3 weeks 2 days ago
வீரப்பையனாரே..இன்றைய அரையிறுதிஆட்டம் இந்தியா ....ஆப்கான் பார்த்தீர்களா...எப்படி இருந்தது ஆட்டம் ...இந்தியா தோற்றுவிடும் என்றூ ... மீண்டும் போர்வைக்குள் போய்விட்டென்....பின்னர் நடந்தது வேறை..
3 weeks 2 days ago
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 05 ஒருநாள் ஓய்வு பெற்ற அதிகாரி: “நான், ஒருவேளை, இளமையாக இருந்திருந்தால்… நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பீர்களா?” என்று சும்மா ஒரு கதைக்கு கேட்டார். அதற்கு கண்மணி : “இல்லை... இனிமேல் என்றும் இல்லை ... நான் பட்ட துயர் காணும் ... நான் குடும்ப வாழ்வில், ஆண் பெண் குடும்ப உறவில் மரத்துப் போனேன்" என்றாள். “உனக்கான மகிழ்ச்சியை ஏன் மறுக்க வேண்டும்?” “நான் திரும்ப ஒருமுறை மீண்டும் மாட்டிக்கொள்வதை மறுக்கிறேன் ,” என்று அவள் பதிலளித்தாள். “இனி வரும் திருமணம் வேறுபட்டதாக இருக்கலாம்.” “ஆம். “மாறலாம்” என்று சொல்வது எளிது. ஆனால் அந்த மாற்றத்தின் ஆபத்தை மீண்டும் ஏற்கச் சொல்லப்படுவது எப்போதும் பெண்களுக்கே. ஆண்களுக்கு திருமணம் ஒரு முயற்சி. பெண்களுக்கு அது ஒரு சூதாட்டம்.” [Yes. But women are expected to risk that difference. Men are not.]” அவர் அவளை தனிமையிலிருந்து காப்பாற்ற விரும்பினார். அழிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவள் விரும்பினாள். அதிகாரி: “ஏன்?” கண்மணி: “ஏனென்றால் அப்போதும் கூட, நான் அதிகமாக அனுசரித்துச் செல்ல வேண்டியவளாக இருப்பேன். இன்னும் சமரசம் செய்ய வேண்டும். இன்னும் மன்னிக்க வேண்டும்.” அவள் தன் இறுதி எண்ணத்தை கவனமாக இடைவெளி விட்டுச் சொன்னாள் கண்மணி: “சாத்தியத்தை விட, அமைதியை நான் தேர்வு செய்கிறேன். நம்பிக்கையை விட, தெளிவை நான் தேர்வு செய்கிறேன். அதற்காக நான் அன்பை நிராகரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. அழிப்பை மறுக்கிறேன் என்று அர்த்தம்.” அவர், அவளின் வார்த்தைகளை கவனமாக கேட்டார். அவளை மீண்டும் சம்மதிக்க வைக்க, அதன் பின் அவர் முயற்சிக்கவில்லை. சில உரையாடல்கள் உடன்பாட்டுடன் முடிவதில்லை. அவை புரிதலுடன் முடிவடைகின்றன. அவள் அன்பை விரும்பினாள். அவள் ஆசையை ரசித்தாள். அவள் தன்னை ரசிப்பதை விரும்பினாள். ஆனால் கவனிப்பு என்ற வேடத்தில், அதிகாரம் இருப்பதை வெறுத்தாள் திருமணம் ஒரு காலத்தில் அவளுடைய குரலை எடுத்துக் கொண்டது. அதைத் திரும்பப் பெற அவள் இனிமேல் ஒருநாளும் பேரம் பேச மாட்டாள். அதன் பின் ஒருநாள், ஓய்வு பெற்ற அதிகாரி கண்மணிக்கு காதல் மற்றும் ஏக்கம் [romantic, sensual, longing] கொண்ட, அழகிய தமிழ் கவிதைகளை அனுப்பினார். உறங்கும் போது கனவிலும் விடிந்தவுடன் நினைவிலும் குளத்தில் நீந்தும் தாமரையைப் போல் மன ஓடையில் நீந்துகின்றது உன் நினைவு வாழும் வரை உயிரிலும் எண்ணத்திலும் நீயே.. வானவில்லாய் எனக்கு அழகு பொழிந்து ஏழு நிறமாய் உன் கோலத்தைக் காட்ட காற்றைக் கண்ட மரம் போல் என் மனமும் கவலை மறந்து ஆடிப் பாடி நடனமாடுகிறதே … எனக்குள் தனிமையைத் தவிடு பொடியாக்கி எனக்குள்ளே எங்கோ இருந்து இசைக்கிறாய் உன்னைத் தேடி அலைந்திடும் தேடலில் உன் வண்ணமும் என்னைத் தீண்டி மயக்குதே ... ஒளியிழந்த விழிகளுக்கும் நீ கனவைத் தந்தாய் இருண்டுவிடும் என்னுலகம் மீண்டும் - கலைந்துவிடாதே மறக்க முடியாத பிம்பமாய் தவிர்க்க முடியாத நினைவாய் கண்ணின் கண்மணியாய் வந்தவளே - விலகிவிடாதே.. அவள் அவற்றை ஆர்வத்துடன் திரும்பத் திரும்ப படித்தாள். உடைமையைக் கோராத ஆசையை அவள் ரசித்தாள் [She enjoyed desire that did not demand possession.]. கவிதை, விளைவுகளின்றி நெருக்கத்தை அனுமதித்தது [Poetry allowed intimacy without consequence.]. கடமை இல்லாமல் ஏங்குதலுக்கு வழிவகுத்தது. [Longing without obligation.]. “என்னை அழைக்கும் ஆசை என்னை அச்சுறுத்தவில்லை. என்னைச் சொந்தம் கொள்ளும் முயற்சிதான் என்னை நடுங்கச் செய்கிறது.” [Desire does not frighten me, she realised. Ownership does.] என்றாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 06 தொடரும் துளி/DROP: 2015 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/33634639602851255/?
3 weeks 2 days ago
இப்ப வாற சின்னதிரையின் ஒரு பகுதி போல இருந்தது.
3 weeks 2 days ago
@புலவர் பெருமானுக்கு உதவி செய்யலாமே எனும் நல்நோக்குடன் தமிழ்நெட்டில் தேடுதல் வேட்டை மேற்கொண்டேன். மறைந்த சம்மந்தர் அவர்கள் 2009 ஜனவரி தொடக்கம் சம்மந்தப்பட்ட பதிவுகளை பார்வையிட்டேன். போர் நிறைவடைந்து பத்து வருடங்களின் பின்னரும் மனுசன் பாவம் தமிழர்கள் சம்மந்தப்பட்ட விடயங்களில் நன்றாகவே குரல் கொடுத்துள்ளது. ஆக ஒரே ஒரு இடத்தில்தான் சறுக்கல் தெரிகின்றது. ரணில் கையுக்குள் இலங்கை தேசியகொடியை திணித்து உயர்த்திக்காட்டிய சம்பவம்தான் அது. விடுதலை புலிகள் அமைப்பு போராளிகள் - மாவீரர்கள் தியாகங்களிற்கு ஈடு, இணை இல்லை. சாதாரண தமிழ் அரசியல்வாதிகளினால் அவர்களிற்கு இணையாக பணியாற்ற முடியாது அவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பமுடியாது என்பதுதான் யதார்த்தம். இதற்கு சம்மந்தர், சுமந்திரரை குறைசொல்லி என்ன செய்வது? முன்னைய வீச்சில் போராட்டம் நகரவேண்டும் என்றால் முன்னைய ஒழுக்கம், தியாகம், கட்டுக்கோப்பு, உயிர்க்கொடை எல்லாம் அவசியம். ஆனால், இப்போது அடிப்படை கட்டமைப்பே இதற்கு இல்லையே!
3 weeks 2 days ago
பாதுகாப்பு படையினரும் பாடசாலை மாணவ மாணவியருடன் சிறப்பாக நடந்தேறியுள்ளது.
3 weeks 2 days ago
கொலையான அஜித்குமார் | கோப்புப் படம் கி.மகாராஜன் Updated on: 04 Feb 2026, 3:55 am மதுரை: ‘மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில், நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை. அஜித்குமாரின் மரணம் என்பது காவல் மரணமே என உறுதியாகியுள்ளது’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், 2 பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், “அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறிக்கிட்ட நீதிபதி, நகை திருட்டுப் புகார் என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “அது உண்மை இல்லை என்பதால், புகார் முடிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, “ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?. அவர் தானே எல்லாவற்றிற்கும் காரணம்?. ஒரு நபரை இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? முன் விரோதம் ஏதும் இருந்ததா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு விசாரித்துள்ளனர்.” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிரபு என்ற போலீஸ்காரரைத் தவிர மற்றவர்கள் அடித்ததாகவே கூறியிருக்கின்றனர். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, “வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனம் பதறுகிறது. ஏதுமில்லாத விசயத்துக்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல் துறையினருக்கு பாடம் புகட்டுவோம்.” என குறிப்பிட்டு விசாரணையை பிப்.17-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே - அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை
3 weeks 2 days ago
04 Feb, 2026 | 10:01 AM மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மேற்குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. குறித்த வெதுப்பகம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை அத்துடன் வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டனர். அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை,எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை,உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை | Virakesari.lk
3 weeks 2 days ago
04 Feb, 2026 | 10:34 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல் வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவசரமாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிறுவனின் உடலம் மேலதிக சட்டவைத்திய விசாரணைகளுக்காக ஒட்டுசுட்டான் வைத்தியசாலையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, குறித்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி | Virakesari.lk
3 weeks 2 days ago
கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி! 04 Feb, 2026 | 03:28 PM இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (4) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி, பசுமைப் பூங்கா வரை ஊர்வலமாக சென்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோஷங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப் பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்தியும், தமிழர் தாயகப் பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி, பதாதைகளைத் தாங்கியவாறு சென்றனர். அதேவேளை தமிழர்கள் இந்நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு "சிங்கக்கொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள்" எனக் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றபோது A9 பிரதான வீதியின் ஒருபக்க வழித்தடத்தில் வீதிப் போக்குவரத்து சிறிதுநேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி! | Virakesari.lk
3 weeks 2 days ago
சாதாரண தமிழ் பொதுமக்கள் மட்டுமல்ல தேசிய தூண்களாக காட்டிக்கொண்ட பலரும் மகிழ்சசியாக வடகிழக்குகு மட்டுமல்ல தென்னிலங்கை சுற்றுலாவுக்கும் சென்று வந்ததை நானே பார்த்துள்ளேன் . ஏதோ சம்பந்தர் மட்டுமே மகிழ்சசியடைந்ததாக றீல் விடுகிறார்கள். 😂
3 weeks 2 days ago
04 Feb, 2026 | 03:44 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித தாதுக்கள் கொழும்பு கங்காராம விகாரைக்கு இன்று புதன்கிழமை (04) கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புனித தாதுக்கள் இன்று முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்களின் வழிபாட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த புனித தாதுக்களுடன் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வ்ரத் மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்தனர். இந்த புனித தாதுக்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. புனித தாதுக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன! | Virakesari.lk
3 weeks 2 days ago
04 Feb, 2026 | 04:47 PM பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியொன்றில் நாய்கள் கூட்டமாக சிறுத்தைக் குட்டியொன்றைத் துரத்திய வேளையில், அந்த சிறுத்தைக் குட்டி பயத்தில் அருகில் இருந்த மரத்தில் ஏறிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (3) சிறுத்தையின் செயலை நேரில் பார்த்த தோட்டத் தொழிலாளி தெரிவிக்கையில், சிறுத்தையொன்றும் அதன் குட்டியும் அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்காக, தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்தன. அப்போது அந்த சிறுத்தை, நாய் ஒன்றை வேட்டையாட முயன்றுள்ளது. அவ்வேளை அருகிலுள்ள பல நாய்கள் ஒன்றுகூடி சிறுத்தையையும் அதன் குட்டியையும் துரத்தியுள்ளன. துரத்தி வரும் நாய்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள் சிறுத்தைக் குட்டி அருகில் இருந்த மரத்தில் ஏறியதாகவும் குட்டிக்கு காவலாக தாய் சிறுத்தையும் அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், நாய்கள் அங்கிருந்து சென்றதும் சிறுத்தைக் குட்டி பாதுகாப்பாக மரத்தில் இருந்து கீழே இறங்கி, தேயிலைத் தோட்டத்தின் வழியாக தாயுடன் நடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது. நாய்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக மரத்தில் ஏறிய சிறுத்தைக் குட்டி! | Virakesari.lk
3 weeks 2 days ago
வட மாகாண சபை கட்டடத் தொகுதியில் சுதந்திர தின நிகழ்வு 04 Feb, 2026 | 05:42 PM இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை (4) நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு தேசியக் கொடியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஏற்றி வைத்தார். இதன்போது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் தமிழ் மொழியிலும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அத்துடன், தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய வாத்திய இசை முழக்கம், தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன. ஹாட்லி கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்து கல்லூரி மற்றும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மேலைத்தேய வாத்தியக் குழுவினர் இசையை வழங்கினர். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படையணியினரின் சீருடை அணிவகுப்பு மரியாதை இதன்போது நடைபெற்றது. ஹாட்லி கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, தும்பளை சிவப்பிரகாசம் வித்தியாலயம் மற்றும் கல்லடி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் சாரணிய அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. அத்துடன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களால் இன்னியம் இசை அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன், நாட்டின் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையிலான டெனியா மற்றும் சிறிமுருகன் முன்பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு கண்காட்சியும் நடைபெற்றது. மேலும், புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களின் செம்பு நடனம், கோலாட்டம், சிரட்டை கும்மி மற்றும் மயில் நடனம் ஆகியனவும் லயா நாட்டியப் பள்ளி மாணவர்களின் கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டம், வெலிஓயாவைச் சேர்ந்த ரன்சிலு கலைமன்றம் மற்றும் பரக்கும்பர மகா வித்தியாலய மாணவர்களின் கண்டிய நடன ஆற்றுகை, ஒஸ்மானிய கல்லூரி மாணவர்களின் கோலாட்டம் மற்றும் ரபான் ஆற்றுகை, சிவலீமன் சிலம்பம் கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்ட ஆற்றுகை, வெலிஓயா மதுரங்க கலாமன்றத்தின் நடன நிறுவன மாணவர்களின் சிங்கள நடனம் ஆகிய பல வண்ணக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இவ்விழாவில் சர்வமதத் தலைவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, கடற்படையின் வடபிராந்திய கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், விமானப் படையின் குறூப் கப்டன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், வடக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் நிறைவாக ஆளுநரால் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
3 weeks 2 days ago
04 Feb, 2026 | 05:55 PM “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது. சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பெண்கள் இயக்கத்தின் நிரோஷா குருகே, தொழிலாளர் போராட்ட மையத்தின் சுகதா நந்த, மலையகத் தமிழ்ப் பெண்களின் சார்பில் ஞானதேவி, மலைநாட்டு மக்களின் நில உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் கணேஷ் கணேசமூர்த்தி, சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த, மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மகேந்திரன், பெண்கள் விடுதலைக்கான இயக்கத்தின் சார்பில் பிரசாதினி, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோருடன் சமுக செயற்பாட்டளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் மக்கள் மாநாடு | Virakesari.lk
3 weeks 2 days ago
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு 04 Feb, 2026 | 11:12 AM இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய புதன்கிழமை (04) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி - தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், பொலிஸ் கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர். https://www.virakesari.lk/article/237785
3 weeks 2 days ago
sonretodSp2753197 mai5tgm0m6tht76g49hcfm5191al559fm6t5hhm249 · அன்பான மனைவி ! அழகான துணைவி அமைந்தாலே பேரின்பம்! மனைவி - பாத்திரம் கழுவ சொன்னனே? கழுவி விட்டீர்களா! கணவன் - இல்ல.. அதுக்குள்ள தான், குழம்பு பொரியலுக்கு காய கட் பண்ண சொன்னியே? மனைவி - சரி காய் வெட்டி விட்டீர்களா? கணவன் - அதுக்குள்ளதான் வெங்காயம் பூண்டு உறிச்சி கட் பண்ண சொன்னியே ! மனைவி - சரி வெங்காயம் பூண்டு கட் பண்ணியாச்சா? கணவன் - அதற்கு முன்னாடி அரிசி கொஞ்ச நேரம் ஊறனும். முதல்ல அதை ஊற வைக்க சொன்னியே. மனைவி - சரி அரிசியாவது ஊற வைத்தாயா ! கணவன் - நீதான் அதுக்குள்ள பாப்பாக்கு நாளைக்கு போட்டு போகற யூனிபார்ம வாஸிங் மிஷின்ல போடனும்னு சொன்னியே! மனைவி - சரி அதையாவது செஞ்சிங்களா? கணவன் - டைம் ஆச்சி அவ இன்னும் எழுந்து இருக்க வில்லை ! நீ தான் பாப்பாவை எழுப்பி பாத்ரூம் போக சொன்ன சொன்னாயே! மனைவி - சரி பாப்பவையாவது எழுப்பி விட்டீர்களா ! கணவன் - இ..ல்..ல.. மனைவி - சரி வேற என்னதா பண்ணிட்டு இருக்கிங்க. கணவன் - காலையில் எழுந்த முதல் ஒரு வாய் காப்பி குடிக்க வில்லை அதான் எனக்கு டீ போட்டுட்டு இருக்கேன். மனைவி - ( கோபத்தில் ) உங்களை கட்டிகிட்டு நான் படும் கஷ்டம் இருக்கே!
3 weeks 2 days ago
3 weeks 2 days ago
உலகம் எங்கும்... இன்னும் நிறைய சிப்பிகள் மூடியபடி உள்ளது. அவற்றிலும் நிறைய முத்துக்கள் இருக்கலாம். ஆனால்... அந்த முத்தை எடுக்க, அவர்கள் விடுகிறார்கள் இல்லை.
3 weeks 2 days ago
சிப்பிக்குள் மூடியிருந்த முத்து ஒன்று வெளிப்பட்டுவந்து பரிசும் பெற்றது. வாழ்த்துக்கள்!!🙌
3 weeks 2 days ago
இவர் அண்மையில் சொல்லி இருந்தார் , நேட்டோ இராணுவ நாவைகையின் போது லிபிய அரசின் தங்க காணாமல் போய்விட்டதாக. நேரடியாக மேற்கு நாடுகளை சுட்டவில்லை. அனல் , நர்\மறைமுகமாக சாடி இருந்த்தார் மேற்கு நாடுகள் பங்கு இருக்கிறது என்று. அதன் பின் இந்த கொலை.
Checked
Sat, 02/28/2026 - 05:02
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed