| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 135 online users. » 0 Member(s) | 134 Guest(s) Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,250
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,029
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,117
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| ரணிலும் விலகினார்! |
|
Posted by: yarl - 11-14-2003, 12:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
webulagam.com
அமைதி முயற்சியில் இருந்து ரணிலும் விலகினார்!
வெள்ளி, 14 நவம்பர் 2003
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டுவந்த அமைதி முயற்சியில் இருந்து விலகிக்கொள்வதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறிவிட்டார்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் காரணமாக தாங்கள் மேற்கொண்டுவரும் அனுசரணை முயற்சிகளில் இருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வதாக நார்வே அரசு அறிவித்த சில மணி நேரங்களில் ரணில் விக்ரமசிங்கே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் துவக்கிய அமைதி முயற்சிகளில் இருந்து விலகிக்கொள்வதாகவும், அம்முயற்சிகளைத் தொடரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
அமைதி முயற்சியில் இருந்து தான் விலகிக்கொண்டதை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கையின் மறுசீரமைப்பிற்காக உதவிடும் நன்கொடை நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் நார்வே அமைதிக் குழுவின் வாயிலாக அவர் தெரிவித்துவிட்டதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பேன் என்கின்ற வாக்குறுதியை அளித்து அதன் அடிப்படையில் மாபெரும் வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கே, தான் முன்னெடுத்த அமைதி முயற்சிகளில் இருந்து விலகிக் கொண்டிருப்பதும், புலிகளுக்கும், இலங்கை அரசிற்கும் இடையே அனுசரணையாளராக பணியாற்றிவந்த நார்வே அரசு தற்காலிகமாக தனது முயற்சிகளில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துவிட்டதும் இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பத்திற்கும், நிச்சயமற்ற தன்மைக்கும் வழிகோலியுள்ளது.
இலங்கையில் தேசிய அரசை அமைக்க முயற்சிக்கும் அதிபர் சந்திரிகாவிற்கு தான் ஆதரவளிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிய ரணில் விக்ரமசிங்கே, நாடாளுமன்றத்தில் தனது அரசிற்கு பெரும்பான்மை உள்ளது என்றும், அப்படிப்பட்ட நிலையில் அமைச்சரவையில் சில பதவிகளை பெறுவதற்காக பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியாது என்றும் கூறிவிட்டார்.
|
|
|
| பூண்டின் மகிமை... |
|
Posted by: சாமி - 11-13-2003, 09:39 PM - Forum: மருத்துவம்
- Replies (1)
|
 |
பூண்டின் மகிமை...
- திருமதி. கலையரசி குமரேசன்
பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நாச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லிகிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன.
பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.
காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.
பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.
பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.
நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.
நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.
நன்றி: வெப் உலகம்
|
|
|
| இவை குளிரவைக்கும் பானங்களா? |
|
Posted by: சாமி - 11-13-2003, 09:29 PM - Forum: மருத்துவம்
- Replies (2)
|
 |
பெப்சி, கோகோகோலா உள்ளிட்ட சில குளிர்பானங்களில் அதிக அளவில் நச்சுப்படிவங்கள் உள்ளதாக தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுசூழல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெப்சி உள்ளிட்ட 12 குளிர்பான நிறுவனத் தயாரிப்புகளை உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று மக்களவையில் பல உறுப்பினர்கள் வாதிட்டார்கள்.
இதையடுத்து பெப்சி, கோககோலா பானங்களின் விற்பனை நாடாளுமன்ற வளாக உணவகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அண்ணபல்கலைக்கழகமும் இந்த முடிவை எடுத்துள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசுகளும் மற்றும் மத்திய அரசும் இந்தக் குளிர்பானங்கள் மீதான முழுமையான தடையை விதிக்க பரிசீலித்து வருகின்றன.
பெப்சி, கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப்படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர்பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கலாசாரமயமாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது. ஆனால் இந்தப் பானங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டும் போது பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
பெப்சி, கோககோலா மட்டுமல்ல தம்ஸ் ஆப், செவன் அப், மிரிண்டா, ·பேண்டா, லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது. இந்த நீண்ட வரிசையைப் போலவே இவற்றால் ஏற்படக்கூடிய தீங்குகளும் நீளமானது. ஆனால் இந்தப் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. அந்தளவிற்கு இவை மீதான தாக்கம் ஆர்வம் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்பூடகங்கள் இந்தப் பானங்களின் நுகர்வுக் கலாசாரமயமாக்கலின் முதன்மையான இடம் வகிக்கின்றது.
செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இரசாயன அமிலங்களே இம்மென்பானங்களில் புதுத்துணர்வு தரும் சுவையூட்டிகளாக சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங்கள் பயன்படுகின்றன. பொதுவாக மென்பானங்களில் சிட்ரிக் அமிலம் பாஸ்பரிக் அமிலம் சில சமயங்களில் மாலிக் அல்லது தாத்தாளிக் அமிலங்கள்கூட சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை.
இந்த அமிலங்கள் பற்களில் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன. மென்பானங்கள் குடித்து ஒரு மணிநேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்தவுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான்) மெனபானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும் போது தனியாக வெளியேறுவதில்லை. எலும்புகளிலும் பற்களிலும் இருக்கும் கால்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கால்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம்குன்றி கடைசியில் முறியும் நிலைக்கு போய்விடுகின்றன.
மென்பானங்கள் எல்லாவற்றிலுமே சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு 325 மில்லிலிட்டர் பெப்சியில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையில் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி அளவு என நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது. ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவுடன் மென்பானங்களோடு சேர்ந்து வரும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டால் நிர்ணயித்த அளவைவிட நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும்.
சர்க்கரை அதிக அளவு உடலில் சேருவதை, சர்க்கரை தானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்ஞானி மேஜான் யாட்கின் சர்க்கரையை 'வெள்ளை நச்சு'' என்று வர்ணித்து இருக்கிறார். சர்க்கரையானது பற்களில் பாக்டீரியா கிருமிகள் பெருக வாய்ப்பு அளிப்பதுடன் இதயநோய், தோல்வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இயற்கைச் சர்க்கரையின் சேதாரம் இவ்வளவு என்றால் சிலவகை பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரைகளும் தம்பங்குக்கு தொல்லைகளைத் தருகின்றன. குறைந்த கலோரியைக் கொண்ட டயட் (diet) குளிர்பானங்களில் செயற்கை இனிப்பான அஸ்பாடேம் (Aspaetame) எசல்பேம் (aceslfame) சாக்ரின் (Saccharine) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பாடேம் சர்க்கரையைவிட 200 மடங்கு அதிகான இனிப்பைக் கொண்டதாகும். இவை தலைவலி, ஞாபகமறதி, வயிற்றுபோக்கு, பார்வை மங்கல், குருடு போன்றவற்றை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து அஸ்பாடேம் மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
காபி, தேநீர் போன்றவற்றில் கா·பின் cafein எனும் வேதிப்பொருள் இருப்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் கோககோலா பானத்தின் சுவையை அதிகரிப்பதற்காக கா·பின் பயன்படுத்துவது அதிகம். இது வெளியில் தெரியாத விஷயம். கா·பின் மத்திய நரம்புகளை மிகையாகத் தூண்டிவிடுகிறது. அதிகமான கா·பின் தூக்கமின்மை எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றுக்கு வழிகோலிவிடுகிறது.
மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமூட்டிகள் எவை என்பது பற்றி பாட்டில்களில் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலான சாயங்கள் புற்றுநோய்க்கு காரணமாய் உள்ளன என்பதே உண்மை. தார்ட்ராசின் எனப்படும் ஆரஞ்சு நிற சாயம் தோலில் அரிப்பு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு புற்றுநோய்க்கும் காரணமாகத் திகழ்வதாகக் கருதி இச்சாயத்துக்கு நார்வேயில் தடை செய்யப்பட்டிருக்கிறது. கார்மேசின் (carmoisine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவை நஞ்சடையச் செய்வதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூர் தனது பத்து ஆண்டு சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக கோககோலா, பெப்சி போன்றவற்றுடன் சர்க்கரை அதிகம் கொண்ட பல குளிர்பானங்களை 1972ல் இருந்து கல்வி நிறுவனங்களில் விற்பதற்கு தடை செய்திருக்கிறது.
சமீபத்தில்கூட பிரான்சில் கோககோலா குடித்த பலருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டதால் பிரான்ஸ் தனது நாட்டில் கோககோலவின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. ஆக இந்திய அளவில் கோலா, பெப்சி போன்ற பானங்களுக்கு தடை விதிக்க எடுக்கும் முயற்சி ஒன்றும் புதுமை அல்ல. இவ்வளவு ஆபத்துகளையும் தன்னில் கரைத்துக் கொண்டு வரும் மென்பானங்களை இவ்வளவுநாள் அனுமதித்திருப்பது மோசமானது.
இந்த மென்பானங்கள் மீது தடைவிதித்தல் என்பதை பகிரங்கவிவாதப் பொருளாக்க வேண்டும். இவற்றால் விளையும் கேடுகள் பற்றி அறிவுபூர்வமான விழிப்புணர்வு வெகுசன மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும் உள்ளூர் வளங்களைக் கொண்டு தயாரிக்கும் உள்ளூர் மென்பானங்களில் உற்பத்தியை பெருக்க கொள்கை ரீதியான முடிவுக்கு அரசு முன்வர வேண்டும்.
மதுசூதனன்
நன்றி:ஆறாம்திணை
|
|
|
| திரை மொழி |
|
Posted by: AJeevan - 11-13-2003, 02:07 PM - Forum: குறும்படங்கள்
- Replies (9)
|
 |
<b><span style='font-size:30pt;line-height:100%'>திரை மொழி</b></span>
__________________________________அஜீவன்
<b>[highlight=red:551cd0cc65]திரை.1[/highlight:551cd0cc65]</b>
எந்த ஒரு மொழிக்கும் ஓர் இலக்கண முறை உண்டு.இலக்கணம் தவறி எழுதும்,அல்லது பேசும் ஒருவரது கருத்துகளை மற்றொருவரால் ஒழுங்காக கிரகித்துக் கொள்ள முடியாது.பேச்சு வழக்கில் (அனைத்து மொழிகளிலும்) எல்லோருமே பேசினாலும் அதை அந்த வரையறைக்குள் இருப்பவர்களால் மாத்திரமே முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரே மொழி பேசும் மக்களிடையே வேறுபட்ட ஒயில்களில் (சிலாங்)பேசும் போது,அவர் என்ன சொல்கிறார் என்று புரியவேயில்லை என்று நாமே
ஒருவரது கருத்தை வித்தியாசமாக புரிந்து கொண்ட நேரங்கள் ஏற்படாமலில்லை.
நாம் , நமக்குப் புரிகிறதே என்று எதையாவது தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருப்போம். அது ஒரு சிலருக்கு அல்லது சம்பந்தப்பட்டவருக்கு மாத்திரம் புரியலாம். எல்லோருக்கும் புரிய வாய்ப்பில்லை.எல்லோருக்கும் புரிய வேண்டும் என்றால்,அடுத்தவர் நிலையில் நாம் இருந்து பார்த்தால்தான் புரியும்.
குடும்பங்களில் கூட நாம், "நான் சொல்றது இந்த மர மண்டைக்கு புரியுதேயில்லை" என்று யாராவது ஒருவரை வீடுகளில் வசைபாடுகிறோம்.
ஒரே குடும்பத்தில் இப்படியிருக்கும் போது ,எந்த மொழிக்காரராக இருந்தாலும்,எந்த நாட்டவராக இருந்தாலும் புரியக் கூடிய விதத்தில் உருவாக்கும் ஒரு கலையே சினிமா............அதை புரிய வைப்பதற்கு அதிகூடிய அவதானமும்,கரிசனையும் தேவை.
அந்த சினிமா மொழிக்கென்று ஒரு இலக்கணம் உண்டு.
ஒரு திரைப்படத்தை அல்லது ஒரு குறும்படத்தை உருவாக்க ஒருவர் முயலும் போது அந்த சினிமாவின் இலக்கணம் அவருக்கு சரிவரத் தெரியாது போனால் அவரால் ஒரு முழுமையான படைப்பைத் தருவது சிரமம்.
சினிமா பற்றிய இலக்கணத்தில் தேர்ச்சி பெற்ற, பல கலைகளை ஆட்சி செய்யும் தலைவனே இயக்குனர்.
இயக்குனரைத்
தவிர்த்து
திரைக்கதை எழுதுபவர்
ஒளிப்பதிவாளர்
தொகுப்பாளர்
ஆகியோருக்கும் நிச்சயம் இவ் இலக்கணம் பற்றிய பரந்த அறிவும் , ஆற்றலும் , கலைநயமும் அவசியம்.
சினிமாவில் உள்ள ஏனையோருக்கும் தேவைதான். அது பற்றிய முழு அறிவு மேலே குறிப்பிட்டவர்களுக்கு இல்லாவிடில் அவர்கள் செய்யும் படைப்பு முழு வெற்றியை தராது.
எனவே இது பற்றி தெரிந்து கொள்ள
<span style='font-size:25pt;line-height:100%'>Shots (ஷாட்ஸ்) [பகுதி]</span>
எனும் பகுதியை முதலில் பார்க்கலாம்.
ஒரு திரைப்படத்தின் பல shots கள் சேர்ந்தோ,சில காட்சிகள் சேர்ந்தோ பல் வேறு பகுதிகளில் ஒளிப்பதிவு செய்யப்படும் ஒன்றை ஒரு sequuence ( சீக்வன்ஸ்) [நிகழ்வு] என்று கூறுகிறோம்.
அதாவது
பல (shots)ஷாட்ஸ்களின் கோர்வையை (scene) சீன் என்றும்,
சில அல்லது பல (scene)சீன்களின் கோர்வையை (sequuence)சீக்குவென்ஸ் என்றும்,
சில அல்லது பல(sequuence) சீக்குவென்ஸ்களின் கோர்வையை (film or movie or cinema)திரைப்படம் என்றும் சொல்கிறோம்.
[u]<span style='font-size:25pt;line-height:100%'>Shots (ஷாட்ஸ்) [பகுதி]
</span>
[quote]<span style='font-size:22pt;line-height:100%'><b>close-up shot (அண்மைப்பகுதி)</b>
</span>
![[Image: leo-closeup.jpg]](http://images.google.ch/images?q=tbn:bKlTiwAWQ2kC:www.dicaprio.com/photos_and_movies/young/images/leo-closeup.jpg)
ஒரு கதாபாத்திரத்தின் அல்லது ஒரு பொருளின் அவதானத்தை உருவாக்க CU (closeup) எனும் ஷாட் பயன்படுத்தப்படுகிறது.
![[Image: self-closeup.jpg]](http://images.google.ch/images?q=tbn:2u4avzwf8gwC:windigo.org/self-closeup.jpg) ![[Image: cornish-closeup.gif]](http://images.google.ch/images?q=tbn:wLegqBjm13oC:ase.tufts.edu/cae/conference/cornish-closeup.gif)
உதாரணமாக ஒருவர் நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் போது,அவர் எமது பேச்சை கேட்காமல் எங்கோ அவதானத்தை செலவிடுகிறார் என்றோ, அல்லது அவரது எண்ணம், நிலையை அறிய முடிவதாகவோ (புரிவதாக) எண்ணுங்கள்.
அப்போது அதை அவரது கண்கள் அல்லது அவரது பதட்டம் அல்லது அவரது செய்கை நமக்குக் காட்டிக் கொடுக்கிறது.
அப்போது அந்தப் பகுதிக்கு நம்மை நமது புலன் நம்மை அறியாமலேயே இட்டுச் சென்று அவதானிக்க வைத்து விடுகிறது. அது சாதாரணமாக நமக்கு புரிவதில்லை.காரணம் நாம் அதற்கு பழக்கப்பட்டு விட்டோம்.
ஆனால் ஒரு சினிமாவில், பார்வையாளனுக்கு அப்படியான ஒரு நிகழ்வை உணர்த்துவதற்கு அந்த கதாபாத்திரத்தின் அண்மைப்பகுதியை காட்டினால்தான் புரியும்.
<img src='http://www.yarl.com/forum/files/food.jpg' border='0' alt='user posted image'>
அதுபோலவே ஒரு மேசையில் அழகிய உணவுத் தட்டொன்று இருக்கிறதென்று நினையுங்கள்.அப்போதும் இதே CU (closeup) எனும் ஷாட் பயன்படுத்தப்படுகிறது.
![[Image: closeup.jpg]](http://images.google.ch/images?q=tbn:tqILc_gY4hUC:mcasco.com/images/closeup.jpg) ![[Image: doglip%252001%2520closeup.jpg]](http://images.google.ch/images?q=tbn:dZq_-eG1xtEC:www.mtwthailand.org/Thailand%2520Info/Photos/Animals/doglip%252001%2520closeup.jpg)
ஒரு மனிதருக்காக மட்டுமல்ல , எந்தவொரு அண்மைக் காட்சியில் எதாவது ஒன்றை பார்வையாளனுக்கு உணர்த்துவதற்கு CU (closeup) எனும் ஷாட் பயன்படுத்தப்படுகிறது.
இனி உங்கள் கற்பனையில் எதையெல்லாம் கனவு கண்டு செய்யலாம் என்று பாருங்கள்....................
கனவு தொழிற்சாலை பயணம் தொடரும்............அஜீவன்
<span style='color:red'>(உங்களுக்கு புரியாத கேள்விளைத் தொடுக்கலாம்.எனக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வேன்.)
<img src='http://www.yarl.com/forum/files/ajros.jpg' border='0' alt='user posted image'>
[size=12]திரைக்கலையை உலகுக்களித்த மேதைகளுக்கும்,என் திரை ஆசான்களுக்கும்,நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.</span>
AJeevan
www.ajeevan.com
|
|
|
| மாவீரர் நாள் உரை 2003 |
|
Posted by: yarl - 11-13-2003, 02:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (30)
|
 |
ஒவ்வொருமுறையும் தலைவரின் பேச்சு எதைப்பற்றியதாகவிருக்கும் என ஊடகங்கள் ஆருடம் கூறும்.
நாளொருமேனியாக தினமும் அரசியல் மாறிக்கொண்டிருக்கிறது.இம்முறை ஆருடம் சற்று கடினமானதாகவிருக்கும போல் தெரிகிறது.
எனினும் மாவீரர் நாள் சிறப்புப்பேச்சுக்கு விடயதானம் சந்திரிக்கா அம்மையார் நிறையவே அள்ளி வழங்கியிருக்கிறார்.
லண்டனில் இம்முறை திரு பாலசிங்கம் அவர்கள் வழமைபோல் பேசினால் பேச்சில்
நிறையவே அம்மையார் பற்றிய நகைச்சுவையை பெட்டகம் பெட்டகமாக எதிர்பார்க்கலாம்.
|
|
|
| எனக்கு 20 உனக்கு 18 |
|
Posted by: shanmuhi - 11-13-2003, 10:43 AM - Forum: சினிமா
- Replies (5)
|
 |
A.R.Rahman இசையில் எனக்கு 20 உனக்கு 18 யில் புதிதாக வந்திருக்கும் பாடல்கள் பற்றிய கருத்துக்களைத் தாருங்கள்.
படம் பற்றிய கருத்துக்கள் தருவது...... அது உங்கள் விருப்பம்.
|
|
|
| பாலாவுக்கு மார்க் போட்டதை வாபஸ் வாங்கிய ஆர்.கே. செல்வமணி?! ஒ |
|
Posted by: shalini23 - 11-12-2003, 08:17 PM - Forum: சினிமா
- Replies (4)
|
 |
பாலாவுக்கு மார்க் போட்டதை வாபஸ் வாங்கிய ஆர்.கே. செல்வமணி?!
ஒரு பக்கம் தமிழ்த்திரை சேனல் விவகாரத்தில் சர்ச்சை கிளம்பி ரகளை நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் வாரப்பத்திரிகை ஒன்றில் இப்போதுள்ள இளைய தலைமுறை இயக்குநர்கள் சிலரை வரிசைப்படுத்தி மார்க் போட்டிருந்தார் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி!
அதில் இயக்குனர் பாலா பற்றிக் குறிப்பிடும்போது... அவரது படங்களை நான் பார்த்ததில்லை. ஒரு முறை சந்தித்திருந்தேன்... அவரது கேரக்டரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தொனியில் அட்வைஸிருந்தார்.
பாலசந்தர், பாரதிராஜா மாதிரி இயக்குனர்கள் யாராவது மார்க் போட்டிருந்தால் பரவாயில்லை. இயக்குனராக தோற்றுப்போன செல்வமணி எப்படி மார்க் போடலாம் என்று கொதித்துப் போனவர்களும் உண்டு. ஆனால் பாலா தரப்பில் இதற்கு எந்த பதிலும் இல்லை.
நிலைமை இப்படியிருக்க பிதாமகன் பற்றி ஊரெல்லாம் பேசுகிறார்கள்... பார்த்துவிட்டார்கள். தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க உறுப்பினர்கள் பார்க்க வேண்டாமா என்று பாலாவுக்கு ஒரு வேண்டுகோள் வர... நேற்று மாலை (11.11.2003) சென்னை பிலிம் சேம்பர் திரையரங்கில் இயக்குனர்களுக்காக ஒரு பிரத்யேக ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பாலா.
அந்தக்கால இயக்குனர்கள் தொடங்கி இளைய தலைமுறை இயக்குனர்கள் வரை ஏகப்பட்ட பேர் வந்திருக்கிறார்கள். ஆர்.கே. செல்வமணியும் படம் பார்த்திருக்கிறார்.
படம் முடிந்து வெளியில் வரும்போது கண் கலங்கிய செல்வமணி, "ஸாரி சார் உங்களோட முதல் ரெண்டு படத்தை நான் பார்க்கல. பிதாமகன் ரியலி வெரி சூப்பர். இந்தப் படத்துக்கு அளவுகோளே கிடையாது. இப்ப வர்ற ஆங்கிலப் படங்கள் எதுக்கும் பிதாமகன் குறைச்சலில்லை" என்று பாலாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நெகிழ்ந்திருக்கிறார்.
|
|
|
|