![]() |
|
டெய்லி சீரியல் வேண்டாமே! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: டெய்லி சீரியல் வேண்டாமே! (/showthread.php?tid=7770) |
டெய்லி சீரியல் வேண்டா - சாமி - 11-22-2003 சமீபத்தில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர்களின் வீட்டில் ஒரு விஷயம் ரொம்பவும் என்னைக் கவர்ந்தது... "டிவி'யில் தினமும் ஒளிபரப்பாகும் சீரியல்களை அவர்கள் பார்ப்பதில்லை. வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் தொடர்களை மட்டுமே பார்க்கின்றனர். "தினசரி தொடர்கள் நம் அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதித்து விடுகின்றன. குழந்தைகளை கவனிக்க முடிவதில்லை. வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் உபசரிக்க முடிவதில்லை. அக்கம், பக்கத்து கூட்டங்கள் வேறு வந்து இம்சிக்கின்றன. இதனால், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. "வாராந்திர தொடர்கள்ன்னா பிரச்னையில்லை. "டிவி' பொழுது போக்கு சாதனம் தானே ஒழிய, பொழுதை போக்குவது மட்டுமே வாழ்க்கையில்லையே' என்று காரணங்களை அடுக்கினர். வாசக, வாசகியரே... தினசரி தொடர்களால் நம் இயல்பு வாழ்க்கை மாறிப் போவது உண்மைதான்; அதிலிருந்து மீள்வோமே! —பெயர் வெளியிட விரும்பாத பம்மல் வாசகர். நன்றி: தினமலர் |