| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 270 online users. » 0 Member(s) | 268 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,267
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,042
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,454
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,462
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| நெஞ்சைத்தொட்டது ஏன் நெருப்பாய் சுட்டது ? |
|
Posted by: Paranee - 12-08-2003, 03:03 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (21)
|
 |
நெஞ்சைத்தொட்டது ஏன் நெருப்பாய் சுட்டது ?
ஒர்; உண்மைச்சம்பவம். செவிகளில் நுழைந்தவுடன் சிந்திக்கதோன்றியது. நான் அறிந்த கேட்ட அந்த உண்மையான உதிரக்கசிவை உங்களிற்கும் தரத்தோன்றியது தருகின்றேன். நேரமின்மை. அதனால் முழமையாக எமுதி தரமுடியவில்லை. பாகம் பாகமாக தரமுயல்கின்றேன். கவிதையாகவும் கதைவடிவிலும் தரமுயல்கின்றேன்.
ஆணில் தவறா பெண்ணில் தவறா ? விடை அறியவில்லை. அவசரம் செய்தவள் அவளாயின் தவறெல்லாம் அவள் பக்கம் ஆசைப்பட்டது அவனாயின் முழுத்தவறும் அவன் பக்கம். முழமையாக வாசித்தபின் உங்கள் பக்க நியாயங்களை இங்கே பகிருங்கள்.
அந்திமாலை ஆர்ப்பரிக்கும் சாலை
பைய நடந்து பாதங்கள் நோவ
மெல்ல தரையமர்ந்தேன்
சாலையோரப்புூங்கா அது
புூவையர் தம் தாய்மைகாட்டிய செல்வங்களுடன்
கரம் கோர்த்த கணவருடனும்
வாழ்வை வசமாக்கி
வையகம் மறந்து களித்திருக்கின்றனர்
எங்கு நோக்கினும் இரட்டையராய்
எங்கும் பரந்த பசுமையினுள்
வானவில் கலவைகளாய்
வண்ணச் சிட்டுக்கள்
தனிமரமான எனக்கு
தோப்புகள் நிறைந்த புூவனம்
மேனியெங்கும் இதுவரை
பரவாத இன்பம் தந்தது
விழியால் மேய்ந்தபடி
என் வேதனைகள் களைந்தபடி
வீற்றிருந்த என் பார்வையினுள்
து}ரத்தே ஓர் உறவு
ஓற்றையாய் என்னைப்போல
பலமணிநேரமாய் எதிலுமே
பிரக்ஞையற்று பகலைத்தொலைத்த
இரவுபோல விழியெங்கும் ஏக்கத்துடன்
நீண்டநேர அவர் தனிமை
என்னை அவர்பால் ஈர்த்தது
அருகில் சென்றேன்
வதனம் கண்டேன்
தமிழ் வாசம் பெற்றேன்
வாடி நின்றாலும்
வாசமிழக்காதவன் தமிழன்
சோர்ந்து நின்றாலும்
சோடை போகாதவன் தமிழன்
வணக்கம் என்றேன்
வானம் தொலைத்த நிலவினை
மாய்ந்து மாய்ந்து தேடுவார்போல
என் முகத்தை ஏற இறங்க நோக்கி நின்றார்
ம் ம் என்றார்
அர்த்தம் பொதிந்த பதிலாய்
நேரம் கிடைக்கும்போது தொடர்கின்றேன்.
|
|
|
| விழுதுமாகி வேருமாகி நூலுக்கு தலைவர் பிரபா செய்தி |
|
Posted by: Chandravathanaa - 12-08-2003, 08:26 AM - Forum: நூற்றோட்டம்
- Replies (1)
|
 |
<b>எதிரி மட்டும் அறிந்ததை எல்லோரும் அறியட்டும்.
விழுதுமாகி வேருமாகி நூலுக்கு தலைவர் பிரபா செய்தி
எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும்
எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக
வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும்.
இதற்கு எமது போராட்டம் பற்றிய தெளிவான பார்வையும் போருக்குள் நின்ற
வாழ்வனுபவமும் போர்க்கலை பற்றிய அறிவும் எமது போராளிகளது நுண்மையான
மன உணர்வுகளை புரிந்துகொள்கின்ற தன்மையும் அவசியம். இல்லாது போனால் எமது
போராட்டத்தின் வரலாற்றை அதன் ஆழத்திலும் அகலத்திலும்
அதன் யதார்த்தக் கோலத்திலும் தரிசித்துக்கொள்வது கடினம்.
போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத பழமையில் புதைந்து போன
வரலாற்றாசிரியர்களால் எமது பெண் போராளிகளது வரலாற்றை துல்லியமாகக்
கிரகித்தறிவது சிரமம். எனவே போர்க்களத்தில் அளப் பெரும்
தியாகங்களையும். சாதனை களையும் படைத்த பெண்போராளிகளே இப்பணியையும்
மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாளாக என்னிடம் இருந்த பேரவா.
எனது பேரவாவுக்கு விருந்தளிக்கும் மாலதி படையணியின் வெளியீடாக நெஞ்சையுறைய
வைக்கும் பல்வேறு சமர்களின் தொகுப்பாக பெண் போராளிகளது வீரத்தையும் விவேகத்தையும்
பறைசாற்றும் வரலாற்றுப் பதிவேடாக இந்நூல்
வெளிவருவது பெரும் மகிழ்வைத்தருகிறது.
[b]உலகிலே சரிபாதியினர் பெண்கள். எமது சமூகத்திலே சரிபாதியினர்
பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் எமது
போராட்டத்தில் பங்குபெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்
படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேச விடுதலையும்
முழுமைபெறாது. ஆனால அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக
அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துக்கள் பலமாக
நிலவின. எமது சமூகமே சாதிசமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு
நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையும் சாதியக்
கட்டமைப்புக்களும் இறுக்கமாகப் பின்னிப் பிணைந்து அமைந்த பொருளாதார
உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுப்பப்பட்டிருந்தது. அது
சுயசிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு
முறைக்குள் வாழ்கின்றோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு
எதிரியின் இன அழிப்புப் போர் எம்மண்ணில் என்றுமில்லாதவாறு
தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை
ஏற்படுத்திப் பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க
முடியாதிருந்தது.</b>
எனவே எமது விடுதலைப் போராட்டத்திற் பெண்களையும் அணி
சேர்ப்பதனூடாக படிப்படியாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடு
தலையையும் தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என நான் உறுதியாக
நம்பினேன். இவ்வாறு தான் எமது போராட்டத்திற் பெண்புலிகள் தோற்றம்
பெற்று இன்று எதிரியின் படைபலத்தைச் சிதைத்து யுத்தத்தின்
போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து
நிற்கின்றார்கள்.
ஒருநூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை
நிகழ்த்தி புரட்சிகளை நடத்தி விவாதங்கள் புரிந்து கருத்தமர்வுகளை
மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றையும் விட எமது பெண்புலிகள் மிகவும் குறுகிய
காலத்துக்குள் எமது பெண்களுக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகளும்
சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை
நிகழ்த்தியிருக்கின்றார்கள். சமூக கருத்துலகின் புதிய பார்வையை
வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும் பெண்ணும் சமமான
ஆற்றலுடனேயே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உடற்கூற்றியல்
நிபுணர்களின் கூற்றுக்கு பெண்புலிகளே உலகுக்கு உதாரணமாக
வாழ்கின்றார்கள
புரட்சிப் புலிகளாகக் களமிறங்கியுள்ள எமது பெண்புலிகள் எத்தகைய
துன்பங்களையும் சுமந்து எத்தகைய நெருக்கடிகளைம்; சமாளித்து எத்தகைய
ஆபத்துக்களையும் எதிர்கொண்டு போராடுகிறார்கள். அசைக்கமுடியாத
மனவுறுதியும் அதனால் பிறக்கும் துணிவும் அவர்களிடம் உள்ளன. அபாரமான
சகிப்புத்தன்மையும் தளராத உறுதியும் கடும் உழைப்பும் கொண்டவர்கள்
அவர்கள்.
அவர்கள் தரையில் மட்டுமல்லாது கடலிலும் சண்டை செய்கிறார்கள்.
கடற்போர்க்கலை மிகவும் நுட்பமானது. அதற்கு நிறையப்பயிற்சியும் அனுபவமும் தேவை.
கடல் சதா அசைந்து கொண்டிருக்கும். அதன்
முதுகில் சவாரிசெய்து கொண்டு சண்டை யிடுவது மிகவும் கடினமானது. எமது
பெண்புலிகள் மீன்குஞ்சுகள் போலக் கடலோடு வாழப் பழகி விட்டார்கள்.
இந்தப் பெண் போராளிகளை அவர்களது போராட்ட வாழ்க்கையை
அவர்களிடையே நிலவும் ஆழமான புரிந்துணர்வை அளவிட முடியாத
அன்புறவை இந்நூல் அழகு தமிழில் எளிய நடையில் மிக நுட்பமாக
வெளிப்படுத்தப்படுகிறது. பல்வேறு இடங்களில் நடந்த பல்வேறு
சம்பவங்களுக்கூடாக மாலதி படையணியின் வரலாறு சொல்லப்படும் பாங்கு
சிறப்பாக அமைகிறது. மேலும் பெண்புலிகளது போரனுபவத்தை மாலதி
படையணியின் சண்டையனுபவத்துடன் பின்னிப் பிணைத்து பெண்புலிகளது
வரலாறு இந்நூலில் அழகாகப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலின்
ஆக்கத்துக்கு அயராது உழைத்த மாலதிபடையணிப் போராளிகளுக்கும்
தளபதிகளுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றியையும்
தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு இந்நூல் சிறப்புடன் வெளிவர எனது
நல்லாசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன.
[b]நன்றி - ஈழநாடு
|
|
|
| Re song |
|
Posted by: pepsi - 12-08-2003, 02:46 AM - Forum: நகைச்சுவை
- Replies (26)
|
 |
(இரண்டு மனம் வேண்டும்... பாடல் மெட்டில் படிங்க) :wink:
இரண்டு இட்லி வேண்டும்
மனைவியிடம் கேட்டேன்
சட்னியுடன் ஒன்று
சாம்பாருடன் ஒன்று..
இரண்டு இட்லி வேண்டும்
அரிசியின் தண்டனை மாவு வழி
மாவின் தண்டனை இட்லி வழி (2)
இட்லியின் தண்டனை மனைவி வழி...
மனைவியை தண்டிக்க என்ன வழி?
(இரண்டு இட்லி வேண்டும்)
சட்டியும் பானையும் இரண்டானால்
சோறும் கறியும் இரண்டானால் (2)
சட்னியும் சாம்பாரும் இரண்டானால்...
இட்லி ஒன்று போதாதே...
(இரண்டு இட்லி வேண்டும்..)
|
|
|
| சக்கரை பற்றிய கசப்பான செய்திehk; |
|
Posted by: rani - 12-07-2003, 05:51 PM - Forum: மருத்துவம்
- Replies (1)
|
 |
சக்கரை பற்றிய கசப்பான செய்தி
அநேகமாக நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் சக்கரை அடங்கியுள்ளது. இது நமத உடலுக்கு ஆபத்தானது. உடனடியாக அறிகுறிகளை காட்டாவிட்டாலும் நாளடைவில் நமது உடலில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.அதனால் நாம் இனிப்புத்தன்மையான உணவுகளை உண்பதைக் குறைக்க வேண்டும்.
----- நமது உடலின் குருதியில் சக்கரையின் அளவு கூடிக் குறைவதற்க்கு சக்கரையெ காரணமாகிறது.
----- உடலில் அதிக அளவிலான கொலஸ்ரோலையும் குருதியில் கொழுப்பையும் சக்கரை உருவாக்கின்றது.
---- சக்கரை எலும்புருக்கி நோயையும் உருவாக்குகின்றது.
----- சக்கரை உடலில் முதிர்ச்சியையும் தசைகளில் சுருக்கங்களையும் நரைமுடி உருவாவதற்க்கும் காரணியாகிறது.
..... அளவுக்கு அதிகமான சுறுசுறுப்பு கவனயீனம்; சீரற்ற மநோநிலை குழந்தைகளிடம் காணப்படுவதற்கு சக்கரையே காரனம்.
----- பெரியவர்களிடம் மனஅழுத்தம் ஏற்பட சக்கரை காரணமாகிறது.
----- இரத்தத்தில் சக்கரையின் அளவு கூடுவதால் இருதய நோய்கள் மற்றும் இரத்தக்குளாய்களில் ஏற்படும் நோய்கள் அதிகரிக்கின்றது.
----- அளவிற்கு அதிகமாக சக்கரை உன்பவருக்கு கவாலையிடி தலைவலி போன்றவை உருவாகலாம்.
----- உடலில் சக்கரை அளவு கூடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகின்றது.
|
|
|
| துளிதுளியாய் |
|
Posted by: Paranee - 12-07-2003, 07:35 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
விரைவில் வெளியாகவுள்ள துளிதுளியாய் கவிதை தொகுப்பிலிருந்து சில கவித்துளிகள்
யாழ் இணைய முகப்பிலும் மற்றும் பல இணையத்தளங்களிலும் சிதறிய இத்துளிகள் இங்கு மீண்டும் புதிய துளிகளுடன்
<img src='http://www.angelfire.com/nb2/sajan/thuli_thuli.GIF' border='0' alt='user posted image'>
|
|
|
| இப்படிப்போகுது ஜெயா 'ஆட்சி.....!' |
|
Posted by: kuruvikal - 12-05-2003, 02:02 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
ஸ்பிக் ஊழல்: ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
சென்னை:
அரசின் வசம் இருந்த ஸ்பிக் நிறுவனத்தின் பங்குளை அந்த நிறுவனத்துக்கே மிகக் குறைந்த விலைக்கு விற்று அரசுக்கு ரூ. 28 கோடி நஷ்டம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா வரும் 18ம் தேதி தனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் நடந்தது. அந்த நிறுவனத்தின் பங்குகள் தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்திடம் இருந்தன.
அதை அடிமாட்டு விலைக்கு ஸ்பிக் நிறுவனத்துக்கே அரசு விற்றது. இதனால் அரசுக்கு ரூ. 28 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, அப்போதைய நிதித்துறை செயலாளர் மற்றும் ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. திமுக ஆட்சியில் இது தொடர்பாக தனி நீதிமன்றத்திலும் ஒரு வழக்குப் பதிவானது.
இந்த வழக்கில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்ட 18 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இன்று சாட்சிகளின் இறுதிக் கட்ட விசாரணை முடிவடைந்தது.
இதையடுத்து குற்றவியல் நடைறைச் சட்டம் 313ன் கீழ், நீதிபதி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக முதல்வர் ஜெயலலிதா வரும் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கில் போயஸ் கார்டனுக்கே கேள்விகளை நீதிபதி அனுப்ப, அங்கு உட்கார்ந்து கொண்டே நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா பதில் அனுப்பி நீதிமன்றத்தை கேலிக் கூத்தாக்கியது குறிப்பிடத்தக்கது. இதை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாகக் கண்டித்து தான் விசாரணையை பெங்களூருக்கு மாற்றியது நினைவுகூறத்தக்கது.
ஜெசசி முதுமலை பயணம்?
<img src='http://thatstamil.com/images16/ele-275.jpg' border='0' alt='user posted image'>
முதுமலை யானைகள் முகாமில் நிறுத்தப்பட்டுள்ள அதிரடிப்படை வீரர்களில் ஒருவர்
இப்போது ஹைதராபாத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் வரும் 8ம் தேதி மைசூர் செல்கின்றனர்.
சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் செல்லும் அவர்கள் பூஜை முடித்துவிட்டு அங்கிருந்து முதுமலை செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
முதுமலையில் கோவில் யானைகளுக்கு ஓய்வு தருவதற்காக முகாம் நடத்துவதாகக் கூறி, அவை அடித்து லாரிகளில் ஏற்றி இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
யானைகள் ஓய்வு முகாம் என்ற பெயரில் ஜெயலலிதாவுக்காக கஜபூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் கூறின.
8ம் தேதி பௌர்ணமி என்பதால், அன்றைய தினம் கஜபூஜை நடத்துவது மிகப் பெரும் நலன்களைத் தரும் என்பதால் அன்றைய தினம் முதுமலையில் ஜெயலலிதாவுக்காக கஜபூஜை நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதுமலை பகுதி வீரப்பன் நடமாட்டம் உள்ளது என்பதால் இப்போதே அங்கு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் தொடங்கிய முதுமலை யானைகள் முகாமில் இப்போது 81 யானைகள் (கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு ராசியான 9) உள்ளன.
Thanks thatstamil.com
|
|
|
| கோழி |
|
Posted by: mohamed - 12-05-2003, 01:47 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (1)
|
 |
இங்கே ஜோர்ஜ் புஸ் வைத்திருப்பது உண்மையான கோழி (வான்கோழி) அல்லவாம் வெறும் மாதிரியே!!!
|
|
|
| ஆதியான ஆண் சுவடு...! |
|
Posted by: kuruvikal - 12-05-2003, 11:32 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
<img src='http://www.photovault.com/Link/Animals/Aquatic/rCrustacia/AARVolume01/AARV01P02_19.4096.jpg' border='0' alt='user posted image'>
வாழும் கடற் தெள்ளு...நுணுக்குக்காட்டிப் பார்வையின் கீழ்
கடலில் வாழும் கடற்தெள்ளின் மூதாதைய ஆண் ஒன்றின் சுமார் 450 மில்லியன் வருடங்கள் பழைமையான சுவட்டு நிலை உடல் ஒன்று பிரித்தானியாவில் பாறைகளிடையே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....! இது இறால் போன்ற விலங்குகள் அடங்கும் வகுப்பு கிறஸ்ரேசியாவுக்குள்(Crustacea)அடங்குவதாக சுவட்டு உயிரியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்....!
இவ்விலங்கு நன்கு விருத்தியடைந்த குருதிச் சுற்றோட்டத்தொகுதியையும் சுவாசத்திற்கான பூக்களையும் கொண்டிருப்பதாகவும் தெளிவான ஆண் இலிங்க உறுப்பும் இருந்ததற்கான அடையாளங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன...!
இது எரிமலைச் சாம்பல்களின் இடையே சிக்கிய நிலையில் அவதானிக்கப்பட்டுள்ளது....உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சுவடுகளில் மிகவும் பழைமையான ஆண் சுவடு இது என்பதும் இதற்கு ஆய்வாளர்கள்..<b>Colymbosathon ecplecticos</b>.. 'swimmer with a large penis."
இப்படிப் பெயரும் இட்டுள்ளனர்....!
Thanks...yahoo.com..Reuters
|
|
|
|