| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 398 online users. » 0 Member(s) | 395 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,250
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,029
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,117
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| வணக்கம் |
|
Posted by: shidinesh - 11-16-2003, 02:39 AM - Forum: அறிமுகம்
- Replies (2)
|
 |
வணக்கம் அன்பர்களே,
இன்று தான் இத்தளத்தைப் பற்றி அறியும் சந்தர்ப்பம் கிடைத்தது. இனிவரும் காலங்களில் என்னாலான பங்களிப்பையும் செய்வேன்.
அன்புடன்,
தினேஷ்.
|
|
|
| குழந்தைகள் சரியான வழியில் தான் வழிநடத்தப்படுகிறார்களா? |
|
Posted by: aathipan - 11-15-2003, 06:34 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (34)
|
 |
<img src='http://first-year.adoption.com/img/child.jpg' border='0' alt='user posted image'>
எந்தக்குழந்தையும்
நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவை நல்லன ஆவதும்
தீயன ஆவதும் அன்னை வளர்ப்பினிலே
எம் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்படுகிறார்களா? சின்னச்சந்தேகம்.
நாங்கள் பத்தாம் வகுப்பு படித்தபின்தான் முழுக்கால்சட்டை அணிந்ததோம். பன்னிரண்டு முடித்தபோது தான் கைகளில் கடிகாரம் கட்டிமகிழ்ந்தோம். பெரியவர்களுடன் இணையாக நின்று பேசியது இல்லை. இதுவெல்லாம் இன்றை சந்திததியிடம் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் குறைந்த பட்ச்சம் பண்பாடு கற்றுத்தரப்படுகிறதா? கேள்விக்குறியாக உள்ளது.
அன்று ஒரு திருமணவீட்டிற்குச்சென்றிருந்தேன் எல்லோரும் அரட்டை அடித்தபடி இருந்தனர். முதல் நாள்தான் திருமணம் நடந்திருந்தது. என்னால் அன்று போக முடியவில்லை. மறுநாள் போயிருந்தேன். அங்கே பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞி புதிதாய் திருமணமான தம்பதியினரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள். "என்ன நேற்றுத்தானே முதல் தடவை இதுக்கு முன்னாடி தனியா ஏதும் செய்யவில்லையே?" பாவம் புதுத்தம்பதிகள் வாயடைத்துப்போனார்கள். என்னவென்று சொல்லுவார்கள். இப்படி ஒரு கேள்வி சின்னப்பெண்ணிடம் இருந்து வரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அந்தப்பதினாறு வயது இளம் குமரியின் தாய் தந்தை இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தம் குழந்தை ஏதோ சாதனை செய்தது போலவும் ஏதோ அந்த புது ஜோடியை பேசமுடியாது வாயடைக்கசெய்தது பெரிய திறமை போலவும். பெருமையாகப்பேசினார்கள்.
பல குழந்தைகள் இப்படித்தான் இன்று எதை எங்கு யாரிடம் பேசுவது என்று தெரியாமல் பேசுகின்றார்கள்.
சிலர் வீட்டுக்குச் சென்றால் குழந்தைகளிடம் பேசவே பயப்பிட வேண்டி உள்ளது. ஏனென்றால் அவைகள் ஏடாகுடாமா பேசிவிட வாய்புள்ளது. ஒரு நன்பன் இப்படித்தான் விருந்தொன்றிற்குச்சென்ற போது அந்தவீட்டு குழந்தைகள் இவனை கருங்குரங்கு என்று தமக்குள் பேசி சிரித்துள்ளார்கள். பாவம் நன்பன் அவன் கொஞ்சம் கறுப்புத்தான் அதற்காக இப்படி குழந்தைகளிடம் எல்லாம் அவமானப்பட வேண்டுமா?. வெளிநாட்டில் மட்டுமல்;ல உள்ளுரிலும் சில வீடுகளில் பெற்றோரே குழந்தைகளிடம் பேச பயப்படுகின்றனர். அவர்கள் பெரிய புகழ்பெற்ற பாடசாலைக்;குச்சென்று எல்லா கெட்டவார்த்தைகளையும் கற்றுவைத்திருக்கின்றன. அது மட்டுமல்ல சில சமிக்கைகள் கூட செய்கின்றன. குழந்தைகளைப்பார்த்தால் பெரியவர்களைவிட கொஞ்சம் அதிக மரியாதை கொடுக்கவேண்டும் போல் உள்ளது. இல்லை என்றால் அவமானம்தான்.
குழந்தைகள் தமிழ் பேச வேண்டும் தமிழில் எழுத வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போல நல்ல பண்பாடு உடையவர்களாய் இருக்கவும்வேண்டும். உங்கள் குழந்தைகள் தலைவாருவது இல்லையா?. முடிக்கு வண்ணம் புூசுகிறார்களா? அடிக்கடி ஆங்கிலத்தில் கெட்டவார்த்தை பயன்படுத்துகிறார்களா? கால்சட்டையை கிழித்துவிட்டு நாகரிகம் என்கிறார்களா? சாமி கும்பிடுவதை கிண்டல் செய்கின்றனவா? அப்படி யென்றால் உங்கள் குழந்தை நாளை உங்களுக்கே தலைவலியாய் அமையலாம்.
குழந்தைகள் சரியான வழியில் தான் போகிறார்களா? என பெற்றோர் கண்காணிக்கவேண்டும். தவறாக இருப்பின் நல்வழிப்படுத்த முனைய வேண்டும். நல்ல சமுதாயம் அமைய பெற்றோரின் பங்கு இன்றியமையாதது.
|
|
|
| சங்கடம் சட்டநாதன் |
|
Posted by: aathipan - 11-15-2003, 07:17 AM - Forum: நகைச்சுவை
- Replies (2)
|
 |
<img src='http://www.mdsupport.org/images/excuselogo.jpg' border='0' alt='user posted image'>
சட்டநாதனைப்பார்த்தால் தெருவில் உள்ளவர்கள் எல்லாம் அலறி அடித்துக்கொண்டு வீட்டுக்குள் போய் கதவை மூடிக்கொள்வார்கள். அத்தனைக்கும் சட்டநாதன் ஒன்றும் பேட்டை ரவுடியில்லை. சாதாரண நடுத்தர வர்க்க மனிதன் தான். பார்த்தால் நாற்பது வயது சொல்லலாம் ஆனால் முப்பதுதான் உண்மை வயது. நல்ல வேலை. பார்த்தால் அப்பாவிபோலத்தான் இருப்பான். இருந்தும் அவனைக்கண்டால் எல்லோரும் அஞ்சி நடுங்குவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா?
ஒரு தடவை சட்டநாதன் வீட்டுக்குபக்கத்து வீட்டுக்காரர் நல்லசிவம் நோய்;வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கொஞ்சம் இரத்தக்கொதிப்பு. போதாததிற்கு சர்க்கரைநோய் வேறு. இரண்டு நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து சதாரண வாட்டிற்;க்கு மாற்றி இருந்தார்கள்.
சட்டநாதன் அவரை பார்க்க மருத்துவமனை சென்றிருந்தான். ஒரு சாத்துக்குடியை கையில் கொடுத்து குணம் பெறஆண்டவனை வேண்டிக்கொள்வதாய் சொல்லி இருக்கிறான். நல்ல சிவம் இவன் அன்பில் உருகிப்போய்விட்டார். அடடா இத்தனை நல்ல மனிதனை நாம் கண்டுகொள்ளாம் விட்டுவிட்டோமே என எண்ணி பேச்சுக்கொடுத்தார். வினையை விலைகொடுத்து வாங்கிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். சட்டநாதனும் பேச ஆரம்பித்தான். சின்னவயது கதைகள்தொடங்கி இன்று வரை நடந்த கதைகளை அவிழ்த்துவிட்டான். எப்போதோ நடந்த வேண்டாத சின்னச்சின்ன கதைகளை எல்லாம் எடுத்து பெரிதுபண்ணி விளக்கி சொல்லிக்கொண்டிருந்தான். முதலில் இரசித்துக்கேட்ட நல்லசிவத்திற்கு கொஞ்;சம் அலுப்புத்தட்ட ஆரம்பித்துவிட்டது. கொட்டாவி வந்தது. இருந்தாலும் சட்டநாதனின் மனம் நொந்துவிடக்கூடாது என எண்ணி வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் ஒவ்வொருநேயாளியாய் பரிசோதிததபடி மருத்துவர் உள்ளேவரவும் சட்டநாதன்; மரியாதையோடு வெளியேறினான். நல்லசிவம் தப்பித்தோம் எனஎண்ணி நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். மருத்துவர் வெளியேறவும் சட்டநாதன் மீண்டும் உள்ளே வந்தான். நல்லசிவத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்களை மூடி தூங்குவது போல் பாவனை செய்தார். சட்டநாதன் அவர் கைகளைத்தொட்டு வருகிறேன் என்று கூறி விடைபெற்றான். இரக்கம் கொண்டு நல்லசிவம் கண்களைத்திறந்து விடைகொடுத்தார். உடல் நிலையை நன்றாகப்பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவருக்கு அறிவுரை சொல்லி சட்டநாதன் தொடர்ந்து ஒரு குட்டிப்பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிட்டான். இயற்க்கை மருத்துவம் மூலிகை மருத்துவம் என்று அவன் பேசிக்கொண்டே போனான். யார் யார் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பெரிய பட்டியலே போட்டான். நல்லசிவத்திற்கு என்ன செய்வது என்றுதெரியவில்லை. போகிறேன் என்றவன் ஏன் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று எரிச்சலானது. ஒரு நிலையில் நீங்கள் போய்வாருங்கள் என்று விடைகொடுத்தார். சட்டநாதனும் ஆமாம் நான் போய் ஆகவேண்டும் இல்லை என்றால் பஸ்கிடைக்காது என்ற கூறி பஸ்பயணத்தில் உள்ள சங்கடங்களை எடுத்து அடிக்கிக்கொண்டே போனான். பாவம் நல்லசிவம். அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. கண்களை மூடிக்கொண்டார். சட்டநாதனும் நல்லசிவம் கண்களை மூடி சுவாரசியமாக தம் பேச்சைத்தான் கேட்கிறார் என்று எண்ணி தனது பிரசங்கத்தை தொடர்ந்தான். உண்மையிலேயே நல்லசிவம் நிலை மோசமாகிவிட்டது. மருந்து மாத்திரை கொடுக்க வந்த தாதி நல்லசிவத்;தைபரிசோதித்து உடனே மருத்துவர்களை அழைக்க அவர் மீண்டும் நல்லசிவத்தை தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு எடுத்துச்சென்று சிகிச்கை அளித்தனர். ஒருவாறு வெளியேற்றப்பட்ட சட்டநாதன் யாரும் மாட்டமாட்டார்களா என்று ஏக்கத்துடன் நடக்க ஆரம்பித்தான்
சட்டநாதனிடம் நீங்களும் மாட்டிக்கொள்ளாதிருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
|
|
|
| என்ன இது.....? |
|
Posted by: shanthy - 11-14-2003, 10:33 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
என்ன இது.....?
வந்தீர் வாசலெங்கும் பூ முளைக்கப்
புன்னகையால் வரவேற்றோம்.
இதுவரை வந்து போனோர் போல்
இருக்கீர் நீரென்று இறுமாந்தோம்.
இடிபாடுகளின் நடுவிருந்தும்
மரநிழல்கள் தந்த நிழல்
வாழ்வினி இல்லையென்றும்
விடிபொழுது ஒவ்வொன்றும்
இயல்பாக விடியுமெங்கள்
இயல்பான காலைகள்
இனியென்றும் எமக்கென்றும்
எத்தனையோ நம்பிக்கைகள்
எல்லாமே பொடியாகி.....
நடுவழியில் கையை உதறிக்கொண்டு
'நாங்கள் நாடு திரும்புகிறோம் ஆனாலும்
அமைதி முயற்சியைக் கைவிட மாட்டோம்"
என்ன இது.....?
புயலொன்று எம்மில் மையமிட
நீர் போகிறீர்.....!
அயலார் அதிசயப்படுவதாய்
மனசெங்கும் மகிழ்வுடன்.....
அங்கங்கே சில நாட்டில்
அவசரச் செய்திகளாய்
நாமே தலைப்பாகி.....
'இப்படித்தான் ஒருநாள்
எமைவிட்டுப் போவீர்"
ஆரூடம் சொன்ன ஆரூடர்
வாய்மொழி பொய்க்காமற்
போகும்படியாய் நீரும் போகிறீர்.
எல்லாம் எதிர்பார்த்தோம்
எங்களை விட்டு நீரும்
ஒதுங்குவீர் என்றொரு பொழுதும்
எண்ணி நாம் இருக்கவில்லை.
பயமெங்கள் உயிர் பிய்த்து எறிகிறது
பாழ்படுவார் துயர் தந்து எமைக்
கொன்று தீயிட்ட கொடுநாட்கள்
நினைவாகி நெஞ்செங்கும்
தீப்பற்றி எரிகிறது.
என்ன செய்வோம் - இல்லை
என்ன செய்ய.....?
'தாய் பிள்ளையானாலும் வாய் வயிறு வேறாமே"
நீ மட்டும் விலக்கா என்ன.....!
போகட்டும் பறவாயில்லைச்
சென்று வருக.
எங்கள் விதி இதுதான்
பாலஸ்த்தீனர் போலெங்கள்
கைகளும் கல்லெறியும்
அராபியர் போலெங்கள்
அர்ச்சுனர்கள் போவார்கள்
என்று மட்டும் எண்ணாதீர்.
எரிமலைகள் ஒருபோதும்
ஓய்ந்து போவதில்லை.
பனிமலையின் சுவர் கடந்து
எங்கள் பக்கம் வந்த நோர்வேயே !
ஈராண்டு நம்முறவின் இறுக்கத்தின்
ஈரமுன் உயிரிருக்கும் நம்புகிறோம்.
நன்றிகள் போய் வருக.
அழைப்புண்டு உமக்கு
அழைப்பிதழ் அனுப்புவோம்.
மீண்டும் வருக.
கம்பள விரிப்புகள் காத்திருந்து
வரவேற்கும் வருக மீண்டும்.
14.11.03.
|
|
|
| சுகாதாரத்திற்கான புதிய அளவு கோல்கள் |
|
Posted by: சாமி - 11-14-2003, 04:51 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
சாதாரணமாக நாம் ரத்த அழுத்த சோதனை மேற்கொள்ளும் போது, பாதுகாப்பான அளவாக 120/80 கருதப்படுகிறது. அதேபோல, டிரைகிளசரைட்களை பொருத்தவரையில் 150 மி.கி.,/ டி.எல்.,லிற்கு குறைவாக இருக்க வேண்டும். ஆனால் மாறி வரும் இவ்வுலகில் இந்த அளவுகளும் மாறிவிட்டன. இந்த அளவுகளில் இருந்தால் கூட இதயம் பாதிக்கப்படகூடும் என்கின்றன புதிய ஆராய்ச்சிகள்.
முப்பதிற்கும் மேற்பட்ட சோதனைகளிலிருந்து தெரிய வந்திருப்பது 120/80 என்பது பாதுகாப்பான அளவு அல்ல. இந்த நிலை பிரீஹைபர்டென்ஸில் நிலையாக கருதப்படுகிறது. இதனால் மாரடைப்பு அல்லது சிறுநீரக கோளாறுகள் கூட ஏற்படலாம். முன்பு ரத்த அழுத்தம் 120/80 முதல் 139/89 வரை இருப்பது பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஆனால், இப்பொழுது ""இந்த அளவினை உடையவர்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றி கொள்வதற்குரிய அறிகுறியாக இதனை எடுத்து கொள்ள வேண்டும்'', என்கிறார் புதிய வரம்புகளை வகுத்துள்ள சுகாதாரத்திற்கான குழுவின் தேசிய நிறுவனத்தில் பணியாற்றிய நிபுணர்.
ரத்த அழுத்தத்தை சோதிக்கும் பொழுது அமர்ந்து கொள்ள வேண்டுமே தவிர படுக்க கூடாது. மருத்துவரை அணுகும் பொழுது சிறு உதறல் இருக்கலாம். அப்படியிருந்தால் சிறிது நேரம் கழித்து சோதனையை மேற்கொள்ள சொல்வது நன்று ஏனெனில், இதனால் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும் அமைதியான மனநிலையில் இச்சோதனையை மேற்கொள்ளுதல் மூலமே சரியான அளவை அறிய முடியும். இப்பொழுதுள்ள புதிய அளவின்படி ரத்த அழுத்தம் 120/80க்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
"ரத்தக் கொழுப்பு சோதனையின் ஒரு பகுதியான டிரைகிளசரைட் அளவு 100க்கும் குறைவாக இருக்க வேண்டும்'', என்கின்றனர். மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில், இந்த அளவுகள் நாள் முழுவதும் கூடி குறையும். சில சமயங்களில் இருமடங்காக கூடும். "இந்நிலையில், 150ஆக இருக்கும் டிரைகிளஸரைட் 300 ஆக உயர்ந்தால் இதய நோய்கள் வருவதற்கான அபாயம் அதிகம்'', என்கிறார்கள் மருத்துவ மைய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த மாற்றங்களை அங்கீகரிப்பதற்கு முன் பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்கிறது அமெரிக்க தேசிய கொழுப்பு கல்வி திட்டமைப்பு. எனினும், ரத்த அழுத்தம், டிரைகிளசரைட் அளவையும் சாதாரண நிலையில் கொண்டவர்கள் கூட இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சோதனை செய்வது நன்று. பெரும்பாலும், பெண்கள் டிரைகிளசரைட் அளவை கண்காணிப்பது அவசியம். ஏனெனில், பெண்களில் டிரைகிளசரைட் அளவை வைத்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை கணிக்கலாம்', என்கிறார் மற்றொரு நிபுணர்.
எனவே, நாம் அனைவரும் உணவிலும், பிற செயல்களிலும் தேவையான நடவடிக்கைகளை பின்பற்றி இதய நோயை தூர விரட்டலாம்.
நன்றி: தினமலர்
|
|
|
| குழந்தைகளுக்கான வெப்சைட் |
|
Posted by: சாமி - 11-14-2003, 04:49 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
குழந்தைகளுக்காக ஏராளமான வெப்சைட் கள் உள்ளன. குழந்தைகள் தினமான இன்று குழந்தைகளுக் கான வெப்சைட்கள் இடம்பெறுகின்றன.
உலகிலேயே இந்தியாதான் அதிக குழந்தைகளைக் கொண்டுள்ள நாடு. சீனாவை விட இந்தியாவில் குழந்தைகள் அதிகம். மொத்தம் 37 கோடி குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர். http://www.infochangeindia.org
கடந்த 50 ஆண்டுகளில் குழந்தைகளின் உடல் நலத்தில் பெரிய முன்னேற்றம் இருப்பதாக இந்த தளம் குறிப்பிடுகிறது. அதற்கு காரணம் இந்தியாவில் பல்வேறு அரசுகள் ஏற்படுத்திய நலத்திட்டங்கள்தான். அதே சமயம் குழந்தைகள் வளர்ச்சியில் இன்னும் நாம் கடக்க வேண்டிய துõரம் நிறைய உள்ளது என்றும் இத்தளம் குறிப்பிடுகிறது.
கல்வி, வளர்ச்சி, பாதுகாப்பு என்று பல்வேறு விஷயங்களில் கவனிக்க வேண்டியது ஏராளம் உள்ளது என்று இத்தளம் குறிப்பிடுகிறது. குழந்தைகள் குறித்த செய்திகளையும் இத்தளம் தாங்கி வருகிறது.
குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் மற்றொரு தளம் http://www.indiatogether.org/
குழந்தைகள் மீது எல்லோருக்கும் ஆசை உள்ளது. எனினும் அதற்கான வாய்ப்பு அனைவருக்குமே கிடைத்துவிடுவதில்லை.
முன்பை விட இப்போது தத்து எடுத்து வளர்க்கும் பண்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து தத்து எடுத்துக்கொள்ள உதவும் தளத்தின் முகவரி:http://www.ichild.org/
இந்த தளத்தில் தத்து எடுப்பதற்கான வழிமுறைகள், சட்ட திட்டங்கள், இது தொடர்பான செய்திகள் என்று ஏராளமான விஷயங்கள் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. தத்து எடுப்பவர்கள் அல்லாது, பொதுவான விஷயங்கள், குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்துக்கு செல்லலாம்.
நன்றி: தினமலர்
|
|
|
| வணக்கம் |
|
Posted by: சரோன் - 11-14-2003, 01:55 PM - Forum: அறிமுகம்
- Replies (27)
|
 |
எனது பெயர் சரோன். எனக்கு 14 வயது ஆகும். நான் வகுப்பு 8 படிக்கின்றேன். தமிழில் வகுப்பு 5 படிக்கின்றேன். எனது அப்பாச்சி சரோஜினி. அவரை சரோனி என்று கூப்பிடுவார்கள். அதனால் எனக்கு சரோன் என்று பெயர் ஆகும். எல்லோருக்கும் வணக்கம்.
|
|
|
|