Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 383 online users.
» 0 Member(s) | 381 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
Yesterday, 09:07 AM
» Replies: 28
» Views: 10,250
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,027
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,113
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236

 
  C.I.A kappal pakka pona kathi...
Posted by: anpagam - 11-10-2003, 12:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

நன்றி: தமிழ்நாதம் & ரிஷிhttp://host64.ipowerweb.com/~tamilaus/audi...rishie0911.smil
[stream:55a4fdd61f]http://host64.ipowerweb.com/~tamilaus/audio/rishie0911.smil[/stream:55a4fdd61f]

Print this item

  புலிகளுடன் சந்திரிகாவே பேச்சு நடத்தட்டும்: ரணில்
Posted by: yarl - 11-10-2003, 08:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

நவம்பர் 10, 2003
thatstamil.com

விடுதலை புலிகளுடன் சந்திரிகாவே பேச்சு நடத்தட்டும்: ரணில்

கொழும்பு:

விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை அதிபர் சந்திரிகாவே நடத்தட்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.


இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதர் கெபரி லூன்ஸ்டட் , நார்வே நாட்டுத் தூதர் ஹன்ஸ் பராட்கர் ஆகியோரைச் சந்தித்து, தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்துப் பேசியுள்ளார் ரணில்.

அப்போது அவர்களிடம், விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ராணுவத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அது இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறார்.

ராணுவத் துறை தற்போது சந்திரிகாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் , அவரே பேச்சுவார்த்தையை நடத்தட்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இது பற்றி பிரதமர் வாஜ்பாயிடமும் ரணில் பேசியிருக்கிறார். இந்நிலையில் நார்வே தூதுக் குழு இன்று இலங்கை வருகிறது.

இலங்கையில் தேசிய அரசு அமைக்கலாம் என்ற சந்திரிகாவின் யோசனையை ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Print this item

  நீங்களும் ஆகலாம்
Posted by: arun - 11-09-2003, 07:07 PM - Forum: சினிமா - No Replies

கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கோன் ஐஸ் சோனியா அகர்வால். "காதல் கொண்டேன்" படத்தின் மூலம் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்திருக்கும் இவர், இப்போது பயங்கர பிஸி. தெலுங்கு படத்தில் "மாட்லாட" ஹைதராபாத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தவரை தடுத்து நிறுத்தினோம். அவசரத்திலும் அவர் அவசியமானதை விட்டுவிடாமல் பேசினார்.

[Image: album_pic.php?pic_id=59]

இனி அவர்...

பஞ்சாப் மாநிலத்திலுள்ள சண்டிகரைச் சேர்ந்தவள் நான். அளவான குடும்பம். அப்பா, அம்மா, நான், தம்பி மட்டும்தான். எனக்குச் சின்ன வயதிலிருந்தே தீராத ஆசை ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா? பேண்ட், ஷர்ட் போட்டுக்கொள்வது. என் தம்பியின் பேண்ட், ஷர்ட்டை எடுத்துப் போட்டுக் கொள்வேன். இது அவனுக்குப் பிடிக்காது. கழற்றச் சொல்வான். சின்ன விஷயம்... ஆனால், பெரிய சண்டையாகிவிடும்.

அம்மா ஆஷா அகர்வால்தான் எனக்கு சப்போர்ட். நான் சினிமா நடிகையானது, கைநிறைய சம்பாதிப்பது எல்லாமே அவர் தந்த ஊக்கத்தினால்தான்.

மார்ச் 28_ம் தேதி எனக்குப் பிறந்தநாள் வரும். அன்றைய தினத்தை நினைத்தால் துக்கமாக இருக்கும். எனக்கு ஒரு வயது கூடிவிட்டதே என்று நினைப்பேன். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சின்ன சின்ன லட்சியங்களை வைத்துக்கொள்வேன். அடுத்த பிறந்தநாள் வருவதற்குள் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்று தீர்மானம் போட்டு, அதை எப்பாடுபட்டாவது செயல்படுத்திவிடுவேன். காரணம், எனக்கு வைராக்கியம் அதிகம்.

நான் ஒரு சினிமா நடிகை என்பதை நினைக்கும்போது, எனக்குப் பெருமையாக இருக்கும். நல்ல ஆரம்பம் கிடைத்துவிட்டால் நிறைய இளைஞர்களின் கனவுக் கன்னியாகிவிடலாம். நமக்காக ஏங்குவார்கள். நம்மிடம் பேசமாட்டாரா என்று தவிப்பார்கள். ஆட்டோகிராஃப் கேட்பார்கள். கூட்டத்தோடு கூட்டமாய் உரசி, "அந்த நடிகை மீது உரசினேன். இடித்தேன்" என்று சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள்." இந்த கிரேஸ் சினிமாவிலுள்ள ஹீரோவிற்கும், ஹீரோயினுக்கும் மட்டுமே கிடைக்கும். பணம், கார், எதிர்பார்க்காத சம்பளம். வி.வி.ஐ.பிக்களின் நட்பு எல்லாம் நிமிஷமாய் தேடி வந்துவிடும். நான் சினிமாவிற்கு வந்து சில வருடங்களே ஆனாலும், அனுபவம் நிறைய கிடைத்துவிட்டது. அதில் கசப்பான அனுபவமும் உண்டு, இனிப்பான நினைவுகளும் உண்டு.

மாடலிங் மூலம் எனக்கு இந்தக் கதாநாயகி வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தமிழில் "காதல் கொண்டேன்" படத்தில் அறிமுகமாகி "சக்ஸஸ்" "கோவில்" என்று மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டேன். என்னுடைய முதல் ஹீரோ தனுஷ். அவர் ரொம்பவும் ரிசர்வ்டு. ஏதாவது கேட்டால் மட்டுமே பேசுவார். ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் என்று டைரக்டர் குரல் கேட்டுவிட்டால் ஷாட்டில் பிரமாதப்படுத்திவிடுவார்.

"சக்ஸஸ்" படத்தில் ஜூனியர் சிவாஜி துஷ்யந்த் ஹீரோ. இவர் ரொம்பவும் ஜாலி டைப். மிகப்பெரிய நடிகர் சிவாஜியின் பேரன் என்ற பந்தா துளியும் இல்லாமல் யூனிட்டிலுள்ள எல்லோரிடமும் சகஜமாக பழகும் நல்ல டைப். "கோவில்" படத்தில் ஜோடியாக நடிக்கும் சிம்பு, வெரி நைஸ். கலகலப்பிற்குப் பஞ்சமில்லை. ஏதாவது வித்தியாசமாகச் செய்து, தன் ரசிகர்களை அசத்த வேண்டும் என்கிற வெறி அவரிடம் ரொம்ப இருக்கிறது. என்னிடம் ஏதாவது கிண்டலாக பேசிக்கொண்டேயிருப்பார். அதெல்லாம் சொல்ல முடியாது. (சிரிக்கிறார்)

என்னைப் பார்க்க வரும் மீடியாக்காரர்கள் "உங்கள் திருமணம் எப்போது? அரேன்ஜ்டு மேரேஜா, இல்லை லவ் மேரேஜா?" என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம் "ஏன் இப்போதே திருமணம் செய்து கொள்ளச் சொல்லி என்னை விரட்டிவிடலாம்னு பார்க்கிறீர்களா? நடித்து இன்னும் நிறைய பேரைக் கஷ்டப்படுத்த வேண்டாமா?" என்பேன். எனக்குத் திருமணம் எப்போது என்று தெரியாது. இப்போது அதற்கு அவசரமில்லை. அவசியமும் இல்லை.

எனக்கு மேஷ ராசி, பரணி நட்சத்திரம். எனக்கு இன்னும் குருபலன் வரவில்லை. கல்யாண கனவுகளுக்கு தற்சமயம் அவசரமில்லை. ஆனால், வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் நிறையவே உண்டு. இந்த எதிர்பார்ப்பு எனக்கு மட்டுமல்ல... எல்லா பெண்களுக்கும் இருக்கும். நிறைய காதல் கதைகளைப் படித்திருக்கிறேன். நிஜக் காதலர்களையும் சந்தித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை காதலுக்கு அடிப்படையே பரஸ்பர நம்பிக்கை,பாசம், அன்பு, புரிந்துகொள்ளல், விட்டுக் கொடுத்தல் ஆகியவைதான்.

சரி, என் விஷயத்திற்கு வருகிறேன்.

எனக்கு வரும் கணவர் வெளியே செல்லும்போது கோட், சூட், டை அணிய வேண்டும். ட்ரிம்மாக இருக்க வேண்டும். ஆனால், வீட்டிற்கு வந்தவுடன் தலைகீழாக மாறிவிட வேண்டும். கேஷ§வல் டிரஸ் அணிந்து வெற்று உடம்புடன் என்னிடம் பேச வேண்டும். அவரது மார்பில் என் விரல் நகங்களால் கோலமிட்டபடி அவர் பேசுவதை நான் கேட்க வேண்டும்.

ஆபீஸில் நடந்த நிகழ்ச்சிகள், கேட்ட ஜோக்குகள் எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். "போகும்போது ஒரு பொண்ணைப் பார்த்தேன். வாவ்... என்ன அழகு" என்று வெளிப்படையாகப் பேசுபவரைத்தான் எனக்குப் பிடிக்கும்.

அவர் பிசினஸ்மேனாக இருந்தால் நல்லது. நான்கைந்து கார்கள் சொந்தமாக இருந்தாலும், டூவீலர் கண்டிப்பாக அவரிடம் இருக்க வேண்டும். அவர் வண்டி ஓட்ட.. நான் பின்னால் அமர்ந்தபடி அவரை இறு..க்...கி... அணைத்து பேசிக்கொண்டே ஜாலியாக ஊர் சுற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்Ê!

அவர் குண்டாகவும் இருக்கக்கூடாது.. ஒல்லியாகவும் இருக்கக்கூடாது. மீடியமாக, கொஞ்சம் சதைப்பிடிப்புடன் உயரமாக இருக் வேண்டும். ஷாருக்கான் போல ஹேர் ஸ்டைல், ஷாருக் போலவே சிரிக்கும் கண்கள்... அடர்த்தியான மீசை.. கழுத்தில் மெல்லிசாய் ஒரேயரு செயின்.. ஆனால் விரல்களில் மோதிரம் கண்டிப்பாகக் கூடாது...

சுருக்கமாகச் சொன்னால், விக்ரமின் உடல்,ரஜினியின் கண்கள், கமலின் மீசை, ஷாருக்கின் முகம்.. இவையெல்லாம் சேர்ந்த கலவையாக எனக்கு வரும் கணவர் இருக்க வேண்டும்.

இந்தத் தகுதிகளெல்லாம் உங்களிடம் இருந்தால், என்னைப் பற்றி தாராளமாகக் கனவு காணலாம். கண்களில் பரவசம் பொங்கச் சொல்லி முடித்தார் சோனியா அகர்வால்.



நன்றி : குமுதம்

Print this item

  வன்னியும் மின்சாரமும்...
Posted by: kuruvikal - 11-09-2003, 05:46 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (62)

<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/solar_5_19243_200.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/solar_9_19259_200.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/solarKili_19219_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/solarMullai_19223_435.jpg' border='0' alt='user posted image'>

சமாதானம் என்று வருடம் இரண்டு கண்டும் வன்னி மக்கள் மின்சாரம் காணவில்லை...சிறிலங்கா அரசுக்கோ இன்னும் சந்தேகம் தீரவில்லை...ஆனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தனது அயராத உழைப்பால் சூரிய மின் அடுக்குகளைப் பாவித்து வன்னிக் கிராமமெங்கும் ஒளியூட்டுகிறது....!

<b>வாயாரப் பாராட்ட வேண்டிய முயற்சி....!</b>

நாமோ கணணியில் அரட்டை...காதல்.... என்று அடிபட அங்கே நமது சகோதரங்கள் இன்னும் மின் ஒளியில்லாமல்...கேட்டால் போராட்டத்தைக் குறை சொல்வார்....உண்மை அதுவல்ல...போராடும் கரங்களுக்கே...புதிய யுக்திகள் பிறப்பிக்கும் சக்தி பிறக்கும்...முதலாம்...இரண்டாம் உலக யுத்தங்களே மருத்துவமும் இன்னும் பல துறைகளும் வளர வழிவகுத்தன.....நாம் இன்னும் குறைகூறி மற்றவனை மட்டம் தட்டி எம்மை உயர்வாக காட்ட நிற்கிறோமே தவிர சிந்தித்து புரட்சி செய்ய நினைக்கவில்லை...அதுதான் மேற்குக்கும் எமக்கும் இடைவெளி அதிகமாக காரணம்...வன்னி நிச்சயம் புதிய அத்தியாயம் எழுதும்...தமிழனின் உண்மை ஆற்றல் எனித்தான் உலகில் பிரகாசிக்கும்.....!

----------------------
For more detail....
http://www.tamilnet.com/art.html?catid=73&artid=10396

Print this item

  திருமலை - விமர்சனம்
Posted by: Paranee - 11-09-2003, 02:07 PM - Forum: சினிமா - No Replies

காகம் அன்னநடை பழகபுறப்பட்டு தன் நடையும் மறந்த நிலை.. ..

Print this item

  ஜீனும் புரதமும்...
Posted by: kuruvikal - 11-09-2003, 11:11 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

<img src='http://imagecache2.allposters.com/images/146/5560P.jpg' border='0' alt='user posted image'>
Cell(கலம்) to Gene (ஜீன்)

<img src='http://www.thebdg.org/library/feeding/melanogaster.gif' border='0' alt='user posted image'>
பழ ஈ


எமது உடலை ஆக்கும் தகவலை எமது அப்பா அம்மாவிடம் இருந்து கொண்டுவரும் நிறமூர்த்தங்கள்(Chromosomes) அடிப்படையில் DNA எனும் மாமூலக்கூற்றுக் கட்டமைப்பு மற்றும் புரதம் கொண்டு ஆனவை...இந்த DNA இல் தான் ஜீன்கள் இருக்கின்றன..அந்த ஜீன்களின் எண்ணிக்கை மனிதனில் 30,000 (30,ஆயிரம்) ஆகும்....!
சரி... DNA யில் உள்ள ஜீன்கள் எப்படித் தாம் கொண்டுள்ள தகவலைக் கொண்டு கலத்தை (உடலை ஆக்கும் அடிப்படை அலகு) ஆக்குகின்றன... இயக்குகின்றன...ஆம் அதற்குத்தேவை புரதங்கள் எனும் மற்றுமொரு மாமூலக்கூறு...அவைதான் எமது உடலை ஆக்கும் கலத்தை ஆக்குகின்றன இயக்குகின்றன...DNAயில் உள்ள தகவலை சரியாக பெற்று உடலை இயக்குகின்றன....மனிதனில் உள்ள 30,000 ஜீன்களினதும் தகவல்களைக் கொண்டு எமதுடலை ஆக்கி இயக்க 250,000 புரதங்கள் தேவை...அதுமட்டுமல்ல அவை தமக்கிடையே பல வழிகளில் தொடர்புகளை ஏற்படுத்தி பிரத்தியேகத் தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றன....மனிதனில் எல்லா புரதங்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை ஆனால் பழ ஈ (<i>Drosophila melanogaster </i>) என்று ஒரு பூச்சியில் அது கொண்டுள்ள கிட்டத்தட்ட அனைத்துப் புரதங்களையும் (7,000) விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளனர்....இது எதிர்காலத்தில் உயிரியல் விஞ்ஞானம் அதிநவீன கணணிகளை ஆக்க வழி செய்யும் என்று நாம் கருதுகிறோம்...அது மட்டுமல்ல மருத்துவரீதியிலும் உயிரியல் விஞ்ஞான ரீதியிலும் பல நோய்களுக்கான மருந்துகளையும் கண்டுபிடிக்க இவை உதவும் என்பதும் திண்ணம்...! இன்னும் பல அதிசயங்கள் நிகழவும் இவை வழி செய்யும்....!

http://story.news.yahoo.com/news?tmpl=stor.../science_fly_dc
:twisted: Idea :roll: :twisted:

Print this item

  எங்கை இருந்தவையாம்....?
Posted by: shanthy - 11-08-2003, 09:04 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

<span style='font-size:25pt;line-height:100%'>எங்கை இருந்தவையாம்....?</span>

(இன்றைய இலங்கை அரசியலின் மாற்றம் உலகின் கண்களை உறுத்தும் விடயம். அந்த உறுத்தலின் முன் தமிழர் பிரதேசங்கள் போரால் சிதைக்கப்பட்டுக் கிடந்த போதெல்லாம் வாய்மூடிக் கிடந்தோரெல்லாம் இன்று வாய்திறந்து தர்மம் பேசும் வார்த்தை கேட்டு எழுந்த கவியிது.)

குண்டுகள் எம் உச்சி கிழித்த போது
குறுக்காலை போவார்
தொண்டையிலை நிண்டதென்னவாம் ?

குஞ்சுகள் , குழந்தைகள்
என்றெலாம் எம்முயிர்களைக் குடித்தவர்
பசிக்கிவர் அள்ளிக் கொடுத்தல்லோ
அழகு பார்த்தனர்.

ஐயோ கடவுளே !

ஆண்டவர் முன்னாலுமல்லவா
அறுவார் திண்டவை.
அப்பவெல்லாம் அனான் மாமா
எங்கையாம் அடைகிடந்தார் ?

எத்தினை சீவனின் எதிர்காலம் தின்றவள்
கூட்டாய் இன்று உலகெலாம்
ஒண்டா வருகினமாம்.
உவையெல்லாம் இதுவரை
எங்கை இருந்தவையாம்....?

'வலுவாய் நாமெல்லாம் கவனிக்கிறோம்"
இந்த வாய்களுக்கு இதை விட
வேறுவார்த்தை இல்லைப்போலை....!

அட வெறுவாய்க் கெட்டவரே !
இதுவாயொரு சொல் இல்லையென்றால்
நீரெல்லாம் வெறுவாய் தான் போம்....!

வல்லோராய் இருந்திட்டால்
எச் சொல்லாயினும் அடுக்குமோ....?

வையத்தை ஆழுகின்ற நாயகனாய்
வாங்கிக் கட்டுறது காணாமல்
மற்றவன் வேலிக்குள்
ஏனாம் தலை நீட்டல்....?

வேலிக்குக் காவலாய்
ஓணானை வைக்க
இங்கெவரும் கூலிக்காயில்லை.
கோபி மாமா உங்களுக்கும் தான்
இது நோபல் பரிசு வெல்லும்
நு}தனமில்லை.

'ஆடுகள் நனைகிறது
ஓநாய்கள் அழுகிறதாம்"
எங்களுக்கும் தெரிஞ்சகதை.
கழுகுகளின் பார்வைகளில்
பயங்கரமாய் நாங்களெல்லாம்.
புறாக்களை யாருமே
கண்டு கொள்வதாயில்லை.

05.10.03.

Print this item

  வண்ணை தெய்வத்தின் யாழ்ப்பாணத்து மண் வாசனை !
Posted by: sandiya - 11-08-2003, 07:42 PM - Forum: நிகழ்வுகள் - No Replies

<b>வண்ணை தெய்வத்தின் யாழ்ப்பாணத்து மண் வாசனை நூல் அறிமுகவிழா (09.11.03) நாளை மாலை 3.00 மணிக்கு ஜேர்மனி டோட்மூண்ட்டில் நடைபெறயிருப்பதற்கு எனது வாழ்த்துக்கள். </b>

Print this item

  என் நாட்குறிப்பில்கிறுக்கியது
Posted by: aathipan - 11-08-2003, 06:33 PM - Forum: கவிதை/பாடல் - Replies (135)

<img src='http://www.appusami.com/HTML/htmlv56/images/jothika.gif' border='0' alt='user posted image'>

நீ கொஞ்சியதையும்
கோபங்கொண்டதையும்
கெஞ்சி விளையாடியதையும்
நினைத்து என் நாட்களைக்கடத்துகிறேன்..
எப்போது வருவாய் நீ மீண்டும்
என்னுடன் கோபங்கொள்ள....

Print this item

  The Hindu
Posted by: yarl - 11-08-2003, 07:10 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

thatstamil.com

ஜெ. தோல்வி அடைவார்: என்.ராம் ஆவேசம்

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா தனது செயல்களில் நிச்சயம் தோல்வி அடைவார். அவரது சவாலை சந்திக்க இந்து நாளிதழ் தயாராக இருக்கிறது என்று இந்து நாளிதழின் தலைமை ஆசிரியர் என்.ராம் மிகவும் ஆவேசமாக கூறியுள்ளார்.


இந்து பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து போலீஸார் தேடுதல்வேட்டை நடத்தி விட்டுச் சென்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த என்.ராம், இது என்ன விளையாட்டு? எதற்காக காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்? யார் அவர்களை ஏவி விட்டது?

ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்றால் என்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகவே கூறியுள்ளது. அது கூடவா காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாது?

இங்கே கையை வீசிக் கொண்டு சில அதிகாரிகள் வந்தனர். கைது செய்ய வந்ததாகக் கூறினர். வாரண்ட் எங்கே என எனது நிருபர்கள் கேட்டபோது, வியர்த்து விறுவிறுத்துப் போய் பேயடித்த முகத்துடன் திரும்பி ஓடினார்கள்.

தலைமை நிருபர் ஜெயந்த்தின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியை மிரட்டியுள்ளனர். பெட்ரூம் எங்கே உள்ளது, அதைத் திறந்து காட்டுங்கள் என்று அவரிடம் அநாகரிகமாக பேசியுள்ளனர். ஜெயலலிதா ஆட்சியில் போலீஸ் அநாகரீகம் உச்சத்தை அடைந்துவிட்டது.

இந்த தவறான செயலுக்குக் காரணமானவர்கள் கண்டிப்பாக அதற்கான விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் புகார் செய்யவுள்ளோம். இதை சட்டரீதியில் இந்து சந்திக்கும். யாருக்கும் எதற்காகவும் பயப்பட மாட்டோம்.

அரசிடம் எந்தவித முறையீட்டையும் செய்யப் போவதில்லை. நீதிமன்றத்தை அணுகுவோம். அதேபோல முன் ஜாமீன் கேட்கவும் போவதில்லை. அவர்கள் கைது செய்யட்டும், என்னதான் செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்ப்போம். இந்த விளையாட்டுக்கு நானும் தயார் என்றார்

Print this item