Yarl Forum
November 27 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: November 27 (/showthread.php?tid=7752)



November 27 - vasisutha - 11-25-2003

[size=18]எம் மண்ணின் விடிவிற்காய் தங்கள் உயிர் தந்து
எங்களை காத்த மாவீரர்களுக்கு
எமது இதயம் கனத்த கண்ணீர் அஞ்சலிகள்.

<img src='http://www.yarl.com/ecards/images/pic_2003-11-22_090951.jpg' border='0' alt='user posted image'>


- kuruvikal - 11-25-2003

<img src='http://www.tamilmaravan.com/Backround/Animation/fire.gif' border='0' alt='user posted image'><img src='http://www.tamilmaravan.com/heros/Heros_Page_Pic/MAAVITAR.gif' border='0' alt='user posted image'><img src='http://www.tamilmaravan.com/Backround/Animation/fire.gif' border='0' alt='user posted image'>

[b][size=18]மரணத்துகஞ்சும் மனிதரல்ல நீவீர்
மரணத்துள்ளும் இலட்சியம் தேடும்
அற்புதங்கள் நீவீர்...!
மரணத்தால் உம் சரீரம் அழித்தீர்
மண்மட்டுமல்ல
தமிழன் மானம் காக்கவுமே..!
இல்லையில்லை
[size=18][b]மண்ணில் புதிய சரித்திரம் படைக்கவே....!
உமக்காய் நாம் செய்வது
எம்மரணம் வரை
உம் சாதனை காப்பதுவும் -அதை
சந்ததிகள் கொண்டு
மண்ணில் என்றும்
நிலைப்படுத்துவதுமே....!


- தணிக்கை - 11-25-2003

உடைந்து சிதறிய
உடலங்களைக் கடந்த அனுபவம்
இன்னும் இருக்கிறது..
ஓடிய குருதி உறைந்திருந்த நிறம்..
நெஞ்சுக்குள் கனக்கிறது..
ஓடி ஒளித்து எப்போதோ விலகியவளல்ல நான்..
உன்னுடன்.. என் சகோதரர்களுடன்..
ஏங்கிய குழந்தைகளுடன்..
அலறித்துடித்த என் தாயும் தந்தையும் போல்
எத்தனையோ தாயோடும் தந்தையரோடும்
போரின் அனுபவங்களைப் புறமுதுகில் சுமந்தவள் தான்.. ஆனாலும்..
போராட்ட அனுபவம்?
அந்த வீரத்தின் நிஜத்தை
வெளிக்கொணர சக்தி எனக்கில்லை
நான் கண்டது நிழல்
நீ? அதன் நிஜம்!

களத்திலிருந்து நான்
கவிதை யாத்திருந்தால்
அது... நிஜமாய் இருந்திருக்கும்
இது
உன் உணர்வுகளின் நிழல் மட்டும் தான்
நீ நின்றிருந்த அந்தப் பரந்த வெளிக்கும்
உன்னில் பட்டுத் தெறித்த ஒளிக்கும்
ஈடு கொடுத்து..
என்னிடம் விழுந்த சிறிய நிழல்..
உன் உணர்வுகளின் விஸ்வரூபத்தை
வெளிக்கொணர சக்தி எனக்கில்லை
சங்கடமாய் இருக்கிறது..

ஒரு இனிய மாலையில்
நீ நின்றிருந்தாய் அந்தப் பெருவெளியில்..
வானம் பார்த்து.. கவிதை பாடினாய்..
பறவைகள் பார்த்து..
சுதந்திரத்தின் மகிமையை எனக்குச் சொன்னாய்..
உயிரை விடவும் உரிமையே பெரிதென்றாய்..
உனக்குள்ளே உறுதி..
சிரித்த கண்களுக்குள் செந்தணலாய் வீரம்..
இன்றும் இனிமேலும் என்றும் நாம் நண்பரென்றாய்..
விடைபெற்றாய்...
அரை நொடி நடந்து பின் திரும்பவும்
அந்த அன்புப் பார்வையை வீசினாய்..
கை அசைத்தாய்..
எனக்குப் புரியவில்லை... அது
உன் இறுதி விடைபெறலென்று..

வானம் அதிர்ந்தது திடீரென்று..
விருட்சங்கள் சரிந்தன..
ஓலங்கள் உயர்ந்தன..
உடல்கள் விழுந்;தன..
நாம் ஓடினோம்.. ஒதுங்கினோம்..
இளைத்து.. களைத்து.. ஒரு துளி நீருக்காய்
பார்த்து.. சலித்து.. நா வரள..
பயத்தில் நெஞ்சுலர..
நடுங்கி நாம் நின்றிருந்தோம்...
நீ மட்டும்..
நாம் பார்த்திருக்கப் போனாய்..
வெற்றிச் செய்திக்காய்க் காத்திருக்கச் சொன்னாயாம்..
உன் கரிய உடைக்குள் கவிந்திருந்த உறுதியுடன்..!

பேரொலி எழுந்தது
புகை மூட்டம் கிளர்ந்தது
வெற்றி கண்களுக்குள்..
உன் பிஞ்சு முகம் நெஞ்சுக்குள்..
நினைவுகள் பிராண்டின
உதடு துடித்தது.. கண்ணீர் மண் தொட்டது..
நீ மாவீரனானாய்..
தாய் மண் உன் சுவடுகளைத்
தனக்குள்ளே வாங்கிக் கொள்ள..
எம் வீர வரலாறு
உன்னைத் தன் புத்தகத்தில் எழுதிக் கொள்ள..
நீ நிஜமானாய்... நிழல் மட்டும்
நிரந்தரமாய் நீண்டு செல்ல..

நன்று நன்றென நீங்கள் நடந்த பின்..
இன்று இன்னொரு கார்த்திகை 27!
உங்களின் துயிலில்
எங்களின் இறைஞ்சுதல்
அந்த அமைதிப் புூங்காவில்
ஆத்மாக்களின் ஆரவாரம்..
இன்னும் நம்புங்கள்..
உரத்துக் கூவுங்கள்..
சாவுக்கு அஞ்சாத சந்தன மலர்களே..
உங்கள் ஆசைகள் உணர்வோடும் உயிரோடும்..
மக்கள் புரட்சி மலர்ந்ததைப் பார்த்திருப்பீர்
ஈழமண் சிரிக்கும் இன்னும் காத்திருப்பீர்..
து}ங்கவில்லை சேனை..
துடிப்போடு இருக்கிறது..
வுரலாறு சொல்லும்
எம் வழக்காறு வெல்லும்.


நியுூசிலாந்திலிருந்து தர்மதா


- P.S.Seelan - 11-25-2003

சாவுக்கு அஞ்சாத சந்தன மலர்களே..
உங்கள் ஆசைகள் உணர்வோடும் உயிரோடும்..
மக்கள் புரட்சி மலர்ந்ததைப் பார்த்திருப்பீர்
ஈழமண் சிரிக்கும் இன்னும் காத்திருப்பீர்..
து}ங்கவில்லை சேனை..
துடிப்போடு இருக்கிறது..
வுரலாறு சொல்லும்
எம் வழக்காறு வெல்லும்.

மலர் கொண்டு வருகின்றோம், மனம் நிறைய உங்கள் நினைவுடனே செல்கின்றோம்.
இன்று மட்டுமல்ல என்றென்றும் எம் உயிரின் சுவாசக்காற்றாய். எம் மண்ணில் தென்றலாய் நீவீர் வாழ்வீர்.

அன்புடன
சீலன்