Yarl Forum
சங்கடம் சட்டநாதன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: சங்கடம் சட்டநாதன் (/showthread.php?tid=7804)



சங்கடம் சட்டநாதன் - aathipan - 11-15-2003

<img src='http://www.mdsupport.org/images/excuselogo.jpg' border='0' alt='user posted image'>

சட்டநாதனைப்பார்த்தால் தெருவில் உள்ளவர்கள் எல்லாம் அலறி அடித்துக்கொண்டு வீட்டுக்குள் போய் கதவை மூடிக்கொள்வார்கள். அத்தனைக்கும் சட்டநாதன் ஒன்றும் பேட்டை ரவுடியில்லை. சாதாரண நடுத்தர வர்க்க மனிதன் தான். பார்த்தால் நாற்பது வயது சொல்லலாம் ஆனால் முப்பதுதான் உண்மை வயது. நல்ல வேலை. பார்த்தால் அப்பாவிபோலத்தான் இருப்பான். இருந்தும் அவனைக்கண்டால் எல்லோரும் அஞ்சி நடுங்குவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா?

ஒரு தடவை சட்டநாதன் வீட்டுக்குபக்கத்து வீட்டுக்காரர் நல்லசிவம் நோய்;வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கொஞ்சம் இரத்தக்கொதிப்பு. போதாததிற்கு சர்க்கரைநோய் வேறு. இரண்டு நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து சதாரண வாட்டிற்;க்கு மாற்றி இருந்தார்கள்.

சட்டநாதன் அவரை பார்க்க மருத்துவமனை சென்றிருந்தான். ஒரு சாத்துக்குடியை கையில் கொடுத்து குணம் பெறஆண்டவனை வேண்டிக்கொள்வதாய் சொல்லி இருக்கிறான். நல்ல சிவம் இவன் அன்பில் உருகிப்போய்விட்டார். அடடா இத்தனை நல்ல மனிதனை நாம் கண்டுகொள்ளாம் விட்டுவிட்டோமே என எண்ணி பேச்சுக்கொடுத்தார். வினையை விலைகொடுத்து வாங்கிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். சட்டநாதனும் பேச ஆரம்பித்தான். சின்னவயது கதைகள்தொடங்கி இன்று வரை நடந்த கதைகளை அவிழ்த்துவிட்டான். எப்போதோ நடந்த வேண்டாத சின்னச்சின்ன கதைகளை எல்லாம் எடுத்து பெரிதுபண்ணி விளக்கி சொல்லிக்கொண்டிருந்தான். முதலில் இரசித்துக்கேட்ட நல்லசிவத்திற்கு கொஞ்;சம் அலுப்புத்தட்ட ஆரம்பித்துவிட்டது. கொட்டாவி வந்தது. இருந்தாலும் சட்டநாதனின் மனம் நொந்துவிடக்கூடாது என எண்ணி வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் ஒவ்வொருநேயாளியாய் பரிசோதிததபடி மருத்துவர் உள்ளேவரவும் சட்டநாதன்; மரியாதையோடு வெளியேறினான். நல்லசிவம் தப்பித்தோம் எனஎண்ணி நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். மருத்துவர் வெளியேறவும் சட்டநாதன் மீண்டும் உள்ளே வந்தான். நல்லசிவத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்களை மூடி தூங்குவது போல் பாவனை செய்தார். சட்டநாதன் அவர் கைகளைத்தொட்டு வருகிறேன் என்று கூறி விடைபெற்றான். இரக்கம் கொண்டு நல்லசிவம் கண்களைத்திறந்து விடைகொடுத்தார். உடல் நிலையை நன்றாகப்பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவருக்கு அறிவுரை சொல்லி சட்டநாதன் தொடர்ந்து ஒரு குட்டிப்பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிட்டான். இயற்க்கை மருத்துவம் மூலிகை மருத்துவம் என்று அவன் பேசிக்கொண்டே போனான். யார் யார் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பெரிய பட்டியலே போட்டான். நல்லசிவத்திற்கு என்ன செய்வது என்றுதெரியவில்லை. போகிறேன் என்றவன் ஏன் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று எரிச்சலானது. ஒரு நிலையில் நீங்கள் போய்வாருங்கள் என்று விடைகொடுத்தார். சட்டநாதனும் ஆமாம் நான் போய் ஆகவேண்டும் இல்லை என்றால் பஸ்கிடைக்காது என்ற கூறி பஸ்பயணத்தில் உள்ள சங்கடங்களை எடுத்து அடிக்கிக்கொண்டே போனான். பாவம் நல்லசிவம். அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. கண்களை மூடிக்கொண்டார். சட்டநாதனும் நல்லசிவம் கண்களை மூடி சுவாரசியமாக தம் பேச்சைத்தான் கேட்கிறார் என்று எண்ணி தனது பிரசங்கத்தை தொடர்ந்தான். உண்மையிலேயே நல்லசிவம் நிலை மோசமாகிவிட்டது. மருந்து மாத்திரை கொடுக்க வந்த தாதி நல்லசிவத்;தைபரிசோதித்து உடனே மருத்துவர்களை அழைக்க அவர் மீண்டும் நல்லசிவத்தை தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு எடுத்துச்சென்று சிகிச்கை அளித்தனர். ஒருவாறு வெளியேற்றப்பட்ட சட்டநாதன் யாரும் மாட்டமாட்டார்களா என்று ஏக்கத்துடன் நடக்க ஆரம்பித்தான்

சட்டநாதனிடம் நீங்களும் மாட்டிக்கொள்ளாதிருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.


- Ilango - 11-15-2003

சட்டநாதனின் தொலைபேசி இலக்கம் என்ன?


- aathipan - 11-15-2003

<img src='http://www.mdsupport.org/images/excuselogo.jpg' border='0' alt='user posted image'>


சட்டநாதனிடம் யாரும் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வது கிடையாது. அண்டை அயலார் அவனைக்கண்டு ஓடி ஒழிவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது அவன் கடன் கேட்பான் என்பது. பார்க்காமல் போனால் கூட வணக்கம் கூறி குசலம் விசாரிப்பான். அவனை நன்கு தெரிந்தவர்கள் அவன் வணக்கம் சொன்னாலே அஞ்சி ஓடிவிடுவார்கள். எதுவும் தெரியாது மாட்டிக்கொள்பவர்கள்பாடு திண்டாட்டம் தான்.

ஒரு தடவை வெளியுூரில் இருந்து ஒருவர் வேலை தேடி சென்னை வந்து அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தார். இரண்டு தடவை சட்டநாதன் கண்ணில் வேறு பட்டுதொலைந்துவிட்டார். அப்பாவிபோல முதலில் பேச்சுக்ககொடுத்திருக்கிறான் சட்டநாதன்.

மூன்றாவது நாள் அவரை டி கடையில் பார்த்து வணக்கம் சொல்லி வந்தவேலை ஆகிவிட்டதா? என்று விசாரித்தான். அவரும் சட்டநாதனுடன் நட்புடன் பேசினார். சட்டநாதன் தயாராக வைத்திருந்த சோகக்கதையை எடுத்துவிட்டான். தங்கைளுக்கு வரன் தேடுவதாகவும். இன்று மாப்பிள்ளை பகுதி வீட்டிற்கு வருவதாகவும். அந்த நேரம் பார்த்து அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல்ப்போக பணம் மருந்துக்குச் செலவாகிவிட்டது. மாப்பிள்ளை வீட்டாருக்கு சிற்றூண்டி வாங்கி உபசரிக்க கூட பணம் இல்லை. வெறும் பாலில்லாத டியை கொடுத்தால் அவர்கள் எங்களுடன் சம்பந்தம செய்வார்களா? என்ன செய்வது என்று கவலைப்படுவதாக நடித்திருக்கிறான்.

அந்த நபரும் இரக்கப்பட்டு தான் வேலைக்கு முற்பணமாகஎடுத்துவந்திருந்த ஒரு தொகையைக்கொடுத்து மாப்பிள்ளை வீட்டாரை நன்கு உபசரித்து அனுப்புங்கள் அம்மாவிற்கு தேவையான மருந்தையும் வாங்கிக்கொள்ளுங்;கள் என்று கூறியிருக்கிறார். பணம் வாங்கியது தான் சட்டநாதன் மாயமாய் மறைந்துவிட்டான். வேலை தேடி வந்தவர் ஏதோ தான் ஒரு ஏழைக்குடும்பத்திற்கு உதவிசெய்ததாய் மனநிறைவடைந்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து மீண்டும் ஏதோ சோகக்கதை சொல்லி இன்னும்; ஒரு தொகை அறவிட்டிருக்கிறான். பாவம் அந்த நபர் இறுதியில் யாரோ எச்சரிக்க சுதாகரித்துக்கொண்டார். அவனிடம் சென்று குடுத்த பணத்தைக் கேட்டபோது இன்னம் பெரிதாக ஒரு சோகக்கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டடான் சட்டநாதன். பணமும் வேண்டாம் எதுவும் வேண்டாம் தொல்லை விட்டால் போதும் ஊர்போய்ச்சேர்ந்தார் அந்த வேலைதேடிவந்த நபர்.

இப்போது உங்கள் அருகில் இருப்பவர்கூட சட்டநாதனைப்போல கதைசொல்லி உங்களிடம் பணம்பறிக்கலாம் ஜாக்கிரதை.[/img]