| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 258 online users. » 0 Member(s) | 256 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,251
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,030
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,118
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| நெஞ்சு எரிச்சல் ஏன்? |
|
Posted by: சாமி - 11-22-2003, 11:58 PM - Forum: மருத்துவம்
- Replies (4)
|
 |
வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம்.
கொழுப்பு, மதுபானங்கள், புகை பிடித்தல் இனிப்புகள், சாக்லெட் மற்றும் மிண்டுகள், இந்த பகுதியில் திசுவை வலுவிழக்க செய்து, வயிற்றிற்கும் ஈஸோபாகஸிற்கும் உள்ள திறப்பை குறைக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதிகமாக சாப்பிடுதல், வேக வேகமாக சாப்பிடுதல், ஒழுங்காக மெல்லாமல் விழுங்குதல், சரியாக சமைக்காத உணவுகளை உண்ணுதல் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். பொதுவாக, நாம் சாப்பிடும் உணவுகளால் ஏற்படுவதை சாப்பாட்டிற்கு பின் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.
இதனை தடுக்க நாம் சில வழிகளை கையாளலாம். முதலில், அதிகமாக இந்த பிரச்னைகளை உடையவர்கள் மூன்று வேளைகள் அதிகமாக உண்பதை விட, சிறு சிறு அளவில் அவ்வப்போது உணவை உட்கொள்ளலாம். காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ள அரிசி மற்றும் பிரட் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதிகமாக உண்ண கூடாது. காபி, டீ, பியர், வைன் போன்றவை அமிலம் சுரப்பதை துõண்டுவதால் இவற்றை அதிகம் குடிக்க கூடாது. துõங்கும்முன் பால் குடிப்பது அமிலச் சுரப்பை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது.
வாசனை பொருட்கள் அதிகமுள்ள உணவு, வறுத்த உணவுகளை தவிர்க்கலாம். அழுத்தத்தை தவிர்த்து, வாழ்க்கை முறையை மாற்றுதல் நெஞ்சு எரிச்சலை குறைக்க உதவும். சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்ல கூடாது. அதிக எடையும் நெஞ்சு எரிச்சலை துõண்டுவதால், எடையை குறைக்கலாம்.
உணவிற்கிடையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலன் தரும். வாழைப்பழத்தில் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோசுடன் நார் சத்தும் உள்ளதால் நன்மையை தருகிறது. அதிகமாக சாப்பிட்ட பிறகு உங்கள் வாயில் புளிப்பு தன்மை ஏற்பட்டால் அதிக அமிலம் சுரந்திருப்பதை அறியலாம். இதனால் ஆபத்தான வயிற்று புண்களும், ஈஸோபாகஸில் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிக கவனம் தேவை.
நன்றி: தினமலர்
|
|
|
| உதவி செய்தால் தான் பெருமை |
|
Posted by: சாமி - 11-22-2003, 11:57 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- No Replies
|
 |
![[Image: vivekananda.jpg%20]](http://www.webulagam.com/religion/words/images/2002/vivekananda.jpg%20)
ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு, அந்தக் காரியத்தைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்க்கையில்நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடங்களுள் ஒன்றாகும். இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில், வெற்றிக்கு உரிய எல்லா ரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும்தான்.
உலகிற்கு நன்மை செய்வதால், உண்மையில் நமக்கு நாமே உதவி செய்து கொள்கிறோம்.
உயர்ந்த பீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக்கொண்டு, ""ஏ பிச்சைக்காரா! இதை வாங்கிக்கொள்'' என்று சொல்லாதே. மாறாக, அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து, அந்த ஏழை அங்கு இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு. கொடுப்பவன்தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்ததற்காக நீ நன்றியுள்ளவனாக இரு.
சமநிலையில் பிறழாதவன், சாந்தமானவன், நன்மையை ஆராய்ந்து ஏற்பவன், அமைதி படைத்தவன், இரக்கமும், அன்பும் பெரிதும் உள்ளவன் நல்ல பணிகளில் ஈடுபடுகிறான். அதன்மூலம் அவன் தனக்கே நன்மைத் தேடிக் கொள்கிறான்.
விவேகானந்தர்..
நன்றி: தினமலர்
|
|
|
| டெலிவிஷன் |
|
Posted by: சாமி - 11-22-2003, 11:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சோ.வெ.ரமணன், கருங்குழியிலிருந்து எழுதுகிறார்: "உங்கள் வீட்டில் இருக்கும் டெலிவிஷன் உங்கள் எதிர்காலத்தை நாசமாக்குகிற குட்டிச் சாத்தான். உங்கள் பெற்றோர் "டிவி'யை பார்க்கும் போது, சிவனுக்கு பாடம் சொன்ன முருகன் போல் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு அறிவுரை கூற வேண்டும்' இது, பா.ம.க., ராமதாசின் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய சமீபத்திய பேச்சு.
"தமிழினத் தலைவரு நம்ம ஐயா; நாளைய தலைமுறைக்கு வழிகாட்ட வாரார் ஐயா...' இது, தொலைக்காட்சி ஒன்றில் அவரையும், அவரது மகனையும் காட்டி அறைகூவல் விடுத்து பாடப்படும் பாடல் வரிகள்.
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய் தன் மகனை அழைத்து வந்து, "ஐயா, இவன் நிறைய இனிப்பு சாப்பிடுகிறான். நான் சொன்னால் கேட்காமல், நிறுத்தாமல், அடம் பிடிக்கிறான். நீங்கள் அறிவுரை சொல்லி திருத்துங்கள்' என்று கூறுவார்.
அதற்கு பரமஹம்சர், "அம்மா நீங்கள் சென்று இரு வாரங்கள் கழித்து வாருங்கள்' என்று அனுப்பி விடுவார். அந்த தாய் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று இரண்டு வாரம் கழித்து விடாப்பிடியாக மீண்டும் வருவார்.
அப்போது ராமகிருஷ்ணர் அந்த சிறுவனை அன்போடு ஆசிர்வதித்து, "தம்பி, இனிப்பு சாப்பிடாதே' என்று அறிவுரை கூறுவார். அந்தத் தாய் ஆச்சரியத்தோடு, "நான் முதலில் வந்த போதே இதை நீங்கள் கூறி இருக்கலாமே' என்று வினவுவார். அதற்கு அந்த ஞானி, "அம்மா முன்பு நீ வரும்போது நானும் நிறைய இனிப்பு சாப்பிட்டு கொண்டு இருந்தேன்; முதலில் அதை நான் நிறுத்த வேண்டும். பிறகு அதை நீடித்து கடைபிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். பிறகுதானே நான் அவனுக்கு உபதேசம் செய்ய வேண்டும்' என்று கூறி அனுப்புவார்.
முதலில் தன் முதுகில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தான் மற்றவர்களின் அசுத்தத்தைப் பற்றி குறை கூறி அறிவுரை சொல்ல வேண்டும் என்பது மகான்களின் கருத்து. இதை அரசியல்வாதிகள் கடைப்பிடிக்காவிட்டாலும், கொச்சைப்படுத்தாமல் இருந்தால் நல்லது.
ஒரு சில நிகழ்ச்சிகளை தவிர, பெரும்பாலும் அபத்தமான தொலைபேசி உரையாடல்கள், அரைகுறை போலி வைத்தியர்களுக்கான விளம்பரம் இவற்றுடன் ஒளிபரப்பாகும் தமிழன் தொலைக்காட்சியை சரிசெய்து, முன் உதாரணமாக்கி விட்டு, இதுபோன்ற விமர்சனங்களை எடுத்து விடுவது ராமதாஸ் போன்றவர்களுக்கு நல்லது.
நன்றி: தினமலர்
|
|
|
| Linux |
|
Posted by: சாமி - 11-22-2003, 11:28 PM - Forum: கணினி
- No Replies
|
|
|
| காதலுக்கு கண் இல்லை |
|
Posted by: சாமி - 11-22-2003, 11:25 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
ஒரு அழகான பெண்ணை ஒரு சிங்கம் பார்த்தது. உடனே காதல் கொண்டுவிட்டது. அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் சென்று, ''உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள். நான் காட்டு ராஜா. உங்கள் பெண்ணைக் கண்போல பாதுகாத்து, ராணி போல் வைத்துக் கொள்கிறேன்'' என்றது.
பெண்ணின் பெற்றோர் மறுநாள் காலைவரை டயம் கேட்டனர்; யோசித்தனர். 'இப்படி பைத்தியம் பிடித்தது போல கேட்கிறதே! முரட்டு மிருகத்துக்கு இளம்பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதா! எப்படி சமாளிப்பது? முரட்டு சிங்கத்திற்கு கோபம் வராமல் எப்பபடி நிராகரிப்பது?' என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
மறுதினம் சிங்கத்தை அழைத்து ''காட்டு ராஜா அவர்களே! நீங்கள் எங்கள் குமாரத்தியை மணம் செய்ய விரும்புவதில் எங்களுக்கு மிகுந்¢த பெருமை. எங்கள் மகளைப் பார்த்தீர்கள். அவளை உங்களோடு ஒப்பிட்டால் பலவீனமாவள். நீங்கள் உங்கள் காதலின் ஆசையின் ஆர்வத்தில் அவளை அதிகமாகக் காதலித்து விட்டால் அவள் செத்துப்போய் விடுவாள். அதனால் ஒன்று செய்யுங்கள். உங்கள் நகங்களை வெட்டிவிடுங்கள். பற்களைப் பிடுங்கிக் கொண்டுவிடுங்கள். பெண்ணைக் கல்யாணம் செய்து தருகிறோம்'' என்றனர்.
சிங்கம், காதலித்த பெண் கிடைக்கப்போகும் சந்தோஷத்தில் நகங்களை வெட்டிக்கொண்டு, பல்லெல்லாம் பிடுங்கிக்கொண்டு பொக்கையாக வந்து நின்றது. பெற்றோர் அதைப்பார்த்து கைகொட்டிச் சிரித்து, ''போய்யா, பொக்கை வாயா! என்று எல்லோரும் சேர்ந்து துரத்தி விட்டார்கள்.
நீதி: - காதலுக்காக எல்லாவற்றையும் இழப்பது முட்டாள்தனம்.
நன்றி: அம்பலம்
|
|
|
| தமிழ் கணினி பயணம் |
|
Posted by: சாமி - 11-22-2003, 11:22 PM - Forum: கணினி
- No Replies
|
 |
லினக்ஸ் சார்ந்த தமிழ்க் கணினியின்¢ முதல் அறிவிப்பைப் பார்த்திருப்பீர்கள். மைக்ரோசாஃப்ட் சாராத ஒரு மேல்மேசைச் சூழலை நிலைநிறுத்த முடியும் என்று முதலில் நம்பினோம். இதற்கு தமிழக அரசின் இணையப் பல்கலைக்கழகம் ஆதரவு தந்தது. ரெட்ஹாட் நிறுவனத்தில் இந்திய நடவடிக்கைகளை கவனித்துக்கொள்ளும் ஜாவேத், ஷங்கர் போன்றவர்கள் உற்சாகமாக ஆதரவளித்தார்கள். எங்கள் சந்தேகங்களைக் கூடிய விரையில் தீர்த்து வைத்தார்கள். இம்மாதிரியான திறந்த மூலம் open source இயக்கத்தை மத்யப்ரதேஷ், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஹிந்தியில் வெற்றிகரமாக கொண்டு வந்திருக்கிறார்கள். கிராமத்துக் குழந்தைகள்கூட இயல்பாக தங்கள் தாய்மொழியில் கணினியைப் பயன்படுத்துகிறார்களாம்.
தென் அமெரிக்க பிரேசில் நாட்டில் லினக்ஸ் செயலாக்க அமைப்பை அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருக்கிறது. ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருளின் ஒவ்வொரு மனமாற்றத்துக்கும் எங்களால் மைக்ரோசாஃப்ட்டுக்கு பணம் கொடுத்து கட்டுபடியாகாது என்று தீர்மானித்து லினக்ஸை வரித்தது. ஐபிஎம் கம்பெனி இதற்கு ஆதரவளிக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்திலும் மெல்ல மெல்ல லினக்ஸ் சார்ந்த மென்பொருள்கள் பரவத் துவங்கும் என்பதில் சந்தேகமில்லை.
கம்ப்யூட்டர் என்றால் மைக்ரோசாஃப்ட் என்கிற மாயத்தோற்றம் மெல்ல மெல்ல மறையும். அதன் முதல் கட்டம் இது. ஓப்பன் சோர்ஸ் என்பது அத்தனை சுலபமில்லை என்பது நாங்கள் கற்றுக்கொண்ட முதல் பாடம். பார்க்கப் போனால் உலகில் எதுவும் இலவசமில்லை. ஓரளவுக்கு யாராவது எங்காவது பாடுபட்டால்தான் ஒரு கலைப்பொருளோ, பாடலோ, சித்திரமோ, கணிப்பொறி மென்பொருளோ உருவாகும். உலகில் எதுவுமே இலவசமில்லை. சுவாசிக்கும் காற்று இலவசம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். இல்லை. நல்ல காற்றை சுவாசிக்க, மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும். தண்ணீர் இலவசமா? இல்லை. இப்போது பாட்டில் பாட்டிலாக விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது. கணிப்பொறி மென்பொருள்களிலும் மறைமுகமான ஒரு விலை இருந்தே தீரும். அதைக் குறைப்பதுதான் ஓப்பன் சோர்ஸ். இயக்கத்தின் குறிக்கோள் விலையை நீக்குவது அல்ல.
தமிழ் கணினியில் எங்கள் நோக்கத்தை மறுபடி நினைவுபடுத்திக் கொள்கிறோம். கணிப்பொறியைப் பயன்படுத்த ஆங்கிலம் தேவையில்லை.
சுஜுாதா
நன்றி: அம்பலம்
|
|
|
| சுகாதார வாழ்விற்கு சில வழிகள் |
|
Posted by: சாமி - 11-22-2003, 11:18 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
நீண்ட நாள் சுகாதாரமாக வாழ்வதற்கு சில எளிய வழிகளை பின்பற்றலாம். அவற்றுள் சில இதோ உங்களுக்காக.
காய்கறிகள் உண்பது மட்டுமே சுகாதாரவாழ்விற்கு வழி வகுப்பதில்லை. மரங்கள் மற்றும் தோட்டத்திற்கு அருகில் வாழ்வதும் நலமளிக்கும். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், டோக்கியோவின் நகர பகுதியில் வாழும் மூவாயிரம் மூத்த குடிமக்களை வைத்து ஆராய்ந்ததில், பூங்காக்களுக்கு அருகிலும், மரங்கள் நிறைந்த தெருக்களிலும் வாழ்பவர்கள், பிற இடங்களில் வாழ்பவர்களை விட சுகாதாரமாக, நீண்ட நாட்கள் வாழ்வதாக கண்டுபிடித்துள்ளனர். இதனால் மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
நீங்கள் தண்ணீர் குடிக்கும் அளவையும், கவனிக்க வேண்டியது அவசியம். தினமும் உடல் செயல்பாட்டிற்கு தேவையான நீரை அருந்தாவிட்டால், உடல்நீர் வற்றி பல அவதிகளுக்கு உள்ளாக நேரிடும். சிறுநீரை வைத்தே நாம் குடிக்கும் தண்ணீர் போதுமானதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம். தினமும் முதன்முதலில் கழிக்கும் சிறுநீருக்கு பிறகு, சிறுநீர் கழிக்கும் ஒவ்வொரு தடவையும் அதன் நிறத்தை சோதிக்க வேண்டும்.
அது லேசான மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். அதிக மஞ்சளாக இருந்தால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் தலைவலி ஏற்படுதல், சோர்வு, சிந்தனை சிதறல் போன்றவை ஏற்படலாம். குளிரூட்டப்பட்ட அறைகள் உலர்ந்து இருப்பதால் அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். அதேபோல், கோடை காலங்களிலும், உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களிலும், அதிக நீர் அருந்த வேண்டியது அவசியம். தர்பூசணி, வெள்ளரி, போன்றவையும் உதவும். வெளியில் செல்லும் பொழுது ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து செல்லுங்கள். மது அருந்தும் போது நீர் சேர்த்தோ அல்லது ஒவ்வொரு கப்பிற்கும் இடையில் ஒரு கப் நீர் அருந்தவதால் ஓரளவு பாதிப்புகளை குறைக்கலாம்.
பொழுதுபோக்குகள் நம் மனதிற்கும் உடலுக்கும் நன்மையளிக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? தோட்டவேலை, தபால் தலைகள் சேகரித்தல், தையற்கலை, பொம்மைகள் சேகரித்தல் என பல வகையான பொழுதுபோக்குகள் உள்ளன. இப்படி ஏதாவது பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுபவர்களது மனம் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருப்பதால் ரத்த அழுத்தம் குறைவதாகவும், அமைதியை தந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
குறுக்கெழுத்து போட்டிகள் கூட நம் மனதை வலிமையாக்கி, மனச்சிதைவு ஏற்படாமல் தவிர்க்கின்றன என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
பனிரெண்டாயிரம் பேர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், பொழுதுபோக்குகளில் ஈடுபடுபவர்கள் மாரடைப்பு அல்லது ரத்த ஓட்ட கோளாறுகளால் இறப்பது மிக குறைவு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற எளிய வழிகள் மூலம் நலமாகவும், வளமாகவும் வாழலாம்.
நன்றி: தினமலர்
|
|
|
| "நல்ல தமிழ் அறிவோம்' நூலிலிருந்து. |
|
Posted by: சாமி - 11-22-2003, 11:14 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (3)
|
 |
பெரிய கடற்கரை நகரங்களில் கடலில் வரும் கப்பல்களுக்கு அடையாளம் காட்ட பழங்காலத்தில் விளக்கு உள்ள கட்டடங்களை எழுப்பியிருந்தனர். இப்போது விளக்கு இல்லம் என்ற பொருளுடைய "லைட் ஹவுஸ்' என்ற ஆங்கிலப் பெயரால் குறிக்கும் இடம் போன்றது அது. கலங்கரை விளக்கம் என்று அங்குள்ள விளக்குகளைச் சொல்வது வழக்கம்.
கலம் என்பது கப்பல். கரைதல் என்பது அழைத்தல் என்னும் பொருளுடைய சொல். கடலில் செல்லும் கப்பல்களை, "இங்கே ஊர் இருக்கிறது; வாருங்கள்' என்று அழைப்பது போல் அந்த விளக்கு என்ற பெயர் அமைந்தது.
"இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்' என்பது சிலப்பதிகாரம். "ஓடுகலங் கரையும்' என்று விளக்குகள் அழைப்பதைப் பத்துப் பாட்டு கூறுகிறது. கலங்கள் வந்து சேரும் கரையில் உள்ள விளக்கு என்று சிலர் தவறாகப் பொருள் கொள்கின்றனர். கலம் வந்து சேருவது துறையிலேயன்றிக் கரையில் அன்று. அப்படி இருப்பினும் கலக்கரை விளக்கம் என்று வருமேயன்றி கலங்கரை விளக்கம் என்று வராது.
நன்றி: தினமலர்
|
|
|
| டெய்லி சீரியல் வேண்டாமே! |
|
Posted by: சாமி - 11-22-2003, 11:10 PM - Forum: பொழுதுபோக்கு
- No Replies
|
 |
சமீபத்தில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர்களின் வீட்டில் ஒரு விஷயம் ரொம்பவும் என்னைக் கவர்ந்தது... "டிவி'யில் தினமும் ஒளிபரப்பாகும் சீரியல்களை அவர்கள் பார்ப்பதில்லை. வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் தொடர்களை மட்டுமே பார்க்கின்றனர்.
"தினசரி தொடர்கள் நம் அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதித்து விடுகின்றன. குழந்தைகளை கவனிக்க முடிவதில்லை. வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் உபசரிக்க முடிவதில்லை. அக்கம், பக்கத்து கூட்டங்கள் வேறு வந்து இம்சிக்கின்றன. இதனால், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.
"வாராந்திர தொடர்கள்ன்னா பிரச்னையில்லை. "டிவி' பொழுது போக்கு சாதனம் தானே ஒழிய, பொழுதை போக்குவது மட்டுமே வாழ்க்கையில்லையே' என்று காரணங்களை அடுக்கினர்.
வாசக, வாசகியரே... தினசரி தொடர்களால் நம் இயல்பு வாழ்க்கை மாறிப் போவது உண்மைதான்; அதிலிருந்து மீள்வோமே!
—பெயர் வெளியிட விரும்பாத
பம்மல் வாசகர்.
நன்றி: தினமலர்
|
|
|
| அகதி |
|
Posted by: சாமி - 11-22-2003, 11:08 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
லண்டனில் பணியாற்றும் டாக்டர் அவர்; தமிழர்... நெருங்கிய நண்பர்... சமீபத்தில் சென்னை வந்தவர், பொது நண்பர் வீட்டில் தன்னை சந்திக்க வரக் கேட்டுக் கொண்டார்.
மழை கொட்டும் மாலை வேளையில் அவரை சந்திக்கச் சென்றேன்... பேச்சினுõடே அவர் சொன்ன விஷயம் ஆச்சர்யம் அடைய வைத்தது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டின இளைஞர்கள் பலர், ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன் இங்கிலாந்து வந்து சேர்ந்து விடுகின்றனராம் – அகதிகள் போர்வையில்!
"இலங்கையில் இனப் போர் நடக்கிறது... புலிகளால் – இலங்கை ராணுவத்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து... அடைக்கலம் தாருங்கள்...' என வந்து தஞ்சம் புகுந்து விடுகின்றனராம்!
புத்தம் புதிய ஒரிஜினல் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுகளை, சில சிங்களர் உதவியுடன், தமிழ்நாட்டுக்குத் "தள்ளி'க் கொண்டு வந்து விடுகின்றனராம் இலங்கை தமிழர்கள்! தேவையுள்ளோருக்கு நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனராம்!
அவர்களே பாஸ்போர்டை உரிய முறையில் பூர்த்தி செய்து, ரப்பர் ஸ்டாம்ப் அடித்தும் கொடுத்து விடுகின்றனராம்! இலங்கைத் தமிழர்களின் பெயர், தமிழகத் தமிழர்களின் பெயர் போல் அல்லாமல் வித்யாசமாக இருக்கும் அல்லவா? உதாரணமாக, நம்மூரில் தர்மலிங்கம் எனப் பெயர் இருந்தால், அவர்கள் தியாகலிங்கம் எனப் பெயர் வைப்பர்!
அதுபோல, இலங்கைப் பெயர்களையும், சந்தேகம் வராத வகையில் சூட்டி விடுகின்றனராம்! இவர்கள் கிழக்கு ஐரோப்பிய வழியில், வான் மூலமாகவோ, கடல் மார்க்கமாகவோ, தரை வழியிலோ இங்கிலாந்தை அடைந்து விடுகின்றனராம்!
அங்கே சென்று அடைந்ததும், அகதிகள் அந்தஸ்த்து வேண்டி விண்ணப்பிக்கின்றனர். உடனேயே, அவர்கள் தங்க இடம், செலவுக்கு பணம் என அளித்து விடுகிறது அந்த நாட்டு அரசு!
இப்படி வருபவர்கள் நிஜமாகவே அகதிகளா? அகதிகள் போர்வையில் வரும் மற்றவர்களா என்பதைக் கண்டு அறிவதில் அந்நாட்டு அதிகாரிகளுக்கு மிகுந்த சிரமம் உள்ளதாம்! ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், அகதிகள் போர்வையில் வருபவர்கள் கோர்ட்டுக்குப் போகலாமாம்! அதற்காகும் செலவை அரசே கொடுக்க வேண்டுமாம்! இந்தச் செலவு அகதிகளின் படியை விட அதிகமாகும் என்பதால் அரசு அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லையாம்!
அப்படியும் ஓரிருவர் மீது வழக்குப் போட்டாலும், நம்மூரில், முதல்வரின் தோழி சசிகலா கேட்டது போல, "எனக்கு ஆங்கிலம் தெரியாது... ஆவணங்கள் தமிழில் வேண்டும்' எனக் கேட்கலாமாம். இதற்கு இன்னும் பலத்த செலவு பிடிக்கும். அதனாலும், கண்டு கொள்ளாமல் அரசு விட்டு விடுகிறது என்றார்.
மேலும், ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்ச சம்பளமாக 10 பவுண்டு, அதாவது ரூ.470 என நிர்ணயித்த பின், வெள்ளைக்கார வேலைக்காரர்களை விட, இப்படி அகதிகளாக வருபவர்களை குறைந்த சம்பளத்தில் அமர்த்திக் கொள்ளவே அனைவரும் விரும்புகின்றனராம் – அது, சட்ட விரோதமானது என்றாலும் கூட... இதையும் கண்டு கொள்வதில்லையாம் அரசு!
இது போக, சினிமா ஷýட்டிங், கலை நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி என கும்பல் கும்பலாக வருபவர்களில் சிலர் அங்கே "காணாமல்' போய் விடுகின்றனராம்! அதாவது, இங்கிலாந்தில் செட்டில் ஆக வேண்டும் என்ற நோக்குடனேயே வந்து இவ்வாறு செய்கின்றனராம்! இதற்கு ஷýட்டிங், இன்னிசை, கலை பார்ட்டிகளுக்கு தனி ரேட் கொடுத்து விட வேண்டுமாம்!
சமீபத்தில் இப்படி லண்டன் வந்த பஞ்சாபி இசைக் குழுவில் இருந்த நான்கு பெண்கள் "காணாமல்' போய் விட்டனராம்! அங்குள்ள "குருதுவாரா'வில் (சீக்கியர் கோவில்) மறைந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம்! காரணம்: குருதுவாராவில் போலீஸ் நுழையக் கூடாதாம்! மதக் கட்டுப்பாடாம்!
இப்படிக் "காணாமல்' போவோர், இங்கிலாந்தில் வசிக்கும் சீக்கியர் வீடுகளில் வீட்டு வேலைக்குச் சென்று விடுவராம்! பஞ்சாபில் கிடைப்பதை விட எப்படியும் அதிக சம்பளம் கிடைக்கும்; வாழ்க்கை முறையும் மேம்பட்டதாக இருக்கும் என்பது காரணங்கள்!
டாக்டர் நண்பரின் இன்னொரு டாக்டர் நண்பர் இலங்கைத் தமிழர். அவரும் இங்கிலாந்திலேயே பணியாற்றுகிறார். அவரிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு "அகதி' அன்பர், தனக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் உபாதை இருப்பதாகக் கூறி இருக்கிறார்.
அந்த இடத்தை சோதனை செய்த டாக்டர், "சுன்னத்' செய்திருப்பதைக் கண்டார். அன்பரின் பெயரோ "தியாகலிங்கம்' என்ற இலங்கைப் பெயர். பேச்சுக் கொடுத்து இலங்கையில் எந்த ஊர் எனக் கேட்டு இருக்கிறார். "யாழ்ப்பாணம்' என அன்பர் கூற, இவர் முகவரி கேட்க, "ஜானி' படத்தில் சுருளிராஜன், ஒரு நகைக் கடையில் முகவரி கூறுவாரே... "சுண்ணாம்புக்காரத் தெரு, சுடுகாட்டு மேடு, கிருஷ்ணாம்பேட்டை' என்பது போல சிகிச்சை பெற வந்தவர் சொல்ல... உண்மை வெளிப்பட்டு விட்டது!
பின்னர், டாக்டர் கை–காலில் விழுந்து தன்னை மாட்டி விடாமல் இருக்க வேண்டியுள்ளார் அந்த நாகப்பட்டினம் முஸ்லிம் அன்பர்!
—"ம்... என்னவோ நடக்குது... ஒண்ணுமே புரியல...' என நினைத்துக் கொண்டேன்!
நன்றி: தினமலர்
|
|
|
|