Yarl Forum
சிறிலங்காவில் மீன்டும் தேர்தல்...??! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சிறிலங்காவில் மீன்டும் தேர்தல்...??! (/showthread.php?tid=7718)



சிறிலங்காவில் மீன்டு - kuruvikal - 12-01-2003

சந்திரிகா ரணில் பேச்சு தோல்வி: விரைவில் இடைத்தேர்தல்?

கொழும்பு:

அதிபர் சந்திரிகாவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தரப்புக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டதால் அங்கு இடைத் தேர்தலை தவிர்க்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.

தங்களுக்கு இடையேயான அதிகாரச் சண்டையைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கு சந்திரிகாவும், ரணிலும் நான்கு நபர் குழு ஒன்றை அமைத்தனர். அந்தக் குழு இன்றும் கூடி விவாதித்தது.

ஆனால், பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த ஒரு முக்கிய தீர்வும் எட்டப்படவில்லை. மீண்டும் ஒரு முறை கூடி விவாதிப்பது எனவும், சந்திரிகாவும், ரணிலும் இந்த வார இறுதியில் சந்தித்து பேசுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், டிசம்பர் 18ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இரு தரப்பினரும் ஆயத்தமாகி வருகின்றனர்.

இடைத்தேர்தல் வரலாம் என்ற அச்சத்தின் காரணமாக இலங்கை பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
-------------------------------------------
நன்றி தற்ஸ்தமிழ் டொட் கொம்


- P.S.Seelan - 12-02-2003

எதிர்பார்ததவர்கள் கை குலுக்கி விட்டார்கள் அல்லவா இனி அம்மையாருக்கு தேர்தலுக்கு முகம் கொடுக்க சிறிது தெம்பு வந்திருக்கும்.

அன்புடன்
சீலன்


- kuruvikal - 12-10-2003

ரணில் சந்திரிகா பேச்சு மீண்டும் தோல்வி

கொழும்பு:

தங்களுக்கு இடையேயான அதிகாரச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கும், அதிபர் சந்திரிகா குமாரதுங்கேவிற்கும் இடையே இன்று நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை எந்த ஒரு முக்கிய தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. ராணுவ இலாகாவைத் திருப்பித் தர சந்திரிகா மறுத்ததால்தான் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததாக ரணில் தரப்பினர் தெரிவித்தனர்.

இந் நிலையில் டிசம்பர் 18ம் தேதி பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற கருத்து இலங்கை அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

That'stamil.com