| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 358 online users. » 0 Member(s) | 355 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,252
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,030
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,419
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,119
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| November 27 |
|
Posted by: vasisutha - 11-25-2003, 12:06 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
[size=18]எம் மண்ணின் விடிவிற்காய் தங்கள் உயிர் தந்து
எங்களை காத்த மாவீரர்களுக்கு
எமது இதயம் கனத்த கண்ணீர் அஞ்சலிகள்.
<img src='http://www.yarl.com/ecards/images/pic_2003-11-22_090951.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| குழந்தைக்கு சாராயம்: முதியோருக்கு வானொலி |
|
Posted by: சாமி - 11-24-2003, 08:56 PM - Forum: புலம்
- No Replies
|
 |
தமிழ்நாட்டில் உள்ள இரண்டரை வயதுப் பாலகனுக்கு ஒரு நாளைக்கு மூன்று பக்கெட் சாராயம் தேவை என்ற இந்தச் செய்தியைப் பார்த்ததும் தேகமெல்லாம் நடுங்கியது. எப்படி ஒரு சிறுவனை அவர்கள் பாழாக்கியிருக்கிறார்கள் என்ற வேதனை ஒருபுறம். இவ்வளவுக்கும் அந்தச் சிறுவன் தாய் தந்தையின் கவனிப்பு ஏதுமில்லாமல் தனது பாட்டியுடன் இருக்கிறானாம். போவோர் வருவோர் ஊட்டிப் பழக்கிவிட அவனுக்கு அதுவே இப்போது சாதாரண உணவாகிவிட்டது..
மேற்படி பாட்டியும் அச் சிறுவனைப் பராமரிக்கத் தெரியாத ஒருவராக இருப்பதால்தான் இந்தநிலைக்குச் சிறுவன் தள்ளப்பட்டான். இந்தக் கெட்டபழக்கம் தொடர்ந்தா இவன் செத்துப்போயிடுவான், என்ன செய்வது இவனை எங்காவது விடுதியில் சேர்த்துவிட வேண்டும், ஆனால் வழி தெரியவில்லை| என்று பத்திரிகைக்காரர்களிடம் புலம்பியிருக்கிறார்.
இதைப் பார்த்தபோது இங்கே நடக்கிற சில அவலங்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து சில உண்மைகளை அவர்களுக்கு விளக்கவேண்டும் என்ற அவா எனக்குள் ஏற்பட்டது. ஏனென்றால் இங்கேயும் ஒரு சில முதியவர்கள் இந்தப் பாலகனைப் போலப் பாழடிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே பாட்டி கவனிக்காதது போல இங்கே இந்தச் சில முதியோர்களின் பிள்ளைகள் இவர்களைக் கவனிக்கவில்லையோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.
தமிழீழத்திலிருந்து இங்கு வந்து குடியேறிய பல முதியவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையோடு ஒத்திசைந்து நல்ல வாழ்வு வாழ்கிறார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே தேவையற்ற சிக்கல்களுக்குள் தாமும் ஈடுபட்டு மற்றையவர்களுக்கும் பிரச்சினை தருபவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறானவர்களுக்கு உண்மையை புலப்படுத்தவே இந்த மடல்.
பொழுது போகாத நேரங்களில்
வானொலியை கேட்கவிரும்பிய அவர்களை விசமாக்கியுள்ளது இங்குள்ள வானொலி ஒன்று. வணக்கம் சொல்லப் புறப்பட்டவர்கள், பாட்டு, தேவாரம், கூத்து என தனது வலைக்குள் இழுத்து அவர்களை இப்போது தனது பகடைக் காய்களாக்குகிறது அந்த வானொலி. இவ்வாறு வானலைக்கு வரும் சில முதியவர்களுக்கு தொலைபேசி மூலம் பேசுவதும், வானலையில் தான் சங்கமிப்பதும் ஆச்சரியம் தரும் செயலாகவும், தனது வாழ்நாளில் இதுவரை செய்யாத ஒரு செயலாகவும் இருந்திருக்கும். எனவே அதை வைத்துப் பிழைப்பைத் தொடங்கிய அந்த நபர் இந்த முதியவர்களை புதைகுழிகளுக்குள் தள்ளியுள்ளார்.
எவ்வாறு வருவோர் போவோரால் சிறிது சிறிதாக சாராயம் கொடுத்து மேற்கண்ட சிறுவன் பாழடிக்கப்பட்டானோ அதேபோல முதியோர் அரங்கம், கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சிகளின் மூலம் படிப்படியாக இந்த முதியோர்கள் தாராளமாகக் கெடுக்கப்பட்டார்கள். தேவையற்ற பிரச்சினைகளையும், தனது வானொலி வளர்ச்சிக்காக தான் செய்யும் பிழையான காரியங்களையும் நியாயமான விடயங்களைப் போல அவர்களுக்குப் புகட்டப்பட்டன.
இதனால் என்ன ஏற்படப்போகிறது என அந்த ஒரு சில முதியவர்கள் எண்ணலாம். அவ்வாறு அவர்கள் நினைப்பதிலும் தவறில்லை. ஆனால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் வருத்தத்தை தங்களது பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் பரப்புகின்ற ஒரு நோய்க்காவிகளாக இருக்கிறார்கள் என்ற உண்மையை இன்னமும் புரியவில்லை.
அங்கே தான் ஆபத்தே ஆரம்பிக்கிறது. ஏனென்றால் முதலில் இந்த முதியோர்கள் சினமூட்டப்படுகிறார்கள். அவர்களுக்குத் தேவையற்ற ஒரு பிரச்சினையை அவர்களிடத்தே புகுத்துவதன் மூலம் அவர்கள் சினமேற்றி கோபநிலைக்கு மாற்றப்படுகிறார்கள். ஏற்கனவே இரத்தக் கொதிப்பு, இருதய அழுத்தம், நீரிழிவு, மன அழுத்தம் போன்ற நோய்களை பல முதியவர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையற்றதைப் புகுத்தி அவர்கள் கோபமூட்டப்பட்டதும், சினங் கொள்ள வைக்கப்பட்டதும் அவற்றை அவர்கள் தங்களின் இரத்த உறவுகளிடையேயே தீர்க்க முயலுவார்கள். அவர்களிடமே தங்கள் கோபத்தை இவர்கள் வெளிப்படுத்த முடியும்.
தாங்கள் மீண்டும் வானலைக்கு வர வேண்டுமென்றால் வானொலிக்காரர் சொல்வதற்கு ஆமாப் போட்டேயாகவேண்டும். அவர் சொல்வது பிழையென்பதை சுட்டிக்காட்ட விரும்பினாலும், சுட்டிக்காட்டினால் அடுத்த முறை வானலைக்கு வர முடியாதே என்ற பயம் அவர்களைத் தடுத்துவிடும். எனவே விருப்பமற்றவற்றையும் இந்த முதியவர்கள் ஏற்றுக் கொள்ள பலவந்தப்படுத்தப்படுகிறார்கள்.
அதையே வானொலிக்காரர் தனக்குச் சாதகமாக்கி தனது வியாபாரத்தை திறம்பட நடத்துகிறார். இந்த முதியவர்களைத் தனது ஆசைகளுக்குப் பலியாக்குகிறார். இங்கேயுள்ள முதியோர் இளைப்பாறுமிடங்கள், முதியோர் தங்ககங்களை எடுத்து நோக்கினால் அவை அனைத்தும் முதியவர்கள் மனச்சாந்தியாக, அமைதியாக இருப்பதற்கான நிகழ்ச்சிகளையே தயாரித்து வழங்குகின்றன.
ஆனால் இங்கே முதியோர் அரங்கு மற்றும் கலந்துரையாடல் என்ற போர்வையில் எடுக்கப்படும் சகல விடயங்களும் குழப்பான விடயங்களாகவே இருக்கின்றன. இதுதான் அவர் உங்களுக்கு ஊட்டும் விசம். இவ்வாறு கோபமூட்டப்பட்ட இந்த முதியோர்கள் தங்கள் மன அழுத்தத்தை எங்கே கொட்டித் தீர்ப்பார்கள்? பாவம் இவர்களது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும். ஏன் மருமக்களும் தான். ஏனென்றால் செய்வதற்கு ஏதுமற்ற இவர்கள் தாங்கள் வானலையில் பிரபல்யப்படுத்தப்பட்ட விடயத்தைப் பற்றியும், அடுத்த நிகழ்ச்சியில் எவ்வாறு கதைப்பது என்பது பற்றியும் தொடர்ந்து சிந்திப்பார்கள்.
இதனால் தங்கள் நாளாந்த கடமைகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்குரிய பாசங்களை எவற்றையும் அவர்களால் தகுந்த அளவுக்கு வழங்க முடியாது. குறிப்பாக தங்களது மன அழுத்தம், இரத்த அழுத்தம் ஆகியவற்றை அதிகரித்து தங்களின் மரணத்துக்கான திகதியை விரைவாக்கும் பணியையும் செய்து வருகிறார்கள்.
யோசித்துப் பாருங்கள். உங்களுக்குச் சொல்லப்படுபவை எல்லாம் நிஜமானவையா? இல்லவே இல்லை. முன்கூட்டியே ஒழுக்குபடுத்தப்பட்ட ஒரு சிலர், வானொலிக்காரர் நிகழ்ச்சியை ஆரம்பித்ததும், தங்களது வசைகளை எடுத்து விடுவார்கள். அது அந்த விடயத்திற்கு எண்ணெய் ஊற்றி நெருப்பை பெரிதாக்குவது போலாகும். பிறகென்ன நீங்கள் ஒரு சிலர் விட்டில் பூச்சிகள் போல அதற்குள் விழுந்து உங்களை அழித்துக் கொள்வீர்கள்.
உங்களது காசுகூட எவ்வாறு உங்களிடம் இருந்து சுரண்டப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? அந்திப்பூக்கள்| ஆகட்டும், அப்பே ரட்ட| ஆகட்டும் தமிழீழப் பிரச்சினையை மையமாக வைத்தே அவர் நடத்தினார். ஏனென்றால் அப்படியாயின் தானே மக்களைக் கவர முடியும். ஆனால் பணத்தை இழந்தது நீங்களல்லவா? இப்போது உணர்ச்சி வசப்படும் இந்த முதியவர்களில் எத்தனைபேர் அப்போது இருந்தீர்களோ தெரியாது, ஆனால் ஒரு விடயத்தை மட்டும் பார்ப்போம்.
இவரது அந்திப்பூக்களுக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலை சம்பந்தப்பட்டவர்கள். வை.கோ. மற்றும் வர்ணரமேஸ்வரன், வண. பிதா ஜெகத் காஸ்பர்ராஜ் என எல்லோரும் விடுதலை சம்பந்தப்பட்டவர்கள். நிதி தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு என்ற பிரச்சாரம் ஒருபக்கம். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தான் அரங்கை ஒழுங்கு செய்வது உட்பட பலவேலைகளைச் செய்து கொடுத்தது. நூறு டொலர்கள் பெறுமதியான ரிக்கற்றைப் பெறுமாறு முதியவர்கள் வானொலியூடே வற்புறுத்தப்பட்டார்கள். பெயர்கள் கூட வாசிக்கப்பட்டு மற்றைய முதியவர்களும் இந்த நயவஞ்சக வலைக்குள் வீழ்த்தப்பட்டனர்.
இவ்வாறு விடுதலையைப் பயன்படுத்தினாலே சனம் திரளும் என்பதால் அதனைப் பயன்படுத்தியவர் ஒருசதமேனும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்குக் கொடுக்கவில்லை. வானலையில் நீங்கள் வந்து கண்டித்ததும் அவர் அழுதார், தொடர்ந்து அழுதார். தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு காசு கொடுப்பதாக அறிவித்தார், நீங்கள் கரைந்து விட்டீர்கள். 7,000 பேர் கலந்து கொண்ட நிகழ்வில் இவர் ஈட்டியது சுமார் 2 மில்லியன்களுக்கு மேல். ஆனால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்குக் கொடுக்க ஒப்புக் கொண்டது வெறும் 60,000 (அறுபதினாயிரம் டொலர்கள்) மட்டுமே.
நீங்கள் நிம்மதியடைந்தீர்கள். ஆனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நூறு தடவைக்கு மேல் தொடர்பு கொண்டும் காசைப் பெறமுடியவில்லையாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்த்தீர்களா எவ்வாறானதொரு மோசடிப் பேர்வழியுடன் நீங்கள் இப்போது பழகுகிறீர்கள் என்பதை? இவ்வாறு ஒருபக்கமாக பணத்தால் ஏமாற்றப்படும் நீங்கள் மற்றப்பக்கத்தால் உங்கள் உடல், உளநலத்தையும் இழந்து வருகிறீர்கள் என்பதை அறிவீர்களா? உங்கள் நல்ல மனங்களில் நீங்கள் இப்போது அசுத்தத்தை சுமக்கத் தொடங்கியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
எனவே சிந்தியுங்கள். நீங்கள் உங்கள் வயதுக்குரிய பொழுது போக்குகள் மற்றும் தன்னம்பிக்கையூட்டும் வழிகளை நாடி உங்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளும் வழிநடத்தும் நற்பிரஜைகளாக மாறுங்கள். உண்மைத் தன்மையற்றவற்றில் பங்குபற்றி உங்களை நீங்களே இழக்காதீர்கள். ஏனென்றால் ஒருமுறை நீங்கள் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்பவை உங்களை மீண்டும் மீண்டும் சிக்கலுக்குள் ஈடுபட வழிவகுக்கும்.
ஏனவே நீங்கள் சொன்னவற்றை வைத்தே அவர் மீண்டும் உங்களை மேலும் மனச் சிக்கலுக்கும், உளச்சிக்கலுக்கும் உள்ளாக்குவார். இதுவே உங்களை வைத்தியர்களை மீண்டும் மீண்டும் நாட வைக்கும். என்ன நான் சொல்வது புரிகிறதா?
புரியாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகளிடம் இதைக்காட்டி இவ்வாறான தாக்கங்கள் உங்களுக்கும் ஏற்படுமா எனக் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு உண்மையைத் தெரிவிப்பார்கள்.
இரண்டரை வயதுப் பாலகனுக்கு எவ்வாறு சாராயமோ அதுபோலவே உங்களில் சிலருக்கு இந்த வானொலியும்.
- ஜே. ஆசிர்வாதம், மின்னல்.
நன்றி: முழக்கம்
http://www.muzhakkam.com/21112003/FrontNew...ews/News_05.htm
|
|
|
| பரிகாரம் |
|
Posted by: சாமி - 11-24-2003, 08:55 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (2)
|
 |
நிறைய பாவம் பண்ணின ஒருத்தன், சாமியார் ஒருத்தரைத் தேடிப் போய் ""சாமி! இத்தனை நாளா வதந்திகளைப் பரப்பி நிறைய பேரை கெடுத்திருக்கேன். அந்தப் பாவங்களிலிருந்து விடுதலை பெற ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்''னு கேட்டான்.
""உன் வீட்டில் தலையணை இருக்கா?''ன்னு கேட்டாரு சாமியார்,
இருக்கு சாமின்னான் வந்தவன். அதைக் கொண்டு வரச் சொன்னாரு சாமியார். அவனும் வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வந்தான்.
இந்த தலையணையை எடுத்துப் போய் ஊர் நடுவில் வைத்து பிரித்து பஞ்சை நாலா பக்கமும் பறக்க விட்டுட்டு வா''ன்னாரு சாமியார்.
வந்தவனும் தலையணையை பிரிச்சு, பஞ்சை பறக்க விட்டுட்டு திரும்பவும் சாமியார்கிட்ட வந்தான். சாமி! நீங்க சொன்ன மாதிரியே செய்துவிட்டேன்.
இப்ப நீ செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் சொல்றேன். தீ பறக்க விட்டுட்டு வந்த பஞ்சையெல்லாம் பொறுக்கி பழையபடி தலையணையில் அடைத்துவிட்டால் போதும். அதுதான் பரிகாரம்.
வந்தவன் அதிர்ச்சியடைஞ்சான். ""சாமி! அது எப்படி முடியும்? காத்துல பறந்த பஞ்சை நான் öப்படி சேகரிக்கிறது?''ன்னு கேட்க,
நீ செய்த பாவத்துல பாதிக்கப்பட்டவங்களோட மனச்சுமையையும் சரி செய்ய முடியாது. அதை சரி செய்ய முடியாதபோது பரிகாரம் மட்டும் எப்படி செய்ய முடியும். அதனால இனிமேலாவது பாவம் செய்றதை விட்டுட்டு எப்பவும் தர்ம வழியில் நடப்பதுதான் நல்லது.''
|
|
|
| பாராட்டுகள் |
|
Posted by: இளைஞன் - 11-24-2003, 06:51 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (45)
|
 |
<b>பாராட்டுகள்</b>
வணக்கம் நண்பர்களே...
இங்கு கருத்தாடும், மற்றும் புதிய தகவல்களை பரிமாறும் அனைத்து கருத்துக்கள நண்பர்களையும் ஊக்குவிக்கும் வண்ணமும், இன்னமும் தொடர்ந்து எழுத ஆர்வத்தை உண்டுபண்ணும் வண்ணமும் களத்தில் அவர்களுடைய தனிச் சிறப்புகளைக் கண்டறிந்து பாராட்டுவோம்.
பாராட்டுவதன் மூலம் கள அங்கத்துவர்களிடையே ஒரு புரிந்துணர்வும், நட்புடனான பிணைப்பும் உண்டாகும் என்பதால் தான் இந்தத் தலைப்பு. மற்றும் கள நண்பர்களிடம் பொறுப்புணர்வை வளர்க்கவும் இது பயன்படும் என்பது எனது நம்பிக்கை.
அந்தவகையில் நான் முதலாவதாக இருவரைப் பாராட்டுகிறேன்:
<b>ஆதிபன்</b>
யாழ் கருத்துக்களத்தில் இணைந்ததிலிருந்து இதுவரையிலும் பண்பாக அருமையான பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். இன்று அவர் தனது 200 ஆவது பதிப்பினை இங்கு பதித்துள்ளார். காதல் பொங்க கவிதைகள் படைப்பார். சமூகம் சார்ந்த நற் கருத்துக்கள் தருவார். அறிவியலுக்குள்ளும் காலெடுத்து வைத்துள்ளார். வந்த வேகத்தில் 200 படைப்பு - அற்புதம்! தொடர்ந்தும் இவர் நிறைய எழுதி எம்மை மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
<b>வானதி</b>
யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடும் இளைஞர்களில் ஒருவர் இவர். இதுவரை 35 பதிப்புகள் பதித்துள்ளார். தமிழில் எழுதுவதில் கவனமாகவும், ஆர்வமாகவும் இருப்பவர். தொடர்ந்தும் சோராமல் களமாடுபவர். இன்னும் 15 பதிப்புகள் எழுதினால் இவருக்கு இடைநிலை அங்கத்துவம் வழங்கப்படும். அந்த வகையில் வாழ்த்துக்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள். அதேநேரம் உங்களிடமிருந்து நிறைய அரியபல தகவல்களையும் எதிர்பார்க்கிறோம்!
மற்றவர்கள் தொடருங்கள்...
|
|
|
| மாரடைப்பில் இருந்து காத்துக்கொள்வது |
|
Posted by: aathipan - 11-24-2003, 12:55 PM - Forum: மருத்துவம்
- Replies (1)
|
 |
மாரடைப்பில் இருந்து எப்படி காத்துக்கொள்வது
ஒரு நாள் நீங்கள் மாலை வேலைமுடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கின்றீர்கள். என்றும்போல அல்லாது அன்று மிகவும் களைத்துப்போய் உள்ளதாக உணர்கிறீhகள். திடீரென உங்கள் இதயத்தில் வலி எடுக்கிறது. அது உங்கள் கைமூட்டு மற்றும் நாடிவரை பரவுகிறது. நீங்கள் மருத்துவமனையில் இருந்து சுமார் ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறீர்கள். ஆனால் உங்களால் மேற்கொண்டு சமாளிக்கமுடியவில்லை. எப்படி நீங்கள் உங்களை தற்காத்துக்கொள்வது?. முதலுதவி கற்றுக்கொடுத்தவர்கள் இதை உங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்க மறந்திருக்கலாம். மாரடைப்பில் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் பேர் தனியாக இருப்பதால் அவர்களைக் காப்பாற்றமுடியாமல் போய்விடுகிறதென்பது மறுக்கமுடியாத உண்மை..
ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் தற்காத்துக்கொள்ளமுடியும் என்கிறது இந்த மருத்துவஆலோசனை. நீங்கள் மயங்கியநிலைக்;கு சென்று பத்து செகண்ட்டுகளுக்கு பின்தான் இதயத்துடிப்பு நின்றுபோகிறது. அந்த நிலைக்குச்சென்றுவிடுவதற்கு முன்பாகவே நீங்கள் உங்களை காத்துக்கொள்ளலாம். இம்முறை மிக இலகுவானது. நீங்கள் செய்யவேண்டியது இது தான். நீங்;கள் தொடர்ந்து இருமவேண்டும். கொஞ்சம் வருத்தி இருமவேண்டும். ஓவ்வொரு இருமலுக்குஇடையிலும் அடிவயிற்றில் இருந்து நீண்ட மூச்சுவிடவேண்டும. நன்றாக காற்றை இழுத்துவிடவேண்டும். இப்படி நீங்கள் ஒவ்வொரு இரண்டு செகண்டுகளுக்கு ஒருமுறை இருமலாம். உதவி கிடைக்கும் வரையோ அல்லது உங்கள் இதயம் சாதாரணநிலைக்கு வரும்வரையோதொடர்ந்து நீஙகள் இப்படிச்செய்யலாம்.
நீண்ட பெருமூச்சுவிடுவதால் உங்கள் இதயம் பிராணவாயுவைப்பெறுகிறது. நீங்கள் இருமும்போது இதயத்திற்கு ஒருவகை அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அது உங்கள் இதயத்தை பழையபடி சீராக இயங்கச்செய்கிறது.
நன்றி
Health Cares, Rochester General Hospital
|
|
|
| suntv vs பிதாமகன் |
|
Posted by: yarl - 11-24-2003, 08:30 AM - Forum: சினிமா
- Replies (6)
|
 |
சன் டி.வி. மீது டைரக்டர் பாலா பாய்ச்சல்
பாலா
சென்னை, நவ. 24- பிதாமகன் படம் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக சன் டி.வி. மீது டைரக்டர் பாலா புகார் கூறி உள்ளார். மதுரையில் இதற்காக போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தார்.
பாலா
சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் பாலா நேற்று சென்னையில் உள்ள அவரது அலுவலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது„-
பிதாமகன் படம் பற்றி முதல்வாரத்தில் சன் டி.வி.யில் ரொம்பவும் பிரமாதமாக புகழ்ந்து விமர்சனம் செய்தார்கள். சம்பந்தப்பட்ட தயாhpப்பாளர், விநியோகஸ்தரை தங்கள் பக்கம் கவர்வதற்காக இதுபோல் செய்தி ருக்கிறhர்கள். பின்னர் அவர்களை அழைத்து படத்தை மிக சொற்பவிலைக்கு கேட்டிருக்கிறhர்கள். அந்த வியாபாரம் என்ன ஆனது என்று எனக்கு தொpயவில்லை. ஆனால் அடுத்த வாரம் மீண்டும் விமர்சிக்கும் போது பிதாமகனை பார்த்து குழந்தைகள் பயப்படுகிறhர்கள், பெண்கள் எழுந்து ஓடுகிறhர்கள், பெட்டி திரும்பி வந்துவிட்டது என்று விமர்சித்தார்கள். அதை கண்டித்து நான் பேட்டி கொடுக்க நினைத்தபோது என்னிடம் பேசினார்கள். அடுத்தவாரம் பாருங்கள் இதுபோல் விமர்சனம் வராது என்றhர்கள். ஆனால் அடுத்தவாரம் பிதாமகன் படத்தை முதலிடத்திலிருந்து எடுத்துவிட்டார்கள். இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டார்கள்.
இப்படத்தை முதலில் நன்றhக விமர்சனம் செய்தவர்கள் அடுத்தவாரம் தரக் குறைவாக விமர்சிக்க காரணம் என்ன? இரவு பகல் பாராமல் ஆயிரக்கானவர்கள் இப்படத்தை உருவாக்க காட்டிலும்மேட்டிலும் அலைந்து கஷ்டப்பட்டிருக்கிறேhம். சினிமாவைதான் சன் டி.வி.பிரதானமாக கொண்டு செயல்படுகிறது. இப்படத்தை பொருத்தவரை திரையிட்ட எல்லா தியேட்டர்களிலும் மக்கள் ஆதரவுடன் நன்றhக ஓடிக் கொண்டிருக் கிறது. கேராளாவில் முந்தைய பட வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது நியாயமான விமர்சனத்தை நான் ஏற்க தயாராக இருக்கிறேன். ஆனால் இப்படத்தை ஏன் தரகுறை வாக விமர்சிக்க வேண்டும். அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை நான் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறேன். என் தலையில் ஒரு குட்டு குட்டினால்; நான் இரண்டு குட்டு குட்டுவேன். முதல் கட்டமாக மதுரையில் ஒன்றிரண்டு நாளில் போராட்டத்தில் ஈடுபடுகிறேன். அடுத்து எல்லா இடங்களிலும் தொடர் போராட்டம் நடத்துகிறேன். மேலும் சட்ட hPதியாகவும் நடவடிக்கை எடுக்க உள்ளேன். இதற்கு சினிமா துறையினர் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பி.ஆர்.ஓ. முத்துராமலிங்கம் உடனிருந்தார்.
dinakaran.com
|
|
|
| மாவீரருக்கு அஞ்சலி |
|
Posted by: P.S.Seelan - 11-24-2003, 06:03 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மாவீரருக்கு அஞ்சலி.
துன்பத்தில் இருந்து காக்கும் கடவுளைக் கண்ணால் பார்க்கமுடியாது. ஆனால், தமிழ்மக்களின் உயிர் களைக்காத்து துன்பதுயரங்களில் இருந்து விடுவித்த மாவீரர்கள் கண் கண்ட தெய்வங்களே.[size=18] <b>இந்த மாவீரர் களுடைய கனவுகள் நனவாக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் மாவீரர்நிகழ்வு என்பது புலிகளதுநிகழ்வு, புலிகளால் ஒழுங்குபடுத்தப்படும் நிகழ்வு என்ற நிலை மாற்றப்படவேண்டும்.</b> எமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக உரிமைகளைத் தியாகம் செய்தவர்கள் அவர்கள். அந்த காவல் தெய்வங்களுக்கு விழா எடுக்க வேண்டியவர்கள் மக்களாகிய நாங்களே.
(நன்றி : சர்வதேச மாணவர் பேரவை. - உதயன்.)
கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!!
வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!!
நீர் சொரியும் மனதுடனே தேடி வருகிறோம்…
தீ எரியும் விழிகளுடன் தேசம் தேடுகிறோம்…
கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!!
வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!!
உயிரை நெய்யாக்கி உணர்வை தீயாக்கி
விழியில் ஒரு தீபம் ஏற்றுவோம்…..
உயிர்கள் உருகியே உணர்வு சுடரிடும்
பொழுதும் நினைவாகி போற்றுவோம்…
கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!!
வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!!
கால வெளி தாவி பாயும் ஒளியாகி
வாழ்வில் ஒளி தீபம் ஏற்றினீர்….
காலம் வளமாக நேரம் இனிதாக
வீர வரலாறு ஆகினீர்.
கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!!
வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!!
தலைவன் நினைவாக தாயின் கனவாக
தேசம் காண நீர் ஓடினீர்
எங்கள் கனவு நனவாக,
கோலம் புதிதாக விதையும் பொருள் ஆக ஆகினீர்,
கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!!
வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!!
புயல் நீங்கும் ஒரு நாளில் மீண்டும் வருவீர்
உயிராகி வாசல் வந்து எம்மில் உறைவீர்
அந்நாளில் அசைந்தாடும் புலியின் கொடியும்
அந்நாளில் அசைந்தாடும் புலியின் கொடியும்
எம் வானில் உயர்ந்தேறி
இருக்கக் காண்பீர்! இருக்கக் காண்பீர்!!
புயல் நீங்கும் ஒரு நாளில் மீண்டும் வருவீர்!
மீண்டும் வருவீர்!! மீண்டும் வருவீர்!!!
(நன்றி : வெஞ்சமரின் வீர வரிகள்)
அன்புடன்
சீலன்
|
|
|
| உலகின் முதலாவது புகைப்படம் |
|
Posted by: சாமி - 11-23-2003, 12:07 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
உலகின் முதலாவது புகைப்படம்.
<img src='http://www.yarl.com/forum/files/1st_photo.jpg' border='0' alt='user posted image'>
இப் புகைப்படத்தினை எடுத்தவர் : Joseph Nicephore Niepce
ஆண்டு: 1826
படம் :J. PAUL GETTY MUSEUM/AP
|
|
|
|