்கும் இவர் பணத்தை வங்கியில் போடாமல் பெருந்தொகை பணத்தை வீட்டில் வைத்திருந்தார் என்றால் இவர் என்ன type ஆன மனிதர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
Checked
Tue, 09/30/2025 - 09:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed