Yarl Forum
அகதி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: அகதி (/showthread.php?tid=7771)



அகதி - சாமி - 11-22-2003

லண்டனில் பணியாற்றும் டாக்டர் அவர்; தமிழர்... நெருங்கிய நண்பர்... சமீபத்தில் சென்னை வந்தவர், பொது நண்பர் வீட்டில் தன்னை சந்திக்க வரக் கேட்டுக் கொண்டார்.

மழை கொட்டும் மாலை வேளையில் அவரை சந்திக்கச் சென்றேன்... பேச்சினுõடே அவர் சொன்ன விஷயம் ஆச்சர்யம் அடைய வைத்தது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டின இளைஞர்கள் பலர், ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன் இங்கிலாந்து வந்து சேர்ந்து விடுகின்றனராம் – அகதிகள் போர்வையில்!

"இலங்கையில் இனப் போர் நடக்கிறது... புலிகளால் – இலங்கை ராணுவத்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து... அடைக்கலம் தாருங்கள்...' என வந்து தஞ்சம் புகுந்து விடுகின்றனராம்!

புத்தம் புதிய ஒரிஜினல் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுகளை, சில சிங்களர் உதவியுடன், தமிழ்நாட்டுக்குத் "தள்ளி'க் கொண்டு வந்து விடுகின்றனராம் இலங்கை தமிழர்கள்! தேவையுள்ளோருக்கு நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனராம்!




அவர்களே பாஸ்போர்டை உரிய முறையில் பூர்த்தி செய்து, ரப்பர் ஸ்டாம்ப் அடித்தும் கொடுத்து விடுகின்றனராம்! இலங்கைத் தமிழர்களின் பெயர், தமிழகத் தமிழர்களின் பெயர் போல் அல்லாமல் வித்யாசமாக இருக்கும் அல்லவா? உதாரணமாக, நம்மூரில் தர்மலிங்கம் எனப் பெயர் இருந்தால், அவர்கள் தியாகலிங்கம் எனப் பெயர் வைப்பர்!

அதுபோல, இலங்கைப் பெயர்களையும், சந்தேகம் வராத வகையில் சூட்டி விடுகின்றனராம்! இவர்கள் கிழக்கு ஐரோப்பிய வழியில், வான் மூலமாகவோ, கடல் மார்க்கமாகவோ, தரை வழியிலோ இங்கிலாந்தை அடைந்து விடுகின்றனராம்!

அங்கே சென்று அடைந்ததும், அகதிகள் அந்தஸ்த்து வேண்டி விண்ணப்பிக்கின்றனர். உடனேயே, அவர்கள் தங்க இடம், செலவுக்கு பணம் என அளித்து விடுகிறது அந்த நாட்டு அரசு!

இப்படி வருபவர்கள் நிஜமாகவே அகதிகளா? அகதிகள் போர்வையில் வரும் மற்றவர்களா என்பதைக் கண்டு அறிவதில் அந்நாட்டு அதிகாரிகளுக்கு மிகுந்த சிரமம் உள்ளதாம்! ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், அகதிகள் போர்வையில் வருபவர்கள் கோர்ட்டுக்குப் போகலாமாம்! அதற்காகும் செலவை அரசே கொடுக்க வேண்டுமாம்! இந்தச் செலவு அகதிகளின் படியை விட அதிகமாகும் என்பதால் அரசு அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லையாம்!

அப்படியும் ஓரிருவர் மீது வழக்குப் போட்டாலும், நம்மூரில், முதல்வரின் தோழி சசிகலா கேட்டது போல, "எனக்கு ஆங்கிலம் தெரியாது... ஆவணங்கள் தமிழில் வேண்டும்' எனக் கேட்கலாமாம். இதற்கு இன்னும் பலத்த செலவு பிடிக்கும். அதனாலும், கண்டு கொள்ளாமல் அரசு விட்டு விடுகிறது என்றார்.

மேலும், ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்ச சம்பளமாக 10 பவுண்டு, அதாவது ரூ.470 என நிர்ணயித்த பின், வெள்ளைக்கார வேலைக்காரர்களை விட, இப்படி அகதிகளாக வருபவர்களை குறைந்த சம்பளத்தில் அமர்த்திக் கொள்ளவே அனைவரும் விரும்புகின்றனராம் – அது, சட்ட விரோதமானது என்றாலும் கூட... இதையும் கண்டு கொள்வதில்லையாம் அரசு!

இது போக, சினிமா ஷýட்டிங், கலை நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி என கும்பல் கும்பலாக வருபவர்களில் சிலர் அங்கே "காணாமல்' போய் விடுகின்றனராம்! அதாவது, இங்கிலாந்தில் செட்டில் ஆக வேண்டும் என்ற நோக்குடனேயே வந்து இவ்வாறு செய்கின்றனராம்! இதற்கு ஷýட்டிங், இன்னிசை, கலை பார்ட்டிகளுக்கு தனி ரேட் கொடுத்து விட வேண்டுமாம்!

சமீபத்தில் இப்படி லண்டன் வந்த பஞ்சாபி இசைக் குழுவில் இருந்த நான்கு பெண்கள் "காணாமல்' போய் விட்டனராம்! அங்குள்ள "குருதுவாரா'வில் (சீக்கியர் கோவில்) மறைந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம்! காரணம்: குருதுவாராவில் போலீஸ் நுழையக் கூடாதாம்! மதக் கட்டுப்பாடாம்!

இப்படிக் "காணாமல்' போவோர், இங்கிலாந்தில் வசிக்கும் சீக்கியர் வீடுகளில் வீட்டு வேலைக்குச் சென்று விடுவராம்! பஞ்சாபில் கிடைப்பதை விட எப்படியும் அதிக சம்பளம் கிடைக்கும்; வாழ்க்கை முறையும் மேம்பட்டதாக இருக்கும் என்பது காரணங்கள்!

டாக்டர் நண்பரின் இன்னொரு டாக்டர் நண்பர் இலங்கைத் தமிழர். அவரும் இங்கிலாந்திலேயே பணியாற்றுகிறார். அவரிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு "அகதி' அன்பர், தனக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் உபாதை இருப்பதாகக் கூறி இருக்கிறார்.

அந்த இடத்தை சோதனை செய்த டாக்டர், "சுன்னத்' செய்திருப்பதைக் கண்டார். அன்பரின் பெயரோ "தியாகலிங்கம்' என்ற இலங்கைப் பெயர். பேச்சுக் கொடுத்து இலங்கையில் எந்த ஊர் எனக் கேட்டு இருக்கிறார். "யாழ்ப்பாணம்' என அன்பர் கூற, இவர் முகவரி கேட்க, "ஜானி' படத்தில் சுருளிராஜன், ஒரு நகைக் கடையில் முகவரி கூறுவாரே... "சுண்ணாம்புக்காரத் தெரு, சுடுகாட்டு மேடு, கிருஷ்ணாம்பேட்டை' என்பது போல சிகிச்சை பெற வந்தவர் சொல்ல... உண்மை வெளிப்பட்டு விட்டது!

பின்னர், டாக்டர் கை–காலில் விழுந்து தன்னை மாட்டி விடாமல் இருக்க வேண்டியுள்ளார் அந்த நாகப்பட்டினம் முஸ்லிம் அன்பர்!

—"ம்... என்னவோ நடக்குது... ஒண்ணுமே புரியல...' என நினைத்துக் கொண்டேன்!

நன்றி: தினமலர்