Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 812 online users.
» 0 Member(s) | 809 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,253
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,613
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,032
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,433
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,143
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  கொள்கை முழக்கங்கள்-1
Posted by: tamilan - 12-03-2003, 03:00 AM - Forum: தமிழ் /தமிழர் - No Replies

<b>ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

ஆண்ட தமிழினம் வீழுவதோ?-அவர்

பேசிய தாய்மொழி மாளுவதோ?-இந்தி

தேசிய மொழியென ஆளுவதோ?

---- தஞ்சை நலங்கிள்ளி</b>

courtesy: http://www.geocities.com/tamiltribune/annai

Print this item

  அபாயம்
Posted by: sethu - 12-02-2003, 09:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

அபாயம்

இலங்கை முஸ்லீம் இனத்தவர் தமக்கிடையே பரப்பும் இரகசிய ஈ மெயில் தகவல்கள் இங்கு தருகிறேன். இவை தமிழர்களுக்கு எதிரானவை.

ஆசிரியர் கருத்து: புலிகளது திட்டவரைவை நிராகரிப்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழி
இல்லை
மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட புலிகளது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான
(ஐளுபுயு) திட்ட வரைவு அரசிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய அளவில் பலத்த
விவாதங்களையும் கலந்துரையாடலையும் ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு வடக்கை முழுமையாகத் தமது
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முனைப்பை அதில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
ஒரு தனி அரசை ஸ்தாபிப்பதற்கான தொடக்க நிலைப் பிரயத்தனமாக அதைக் கருதலாம்.
அரசுக்கும் ஐளுபுயு யிற்குமிடையே பிணக்கு ஏற்பட்டு, அதைத் தீர்க்க நோர்வே
அனுசரணையாளர்களால் முடியாதுபோனால், சர்வதேச நீதிமன்றத்திடம் போக வேண்டுமென்று அவர்கள்
கோருவது ஒன்றே இதை நிறுவப் போதுமானது.
கிழக்கு வடக்கில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் வாழ்கிறார்கள் என்ற யதார்த்தத்தை
திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்திருப்பது, மிகப் பெரும் ஏமாற்றத்தையே தருகிறது. ஒப்புக்கு
ஐளுபுயு யில் பல தரப்பினரும் அங்கம் வகிப்பது பற்றிய விடயத்தை உள்ளடக்கி இருப்பதால்
மட்டும் ஒன்றையும் சாதிக்க முடியாது.
இதில் முஸ்லிம்களது அரசியல் அபிலாi~கள் அறவே உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அதைத்
தெளிவாக நிராகரிக்கும் முனைப்பே அதில் மேலோங்கியுள்ளது. சென்ற வருடம் கைச்சாத்தான
புரிந்துணர்வு உடன்படிக்கையின் முகவுரையில், ‘முஸ்லிம்கள் இனப்பிரச்சினையோடு நேரடியாகச்
சம்பந்தப்பட்டவர்கள் அல்ல’ என்ற வாசகம் உள்ளடக்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும்
அறிவோம். புலிகளும் அரசும் இதை ஏற்றுக் கொண்டே அப்போதே ஒப்பமிட்டிருந்தனர். புலிகள்
அந்நிலைப்பாட்டிலிருந்து சிறிதளவும் மாறவில்லை என்பதையே இவ்வரைவும் புலப்படுத்துகிறது.
புரிந்துணர்வு உடன்படிக்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒரு அடிமைச் சாசனம் என்பது பரவலாக
ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்று. அவ்வாறாயின் இத்திட்ட வரைவை என்னவென்று சொல்வது?
பதிலை நாம் அனைவரும் நன்கறிவோம்.
முஸ்லிம்களைப் புறநீக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. எனினும்
புரிந்துணர்வு உடன்படிக்கையே இதற்கு ஒரு சட்ட வலுவைக் கொடுத்தது. இதனால்தான் அதைத்
திருத்தியமைக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தனர்.
ஆயினும் அது அறவே கவனத்தில் எடுக்கப்படவில்லை.
முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கான நியாயத்தன்மையும், முஸ்லிம்களது சமத்துவமான
தனித்தரப்புக் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டே வந்துள்ளன. ஹகீம்-பிரபா
கூட்டறிக்கையில் உடன்பட்ட அடிப்படை அம்சங்கள் கூட நிராகரிக்கப்பட்டு வந்துள்ளன. பல
பிரதேசங்களில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு
வந்துள்ளனர். இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், முஸ்லிம்களுக்கு அரசியல்
பிரச்சினைகள் உள்ளன என்பதை இத்திட்டவரைவு ஏற்கவில்லை. எப்போதும் கலாச்சாரச்
சிறுபான்மையாக மட்டுமே முஸ்லிம்களைப் பார்த்துவந்த புலிகள், குறைந்தபட்சம் அவர்களது
கலாசாரத் தனித்துவத்தையேனும் ஏற்கும் ஒரு வாசகத்தையேனும் இதில் உள்ளடக்கவில்லை என்பது
கூர்ந்து நோக்கத்தக்கது. மதச்சார்பற்ற இடைக்கால தன்னாட்சி அதிகார சபையின் கீழ்
வாழுமாறு முஸ்லிம்களைக் கேட்பது போலிருக்கிறது. காணிப் பகிர்வில் கூட இன விகிதாசாரம்
திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
சாதகமாகப் பரிசீலிப்பதற்கான குறைந்தபட்ச நியாயங்களையாவது இவ்யோசனைகள்
உள்ளடக்கியிருக்கவில்லை என்பது பெரும் ஏமாற்றமே. பிரச்சினையின் முஸ்லிம்
பரிமாணத்தையும் அதன் அரசியல் தன்மையையும், முஸ்லிம்களது சுயநிர்ணய உரிமையையும்
தனித்துவத்தையும் தெளிவாக மழுங்கடிக்கும் உள்நோக்கமுடைய இந்தத் திட்டவரைவை
நிராகரிப்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழியே இல்லை. தங்களது அரசியல் அபிலாi~களை
உள்ளடக்கிய ஒரு மாற்றுத் தீர்வை முன்வைப்பதே இன்று முஸ்லிம்கள் முன்னுள்ள ஒரே தெரிவாகும
இது தமிழர்களுக்கு மட்டுமானது எனக் குறிப்பிட்டிருப்பது வியப்பைத் தருகின்றது - அமைச்சர்
ரவூப் ஹகீம் தலைவர் - முஸ்லிம் காங்கிரஸ
இந்த ஆலோசனைகள் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கானது என புலிகள்
குறிப்பிட்டிருக்கின்றார்கள். இதே புலிகள் வடக்கு கிழக்கு தமிழர்களதும் முஸ்லிம்களதும்
தாயகம் என்று ஏலவே குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இது தமிழர்களுக்கு
மட்டுமானது எனக் குறிப்பிட்டிருப்பதானது வியப்பைத் தருகின்றது.
இடைக்கால நிருவாகத்தில் முஸ்லிம்களுக்கு என்ன வகையான பிரதிநிதித்துவத்தினை வழங்குவது
என்பது பற்றி மட்டுமே மட்டுப்படுத்திப் பேசப்படுகின்றது. முஸ்லிம்களது பிரச்சினை
பிரதிநிதித்துவம் பற்றியதானதல்ல. அவர்களது வாழ்விடம் தொடர்பான அதிகாரம்
பற்றியதாகும். எப்படி தமிழ் மக்கள் தமது தாயகப் பூமியில் சுயாட்சிக் கோரிக்கையினை
முன்வைக்கின்றனரோ, அதுபோன்று எமது தாயகப் பூமியில் முஸ்லிம்களுக்கான சுயாட்சிக்
கோரிக்கையினை நாம் முன்வைப்போம்.
இந்தத் தீர்வுப் பொதி எந்த வகையிலும் நன்மை தரும் எனக் கருத முடியாது - பேரியல் அ~;ரப்
(பா.உ) தலைவி - தேசிய ஐக்கிய முன்னணி
முஸ்லிம்களது அபிலாi~களை டுவுவுநு குறிப்பிட வேண்டும் என்பதில்லை. ஆனால் வடக்கு கிழக்கு
முஸ்லிம்களதும் தாயகம் என ஏற்றுக் கொள்வதாயின், அதில் அவர்களுக்கும் இடம் இருந்திருக்க
வேண்டும். அப்படி எதுவும் அவர்கள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
எனவே, எந்த வகையிலும் இந்தத் தீர்வுப் பொதியானது நன்மை தரும் என நாம் கருத முடியாது.
வடக்குக் கிழக்கு என்பது டுவுவுநு யின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள்
குறிப்பிடுகின்றார்கள்.
உண்மையில் கிழக்கைப் பொறுத்தவரை, அங்கு பெரும்பான்மையாக இருப்பவர்கள் முஸ்லிம்களே.
அவர்களை விடுத்து முன்வைக்கப்படும் எந்தத் தீர்வுத் திட்டத்தையும் எம்மால் ஏற்றுக்
கொள்ள முடியாது.
முஸ்லிம்களது தேவை என்ன என்பதனை நாம்தான் முன்வைக்க வேண்டும்- எம்.எல்.ஏ.எம்.
ஹிஸ்புல்லாஹ் (பா.உ)
இது தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கப்படுகின்றது என்று (ழுn டிநாயடக ழக வயஅடை pநழிடந)
அவர்கள் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் சார்பாக என்று
குறிப்பிடவில்லை. தமிழ் பேசும் மக்கள் சார்பாகவோ அல்லது வடக்கு கிழக்கு வாழ் மக்கள்
சார்பாகவோ இது முன்வைக்கப் பட்டிருக்குமாயின் நாம் பேச முடியும்.
தமிழ் மக்கள் சார்பாக ஒரு திட்டத்தை முன்வைப்பதற்கு அவர்களுக்கு பூரண உரிமை உண்டு.
எனவே, நாம் இதனை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. முஸ்லிம்களது தேவை என்ன என்பதனை
நாம்தான் முன்வைக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பும் அதிலுள்ள ஆபத்தான
கூறுகளும்- -முக்தார்
விடுதலைப்பபுலிகளால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பிற்கான
முன்மொழிவினை, அதிலுள்ள நிருவாக அம்சங்களின் அடிப்படையில் விரிவாக இக்கட்டுரையில்
ஆராய்வது எனின், அது மிக நீண்டுவிடும். ஆகவே மேற்குறிப்பிட்ட ஆவணத்தில்
சொல்லப்பட்டுள்ள சில அம்சங்கள் குறித்தும், அதில் சொல்லப்படாது மறைந்து கிடக்கும்
சில விடயங்கள் குறித்தும் எடுத்துக் காட்டுவது அவசியம். குறிப்பாக அவற்றின் அரசியல்
அம்சங்களையே இக்கட்டுரை எடுத்தாள்கிறது.
சிங்கள ஆளும் குழுமத்தினர் இவ்வளவு காலமும் வடக்கு கிழக்கை பாரம்பரியத் தாயகமாகக்
கொண்ட முஸ்லிம் மக்களுக்கு உரித்தான, தமிழ் மக்களுக்கு உரித்தான அதிகாரங்கள்
அனைத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்; ஆண்டு அனுபவித்தனர்.
அவ்வதிகாரங்களின் உண்மையான உரித்தாளிகளை அடக்குமுறைக்குள்ளாக்கினர். அவ்வாறான
அரசியல் அதிகாரங்கள் அனைத்தையும் விடுதலைப் புலிகள் முன்மொழிந்துள்ள இடைக்காலத்
தன்னாட்சி அதிகார அமைப்பு தனக்குரியதாக ஆக்கிக் கொள்வதென்பது, கொள்கையளவில்
சரியானதே. பிரச்சினை என்னவெனில் அவ்வளவு அதிகாரங்களையும் இடைக்காலத் தன்னாட்சி
அதிகார அமைப்பானது பெற்றுக் கொள்ளும் அதே கணத்தில், அதன் பொருள் அவ்வளவு
அதிகாரங்களும் விடுதலைப்புலிகளுக்கு என்றாகிறது. இதற்கு மேல், அமைக்கப்படப்போகின்ற
இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையில் இடம்பெறும் முஸ்லிம் பிரதிநிதிகள், வெறுமனே
ஜனநாயகம் என்ற பேரில் விவாதங்களை நடத்துபவர்களாக மட்டுமே அச்சபையில் இருப்பர்.
நடைமுறையில் இச்சபைக்கு வெளியில் விடுதலைப் புலிகளின் ஏகபோக ஆட்சிக்கே களம்
அமைக்கப்படுகின்றது.
பன்முகத்தன்மைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் அறவே இடமளிக்காத விடுதலைப் புலிகள்
அமைப்பிடம் ஒரு அடிப்படைப் பண்பு மாற்றமானது இற்றைவரைக்கும் ஏற்படவில்லை என்பதையும்,
முஸ்லிம்கள் தொடர்பில் கடந்த 20 வருடங்களாக விடுதலைப்புலிகளின் ஆயுத, அரசியல்
அணுகுமுறைகளையும் இணைத்துப் பார்க்கும்போது- விடுதலைப் புலிகளை அறுதிப்பெரும்பான்மையாகக்
கொண்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக அமையும்
என்று மிக எளிதாகவே அரசியல் ஊகம் செய்து பார்க்க முடிகின்றது.
இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பிற்கென ஒரு தேசிய கீதம் அவசியமென்று
முன்மொழியப்படும். விடுதலைப்புலிகள் அமைப்புக்குரிய விடுதலை கீதமானது, இடைக்காலத்
தன்னாட்சி அதிகார அமைப்பிற்கான தேசிய கீதமாக வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.
இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பிற்கென ஒரு கொடி அவசியம் என்ற பிரேரணை வரும்.
அது விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிக்கொடியாக நிறைவேற்றப்படும். மேலும் சட்டம்,
ஒழுங்கு என்ற பெயரில் புலிகளின் காவல்துறை, நீதித்துறை போன்றவை
சட்டபூர்வமாக்கப்படும். இவ்வாறாக இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பானது
அறுதிப்பெரும்பான்மை கொண்டு விடுதலைப் புலிகள் மயப்படுத்தப்படும்.
இவ்வாறான மாற்றங்களையெல்லாம் தமிழ் மக்கள் வியப்புடனும், ஆட்சேபனைகள் இன்றியும்
ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளனர். தாம் ஒரு தனியான தேசிய இனம் என்ற வகையிலும்.
இராணுவ சமபலம் தம்பக்கம் உள்ள வாய்ப்பான சூழலில் விடுதலைப் புலிகளுக்கு ஊடாக தமக்கும்
அதிகாரங்கள் வந்தடையும் என்பதனாலும் - இன்றைய நிலையில் தமிழ் மக்களில்
மிகப்பெரும்பாலானவர்கள், விடுதலைப் புலிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உடன்படுவார்கள்..
விடுதலைப் புலிகளின் ஏகபோகக் கொள்கையில் உடன்பாடு இல்லாத தமிழ் அரசியல் சக்திகள்
கூட, குறிப்பிட்ட காலத்திற்கு இவற்றையெல்லாம் சகித்துக் கொள்வார்கள். சிங்கள
மேலாதிக்கத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில், இதைத் தவிர
தமிழ் மக்களுக்கு மாற்றுவழிகள் இப்போதைக்கு இல்லை.
ஆனால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் நிலை?
கடந்த இருபது வருடங்களாக தமிழ் மேலாதிக்கத்தினாலும், விடுதலைப் புலிகளின்
எதேச்சாதிகார ஆயுத வன்முறைகளினாலும் மோசமாக அடக்கப்பட்டு வரும் முஸ்லிம்களால் -
புலிக்கீதம், புலிக்கொடி, புலிக் காவல்துறை, புலி நீதித்துறை போன்றவற்றை எப்படி
ஏற்றுக் கொள்ள முடியும்? எப்படி சகித்துக் கொள்ள முடியும்?
சிங்களப் பிரதிநிதிகளை அறுதிப்பெரும்பான்மையாகக் கொண்ட சிறிலங்கா அரசின்
பாராளுமன்றமும் சட்டங்களும் சாசனங்களும் தமிழ் மக்களை எப்படி நடத்தியதோ,
அப்படித்தான் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பினது சட்டங்களும் சாசனங்களும்
நடைமுறையில் முஸ்லிம்களையும் நடத்தும். சில சமயம் இது அதைவிடவும் மோசமானதாக இருக்கவும்
வாய்ப்புள்ளது என்பது நமது அனுபவமாகும்.
இலங்கைத் தீவினை ஒரே ஆள்புல எல்லையாகக் கொண்டு, பாராளுமன்றத்தில் சிங்கள
எண்ணிக்கைப் பெரும்பான்மை நிலைநாட்டப்பட்டது. இதன் தொடர் விளைவுகளை அனைவரும்
அறிவோம். அவ்வாறே வடக்கு கிழக்குப் பிரதேசம் தனியான ஆள்புல எல்லையாகக்
கொள்ளப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பில், தமிழ் எண்ணிக்கைப்
பெரும்பான்மை நிலைநாட்டப்படும். அது தமிழ் மேலாதிக்கத்திற்கு தவிர்க்க முடியாது புதிய
பாதையைத் திறந்து கொடுக்கும். முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் படுகுழியில்
தள்ளப்படும். முன்னரைப் போலன்றி இப்போது சட்டபூர்வ வழிமுறைகளின் துணையுடன் இச்செயல்
நேரடியாகச் செய்து முடிக்கப்படும்.
இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டு, முதல் ஐந்து வருடங்கள்
விடுதலைப் புலிகளின் அறுதிப்பெரும்பான்மையின் கீழ் இது நடைபெற்று, பின்னர் தமிழ்
எண்ணிக்கைப் பெரும்பான்மையான - மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக்கப்பட்டு அதன் கீழ்
நடைபெறும்.
- இலங்கையில் சிங்கள சிங்கக் கொடிக்குப் பதிலாக - வடக்கு கிழக்கில் தமிழ் புலிக்
கொடி
- இலங்கையில் சிங்கள தேசிய மேலாதிக்கத்திற்குப் பதிலாக - வடக்கு கிழக்கில் தமிழ்
தேசிய மேலாதிக்கம்
- இலங்கையில் து}ய சிங்கள ஆயுதப் படைகளுக்குப் பதிலாக - வடக்கு கிழக்கில் து}ய தமிழ்
ஆயுதப் படைகள்
- இலங்கையில் சிங்கள வரலாற்றுப் பாடத்திட்டங்களுக்குப் பதிலாக - வடக்கு கிழக்கில்
தமிழ் வரலாற்றுப் பாடத்திட்டங்கள்
இப்படியான அரசியல் ஆபத்துக்களில் இருந்து வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம்
தப்பித்துக் கொள்ளவும், எமது நியாயமான அரசியல் அபிலாi~களை விட்டுக் கொடுக்காதும் -
அதேவேளை தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாi~களுக்கு உண்மையாகவே நாம் குறுக்கே
நிற்காது அவற்றுக்கு ஆதரவாகச் செயற்படவும் ஏதேனும் வழிகள் உள்ளனவா? இதுபற்றி வேறொரு
கட்டுரையில்தான் ஆராய முடியும்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா? பிரிக்கப்பட வேண்டுமா? -
பேராசிரியர் மயுர சமரகோனின் நிலைப்பாடு -
இந்நாட்டின் வடக்கு கிழக்கு பிரச்சினை இரு தசாப்தங்களைக் கடந்துவிட்டது. இதனை
தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பல பயனின்றிப் போயின. ஆரம்பத்திலேயே
இப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருப்பின் இன்று இந்தளவு பாரது}ரமானதாக அது மாறியிருக்காது.
அன்று சிங்கள-தமிழ் இனப்பிரச்சினையாகவே அது இருந்தது. ஆனால் இன்று நேரடியாகவே
முஸ்லிம்களும் இதில் சம்பந்தப்படுத்தப்பட்டு விட்டனர். கடந்த காலங்களில் அடிக்கடி
முஸ்லிம்களுக்கும் டுவுவுநு யினருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரங்கள் இதற்கு பெரும்
ஆதாரமாகும்.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மாறி மாறி வந்த அரசாங்கங்களினால் பல்வேறு
தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுள் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மிக
முக்கியமானதாகும். இவ்வொப்பந்தத்தின் தாக்கம் இன்றுவரை இருப்பதனை நாம் காணலாம்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு ஏற்பவே வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது.
இவ்வொப்பந்தத்தில் அதிகாரப்பகிர்வு என்பது முக்கிய ஒரு ~ரத்தாக காணப்பட்டது.
இவ்வடிப்படையில் மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன. அத்துடன் அன்றிருந்த அவசர கால
சட்டத்தின் கீழ்தான் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்படி இவ்விரு மாகாணங்களும் தற்காலிகமாகவே
இணைக்கப்பட்டன. அத்தோடு இவ்விணைப்பு தொடர வேண்டுமா அல்லது இல்லையா என்பதனை
அபிப்பிராய வாக்கெடுப்பொன்றின்படியே தீர்மானிக்க வேண்டும் என்ற ஒரு விதியும்
இவ்வொப்பந்தத்தில் அடங்கியிருந்தது.
ஆனால் இந்த மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு (சுநகநசநனெழஅ) இன்றுவரை
மேற்கொள்ளப்படவில்லை. வாக்கெடுப்பின் மூலம்தான் ஒரு விடயத்துக்கு மக்களாணை பெறப்பட
வேண்டும். எனினும் 1987 முதல் 2003ஆம் ஆண்டுவரை இது தொடர்பில் அபிப்பிராய
வாக்கெடுப்பொன்றை நடத்தாமல் இருப்பது மக்கள் அபிப்பிராயத்தை மதிக்காத, ஒரு ஜனநாயக
விரோத நடவடிக்கையாகும்.
வடக்குக் கிழக்கை இணைத்ததன் மூலம் நிறையப் பிரச்சினைகள் ஏற்பட்டதோடு அதன்
பிரதிபலனை டுவுவுநு இயக்கம்தான் நேரடியாக அனுபவித்தது. இவ்வொப்பந்தத்தின் இறுதிப்பயன்
என்னவெனில் வடக்கில் மாத்திரம் சுருங்கியிருந்த டுவுவுநு யினரின் கட்டுப்பாட்டுப்
பிரதேசம் கிழக்கிலும் வியாபித்தமையாகும். எனினும் கிழக்கில் பெரும்பான்மையினர்
முஸ்லிம்களே. டுவுவுநு யினரின் செயற்பாடுகள் கிழக்கில் விஸ்தரிக்கப்பட்டதன் காரணமாக
அங்கிருந்த முஸ்லிம்களும் சிங்களவர்களும் பல நெருக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சிங்கள-தமிழ் கலவரங்கள் மாத்திரமல்ல முஸ்லிம்-தமிழ் கலவரங்கள் கூட அங்கு தோன்றக்
காரணமாகி விட்டன. இக்கலவரங்களின் பின்னணியில் டுவுவுநு இயக்கம் நேரடியாகவும்
மறைமுகமாகவும் இருந்து வருகின்றது. காலவோட்டத்தில் எந்தவொரு சக்திக்கும் எதிர்சக்தி
தோன்றுவது இயல்பான ஒரு விடயமாகும். இவ்வுண்மைதான் வடக்குக் கிழக்கு கலவரங்களின் பின்ன
ணியாகும். இவ்வகையில் டுவுவுநு யினரின் கிழக்கு மாகாண ஆதிக்கத்தை முஸ்லிம்,
சிங்களவர்கள் எதிர்த்தபோதுதான் அங்கு பல வன்செயல்கள் தோற்றம் பெற்றன.
அண்மையில் இடம்பெற்ற வாழைச்சேனை, மூது}ர், மணிராசகுளம் சம்பவங்களும், அன்று நிகழ்ந்த
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு நிகழ்வுகளும் இந்த உண்மைகளைத்தான் உணர்த்துகின்றன. இராணுவம்
விழிப்புடன் இருந்தபோது இப்பிரச்சினைகளை ஓரளவு கட்டு;ப்பாட்டுக்குள் வைத்திருக்க
முடிந்தது. ஆனால் அண்மையில் இராணுவம் முடக்கப்பட்டதன் காரணமாகவும் வேறுபல அரசியல்
காரணங்களாலும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் புலிகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு வருவதை
அவதானிக்கலாம்.
தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்சினையில் தலையீடு செய்ய
ஜனாதிபதிக்கு முடியும். இன்னொரு வகையில் முஸ்லிம் சிறுபான்மையினரைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற பிரதிநிதிகள் ஒன்றிணைவதன்
மூலமும் இப்பிரச்சினையை ஓரளவு தீர்த்திருக்கலாம். எனினும் பொதுஜன ஐக்கிய முன்னணி
அரசாங்கத்தை அமைத்தபோது இவற்றை மறந்த நிலையில் செயற்பட்டது. ஆனால் அவர்கள் இன்று,
தாம் அதிகாரத்தில் ஒருபோதும் இருக்கவேயில்லை என்ற தோரணையிலேதான் கதைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
1994 முதல் 2001 வரையான காலப்பகுதியில் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு பிரச்சினையை
தீர்க்க முடியுமாயிருந்தது. இன்றும் ஜனாதிபதி தனது அதிகாரம் பற்றி பிரஸ்தாபிக்கும்
அளவுக்கு முக்கிய பிரச்சினைகளில் அக்கறை காட்டியது குறைவு.
இவ்விடயத்தில் பதில் சொல்ல வேண்டிய இன்னொரு தரப்பினர்தான் முஸ்லிம்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள். இது விடயத்தில் முஸ்லிம்
காங்;கிரஸ{க்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. ஆனால், உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ்
என்ன செய்தது? என்பது ஒரு பெருத்த கேள்வியாகும். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்கள்
அதிகாரம் உள்ள கட்சியோடு இணைவதன் மூலம் தமக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி
சிந்தித்தார்களே ஒழிய தம் மக்களின் நலன்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை.
இதற்கான சிறந்த உதாரணமாக பொதுஜன ஐக்கிய முன்னணிக் காலத்திலான காங்கிரஸின்
செயற்பாடுகளை குறிப்பிடலாம். 1994களில் சந்திரிகா அரசாங்கத்தில் காங்கிரஸ் மிக
பலமான நிலையிலே காணப்பட்டது. ஆனால் அன்று அவர்கள் கிழக்குப் பிரச்சினையை
தீர்ப்பதற்காக வேண்டி என்ன செய்தார்கள்?
நாங்களும் பெரும்பான்மை முஸ்லிம்களும் இக்கேள்வியைத்தான் எழுப்புகின்றோம். இவை
கடந்தகால நிகழ்வுகள் என்று கூறி தப்பிவிட முடியாது. ஏனெனில் தற்போதைய அரசாங்கத்திலும்
முஸ்லிம் காங்கிரஸ் பிரதான பாத்திரத்தை ஏற்றுள்ளது. எனினும் தெளிவான நோக்கமொன்று
இல்லாத ஒரு கட்சியாகவே அது இருந்து வருகிறது. காங்கிரஸ் உறுதியாக இருந்திருப்பின் கடந்த
காலத்தில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஏற்பட்டிருக்காது.
வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையினராகவும் கிழக்கில் முஸ்லிம்கள்
பெரும்பான்மையினராகவும் இருப்பதனால் இவை பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை
முன்வைக்கப்படுகிறது. ஆனால் வடக்குக் கிழக்கில் பொதுவாகவே மூவினங்களும் வாழ்கின்றனர்.
எனினும் வடக்கும் கிழக்கும் பிரிந்திருந்தால் தத்தம் கலாசார தனித்துவங்களை
பாதுகாத்துக் கொண்டு தத்தம் பிரச்சினைகளை வேறு வேறாகத் தீர்த்துக் கொண்டு சுதந்திரமாக
இருக்க முடியும்.
அன்றிருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதனை மைய இலக்காகக் கொண்டே மாகாண சபை முறை
அமைக்கப்பட்டது. எனினும் வடக்கை கிழக்குடன் இணைத்ததன் மூலம் இருந்த பிரச்சினை
தீர்க்கப்;படாது தொடர்ந்திருக்க பொதுவகைப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றது. இவ்வகைப்
பிரச்சினைகளில் முதன்மையானது வடக்கில் மாத்திரம் சுருங்கியிருந்தடுவுவுநு யினரின்
அதிகாரங்கள் கிழக்கிலும் வியாபித்தமையும் அவர்களது அடாவடித்தனங்கள்
அதிகரித்தமையுமேயாகும்.
இவ்விரு மாகாணங்களும் வௌ;வேறாக இயங்குவதன் மூலம் அப்பிரதேசங்களில் வாழும்
இனக்குழுமங்கள் பயனடைவதுடன் அங்கு வாழும் சிறுபான்மையினரும் ஏனையோரும் தத்தம்
சுதந்திரத்தையும், சிறப்புரிமைகளையும் பேணிக் கொள்ள முடியும். மாகாணங்களை
வேறுபடுத்துவதன் மூலம் இனங்களுக்கிடையேயான பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பது சிலரது
வாதமாகும். ஆனால், இணைக்கப்பட்டதன் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா?
இல்லையானால் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிரிப்பதன் மூலம் தீர்வு ஏற்பட முடியும்.
அப்படி செய்யும்போது இப்பிரதேசங்களில் டுவுவுநு யினரின் அதிகாரங்களும் மிகவும்
குறைந்துவிடும். இன்னொரு வகையில் கிழக்கு மாகாணத்தில் சர்வதேச சக்திகளின்
தலையீட்டையும் குறைக்க முடியும். உண்மையில் சிங்கள, முஸ்லிம், தமிழ் புத்திஜீவிகளை
பயன்படுத்தி தீர்வை நோக்கி போகமுடியுமாக இருந்தபோதிலும் கடந்த காலங்களில் இவர்களின்
தேசிய கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
கிழக்கு மாகாணத்தை பிரிப்பதன் மூலம் முஸ்லிம் நிர்வாகமொன்று உருவாகிவிடுமோ? என்று பலர்
சந்தேகிக்கின்றனர். வடக்குக் கிழக்கை பிரிப்பதனை டுவுவுநு இயக்கம் அனுமதிக்குமா? என்பது
பிரச்சினையான இன்னொரு விடயம். இதுபோன்ற இடங்களில்தான் அரசு நேரடியாக தலையிட
வேண்டும். இது தொடர்பில் அரசுக்கு தேசிய கொள்கையொன்று இருப்பது அவசியமாகும்.
குறிப்பாக, சிங்கள, முஸ்லிம்களின் தனித்துவம் பேணல், அவர்களது நிலங்களை பெற்றுக்
கொடுத்தல் போன்றவை இங்கு
மிக முக்கியமானதாகும். சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் தத்தம் நிலங்களிலிருந்து
விரட்டிய நிகழ்வுகள் நிகழ்ந்துள்ள போதிலும் அவற்றை பெற்றுக் கொடுக்க எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் போதுமானவையல்ல. இது தொடர்பான வேண்டுதல்கள் அடிக்கடி விடுக்கப்பட்ட
போதிலும் அரசாங்கம் இதுதொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை.
கிழக்கு மாகாணம் இவ்வாறு பிரிக்கப்படுமாயின் அரசைப் போன்றே எதிர்க்கட்சியும்
இவ்விடயத்தில் உதவ வேண்டும். இனவாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இதுபோன்ற ஒன்றை
செய்வதன் மூலம் வடக்குக் கிழக்குப் பிரச்சினையை ஓரளவுக்காவது தீர்க்க முடியும்.
மயுர சமரகோன்-
சிரே~;ட விரிவுரையாளர், சமூக விஞ்ஞான பீடம், சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்.
தமிழில் : ரு.மு. றமீஸ்

(ஒரு கருத்து) சிறுபான்மை முஸ்லிம்களும் இஸ்லாமிய வாழ்வும் - கலாநிதி முஹம்மது அம்மாரா
உலகின் சிறுபான்மை மக்களை சனத்தொகை அடிப்படையிலும் பொருளாதார, சமூக, அரசியல்
hPதியிலும் வகைப்;படுத்தலாம். எண்ணிக்கை அடிப்படையிலான சிறுபான்மைச் சமூகங்கள்
உலகெங்கிலும் சிதறி வாழ்கின்றனர். முஸ்லிம்கள் மட்டுமன்றி பிற மதங்களைப்
பின்பற்றுகின்றவர்களும் இவ்வாறு சிதறுண்டு வாழ்வது கவனத்திற்குரியது. இவ்வகையில்
"சிறுபான்மை" என்ற காரணத்திற்காக அவர்களது அரசியல், சமய, கலாசார உரிமைகள்
மறுக்கப்படும் நிலையையும் காணலாம். பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மைச் சமூகங்கள்
பாராபட்சமான முறையில் நடாத்தப்படுகின்றனர். இதனால் அந்நாடுகளில் சுயநிர்ணய உரிமைப்
போராட்டங்கள் தொடங்கிவிட்டன. உண்மையில் காலனித்துவம் விரிவுபடுத்தப்பட்டபோது பல
புதிய தேசிய அரசுகள் தோற்றம் பெற்றன. ஆனால் ஏகாதிபத்தியம் வெளியேறியபோது இன, மத,
மொழிப் பெரும்பான்மைகளிடமே ஆட்சி கைமாறியது. காலனித்துவத்தின் விளைவான ஒரு
பெரும்பான்மை ஜனநாயகம் இந்நாடுகளில் நிலைகொண்டது. விளைவாக சிறுபான்மைகள் அரசியல்
hPதியிலும் பண்பாட்டு hPதியிலும் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கலாயின.
உலகில் எல்லா நாடுகளிலும் இனத்தால், மொழியால் வேறுபடும் சிறுபான்மைகள்
வாழ்கின்றனர். ஆனால், முஸ்லிம் சிறுபான்மைகளே கணிசமான நாடுகளில் சிதறி வாழ்வது
கவனத்திற்குரியது. உலக முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.5 பில்லியன் ஆகும்.
அதில் 1ஃ4 பங்கினர் சிறுபான்மையினரே. இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் முறையே 20, 15
கோடி முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். இதைவிட 1 லட்சம் தொகை அளவிலான
மிகக் குறைந்த சிறுபான்மையினராகவும் முஸ்லிம்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்றனர்.
இவ்வாறு சிறுபான்மையாக வாழ்வதனால் ஏற்படும் பிரச்சினைகள் எத்தகையது? இஸ்லாமிய
வாழ்வை ஒழுங்குபடுத்துவதில் பெரும்பான்மை கலாசாரத்தால், சமூக அரசியல் சூழ்நிலைகளால்
ஏற்படும் நெருக்கடிகள் எத்தகையன? இது குறித்து ஒரு தெளிந்த கண்ணோட்டம் முன்வைக்கப்பட
வேண்டும்.
சிறுபான்மை சமூக அமைப்பு என்பது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் ஒரு சமூக நியதி என்று
கூறலாம். மனித சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது ஒரு தெய்வீக விதி. இத்தர்க்க hPதியான
உண்மையை ஏற்றுக்கொண்டு, பன்மைத்துவ சமூக அமைப்பு ஒன்றில் அனைவரும் சமமான உரிமைகளை
அனுபவிக்க வேண்டும். மத, மொழி, இன அடிப்படையிலான வேறுபாடுகளும் பாராபட்சங்களும்
மேலெழக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்
ஆட்சியாளர்களின் கீழ் வாழ்ந்த கிறிஸ்தவ, யுூத சிறுபான்மைகள் எந்தளவு து}ரம்
நீதியாகவும் சமத்துவமாகவும் நடத்தப்பட்டார்கள் என்பதை வரலாற்றிலிருந்து நாம்
புரிந்துகொள்கிறோம். "ஈமான் கொண்டவர்களே நீதி செலுத்துவதில் அல்லாஹ்வுக்கு
சாட்சியாளர்களாக இருங்கள். நீங்கள் சமூகத்தின் மீது கொண்டுள்ள குரோதம்; நீதி
செலுத்துவதை விட்டும் உங்களைத் தடுக்காதிருக்கட்டும். நீதமாக நடந்துகொள்ளுங்கள். அது
இறையச்சத்திற்கு மிகவும் நெருக்கமாகவுள்ளது. அல்லாஹ் அஞ்சி வாழுங்கள். நிச்சயமாக
நீங்கள் செய்பவற்றை அவன் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்" (மாஇதா 8)
முஸ்லிம் ஆட்சியாளர்கள் பிற மதச் சிறுபான்மையினரை நேர்மையாக நடாத்துவதில்
அல்குர்ஆனின் இந்த அடிப்டையையே பின்பற்றினர். இக்கட்டளை முஸ்லிம்களுக்கு மட்டும்
உரியதன்று. முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை ஆட்சியாளர்களும் இது பொருந்தும். சிறுபான்மை
முஸ்லிம்களை எவ்வாறு சமத்துவமாகவும் நீதியாகவும் நடத்த வேண்டும் என்பதையும் இவ்வசனம்
விளக்குகின்றது. இப்பின்னணியில் சிறுபான்மை முஸ்லிம்களும் தமது அரசியல், பொருளாதார
உரிமைகளை சமத்துவமாக அனுபவிப்பதற்குத் தகுதியுடையவர்கள்;. அதற்காக ஜனநாயக hPதியில்
போராடுவது அவர்கள் மீதான பொறுப்பாகும்.
கலாசார hPதியில் நோக்கும் போது முஸ்லிம் சிறுபான்மை தமது தனித்துவங்களைப் பாதுகாத்து
வாழ்வதும் தமது வாழ்வை இஸ்லாமிய அடிப்படையில் ஒழுங்குபடுத்திக் கொள்வதும்
இன்றியமையாதவை. இப்பகுதியில் இரு முக்கிய அடிப்படைகளை சிறுபான்மை முஸ்லிம்கள்
கவனத்திற் கொள்ள வேண்டும்.
1. பிராந்திய, மொழி, துணைக் கலாசாரக் கூறுகள் போன்ற எல்லைகளைத் தாண்டி சிறுபான்மை
முஸ்லிம்களும் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியினரே என்ற இஸ்லாத்தின் கருத்து.
2. தனித்துவ உணர்வும் அதன் மீதான பற்றும் சமய நம்பிக்கைகளோடு இரண்டறக் கலந்தது என
வலியுறுத்தும் அல்குர்ஆனின் கோட்பாடு.
இவ்வி;ரு அடிப்படைகளையும் ஒப்புக்கொள்கின்றபோது தமக்கும் இஸ்லாமிய கலாசார,
பண்பாட்டு, கொள்கை தனித்துவங்கள் உள்ளன. அவற்றைப் பேணி வாழ்வது இன்றியமையாதது
என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்பின்னணியில் இவ்விரு அடிப்படைகளையும் பின்பற்றும்
போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் நிழலில் தீர்வுகளைத் தேடவேண்டியும்
உள்ளது. இங்குதான் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளைப் போலல்லாது சிறுபான்மை
முஸ்லிம்களின் பிரச்சினை முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. எனினும் அப்பிரச்சினைகளுக்கு
மத்தியிலும் தனித்துவத்தைப் பாதுகாப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று.
சிறுபான்மை முஸ்லிம்கள் தனித்துவமாக வாழ்தல் என்பது மிகவும் விரிந்த ஒரு
கருத்தாக்கமாகும். சட்டம், பொருளாதார ஒழுங்கு, அரசியல் பங்குபற்றல், கலாசாரத்துறை,
ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய பின்னணியுடனான சுய அடையாளங்களைப் பேணி வாழ்வதையே இது
குறித்து நிற்கின்றது. இங்கு அரசியல், பொருளாதாரம் போன்றவற்றை விட கலாசாரப்
பண்பாட்டுப் பெறுமானங்களிலேயே மிகச் சிக்கலான பிரச்சினைகளுக்கு சிறுபான்மை
முஸ்லிம்கள் முகங்கொடுக்கின்றனர். காரணம் சட்டம், அரசியல் முறை என்பவற்றில்
இஸ்லாமிய ~hPஆவின் நெகிழ்ச்சியான பகுதியை ஓரளவு கையாழ முடியும். ஆனால், கலாசார
பகுதியில் குறைந்த பட்ச விட்டுக் கொடுப்பையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.
பிற கலாசாரத் தாக்கங்கள், நவீன முதலாளித்துவப் பொருளாதார நிறுவனங்கள், மதச்
சார்பற்ற பாடத்திட்டங்களின் அடிப்படையிலான கல்வி நிறுவனங்கள், வேகமாக மாறிவரும்
பண்பாட்டுச் சூழல் என்பவற்றுக்கு மத்தியில் குறைந்த தொகையில் வாழும் முஸ்லிம்கள்
இஸ்லாம

Print this item

  நடிகை சிம்ரனுக்கு இன்று திருமணம்...!
Posted by: kuruvikal - 12-02-2003, 03:05 PM - Forum: சினிமா - Replies (3)

<img src='http://thatstamil.com/gallery/simran/2.jpg' border='0' alt='user posted image'>

சிம்ரனுக்கு இன்று திருமணம்

நடிகை சிம்ரனுக்கும் தீபக் பங்காவுக்கும் இன்றிரவு (2ம் தேதி) மும்பையில் திருமணம் நடக்கிறது.

மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள தாரினா திருமண மஹாலில் சிம்ரனின் திருமணம் நடைபெறுகிறது. அந்தேரி பயாரி சாலையில் உள்ள அசோக் டவர் அபார்ட்மெண்டில் உள்ள சிம்ரனின் வீடுகளில் கடந்த ஒரு வாரமாக பஞ்சாபி முறைப்படி நலுங்கு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.

இன்று மாலை சிம்ரன் திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்படுவார். நள்ளிரவில் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கி அதிகாலையில் திருமணம் நடக்கும்.

-------------------------
News from thatstamil.com

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  விமானம் மூலம் உலகைச் சுற்றும் மங்கை
Posted by: kuruvikal - 12-02-2003, 12:01 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031201/capt.ny19512012157.argentina_polar_flight_ny195.jpg' border='0' alt='user posted image'>

பூமியின் வட மற்றும் தென் துருவத்தினூடு ஒற்றை இயந்திர விமானத்தின் மூலம் உலகைச் சுற்றும் ஆங்கிலேய மங்கை Polly Vacher (59)

இவர் தனது பயணத்தை கடந்த வைகாசித் திங்களில் ஆரம்பித்து வட துருவத்தினூடே பறந்து தற்போது தென் திருவத்தில் இருக்கின்றார். வரும் பங்குனித்திங்களில் தனது பயணத்தை இனிதே நிறைவு செய்வார் என்றும் தெரிகிறது...!

இவரது இந்தப் பயணம் பிரித்தானியாவுக்குச் சொந்தமான World Wings விமானப்பயிற்சி நிறுவனத்திற்கு நிதி திரட்டும் வகையில் அமைந்திருக்கிறது...!

News from yahoo.com--AP Science.

Print this item

  எ.பி.சி தமிழ்ஒலி மீண்டும் வருகுதாம்!
Posted by: poorukki - 12-01-2003, 07:57 PM - Forum: புலம் - Replies (11)

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்கள் கருத்து....

Print this item

  என் உயிர் பறித்தவனே!!
Posted by: nalayiny - 12-01-2003, 06:11 PM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

<img src='http://www.music.ed.ac.uk/russell/heinrich1825.jpg' border='0' alt='user posted image'>

உன் அங்கவஸ்திரம்
கொண்டு என் உயிர்
பறித்தவனே!!
வாத்தியக்கருவி
ஒன்றை கண்டெடுத்தேன்.
அடடே!!
பார்த்துக்கொண்டிருக்கவே
எனக்குள் எத்தனை நாதம்.

Print this item

  சிறிலங்காவில் மீன்டும் தேர்தல்...??!
Posted by: kuruvikal - 12-01-2003, 03:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

சந்திரிகா ரணில் பேச்சு தோல்வி: விரைவில் இடைத்தேர்தல்?

கொழும்பு:

அதிபர் சந்திரிகாவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தரப்புக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டதால் அங்கு இடைத் தேர்தலை தவிர்க்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.

தங்களுக்கு இடையேயான அதிகாரச் சண்டையைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கு சந்திரிகாவும், ரணிலும் நான்கு நபர் குழு ஒன்றை அமைத்தனர். அந்தக் குழு இன்றும் கூடி விவாதித்தது.

ஆனால், பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த ஒரு முக்கிய தீர்வும் எட்டப்படவில்லை. மீண்டும் ஒரு முறை கூடி விவாதிப்பது எனவும், சந்திரிகாவும், ரணிலும் இந்த வார இறுதியில் சந்தித்து பேசுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், டிசம்பர் 18ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இரு தரப்பினரும் ஆயத்தமாகி வருகின்றனர்.

இடைத்தேர்தல் வரலாம் என்ற அச்சத்தின் காரணமாக இலங்கை பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
-------------------------------------------
நன்றி தற்ஸ்தமிழ் டொட் கொம்

Print this item

  இந்திய ஊடகங்கள்...!
Posted by: sandiya - 12-01-2003, 08:14 AM - Forum: புலம் - Replies (117)

புலம்பெயர்ந்த மண்ணில் இந்திய ஊடகங்களின் வருகை சரியா தவறா?

Print this item

  இளைஞரை ஆயுதம் ஏந்தத் து}ண்டலாம்
Posted by: Paranee - 12-01-2003, 08:06 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு
முஸ்லிம் விவகாரத்தில் காட்டும் அசமந்தம்
இளைஞரை ஆயுதம் ஏந்தத் து}ண்டலாம்
சென்னை நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் எச்சரிக்கை


இனப்பிரச்சினைத்தீர்வு முயற்சி களில் முஸ்லிம் மக்களின் பரிமாணம் சரிவர கவனத்தில் எடுத் துக்கொள்ளப்படாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதமேந்தவேண் டிய நிலை ஏற்படலாம்.
-இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார்.
சென்னை நகரில் அவதானிகள் ஆய்வுமன்றத்தில் நேற்று இலங்கை யின் இனப்பிரச்சினையும் முஸ்லிம் களும்|| என்ற தொனிப்பொருளில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றி னார்.
அங்கு உரையாற்றுகையில் இலங் கையில் இனப்பிரச்சினையின் விளை வாக தமிழர் சமூகத்திற்கு எந்த விதத்திலும் குறையாதவாறு முஸ்லிம் சமூகமும் உயிரிழப்புக்களை யும் பொருள் சேதங்களையும் ஏனைய பாதிப்புக்களையும் அனுபவித்து வரு வதாக கூறிய அமச்சர் ஹக்கீம், சமாதான முன்னெடுப்புகளில் முஸ்லிம்களும் சமபங்காளி களாக கலந்துகொள்ளவேண்டுமென்பதில் எந்தவிதமான விட்டுக்கொடுப ;பிற்கும் இடமில் லை என்றார்.
சமாதான பேச்சுக்களில் முஸ்லிம்கள் தனித்தரப்பாகக் கலந்துகொள்ள அனுமதிக் கப்படுவர் என விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அளித்த வாக்குறு தியையும் உத்தரவா தத்தையும் நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் காட்டிவரும் அலட்சியப் போக்கையிட்டு தாம் விசனம் அடை வதாக ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினை யின் தோற்றத்திற்கு வித்திட்ட கார ணிகளை எடுத்து விளக்கிய அமைச்சர் ஹக்கீம், பின்னர் அவை புூதாகரமாக உருவெடுத்ததன் விளைவாக ஏற்பட்டுள்ள அவலங்களையும் இழப் புக்களையும் அழிவுகளையும் விவரித் தார்.
முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை மலினப்படுத்தி விட்டு, இலங்கையில் எந்தவொரு சமூகமும் சமாதானத்தின் உண்மைப் பயன்களை தனியாகவும் முற்று முழுதாகவும் நுகர முடியாது என்றும் அவர் கூறினார்.
இவ்வளவு காலமாக முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதை சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து, உரிமைகளை ஜனநாயக hPதியாக வென் றெடுப்பதிலேயே அவர்களை நெறிப்படுத்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், இனப்பிரச்சி னைத் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் பரிமாணம் சரிவரக்கவ னத்தில் கொள்ளப்பட்டு நீதி நியா யம் கிட்டாது போனால் விரக்தியின் விளிம்பில் நிற்கும் முஸ்லிம் இளை ஞர்கள் தற்பாதுகாப்பிற்காக ஆயு தம் ஏந்த வேண்டிய நிலைமைக்கு இயல்பாகவே தள்ளப்படுவார்கள். அதைத் தவிர்க்க முடியாது போய்விடலாம் என்றும்;; எச்சரித்தார். அப்பாவி முஸ் லிம்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட்டாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வுக்கு தமிழக தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் பெருந்திரளானோர் வந்திருந்தனர். இலங்கையில் முன்னர் கடமையாற்றிய இந்திய அமை திப்படையின் ஓய்வுபெற்ற உயர திகாரிகள் சிலரும், தமிழக மற்றும் மத்திய அரசு நிர்வாக சேவை அதிகா ரிகளும், ஏராளமான ஊடகவியலாளர் களும் சமுகமளித்திருந்தனா

www.uthayan.com

Print this item

  தமிழக மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் பதற்றம்
Posted by: yarl - 12-01-2003, 06:17 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (11)

thatstamil.com

40 தமிழக மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் பதற்றம்

ராமநாதபுரம்:

தஞ்சாவூர் மற்றும் பாண்டிச்சேரியில் மிக கனத்த மழை பெய்துள்ளது.


ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் பிடித்துச் சென்று விடுவதால் தொடர்ந்து அப்பகுதிகளில் அமைதியின்மை நிலவி வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் சென்றால் அவர்கள் பத்திரமாக திரும்பி வருவார்களா என்ற கேள்விக்குறியுடன் மீனவர் குடும்பத்தினர் நிம்மதியின்றி வாழ்ந்து வருகிறார்கள்.

இந் நிலையில் நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 600 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கோட்டை மன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும், கடற்படையினரும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் 40 மீனவர்கள், அவர்களது 10 படகுகளுடன் கடற்படையினரிடம் மாட்டிக் கொண்டனர். மற்ற மீனவர்கள் தப்பி வந்து விட்டார்கள். பிடிபட்ட 40 மீனவர்களும் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, புதுக்கோட்டை மற்றும் திருச்சியிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குத் தப்பிச் சென்ற 43 தமிழ் அகதிகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்து யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களைத் திருட்டுத் தனமாக இலங்கைக்குப் படகில் ஏற்றி வந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டணத்தைச் சேர்ந்த 3 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Print this item