![]() |
|
என்ன இது.....? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என்ன இது.....? (/showthread.php?tid=7805) |
என்ன இது.....? - shanthy - 11-14-2003 என்ன இது.....? வந்தீர் வாசலெங்கும் பூ முளைக்கப் புன்னகையால் வரவேற்றோம். இதுவரை வந்து போனோர் போல் இருக்கீர் நீரென்று இறுமாந்தோம். இடிபாடுகளின் நடுவிருந்தும் மரநிழல்கள் தந்த நிழல் வாழ்வினி இல்லையென்றும் விடிபொழுது ஒவ்வொன்றும் இயல்பாக விடியுமெங்கள் இயல்பான காலைகள் இனியென்றும் எமக்கென்றும் எத்தனையோ நம்பிக்கைகள் எல்லாமே பொடியாகி..... நடுவழியில் கையை உதறிக்கொண்டு 'நாங்கள் நாடு திரும்புகிறோம் ஆனாலும் அமைதி முயற்சியைக் கைவிட மாட்டோம்" என்ன இது.....? புயலொன்று எம்மில் மையமிட நீர் போகிறீர்.....! அயலார் அதிசயப்படுவதாய் மனசெங்கும் மகிழ்வுடன்..... அங்கங்கே சில நாட்டில் அவசரச் செய்திகளாய் நாமே தலைப்பாகி..... 'இப்படித்தான் ஒருநாள் எமைவிட்டுப் போவீர்" ஆரூடம் சொன்ன ஆரூடர் வாய்மொழி பொய்க்காமற் போகும்படியாய் நீரும் போகிறீர். எல்லாம் எதிர்பார்த்தோம் எங்களை விட்டு நீரும் ஒதுங்குவீர் என்றொரு பொழுதும் எண்ணி நாம் இருக்கவில்லை. பயமெங்கள் உயிர் பிய்த்து எறிகிறது பாழ்படுவார் துயர் தந்து எமைக் கொன்று தீயிட்ட கொடுநாட்கள் நினைவாகி நெஞ்செங்கும் தீப்பற்றி எரிகிறது. என்ன செய்வோம் - இல்லை என்ன செய்ய.....? 'தாய் பிள்ளையானாலும் வாய் வயிறு வேறாமே" நீ மட்டும் விலக்கா என்ன.....! போகட்டும் பறவாயில்லைச் சென்று வருக. எங்கள் விதி இதுதான் பாலஸ்த்தீனர் போலெங்கள் கைகளும் கல்லெறியும் அராபியர் போலெங்கள் அர்ச்சுனர்கள் போவார்கள் என்று மட்டும் எண்ணாதீர். எரிமலைகள் ஒருபோதும் ஓய்ந்து போவதில்லை. பனிமலையின் சுவர் கடந்து எங்கள் பக்கம் வந்த நோர்வேயே ! ஈராண்டு நம்முறவின் இறுக்கத்தின் ஈரமுன் உயிரிருக்கும் நம்புகிறோம். நன்றிகள் போய் வருக. அழைப்புண்டு உமக்கு அழைப்பிதழ் அனுப்புவோம். மீண்டும் வருக. கம்பள விரிப்புகள் காத்திருந்து வரவேற்கும் வருக மீண்டும். 14.11.03. |