Aggregator

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

1 month 2 weeks ago
தங்காலையில் லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் தொடர்பில் வெளியான தகவல்! 22 Sep, 2025 | 04:59 PM அம்பாந்தோட்டையில் தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றுக்கு அருகில் இருந்த மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 624 கிலோ கிராம் என பொலிஸார் தெரிவித்தனர். 245 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 380 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இன்று திங்கட்கிழமை (22) இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதன்போது வீட்டிற்கு அருகில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மூன்று லொறிகளில் இருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கிய 10 பொதிகள் மற்றும் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 5 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு ரி - 56 ரக துப்பாக்கியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வீட்டில் இருந்த மற்றுமொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இந்த லொறியின் சாரதி என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/225781

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

1 month 2 weeks ago
🚨 தங்காலையில் உள்ள வீடு ஒன்றில் ஐஸ் போதைபொருள்? இரு சடலங்கள் மீட்பு. தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார். சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Nirujan Selvanayagam

ஐ.நா., ஜப்பானுக்கு ஜனாதிபதி அனுர விஜயம்

1 month 2 weeks ago
ஜனாதிபதி ஜப்பானுக்கு செப். 27 உத்தியோகபூர்வ விஜயம் 22 Sep, 2025 | 04:55 PM (நமது நிருபர்) ஜப்பான் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் சனிக்கிழமை (27) ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகாரத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதிக்கும், ஜப்பான் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பரஸ்பர பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து டோக்கியோவின் முன்னணி ஜப்பான் செயற்றிட்டம் மற்றும் முதலீட்டாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெறும் வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். 2025 மசாகா கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானில் உள்ள இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார். https://www.virakesari.lk/article/225778

ஒரு பயணமும் சில கதைகளும்

1 month 2 weeks ago
🤣................ ஒரு படத்தில் ஒரு காட்சியில் விவேக்கிற்கு பெண்கள் வெளியே சொல்லாமல் மனதில் நினைக்கும் விடயங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன. அதன் பின்னர் வரும் காட்சிகள் நல்ல சிரிப்பை வரவழப்பவை. ஆனால் எங்களின் மனதுகளின் தோன்றுபவற்றை அப்படியே வெளியே சொன்னால், அங்கே சிரிப்பு இருக்காது, பெரிய வெட்டுக் குத்துகள் ஆவது மட்டும் இல்லை, அதன் பின்னர் ஒரு தனிமனிதனாக அலையவும் வேண்டி இருக்கும்...........🤣. 👍.......... சமீபத்திலும் கோமியம் (பசு மாட்டின் சிறுநீர்) அருந்துவது மற்றும் அதன் மருத்துவக் குணங்கள் பற்றிய ஒரு விவாதம் உண்டானது. சென்னை ஐஐடியின் இயக்குனர் காமக்கோடி மற்றும் ஶ்ரீதர் வேம்பு போன்ற பலராலும் அறிவாளிகள் என்றும், முன்னோடிகள் என்றும் கருதப்படும் பலரும் கோமியம் அருந்துவதை ஆதரித்து கருத்துகள் தெரிவித்திருந்தார்கள். நேற்று தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஶ்ரீதர் வேம்பு ஏதோ சொல்லியிருப்பதாக செய்திகளில் இருந்தது. அந்தச் செய்தியில் என் மனம் ஒட்டவில்லை, மாறாக கோமியம் பற்றியே சிந்தனை ஓடியது. தேடிப் பெறும் எந்த அறிவுமே அசைக்க முடியாத கண்மூடித்தனமான நம்பிக்கைகள் எங்கும் இருக்கின்றன போல..............🫣.

ஒரு பயணமும் சில கதைகளும்

1 month 2 weeks ago
மகா விஷ்ணுவின் பல நாமங்களில் ஒன்று நாராயணா என்னும் நாமம் .....அச்சுதா, அனந்தா,கோவிந்தா போன்று....... அது அவதாரமல்ல ....... ஆனால் அந்தப் பெயர்களை பக்தியால் பிள்ளைகளுக்கு பெற்றோர் சூட்டுவார்கள் . ....... அசலம் என்றால் அசையாமல் இருப்பது பொதுவாக மலையைக் குறிக்கும் ........திருவண்ணாமலை இதன் இன்னொரு பெயர் அருணாசலம் ....... பெற்றோர் அன்பினாலோ அன்றி பக்தியினாலோ பிள்ளைக்கு அருணாசலம் என்று பெயர் இடுகின்றார்கள் என்றால் அந்தப் பிள்ளை மலைபோல் அசையாமல் இருக்குமோ . .....இருக்காது ......அது ஓடும் , ஆடும், பாடும் , படம்போடும் அதுபோல் . ........! 😇

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக இன்றும் போராட்டம்

1 month 2 weeks ago
22 Sep, 2025 | 04:43 PM திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 6வது நாளாக இன்றும் (22) தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு!”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!”, “பொய்கள் வேண்டாம்”, “விவசாயிகளை இப்படியா நடாத்துவது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இச்சத்தியக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் நடக்கின்றது. வெளிநாடுகளுக்கு மக்கள் விவசாய காணிகளை தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை தற்போது அபகரித்துள்ளனர். ஜனாதிபதி செயலகம் வரை போராடிய முத்து நகர் விவசாயிகளுக்கு தீர்வில்லை. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதும் தீர்வு தருவதாக கூறியவர்கள் இதுவரை தீர்வு வழங்கவில்லை. இது போன்று சம்பூரிலும் காணிகளை அபகரித்துள்ளனர். எனவே மக்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். https://www.virakesari.lk/article/225771

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக இன்றும் போராட்டம்

1 month 2 weeks ago

22 Sep, 2025 | 04:43 PM

image

திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 6வது நாளாக இன்றும் (22) தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு!”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!”, “பொய்கள் வேண்டாம்”, “விவசாயிகளை இப்படியா நடாத்துவது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இச்சத்தியக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் நடக்கின்றது. வெளிநாடுகளுக்கு மக்கள் விவசாய காணிகளை தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை தற்போது அபகரித்துள்ளனர். ஜனாதிபதி செயலகம் வரை போராடிய முத்து நகர் விவசாயிகளுக்கு தீர்வில்லை.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதும் தீர்வு தருவதாக கூறியவர்கள் இதுவரை தீர்வு வழங்கவில்லை. இது போன்று சம்பூரிலும் காணிகளை அபகரித்துள்ளனர். எனவே மக்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

IMG-20250922-WA0047.jpg

IMG-20250922-WA0046.jpg

IMG-20250922-WA0045.jpg

https://www.virakesari.lk/article/225771

சிவசேனை அமைப்பின் போராட்டத்தை குழப்பச் சென்ற நபர்களால் பதற்றம்

1 month 2 weeks ago
22 Sep, 2025 | 04:33 PM வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரியும் யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதேவேளை கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாத நிலையில் சென் தெரேசா பாடசாலைக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர். இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் இருந்து "கப்" ரக வாகனத்தில் வருகை தந்த குழு ஒன்று தெரேசா பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, சிவசேனை அமைப்பின் போராட்டப் பந்தலுக்கு சென்று குழப்பம் விளைவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் குழப்பம் விளைவித்த நபர்களை விரட்டினர். https://www.virakesari.lk/article/225766

சிவசேனை அமைப்பின் போராட்டத்தை குழப்பச் சென்ற நபர்களால் பதற்றம்

1 month 2 weeks ago

22 Sep, 2025 | 04:33 PM

image

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரியும்  யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால்  சிவசேனை அமைப்பினரால்  திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

அதேவேளை கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாத நிலையில்  சென் தெரேசா பாடசாலைக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர். 

இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் இருந்து "கப்" ரக வாகனத்தில் வருகை தந்த குழு ஒன்று தெரேசா பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, சிவசேனை அமைப்பின் போராட்டப் பந்தலுக்கு சென்று குழப்பம் விளைவித்தனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் குழப்பம் விளைவித்த நபர்களை விரட்டினர்.

VID-20250922-WA0047.jpg

VID-20250922-WA0049.jpg

IMG-20250922-WA0072__1_.jpg

https://www.virakesari.lk/article/225766

யாழில் பனை விதை நடுகை செயற்திட்டத்துக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

1 month 2 weeks ago
22 Sep, 2025 | 02:14 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (22) நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ச.பவானந்தராஜா, பனை அபிவிருத்தி சபை தலைவர் ஆர்.ரவீந்திரன், பனை அபிவிருத்தி சபை அதிகாரிகள், பனை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/225744

யாழில் பனை விதை நடுகை செயற்திட்டத்துக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

1 month 2 weeks ago

22 Sep, 2025 | 02:14 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (22) நடைபெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ச.பவானந்தராஜா, பனை அபிவிருத்தி சபை தலைவர் ஆர்.ரவீந்திரன், பனை அபிவிருத்தி சபை அதிகாரிகள், பனை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20250922-WA0155__2_.jpg

IMG-20250922-WA0153__1_.jpg

IMG-20250922-WA0156__1_.jpg

IMG-20250922-WA0157.jpg

https://www.virakesari.lk/article/225744

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

1 month 2 weeks ago
சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான காணியில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 11:01 AM மித்தெனியவில் சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான காணியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 9மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி, இரண்டு டி-56 மேகசின்கள், 115 சுற்றுகள் டி-56 வெடிமருந்துகள் மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மித்தெனியவில் உள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சம்பத் மனம்பேரி கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பத் மனம்பேரியை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு செப்டெம்பர் 17ஆம் திகதியன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது. பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரசாயனங்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து வைத்ததாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மித்தெனியவில் அண்மையில் இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சம்பத் மனம்பேரியிடம் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/225721

ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் - உதய கம்மன்பில

1 month 2 weeks ago
முதலில்.... உங்களைப் போன்ற இனவாதிகளை அடக்கி வைத்தமையும், மக்களின் பணத்தில் அரச மாளிகையில் இருந்து கொண்டு சொகுசு அனுபவித்த ஜனாதிபதிகளை அந்த இடத்தை விட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தமையும், மகிந்தவின் ஆதரவாளர்களால் நடத்தப் படும் ஐஸ் போதை வியாபாரத்தையும், மாஃபியா கும்பல்களையும், நாடு விட்டு தப்பி ஓடி... இந்தோனிசியா, அரபு நாடுகளில் பதுங்கி இருக்கும் பாதாள உலக கோஷ்டிகளையும் அடியோடு அழித்துக் கொண்டு இருப்பதே சாதனைதான்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவு

1 month 2 weeks ago
இலங்கை ஜனாதிபதியாக ஓராண்டை நிறைவு செய்த அநுர; தமிழர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் மாறி மாறி அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்களை பின்தள்ளி, புதிய ஆட்சியொன்று நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டு நேற்றுடன் ( செப்டெம்பர் 21) ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி ஜனாதிபதியாக கடந்த ஆண்டு பதவியேற்றார். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறிய நிலையில், புதிய கட்சியாக முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறியுள்ளது. ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை இல்லாதொழித்து, நாட்டின் பின்னடைவுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற உறுதி மொழியை வழங்கியே தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறியது. இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் எந்தளவு இந்த ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதே இந்த கட்டுரையாகும். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கியமை பட மூலாதாரம், UNP MEDIA படக்குறிப்பு, அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ''வளமான நாடு - அழகான வாழ்க்கை'' என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தி தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகள், இந்த அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சிக்குள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதியாக காணப்பட்ட இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ வீடுகள், ஓய்வூதியம் போன்ற சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில், இந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ஊழல், மோசடி புகார்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஊழல், மோசடி, வீண்விரயங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரணில் அதிபராக இருந்த போது தனது அமெரிக்காவிற்கான அதிகாரப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து, அங்கிருந்து லண்டன் நோக்கி பயணித்தார். தனது மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டமையின் ஊடாக அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தியிருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமன்றி, முன்னாள் அமைச்சர்களாக மஹிந்தானந்த அளுத்கமகே, ராஜித்த சேனாரத்ன, ஷஷிந்திர ராஜபக்ஸ உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அது தவிர, ஊழல், மோசடி, வீண்விரயம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. போதைப்பொருளை ஒழித்தல் பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, போதைப்பொருட்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இலங்கையில் போதைப்பொருளை ஒழிக்கும் திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போதைப்பொருட்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன், மறைத்து வைக்கப்பட்டு போதைப்பொருட்கள் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் தலைமறைவாகி, இலங்கைக்குள் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்து வந்த நிழலுலக தலைவர்கள் என கருதப்படும் பிரதான சந்தேகநபர்கள் அண்மையில் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு, நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இதனூடாக நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் ரசாயண பொருட்கள் மீட்கப்பட்டன. நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல் இலங்கை ஜனாதிபதிகள் வசம் காணப்படும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் பிரதான உறுதிமொழியாக முன்வைத்திருந்தது. எனினும், அந்த உறுதிமொழியை இதுவரை நிறைவேற்ற தவறியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்றது. ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை அடையாளம் காணுதல் இலங்கையில் 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்தது. எனினும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முழுமையாக விசாரணைகள் முடிவடையாத நிலையில், அந்த உறுதிமொழியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குதல் பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் பிரதான உறுதிமொழியாக காணப்பட்டது. இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு தமிழர்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் கோரிக்கையானது, தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் பிரதான உறுதிமொழியாக காணப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு சட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அறிவித்திருந்த போதிலும், கடந்த ஒரு வருட காலத்தில் அந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை. பிரதான உறுதிமொழிகள் உள்ளடங்கலாக மேலும் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழர்களின் காணி விடுவிப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியிருந்தது. எனினும், அந்த உறுதிமொழியும் இதுவரை முழுமை பெறாதுள்ளது. சில பகுதிகளில் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், முழுமையாக காணிகள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு, இன்று வரை எந்தவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், அவர்களின் விடுதலைக்கான தொடர்ந்தும் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுத் தரப்படும் என்ற உறுதிமொழி தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட போதிலும், அது தொடர்பிலான இறுதி முடிவு இன்று வரை எட்டப்படாதுள்ளமையை காண முடிகின்றது. பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை மலையக தமிழர்கள் என ஏற்றுக்கொள்ளும் உறுதிமொழியும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அத்துடன், லயின் அறைகளில் வசிக்கும் மலையக தமிழர்களுக்கு நிரந்தர வீடொன்றை கட்டிக்கொள்வதற்கான காணிகள் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. இவ்வாறு தேர்தல் மேடைகளிலும், கொள்கை பிரகடனத்திலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் முழுமையாக ஒரு வருட காலத்திற்கு நிறைவேற்றப்படவில்லை. எனினும், தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட சில உறுதிமொழிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதா? வடகிழக்கு மாகாணங்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கும் வகையில் தற்போதைய ஆளும் கட்சியாக இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 2006ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதன்படி, வடகிழக்கு மாகாணம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், ஈழத் தமிழர் பிரச்னைக்கு இந்த அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிடைத்திருக்கின்றதா? என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் எழுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பெருமளவான நம்பிக்கை வைத்து, வரலாற்றில் என்றுமே இல்லாதளவு வாக்குகளை கடந்த முறை வழங்கியிருந்தனர். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் கட்சிகளுக்கு அதுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்த அங்கீகாரம் இல்லாது செய்து, தேசிய மக்கள் சக்தி பாரிய வாக்கு வங்கியை அந்த மாகாணங்களில் பெற்றிருந்தது. பட மூலாதாரம், PARAMESWARAN WIKNESHWARAN படக்குறிப்பு, மூத்த செய்தியாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய வாக்குகள், இன்று தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? இந்த விடயம் தொடர்பில் மூத்த செய்தியாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். ''பொதுவாக இலங்கை மக்களுக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அது சிங்களமாக இருக்கலாம், தமிழர்களாக இருக்கலாம். இவர்களிடம் பொதுவான ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஊழல், மோசடிகளை இல்லாது செய்வோம். போதைப்பொருட்களை இல்லாது செய்வோம்." இந்த மாதிரியான சில பொதுவான கோரிக்கைகள் வெளிவந்தன. இந்த விடயங்களில் இந்த அரசாங்கம் ஓரளவு முன்னோக்கி செல்வதாக தெரிகின்றது. ஆனால், தமிழர்களின் கோரிக்கை என்று பார்த்தால், ஈழத் தமிழர் பிரச்னையாக இருக்கலாம். அரசியல்தீர்வு விடயமாக இருக்கலாம். கடந்த கால குற்றச்சாட்டுக்கள் மீதான தீர்வாக இருக்கலாம். இந்த மாதிரியாக விடயங்களில் இந்த அரசாங்கம் ஒரு அடியேனும் முன்நோக்கி வைத்ததாக தெரியவில்லை." என்றார். வெளிப்படையாக தெரியவில்லை. அரசியல் தீர்வு, போர் குற்றச்சாட்டுக்கள், காணாமல் போனோர் விடயங்கள், வடக்கு கிழக்கு பொருளாதாரம், மலையக தமிழ் மக்களின் சம்பள பிரச்னையாக இருக்கலாம். இந்த விடயங்களில் இந்த அரசாங்கம் நழுவி செல்லும் போக்கை கடைபிடித்து செல்வது தெட்ட தெளிவாகவே தெரிகின்றது. கடந்த அரசாங்கங்கள் செய்த அதேவேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் தொடர்வதாக கூட இருக்கலாம். அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற அறிவிப்புக்களின் தமிழர்களின் பிரச்னைக்கான தீர்வு இல்லை என்பதே உண்மை.'' என மூத்த செய்தியாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். எதிர்கட்சிகள் ஒன்றிணைவு பட மூலாதாரம், UNP MEDIA படக்குறிப்பு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு அடுத்த நொடியே, பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர். அத்துடன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிளவுப்பட்டு, தற்போது பிரதான எதிர்கட்சியாக விளங்குகின்ற ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஏனைய கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் வழங்க முன்வைத்திருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் விடுதலை மற்றும் அரசாங்கத்திற்கு செயற்பாடுகளுக்கு எதிராகவே தாம் ஒன்றிணைந்ததாக கூறிய பிரதான எதிர்கட்சிகள், இன்று ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த சம்மேளனத்தில் என்றும் இல்லாதவாறு இம்முறை பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரு மேடையில் ஒன்று கூடியிருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனைத்தும் ஒரு மேடையில் அமர்ந்து, அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தின் பதில் - பிமல் ரத்நாயக்க என்ன கூறுகின்றார்? பட மூலாதாரம், FB/BIMAL RATHNAYAKE படக்குறிப்பு, தமக்கு வேலைகளை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார். ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடமாகியுள்ள போதிலும், தொடர்ச்சியாக தேர்தல்கள் நடத்தப்பட்டமையினால் தமக்கு வேலைகளை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார். எனினும், உள்ளுராட்சி சபைத்தேர்தல் முடிவடைந்த பின்னரே தாம் வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். ''இந்த நாட்டு மக்கள் 76 வருடங்கள் சென்ற பாதையை ஒரு புறம் வைத்து விட்டு, புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். 2024ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி புதிய பாதையில் செல்ல ஆரம்பித்தனர். அநுர சகோதரர் ஜனாதிபதியாகி ஒரு வருடம் ஆகியுள்ளது. உண்மையில் நாம் வேலை செய்ய ஆரம்பித்தது மே மாதம் 6ம் தேதிக்கு பின்னர். மே 6ம் தேதியே எமது உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவாகினார்கள். அதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சில வேலைகளை எமக்கு செய்ய இடமளிக்கவில்லை. தேர்தல் நடாத்தப்படும் காலப் பகுதியில் எம்மால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது. மே 6ம் தேதிக்கு பின்னரே நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்துள்ளோம்.'' என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwydn4lp32eo

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

1 month 2 weeks ago
🚨தங்காலை வீதியில் உள்ள மற்றொரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லொறியில் 200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள், ஒரு T-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவோல்வர்கள் ஆகியவை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Nirujan Selvanayagam

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் : குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

1 month 2 weeks ago
Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 10:01 AM லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் குழந்தைகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் இன்று அதிகாலை தெற்கு லெபனானில் தாக்குதலொன்றை நடத்தியதாகக் கூறுகிறது. அதில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனானின் தெற்கு நகரமான பின்ட் ஜபீலில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக லொபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலின் இலக்கு ஒரு ஹிஸ்புல்லா உறுப்பினர் என்றும், அவரும் கொல்லப்பட்டதாகவும் அறிக்கையொன்றில், குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த "தாக்குதலின் விளைவாக, சம்பந்தப்படாத பொதுமக்கள் கொல்லப்பட்டனர்" என அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/225705

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் : குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

1 month 2 weeks ago

Published By: Digital Desk 1

22 Sep, 2025 | 10:01 AM

image

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனானில் குழந்தைகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் இன்று அதிகாலை தெற்கு லெபனானில் தாக்குதலொன்றை நடத்தியதாகக் கூறுகிறது.

அதில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லெபனானின் தெற்கு நகரமான பின்ட் ஜபீலில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக லொபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலின் இலக்கு ஒரு ஹிஸ்புல்லா உறுப்பினர் என்றும், அவரும் கொல்லப்பட்டதாகவும் அறிக்கையொன்றில், குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த "தாக்குதலின் விளைவாக, சம்பந்தப்படாத பொதுமக்கள் கொல்லப்பட்டனர்" என அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/225705