Aggregator
வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய உள்ளூராட்சி நிறுவனங்கள் - வலுசக்தி அமைச்சர்
வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய உள்ளூராட்சி நிறுவனங்கள் - வலுசக்தி அமைச்சர்
13 Nov, 2025 | 12:47 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பதிலளித்ததாவது,
மின்சார கட்டணத்திற்கான பட்டியல்கள் இலங்கை மின்சார சபையினூடாக விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த உள்ளூராட்சி நிறுவனங்கள் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
வீதி விளக்குகளுக்கான விசேட மின்சார கட்டணம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணமே அறிவிடப்படுகின்றன.
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளன. இவ்விடயம் குறித்து மாநகர சபையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.