Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 416 online users.
» 0 Member(s) | 413 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,252
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,031
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,419
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,120
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  ஒரு நாடுதேடி...
Posted by: aathipan - 11-30-2003, 07:00 PM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

<img src='http://www.adra.org/images/Resources/boat.gif' border='0' alt='user posted image'>


ஒரு நாடுதேடி...

9 நவம்பர் 90 இரவு சுமார் 9 மணி

எங்கும் இருள்.. அமைதி..

படகை இயக்கிய இயந்திரத்தின்
பட பட ஓசையும்
முன்னேறும் படகில்
வீரத்துடன் மோதி உடையும்
அலைகளின் ஓசையும்
பின்னாலே படகு விரட்டிவிடும்
கடல் நீரின் சத்தமும்தான்...

அன்று வானத்தில் நிலவுக்கு
விடுமுறைபோல....
ஓரிரண்டு நட்சத்திரங்கள் தான்
கண்சிமிட்டிப்பேசிக்கொண்டிருந்தன...

சுற்றி எங்கும் கறுப்பாய்க் கடல்
ஆழம் என்ன என்று
வெளியில் காட்டாத கறுப்புக்கடல்
அமைதியான கடல்

படகு அலையில் மோதி அசைந்தாலும்
அது தொட்டிலில் வைத்து
ஆட்டியது போலத்தான்
சுகமாக இருந்தது..

அதனால் தான்
வேதனை, வெறுப்பு, விரக்த்தி, என
அத்தனையும் மறந்து
அங்கிருந்தவர்கள் அத்தனைபேரும் அமைதியாக
அடங்கிப்போய் இருந்தார்கள்....

பலர் கண்மலர்ந்துவிட்டிருந்தனர்...
போதும் போதும் பட்டதுன்பம் போதும்
இனி சுதந்திரம் பெற்றஒரு புூமியில்
கண்விழிப்போம் என்று எண்ணியிருப்பார்களபோலும்....

அழுது அழுது ஓய்ந்த
கண்கள் அமைதியாக
ஓய்வெடுத்துக்கொண்டிந்தன...

படகின் முன்னாலே
இருந்தவர்கள் வாலிபர்கள்..
அலையடித்து மேலே கொட்டும்
கடல்நீரைககொஞ்சம்கூட
சாட்டைசெய்யவில்லை...
எத்தனையோ பார்த்தாயிற்று
இது என்ன என்று
அசைந்துகூடக்கொடுக்கவில்லை...

குளிர்ந்த காற்று மட்டும்தான்
அரவனைத்துச்சென்றது...
காதுக்குள் கவலைவேண்டாம் என்பதுபோல்...
ஏதேதோ அதன் மொழியில்
சொல்லிவைத்தது...

பாதிக்கண்
மூடியிருந்த என்கண்களில்
உன் விம்பங்கள்;...
உன் பேச்சொலிகள்...

Print this item

  சேதுவின் உளவா? இழவா?
Posted by: ganesh - 11-30-2003, 06:39 PM - Forum: புலம் - Replies (24)

சேதுவின் உளவா? இழவா?

எழுதுங்கள் உங்கள் கருத்துக்களை

Print this item

  என் காதல்
Posted by: thamarai - 11-30-2003, 03:42 PM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

<b>என் காதல்</b>

<b>படைப்பு: தாமரை (பிரான்ஸ்)
----------------------------------</b>

<img src='http://www.yarl.com/forum/files/love.jpg' border='0' alt='user posted image'>

அன்பே!

நீ என்னை சோதிக்கும் போதுதான்
என் காதலின் ஆழம் புரிந்தது

பெண் மனது ஆழம் என்பார்கள்
ஆழமான காதலை
பெண்கள் அடக்கி வைத்திருப்பதாலோ?

உனது மூச்சுக் காற்றை
நான் உணர வேண்டும்
அதற்கு அனுமதி அளிப்பாயா?

உன்னை அடைய முதலே
உன் உறவுகளை
நேசிக்கத் தொடங்கி விட்டேன்!

உன் வீட்டு முற்றத்து ரோஜாக்களைக் கூட
சூடிப் பார்த்து விட்டேன்!
என் கனவில்!

உன்னோடு சேர்ந்தால்
நிஜத்தில் வாழ்வேன்
இல்லையேல்,
உன் நினைவில் வாழ்வேன்!

Print this item

  மலரும் நேரம்
Posted by: thamarai - 11-30-2003, 03:30 PM - Forum: அறிமுகம் - Replies (23)

எல்லோருக்கும் முகமலர்ந்து வணக்கங்கள் கூறுகிறேன்.

கருத்துக் களத்திற்குள் புதிதாய் இணைந்துள்ளேன்.
ஆனால் எனது கவிதைகள் எனக்கு முன்னர் இங்கே
இணைந்துவிட்டன.

எனது கவிதைகளுக்கு கருத்து தெரிவித்து பாராட்டி
ஊக்குவித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

யாழ் கருத்துக்களத்தில் தான் எனது கவிதைகள்
முதன் முதலாக அரங்கேறியுள்ளன. அதனால் யாழ்
இணையத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இனித் தொடர்ந்து எனது கவிதைகள் இங்கே மலரும்.
உங்கள் கருத்துக்களை தெரிவித்து என்னைப்
பலப்படுத்துங்கள்.

Print this item

  தயவுசெய்து உதவி செய்யுங்கள்...
Posted by: Sarangan - 11-30-2003, 01:52 PM - Forum: தமிழும் நயமும் - Replies (25)

ஒரு சின்ன கேள்வி...
தயவுசெய்து உதவி செய்யுங்கள்...

online என்ற சொல்லுக்கு தமிழ் சொல் என்ன?

Print this item

  skin
Posted by: vasisutha - 11-30-2003, 01:14 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

உங்கள் Browser skin னையும் மாற்றி அழகு பாருங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
www.hotbar.com

Print this item

  ஐரோப்பிய சமுாகத்தின் புதிய தீர்வுத் திட்டம்
Posted by: yarl - 11-28-2003, 06:50 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

dinamalar.com
""எங்களின் புதிய அமைதி ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக் கொள்வார்'' ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை கமிஷனர் நம்பிக்கை



சென்னை: ""இலங்கை போன்ற ஒரு அழகான நாட்டில் அமைதி ஏற்பட அனைத்து தரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும். இதற்காக ஒரு புதிய திட்டம் ஐரோப்பிய யூனியன் சார்பில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது'' என ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை ஆணையாளர் கிரீஸ் பேட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனது இரண்டு நாள் இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு கிரீஸ் பேட்டர்சன் நேற்று சென்னை திரும்பினார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கை ஒரு அழகான தீவு நாடு. இந்த நாட்டிற்கு என்று வரலாற்று பெருமைகள் உண்டு. இருப்பினும் இந்த அழகான நாட்டில் இன மோதல்கள் நடந்ததால், அந்த நாடு பல வழிகளில் சிதறுண்டு போயுள்ளது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் அமைதி ஏற்படும் முயற்சியில், ஒரு புதிய திட்டத்தை ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து விளக்கமாக கூறுவதற்காகத் தான் நான் கடந்த இரு தினங்களாக இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன்.

இந்த பயணத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் சந்தித்து, ஐரோப்பிய யூனியனின் அமைதி முயற்சிக்கான புதிய ஒப்பந்தம் குறித்து பேசினேன். அவரும் இந்த ஒப்பந்தம் குறித்து திருப்தி தெரிவித்துள்ளார். இந்த புதிய முயற்சிக்கு அவர் ஒத்துழைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பிரபாகரனிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, "நீங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அமைதி வழிக்கு திரும்புங்கள்' என்று கோரிக்கை வைத்தேன். மேலும், "தனி நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டு ஒன்றுபட்ட இலங்கை அமைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்று கூறினேன். இவற்றை பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து பிரிவினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதற்காக இலங்கை அரசு, விடுதலைப் புலிகள், தமிழ் மற்றும் சிங்கள தலைவர்கள், முஸ்லிம்கள் என பல பிரிவினர் கொண்ட ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து முடிவுகளும் அந்த அமைப்பின் ஒப்புதலுக்கு பின்னரே செயல்படுத்தப்பட வேண்டும். இதைத் தான் ஐரோப்பிய யூனியன் தனது புதிய திட்டமாக கூறியுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் அது மற்ற நாடுகளை காட்டிலும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு முதலீடுகள் இங்கு அதிகரித்து வருகின்றன. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளும் இந்தியாவில் தொழில் மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. அது குறித்து இந்த இந்தியப் பயணத்தின் போது பேசுவேன்.

இவ்வாறு கிரீஸ் பேட்டர்சன் கூறினார்.

Print this item

  ஈராக்கில் புஷ்....!
Posted by: kuruvikal - 11-27-2003, 06:31 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

<img src='http://eur.news1.yimg.com/eur.yimg.com/xp/reuters_molt/2017011625.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39537000/jpg/_39537352_bushturkey_203ap.jpg' border='0' alt='user posted image'>

மிக இரகசியமாக ஒழுங்கமைக்கப்பட்ட விஜயம் ஒன்றை ஈராக்கிற்கு அமெரிக்க அதிபர் புஷ் மேற்கொண்டுள்ளார்...அவர் அங்கு அமெரிக்க வீரர்களுடன் தனதும் அமெரிக்க மக்களினதும் வாழ்த்துச் செய்திகளையும் நன்றிகளையும் பகிர்ந்து கொண்டதுடன் அவர்களுடன் விருந்து உண்டுள்ளார்...இதன் மூலம் பல ஆண்டுகளின் பின்னர் ஈராக்கிற்கு விஜயம் செய்த முதல் அதிபராக புஷ் திகழ்கிறார்...!

அமெரிக்க வீரர்கள் மத்தியில் ஈராக் படைகளின் அதிரடித்தாக்குதலினாலும் தற்கொலைத்தாக்குதல்களினாலும் ஏற்பட்டுள்ள மனப் பீதியை அகற்றி வீரர்களை உற்சாகப்படுத்தவே இந்த இரகசிய விஜயத்தை புஷ் மேற்கொண்டிருக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்....!

News from Yahoo.com-Reuters...our thanks them.

Print this item

  இனிய து}றலிது....!
Posted by: shanthy - 11-27-2003, 03:54 PM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

இனிய து}றலிது....!

தடைகள் உடைந்து வீழ
தலை நிமிர்ந்து
செருக்கொடு நடந்தவரே !
முகவரி தந்தெங்கள்
முகம் நிமிர்த்திய மூத்தவரே !

இரவுகள் இடி முழங்க
இருளதிர்ந்து ஒளிகீற
உறவுகள் நினைவெங்கும்
உங்களின் அதிர்வுகள்.

ஒவ்வொரு துளியிலும்
உங்களின் ஒளி நிழல்
உயிரி;லே விழுந்திட
இமைகளில் கார்த்திகை
இதழ் விரித்து உயிர் காணும்.

இருள் முகம் உங்களின்
ஒளியினில் ஒளியாகும்.
வான்வெளி மின்னித் திரியும்
நட்சத்திர விளக்கெங்கும்
உங்கள் முகம் முளைத்திருக்கும்.

ஊரில் இன்று உங்களை
நினைவு கொண்டு
துயிலிடங்கள் எல்லாமே
து}றல் மழை நனைக்க
ஒளிப்பந்து அருகில் நாட்டி
உறவுகள் எல்லாரும்
அருகருகாய் நின்று
அவருணர்வு பகர்கின்றார்....

ஒளியலையில் எல்லாமே
உங்கள் நினைவுகள்
அள்ளி வந்து பொழிகிறது.
அழுகிறோம்....
உம் நினைவு தெளித்து - எம்
உயிரெங்கும் ஊர் வந்து
உங்கள் அருகிருந்து
அழுவதாய் ஓர் உணர்வு....
அது தாண்டி மனசெங்கும்
ஏதோ பெரும் நினைவு...
எல்லாம் உமதாக....

இங்கும் து}றல் மழை
விளக்கேற்றி உம் முகம் காணும்
நிழற்படத்தில் விழிபதிய
துளித்துளியாய் சிறுது}றல்.....
சன்னல் கண்ணாடி
சத்தமிட்டு அழைக்கிறது.
முன்னொரு வருடமும்
முகர்ந்திராத வாசமிது....

தலைவர் உரை செவிபாய
இரைச்சலோடு பெரும் து}றல்.....
இதுவும் இன்று மட்டும்
உணர்ந்து கொண்ட
இனிய து}றல்.....

27.11.03.

Print this item

  இசைஞானியின் முன்மாதிரி...
Posted by: kuruvikal - 11-27-2003, 03:20 PM - Forum: சினிமா - Replies (3)

<img src='http://thatstamil.com/images15/cinema/ilaiyaraja250.jpg' border='0' alt='user posted image'><img src='http://thatstamil.com/images15/cinema/ilaiyaraja300.jpg' border='0' alt='user posted image'>

<b>200 இசைக் கலைஞர்களுடன் ஹங்கேரி செல்கிறார் இளையராஜா</b>

மாணிக்கவாசகரின் திருவாசக இறை கீதங்களுக்கு சிம்பொனி இசையமைக்கும் முயற்சியில் இசைஞானி இளையராஜா ஈடுபட்டுள்ளார்.

இதற்கான இசைப் பதிவு ஹங்கேரியில் நடக்கவுள்ளது.

தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் ஜெர்மன் மொழிகளில் இந்த திருவாசக இசை வெளியிடப்படவுள்ளது.

இந்த ஆண்டிலேயே இதை வெளியிட்டுவிட முயற்சிக்கப்பட்டது. ஆனால், நிதி உள்ளிட்ட சில காரணங்களால் இந்தப் பணி தள்ளிப் போய்விட்டது. கிட்டத்தட்ட ரூ. 5 கோடி செலவு பிடிக்கும் திட்டம் இது.

திருவாசகத்துக்கு நான்கு மொழிகளிலும் இசை வடிவம் தரும் சிம்பொனி நோட்ஸ்களை ராஜா தயாரித்து முடித்துவிட்டார்.

இதையடுத்து ஒலிப் பதிவைத் துவக்கிவிடத் திட்டமிட்டுள்ளார். டிசம்பர் மாதத்தில் இந்த கம்போசிங் பணி நடக்கவுள்ளது.

ஜனவரியில் ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் இந்த சிம்பொனி இசை வெளியிடப்படவுள்ளது.

ரெக்கார்டிங் ஹங்கேரியில் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடக்கவுள்ளது. இதற்காக சுமார் 200 இசைக் கலைஞர்களுடன் ஹங்கேரிக்கு செல்ல இருக்கிறார் இசைஞானி.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கேயே தங்கப் போகும் இளையராஜா, ஹங்கேரி நாட்டு இசைக் கலைஞர்களையும் கொண்டு இந்த சிம்பொனியை உருவாக்கி முடிக்கவுள்ளார்.

உலக அமைதிக்காக இந்த திருவாசக இசை யாகத்தை நடத்தும் இளையராஜா, இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சென்னையில் சர்வதேச இசைப் பல்கலைக்கழகம் அமைப்பதும், <b>வட-கிழக்கு இலங்கையில் இசை கலைக் கல்லூரி </b>அமைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்துக்கான நிதி தமிழ் ஆர்வலர்கள், கோவில்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் திரட்டப்பட்டு வருகிறது.

Our Thanks to thatstamil.com
.................................................................
வெறும் திட்டமாக இல்லாமல் விரைந்து செயற்படுத்துங்கள் ராஜா...இத்தனை தடைகளுக்கும் மத்தியில் ஈழத்தமிழரைப்பற்றியும் சிந்தித்தீர்களே அதுவே போதும்...என்றாலும் உங்கள் சேவையை நாமும் நினைவு கூற உங்கள் கலைக்கூடம் ஈழத்தில் அமைவது எமக்குத்தான் சிறப்புச் சேர்க்கும்..எம் சந்ததிக்கும் இசை வாழ்வளிக்கும்...!

Print this item