Yarl Forum
பாலாவுக்கு மார்க் போட்டதை வாபஸ் வாங்கிய ஆர்.கே. செல்வமணி?! ஒ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: பாலாவுக்கு மார்க் போட்டதை வாபஸ் வாங்கிய ஆர்.கே. செல்வமணி?! ஒ (/showthread.php?tid=7818)



பாலாவுக்கு மார்க் போட - shalini23 - 11-12-2003

பாலாவுக்கு மார்க் போட்டதை வாபஸ் வாங்கிய ஆர்.கே. செல்வமணி?!


ஒரு பக்கம் தமிழ்த்திரை சேனல் விவகாரத்தில் சர்ச்சை கிளம்பி ரகளை நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் வாரப்பத்திரிகை ஒன்றில் இப்போதுள்ள இளைய தலைமுறை இயக்குநர்கள் சிலரை வரிசைப்படுத்தி மார்க் போட்டிருந்தார் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி!

அதில் இயக்குனர் பாலா பற்றிக் குறிப்பிடும்போது... அவரது படங்களை நான் பார்த்ததில்லை. ஒரு முறை சந்தித்திருந்தேன்... அவரது கேரக்டரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தொனியில் அட்வைஸிருந்தார்.

பாலசந்தர், பாரதிராஜா மாதிரி இயக்குனர்கள் யாராவது மார்க் போட்டிருந்தால் பரவாயில்லை. இயக்குனராக தோற்றுப்போன செல்வமணி எப்படி மார்க் போடலாம் என்று கொதித்துப் போனவர்களும் உண்டு. ஆனால் பாலா தரப்பில் இதற்கு எந்த பதிலும் இல்லை.

நிலைமை இப்படியிருக்க பிதாமகன் பற்றி ஊரெல்லாம் பேசுகிறார்கள்... பார்த்துவிட்டார்கள். தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க உறுப்பினர்கள் பார்க்க வேண்டாமா என்று பாலாவுக்கு ஒரு வேண்டுகோள் வர... நேற்று மாலை (11.11.2003) சென்னை பிலிம் சேம்பர் திரையரங்கில் இயக்குனர்களுக்காக ஒரு பிரத்யேக ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பாலா.

அந்தக்கால இயக்குனர்கள் தொடங்கி இளைய தலைமுறை இயக்குனர்கள் வரை ஏகப்பட்ட பேர் வந்திருக்கிறார்கள். ஆர்.கே. செல்வமணியும் படம் பார்த்திருக்கிறார்.

படம் முடிந்து வெளியில் வரும்போது கண் கலங்கிய செல்வமணி, "ஸாரி சார் உங்களோட முதல் ரெண்டு படத்தை நான் பார்க்கல. பிதாமகன் ரியலி வெரி சூப்பர். இந்தப் படத்துக்கு அளவுகோளே கிடையாது. இப்ப வர்ற ஆங்கிலப் படங்கள் எதுக்கும் பிதாமகன் குறைச்சலில்லை" என்று பாலாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நெகிழ்ந்திருக்கிறார்.


- anpagam - 11-12-2003

அர்ரா அர்ரா அரசியலில இதெல்லாம் சாதாரணம்...


- Paranee - 11-13-2003

உண்மைதான்
குமுதம் புத்தகத்தில்தான் அது வெளியாகியிருந்தது. பார்த்தபோதே நினைத்தேன். இப்படி ஏதாவது நிகழும் என


- AJeevan - 11-14-2003

பரவாயில்லையே, பாலாவாவது தாம் சொன்ன சொல்லுக்கு வருந்தியிருப்பதே பெரிய விசயம்.ஒரு சிலர் அப்படியான நேரத்தில் படத்தைக் கூட பார்க்க போக மாட்டார்கள்.

தவிரவும் பாலாவின் படங்களைப் பார்க்கவில்லையென்றும் நேரடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது உண்மைக் கலைஞனுக்கு மட்டுமல்ல ஒரு மனிதனுக்கேயான அழகு.


- yarl - 11-14-2003

படம் இணையத்தில் பார்த்தேன்..
இசையும் ஒலிப்பதிவும் மிகவும் நன்றாக வந்திருக்கிறது.