Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் கணினி பயணம்
#1
லினக்ஸ் சார்ந்த தமிழ்க் கணினியின்¢ முதல் அறிவிப்பைப் பார்த்திருப்பீர்கள். மைக்ரோசாஃப்ட் சாராத ஒரு மேல்மேசைச் சூழலை நிலைநிறுத்த முடியும் என்று முதலில் நம்பினோம். இதற்கு தமிழக அரசின் இணையப் பல்கலைக்கழகம் ஆதரவு தந்தது. ரெட்ஹாட் நிறுவனத்தில் இந்திய நடவடிக்கைகளை கவனித்துக்கொள்ளும் ஜாவேத், ஷங்கர் போன்றவர்கள் உற்சாகமாக ஆதரவளித்தார்கள். எங்கள் சந்தேகங்களைக் கூடிய விரையில் தீர்த்து வைத்தார்கள். இம்மாதிரியான திறந்த மூலம் open source இயக்கத்தை மத்யப்ரதேஷ், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஹிந்தியில் வெற்றிகரமாக கொண்டு வந்திருக்கிறார்கள். கிராமத்துக் குழந்தைகள்கூட இயல்பாக தங்கள் தாய்மொழியில் கணினியைப் பயன்படுத்துகிறார்களாம்.

தென் அமெரிக்க பிரேசில் நாட்டில் லினக்ஸ் செயலாக்க அமைப்பை அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருக்கிறது. ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருளின் ஒவ்வொரு மனமாற்றத்துக்கும் எங்களால் மைக்ரோசாஃப்ட்டுக்கு பணம் கொடுத்து கட்டுபடியாகாது என்று தீர்மானித்து லினக்ஸை வரித்தது. ஐபிஎம் கம்பெனி இதற்கு ஆதரவளிக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்திலும் மெல்ல மெல்ல லினக்ஸ் சார்ந்த மென்பொருள்கள் பரவத் துவங்கும் என்பதில் சந்தேகமில்லை.

கம்ப்யூட்டர் என்றால் மைக்ரோசாஃப்ட் என்கிற மாயத்தோற்றம் மெல்ல மெல்ல மறையும். அதன் முதல் கட்டம் இது. ஓப்பன் சோர்ஸ் என்பது அத்தனை சுலபமில்லை என்பது நாங்கள் கற்றுக்கொண்ட முதல் பாடம். பார்க்கப் போனால் உலகில் எதுவும் இலவசமில்லை. ஓரளவுக்கு யாராவது எங்காவது பாடுபட்டால்தான் ஒரு கலைப்பொருளோ, பாடலோ, சித்திரமோ, கணிப்பொறி மென்பொருளோ உருவாகும். உலகில் எதுவுமே இலவசமில்லை. சுவாசிக்கும் காற்று இலவசம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். இல்லை. நல்ல காற்றை சுவாசிக்க, மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும். தண்ணீர் இலவசமா? இல்லை. இப்போது பாட்டில் பாட்டிலாக விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது. கணிப்பொறி மென்பொருள்களிலும் மறைமுகமான ஒரு விலை இருந்தே தீரும். அதைக் குறைப்பதுதான் ஓப்பன் சோர்ஸ். இயக்கத்தின் குறிக்கோள் விலையை நீக்குவது அல்ல.

தமிழ் கணினியில் எங்கள் நோக்கத்தை மறுபடி நினைவுபடுத்திக் கொள்கிறோம். கணிப்பொறியைப் பயன்படுத்த ஆங்கிலம் தேவையில்லை.

சுஜுாதா
நன்றி: அம்பலம்
[i][b]
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)