Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=7810)

Pages: 1 2


வணக்கம் - சரோன் - 11-14-2003

எனது பெயர் சரோன். எனக்கு 14 வயது ஆகும். நான் வகுப்பு 8 படிக்கின்றேன். தமிழில் வகுப்பு 5 படிக்கின்றேன். எனது அப்பாச்சி சரோஜினி. அவரை சரோனி என்று கூப்பிடுவார்கள். அதனால் எனக்கு சரோன் என்று பெயர் ஆகும். எல்லோருக்கும் வணக்கம்.


- shanmuhi - 11-14-2003

வணக்கம் சரோன்.
ஆஹா....8 ம் வகுப்பு படிக்கிறீர்களா ?
நன்றாக படித்து முன்னேற..... வாழ்த்துக்கள் சரோன்.
கருத்துக்களத்திலும் எழுதுங்கள்.


- வலைஞன் - 11-14-2003

வணக்கம் சரோன்,

உங்கள் போன்ற சிறியவர்களுக்கும்(?) இந்தக் கருத்துக்களம் பயன்படவேண்டும் - பயன்படும் என்னும் நம்பிக்கையில் உங்களை வரவேற்றுக் கொள்கிறோம். இணைந்திருங்கள், பலனைப் பெற்றுத் தொடர்ந்திருங்கள்!


- veera - 11-14-2003

வணக்கம் சரோன்.
உங்கள் அறிவிற்கு விருந்தளிப்பவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.தவிர்க்க வேண்டியவை காண்பின் பெரியவர்கள் உதவியுடன் கண்டறிந்து புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

வருக : <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 11-14-2003

தம்பி உண்மையா நீங்கள் சின்னப் பிள்ளையா...?!...சரி உங்கள் கூற்றை நம்பிச் சொல்லுறம்.... களவும் கற்று மற...இதையும் பெரியவங்கள் சொல்லி இருக்கிறாங்கள்...இஞ்ச அந்தளவுக்கு இல்ல.....என்றாலும் சிறியவங்க நீங்கள் அழகாத் தமிழ் எழுதுறீங்கள்...பெரியவங்களுக்கு தமிழே வருகுதில்லை...தமிழ் விசயத்தில இங்க கொஞ்சம் கவனமெடுங்கோ.....! மற்றும்படி எல்லாம் நலமே....!

வாங்கோ வந்து கதையுங்கோ...

துணிந்து நில் தொடர்ந்து செல்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- anpagam - 11-15-2003

வணக்கம் வணக்கம் சரோன் நல்வரவு இந்த வகுப்பில் நாம் கொலசிப் என்னும் சோதனையில் புத்தக பூச்சிகளாக படிப்பு படிப்பு என இருந்தோம் நீர் உனது படிப்புடன் உலக அறிவு பயில போகிறீர் இது எமது யுகம் நாங்கள்தான் வெல்வோம். நான் ஒன்று வெல்லுகிறேன். <b> உனக்கு தெரியாததை தெரியாத இடத்தில் உடனே தெரிந்து கொள் அல்லது அது உணக்கு தெரியாமலையே தான் இருக்கும் </b>விளங்கியதா.... இது எல்லோருக்கும் பொருந்தும் -யாரோ


- sOliyAn - 11-15-2003

ஸ்கொலசிப்பை 8ம் வகுப்புக்கு மாத்திட்டாங்களா? நான் படிக்கும்போது 7ம் வகுப்பில் இருந்தது.. எனக்கு பாடசாலைதான் கிடைச்சுது.. பிறகு 5ம் வகுப்பாக மாறியது. இப்போது எட்டா?


- sOliyAn - 11-15-2003

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஊரிலை ஒருகாலத்தில அட்வான்ஸ்லெவலுக்கு போக முதல் ட்றவுசர் போட்டாலே சனம் கேலி செய்யும்.. பிறகு சின்ன பொடியள் ரீவி டெக் ஒப்பிறேற் பண்ணுறதை பெரிசுகள் பார்த்து வாய் பிளந்துதுகள்.. இப்ப கணனியுகம்.. அப்பிடித்தான் அன்பகம்.. :wink:


- Paranee - 11-15-2003

வருக இளந்தளிரே !
உங்கள் வரவு களத்திற்கு மேலும் வலுச்சேர்க்கட்டும்.

தருக உங்கள் கருத்துக்களை எண்ணச்சிதறல்களை !


- rani - 11-15-2003

I am rani,Nurse from norawy. I like to write something in yarl.


- வலைஞன் - 11-15-2003

வணக்கம் ராணி,
உங்களை யாழ் கருத்துக்களத்தில் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொள்கிறோம். நீங்கள் நிறையவே யாழ் களத்தில் எழுதலாம். உங்கள் தகவல்களையும் கருத்துக்களையும் நட்போடு என்றும் வரவேற்றுக் கொள்வோம். தமிழில் எழுதுவது, கருத்துக்களக் குழுக்கள், நிபந்தனைகள் பற்றிய தனிமடல் ஒன்று உங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளது. வாசித்துப் பார்த்து எழுதத் தொடங்குங்கள்.

நன்றி


- aathipan - 11-16-2003

வணக்கம் அன்புத்தம்பி சரோன்

வணக்கம் சகோதரி ராணி

உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் எண்ணங்களை இங்கே எழுத்தாக்கி வையுங்கள் படிக்க ஆவாலாய் உள்ளோம்.


- tamilheart - 11-16-2003

வணக்கம்
நான் வித்தியா. இனிமேல் நான் tamil heart என்ற பெயரில் என் கருத்தக்களைக்கூற விரும்புகிறேன்.


- இளைஞன் - 11-16-2003

வருக வருக வித்தியா (tamilheart)...
தமிழிலேயே முதற்பதிப்பு அமைந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களைத் தமிழ் இதயத்திலிருந்து எடுத்து இங்கெழுதுங்கள்!


- anpagam - 11-18-2003

ஒம் நான் இங்கே இப்ப.... இணய இணைப்பை காசு கட்டல்ல எண்டு கட் பண்ணிபோட்டாங்கள் ஐயாக்கள் உலகே சுற்றாமல் போய் விட்டது போல் போயிற்று கடந்த 3 நாட்களும்..... அதவிடுங்க <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஊரிலை ஒருகாலத்தில அட்வான்ஸ்லெவலுக்கு போக முதல் ட்றவுசர் போட்டாலே சனம் கேலி செய்யும்.. பிறகு சின்ன பொடியள் ரீவி டெக் ஒப்பிறேற் பண்ணுறதை பெரிசுகள் பார்த்து வாய் பிளந்துதுகள்.. இப்ப கணனியுகம்.. அப்பிடித்தான் அன்பகம்..<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ரிவியோட போன காலம் அல்ல நய்நா கணணி காலம் இது வாழ்கையில் இன்றியமையாத ஒரு முக்கிய சாதனமாகியிற்று என்னும் என்னனென்னவெல்லாம் செய்யப் போகுதோ <b>அது அந்த ஆண்டவனுக்கே தெரியா </b>இதுதான் உண்மை !? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->என்ன சொல்லுறீன்க நீங்க.....?


- manimaran - 11-21-2003

அன்பின் யாழ்நேயர்களுக்கு எனது பெயர் மணிமாறன். இது எனது முதலாவது மடல். எனது கருத்துக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் உங்கள் தளத்தில் இணைகின்றேன். உங்கள் கைலாகிற்காக காத்திருக்கின்றேன்.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sOliyAn - 11-21-2003

வணக்கம் மணிமாறன்! தங்களின் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. அதற்கு முதல் கள நிபந்தனைகளை ஒருமுறை வாசித்துவிடுங்கள்.


- இளைஞன் - 11-21-2003

வணக்கம் மணிமாறன்...
வாருங்கள்...

நல்ல நல்ல கருத்துக்களை
அள்ளி அள்ளித் தாருங்கள்
இணைந்திருப்போம்
தொடர்ந்திருப்போம்


- shanmuhi - 11-21-2003

வணக்கம் மணிமாறன்,

தங்கள் வரவு யாழ்களத்துக்கு ஒரு நல்வரவு.
வாழ்த்துக்கள்


- manimaran - 11-22-2003

எனது வரவிற்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். யாழ் இணையத்தளத்தின் கருத்துக்களத்தின் பல்வேறு கருத்துக்களையும் வாசித்தேன். மிக்க சுவாரிசியமாக இருந்தன. கருத்துக்களில் பல ஆழமாயும் அகலமாயும் பல்வேறு பக்கம்களில் நின்றும் அலசிஆராயப்பட்டிருந்தன. உண்மையில் இந்த கருத்துக்களை தனியே யாழ் தளத்தில் நின்று விவாதத்திற்காக மட்டும் அல்லது தனியே எமது வாதத்திறனை வெளிப்படுத்தும் ஒரு களமாக கருதாது இதன் ஆக்கபுூர்வமான கருத்துக்களை எமது சமுதாயத்தினுல் எடுத்துச் செல்லும் திறன்மிக்க ஆளுமையுள்ளவர்களாக நாம் திகழவேண்டும்.