![]() |
|
எங்கை இருந்தவையாம்....? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: எங்கை இருந்தவையாம்....? (/showthread.php?tid=7837) |
எங்கை இருந்தவையாம்....? - shanthy - 11-08-2003 <span style='font-size:25pt;line-height:100%'>எங்கை இருந்தவையாம்....?</span> (இன்றைய இலங்கை அரசியலின் மாற்றம் உலகின் கண்களை உறுத்தும் விடயம். அந்த உறுத்தலின் முன் தமிழர் பிரதேசங்கள் போரால் சிதைக்கப்பட்டுக் கிடந்த போதெல்லாம் வாய்மூடிக் கிடந்தோரெல்லாம் இன்று வாய்திறந்து தர்மம் பேசும் வார்த்தை கேட்டு எழுந்த கவியிது.) குண்டுகள் எம் உச்சி கிழித்த போது குறுக்காலை போவார் தொண்டையிலை நிண்டதென்னவாம் ? குஞ்சுகள் , குழந்தைகள் என்றெலாம் எம்முயிர்களைக் குடித்தவர் பசிக்கிவர் அள்ளிக் கொடுத்தல்லோ அழகு பார்த்தனர். ஐயோ கடவுளே ! ஆண்டவர் முன்னாலுமல்லவா அறுவார் திண்டவை. அப்பவெல்லாம் அனான் மாமா எங்கையாம் அடைகிடந்தார் ? எத்தினை சீவனின் எதிர்காலம் தின்றவள் கூட்டாய் இன்று உலகெலாம் ஒண்டா வருகினமாம். உவையெல்லாம் இதுவரை எங்கை இருந்தவையாம்....? 'வலுவாய் நாமெல்லாம் கவனிக்கிறோம்" இந்த வாய்களுக்கு இதை விட வேறுவார்த்தை இல்லைப்போலை....! அட வெறுவாய்க் கெட்டவரே ! இதுவாயொரு சொல் இல்லையென்றால் நீரெல்லாம் வெறுவாய் தான் போம்....! வல்லோராய் இருந்திட்டால் எச் சொல்லாயினும் அடுக்குமோ....? வையத்தை ஆழுகின்ற நாயகனாய் வாங்கிக் கட்டுறது காணாமல் மற்றவன் வேலிக்குள் ஏனாம் தலை நீட்டல்....? வேலிக்குக் காவலாய் ஓணானை வைக்க இங்கெவரும் கூலிக்காயில்லை. கோபி மாமா உங்களுக்கும் தான் இது நோபல் பரிசு வெல்லும் நு}தனமில்லை. 'ஆடுகள் நனைகிறது ஓநாய்கள் அழுகிறதாம்" எங்களுக்கும் தெரிஞ்சகதை. கழுகுகளின் பார்வைகளில் பயங்கரமாய் நாங்களெல்லாம். புறாக்களை யாருமே கண்டு கொள்வதாயில்லை. 05.10.03. - kuruvikal - 11-08-2003 புலியோடு பேசினால் அச்சா என்றும் புலியோடு மிரண்டால் சாச்சா என்றும் பேதலிப்போருக்கு நல்லதோர் கவிதையை நயமாய் உரைத்தீர்கள் நன்றி....! எனியாவது உளறமுதல் உணரட்டும் பட்டதுகளை பட்டியலிட்டு பாடம் படித்து விழிக்கட்டும்...! புலத்திலும் சரி தாயகத்திலும் சரி விழிபடாத குருட்டுணர்வு தேவையில்லை...! விழித்து உணர் தெளிவு கொண்டு வீறிட்டெழுவாய்...! உரிமை என்பது பச்சோத்தியாய் வாழ்வதல்ல உணர்வாய்...! மனிதன் மனிதனாய் வாழ்வதற்கு உரிமை வேண்டும்...! தெளிந்து கொள் கொள்கை மாறாய்...! இன்றேல் பச்சோந்தியாய் நீயிரு மனிதருள் கலக்க நினையாதே...! அது உன் தனித்துவம் அப்பட்டமாய் பகர உதவும்...! - aathipan - 11-09-2003 <img src='http://www.tamilcanadian.com/eelam/hrights/image/story/SU980620142921N1512.JPG' border='0' alt='user posted image'> எங்கிருந்தீர்கள் பாவிகளே நீங்கள்அனைவரும் எங்கிருந்தீர்கள்.... இத்தனை நாளாக ஏன் எங்கள் குக்குரல் கேட்கவில்லை....... எத்தனை கொலைக்கள் எத்தனை அடக்குமுறைகள்..... யாரும் வாராரோ.. யாரும் கேட்காரோ..என்று நாங்கள் உரக்க அழுதபோது நீங்கள் எல்லாம் திரும்பிப்பார்திருப்பீர்களா? ஒரு தடவை.... எங்களைக்கொன்றவன் சொன்னதையெல்லாம் கேட்டு... கொழும்புடன் திரும்பிச் சென்றீர்கள்... அருகில் வந்து பார்த்தீர்களா எங்கள் கண்ணீரை. பிணமாகிப்போனோமா என்று நாடிபிடித்துப்பார்க ஏன் தோன்றவில்லை.... சிறுபான்மை என்றால் உலகில் அநாதைகளா? குரள்வளைகள் நசுக்கப்பட்டு பிணமாய் மிதக்கையிலே இந்தியாவும் தான் சேர்ந்து கொண்டது. தன் பங்கிற்கு.... தங்கள் நாட்டின் கொள்கையாம் நாம் அடிமையாக இருப்பது.... பத்திரிகை சுதந்ததிரம் மறுக்கப்பட்டபோது கூட நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையே... ஒரேதடவவையில் அழித்தால் உலகம் அறிந்துவிடும் என்றோ என்னவோ ஒவ்வொரு நாளும் விரும்பியபடி கொலைகள்.... கற்பழிப்புகள்.... அப்பொழுதெல்லாம் கூவிக்கூவி அழைத்தோம் ஐயோ பாவம் என்று பார்த்திருப்பீர்களா? வன்முறைக்குழுகள் என்று தடைகள் வேறு.... எம்மை அழிக்க ஆயுதம் வேறு கொடுத்தீhகள்... இரத்தம் தோய்ந்த எங்கள் முகத்தில் வடிந்த கண்ணீரைத்துடைக்க ஓடிவந்தது நோர்வேதான்.... யாரென்றே தெரியாது.... ஆனால் அன்புடன் அரவணைத்தார்கள் மிரட்டல்கள் வந்தும் ஓதுங்கவில்லை அவர்கள்...... இன்று நீங்கள் எல்லாம் திரும்பிப்பார்கிறீhகள் உற்று நொக்குகிறீகளாமே.... எதற்காக.. - இளைஞன் - 11-12-2003 சாந்தி அக்கா களத்தில் இட்ட மூன்று கவிதைகளையும் வாசித்தேன். மூன்றுக்குள்ளும் மொழிநடையில் ஒற்றுமை உண்டு. ஒரே ரகம்! வெவ்வேறு திசை நோக்கிய கவிதைகள். சாடுகிறீர்கள் சாட்டையால் அடிக்கிறீர்கள்! திட்டுகிறீர்கள், புலம்புகிறீர்கள், சாபமிடுகிறீர்கள்! வித்தியாசமாகத்தான் இருக்கு! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->தொடர்க. |