Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தைகள் சரியான வழியில் தான் வழிநடத்தப்படுகிறார்களா?
#1
<img src='http://first-year.adoption.com/img/child.jpg' border='0' alt='user posted image'>

எந்தக்குழந்தையும்
நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவை நல்லன ஆவதும்
தீயன ஆவதும் அன்னை வளர்ப்பினிலே

எம் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்படுகிறார்களா? சின்னச்சந்தேகம்.

நாங்கள் பத்தாம் வகுப்பு படித்தபின்தான் முழுக்கால்சட்டை அணிந்ததோம். பன்னிரண்டு முடித்தபோது தான் கைகளில் கடிகாரம் கட்டிமகிழ்ந்தோம். பெரியவர்களுடன் இணையாக நின்று பேசியது இல்லை. இதுவெல்லாம் இன்றை சந்திததியிடம் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் குறைந்த பட்ச்சம் பண்பாடு கற்றுத்தரப்படுகிறதா? கேள்விக்குறியாக உள்ளது.

அன்று ஒரு திருமணவீட்டிற்குச்சென்றிருந்தேன் எல்லோரும் அரட்டை அடித்தபடி இருந்தனர். முதல் நாள்தான் திருமணம் நடந்திருந்தது. என்னால் அன்று போக முடியவில்லை. மறுநாள் போயிருந்தேன். அங்கே பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞி புதிதாய் திருமணமான தம்பதியினரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள். "என்ன நேற்றுத்தானே முதல் தடவை இதுக்கு முன்னாடி தனியா ஏதும் செய்யவில்லையே?" பாவம் புதுத்தம்பதிகள் வாயடைத்துப்போனார்கள். என்னவென்று சொல்லுவார்கள். இப்படி ஒரு கேள்வி சின்னப்பெண்ணிடம் இருந்து வரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அந்தப்பதினாறு வயது இளம் குமரியின் தாய் தந்தை இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தம் குழந்தை ஏதோ சாதனை செய்தது போலவும் ஏதோ அந்த புது ஜோடியை பேசமுடியாது வாயடைக்கசெய்தது பெரிய திறமை போலவும். பெருமையாகப்பேசினார்கள்.
பல குழந்தைகள் இப்படித்தான் இன்று எதை எங்கு யாரிடம் பேசுவது என்று தெரியாமல் பேசுகின்றார்கள்.

சிலர் வீட்டுக்குச் சென்றால் குழந்தைகளிடம் பேசவே பயப்பிட வேண்டி உள்ளது. ஏனென்றால் அவைகள் ஏடாகுடாமா பேசிவிட வாய்புள்ளது. ஒரு நன்பன் இப்படித்தான் விருந்தொன்றிற்குச்சென்ற போது அந்தவீட்டு குழந்தைகள் இவனை கருங்குரங்கு என்று தமக்குள் பேசி சிரித்துள்ளார்கள். பாவம் நன்பன் அவன் கொஞ்சம் கறுப்புத்தான் அதற்காக இப்படி குழந்தைகளிடம் எல்லாம் அவமானப்பட வேண்டுமா?. வெளிநாட்டில் மட்டுமல்;ல உள்ளுரிலும் சில வீடுகளில் பெற்றோரே குழந்தைகளிடம் பேச பயப்படுகின்றனர். அவர்கள் பெரிய புகழ்பெற்ற பாடசாலைக்;குச்சென்று எல்லா கெட்டவார்த்தைகளையும் கற்றுவைத்திருக்கின்றன. அது மட்டுமல்ல சில சமிக்கைகள் கூட செய்கின்றன. குழந்தைகளைப்பார்த்தால் பெரியவர்களைவிட கொஞ்சம் அதிக மரியாதை கொடுக்கவேண்டும் போல் உள்ளது. இல்லை என்றால் அவமானம்தான்.

குழந்தைகள் தமிழ் பேச வேண்டும் தமிழில் எழுத வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போல நல்ல பண்பாடு உடையவர்களாய் இருக்கவும்வேண்டும். உங்கள் குழந்தைகள் தலைவாருவது இல்லையா?. முடிக்கு வண்ணம் புூசுகிறார்களா? அடிக்கடி ஆங்கிலத்தில் கெட்டவார்த்தை பயன்படுத்துகிறார்களா? கால்சட்டையை கிழித்துவிட்டு நாகரிகம் என்கிறார்களா? சாமி கும்பிடுவதை கிண்டல் செய்கின்றனவா? அப்படி யென்றால் உங்கள் குழந்தை நாளை உங்களுக்கே தலைவலியாய் அமையலாம்.

குழந்தைகள் சரியான வழியில் தான் போகிறார்களா? என பெற்றோர் கண்காணிக்கவேண்டும். தவறாக இருப்பின் நல்வழிப்படுத்த முனைய வேண்டும். நல்ல சமுதாயம் அமைய பெற்றோரின் பங்கு இன்றியமையாதது.
Reply
#2
உங்கள் கருத்துக்களுக்காக காத்திருகிறேன்
Reply
#3
கருத்துக்கூறினால் உங்கள் கருத்துக்காக நான் எழுதவில்லை என்று கூறமாட்டீர்களே.
ஏற்கனவே அஜீவன் வாங்கி கட்டிவிட்டார் அது தான் பயமாக இருக்கிறது
Reply
#4
அன்பின் நன்பா

நான் பகிரங்கமாய் மன்னிப்புக்கேட்டுவிட்டேன்.

இனி அப்படி நடக்காது. நீங்கள் ஒருதடவை அவற்றை முழுவதுமாக படித்துப்பாருங்கள். என்னையும் புரிந்து கொள்ளுங்கள்
Reply
#5
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->அன்பின் நன்பா  

நான் பகிரங்கமாய் மன்னிப்புக்கேட்டுவிட்டேன்.

இனி அப்படி நடக்காது. நீங்கள் ஒருதடவை அவற்றை முழுவதுமாக படித்துப்பாருங்கள். என்னையும் புரிந்து கொள்ளுங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நல்ல திருத்தம்.
Reply
#6
ஆதிபன்,
உங்கள் வெளிப்படையான மனதைப் பாராட்டுகிறேன்.தவறு செய்திருந்தாலும் அதை உணர்ந்தால் மன்னிப்புக் கோருவது நல்ல மனப்பாண்மை.அதே நேரம் சில விடயங்கள் தவறே இல்லையாகினும் தவறாகத் தோன்றும் போதும் பொறுத்துக்கொள்வதும் போற்றப்பட வேண்டியது.

சரி உங்கள் தலைப்பிற்குள் வருவோம்..

<b>குழந்தைகள் என்று நீங்கள் கூறுவது எத்தனை வயது வரை?
வளர்ந்தவர் என்று நீங்கள் கூறுவது எத்னை வயது முதல்?</b>

என்னைப் பொறுத்தவரை இவை முக்கியமான இரண்டு கேள்விகள்.

காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சென்பர்.இதை மீறிய செயல்களும் உலகில் நடக்கத்தான் இருக்கின்றன்.இருந்தாலும் நீங்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது நாங்களும் கலந்துரையாட சில உதவிகள் கிடைக்கும்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#7
http://www.yarl.com/articles.php?articleId=139
ஆதி! இதில் சில கருத்துகள் உண்டு.. அதுபற்றி தங்கள் கருத்தைகண்டு தொடர்கிறேன்.
.
Reply
#8
இந்திய ஜனாதிபதி அப்துல் காலம் அவர்கள் தன் கவனத்தை முழுவதுமாக பள்ளிக்குழந்தைகள் மேலும் கல்லூரி மாணவர்கள்மேலும் செலுத்துகின்றார். எந்த ஒரு மாநிலத்திற்குச்சென்றாலும் அங்கு குழந்தைகளைக் காண அவர் தவறுவதில்லை. அவர் இந்திய நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடம் தான் இருக்கிறது என்;ற உண்மையை அறிந்து செயற்படுகிறார். இதை முன்னுதாரணமாக எடுத்து நாமும் எமது இளைய சமுதாயத்தின் மேல் எம் கவனத்தை செலுத்துவோமாகில் நாளை ஒரு நல்ல சமுதாயத்தை வளர்தெடுக்க முடியும்.
Reply
#9
அம்மா அப்பா ஒழுங்கா இருந்தா பிள்ளையும் ஒழுங்கா இருக்கும்....அதை விட்டுட்டு உலகமே அறியாமல் பிறக்கும் பிள்ளைக்கு எப்படித் தெரியுதாம்....நல்லதும் கெட்டதும்.!....அதை யாராம் தெளிவா எடுத்துரைக்க வேண்டியவை....அவைக்கே நல்லது எது கெட்டது எது என்று தெரியாமல் இருக்கினம் அதுக்க பிள்ளைகளிடம் எப்படி நல்லதையும் கெட்டதையும் எதிர்பார்ப்பினம்...! முதலில அப்பா அம்மா அறியுங்கோ நல்லது எது கெட்டது எதண்டு பிறகு பிள்ளையிட்ட புகுத்துவன் எது தேவை எண்டதை...அதை விட்டுட்டு உங்கட பிழைகளை ஏன் அந்தச் சிறுசுகள் மேல பழியாய் போடுறியள்....!

:evil: :twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
நல்ல சமுதாயம் உருவாக நல்ல கல்வி எவ்வளவு அவசியமோ அதேபோன்று நற்;பண்பும் அவசியமாகிறது. நல்ல கல்வி இருந்தும் ஒருவர் நற்பண்பற்றவாராயின் அவரை யாரும் மதியார். இதே போல் ஒருவர் படிப்பறிவே அற்றவராயினும் நட்பண்புள்ளவரை உலகம் மதிக்கிறது.

இந்த நற்பண்பு அவர் அவர் வாழும் குடும்பம், பள்ளி, பழகும் நன்பர்கள், உறவினர்கள், மற்றும் சுழ உள்ள சமுதாயம் போன்றவற்றிக்கு ஏற்ப மாறுபடுகிறது. பெரும்பாலான இன்றை குடும்பங்கள் இந்த நற்பண்பை கற்றுக்கொடுக்க முயற்சி எதுவும் எடுப்பது இல்லை. இது ஒரு நிலையில் அந்தக்குடும்பத்தை மட்டும் பாதித்தாலும் அந்தச் சமுதயாத்தையும் மெல்ல மெல்ல அரிக்க ஆரம்பிக்கிறது. அந்த சமுதாயம் அதன் நிலையைவிட்டு மாறுபடுகிறது. அதன் தனித்தன்மை கலைந்துபோகிறது. அதன் கலாச்சாரம் காணாமல் போகிறது.

எமது தமிழ் சமுதாயம் பாதுகாக்கப்படவேண்டுமாயின் எதிரிகளுடன் போரிடுவதுடன் எமது இளைய சமுதாயத்தையும் சரியான வழியில் வழிநடத்த வேண்டும். இந்த இளைய சமுதாயம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அதை வழிநடத்தும் பொறுப்பு எமக்கு உண்டு.
Reply
#11
[quote="kuruvikal"]அம்மா அப்பா ஒழுங்கா இருந்தா பிள்ளையும் ஒழுங்கா இருக்கும்....அதை விட்டுட்டு உலகமே அறியாமல் பிறக்கும் பிள்ளைக்கு எப்படித் தெரியுதாம்....நல்லதும் கெட்டதும்.!....அதை யாராம் தெளிவா எடுத்துரைக்க வேண்டியவை....அவைக்கே நல்லது எது கெட்டது எது என்று தெரியாமல் இருக்கினம் அதுக்க பிள்ளைகளிடம் எப்படி நல்லதையும் கெட்டதையும் எதிர்பார்ப்பினம்...! முதலில அப்பா அம்மா அறியுங்கோ நல்லது எது கெட்டது எதண்டு பிறகு பிள்ளையிட்ட புகுத்துவன் எது தேவை எண்டதை...அதை விட்டுட்டு உங்கட பிழைகளை ஏன் அந்தச் சிறுசுகள் மேல பழியாய் போடுறியள்....!

[quote]

வயதான குதிரையை ஓட்டத்திற்கு பழக்கி எடுப்பதைவிட சின்னவயது குதிரையை இலகுவாக பழக்கிக்கொள்ளலாம்.

சின்னக்குழந்தைகள் கபடம் அற்றவர்கள். அவர்களுக்கு தாய்மொழியுடன் நல்ல பண்புகளையும் கற்றுக்கொடுக்கலாம் என்பது என் கருத்து.
Reply
#12
<!--QuoteBegin-veera+-->QUOTE(veera)<!--QuoteEBegin-->ஆதிபன்,

<b>குழந்தைகள் என்று நீங்கள் கூறுவது எத்தனை வயது வரை?
வளர்ந்தவர் என்று நீங்கள் கூறுவது எத்னை வயது முதல்?</b>

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரியான வயது எது என்று என்னால் சரியாக வரையறுத்துக்கூற முடியவில்லை. எந்த வயதுள்ளவர்களை எல்லாம் வழிநடத்தமுடியுமோ அவர்களை எல்லாம் குழந்தைகள் என பொதுவாக சேர்த்துள்ளேன்
Reply
#13
சில அம்மா அப்பாக்கள் நல்ல பண்பாடு உடையவர்களாகவே தெரிகிறார்கள். ஒரே குழந்தை என்பதாலோ பணம் சேர்க்கும் ஆவலிலோ குழந்தைகளை வழிநடத்த மறந்து விடுகிறார்கள்.

மற்ற அம்மா அப்பாக்கள் கொஞ்சம் மோசம். அவர்கள் தவறான பாதையில் குழந்தைகளை வழிநடத்துகிறார்கள்.

இந்த இருவகையான அம்மா அப்பாக்களிடம் இருந்தும் குழந்தைகளை பெற்று கொஞ்ச நேரம் தமிழ்ப்பண்பாடு சொல்லிக்கொடுத்தால் என்ன?

தமிழ் சொல்லிக்கொடுக்கிறோம்.
பாட்டுசொல்லிக்கொடுக்கிறோம்.
ஏன் பண்பாடு சொல்லிக்கொடுக்கமுடியாதா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?
Reply
#14
அதீபன் உங்கள் ஆதங்கம் போல் எமக்கும் இருந்தது இதைப் பற்றி பழைய களத்தில் ஒரு முறை காரசாரமான விவாதம் கூட நிகழ்ந்தது....
பண்பாடு என்பது சொல்லிக் கொடுத்து வரும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் சிரமம்.....பெற்றோருடன் பிள்ளை வாழும் சூழல் மற்றும் பிள்ளை பழகும் மற்றைய சூழல்களின் தாக்கம் எப்படியும் பிள்ளையிடம் இருக்கும் காரணம் குழந்தைகள் அவதானிப்பின் மூலமே முதலில் பல விடயங்களைத் தெரிந்து கொள்ள முனைகின்றனர்....அதுதான் சொல்வார்கள் குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும் இடம் கொடுக்காதே என்று.......அது மட்டுமன்றி அவர்களுக்கு பகுத்தாயும் திறனும் எதைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அறிவும் கிடையாது...அதை நாமும் எதிர்பார்க்க முடியாது.....ஆனால் அதைக் கொடுக்க வேண்டியவர்கள் பெற்றோர்...அதுவும் புலத்தில் இது விடயத்தில் நாம் பாடசாலைகளை அணுக முடியாது.....கேள்வி என்ன என்றால் இன்றைய நவீன தலைமுறைப் பெற்றோரில் எத்தனை பேர் தமது சமூகப் பண்பாடு பழக்கவழக்கத்தை அப்படியே தெரிந்து வைத்திருக்கின்றனர்...எத்தனை பேர் நாகரீகம் என்றும் எதிர்காலம் என்றும் இரண்டும் கெட்டான் நிலையில் வாழ்கின்றனர்...பெற்றோரே தெளிவில்லாத ஒரு நிலையில் வாழும் போது... பிள்ளைகளிடம் எமது பண்பாட்டைப் புகுத்தென்றால் யார் அதைச் செய்வது....?????????!

பெற்றோரிடம் தெளிவான சமூகப் பார்வையும் சரியான திட்டமிடலும் அவசியம்...அந்தளவில் எத்தனை ஆண் பெண் சோடிகள் பெற்றோர் ஆகத் தகைமை உடையவர்கள்...சும்மா காதல் அது இது என்று எவரும் திருமணம் செய்யலாம்...ஆனால் சமூகப் பொறுப்புள்ள பெற்றோராக அவர்கள் வரமுடியுமா என்பதை யார் தீர்மானிப்பது.....????இன்று எம்மைப் பார்த்தால் நாம் எமது பெறோரின் சீரிய வழிகாட்டலில் வளர்ந்தோம்...விடுதலைப் புலிகளை இன்று உலகமே போற்றுகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள கட்டுப்பாடும் ஒழுக்கமுமே...அதை பல சர்வதேசப் படைகளிடமே காண முடிவதில்லை என ஒரு சர்வதேச நிறுவனம் கூட வியந்து கூறியிருந்தது.....!...காரணம் சீரிய தலைமையும் வழிநடத்தலுமே.....குடும்பமும் ஒரு இயக்கம் போன்றதுதான்...அதற்கு தலைமைதாங்கும் பெற்றோர் சீரில்லையென்றால் போராளிகள் ஆகிய பிள்ளைகள் எப்படி சீராக இருப்பர்...ஈழத்தில் மற்றைய போராளிக் குழுக்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்களால், அவர்களின் செயல்களால் மக்கள் மத்தியில் நற் பெயரை வளர்க்கக் கூடிய தலைமையும் வழிகாட்டலும் இன்மையுமே அன்றி வேறில்லை......!
இன்று அதே நிலையில் தான் பல குடும்பங்கள் இருக்கின்றன...காரணம் தனிமைப்பட்ட, வழிநடத்தல் அற்ற வாழ்வியல் அமைப்பு முறை....வெள்ளையர்களுக்கு அவர்களின் கலாசாரத்திற்கு ஏற்ப கவுண்சிலிங் செய்கிறார்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் வழிகாட்டுகிறார்கள்....ஆனால் எமது சமூகத்தில்........??????! எனவே எமது பிள்ளைகள் தமிழ் பண்பாடோடு வளர வேண்டுமென்றால் பெற்றோர் கவுண்சிலர்களாக இருக்கும் தகைமை கொண்டிருக்க வேண்டும் அன்றில் வெள்ளையரின் கவுண்சிலிங் தாம் எமது குழந்தைகளையும் வாழ வைக்கும்...அங்கு எமது பண்பாட்டை எதிர்பார்க்க முடியாது...இது தாயகத்திற்கும் பொருந்தும்......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
ஆக குருவிகளின் கருத்தில் முக்கியமாக ஒன்றுடன் ஒத்துப் போகின்றேன். அதாவது பெற்றோர் பிள்ளைகளைப் பொறுத்தளவில் உண்மையானவர்களாக வாழவேண்டும். பிள்ளைகளுக்கு முன்னால் பெற்றோர் வேசம்போட்டால்.. பின்னாளில் அதுவே பிள்ளைகளின் வேசத்துக்கு வழிகாட்டியாகிவிடும்.
சிலவேளை தொலைபேசி தொல்லையால்.. சில பெறஇறோர் தாங்கள் வீட்டில் இல்லையென கூறுமாறு பிள்ளைகளையே ஏவுவார்கள். சிலர் பிள்ளைகளை பாடசாலைக்குவிடாமல் எங்காவது சடங்குகளுக்கு அழைத்து சென்றுவிட்டு.. பாடசாலைக்கு காரணம் காட்டும்போது சுகவீனம் என்பார்கள். அங்கே பிள்ளையானது அவர்களிடமிருந்து பொய்யைக் கற்றுக் கொள்ளுகிறது. எனவே பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களிடம்தான் தங்கியுள்ளது. சூழல் இரண்டாம்பட்சமே!
.
Reply
#16
<img src='http://www.gcca.ca/pics/Story-telling-hour.jpg' border='0' alt='user posted image'>

பெற்றோர்கள் தம்மால் முடிந்தளவு குழந்தைகளுக்;கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேச வேண்டும். அதற்காக அளவுக்கதிகமாக அன்பைக்கொட்டி பேசவேணடும் என்பது இல்லை. உதாரணமாக குழந்தை வயதான பெரியவர்களை மதிக்க வில்லை என்று எடுத்துக்கொண்டால் குழந்தையை உங்கள் மடியில் அமர்ததி பெரியவர்களை மதிக்கவேண்டும் மேலே ஆண்டவன் எல்லாவற்றையம் பார்;த்துக்கொண்டு இருக்கிறான். நீ தவறுசெய்தால் அவன்; உன்னை தண்டித்துவிடுவான் என்று கூறலாம். சின்னச்சின்னக்கதைகள் சொல்லலாம். அதன் மூலம் அவர்கள் கொஞ்சம் கற்றுக்கொள்ள வழியுண்டு. பேராசை கூடாது என்பதற்கு விறகுவெட்டியின் கதையோ அலிபாபாபும் நாற்பது திருடர்களின் கதையையோ சொல்லலாம். (இதில் அலிபாபாவின் அயல்வீட்டுக்காரன் பேராசையின் காரணத்தால் குகையின் உள்ளே மாட்டிக்கொள்கிறான்.)

தமிழில் குழந்தைகளுக்கான சின்ன சின்ன நீதிக்கதைகள் கிடைக்கின்றன. இப்பொது இவைஎல்லாம் குறுந்தட்டுக்களில் கூட கிடைக்கின்றன. அவற்றைப்படிக்க பார்க்;கத் தூண்ட வேண்டும். தமிழ் கலாச்சார அமைப்புகள் ஒவ்வொன்றும் நூலகம் ஒன்றை ஆரபம்பித்து நடத்தலாம் குறிப்பாக் குழந்தைகளுக்கான நூலகம். தமிழ் நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு குறைவே இல்லை. நூலகங்கள் மொத்தமாக விலைபேசி வாங்கலாம்.

வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் பிரார்த்தனை;கூட்டம் நடத்தலாம். அதில் குழந்தைகளுக்கான் குட்டிக் குட்டிக்கதைகளை அசிரியர்களையோ பெரியவர்களையோ வைத்து சொல்ல வைக்கலாம். குழந்தைகளைக்;கூட ஊக்கப்படுத்தி கதைசொல்ல வைக்கலாம்.

கலாச்சார நிகழ்ச்சிகள் போராட்டம் சம்பந்தமான நிகழ்ச்சிகள்; எதுவானாலும் குழந்தைகள் பயன்பெறும் ஒரு நிகழ்ச்;சியை கட்டாயமாக நடத்தலாம். குழந்தைகளை வைத்தே ஒரு சின்ன நாடகம் செய்யலாம்.

இவையெல்லாம் ஏற்கனவே நீங்கள் செயற்படுத்திகொண்டு இருக்கலாம். குழந்தைகளின் நலன் கருதி மேலும் சிறப்பாக செய்ய முயற்சியுங்கள். ஏதோ காரணத்தால் நின்று போயிருந்தால் மீண்டும் ஆரம்பித்து செய்யற்;படுத்துங்கள்.

கடந்;த 25 ஆண்டுகளை எடுத்;துக்கொண்டால் எமது சமுதாயம் போரினால் உயிருக்காக அங்கும் இங்கும் அகதியாய் அலைந்து பாதி நாட்களை கழித்துவிட்டது. இந்தக்காலகட்டத்தில் திருமணம் செய்தவர்கள் போதிய முதிர்ச்சியில்லதவர்களாய் இருக்கலாம். அனுபவமிக்க வயதானவர்களின் ஆலோசனைகள் இவர்களுக்கு இல்லாது போயிருக்கலாம். குழந்தைகள் நலனைச் சிந்திக்கவே நேரம் இல்லாது போயிருக்கலாம.; இது போன்ற ஒட்டுமொத்த காரணங்களால் குழந்தைகள் வழிநடத்த யாரும் இன்றி தனித்து விடப்பட்டு இருக்கலாம். இன்றே இவற்றை செயற்படுத்த ஆரம்பித்தால் நிச்சயமாக நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒவ்வொருவரும் ஒருவர் மேல் மற்றவர் பழிசுமத்துவதை விடுத்து அவர் அவர்; கடமையைஉணர்நது செயல்பட்டால் நிச்சயமாக இது முடியும். மாற்றமுடியாதது எதுவும் இல்லை.
Reply
#17
பயனுள்ள ஆலோசனைகள்....பெற்றோரே கொஞ்சம் கருத்தில் எடுங்கள்....பிள்ளைகளுக்கு வெறும் சிங்கம் புலி கதையோடில்லாமல் யதார்த்தமாக நாம் வாழும் சூழலில் நாம் காணும் சம்பவங்களைக் கொண்டு கதை புனைந்து சொல்லுதலும் அவசியம் பின் ஒரு நேரத்தில் அப்பிள்ளை அப்படியான ஒரு சூழலைச் சந்திக்கும் போது நன்கு கிரகித்து திடமான நல்ல முடிவுகளை விரைந்து எடுக்கும் நிலைக்குத் ஊக்கிவிக்கப்படுவான்.....அதையும் வளமான சமூகத்தை பிரதிபலிக்க விரும்பும் பெற்றோர் கருத்தில் கொள்வது நலம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பெற்றோர்கள் தம்மால் முடிந்தளவு குழந்தைகளுக்;கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேச வேண்டும். அதற்காக அளவுக்கதிகமாக அன்பைக்கொட்டி பேசவேணடும் என்பது இல்லை. உதாரணமாக குழந்தை வயதான பெரியவர்களை மதிக்க வில்லை என்று எடுத்துக்கொண்டால் குழந்தையை உங்கள் மடியில் அமர்ததி பெரியவர்களை மதிக்கவேண்டும் மேலே ஆண்டவன் எல்லாவற்றையம் பார்;த்துக்கொண்டு இருக்கிறான். நீ தவறுசெய்தால் அவன்; உன்னை தண்டித்துவிடுவான் என்று கூறலாம். சின்னச்சின்னக்கதைகள் சொல்லலாம். அதன் மூலம் அவர்கள் கொஞ்சம் கற்றுக்கொள்ள வழியுண்டு. பேராசை கூடாது என்பதற்கு விறகுவெட்டியின் கதையோ அலிபாபாபும் நாற்பது திருடர்களின் கதையையோ சொல்லலாம். (இதில் அலிபாபாவின் அயல்வீட்டுக்காரன் பேராசையின் காரணத்தால் குகையின் உள்ளே மாட்டிக்கொள்கிறான்.)  

தமிழில் குழந்தைகளுக்கான சின்ன சின்ன நீதிக்கதைகள் கிடைக்கின்றன. இப்பொது இவைஎல்லாம் குறுந்தட்டுக்களில் கூட கிடைக்கின்றன. அவற்றைப்படிக்க பார்க்;கத் தூண்ட வேண்டும். தமிழ் கலாச்சார அமைப்புகள் ஒவ்வொன்றும் நூலகம் ஒன்றை ஆரபம்பித்து நடத்தலாம் குறிப்பாக் குழந்தைகளுக்கான நூலகம். தமிழ் நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு குறைவே இல்லை. நூலகங்கள் மொத்தமாக விலைபேசி வாங்கலாம்.  

வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் பிரார்த்தனை;கூட்டம் நடத்தலாம். அதில் குழந்தைகளுக்கான் குட்டிக் குட்டிக்கதைகளை அசிரியர்களையோ பெரியவர்களையோ வைத்து சொல்ல வைக்கலாம். குழந்தைகளைக்;கூட ஊக்கப்படுத்தி கதைசொல்ல வைக்கலாம்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


நியாயமான ஆலோசனைகள்.
நடைமுறை ஐரோப்பிய வாழ்க்கையில் இவை <b>சாத்தியமானதா</b> என்று சிந்தித்துப்பாருங்கள்.

ஒரு காலத்தில் இந்தியா இலங்கை போன்ற காலை ஆரம்பித்து மாலை ஓய்வு பெறும் நகரங்களாகத்தான் ஐரோப்பிய நகரங்களும் அவற்றின் வியாபாரங்களும் இருந்தன.

ஆனால் எப்போது எம்மக்கள் சுளை சுளையாக பணத்தை அள்ளிக்கொடுத்து,வருடக்கணக்கில் வட்டி கட்டி,பனியிலும்,மழையிலும்,காட்டிலும்,மேட்டிலும் நடந்து, பட்டினியோடும் வந்திறங்கி வெள்ளைக்காரன் முன் நிற்கும் அவசியம் வலுப்பெற்றதோ...

அந்தக் காலம் முதல் இந்தப் பண்பாடு,கலாச்சாரம்,பிள்ளை வளர்ப்பு என்று எல்லாவற்றிற்கும் மேலாக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டுவதற்கும்,ஐரோப்பாவில் வாழ்வதற்கு உழைப்பதிலும்,ஊரில் இருக்கும் அக்காவை தங்கையை 10 லட்சம் 20 லட்சம் சீதனம் கொடுத்து மணமுடித்துக் கொடுப்பதற்கும் தாங்கள் இங்கு வீடு வாங்குவதற்கும், பின்னர் அதற்கு 25 வருடங்கள் பணம் கட்டுவதற்கும் என்று உழைத்து உழைத்து உருளுவதிலேயே காலம் போகிறது.

இதற்கிடையில் தாங்கள் வாழும் நாட்டிற்குரிய மொழியிலேயே குழந்தைகளைக் கற்பிக்க வேண்டிய சூழ்நிலை பிள்ளைகள் கல்வியில் பெற்றோருக்கு இருக்கக்கூடிய <b>ஆர்வத்தினையல்ல</b> ஈடுபாட்டினையும் குறைத்து விட்டது.

தமது இரண்டு பிள்ளைகளும் தமக்குள்ளே டொச்சில்,ஆங்கிலத்தில்,பிரெஞ்சில் கதைத்துக்கொள்ளும் போது தூர நின்று பெருமைப் படுவதைத் தவிர வேறு வழியில்லாத இயந்திர உலகம்.. இந்த உலகம்.

நல்ல நவீனமான வழியேதும் இருந்தால் கண்டுபிடியுங்கள்.ஒருவேளை எமது எதிர்கால சந்ததியினர்க்கு உதவலாம்.

இதிலிருந்தும் விதி விலக்காக சில பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இல்லையென்று சொல்வதற்கில்லை.ஆனால் விகிதாசாரத்தில் மிக <b>மிகக்குறைவு.</b>

எனவே முடிந்தால் இவற்றினை நன்கு ஆராய்ந்து அலசி நல்ல நவீன திட்டங்களைக் கண்டு பிடித்து <b>பெற்றோருக்கும் எதிர்கால சந்ததியினர்க்கும் உதவுங்கள்</b>.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#19
அன்பின் வீரா உங்கள் கருத்தைப் படித்தபோதுதான் எனக்கு உண்மை உறைத்தது. வாங்கிய கடனுக்;கு வட்டிகட்ட இப்படி தங்கள் குடும்பத்தை பற்றிக்கூட கவலைப்பாடாது வாழவேண்டிய சூழ்நிலையில் எமது மக்கள் இருக்கிறார்கள் என அறிந்தபோது உண்மையில் நெஞ்சம் கனக்கிறது. நாங்கள் இந்தியாவில் இருப்பதால் மற்ற நாடுகளில்; எம்மக்கள் படும் கஸ்டம் தெரியாமல்போய்விட்டது. அதற்காக வருந்துகிறேன்.

சரி நீங்கள் கேட்டதற்கு ஏற்ப நவினமாக கற்றுக்கொடுக்க சில வழிகள் உண்டு. அதில் ஒன்று இருவட்டுகள் பயன்படுத்தி குழந்தைகளுக்கு கற்றக்கொடுத்தல். எல்லாக்குழந்தைகளும்; அதிக நேரம் கணனியில் செலவிடுவதாக அறிகிறேன். தமிழ்ப்பண்பாடு கற்றுக்கொடுக்கின்;;ற குறுந்தட்டை இங்கு தயார்செய்ய முடியும். ஏற்கனவே நான்; வேலை செய்;த நிறுவனம் மழலைப்பாடல்கள,பஞ்சதந்திரக்கதைகள், தமிழ் கற்பீர் என குறந்தட்டுகளை வெளியிட்டு உள்ளது. அவர்களை கொண்டு ஒரு குறுந்தட்டை வெளியிட முடியும். ஆனால் எம் மக்கள் வாங்குவர்களா? வாங்கினாலும் அது குழந்தைகளுக்கு பயன்படுமா?
Reply
#20
இப்படிச் செய்யலாம் கணணி விளயாட்டு சீடிக்களை தமிழ் கலாசாரத்தை ஒட்டியதாக வினைத்துறன் உள்ள மென்பொருட்கள் கொண்டு வடிவமைத்து வெளியிட்டால்...இன்று ஆங்கில காலாசார அடிப்படை விளையாட்டுச் சீடிக்களின் மோகம் குறைத்து.... பிள்ளைகள் இவற்றை நாடத் தூண்டலாம்.....இப்படிப் பலவழிகள் உண்டு...ஆனால் யார் இதில் எல்லாம் கவனம் எடுப்பர்.....!எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் தான்......!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)