![]() |
|
மாவீரருக்கு அஞ்சலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மாவீரருக்கு அஞ்சலி (/showthread.php?tid=7758) |
மாவீரருக்கு அஞ்சலி - P.S.Seelan - 11-24-2003 மாவீரருக்கு அஞ்சலி. துன்பத்தில் இருந்து காக்கும் கடவுளைக் கண்ணால் பார்க்கமுடியாது. ஆனால், தமிழ்மக்களின் உயிர் களைக்காத்து துன்பதுயரங்களில் இருந்து விடுவித்த மாவீரர்கள் கண் கண்ட தெய்வங்களே.[size=18] <b>இந்த மாவீரர் களுடைய கனவுகள் நனவாக்கப்பட வேண்டும். இந்நிலையில் மாவீரர்நிகழ்வு என்பது புலிகளதுநிகழ்வு, புலிகளால் ஒழுங்குபடுத்தப்படும் நிகழ்வு என்ற நிலை மாற்றப்படவேண்டும்.</b> எமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக உரிமைகளைத் தியாகம் செய்தவர்கள் அவர்கள். அந்த காவல் தெய்வங்களுக்கு விழா எடுக்க வேண்டியவர்கள் மக்களாகிய நாங்களே. (நன்றி : சர்வதேச மாணவர் பேரவை. - உதயன்.) கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!! வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!! நீர் சொரியும் மனதுடனே தேடி வருகிறோம்… தீ எரியும் விழிகளுடன் தேசம் தேடுகிறோம்… கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!! வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!! உயிரை நெய்யாக்கி உணர்வை தீயாக்கி விழியில் ஒரு தீபம் ஏற்றுவோம்….. உயிர்கள் உருகியே உணர்வு சுடரிடும் பொழுதும் நினைவாகி போற்றுவோம்… கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!! வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!! கால வெளி தாவி பாயும் ஒளியாகி வாழ்வில் ஒளி தீபம் ஏற்றினீர்…. காலம் வளமாக நேரம் இனிதாக வீர வரலாறு ஆகினீர். கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!! வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!! தலைவன் நினைவாக தாயின் கனவாக தேசம் காண நீர் ஓடினீர் எங்கள் கனவு நனவாக, கோலம் புதிதாக விதையும் பொருள் ஆக ஆகினீர், கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!! வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!! புயல் நீங்கும் ஒரு நாளில் மீண்டும் வருவீர் உயிராகி வாசல் வந்து எம்மில் உறைவீர் அந்நாளில் அசைந்தாடும் புலியின் கொடியும் அந்நாளில் அசைந்தாடும் புலியின் கொடியும் எம் வானில் உயர்ந்தேறி இருக்கக் காண்பீர்! இருக்கக் காண்பீர்!! புயல் நீங்கும் ஒரு நாளில் மீண்டும் வருவீர்! மீண்டும் வருவீர்!! மீண்டும் வருவீர்!!! (நன்றி : வெஞ்சமரின் வீர வரிகள்) அன்புடன் சீலன் |